Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 19

19. எனக்கு அநுக்கிரஹம் (பகுதி2)


ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 பிரம்மாவி­ருந்து புல்பூண்டுவரை, சிருஷ்டியனைத்திலும் ஸாயீ சூக்குமத்தைவிட சூக்குமமானவர்; மிகப் பெரியதைவிடப் பெரியவர்.

2 அம்மாதிரியான பர பிரம்மத்திற்கு, ஓர் உருவமும் வடிவமும் வண்ணமும் அளித்து ஊனக் கண்களாலும் பார்க்கவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது (மனிதனின் மனத்தில்).

3 சூரியவழிபாடு செய்பவர்கள் ஹாரதி காட்டுவதற்காக விளக்குகளில் இருக்கும் திரிகளை பக்தியுடன் தூண்டிவிடுகிறார்கள். பிள்ளையார் பக்தர்கள் வெல்லத்தில் அவருடைய உருவத்தைச் செய்து, வெல்லத்தையே நைவேத்தியமாகவும் படைக்கிறார்கள்õ

4 சிலர் தங்களுடைய கைகளில் ஸமுத்திரநீரை ஏந்தி, ஸமுத்திரத்திற்கே அர்க்கியமாக1 அர்ப்பணம் செய்கிறார்கள். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இதெல்லாம் அனுசிதம் (மேன்மையல்ல) என்றே தோன்றுகிறது.

5 ஆயினும், மஹாபிரபாவம் வாய்ந்த சூரியனும் ஸமுத்திரமும் பக்தர்களுடைய நம்பிக்கையை மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. பக்தியை கௌரவிக்க வேண்டுமென்பதே நோக்கமாக இருக்கும்போது, உசிதம் (மேன்மை) எது, அனுசிதம் எது?

6 சிந்தனையிலும் ஆர்வங்களிலும் ஒத்துப்போகும் மனிதர்கள் நட்பை நாடுவார்கள் என்பது பொதுவான விதி. ஆனால், உடலுக்கும் ஆத்மாவுக்கும் ஏற்படும் ஸங்கமம், இந்த விதிக்கு ஒரு பெரிய, தவிர்க்கமுடியாத விலக்கு.

7 சுபாவத்தில் பரஸ்பரம் வேறுபட்டாலும், இவையிரண்டின் சேர்க்கை, ஒன்றில்லையென்றால் மற்றதுமில்லை என்னும் அளவுக்கு அசாதாரணமானது. இவையிரண்டும் ஒருகணங்கூடப் பிரிந்திருக்கமுடியாது.

8 இவ்வுடல் அழியக்கூடியது; ஆத்மாவோ மாறுபாடற்றது; அழிவில்லாதது. இரண்டிற்குமுள்ள பரஸ்பரப் பிரேமை அபாரமானது. இதனால்தான் ஸம்ஸாரச் சக்கரம் மேலும் மேலும் சுழல்கிறதுõ

9 ஆத்மா மஹத்தான சக்தியையுடையது. அதைவிட சூக்குமமானது ஆகாயம். அதுவே தோன்றாநிலையிலுள்ள பிரகிருதி (இயற்கை). அதையே மாயையென்றும் கூறுவர்.

10 இதையெல்லாம்விட சூக்குமமானது புருஷன் (இறைவன்); புலன் அங்கங்கள் ஓய்வு பெறும் இடம். அதுவே எல்லாரும் கடைமுடிவாகச் சென்றடையவேண்டிய இடம்; தூயபிரம்மம்.

11 இந்த ஆத்மா, தன்னைப் பொறுத்தவரை ஸ்படிகம் போன்று மாசுமறுவற்றதாயினும், இவ்வுலக வாழ்க்கையில் மாயையாலும் கர்மவினையாலும் பந்தப்பட்டதுபோலத் தோன்றுகிறது.

12 சிவப்போ கறுப்போ மஞ்சளோ, தன்முன் இருக்கும் வண்ணம் எதுவாகயிருந்தாலும் ஒரு ஸ்படிகம் அதைப் பிரதிப­த்துவிடும். ஆனால், ஸ்படிகம் தூய்மையானது; மாறுத­ல்லாதது; பிரதிப­க்கும் வண்ணங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் ஏதுமில்லை.

13 தொலைதூரத்தில் இருக்கும் கானல் நீர் தண்ணீரைப்போலத் தெரிகிறது. சிப்பி பளபளவென்று வெள்ளியைப்போலத் தெரிகிறது. சுற்றிவைக்கப்பட்ட கயிறு சுருட்டிக்கொண்டு படுத்திருக்கும் பாம்பைப் போன்று தேவையில்லாது தெரிகிறது.

14 கயிற்றைப் பார்த்துப் பாம்பென்று மிரளுவது எப்படி அடிப்படையே இல்லாத ஒரு தோற்றமோ, அதுபோன்றே, விடுதலையடைந்த ஆத்மாவுக்கு ''நான்தான் உடல்ஃஃ என்னும் அஹங்காரம் ஒரு மாயா பந்தத்தை உற்பத்தி செய்கிறது.

15 உடல், புலனுறுப்புகள், மனம், பிராணன் இவற்றி­ருந்து வேறுபட்ட லக்ஷணங்களை உடையது ஆத்மா. அது சுயஞ்ஜோதியான சுத்த தத்துவ ஞானம், உருவமில்லாதது, மாறுபடாதது.

16 தேஹம், புத்தி, மனம், பிராணன் இவற்றைப்பற்றிய அபிமானம் இருக்கும்வரை, செயல்பாடுகளும் இன்பதுன்ப அனுபவங்களும் இருந்துதான் தீரும். ஏனெனில், இவற்றின் பிரக்ஞை (உணர்வு) இருந்துதான் தீரும்.

17 ஆலம் விதை மிகச்சிறியதாக இருப்பினும், தன்னுடைய கர்ப்பத்தினுள் ஒரு பெரிய ஆலமரத்தின் சக்தியையும் வ­மையையும் வைத்திருக்கிறது. ஆலமரங்களும் கோடிக்கணக்கான மரங்களை உற்பத்தி செய்யக்கூடிய கணக்கற்ற விதைகளை உற்பத்தி செய்கின்றன.

18 இவ்வாறாக, ஒவ்வொரு விதையும் ஒரு மரத்தைத் தன்னுள் வைத்திருக்கிறது. பிரளயகாலம் (ஊழிக்காலம்) வரை, இவ்வதிசயச் சம்பவம் தொடரும்õ இதுவே இவ்வுலகின் விஷயத்திலும் பிரத்யக்ஷம் (கண்கூடு)õ கவனத்துடன் நோக்குங்கள்.

19 என்றும் நிலைத்து நிற்றல், பயமின்மை, விடுதலை பெறுதல், சுதந்திரம், பரமாத்மாவை அடைதல் -- இவைதான் ஒரு ஜீவன் செய்யவேண்டியதும் அடையவேண்டியதும் ஆகும்.

