Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 51

51. மூன்று பக்தர்களின் விருத்தாந்தம்




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 பக்தர்களின் ஆதாரமான ஸாயீயே, ஜய ஜயõ கீதையின் பொருளைப் பிரகாசப்படுத்திய குருவரரே (பரமகுருவே), எல்லா ஸித்திகளையும் அளிக்கும் கொடைவள்ளலே, எனக்குக் கிருபை காட்டுவீராகõ

2 உஷ்ணத்தை சமனம் செய்ய மலயகிரியில் (மேற்குத்தொடர்ச்சி மலைகளில்) சந்தனம் விளைகிறது. மேலும், உலகமக்களுக்கு சுகத்தை அளிப்பதற்காக மேகங்கள் பூமியின்மேல் மழையாகப் பொழிகின்றன.

3 தேவர்களைப் பூஜை பண்ணுவதற்காக எவ்வாறு வஸந்தகாலத்தில் பூக்கள் ஏராளமாக மலர்கின்றனவோ, அவ்வாறே, கேட்பவர்களைத் திருப்திசெய்வதற்காக மேலும் ஒரு கதைத்தொடர் உருவாகிறது.

4 ஒரே ஒரு முறையானாலும், இந்த ஸாயீ சரித்திரத்தைக் கேட்பவர்கள், சொல்பவர்கள், இரு சாராரும் பவித்திரமானவர்கள். கேட்பவர்களின் காதுகள் தூய்மையடைகின்றன. சொல்பவர்களின் வாக்குத் தூய்மையடைகிறது.

5 கடந்த அத்தியாயத்தில், 'தத்வித்தி ப்ரணிபாதேனஃ என்று ஆரம்பிக்கும் சுலோகத்தின் நிரூபணம் மூலமாக, அஞ்ஞானத்தை அழித்துவிட்டால் ஞானம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது விளக்கப்பட்டது.

6 பகவத் கீதையை முடிக்கும் தறுவாயில், பதினெட்டாவது அத்தியாயத்தின் முடிவில், எழுபத்திரண்டாவது சுலோகத்தில், ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனைக் கேட்கிறார்,--

7 ''பார்த்தா (அர்ஜுனா), ஒருமுகப்பட்ட மனத்துடன் இதுவரை நான் செய்த பிரவசனம் கேட்கப்பட்டதா? தனஞ்ஜயா, உன்னுடைய அஞ்ஞானத்தி­ருந்து விளைந்த குழப்பம் அழிந்ததா?ஃஃ தெளிவாகக் கேட்கப்பட்ட கேள்வி இதுவே. ''நீ ஞானம் பெற்றாயா?ஃஃ என்று ஸ்ரீகிருஷ்ணர் கேட்கவில்லை.

8 அர்ஜுனனின் பதிலும் அதுபோலவே அமைந்தது. ''அச்யுதா, மோஹம் அழிந்துவிட்டது. உமது அருளால் எனக்கு நினைவு வந்துள்ளது. ஐயங்கள் அகன்று உறுதியாக இருக்கிறேன். உமது சொற்படி செய்வேன்ஃஃ என்று அர்ஜுனன் பதிலளித்தான். ஞானம் பெற்றேன் என்று சொல்லவில்லை; மோஹம் ஒழிந்துவிட்டது என்றே பதில் சொன்னான்.

9 மோஹம் என்பது அஞ்ஞானமே. சொற்கள் வெவ்வேறாக இருப்பினும், பொருளில் வேறுபாடு ஏதும் இல்லை என்பதை கீதையை நன்றாகப் புரிந்துகொண்டவர்கள் அறிவர்.

10 கீதையின் பதினொன்றாவது அத்தியாயத்தின் முதல் சுலோகத்திலும் அர்ஜுனன் சொல்­யிருக்கிறான், ''என்னைக் காத்தருளுவதற்கு உம்மால் உரைக்கப்பட்ட மேலானதும் மறைபொருளுமாகிய ஆத்ம தத்துவத்தைப்பற்றிய உபதேசத்தால் என் மோஹம் ஒழிந்ததுஃஃ என்று.

11 இப்பொழுது, இந்தப் புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தில், பாபா, காகா ஸாஹேப் தீக்ஷிதரை வரவழைத்து எவ்வாறு சிர்டீயில் ஸ்தாபனம் செய்தார் (நிலைநிறுத்தினார்) என்ற ஆச்சரியமளிக்கும் விவரத்தைச் சொல்வேனாக.

12 சிர்டீயுடன் அவருக்கிருந்த ருணானுபந்தமும் (முன்ஜன்ம பந்தமும்) ஸாயீயுடன் இருந்த திடமான சம்பந்தமும் இந் நிகழ்வுக்கு எவ்வாறு மூலகாரணமாயிற்று என்பதை ஆரம்பத்தி­ருந்து கேளுங்கள்.

13 காகா ஸாஹேப் சம்பந்தப்பட்ட பல கதைகள் சிறுவர்களி­ருந்து கிழவர்கள்வரை சகலருக்கும் தெரியும். ஆனால், அவர் எப்படி முதன்முதலாக சிர்டீக்கு வந்தார் என்ற விவரம் எல்லாருக்கும் தெரியாது; ஒரு சிலருக்கே தெரியும்.

14 பூர்வபுண்ணியங்களின் சேமிப்பு பரமேச்வரனின் கடைக்கண்பார்வையை அளிக்கிறது. அதி­ருந்து விளைவது ஸத்குரு சந்திப்பு. அதி­ருந்து பெறுவது சிஷ்யனின் சுயானந்த புஷ்டி.

15 இந்த அத்தியாயத்தின் பின்னணி இதுவே. அபூர்வ அதிருஷ்டசா­களாகிய மூன்று பக்தர்களின் காதைகளைக் கதைகேட்பவர்களுக்குச் சொல்கிறேன். கேட்பவர்களின் இதயத்தில் ஆனந்தம் நிரம்பும்.

16 வீடுபேறு அடைவதற்குக் கோடானுகோடி இதர உபாயங்கள் உள்ளன. ஆனாலும், ஸத்குருவின் கடைக்கண்பார்வை இல்லாமல் அவற்றால் ஒரு பயனும் கிடைக்காது.

17 இது விஷயமாக ஒரு சுவையான காதையைக் கேளுங்கள். கேட்பவர்களுடைய ஆவலை இக் கதை திருப்தி செய்யும். தாங்களும் க்ஷேமமடைய வேண்டும் என்னும் வேட்கை அவர்களுடைய மனத்தில் எழும்.

18 பரம புனிதமானதும் நன்மையளிப்பதுமான இந்த அத்தியாயத்தைக் கதைகேட்பவர்கள் ஒருமுகப்பட்ட மனத்துடன் கேட்பார்களாக. குருபக்தி உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

19 ஸாயீ பாபாவின் பக்தர்கள் அனைவருமே அன்புடனும் மரியாதையுடனும் நினைவுகூரும் ஹரி ஸீதாராம் தீக்ஷிதர், காகா ஸாஹேப் என்னும் பெயரால் பிரபலமாக அறியப்பட்டவர்.

20 கேள்விஞானம் மிகுந்த ரசிகப் பெருமக்களுக்கு ஆனந்தமளிக்கும் அவருடைய ஆரம்பகால வரலாற்றை, சரித்திரம் கேட்பதில் உற்சாகம் காட்டும் பக்தர்கள் ஆனந்தம் அடைவதற்காக பயபக்தியுடன் சொல்கிறேன்; கேளுங்கள்.

21 1909 ஆம் ஆண்டுவரை ஸாயீ என்ற பெயரையே கேட்டறியாதவர், பிற்காலத்தில் எல்லாருக்கும் நன்கு தெரிந்த பரம பக்தரானார்.

22 காகா ஸாஹேப்பின் பல்கலைக்கழகப் படிப்பு முடிந்து பல ஆண்டுகள் உருண்டோடிய பிறகு, நானா ஸாஹேப் சாந்தோர்கர் அவரை லோணாவாலாவில்1 ஒருமுறை சந்தித்தார்.

23 தீக்ஷிதரும் சாந்தோர்கரும் இளமைக்கால நண்பர்கள். இருவரும் பல வருடங்கள் கழித்து சந்தித்ததால், தங்களுடைய சுகதுக்கங்களைப்பற்றிப் பரஸ்பரம் உரையாடினர்.

24 லண்டன் மாநகரத்தில் வசித்த காலத்தில் ஒரு பேருந்தில் ஏற முயன்றபோது, பாதம் வழுக்கியதால், தீக்ஷிதருடைய கா­ல் ஊனம் ஏற்பட்டது. எத்தனையோ வைத்தியங்கள் செய்த பிறகும் அந்த ஊனம் குணமடையவில்லை.

25 உரையாட­ல் அந்த ஊனம்பற்றிய பேச்சு இயல்பாக எழுந்தது. அந்த சமயத்தில் நானாவுக்கு ஸ்ரீ ஸாயீ பாபாவின் அற்புத சக்திகள் குறித்து நினைவுக்கு வந்தது.

26 ''கால் ஊனம் முழுமையாகக் குணமாகவேண்டுமென்று நீர் விரும்புகிறீரா? அப்படியானால் என் குருவை தரிசனம் செய்ய வாரும்ஃஃ என்று தீக்ஷிதரிடம் நானா உடனே சொன்னார்.

27 பின்னர் நானா, ஞானிகளின் சிரோன்மணியாகிய ஸாயீயின் விருத்தாந்தத்தையும் விசேஷங்களையும் மஹிமையையும் தீக்ஷிதருக்கு ஆனந்தத்துடன் எடுத்துச் சொன்னார்.