20 ஞானமின்றி மோக்ஷமில்லை. பற்றறுக்காமல் ஞானம் கிடைக்காது. இவ்வுலக வாழ்வு ஒரு நீர்க்குமிழி என்பது மனத்திற்குப் புரியாதவரையில், துறவுபற்றிய எண்ணமே எழாது.

21 இவ்வுலக வாழ்வு அநித்தியமானது (நிலையில்லாதது) என்ற தெளிவு பிறக்கும்போது, சுற்றியிருக்கும் மாயா உலகம் மனிதனை எதிர்க்கிறது. யாத்திரிகன் எவ்வழி செல்வது என்றறியாது தடுமாடுகிறான்.

22 இப் பிரபஞ்சமென்னும் மாயை இதுவே. இதை மாயையென்றும் இறைவனின் விளையாட்டென்றும் முடிவில்லா பிரக்ஞை (உணர்வு) என்றும் விவரிக்கலாம். இவ்வுலக வாழ்வே கனவில் தோன்றும் ஒரு காட்சி. இக் கனவுக்காகாவா இத்தனை வீண் பிரயத்தனங்கள்?

23 விழிப்பேற்பட்டவுடன் கனவு கலைந்துவிடுகிறது. ஆகவே, தன்னுடைய நிஜஸ்வரூபத்தை அறிந்துகொண்டவன் உலக விவகாரங்களைப்பற்றிச் சிந்தனை செய்வதில்லை.

24 ஆத்மாவின் விஞ்ஞானத்தை அனுபவத்தால் அறியாதவரையில், ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அறியாதவரையில், சோகமும் மோஹமுமாகிய பந்தங்களை அறுத்தெறியவேண்டும் என்னும் விழிப்புணர்வைப் பெறுவதற்கு வழி ஏதுமில்லை.

25 ஞானத்தினுடைய பெருமையை பாபா இரவுபகலாக விளக்கம் செய்தாரெனினும், பொதுவாக அவர் பக்திமார்க்கத்தை அனுசரிக்கும்படியாகவே அடியவர்களுக்கு உபதேசித்தார்.

26 ஞானமார்க்கத்தினுடைய மஹிமையை விளக்குவதற்காக பாபா அதை ராமர்பழத்திற்கு ஒப்பிடுவார். சுலபமாகக் கிடைக்கும் இனிய ரஸமுள்ள ஸீதாப்பழத்தை பக்தி மார்க்கத்திற்கு ஒப்பிடுவார்.

27 பக்திமார்க்கம், ஜொ­க்கும் ஸீதாப்பழம்; ஞானமார்க்கம், நன்கு பழுத்த ராமர்பழம்; முன்னதைவிடப் பின்னது ரஸம் நிறைந்தது; மதுரமான வாசனையுடையது.

28 முற்றிய காயாகப் பறித்துச் செயற்கைமுறையில் பழுக்கவைக்கப்படும்போது, ராமர்பழத்தின் கதுப்பு, சுவைத்துச் சாப்பிட முடியாதவாறு பலமாக நெடியடிக்கிறது. மரத்திலேயே பழுக்கட்டும் என்று விட்டுவிடும் மனிதனால்தான் அதனுடைய உண்மையான சுவையை அனுபவிக்கமுடியும்.

29 ராமர்பழம் மரத்திலேயே நன்கு பழுத்துவிட்டால், காம்புவரை தித்திக்கிறது. பூமியில் விழுந்துவிட்ட பழத்திற்கு நெடி அதிகம். மரத்திலேயே பழுத்த பழத்திற்குச் சுவை அதிகம்.

30 மரத்திலேயே முழுமையாகப் பழுக்கவிடுபவன்தான் அதனுடைய சுவையை அனுபவிக்கமுடியும். ஆனால், ஸீதாப்பழத்திற்கு இம் முயற்சியெல்லாம் தேவையேயில்லை. ராமர்பழத்திற்கு இணையான உன்னதங்கள் இல்லை எனினும், ஸீதாப்பழம் மிக்க மதிப்புள்ளது.

31 ராமர்பழம் கீழே விழுந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. ஞானிக்கும் தம்முடைய ஸித்திகளின்மேல் பூரணமான ஆளுமை இல்லையென்றால், வீழ்ச்சியடையும் அபாயம் உண்டு. அலட்சியத்திற்கு இங்கு இடமேயில்லை.

32 ஆகவே, தயை மிகுந்த ஸாயீ, தம் பக்தர்களுக்கு பக்தி மார்க்கத்தின் பெருமையையும் நாமஸ்மரணத்தின் மஹிமையையும் விவரணம் செய்தார்.

33 பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஞானத்தைவிட தியானமே சிறந்தது என்று அர்ஜுனனுக்கு போதித்தார். ஸாயீயும் தம் பக்தர்களுக்கு உலகபந்தங்களி­ருந்து விடுபடும் ஸாதனையாக அதை நியமித்தார்.

34 கதை கேட்பவர்களுக்கு இப்பொழுது இதுசம்பந்தமாக, சென்ற அத்தியாயத்தில் முற்றுப்பெறாத காதையைச் சொல்கிறேன்; கேளுங்கள்.

35 ஆண்டுகளால் முதிர்ந்து, உடல் பலவீனமுற்ற மூதாட்டியொருவர், ஸாயீயினிடமிருந்து மந்திர உபதேசம் பெறுவதற்காக உண்ணாவிரதம் இருப்பதென்னும் தீர்மானத்தைப் பிடிவாதமாக மேற்கொண்டார்.

36 அவருடைய தேஹநிலையைப் பார்த்து பயந்துபோன மாதவராவ், மத்தியஸ்தம் (ஸமரஸம்) செய்துவைப்பதற்காக பாபாவிடம் சென்றார். இதுதான் ஏற்கெனவே சொல்லப்பட்ட காதையின் இணைப்பு.

37 ஸாயீ ஸத் சரித்திரம் என்னும் விளக்கு இங்கே தூண்டப்பட்டுவிட்டது. ஸாயீயினுடைய எண்ணங்கள் இங்கு வெளிப்பட்டு, இவ்வொளியினால் விசுவாசமுள்ள அநேக பக்தர்கள் தங்களுடைய பாதையைத் தெரிந்துகொள்வர்.

38 பாபாவினுடைய ஆணையின்படி மாதவராவ் எனக்கு ஒரு சுவாரசியமான கதை சொன்னார். அதை இப்பொழுது மேற்கொண்டு சொல்கிறேன்.

39 அவர் சொன்னார், ''அம்மூதாட்டியின் வைராக்கியத்தைக் கண்ட பாபா, மூதாட்டிக்கு அருள்செய்து, அவருடைய சிந்தனையில் ஒரு நல்மாற்றத்தை ஏற்படுத்தினார். கதையில் இங்குச் சுவையான திருப்பம் ஏற்பட்டதுõஃஃ--

40 ''பிறகு, பாபா அவரை அழைத்துவரச்செய்து பிரேமையுடன் சொன்னார், 'தாயேõ எதற்காக நீர் அடம் செய்துகொண்டு பட்டினி கிடக்கிறீர்? ஏன் உபவாஸமிருந்து உயிரை விடவேண்டுமென்று நினைக்கிறீர்?ஃஃ

41 வயது முதிர்ந்த பெண்மணி யாராக இருந்தாலும் சரி, பாபா அவரைத் 'தாயேஃ என்றுதான் அழைத்தார். வயது முதிர்ந்த ஆண்களை, காகாவென்றும் பாபூவென்றும் பாயீயென்றும் அழைத்தார். அவர் கூப்பிடும் அழகு அவ்வாறுõ

42 அந்தரங்கத்தில் பிரேமை இருந்ததால், அவருடைய வார்த்தைகளும் இனிமையாக இருந்தன. துன்பப்படுபவர்களுக்கும் இன்னல்படுபவர்களுக்கும் கருணைகாட்டும் தீனதயாளரல்லரோ ஸாயீநாதர்õ

43 ஆகவே அவர் அம் மூதாட்டியை அழைத்து, தம்மெதிரில் உட்காரவைத்துக்கொண்டு, நிஜமான குருத்துவத்தின் இரஹஸியத்தை அவருக்குப் பிரேமையுடன் எடுத்துச் சொன்னார்.

44 ஞானமேகமாகிய பாபா, தம் பக்தர்களாகிய சகோர பக்ஷிகளின் தாகம் தீர்க்கும் வகையில் பொழிந்த மழையி­ருந்து சுயானந்தம் அளிக்கும் நீரை இப்பொழுது நன்றாகப் பருகுங்கள். பக்தர்களுடைய உலகவாழ்வின் துக்கங்களும் இன்னல்களும் சாந்தமடையும்.

45 அவர் கூறினார், ''தாயே, விவரமாகச் சொல்லுங்கள்õ எதற்காக இவ்வளவு துன்பத்தை உங்களின்மேல் சுமத்திக்கொள்கிறீர்கள்? நானோ கவளங்கவளமாகப் பிச்சை தேடியலையும் ஒரு பக்கீர். என்னிடத்தில் அன்புகாட்டுங்கள்õ--

46 ''வாஸ்தவத்தில் நான் உம் மகன்; நீர் என் தாயார். இப்பொழுது நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய கதையொன்று சொல்கிறேன்.--

47 ''என் குரு ஒரு புகழ்பெற்ற அவ­யா1; கருணைக்கடல். நான் அவருக்கு ஸேவை செய்து செய்து, களைத்துப் போனேன். அப்பொழுதும் அவர் எனது காதில் மந்திரம் ஏதும் ஓதினாரில்லை.--

48 ''அவருடைய தஞ்சத்தை விட்டுவிடாமல் எப்பாடுபட்டாவது அவருடைய திருவாய் மொழியாக ஒரு மந்திரத்தைப் பெற்றுவிடவேண்டுமென்ற பேராவல் எனக்கும் இருந்தது.--

49 ''ஆரம்பத்தில் அவர் என்னை இரண்டு பைஸா மாத்திரம் கொடுக்கச்சொல்­ ஏய்த்துவிட்டார். உடனே நான் இரண்டு பைஸாக்களைக் கொடுத்து மந்திரம் வேண்டிக் கெஞ்சினேன்; பிரார்த்தனை செய்தேன்.--

50 ''என் குருவோ பூர்ணகாமர் (எல்லா விருப்பங்களும் நிறைவேறியவர்). அவர் எதற்காக இந்த இரண்டு பைஸா கேட்டார்? சிஷ்யனிடம் காசு கேட்பவரை நான் எவ்வாறு ஆசையற்றவர் என்று சொல்லமுடியும்?--

51 ''ஆனால், இம்மாதிரியான ஸந்தேஹங்கள் ஏதும் உம்முடைய மனத்தைத் துளைக்க வேண்டா. உலகியல் ரீதியில் அவர் பணத்தை விரும்பவில்லை. பொன்னும் பணமும் அவருக்கு எதற்கு?--

52 ''விசுவாசமும் பொறுமையுமே அவ்விரண்டு பைஸாக்கள்; வேறெதுவும் இல்லைõ நான் உடனே அவையிரண்டையும் கொடுத்தவுடன், என் குருவான தாய் என்னிடம் சந்தோஷமடைந்தார்.--

53 ''தாயே, பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம். அதைத் தொலைத்துவிடாதீர்கள். எப்பொழுது பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அது உங்களைக் கரைசேர்க்கும்.--

54 ''இந்த சகிப்புத்தன்மைதான், ஒரு மனிதனிடம் இருக்கும் ஆண்மை. இதுவே பாவங்களையும் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் வெல்கிறது. இதுவே விபரீத சம்பவங்களை ஸாமர்த்தியமாகத் தடுக்கிறது; எல்லா பயங்களையும் விரட்டிவிடுகிறது.--

55 ''பொறுமையும் சகிப்புத்தன்மையுமே வெல்லும்; விபத்துகளைப் பல திசைகளிலும் பயந்து ஓடிப்போகச் செய்யும். முன்யோசனையில்லா விவேகமின்மை என்னும் முள் குத்தாது.--

56 ''சகிப்புத்தன்மை நற்குணங்களின் சுரங்கம்; நல்லெண்ணங்களின் ராணி. உறுதியான நம்பிக்கை இந்த ராணியின் சகோதரி. இவையிரண்டும் உயிருக்குயிரான சகோதரிகள்.--

57 ''சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது. பண்டிதராக இருந்தாலும் சரி, நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி, சகிப்புத்தன்மை இல்லாவிடில் வாழ்க்கை வீணாகிவிடும்.--

58 ''குரு மஹாபலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும், ஆழமாகப் பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார்.--

59 ''வெறும் கல், மணி, இவை இரண்டுமே மெருகேற்றுவதற்காகத் தேய்க்கப்படலாம். எவ்வளவு தேய்த்தாலும், கல் கல்லாகத்தான் இருக்கும்; மணியோ ஒளிவிடும்.--

60 ''இரண்டுமே மெருகேற்றுவதற்காக ஒரே செய்முறையில் தேய்க்கப்படலாம். ஆயினும், வெறும் கல், மணி போன்று ஒளிவிட முடியுமா என்ன?--

61 ''ஆகவே நான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். நான் வளரும்வரை அவர் என்னை ஒரு குழந்தைபோல் பா­த்தார். உணவுக்கும் உடைக்கும் எவ்விதமான பற்றாக்குறையும் இல்லை. அவருடைய இதயம் என்மீது அன்பால் பொங்கிவழிந்தது.--

62 ''அவர் பக்தியும் பிரேமையுமே உருவானவர். சிஷ்யனிடம் நிஜமான அன்பு கொண்டவர். என் குருவைப்போல குரு கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்கவேமுடியாது. --

63 ''ஓ, அந்த அன்பை என்னால் எவ்வாறு விவரிக்க முடியும்õ அவருடைய முகத்தைப் பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். இருவருமே ஆனந்தமயமாகிவிடுவோம். வேறெதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது.--