28 ''என் மனிதன் எவ்வளவு தூரத்தி­ருந்தாலும், எழுகடல் தாண்டி இருந்தாலும் சரி, கா­ல் நூல் கட்டப்பட்ட சிட்டுக்குருவியை இழுப்பதுபோல் அவனை உடனே என்னிடம் ஈர்த்துக்கொள்வேன்.ஃஃ

29 இவ்வாறே பாபா எப்பொழுதும் பேசினார். இதைத் தெளிவுபடுத்தும் வகையில் நானா மேலும் சொன்னார், ''நீர் பாபாவைச் சார்ந்தவராக இல்லாவிட்டால். உமக்கு அவரிடம் ஈர்ப்பு ஏற்படாது.--

30 ''நீர் அவருக்குச் சொந்தமாக இல்லாவிடின், உமக்கு அவருடைய தரிசனம் கிடைக்காது. இதுவே பாபாவின் முக்கிய லக்ஷணம் (அடையாளம்). உம்முடைய தீர்மானத்தால் மாத்திரம் நீர் அங்கே போகமுடியுமா என்ன?ஃஃ

31 இவ்வாறாக, ஸாயீயைப்பற்றிய வர்ணனையைக் கேட்ட தீக்ஷிதர், மனத்துள் பெரும் திருப்தியடைந்தார். அவர் நானாவிடம் சொன்னார், ''நான் பாபாவை தரிசனம் செய்ய வருகிறேன்.--

32 ''என்னுடைய கால் என்ன பெரிய விஷயம்? முழுவுடலுமே நசித்துப் போகக்கூடியது அன்றோ? என்னுடைய கால் ஊனம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.--

33 ''நான் உம் குருவை தரிசனம் செய்ய விரும்புவது, நிரதிசய இன்பம் (அதைவிட மேம்பட்ட இன்பமில்லாத வீட்டின்பம்) பெறுவதற்காகவே. அல்ப சுகங்களின்மேல் எனக்கு ஆசை இல்லை. அவற்றை யான் யாசிக்கமாட்டேன்.--

34 ''முழுமுதற்பொருள் அன்றி வேறு சுகம் ஏதும் இல்லை. அதுவொன்றே விலைமதிப்பில்லாத சுகம். இந்த விலைமதிப்பில்லாத சுகம் ஒன்றுக்காகவே நான் உம் குருவுக்குத் தொண்டனாவேன்.--

35 '''கா­ன் முடம் இப்படியே இருக்கட்டும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், என் மனத்தின் முடத்தைச் சரிசெய்து சிறந்த நிலைக்குக் கொண்டுவாருங்கள்ஃ என்றே நான் பிரார்த்தனை செய்வேன்.--

36 ''எவ்வளவோ சிரமப்பட்டு உபாசனை செய்கிறேன். ஆயினும், மனம் நிச்சலம் ஆகவில்லை. சிரமப்பட்டு சுவாதீனத்திற்குக் கொண்டுவர முயல்கிறேன். ஆனால், அது எனக்குத் தெரியாமல் தப்பியோடிவிடுகிறது. --

37 ''மனத்தை அறவே நிக்கிரஹம் செய்யும் (அடக்கும்) முயற்சியில் எவ்வளவு உஷாராக இருந்தாலும், அது எப்பொழுது நழுவும் என்று சொல்லமுடியாது. மனம் அளவிலா ஆச்சரியமானதுõ--

38 ''ஆகையால், நானா, நான் மனப்பூர்வமாக உம் குருவை தரிசனம் செய்ய வருகிறேன். என் மனமுடத்தை நீக்க அவரிடம் பிரார்த்தனையும் செய்கிறேன்.ஃஃ

39 நசித்துப்போகக்கூடிய சரீர சுகங்களை உதாசீனம் செய்து, எவர் வீட்டின்பத்தை மிகுந்த விருப்பத்துடன் நாடுகிறாரோ, அவருடைய ஆன்மீக முன்னேற்றத்தில் ஸாயீ பெருமகிழ்ச்சியும் உற்சாகமும் காட்டுகிறார்.

40 அந் நாள்களில் எல்லாராலும் பேசப்பட்ட ஒரே விஷயம், நடக்கவிருந்த பம்பாய் மாகாண மேல் சட்டமன்றத் தேர்தல். அதன் பொருட்டு. இங்கும் அங்குமாகப் பல இடங்களில் மக்கள் தேர்தல் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

41 காகாஸாஹேபும் பொதுஜன ஆதரவைத் திரட்டித் தாம் வெற்றியடைவதற்காகத் தம் நண்பர்களை சந்தித்துக்கொண் டிருந்தார். இந்த வேலை சம்பந்தமாக எதிர்பாராதவிதமாக அஹமத்நகரம் சென்றார்.

42 காகா ஸாஹேப் மிரீகர் என்ற பெயர்கொண்ட சர்தார் ஒருவர் அஹமத்நகரத்தில் இருந்தார். அவர் தீக்ஷிதரின் நெருங்கிய நண்பர். ஆகவே, தீக்ஷிதர் அவருடைய இல்லத்தில் தங்கினார்.

43 அதே சமயத்தில் அஹமத்நகரத்தில் குதிரைக் கண்காட்சி ஒன்று நடைபெற்றுக்கொண் டிருந்தது. அதற்காகப் பலதரப்பட்ட மக்கள் அங்கு வேலையில் மூழ்கியிருந்தனர்.

44 கோபர்காங்வின் மாம்லேதாரான பாலா ஸாஹேப் மிரீகரும் குதிரைக் கண்காட்சியைப் பார்ப்பதற்காக அஹமத்நகருக்கு வந்திருந்தார்.

45 தீக்ஷிதர் எதற்காக வந்தாரோ அந்தக் காரியம் முடிந்தது. 'நான் சிர்டீக்குப் போவதை ஏற்பாடு செய்வது எப்படி? யார் என்னை அழைத்துச் செல்வார்?ஃ என்றெல்லாம் அவர் சிந்திக்க ஆரம்பித்தார்.

46 அங்கு வந்த வேலை முடிந்தவுடனே, அவருடைய பார்வை சிர்டீ செல்லும் மார்க்கத்தை நோக்கித் திரும்பியது. 'பாபாவை தரிசனம் செய்யும் யோகம் பெறுவேனாஃ என்ற சிந்தனையில் மூழ்கினார்.

47 'யார் என்னுடன் வந்து பாபாவுக்கு அருகில் அழைத்துச்சென்று அவருடைய பாதங்களுக்கு என்னை அறிமுகப்படுத்துவார்?ஃ என்ற சிந்தனையில் தீக்ஷிதர் மனவுளைச்சலுற்றார்.

48 தேர்தல் சம்பந்தமான வேலை முடிந்தவுடன், தீக்ஷிதர் சிர்டீப் பயணம்பற்றி விசாரப்பட்டுக் காகா ஸாஹேப் மிரீகரிடம் அதைப்பற்றி மரியாதையாக விசாரித்தார்.

49 பாலா ஸாஹேப் மிரீகர், காகா ஸாஹேப் மிரீகரின் மகன். 'சிர்டீக்கு தீக்ஷிதருடன் யாரை அனுப்புவது?ஃ என்று இருவரும் பரஸ்பரம் ஆலோசனை செய்தனர்.

50 அவர்கள் இருவரில் ஒருவர் செல்ல முடிந்தால், வேறு துணை ஏதும் தேவைப்படாது. ஆகவே, 'இருவரில் யார் செல்வது?ஃ என்பதை நிச்சயிக்கத் தீவிரமாக யோசித்தனர்.

51 மனிதன் போடும் திட்டங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. இறைவனின் திட்டங்களோ முற்றிலும் வேறுவிதமானவை. தீக்ஷிதரின் சிர்டீப் பயணத்துக்கு உதவுவதற்காகக் கற்பனை செய்யமுடியாத நிகழ்வு ஒன்று உருவாகியது.

52 இங்கு இவ்விதமான மனவுளைச்சல்; அங்கு (சிர்டீயில்) வேறுவிதமான அசைவு. பக்தனின் பேரார்வத்தைக் கண்ட ஸமர்த்த ஸாயீ மனம் கனிந்தார்.

53 இவ்வாறு தீக்ஷிதர் சிந்தனை செய்தவாறு மனவுளைச்சலுடன் அமர்ந்திருந்தபோது, எல்லா மக்களும் ஆச்சரியப்படும் வகையில் மாதவராவ் அஹமத்நகருக்கு வந்துசேர்ந்தார்õ

54 அஹமத்நகரத்தி­ருந்து மாதவராவின் மாமனார், ''உம் மாமியாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. உடனே குடும்பத்துடன் கிளம்பி வரவும்ஃஃ என்று தந்திமூலம் செய்தி அனுப்பியிருந்தார்.

55 தந்தி கிடைத்தவுடன் பயணத்திற்கு ஆயத்தமாகி பாபாவின் அனுமதியையும் பெற்றுக்கொண்டு, மாதவராவும் மனைவியும், இருவருமாகச் சிதலீ ரயில் நிலையத்திற்குச் சென்றனர்.

56 மூன்று மணி ரயில்வண்டியைப் பிடித்து இருவரும் அஹமத்நகருக்கு வந்து சேர்ந்தனர். குதிரைவண்டி வீட்டுவாச­ல் வந்து நின்றது. இருவரும் கீழே இறங்கினர்.

57 இதற்கிடையே, நானாஸாஹேப் பான்ஸ்லேவும், அப்பா ஸாஹேப் கத்ரேவும் குதிரைக் கண்காட்சியைப் பார்ப்பதற்காக அதேசமயத்தில் அவ்வழியாகச் செல்லும்படி நேரிட்டது.

58 மாதவராவ் வண்டியி­ருந்து இறங்குவதை எதிர்பாராதவிதமாகப் பார்த்த அவ்விருவரும் வியப்படைந்தனர். மனத்தில் பொங்கிய மகிழ்ச்சியை அவர்களால் அடக்கமுடியவில்லை.

59 ''சிர்டீயின் பட்வாவான1 மாதவராவ் இங்கு வந்திருப்பது எவ்வளவு தெய்வீகமான செயல்õ தீக்ஷிதரை சிர்டீக்கு அழைத்துச்செல்ல இவரைவிடச் சிறந்தவர் எவரும் உளரோ?ஃஃ என்று அவர்கள் இருவரும் கூறினர்.

60 பிறகு அவர்கள் மாதவராவைக் கூவியழைத்துச் சொன்னார்கள், ''காகா தீக்ஷிதர்

61 ''தீக்ஷிதர் எங்களின் கிடைத்தற்கரிய நண்பர். நீங்களும் அவருக்கு அறிமுகம் செய்யப்படுவீர்கள். அவர் சிர்டீக்குச் செல்வதில் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். உங்களுடைய வரவு அவருக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கும்.ஃஃ

62 இவ்வாறு அவருக்குச் சொன்னபின் தீக்ஷிதருக்கும் செய்தியைத் தெரிவித்தனர். அதைக் கேட்ட தீக்ஷிதரின் மனவுளைச்சல் அகன்றது; மனம், மிகுந்த சந்தோஷத்தை அடைந்தது.

63 மாமனார் வீட்டிற்குச் சென்ற மாதவராவ் தம் மாமியார் சுகமடைந்துவிட்டிருந்ததைக் கண்டார். சிறிது நேரம் ஓய்வெடுத்தார். 'மிரீகர் அழைக்கிறார்ஃ என்று செய்தி வந்தது.

64 மிரீகரின் அழைப்புக்கு மரியாதை கொடுத்து, வெயில் சிறிது குறைந்த பிறகு மாதவராவ் தீக்ஷிதரை சந்திக்கச் சென்றார்.