64 ''இரவுபகலாக அவருடைய முகத்தை உற்றுநோக்கவே விரும்பினேன். எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம்

அவஸ்தைப்பட்டது.--
65 ''அவரைத் தவிர வேறெதென்மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது.--

66 ''என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்னை எப்பொழுதும் அலட்சியம் செய்ததில்லை; கவனிக்காமல் விட்டதுமில்லை; ஸங்கடங்களி­ருந்து என்னை எப்பொழுதும் ரக்ஷித்தார்.--

67 ''சில சமயங்களில் நான் அவருடைய காலடிகளில் இருக்க அனுமதிக்கப்பட்டேன். சில சமயங்களில் கடல் கடந்து இருந்தேன். ஆயினும் எப்பொழுதும் அவருடைய ஸங்கம (கூடுகை) சுகத்தை அனுபவித்தேன். அவர் என்னைக் கிருபையுடன் கவனித்துக்கொண்டார்.--

68 ''தாய் ஆமை தன் குட்டிகளுக்கு எப்படி அன்பான பார்வையாலேயே உணவூட்டுகிறதோ, அவ்வழிதான் என் குருவினுடையதும். அன்பான பார்வையாலேயே தம் குழந்தைகளைப் பாதுகாத்தார்.--

69 ''தாயே, இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் சொல்வதைப் பிரமாணமாக எடுத்துக்கொள்ளுங்கள். குரு என்னுடைய காதுகளில் மந்திரம் ஏதும் ஓதவில்லை. அப்படியிருக்க, நான் எப்படி உங்களுடைய காதுகளில் எதையும் ஓதமுடியும்?--

70 ''தாய் ஆமையின் அன்பான கடைக்கண்பார்வையே குட்டி ஆமைகளுக்குத் திருப்தியும் ஸந்தோஷமும் கொடுக்கும். அம்மாõ ஏன் உங்களை நீங்களே வருத்திக் கொள்கிறீர்கள்? எனக்கு வாஸ்தவமாகவே வேறெந்த உபதேசமும் செய்யத் தெரியாது.--

71 ''தாய் ஆமை ஆற்றின் ஒரு கரையில் இருக்கிறது. குட்டிகளோ மறுகரையில் மணற்பரப்பில் இருக்கின்றன; அவை பார்வையாலேயே போஷிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆகவே நான் கேட்கிறேன், மந்திரத்துக்காக வியர்த்தமாக எதற்குப் பிடிவாதம் பிடிக்கவேண்டும்?--

72 ''நீங்கள் இப்பொழுது போய் ஏதாவது ஆஹாரம் சாப்பிடுங்கள். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். என்னிடம் உறுதியான விசுவாசம் வைத்தால் ஆன்மீக முன்னேற்றம் தானே கைக்கு எட்டும்.--

73 ''நீங்கள் என்னிடம் அனன்னியமான (வேறொன்றிலும் நாட்டமில்லாத) அன்பு செலுத்துங்கள். நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன். என் குரு எனக்கு வேறெதையும் கற்றுத்தரவில்லை.--

74 ''யோக ஸாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை1 அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்.--

75 ''இதுவே குருவின் மஹத்தான பெருமை. அவரே பிரம்மாவும் விஷ்ணுவும் மஹேச்வரனும் ஆவார். குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்துகொண்டவன் மூவுலகங்களிலும் தன்னியனாவான் (பேறு பெற்றவனாவான்).ஃஃ

76 இவ்வாறாக, அம் மூதாட்டி போதனையளிக்கப்பட்டார்; அறிவுறுத்தப்பட்டார். இக் கதை அவருடைய மனத்தில் ஆழமாகப் பதிக்கப்பட்டது. தம்முடைய தலையை ஸாயீ பாதங்களில் தாழ்த்திவிட்டு, மூதாட்டி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

77 இக் கதையை ஆரம்பத்தி­ருந்து கேட்டு, என்னுடைய அன்றைய நிலைமைக்கு அது எவ்வளவு பொருத்தமாக இருந்தது என்பதையும் தெளிவாக அறிந்துகொண்ட பின், என்னுடைய மனம் ஆச்சரியத்தாலும் மகிழ்ச்சியாலும் பொங்கிவழிந்தது. ஓ, எவ்வளவு பொருத்தமான கதைõ

78 பாபாவினுடைய லீலையைக் கண்டு ஆனந்தத்தால் என் தொண்டை அடைத்தது. அபரிமிதமான உணர்ச்சிப் பெருக்கால் நான் திணறிப்போனேன். உன்னதமான இப் படிப்பினை என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

79 நான் உணர்ச்சிவசப்பட்டுத் திக்குமுக்காடிப்போனதைக் கண்ட மாதவராவ் என்னிடம் கேட்டார், ''அண்ணாஸாஹேப்õ ஏன் இவ்வாறு உணர்ச்சிவசப்படுகிறீர்? ஏன் திடீரென்று மௌனமாகிவிட்டீர்?--

80 ''இம்மாதிரியான பாபாவின் லீலைக் கதைகள் எண்ணற்றவை. நான் எத்தனை கதைகளைத்தான் சொல்லமுடியும்?ஃஃ மாதவராவ் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போதே மணியோசை கேட்டது.

81 தினந்தோறும் மதிய உணவிற்கு முன்பு, பக்தர்கள் மசூதிக்குச் சென்று அமர்வர். பாபாவினுடைய கைகளையும் பாதங்களையும் அலம்பி, சந்தனம் இட்டு, அக்ஷதையைத் தூவி, சடங்கு பூர்வமானதும் விஸ்தாரமானதுமான பூஜையைச் செய்வர்.

82 பிறகு பாபுஸாஹேப் ஜோக்(எ) பக்தியுடனும் பிரேமையுடனும் பஞ்சாரதி (ஐந்து தீபங்கள் கொண்ட ஆரதி) எடுப்பார். பக்தர்கள் எல்லாரும் சேர்ந்து ஆரதிப் பாட்டைப் பாடுவர்.

83 ஆரதி ஆரம்பிக்கப் போகிறது என்பதற்கு அறிகுறியாக, பெரிய மணி 'டாங்ஃ 'டாங்ஃ என்று முழங்கியது.

84 மதிய நேரத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே இந்த ஆரதியைச் செய்தனர். பெண்கள் மசூதியின் தளத்தையும் ஆண்கள் ஸபாமண்டபத்தையும் அடைத்து நிறைந்துகொள்வர்.

85 பிறகு மங்களவாத்தியங்களும் முரசும் முழங்க, மிகுந்த மகிழ்ச்சியுடன் உச்சஸ்தாயியில் (உரத்த குர­ல்) ஆரதிப் பாட்டைப் பாடுவர்.

86 நாங்கள் ஸபாமண்டபத்தை நெருங்கியபோது, ஆரதிப் பாட்டு உரக்க முழங்கிக் கொண்டிருந்தது. படிகளிலெல்லாம் அங்கு வந்து குழுமியிருந்த ஆண்கள் நின்றுகொண் டிருந்தனர். மசூதியின் உள்ளே செல்வதற்கு வழியேயில்லை.

87 ஆரதி முடியும்வரை ஸபாமண்டபத்திலேயே இருந்துவிட்டு, பிறகு மற்ற பக்தர்களுடன் சேர்ந்துகொண்டு பாபாவிடம் செல்லலாம் என்று நான் நினைத்தேன்.

88 இவ்வாறு நான் எனக்குள்ளாகவே சொல்­க்கொண் டிருந்தபோதே, படிகளில் ஏறிவிட்ட மாதவராவ், என் கையைப் பிடித்து மேலே இழுத்து நேராக பாபாவிடம் அழைத்துச் சென்றார்.

89 பாபா சாவகாசமாக சில்­ம்1 பிடித்துக்கொண்டு, தம்முடைய வழக்கமான ஆஸனத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கெதிரே ஜோக்(எ) நின்றுகொண்டு இடக்கையால் மணியாட்டிக்கொண்டே பஞ்சாரதி எடுத்துக்கொண் டிருந்தார்.

90 ஆரதி எழுப்பிய குதூகலத்தின் நடுவே, மாதவராவ் பாபாவுக்கு எதிரில் வலப்பக்கம் உட்கார்ந்துகொண்டு, என்னையும் பாபாவை நோக்கியவாறு உட்காரவைத்தார்.

91 சாந்தமூர்த்தியும் மஹான்களில் இரத்தினமுமாகிய பாபா இனிமையான குர­ல் அப்பொழுது கேட்டார், ''சாம்ராவ் (மாதவராவ்) எனக்காகக் கொடுத்த தக்ஷிணையை இங்கே கொண்டுவாரும்.ஃஃ

92 ''பாபா, சாம்ராவே இங்கு இருக்கிறார்; அவர் தக்ஷிணைக்குப் பதிலாக நமஸ்காரங்கள் கொடுத்திருக்கிறார். நமஸ்காரங்கள்தான் பதினைந்து ரூபாய் என்றும் அதையே பாபாவுக்குப் பிரீதியுடன் அர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் சொல்கிறார்.ஃஃ (தாபோல்கரின் பதில்)

93 ''சரி, சரி, நீங்கள் இருவரும் பேசிக்கொண்டீர்களா? சம்பாஷணை செய்தீர்களா? நீங்கள் என்ன பேசிக்கொண்டீர்கள் என்பதை எனக்கு இப்பொழுது விரிவாகச் சொல்லுங்கள்.--

94 ''நமஸ்காரங்கள்பற்றிய கதை ஒருபுறமிருக்கட்டும். நீர் அவரிடம் பேசினீரா? எதைப் பற்றிப் பேசினீர்? எப்படிப் பேசினீர்? எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுங்கள்.ஃஃ (பாபா)

95 எனக்குக் கதையைச் சொல்லவேண்டுமென்ற ஆர்வம். ஆனால், ஆரதியோ உரக்க முழங்கிக்கொண் டிருந்தது. இருப்பினும் என்னுள் பொங்கிக்கொண்டிருந்த மகிழ்ச்சியை அடக்கமுடியவில்லை. தங்குதடையின்றி என் உதடுகளின் வழியாகக் கதை பிரவாகமாகப் பாய்ந்தது.

96 திண்டின்மேல் சாய்ந்துகொண் டிருந்த பாபா, அப்பொழுது நான் சொன்னதைக் கேட்பதற்காக முன்னோக்கிச் சாய்ந்தார். நானும் என்னுடைய முகத்தை நீட்டி விவரிக்க ஆரம்பித்தேன்.

97 ''பாபா, அங்கு நாங்கள் பேசியதெல்லாம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவற்றில் எல்லாவற்றிலும் அம் மூதாட்டிபற்றிய கதை உண்மையிலேயே அற்புதமானது.--

98 ''சாம்ராவ் இக் கதையைச் சொல்லச்சொல்ல, கற்பனை செய்யமுடியாத உம்முடைய வழிமுறைகளை நான் கண்டேன். அந்தக் கதையைச் சாக்காக வைத்துக்கொண்டு நீங்கள் வாஸ்தவமாக (உண்மையில்) எனக்கு அநுக்கிரஹம் செய்துவிட்டதாகத் தோன்றுகிறது.ஃஃ (தாபோல்கர்)

99 இதைக்கேட்ட பாபா ஆர்வத்துடன் வினவினார், ''சொல்லும்; எனக்கு முழுக்கதையையும் சொல்வீராக. அது எவ்விதத்தில் ஓர் அற்புதமான கதை என்பதையும் அதன் மூலம் உமக்கு எப்படி அநுக்கிரஹம் செய்தேன் என்பதையும் காண்போம்õஃஃ

100 நான் அப்பொழுதுதான் அக்கதையைக் கேட்டிருந்ததால் அது என் மனத்தில் பசுமையாக இருந்தது. மேலும் அக்கதை என்மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நான் அதை உடனே பாபாவுக்குத் தங்குதடையின்றி விவரித்தேன். பாபா அதைக் கேட்கும்போதே மகிழ்ச்சியுற்றார் என்று எனக்குத் தோன்றியது.

101 இவ்வாறாக, நான் நடந்ததையெல்லாம் சொன்னேன். பாபாவும் அதை மிக கவனமாகக் கேட்டார். உடனே என்னிடம் சொன்னார், ''இதை உமது மனத்தில் ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளும்.ஃஃ

102 மறுபடியும் பாபா உற்சாகத்துடன் கேட்டார், ''நீர் இப்பொழுது கேட்ட கதை எவ்வளவு இனிமையானதுõ ஆனால், அது உம்முடைய மனத்தில் பதிந்ததா? அது வாஸ்தவமாகவே உமக்குப் பொருள்பொதிந்ததாகத் தெரிந்ததா?ஃஃ

103 ''பாபா, அந்தக் கதையைக் கேட்டபிறகு நான் சாந்தியடைந்தேன். என்னுடைய ஸந்தேஹங்களும் மனவுளைச்சலும் பறந்துபோயின. நான் ஒரு நிச்சயமான மார்க்கத்தைக் கண்டுகொண்டேன்.ஃஃ (தாபோல்கர்)

104 பாபா கூறினார்1, ''நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவையல்லவோõ இது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இது உமக்கு மிக உபகாரமாக

105 ''ஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப்பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அந்த தியானமே அனுஷ்டானம் (ஆன்மீக ஒழுக்கம்) ஆகும். அதுவே மனத்திருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.--

106 ''முதல் காரியமாக, ஆசைகளி­ருந்து விடுபடவேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனத்திற்குள் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும்; கிடைக்க வேண்டியது கிடைக்கும்.--

107 ''ஸத்தும் சித்தும் ஆனந்தமும்1 என்னுடைய சொரூபமென்றே அறிவீராக. ஆகவே, அதன்மீதே தினமும் தியானம் செய்வீராக.--