65 அதுதான் அவர்களுடைய முதல் சந்திப்பு. பாலா ஸாஹேப் ஒருவருக்கொருவரை அறிமுகப்படுத்தினார். இருவரும் இரவு 10 மணி ரயி­ல் சிர்டீக்குச் செல்வதென்று தெளிவாகத் தீர்மானம் செய்தனர்.

66 இவ்வாறு முடிவு செய்த பிறகு நடந்த அதிசயத்தைப் பாருங்கள். பாபாவின் படத்தை மூடிக்கொண்டிருந்த திரைச்சீலையை பாலா ஸாஹேப் விலக்கினார்.

67 அது பாபாவின் புகைப்படம். மேகாவுக்குச் சொந்தமானது. மேகா, பாபாவை முக்கண்ணனாகிய சங்கரனாகவே பா(ஆஏஅ)வித்துப் பரம பிரேமையுடன் வழிபட்டுவந்த ஈடிணையற்ற பக்தர்.

68 அப் படத்தின் கண்ணாடி உடைந்துபோன காரணத்தால், சரிசெய்வதற்காக சிர்டீயி­ருந்து அஹமத்நகருக்கு பாலா ஸாஹேப்பால் முன்னமேயே கொண்டுவரப்பட்டிருந்தது.

69 அதே புகைப்படந்தான், பழுது பார்க்கப்பட்டபின், தீக்ஷிதரின் வருகைக்காகக் காத்துக்கொண் டிருந்தாற்போல் தோன்றியது. மிரீகரின் வீட்டுக் கூடத்தில் ஒரு துணியால் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

70 குதிரைக் கண்காட்சி முடிவடைந்தபின் பாலா ஸாஹேப் சிர்டீக்குத் திரும்பச் சில நாள்கள் இருந்தன. ஆகவே, தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு அப் படம் மாதவராவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.

71 படுதாவை விலக்கியபின், படம் திறந்த நிலையிலேயே விடப்பட்டது. மிரீகர் மாதவராவிடம் படத்தை ஒப்படைத்துக்கொண்டே சொன்னார், ''சிர்டீ பரியந்தம் பாபாவின் துணையுடன் சுகமாகச் செல்வீராகõஃஃ

72 சர்வாங்க மனோகரமான (அங்கமெலாம் அழகு கொஞ்சிய) அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடனே காகா ஸாஹேப் ஆனந்தம் நிரம்பியவரானார். நமஸ்காரம் செய்தபின் படத்தையே உற்றுப்பார்த்துக்கொண் டிருந்தார்.

73 நடக்கவொண்ணாத அந்த விசித்திரமான நிகழ்வு நடந்ததை நினைத்தும், கற்பனைக்கெட்டாத அழகு படைத்த ஸமர்த்த ஸாயீயின் புனிதமான புகைப்படத்தைப் பார்த்தும், தீக்ஷிதர் சந்தோஷத்தால் மெய்ம்மறந்தார்.

74 யாரை தரிசனம் செய்யத் துடித்துக்கொண் டிருந்தாரோ, அவருடைய உருவப்படத்தை வழியிலேயே காண நேர்ந்த பாக்கியம் அவரைப் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

75 மேலும் சொல்லப் போனால், அப் படம் சிர்டீயி­ருந்து காகா ஸாஹேப் மிரீகரின் இல்லத்திற்கு வர நேர்ந்ததும், அந்த வேளையில் தீக்ஷிதர் அங்கு வந்து சேர்ந்ததும், ஒரு விசித்திரமான யோகம் (நற்பேறு) அன்றோ?

76 தீக்ஷிதரின் மனநாட்டம் எப்படி இருந்ததோ, அதை அப்படியே ஸமர்த்த ஸாயீ திருப்திசெய்தார். ஏதோவொரு சாக்குப்போக்கில், அவரே மிரீகர் என்னும் பக்தரின் இல்லத்தில் எழுந்தருளினாரோõ

77 லோணாவாலாவில் சாந்தோர்க்கரைச் சந்தித்ததும் அவருடன் உரையாடியதும் பாபாவின் காந்தசக்தி ஈர்ப்பின் ஆரம்பம்; அதுவே பின்னர் நடந்த பேட்டிக்கு விதையிட்டது எனலாம்.

78 இல்லையென்றால், வேறு எதற்காக அப் படம் சிர்டீயி­ருந்து அந் நாள்களில் அங்கு வரவேண்டும்? ஏன் அவ்வளவு நாள்களாக மிரீகரின் இல்லத்தில் மூடிவைக்கப்பட் டிருந்தது?

79 எது எப்படியோ, ஏற்கெனவே நிச்சயம் செய்திருந்தவாறு, புகைப்படத்தை உடன் எடுத்துக்கொண்டு மாதவராவும் தீக்ஷிதரும் ஆனந்தமான மனத்துடன் சிர்டீக்குக் கிளம்பினர்.

80 அன்று இரவே, உணவுண்டபின் இருவரும் ரயில் நிலையத்திற்குச் சென்றனர். இரண்டாவது1 வகுப்புப் பயணச் சீட்டு வாங்கிக்கொண்டு தங்களுடன் எடுத்துச் சென்றனர்.

81 பத்து மணி அடித்தபோது ரயில் வரும் சத்தம் கேட்டது. இரண்டாவது வகுப்புப் பெட்டி முழுதும் நிரம்பிக் காணப்பட்டதுõ

82 இந்தப் பிரச்சினையைக் கண்ட இருவரும் கவலையுற்றனர். ரயில் கிளம்புவதற்குச் சிறிது நேரமே இருந்தது. வேறு என்ன ஏற்பாடு செய்ய முடியும்?

83 ஆகவே, கூட்டம் நிரம்பி வழிவதைப் பார்த்த இருவரும், கிளம்பிய இடங்களுக்கே திரும்பிச் சென்றுவிடுவதென்றும், சிர்டீக்கு மறுநாள் போய்க்கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தனர்.

84 இதனிடையே, எதிர்பாராத விதமாக, ரயி­ன் காவலர் (எமஅதஈ) தமக்குத் தெரிந்தவர் என்பதை தீக்ஷிதர் கவனித்தார். காவலர் அவர்கள் இருவரையும் முதல் வகுப்பில் சௌகரியமாகப் பிரயாணம் செய்ய ஏற்பாடு செய்தார்.

85 வசதியாக முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்தபின், பாபாவைப்பற்றிய சம்பாஷணை அவர்களுடைய மனத்தில் தோன்றியவாறு பெருகி ஓடியது. மாதவராவ் அமுதினும் இனிய காதைகளைச் சொன்னார். காதைகளைக் கேட்டு தீக்ஷிதர் ஆனந்தமடைந்தார்.

86 இவ்வாறாக, பிரயாணத்தின்போது பல சுகங்களை அனுபவித்ததால், காலம் மிக வேகமாக ஓடியது. ரயில் கோபர்காங்வ் வந்து சேர்ந்தது. இருவரும் மகிழ்ச்சி நிரம்பியவர்களாக இறங்கினர்.

87 அப்பொழுது, ரயில் நிலையத்தில் நானா ஸாஹேப் சாந்தோர்க்கரைக் கண்ட தீக்ஷிதர் ஆனந்தத்தால் நிரம்பினார். இருவரும் சற்றும் எதிர்பாராதவிதமாக சந்தித்தனர்.

88 சாந்தோர்க்கரும் பாபாவை தரிசனம் செய்வதற்காக சிர்டீக்குச் சென்றுகொண் டிருந்தார். விரும்பிக் கேட்காததும் எதிர்பாராததுமான இந்த யோகத்தால் மூவரும் வியப்பிலாழ்ந்தனர்.

89 பின்னர், மூவரும் ஒரு குதிரைவண்டியை அமர்த்திக்கொண்டு உரையாடியவாறே கிளம்பினர். வழியில் கோதாவரி நதியில் ஸ்நானம் செய்தனர். இவ்வாறாக, மூவரும் புனித சிர்டீக்கு வந்து சேர்ந்தனர்.

90 பின்னர், ஸாயீயை தரிசனம் செய்தபோது தீக்ஷிதரின் மனம் உருகியது; கண்கள் குளமாயின; சுயானந்த வெள்ளம் பெருகியது.

91 ஸாயீ ஸ்பஷ்டமாகச் (தெளிவாகச்) சொன்னார், ''நானும் உங்களைப் பார்க்கக் காத்துக்கொண் டிருந்தேன். உங்களை சந்திக்க சாம்யாவை (மாதவராவ் தேச்பாண்டேவை) நேராக அஹமத்நகருக்கு அனுப்பினேன்.ஃஃ இதைக் கேட்ட,--

92 தீக்ஷிதரின் உடல் மயிர்க்கூச்செறிந்தது; கண்ணீர்ப் பெருக்கால் தொண்டை அடைத்தது; மனத்தில் ஆனந்த அலைகள் பொங்கின; எல்லா அங்கங்களும் வியர்த்துக்கொட்டின:

93 தேஹம் சூக்குமமாக நடுங்கியது. மனம் சுயானந்தத்தில் மூழ்கியது. ஆனந்தத்தின் கனத்தைத் தாங்கமுடியாமல் கண்கள் பாதி மூடிக்கொண்டன:

94 ''இன்று நான் பார்வை பெற்ற பயனை அடைந்தேன்ஃஃ என்று சொல்­க்கொண்டே தீக்ஷிதர் பாபாவின் பாதங்களைப் பற்றினார். அவருடைய மனம், பெரும்பாக்கியம் பெற்றதை உணர்ந்தது. அவர் அடைந்த ஆனந்தத்திற்கு சிருஷ்டியில் சமானம் ஏதும் இல்லை.

95 பல ஆண்டுகள் கடந்தன. ஸாயீபாதங்களின்மீது தவம் வளர்ந்தது. ஸாயீயின் பூரணமான கிருபையை சம்பாதித்தார். உடலை ஸேவைக்கு அர்ப்பணம் செய்தார்.

96 ஸேவையை ஸாங்கோபாங்கமாகச் (முழுமையாகச்) செய்வதற்காக சிர்டீயில் ஓர் ஆசிரமமும் கட்டினார். பல ஆண்டுகள் சிர்டீயில் வாழ்ந்து ஸாயீயின் மஹிமையைப் பரப்பினார்.

97 சாராம்சம் என்னவென்றால், ஸாயீயை தரிசனம் செய்ய ஆசைப்படுபவரின் விருப்பம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். ஸாயீ, பக்தர் இளைப்பாறும் பூஞ்சோலை; பக்தர்களுக்குப் பரம சுகத்தை அளிப்பவர்.

98 சந்திரனை நாடும் சகோரப் பறவைகள் அபரிமிதம் (ஏராளம், ஏராளம்). ஆனால், நட்சத்திர நாதனாகிய சந்திரன், ஒருவனே. அதுபோலவே, ஓர் அன்னைக்குப் பல மகன்கள் இருக்கலாம். ஆயினும், அவர்கள் அனைவர்க்கும் அன்னை ஒருத்தியே.

99 சூரியனுக்கு அளவற்ற தாமரைகள்; ஆயினும் எல்லாத் தாமரைகளுக்கும் இருப்பது ஒரு சூரியனே. ஸாயீபக்தர்களுக்குக் கணக்கே இல்லை; ஆயினும், அவர் ஒருவரே அனைவர்க்கும் பிதாவும் பரமகுருவும்.

100 எண்ணற்ற சாதகப் பறவைகள் மேகத்துக்காக ஏங்குகின்றன; ஆயினும், அத்தனை சாதகப் பறவைகளுக்கும் கிடைக்கக்கூடிய மேகம் ஒன்றே. அதுபோலவே, அவருக்கு அநேக பக்தர்கள் உள்ளனர்; ஆயினும், தந்தையும் தாயும் ஆனவர் அவர் ஒருவரே.

101 எவரெவர்கள் ஸத்பா(ஆஏஅ)வத்துடனும் இயல்பாகவும் சரணடைகிறார்களோ, அவரவர்களுடைய மானத்தை ரட்சிப்பது மட்டுமல்லாமல் வேலைகளையும் வெற்றிகரமாக முடித்து வைக்கிறார். இதை இன்றும் (மஹாஸமாதி அடைந்த பிறகும்) பிரத்யட்சமாகக் (கண்கூடாகக்) காணலாம்.

102 இவ்வுலகில் எந்தெந்தப் பிராணிகள் உயிருடன் இருக்கின்றனவோ, அவை அனைத்திற்கும் மரணம் முடிவை உண்டாக்கும். ஆயினும், ஸாயீ, தீக்ஷிதருக்கு அபயம் அளித்தார், ''உம்மை நான் ஓர் ஆகாயவிமானத்தில் அழைத்துச் செல்கிறேன்.ஃஃ

103 ஸாயீ எவ்விதமாக வாக்களித்தாரோ, அவ்விதமாகவே தீக்ஷிதரின் அந்தம் (முடிவு) ஏற்பட்டது. ஸாயீயின் குணநலன்களைப் பாடிக்கொண்டே தீக்ஷிதர் உயிர்நீத்தார். இதை நான் என்னுடைய கண்களாலேயே பார்த்தேன்.

104 நாங்கள் இருவரும் ஒரு ரயில்வண்டியில் அமர்ந்து ஸமர்த்த ஸாயீயின் பெருமைகளைப் பரஸ்பரம் பேசிக்கொண்டே பயணம் செய்துகொண் டிருந்தபோது, யாரோ அவரைச் சட்டென்று ஓர் ஆகாயவிமானத்தில் ஏற்றிக்கொண்டு சென்றதுபோல் தோன்றியது.

105 சரியான சந்தர்ப்பத்தைச் சட்டெனப் பயன்படுத்தித் தம்முடைய தலையை என் தோளின்மேல் சாய்த்தவாறு, எதிர்பாராதவிதமாக ஆகாயவிமானத்தில் ஏறி தீக்ஷிதர் எல்லையற்ற சுகத்தை அடைந்தார்.

106 முக்கவோ முனகவோ இல்லை; தொண்டையில் 'கர்புர்ஃ என்று இழுக்கவுமில்லை; வ­ ஏதும் இல்லை. எல்லாரும் பார்த்துக்கொண் டிருந்தபோதே, பேசிக்கொண் டிருந்தவரின் உடல் அசைவற்றுப் போயிற்று.

107 இவ்விதமாக, மனிதர்கள் வாழும் இப்பூமியை உதறிவிட்டு, நிஜமான ரூபமும் நிஜமான ஜோதியும் கிடைத்த காரணத்தால், ஆகாயமார்க்கத்தில் சென்று பரஞ்ஜோதியுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.

108 உயிர் பிரியும் தறுவாயில் ஸாயீபாத தியானத்தில் லயித்திருந்ததால், அவருடைய தேகாபிமானம் முழுவதுமாகத் துறக்கப்பட்டது. மனம் ஒருமைப்பட்ட நிலையில், தேகத்தைப் பூரணமாக ஸ்ரீகிருஷ்ணனுக்கு அர்ப்பணம் செய்தார்.

109 1926 ஆம் ஆண்டு ஆனிமாதத்துத் தேய்பிறை ஏகாதசி நாளன்று, இந்தக் கர்மபூமியை விடுத்து பிரம்மபதம் அடைந்தார் தீக்ஷிதர்1. (5 th July 1926)

110 அவர் மரணமடைந்தார் என்றோ, ஆகாயவிமானத்தில் ஏறிச் சென்றுவிட்டார் என்றோ சொல்லலாம். ஆனால், அவர் ஸாயீபாதங்களில் இரண்டறக் கலந்துவிட்டார். இதை ஸாயீபக்தர்கள் அனைவரும் பிரமாணமாக ஏற்றுக்கொள்வர்.

111 இம்மாதிரியான உபகாரத்திற்குக் கைம்மாறு செய்துவிட முடியும் என்று நினைப்பவன் முழுமையான அபக்தன் (பக்தியே இல்லாதவன்). ஏனெனில், இக் கடனைக் கண்ணுக்குத் தெரியும் எப்பொருளையும் கொடுத்துக் கனவிலும் அடைக்கமுடியாது.

112 சிந்தாமணியைக்1 கொடுத்தாலும், எப்பொழுதும் இருக்கும் கவலைகள் அதிகரிக்கத்தான் செய்யும். அந்தச் சிந்தனைக்கெட்டாத தானத்திற்குப் பிரதியாகச் சிந்தாமணியைக் கொடுத்துவிட்டேன் என்று யாராவது நினைத்தால், அவருடைய விவேகமும் விளக்கமும் குழந்தைத்தனமானவை.

113 கற்பக விருட்சத்தைக் கொடுத்தால் கடன் தீர்ந்துவிடும் என்று நினைக்கலாம். ஆனால், இணையில்லாததும் விகற்பம் இல்லாததுமான தானத்தை அளிப்பதில் ஸாயீ கைதேர்ந்தவர் அல்லரோõ அதை எப்படித் திருப்பிச் செலுத்த முடியும்?

114 ஆக, இவற்றுடன் சேர்த்துப் பரிசனவேதியைக் குருவுக்குக் கொடுத்தால், அந்தப் பரிசனவேதி தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாகத்தான் மாற்றும். இது இப்படி இருக்கையில், நாம் குடிப்பதற்கு பிரம்மானந்தத்தைக் கொடுக்கக்கூடியவர் அல்லரோ குருõ

115 காமதேனுவை குருவுக்கு அர்ப்பணம் செய்து குருவின் உபகாரத்திற்குப் பதிலுதவி செய்துவிட்டோம் என்று நினைத்தால், உழைப்புதான் மிஞ்சும். மாறாக, பற்றேதும் இல்லாத குரு அளிப்பவற்றில் உழைப்போ சங்கடங்களோ இரா.

116 அகில உலகத்திலும் உள்ள சம்பத்துகளை குருவுக்கு அர்ப்பணம் செய்து குருவின் உபகாரத்திற்குக் கைம்மாறு செய்துவிடலாம் என்று சிலர் விரும்பலாம். மாயையைக் கடந்த உண்மைப்பொருளை வழங்குபவருக்கு, மாயையால் விளைந்த பொருளைக் கொடுத்துக் கடனை என்றாவது அடைக்க முடியுமா?

117 பரமகுருவுக்கு தேஹத்தை அர்ப்பணம் செய்வோமென்றால், அதுவும் கேவலம் அழியக்கூடிய பொருள். ஜீவனை சரணடையச் செய்தாலும், அது இயல்பிலேயே மித்தியம் (பொய்).

118 ஸத்குரு ஸத்தியவஸ்துவை (உண்மைப்பொருளை) வழங்குபவர். அவருக்கு மித்தியவஸ்துகளை (பொய்யான பொருள்களை) அர்ப்பணம் செய்து எப்படிப் பிரதியுதவி செய்ய முடியும்? இது இயலாத காரியம் அன்றோ?

119 ஆத­ன், அனன்னியமானதும் பூரணமானதுமான சிரத்தையுடன், ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, ஸத்குருவின் பாதங்களில் தலையைச் சாய்த்து, அவர் செய்த அருட்செயல்களை மனத்தில் இருத்தி அவரை வழிபடுவோமாக.

120 குரு செய்த அருட்செயல்களை அகண்டமாக (இடையறாது) நினைவில் கொள்வதே சிஷ்யனுக்கு அணிகலன். கைம்மாறு செய்ய முயலும் சிஷ்யர்கள் தங்களுடைய சுகத்தை இழப்பர்õ

121 கதைகளை இதுவரை கேட்டவர்கள் மேலும் கேட்கத் தாகம் கொண்டுள்ளனர். அவர்களுடைய பூரணமான விஷய ஆர்வத்தையும் பரபரப்பையும் காணும் நான், இப்பொழுது இன்னொரு காதையையும் சொல்கிறேன்.

122 சம்சாரிகளுக்குச் சமமாக, ஞானியரும் தம் சுற்றத்தின் மீதான பிரேமையை வெளிப்படுத்துகின்றனர். அதாவது, உலக மக்களை ஒன்றுசேர்ப்பதிலும் நல்வழிப் படுத்துத­லும், அவர்கள் நேரம் தவறாது செயல்படுவதை சூக்குமமாகத் தெரிவிக்கின்றனர்.

123 இப்படியும் இருக்கலாமோ? ஸாயீ தம் பக்தர்களுக்கு மங்களங்களை விளைவிப்பதற்காக, எங்கெங்கு எவ்வெப்படித் தேவைப்பட்டதோ அங்கங்கு அவ்வப்படி நாடகமாடி ஆன்மீக போதனையை அளித்தாரோ?

124 இந்தப் பின்னணியில் ஒரு சிறிய காதை சொல்கிறேன். கதைகேட்பவர்களே, பயபக்தியுடன் கேளுங்கள். ஒரு ஞானி மற்றொரு ஞானியை, யாரும் சொல்லாமலேயே எவ்வாறு அடையாளம் கண்டுகொள்கிறார் என்பதை அறிந்துகொள்வீர்கள்.