108 ''இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்தின்மீது தியானம் செய்யும். இரவுபகலாக என்னுடைய உருவத்தை நகத்தி­ருந்து சிகைவரை எல்லா குணாதிசயங்களுடன் தியானம் செய்வீராக.--

109 ''என்மீது இவ்வாறு தியானம் செய்துகொண்டுவந்தால், உம்முடைய மனம் படிப்படியாக ஒருமுகப்பட்டு தியானம், தியானம் செய்பவர், தியானம் செய்யப்படும் பொருள், இவற்றினிடையே இருக்கும் வேற்றுமை மறைந்துவிடும்.--

110 ''இம்முறையில் திரிபுடி2 மறைந்துவிடும்போது, தியானம் செய்பவர் தூய உன்னதமான உணர்வை அடைவார். இதுவே எல்லா தியானங்களின் முடிவான இலக்காகும். ஏனெனில், நீர் பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுவீர்.--

111 ''தாய் ஆமை இந்தக் கரையில் இருக்கிறது; குட்டிகள் அந்தக் கரையில் பாலும் அரவணைப்பின் கதகதப்புமின்றி இருக்கின்றன. தாயினுடைய அன்பான கடைக்கண் பார்வையே குட்டிகளுக்குப் போஷாக்கையளித்து வளர்ச்சியடையச் செய்கிறது.

112 ''குட்டி ஆமைகள் எப்பொழுதும் தாயைப்பற்றியே நினைத்துக்கொண் டிருக்கின்றன; குட்டிகள் வேறெதையும் செய்யத் தேவையில்லை. அவற்றுக்குப் பாலும் வேண்டா; புல்லும் வேண்டா; வேறெந்த உணவும் தேவையில்லை. தாயை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதே அவற்றுக்குப் போஷாக்கு.--

113 ''தாய் ஆமையினுடைய கனிந்த பார்வை குட்டிகளுக்கு சுயானந்த புஷ்டியைக் கொண்டுவரும் அமிருத மழையாகும். இதுவே குருவுக்கும் சிஷ்யனுக்குமிடையே உண்டாகும் ஐக்கிய அனுபவமாகும்.ஃஃ

114 இவ்வமுத மொழிகள் பாபாவினுடைய வாயி­ருந்து வெளிப்பட்டு முடிந்தபோது, ஆரதிப்பாட்டும் முடிந்துவிட்டது. பக்தர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே குர­ல் உரக்க ''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்ஃஃ என்று கோஷித்தனர்.

115 தீபங்களைச் சுழற்றிக் காண்பிக்கும் சடங்குபூர்வமான ஆரதியும் முடிந்துவிட்டதுõ ஜோக்(எ) பாபாவுக்குக் கற்கண்டு ஸமர்ப்பித்தார். பாபா அதை ஏற்றுக்கொள்ளத் தமது உள்ளங்கையை நீட்டினார்.

116 நீட்டிய கரத்தில் தம்முடைய நித்திய பழக்கத்தின்படி அன்புடன் கைநிறையக் கற்கண்டுகளை வைத்தார் ஜோக்.

117 அந்தக் கற்கண்டுகள் அனைத்தையும் என் கைகளில் நிரப்பிவிட்டு பாபா கூறினார், ''நான் இப்பொழுது கூறியதை உமது மனத்தில் நன்கு நிலைபெறச் செய்து விட்டீரானால், உமது வாழ்க்கை இக் கற்கண்டைப் போலவே இனிக்கும்.--

118 ''இக் கற்கண்டுகள் இனிப்பாக இருப்பது போலவே உம்முடைய மனத்தின் ஆசைகளும் நிறைவேறும். உமக்கு ஸகல மங்களங்களும் உண்டாகும். மனத்தின் ஆழமான ஏக்கங்களும் திருப்தியுறும்.ஃஃ

119 பிறகு நான் பாபாவை நமஸ்காரம் செய்துவிட்டு, அவருடைய அருளை வேண்டினேன். நான் சொன்னேன், ''உங்களுடைய இந்தக் கிருபாதானமே எனக்குப் போதுமானதுõ என்னை மன்னித்துவிடுங்கள்.ஃஃ

120 பாபா கூறினார், ''கதையைக் கேட்டுக்கொள்ளும்; அதைப்பற்றிச் சிந்தனை செய்யும். பிறகு அதையே மறுபடியும் தியானம் செய்யும். அவ்வாறு ஞாபகப்படுத்திக்கொண்டு சிந்தனை செய்தால், மிகுந்த ஆனந்தம் விளையும்.--

121 ''இம்முறையில் உம்முடைய காதுகளால் கேட்டதை நீர் இதயத்தில் சேமித்து வைத்தால், உம்முடைய மங்களம் என்னும் சுரங்கத்தை நீரே திறந்துவைத்தவராவீர். உம்முடைய பாவங்களும் அழிந்துவிடும்.--

122 ''புயற்காற்று அடிக்கும்போது, ஸமுத்திரத்தின் தண்ணீர் பேரலைகளாக எழும்பிக் கரையை அடைந்து மோதிக் கணக்கற்ற நீர்த்திவலைகளாகப் பிரிந்து நுரை போன்று தோன்றுகிறது.--

123 ''அலை, நீர்க்குமிழி, நுரை, சுழல்கள், இவையனைத்தும் தண்ணீரின் பல உருவங்களே; நம் கண்ணுக்குத் தெரியும் பிரமைகளே. காற்று தணிந்துவிட்டால், இவையனைத்தும் மறைந்துவிடும்.--

124 ''நீருக்குப் பலவிதமான உருவங்கள் இருந்தன, பிறகு அவை அழிக்கப்பட்டன என்று சொல்லமுடியுமா? அவற்றின் இருப்பும் அழிவும் மாயையினுடைய கைவண்ணம் என்று தெரிந்துகொண்டு அவ்வாறே கருதவேண்டும்.--

125 ''சிருஷ்டியின் மற்ற இயக்கங்களும் இவ்வாறே. விவேகிகள் ஈதனைத்தையும் பொருட்படுத்துவதில்லை. நசித்துப் போகக்கூடிய பொருள்களின்மீது அவர்கள் நாட்டம் வைப்பதில்லை. அதனால், நித்தியமான வஸ்துவை (பொருளை) அடைகிறார்கள்.--

126 ''ஞானத்தைவிட தியானமே பெரிது; ஆனால், எதை தியானம் செய்யவேண்டுமென்ற தெளிவு இருக்கவேண்டும். இவ்விதமாக, பிரம்மத்தைப்பற்றி (முழுமுதற்பொருள்) முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் பயனுள்ள தியானம் செய்ய இயலாது.--