125 ஒருசமயம், ஸ்ரீ வாஸுதேவானந்தா என்ற பெயர் கொண்டவரும், ஸரஸ்வதி என்னும் துறவிப் பிரிவைச் சார்ந்தவருமான சுவாமி ஒருவர் கோதாவரிக் கரையில் இருக்கும் பிரசித்திபெற்ற நகரமான ராஜமஹேந்திரபுரத்திற்கு வந்தார்.

126 அவர் மஹா அந்தர்ஞானி (பிறர் மனம் அறியும் ஆற்றல் படைத்தவர்). கர்ம மார்க்கத்தில் பெரும் அபிமானம் கொண்டவர். அவருடைய அகண்ட கீர்த்தி இவ்வுலகில் இன்னும் எதிரொ­த்துக்கொண் டிருக்கிறது.

127 செவிவழிச் செய்தியாகப் பரவிய இக் கீர்த்தியைக் கேட்டு, நாந்தேட் நகரத்தில் வசித்துவந்த பிரபல வக்கீல் புண்டலீகராவும் மேலும் சில பக்தர்களும் ஸ்ரீ வாஸுதேவானந்த ஸரஸ்வதி சுவாமியை தரிசனம் செய்ய நிச்சயித்தனர்.

128 ஆகவே, தக்க தருணத்தில் ஒரு குழுவாகச் சேர்ந்து ராஜமஹேந்திரபுரம் சென்றடைந்தனர். காலைநேரத்தில் சுவாமியை தரிசிக்க கோதாவரி நதிக்கரைக்குச் சென்றனர்.

129 நாந்தேடி­ருந்து வந்த குழுவினர் அனைவரும் வைகறைப்பொழுதில் தோத்திரப் பாடல்களை ஓதியவாறு ஸ்நானம் செய்ய கோதாவரி நதிக்குச் சென்றனர்.

130 அங்கு சுவாமி நின்றுகொண் டிருந்ததைப் பார்த்த அனைவரும் பயபக்தியுடன் ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர். இயல்பான குசலப்பிரசனம் (நலங்கேட்டல்) முடிந்த பிறகு சிர்டீபற்றிய பேச்சு எழுந்தது.

131 ஸாயீ நாமம் காதில் விழுந்த உடனே, சுவாமி இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்துக்கொண்டே சொன்னார், ''அவர் நம் சகோதரர்; பற்றற்றவர்; அவரிடம் நமக்கு எல்லையற்ற பிரேமை உண்டு.ஃஃ

132 அங்கிருந்த ஒரு தேங்காயை எடுத்துப் புண்டலீகராவிடம் ஒப்படைத்தவாறு அவர் சொன்னார், ''நீங்கள் சிர்டீக்குச் செல்லும்போது நம் சகோதரரின் பாதகமலங்களில் வந்தனம் செய்தபின், இதைக் காணிக்கையாகச் செலுத்துங்கள்.--

133 ''என்னுடைய நமஸ்காரத்தை முழுமையாகத் தெரிவித்து, அவரை இந்த தீனன் என்றும் மறவாதவாறு கிருபைபுரியவேண்டும் என்றும், அவரிடம் எனக்குள்ள பிரேமை நிரந்தரமாக வளரவேண்டுமென்றும், வேண்டியதாகச் சொல்லுங்கள்.--

134 ''நீங்கள் சிர்டீ கிராமத்திற்கு மறுபடியும் செல்லும்போது ஞாபகமாக இதை என் சகோதரருக்கு பயபக்தியுடன் காணிக்கையாகச் செலுத்துங்கள்.--

135 ''சுவாமிகளாகிய நாங்கள் யாருக்கும் வந்தனம் செலுத்தக்கூடாது என்பது சாஸ்திர நிபந்தனை. ஆயினும், இந்த நியமத்தைச் சிலசமயங்களில் மீறுதல் மங்களம் விளைவிக்கும்.--

136 ''ஆகவே, ஸாயீ தரிசனம் செய்யும்போது இதை மறந்துவிடாதீர். நன்கு நினைவில் வைத்துக்கொண்டு ஸாயீ பாதங்களில் தேங்காயை அர்ப்பணம் செய்யுங்கள்.ஃஃ

137 சுவாமி கூறியதைக் கேட்ட புண்டலீக ராவ் அவருடைய பாதங்களில் பணிந்து சொன்னார், ''சுவாமியின் ஆணை எப்படியோ அப்படியே அது நிறைவேற்றப்படும்.--

138 ''இந்த ஆணையை நான் சிரமேற்கொண்டேன். நீங்கள் என்னை பாக்கியவானாக ஆக்கியதாகக் கருதுகிறேன்.ஃஃ இவ்வாறாக, சுவாமியை அனன்னியமாக சரணடைந்தபின் புண்டலீக ராவ் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.

139 சுவாமி பாபாவை சகோதரர் என்று சொன்னது அர்த்தமற்ற செயலா என்ன? ''ஜீவிதமாக இருக்கும்வரை தினமும் அக்கினிஹோத்திரம் (நாள்தோறும் செய்யும் தீவேள்வி) செய்வாயாகஃஃ என்பது சுருதியின் ஆணை. பாபா அதைப் பின்பற்றினார்.

140 மக்கள் எதை 'துனிஃ (ஈஏமசஐ) என்று சொன்னார்களோ, அது பாபாவின் சன்னிதியில் எப்பொழுதும் இருந்தது. 24 மணி நேரமும் அது ஜுவாலையுடன் எரிந்துகொண் டிருந்தது. அது பாபாவின் விரதம்.

141 மனத்தைத் தூய்மைப்படுத்தும் அக்னிஹோத்திரம் போன்ற சடங்குகள், முழுமுதற்பொருளை அடையும் சாதனங்கள் என்பது பிரமாணம். பாபா மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அதை ஏற்றுக்கொண்டார்.

142 ஸ்ரீ வாஸுதேவானந்த ஸரஸ்வதி, 'யதிஃ பிரிவைச் சார்ந்த துறவி. அக்னிஹோத்திரம் போன்ற விரதங்களையும் கடைப்பிடித்து வந்தார். ஆகவே, அவர் பாபாவை சகோதரர் என்று சொன்னது அர்த்தமற்றதாகுமா?

143 பின்னர், ஒரு மாதம் கழிவதற்கு முன்பாகவே, புண்டலீக ராவுக்கு நான்கு நண்பர்களுடன் சேர்ந்து சென்று, ஸாயீதரிசனம் செய்யும் யோகம் வாய்த்தது.

144 அவர்கள் தங்களுக்கு வேண்டிய சாமான்களையும் பழங்களையும், மறந்துபோகாமல் தேங்காயையும் எடுத்துச் சென்றனர். மனத்தில் ஆனந்தமும் சாந்தமும் நிரம்பிய நிலையில் ஐவரும் ஸாயீதரிசனத்திற்குப் புறப்பட்டனர்.

145 பிறகு மன்மாடில் இறங்கினர். கோபர்காங்வ் வண்டி வருவதற்குச் சிறிது அவகாசம் (கால இடைவெளி) இருந்தது. ஆகவே, தாகத்தைத் தணித்துக்கொள்ள ரயில் நிலையத்திற்கு அருகி­ருந்த ஓடைக்குச் சென்றனர்.

146 வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடல் நலக்கேடு விளையும் என்று கருதி, ஐவரில் ஒருவர், தாம் கொண்டுவந்திருந்த 'சிவ்டாஃ (ஙஐலபமதஉ) பொட்டலத்தை வெளியே எடுத்தார்.

147 ஒரு சிட்டிக்கை சிவ்டாவை வாயில் போட்டுப் பார்த்ததில் காரம் அதிகமாக இருந்தது தெரிந்தது. கொஞ்சம் தேங்காய் சேர்க்காமல் சிவ்டாவைத் தின்னமுடியாத நிலைமை. சிவ்டாவைக் கொண்டுவர எடுத்த முயற்சி வீண், என்று அவர்களுக்குத் தோன்றியது.

148 ஆகவே, ஒருவர் மற்றவர்களிடம் சொன்னார், ''எனக்கு ஒரு யுக்தி (வழிவகை) தோன்றுகிறது. ஒரு தேங்காயை உடைத்து சிவ்டாவில் கலந்துவிடலாம். சிவ்டாவின் அற்புதமான ருசியை அப்பொழுது பாருங்கள்õஃஃ

149 தேங்காய் என்று சொன்னவுடனே தேங்காய் தயாராக இருந்ததுõ அதை உடைப்பதில் என்ன தாமதம்? தேங்காயைக் கலந்தவுடன் சிவ்டா ருசிகரமாகியது. சிவ்டாவைத் தின்றபின் தண்ணீர் குடித்தனர்.

150 தேங்காய் என்று சொன்னவுடன் தேங்காய் வந்தது. அது யாருடையது என்ற கேள்வியே எழவில்லை. பசியின் கடுமை வேறெதையும்பற்றிச் சிந்திக்கவிடாமல் தடுத்துவிட்டதுõ

151 பின்னர், ரயில் நிலையத்திற்குத் திரும்பிவந்து கோபர்காங்வ் ரயி­ல் ஏறிய பிறகு, பயணத்தின்போது புண்டலீக ராவுக்குத் திடீரென்று தேங்காய்பற்றிய நினைவு வந்தது.

152 சிர்டீயை நெருங்கியபோது புண்டலீக ராவின் மனம் குழம்பித் தத்தளித்தது. வாஸுதேவானந்தா அளித்த தேங்காய், தவறுதலாகச் சிவ்டாவுடன் கலக்கப்பட்டுவிட்டது.

153 தேங்காய் உடைக்கப்பட்டு உண்ணப்பட்டுவிட்டது, என்பதை உணர்ந்த புண்டலீக ராவைப் பயம் பிடித்துக்கொண்டது. உடல் நடுங்க ஆரம்பித்தது. ஒரு ஞானிக்கு அபசாரம் (மரியாதைக் குற்றம்) நடந்துவிட்டது.

154 அவர் பெரிதும் வருத்தமுற்றார், ''அடாடா நான் எத்தகைய பாவம் செய்துவிட்டேன்õ சுவாமியின் சாபத்திற்கு நான் ஆளாவேன். நான் அவரிடம் பிரலாபித்ததெல்லாம் (பிதற்றியதெல்லாம்) வீணாகப் போயிற்று.ஃஃ

155 தேங்காய்க்கு நேர்ந்த கதியையும் தாம் செய்த ஏமாற்றுதலையும் நினைத்துப் புண்டலீக ராவின் மனம் வியப்பால் உறைந்து போயிற்று.

156 ''இப்பொழுது நான் பாபாவிடம் எதைக் கொடுப்பேன்? எந்த ரீதியில் அவருக்கு விவரம் சொல்லுவேன்? ஆஹா, தேங்காயைக் கோட்டைவிட்டுவிட்ட நான் எப்படி அவரிடம் என் முகத்தைக் காட்டுவேன்?ஃஃ

157 'ஸாயீ பாதங்களில் ஸமர்ப்பணம் செய்வதற்கு வைத்திருந்த தேங்காய் தின்று தொலைக்கப்பட்டதேஃ என்னும் சிந்தனை அவரை வாட்டியது. அது ஒரு ஞானிக்குச் செய்யப்பட்ட அபசாரம் என்று தம்முள் நினைத்தார்.

158 ''இப்பொழுது, பாபா 'தேங்காய் எங்கேஃ என்று கேட்கும்போது எல்லாரும் அவமானத்தால் முகங்கவிழப் போகிறோம். ஏனெனில், 'மன்மாடில் அது சிற்றுண்டியாகிவிட்டதுஃ என்னும் குற்றவுணர்ச்சி எல்லாருடைய மனத்திலும் தோன்றும்.--

159 ''இன்று அந்தத் தேங்காய் என்னிடம் இல்லை. உண்மையைச் சொல்லுவதற்கு வெட்கமாக இருக்கிறது. பொய் சொல்லவும் முடியாது. ஏனெனில், ஸாயீ மஹராஜ் ஸர்வஸாக்ஷி (எல்லா நிகழ்வுகளையும் சாட்சியாகப் பார்த்துக்கொண் டிருப்பவர்).ஃஃ

160 இருந்தபோதிலும், ஸாயீயை தரிசனம் செய்தபோது குழுவினர் அனைவரும் சந்தோஷப்பட்டனர். விழிகள் ஆனந்தக்கண்ணீர் வடித்தன. அவர்களுடைய முகங்கள் மலர்ந்திருந்தன.

161 இக் காலத்தில் நாம் இரவுபகலாகத் தந்தி மூலமாகச் செய்திகளை அனுப்புகிறோம். இந்த விஞ்ஞான சாதனைபற்றிப் பெருமைகொள்கிறோம்; பகட்டுகிறோம்.

162 இதன் பொருட்டுப் பெருஞ்செலவு செய்து பல தந்தி நிலையங்களை நிர்மாணம் செய்திருக்கிறோம். ஞானியருக்கு இச் சாதனங்கள் தேவையில்லை. தங்களுடைய மனத்தின் சக்தியாலேயே செய்திகளை அனுப்புகின்றனர்.

163 சுவாமிகள் புண்டலீக ராவிடம் தேங்காயைக் கொடுத்தபோதே ஸாயீநாதருக்குச் செய்தி அனுப்பிவிட்டார்.

164 புண்டலீக ராவுக்கு தரிசனம் அளித்துக்கொண்டே ஸாயீ பாபா அவராகவே கேட்டார், ''என் சகோதரரிடமிருந்து நீர் எடுத்துக்கொண்டுவந்த என்னுடைய வஸ்துவைக் (பொருளைக்) கொடும்.ஃஃ

165 பெருந்துன்பமடைந்த புண்டலீக ராயர், ஸாயீயின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டே சொன்னார், ''தேவரீரிடம் மன்னிப்புக் கேட்பதைத்தவிர எனக்கு வேறு வழியே இல்லை. என்னால் வேறென்ன சொல்ல முடியும்?--

166 ''எனக்குத் தேங்காய்பற்றிய ஞாபகம் இருந்தது. ஆனால், நாங்கள் பசியோடு ஓடைக்குச் சென்றபோது எல்லாருமே அதைப்பற்றி முழுமையாக மறந்துவிட்டோம்.--

167 ''சிவ்டாவைத் தின்றபோது அந்தத் தேங்காயைத்தான் உடைத்துக் கலந்தோம். ஆயினும், நான் இன்னொரு தேங்காய் கொண்டுவருகிறேன். நிச்சலமான மனத்துடன் தேவரீர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.ஃஃ

168 இவ்வாறு சொல்­க்கொண்டே புண்டலீக ராவ் வேறொரு தேங்காயைக் கொண்டுவருவதற்காக எழுந்தார். ஸாயீ மஹராஜ் அவருடைய கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியதை எல்லாரும் கண்டனர்.

169 ''என்னிடம் வைக்கப்பட்ட நம்பிக்கையை நான் அறியாது கொன்றுவிட்டேன். கிருபாளுவான (அருளுடையவரான) தேவரீர் என்னைச் சிறகுகளால் மூடிக் காப்பீராக. கிருபை செய்து என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களுக்குக் கடுமையான அபராதம் (குற்றம்) செய்துவிட்டேன்.--

170 ''சுவாமிக்கு இணையான ஒரு நல்ல சாது உள்ளாரோ? அவருடைய ஆணையையே நான் மீறிவிட்டேன். தங்களிடம் அர்ப்பணம் செய்யப்படவேண்டிய தேங்காயை நான் உடைத்துத் தின்றுவிட்டேன்.--

171 ''இது ஞானியர் விதித்த ஆணையை மீறுவதன்றோ? ஐயகோõ நான் பெருங் குற்றவாளிõ இந்தப் பாவத்திற்கு சாந்தி ஏதும் உண்டோ? எப்படி, எப்படி நான் இவ்வளவு வெட்கங்கெட்டவனானேன்?ஃஃ

172 என்ன நடந்தது என்பதைக் கேட்ட ஸாயீநாதர் புன்னகை புரிந்துகொண்டே சொன்னார், ''வைத்துக் காப்பாற்ற முடியாதவர் ஏன் தேங்காயைக் கையில் வாங்கிக்கொள்ள வேண்டும்?--

173 ''என்னுடைய வஸ்துவை என்னிடம் நீர் நிச்சயமாகக் கொண்டுசேர்ப்பீர் என்று நினைத்து என் சகோதரர் உமது வார்த்தைகளில் முழுமையாக விசுவாசம்
வைத்தார்.--

174 ''அது இவ்வாறாகவா பரிணமிக்க (உருமாற) வேண்டும்? இவ்வளவுதான் உம்முடைய நாணயமா? என் சகோதரருடைய விருப்பம் நிறைவேறவில்லை. இதுதான் நீர் செயல்படும் முறையோ?ஃஃ

175 ஸாயீ மேலும் சொன்னார், ''நீர் எத்தனை தேங்காய்களைக் கொண்டுவந்தாலும், அந்தத் தேங்காயின் யோக்கியதைக்கு (சிறப்புக்கு) மற்றவை இணையாகா. எது நடக்கவிருந்ததோ அது நடந்துவிட்டது. அதைப்பற்றி வருத்தப்படுவதில் அர்த்தமென்ன இருக்கிறது?--

176 ''சுவாமி உம்மிடம் தேங்காயைக் கொடுத்தது என்னுடைய சங்கல்பத்தால். தேங்காய் உடைக்கப்பட்டதும் என்னுடைய சங்கல்பத்தாலேயேõ உம்மை ஏன் அதற்குப் பொறுப்பாளர் ஆக்கிக்கொள்கிறீர்?--

177 ''உமது புத்தியில் அகங்காரம் ('நான்ஃ என்னும் செருக்கு) அமர்ந்திருக்கிறது. அதனால்தான், நீர் உம்மை அபராதியாகக் (குற்றவாளியாகக்) கருதுகிறீர். 'செயல் புரிபவன் நானில்லைஃ என்னும் மனப்போக்கை ஏற்றுக்கொள்ளுங்கள். உம்முடைய உபாதிகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். --

178 ''புண்ணியங்கள் அனைத்தும் தமதாக இருக்கவேண்டும் என்றும், பாவங்கள் எதுவும் தமதாக இருக்கக்கூடாது என்றும் மக்கள் ஏன் நினைக்கின்றனர்? அவை இரண்டின் பிரதாபமும் (வீரமும்) சரிசமானமே. ஆகவே, 'நான் செய்கிறேன்ஃ என்னும் எண்ணத்தை விடுக.--

179 ''நீர் என்னைப் பேட்டி காணவேண்டும் என்று என்னுடைய மனத்தில் எண்ணம் விழுந்ததால்தான், அந்தத் தேங்காய் உம்முடைய கைகளில் வந்து விழுந்தது. இச் சொல் முக்காலமும் ஸத்தியம்.--

180 ''நீங்களும் எனது குழந்தைகளே. உங்களுடைய வாய்களில் இடப்பட்ட தேங்காயை உங்களுக்குத் தெரியாமலேயே எனக்கு அர்ப்பணம் செய்துவிட்டீர்கள்õ அது என்னிடம் வந்துசேர்ந்துவிட்டது என்பதைத் திட்டவட்டமாக அறிந்துகொள்ளுங்கள்.ஃஃ

181 இவ்வாறு பாபாவால் சமாதானப்படுத்தப்பட்ட பின்பே புண்டலீக ராவின் மனம் சாந்தமடைந்தது. சோகம் கொஞ்சங்கொஞ்சமாக விலகியது.

182 தேங்காய் நஷ்டம் என்னவோ ஒரு சாக்குப்போக்குதான். பாபாவின் உபதேசத்தால், அவருடைய நடுங்கிக்கொண் டிருந்த மனம் மலர்ச்சி அடைந்தது. 'நான்ஃ என்னும் செருக்கால் சூழப்பட்டருந்த ஐவரும் அச் செருக்கை விடுத்து, தோஷம் (குற்றம்) நீங்கியவர்கள் ஆயினர்.

183 'நான்ஃ என்னும் செருக்கை மனம் விடுத்தால், அதற்கு ஆன்மீகவாழ்வில் முன்னேற அதிகாரம் கிடைக்கிறது. பிறவிக்கடலையும் இயல்பாகக் கடந்துவிடலாம். இதுவே இக் காதையின் சாரம்.

184 இப்பொழுது, மூன்றாம் பக்தரின் புதினமானதும் தனித்தன்மை வாய்ந்ததுமான சிறந்த அனுபவத்தைப்பற்றிக் கேளுங்கள். பாபாவின் இணையிலா வைபவத்தையும் சக்தியின் காம்பீர்யத்தையும் (பெருமிதத்தையும்) படிப்படியாக அறிந்துகொள்வீர்கள்.

185 பாந்த்ரா தாலூகாவின் வடபகுதியில், பாந்த்ரா நகரை அடுத்து சாந்தாகுரூஜ் என்றழைக்கப்படும் நகரம் இருக்கிறது. அங்கு 'துரந்தர்ஃ என்னும் பெயர்கொண்ட குடும்பம் ஒன்று வசித்துவந்தது. குடும்பத்தினர் ஹரிபக்தர்கள்.