127 ''அனுபவத்தால் ஆத்மாவைச் சரியாகப் புரிந்துகொள்வதே தியானத்தின் ஆதாரம். எல்லா விஞ்ஞானங்களுக்கும் மூலம் தியானமே. தனிமனிதனுடைய ஆத்ம அநுஷ்டானமும் (தன்னையறியும் வழிமுறை) தியானமே. ஆனால், சிறப்பான குணாதிசயங்கள் ஏதுமில்லாத ஒரு பொருளை எப்படி மனத்திற்குள் கொணர்ந்து அதன்மீது தியானம் செய்யமுடியும்?--

128 ''இறைவன் சுலபமாக அகப்படுவதில்லை. ஆகவே ஆத்மாவே இறைவன்; யார் இறைவனோ அவரே குரு; இம்மூன்றிற்குள் அணுவளவு பேதமும் இல்லை.--

129 ''திரும்பத் திரும்பச் செய்யப்படும் தியானம் பரிபூரணமாகி, தியானத்திற்கும் தியானம் செய்பவருக்கும் இடையே உள்ள வேறுபாடு மறைந்துவிடுகிறது. காற்றடிக்காத இரவில் எரியும் விளக்கைப்போல மனம் அமைதியாகவும் நிலைபெற்றதாகவும் ஆகிவிடுகிறது. இதுவே ஸமாதி நிலை.--

130 ''ஆசைகளி­ருந்து விடுபட்டு, எல்லா உயிர்களிலும் இறைவன் உறைகின்றான் என்பதும் இவ்வுலகத்தில் தன்னைத் தவிர வேறெதுவுமே இல்லை என்பதும்

131 ''பிறகு அஞ்ஞானத்தால் விளைந்த கர்மபந்தங்கள் ஒவ்வொன்றாக அறுந்து விழும். இக் காரியத்தைச் செய்யலாம், இக் காரியத்தைச் செய்யக்கூடாது, என்பது போன்ற நிர்ப்பந்தங்களும் விலகிவிடும். முக்தியின் ஆனந்தம் அனுபவிக்கப்படும்.--

132 ''முத­ல், 1. ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா, இல்லையா? 2. ஓர் உயிரினுள் உறையும் ஆத்மாவும் மற்றொரு உயிரினுள் உறையும் ஆத்மாவும் ஒன்றேயா, வெவ்வேறா? 3. ஆத்மா 'செயல்புரிபவனாஃ, 'செயல்புரியாதவனாஃ? என்ற கேள்விகளுக்குப் பதிலை ஆறு சாஸ்திரங்களையும் அலசித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.--

133 ''எல்லா உயிர்களிலும் உறையும் ஆத்மாவும் ஒன்றே என்று உணர்வதே ஆத்ம விஞ்ஞானத்தின் எல்லை. மோக்ஷமும் பரமானந்தமும் இந்த உணர்வி­ருந்துதான் பிறக்கின்றன.--

134 ''பிருஹஸ்பதியைப் (தேவகுரு) போன்று சொல்வன்மை படைத்த அறிஞரை நீர் கொண்டுவந்தாலும், அவருடைய நாவன்மை குருடனுக்கு யானை எப்படி இருக்கும் என்பதை விளக்கி அவன் மனத்தில் ஏற்றமுடியாது. சொல்லுக்கு அப்பாற்பட்டதைச் சொல்லால் விளக்கமுடியாதுõ--

135 ''பேசுபவர்களின் நாக்கும் கேட்பவர்களின் செவியும், இல்லாத பார்வையைக் கொண்டுவர முடியுமா என்ன? யானையின் உருவத்தைப் பார்ப்பதற்குக் கண்களே தேவை.--

136 ''கண்பார்வையின்றி, யானையைக் கண்ட அனுபவத்தை ஒரு குருடன் எவ்வாறு பெறமுடியும்? அது போலவே, திவ்வியமான பார்வையை குரு அளித்த பிறகுதான், ஞானப்பொக்கிஷம் கைக்கு எட்டும்.ஃஃ (பாபாவின் திருவாய்மொழி இங்கு முடிவதாக எடுத்துக்கொள்ளலாம்2.)

137 ''ஸாயீயின் சொரூபமே உண்மையான, பரிபூரணமான ஞானமும் விஞ்ஞானமும் ஆகும். அவருடைய நிஜமான சொரூபத்தை உண்மையாகவும் முழுமையாகவும் அறிந்துகொள்வதே தியானமாகும். அதுவே அவருடைய தரிசனம்.--

138 ''அஞ்ஞானத்தி­ருந்தும் காமத்தி­ருந்தும் கர்மவினைகளி­ருந்தும் முற்றும் விடுபட, வேறு ஸாதனை எதுவுமே இல்லை. இதை உங்களுடைய மனத்தில் உறுதியாக நிலைப்படுத்துங்கள்.--

139 ''ஸாயீ கேவலம் உம்முடையவரோ அல்லது நம்முடையவரோ அல்லர். எல்லா உயிர்களிலும் உறைகின்றார். சூரியன் எவ்வாறு இவ்வுலகம் முழுமைக்கும் சொந்தமோ, அவ்வாறே அவரும்.ஃஃ (சுலோகங்கள் 137, 138, 139 - தாபோல்கருடைய கூற்றாகக் கருதலாம்).

140 இப்பொழுது, பாபா அவ்வப்பொழுது திருவாய்மொழிந்ததைக் கேளுங்கள். ஸர்வ ஸாதாரணமாகத் தோன்றினும் அவை விலைமதிப்பற்றவை. இவ்விஷயங்களை மனத்தில் எப்பொழுதும் வைத்திருந்தால், உங்களுக்கு நன்மையையும் நற்பலன்களையும் அளிக்கும்.

141 ''முன்ஜன்ம சம்பந்தமில்லாமல் எவரும் எங்கும் போவதில்லை. ஆகவே மனிதனாயினும், மிருகமாயினும், பறவையாயினும், அவமதிப்பு செய்து விரட்டி விடாதே.--

142 ''யார் உன்னிடம் வந்தாலும் தகுந்த மரியாதை கொடு. தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும், பசியால் வாடியவர்களுக்கு உணவும், ஆடையில்லாதவர்களுக்குத் துணியும், திக்கற்றவர்களுக்கு இருப்பிடமும் அளிப்பாயாக. இவ்வாறு செய்தால் ஸ்ரீஹரி ஸந்தோஷமடைவார்.--

143 ''யாராவது உன்னிடம் பைஸா கேட்டால், உனக்குக் கொடுப்பதற்கு இஷ்டமில்லை என்றால் கொடுக்க வேண்டா. ஆனால், பைஸா கேட்ட நபர் மீது நாயைப்போலக் குரைக்கவும் வேண்டா.--

144 ''மற்றவர்கள் உன்னை எத்தனை வழிகளில் வசைபாடினாலும் கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்துக் கசப்பாகவோ மனம் புண்படும்படியாகவோ பேசாதே. அதைப் பொறுமையுடன் ஸஹித்துக்கொள்வாயாக; அதனால் உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும்.--

145 ''இந்த உலகமே தலைகீழாக மாறலாம். ஆயினும், நாம் வழிதவறிவிடக் கூடாது. நம்முடைய நிலையிலேயே உறுதியாக நின்றுகொண்டு அமைதியாக இவ்வுலகை வேடிக்கை பார்க்கவேண்டும்.--

146 ''உனக்கும் எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குப் போகவும் வரவும் பயமில்லாத ஒரு பிரசஸ்தமான (மங்களமான) பாதை கிடைத்துவிடும்.