186 எல்லா சகோதரர்களும் ஞானிகளிடம் அன்பு செலுத்தினர். ஸ்ரீராமனின்மேல் திடமான நிட்டை வைத்திருந்தனர். ராமநாமத்தின்மீது அனன்னியமான சிரத்தை கொண்டிருந்தனர். மற்றவர்களுடைய வாழ்வில் தலையிடுவதில் விருப்பமற்றிருந்தனர்.

187 அவர்கள் எளிய வாழ்வு நடத்தினர்; குழந்தைகளும் அவ்வாறே. குடும்பப் பெண்டிரும் தோஷமற்ற (குற்றமற்ற) ஆசாரத்தைக் கடைப்பிடித்தனர். ஆத­ன், சக்ரபாணி (விஷ்ணு) அவர்களுக்குக் கடமைப்பட்டவரானார்.

188 அவர்களில் பாலாராம் ஒருவர்; விட்டல் பக்தர்; புண்ணியசா­. அரசாங்க தர்பாரில் அவருக்குப் பெரும்மதிப்பு இருந்தது. எல்லாரும் அவரை விரும்பினர்.

189 1878 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதியன்று இந்த ரத்தினம் ஒரு ராமபக்தரின் மகனாகப் பிறந்தார்.

190 இவர், பிரசித்திபெற்றதும் பெருமதிப்பிற்குரியதுமான குடும்பத்தில், பம்பாய் நகரத்தில், 1878 ஆம் ஆண்டு படாரே பிரபு வம்சத்தின் அலங்காரமாகப் பிறந்தார்.

191 இவர் ஐரோப்பியக் கல்வியில் தேர்ச்சி பெற்றபின், அட்வகேட் (வக்கீல்) பதவி வகித்துவந்தார். தத்துவஞானம் பெற்றவர்; எல்லாராலும் பண்டிதராகக் கருதப்பட்டவர்.

192 பாண்டுரங்கன்மீது மிகுந்த பிரேமை கொண்டவர்; ஆன்மீக வாழ்வில் உயர்ந்த பற்று வைத்திருந்தார். தந்தையின் இஷ்டதெய்வம் ராமன்; மகன் விட்ட­டம் அடைக்கலம்.

193 'விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?ஃ என்னும் பழமொழிக்கேற்ப, தந்தையின் குணநலன்கள் பாலாராமிடம் அபூர்வமாக வெளிப்பட்டன. சகோதரர்கள் எல்லாருமே பட்டதாரிகள்; தெய்வீக சிந்தனையுடன் தர்ம மார்க்கத்தில் வாழ்க்கை நடத்தினர்.

194 கவர்ச்சிகரமாகவும் திறமையுடனும் கோர்ட்டில் வாதங்களை முன்வைத்தல், நேர்மையான சிந்தனை, தர்ப்பையின் நுனி போன்ற கூர்த்த மதி, நல்லொழுக்கம் ஆகியவை அவருடைய நற்பண்புகள். இவை மற்றவர்களும் ஆர்வத்துடன் பின்பற்றத் தக்கவை அல்லவோõ

195 பாலாராம் பெருமளவில் சமூகசேவை செய்தார். தம் இனத்தாரின் விருத்தாந்தத்தை எழுதினார். அவராகவே ஏற்றுக்கொண்ட அந்த விரதம் நிறைவேறியபின் பரமார்த்த வாழ்வில் முழுமையாக இறங்கினார்.

196 அதிலும் சிறந்த முன்னேற்றம் கண்டார். ஸ்ரீமத் பகவத் கீதையையும் ஞானேச்வரியையும் கசடறப் பயின்று, ஆன்மீக விஷயங்களில் வித்துவான் என்று புகழ் பெற்றார்.

197 அவர் ஸாயீயின் பரம பக்தர். 1925 ஆம் ஆண்டில், இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்தார். அவருடைய சரித்திரத்தின் சுருக்கத்தைக் கேளுங்கள்.

198 1925 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதியன்று இவ்வுலக யாத்திரையை முடித்துக்கொண்டு விட்டலுடன் இரண்டறக் கலந்துவிட்டார் பாலாராம்.

199 துரந்தர் சகோதரர்களுக்கு 1912 ஆம் வருடம், ஒரு மங்களகரமான நாளில், ஞானிதரிசனம் செய்ய ஸாயீ தர்பாருக்குச் செல்லும் யோகம் வாய்த்தது.

200 ஆறு மாதங்களுக்கு முன்பாக, சகோதரர்களில் மூத்தவரான பாபுல்ஜி, வாமன்ராவ் என்பவருடன் சேர்ந்து சிர்டீ சென்று ஸாயீதரிசனம் செய்தபின் ஆனந்தமாகத் திரும்பிவந்தார்.

201 அந்தச் சிறந்த அனுபவத்தைத் தாங்களும் பெற்று, ஒப்புவமையற்ற தரிசனத்தின் லாபத்தையும் அடையவேண்டும் என்னும் நோக்கத்துடன் பாலாராமும் மற்ற சகோதரர்களும் சிர்டீக்குச் சென்றனர்.

202 அவர்கள் வருவதற்கு முன்பாகவே பாபா எல்லாரும் கேட்கும்படி சொன்னார், ''என்னுடைய தர்பாரைச் சார்ந்த அநேக மக்கள் இன்று இங்கு வரப்போகின்றனர்.ஃஃ

203 பிரேமையுடன் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைப் பின்னர்க் கேள்வியுற்ற துரந்தர் சகோதரர்கள் வியப்பிலாழ்ந்தனர், ''சிர்டீ செல்வதுபற்றி நாம் யாருக்குமே தெரிவிக்கவில்லையேõ பாபாவுக்கு இந்தச் செய்தி எப்படிக் கிடைத்தது?ஃஃ

204 பிறகு, ஸாயீயைக் கண்களால் கண்டவுடன் தாவிச்சென்று பாதங்களைப் பிடித்துக்கொண்டனர். மெல்­ய குர­ல் சம்பாஷணை தொடர்ந்தது. எல்லாரும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

205 மேலும், துரந்தர் சகோதரர்கள் வந்துசேர்ந்தவுடன் பாபா திருவாய்மொழி மலர்ந்தார், ''பாருங்கள், என் தர்பாரின் மக்கள் வந்துவிட்டனர் -- யார் வரப் போகின்றனர் என்று நான் சொன்னேனோ, அவர்கள்.ஃஃ

206 பாபா மேலும் என்ன சொன்னார் என்பதில் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேளுங்கள், ''நீங்களும் நானும் அறுபது ஜன்மங்களாக ஒருவரையொருவர் அறிவோம்.ஃஃ

207 பாலாராமும் மற்ற சகோதரர்களும் மிகுந்த பணிவுடன் பாபாவின் சன்னிதியில் கைகட்டி நின்று பாபாவின் பாதங்களையே பார்த்துக்கொண் டிருந்தனர்.

208 ஸ்ரீஸாயீதரிசனம் ஆன பிறகு, பாலாராமும் மற்றவர்களும் பிரேமையில் மூழ்கிய, தடுத்து நிறுத்தமுடியாத உள்ளக்களிப்பை அடைந்தனர். சிர்டீக்கு வந்தது, பெரும்பயன் அளித்ததை உணர்ந்தனர்.

209 கண்களில் நீர் நிறைந்தது; உணர்ச்சிவசத்தால் தொண்டை அடைத்தது; எல்லா அங்கங்களிலும் மயிர்க்கூச்செறிந்தது; இதயம் அஷ்டபா(ஆஏஅ)வத்தால் நிரம்பியது.

210 பாலாராமின் நிலையைப் பார்த்த ஸாயீ களிப்புற்றார். பொதுவாகப் பேச ஆரம்பித்தார். பிரேமையுடன் உபதேச மொழிகளைச் சொன்னார்.

211 ''சுக்கிலபக்ஷத்துச் (வளர்பிறைச்) சந்திரனின் கலையைப்போன்று என்னை வழிபட்டுத் தம்முடைய மனோதர்மத்தை என்னிடம் முழுமையாக ஒப்படைத்தவர் பெரும்பேறு பெற்றவர் என்பதை அறிவீர்களாக.--

212 ''திடமான விசுவாசத்தை மனத்தில் தரித்து, எவர் தம்முடைய குருவை வழிபடுகிறாரோ, அவருக்கு இறைவன் எக்காலமும் கடன்பட்டவன். அவரை யாரும் வக்கிரமாகப் பார்க்க (கேடுசெய்ய) முடியாது.--

213 ''எவர் ஹரிகுரு வழிபாட்டில் விருப்பம் கொண்டு அரை நிமிடத்தையும் வீணாக்க மாட்டாரோ, அவருக்கு குரு எல்லையற்ற ஆனந்தத்தை அளிப்பார்; பிறவிக்கடலைத் தாண்டி அழைத்துச் செல்வார்.ஃஃ

214 இந்த வசனத்தைக் கேட்ட எல்லாருடைய விழிகளிலும் ஆனந்தக்கண்ணீர் பெருகியது; சித்தம் மகிழ்ந்தது; அந்தக்கரணம் நற்பாதை கண்டது.

215 பின்னர், ஸாயீயின் உபதேசமாகிய மாலைகளைத் தரித்தவர்களாக அவர்கள் வந்தனம் செய்தனர். ஏற்கெனவே பக்தியின் காரணமாக உணர்ச்சிவசப்பட்டிருந்த அவர்களனைவரையும் ஸாயீயின் திருவாய்மொழி ஆனந்தமயமாக்கியது.

216 இவ்வாறாக, பிறகு அவர்கள் வாடாவுக்குத் திரும்பிவந்து உணவுண்டபின் சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். பிற்பகல் நான்குமணி அளவுக்கு மசூதிக்கு மறுபடியும் சென்றனர். பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர்.

217 பாலாராம் மிகுந்த பணிவுடன் பாபாவின் பாதங்களைப் பிடித்து விட்டார். பாபா சிலீமை முன்னே நீட்டி அவரைப் புகைகுடிக்கும்படி சைகை காட்டினார்.

218 புகைகுடிக்கும் பழக்கம் இல்லாதவராயினும், பாலாராம் சிலீமை ஒரு பிரசாதமாக ஏற்று, சிரமப்பட்டுப் புகையை இழுத்தார். பின்னர்ச் சிலீமை பாபாவின் கையில் திருப்பிக் கொடுத்துவிட்டு நல்லுணர்ச்சியுடன் வந்தனம் செய்தார்.

219 பாலாராமுக்கு அது ஓர் அதிருஷ்ட தினம். அன்றி­ருந்து அவரைப் பீடித்திருந்த ஆஸ்துமாநோய் ஒழிந்தது. அவர் பூரணமாக ஆசுவாசம் (நிவாரணம்) பெற்றார்.

220 அந்த ஆஸ்துமாநோய் ஒருநாள், இரண்டு நாள் விவகாரம் அன்று; ஆறு முழு ஆண்டுகளாக இருந்துவந்த பீடிப்பு. அவருடைய காதில் மந்திரம் ஓதி வியாதியை ஒழித்தாரோõ சிலீமின் பிரதாபம் அத்தகையதுõ

221 சிலீமி­ருந்து புகையை ஓர் இழுப்பு இழுத்துவிட்டுப் பணிவுடன் வணக்கம் தெரிவித்தவாறு சிலீமைத் திருப்பிக் கொடுத்தார். அப்போதி­ருந்து ஆஸ்துமா அவரிடமிருந்து தொலைந்துபோயிற்று. மறுபடியும் தொந்தரவு செய்யவே இல்லை.

222 ஆயினும், நடுவில் ஒரே ஒரு நாள் பாலாராம் குக்கும் இருமலால் அவதியுற்றார். எல்லாரும் வியப்படைந்தனர். காரணம் யாருக்கும் தெரியவில்லை.

223 பின்னர் விசாரித்தபோது, பாபா அந்த நாளில்தான் உடலை உகுத்தார் என்பது எல்லாருக்கும் தெரியவந்தது. பக்தர்களுக்கு சூசகமாகத் தெரிவித்தாரோ பாபா?

224 பாலாராம் என்று இருமலால் அவஸ்தைப்பட்டாரோ, அன்றுதான் பாபா தேஹத்தை விடுத்து இவ்வுலகத்தி­ருந்து கிளம்பினார். இதுவே அவர் பாலாராமுக்குக் காட்டிய குறிப்பு.

225 அன்றுதொட்டுச் சாகும்வரை ஒருநாளும் அவர் மறுபடியும் இருமலால் அவஸ்தைப்படவில்லை. இந்தச் சிலீம் அனுபவத்தை யாராலாவது மறக்க முடியுமா?

226 ஆக, அன்று (துரந்தர் சகோதரர்கள் தரிசனம் செய்த நாள்) வியாழக்கிழமையாதலால் சாவடி ஊர்வலமும் நடந்தது. அவர்களுடைய ஆனந்தம் இரட்டித்தது. அந்த நாள் என்றுமே மறக்கமுடியாத நாளாயிற்று.

227 இரவு எட்டுமணியி­ருந்து ஒன்பது மணிவரை பாபாவின் எதிரே மசூதியின் முற்றத்தில் தாளங்களும் மிருதங்கங்களும் பக்கவாத்தியங்களாக ஒ­க்க, மனத்தை ஈர்க்கும் இனிமையான பஜனை நடைபெறும்.

228 ஒருபுறம் அபங்கங்களைப்1 பாடியவாறே மறுபுறத்தில் பல்லக்கு ஜோடிக்கப்படும். பல்லக்குத் தயாரானவுடனே பாபா சாவடிக்கு ஊர்வலமாக நடந்துசெல்வார்.

229 இக் காவியத்தின் முப்பத்தேழாவது அத்தியாயத்தில் சாவடி ஊர்வலத்தின் கோலாகலம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இவ்விடத்திலும் விவரித்தால், 'கூறியது கூறல்ஃ என்னும் குற்றம் விளையும்.

230 ஒருநாள் மசூதியிலும் மறுநாள் சாவடியிலும் இரவைக் கழிப்பது பாபாவின் நியமம். மஹாஸமாதி அடையும்வரை இந்த நியமத்தைத் தடையின்றிக் கடைப்பிடித்தார்.

231 பிரேமை மிகுந்த பக்தரான பாலாராம், சாவடி ஊர்வலத்தின் கண்கொள்ளாக் காட்சியைக் காண விரும்பினார். ஆகவே, துரந்தர் சகோதரர்கள் சாவடி ஊர்வல நேரத்தில் மறுபடியும் வந்தனர்.

232 சிர்டீ க்ஷேத்திரத்தின் (திருத்தலத்தின்) ஆடவரும் பெண்டிரும் பாபாவுடன் சேர்ந்து சாவடிக்குக் கிளம்பினர். உல்லாசமாகவும் 'ஜய ஜயஃ கோஷம் போட்டுக்கொண்டும் ஊர்வலமாகச் சென்றனர்.

233 சியாம்சுந்தர் என்றழைக்கப்பட்ட குதிரை, ஜரிகை வேலைப்பாட்டுடன்கூடிய துணியால் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலத்தில் முன்னோடியாக நடனமாடிக்கொண்டும் கனைத்துக்கொண்டும் சென்றது.

234 கொம்புகளும் பலவகையான குழல் வாத்தியங்களும் ஊதப்பட்டன. பல்லக்கும் சிங்காரிக்கப்பட்ட சியாம்கர்ணாவும் பக்தர்களும் புடைசூழ, பக்தர் ஒருவர் ஏந்திய கொற்றக்குடையின்கீழ் பாபா பவனி வந்தார்.

235 கொடிகளையும் பதாகைகளையும் ஏந்தியவாறும், ஸாயீயின் தலைக்குமேல் கொற்றக்குடையைப் பிடித்துக்கொண்டும், சவரி வீசியவாறும், நான்கு பக்கங்களிலும் தீவட்டி ஏந்தியவாறும், பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்துகொள்வர்.

236 சேகண்டி, மிருதங்கம், யாழ் ஆகிய இன்னிசைக் கருவிகளை இசைத்தவாறு பஜனை பாடிக்கொண்டு மக்கட்கூட்டம் பாபாவின் இரு மருங்குகளிலும் செல்லும்.

237 இவ்வாறு அந்த ரம்மியமான ஊர்வலம் சாவடிக்கு வந்து சேர்ந்தவுடன் பாபா நிற்பார். வடக்கு நோக்கியவாறு, விதிகளின்படி கைகளை அசைத்துச் சில கிரியைகளைச் (சடங்குச் செய்கைகளைச்) செய்வார்.

238 அவருக்கு வலப்பக்கத்தில், பகத் (பக்தர்) மஹால்ஸாபதி, பாபாவின் தோள்களின்மேல் தொங்கிய ஆடையின் நுனியைத் தம் கைகளால் தூக்கிப்பிடித்தவாறு நடப்பார். இடப்பக்கத்தில், தாத்யா பாடீல் கையில் லாந்தரை (கஹய்ற்ங்ழ்ய்) ஏந்தியவாறு நடப்பார்.

239 ஆதியிலேயே பாபாவின் முகம் வெளிறிய மஞ்சள் நிறமானது. தீபங்களின் ஒளியும் சேர்ந்து, கொஞ்சம் தாமிரம் கலந்த பொன்னைப்போல் முகம் ஜொ­க்கும். அந்த சமயத்தில் பாபாவின் முகம் உதயசூரியனின் பிரபையை ஒத்திருக்கும்.

240 அந் நேரத்து பவித்திரமான தரிசனம் பெரும்பேறு பெற்றதுõ வடக்கு நோக்கி நின்றுகொண்டு, ஒன்றிய மனத்துடன் வலக்கையைப் பாதி தூக்கி, யாரையோ அழைப்பது போன்று பாபா தோற்றமளிப்பார்.

241 அங்கிருந்து பாபா மரியாதையாகச் சாவடிக்குள் அழைத்துச் செல்லப்பட்டு உட்காரவைக்கப்படுவார். திவ்வியாலங்காரமான வஸ்திரங்கள் அர்ப்பணம் செய்யப்படும். உடலுக்குச் சந்தனம் பூசப்படும்.

242 சிலசமயங்களில், அருமையான ரத்தினங்கள் பதிக்கப்பட்ட, மயிற்பீ­ செருகிய தலைப்பாகை - சிலசமயங்களில் பொன்மகுடம் - சிலசமயங்களில், பளிச்சிடும் நிறத்தில் தலைப்பாகை - அவருடைய தலையின்மேல் அணிவிக்கப்படும். ஜரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட அழகிய சால்வை அணிவிக்கப்படும்.

243 வைரங்கள், முத்துகள், மரகதம் ஆகியன இழைத்த மணிமாலை பிரேமையுடன் பாபாவின் கழுத்தில் அணிவிக்கப்படும். சிலர் அவருடைய நெற்றியில் நறுமணம் கமழும் கஸ்தூரி திலகம் இடுவர்.

244 சிலர் அவருடைய பாதங்களைக் கழுவி, அர்க்கியம், பாத்தியம் ஆகிய பூஜைகளைச் செய்வர். சிலர் குங்குமப்பூக் குழம்பை உட­ல் சுகமாகப் பூசியபின் தாம்பூலத்தை பாபாவின் வாயில் இடுவர்.

245 ஐந்து திரிகள் ஏற்றப்பட்ட ஆரதியையும் கற்பூர நீராஞ்ஜனத்தையும் பாபாவின் எதிரில் சுழற்றிக் காட்டுவர். இக் காட்சியின் சோபை ஒப்புவமையற்றது.

246 பாண்டுரங்க மூர்த்தியின் வதனத்தில் தோன்றும் திவ்விய ஒளியின் பேரழகை, ஸாயீயின் முகமண்டலத்திலும் கண்ட துரந்தர் சகோதரர்கள் வியப்பிலாழ்ந்தனர்.

247 வானமண்டலத்தில் அடிக்கும் மின்னலைப் பூமியில் வாழும் மனிதர்களால் நேரிடையாகப் பார்க்க இயலாது. அதுபோலவே, ஸாயீயின் முகத்தி­ருந்து வீசிய தேஜஸ் (ஒளி) அவர்களுடைய கண்களைக் கூசவைத்தது.

248 விடியற்காலையில் காகட ஆரதி நடந்தது. துரந்தர் சகோதரர்கள் அதற்கும் சென்று தரிசனம் செய்தனர். அப்பொழுதும் பாபாவின் முகத்தி­ருந்து வீசிய அதே ஒளியைக் கண்டனர்.

249 அந் நாளி­ருந்து அவரது இறுதிநாள்வரை, பாலாராமுக்கு ஸாயீபாதங்களின் மீதிருந்த அத்தியந்த பக்தியும் விசுவாசமும், ஆடாது அசையாது சிறிதளவும் குறையாது இருந்தது.

250 ஹேமாட் ஸாயீபாதங்களில் சரணடைகிறேன். அடுத்த அத்தியாயத்துடன் இக் காவியம் பூரணமாகும். அதன் பிறகு சிம்ம1 அவலோகனம் நடைபெறும். கடைசி முறையாக எனக்குக் காது கொடுங்கள்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம் என்னும் காவியத்தில், 'மூன்று பக்தர்களின் விருத்தாந்தம்ஃ என்னும் ஐம்பத்தொன்றாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.