147 ''குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவர், 'நீங்கள், நான்ஃ என்னும் மனோபா(ஆஏஅ)வமே. அதை உடைத்தெறியாவிட்டால் இருவரும் ஒன்றே என்னும் நிலையை அடைய முடியாது.--

148 ''அல்லாவே யஜமானர்; அல்லாவே யஜமானர்õ அவரைத் தவிர ரட்சகர் வேறு எவரும் இல்லை. அவருடைய செய்கைகள் உலகியலுக்கப்பாற்பட்டவை; விலைமதிப்பற்றவை; கற்பனைசெய்து பார்க்கமுடியாதவைõ--

149 ''அவர் நினைப்பதே நடக்கும்; அவரே வழியைக் காட்டுவார். நம்முடைய மனத்தின் இனிய விருப்பங்கள் ஒரு கணமும் தாமதமின்றி நிறைவேறும் நேரம் வரும்.--

150 ''பூர்வஜன்மங்களின் சம்பந்தத்தினால் நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் பாக்கியம் பெற்றோம். இதயத்தின் அடித்தளத்தி­ருந்து பொங்கும் அன்புடன் நாம் ஒருவரையொருவர் தழுவுவோம். ஸுகத்தையும் ஸந்துஷ்டியையும் (பூரணமான திருப்தியையும்) அனுபவிப்போம்.--

151 ''யார் இங்கு சாகாவரம் பெற்றவர்? ஆன்மீக முன்னேற்றம் எய்தியவன் கிருதார்த்தனாகிறான் (பேறு பெற்றவன்). மற்ற ஜீவன்கள், மூச்சு விட்டுக்கொண் டிருக்கும்வரை, உயிருள்ளனவாய் இருக்கின்றன.ஃஃ (திருவாய்மொழி இங்கு முடிகிறது)

152 அருள்மொழியான இவ்வார்த்தைகள் என் செவிகளில் விழுந்தபோது, என்னுடைய நோய்கண்ட இதயம் ஸுகமடைந்தது; என் ஜீவனுடைய தாகம் அடங்கியது. நான் ஆனந்தம் நிரம்பியவனானேன்.

153 ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம். ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம். ஆயினும் ஸாயீயைப்போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும்.

154 இந்த உபதேசத்தின் ஸாரத்தைக் கவனிக்கும்போது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் 'யார் என்னை எப்படிஃ1 என்று அருளியது முக்காலத்தும் உண்மைõ மனிதனுடைய மொத்த பாரமும் அவனுடைய கர்மாவின்மீதே.

155 உன்னுடைய கர்மா எப்படியோ, அப்படியே நீ அடையும் ஞானம்; அப்படியே உன்னுடைய ஆன்மீக ஸாதனைகள். எப்படி அப்பியாஸமோ அப்படியே பலன்கள். இதுதான் இந்த அத்தியாயத்தின் இங்கிதகவி (பாட்டுடைத் தலைவன் கருத்தை விளக்கும் கவி). இதுவே போதனாமிருதம்.

156 'வேறொன்றிலும் நாட்டமில்லாமல்ஃ2 என்ற கோவிந்தனின் முக்கிய உறுதிமொழி இங்கும் பிரயோகிக்கத் தக்கது.

157 இவ்வினிமையான வார்த்தைகளைக் கேட்டபொழுது, ''யாகத்தால் தேவர்களைப் பேணுங்கள், தேவர்கள் உங்களைப் பேணட்டும். பரஸ்பரம் பேணிப் பெருநன்மை எய்துவீர்ஃஃ என்றும் பகவத் கீதையின் சுலோகமே3 எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

158 ''நீ தண்டால் (கடுமையான ஆன்மீகப் பயிற்சி) எடுக்க ஆரம்பி. பாலைப்பற்றிய (பயிற்சிக்குப் பலன்) கவலை ஏதும் வேண்டா. ஏனெனில், உனக்குப் பின்னாலேயே நான் தயாராக ஒரு வட்டி­ல் பாலை வைத்துக்கொண்டு நிற்கிறேன்.--

159 ''ஆனால், 'நான் தண்டால் எடுக்கிறேன், நீர் எனக்கு வட்டில் வட்டிலாகப் பாலைத் திருப்தியுறும்வரை கொடும்ஃ என்று நீ கேட்டால், ஆõ அதெல்லாம் எனக்குத் தெரியாது. செயல் ஆற்றுபவன் துடிப்புள்ளவனாக இருக்கவேண்டும்.ஃஃ (பாபா)

160 பாபாவின் இவ்வாக்குறுதியை ஸத்தியமென்று எடுத்துக்கொண்டு எவர் செயல்படுகிறாரோ அவர் இந்த உலகத்திலும் மேலுலகத்திலும் ஸந்தோஷம் என்னும் சுரங்கத்தைக் கண்டுபிடித்தவராவார்.

161 இப்பொழுது, என்னுடைய அனுபவபூர்வமான கதை ஒன்றை அசையாத மனத்துடன் கவனமாகக் கேட்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். பக்தருடைய நல்ல தீர்மானங்களை பாபா எவ்வாறு நிச்சயமாகப் போஷிக்கிறார் என்பது தெளிவாகும்.

162 பக்தர்கள் நியமமாகச் செய்யும் நற்செயல்களை அவர்கள் கேட்காமலேயே எவ்வாறு உற்சாகப்படுத்தி, மஹராஜ் அநுக்கிரஹம் செய்கிறார் என்பதுபற்றிக் கேளுங்கள்.

163 இருந்தாலும், பக்தர் வேறொன்றிலும் நாட்டமில்லாது சரணாகதி செய்துவிட்டு பக்தியின் அற்புதத்தை அனுபவிக்கவேண்டும். அப்பொழுது அவர், பாபாவினுடைய விநோதமானதும் புதிது புதிதானதுமான வழிமுறைகளைக் காணலாம்; பயனுறலாம்.

164 காலையில் தூக்கத்தி­ருந்து கண்விழிக்கும்போதே ஒருவருக்கு நற்செயல்பற்றிய எண்ணமொன்று தோன்றினால், அதை அன்று நிர்த்தாரணம் செய்ய வேண்டும்.

165 அம்மாதிரியான எண்ணங்கள் போஷிக்கப்பட்டால், பெரும் ஸந்தோஷம் விளையும்; புத்தியும் விகாசமடையும் (மலரும்); மனம் உவகையுறும்.

166 இது ஒரு ஞானியின் திருவாய்மொழி. இவ்வுண்மையை நாமும் அநுபவிப்போமே என்று நான் நினைத்தேன். நான் எதிர்பாராமலேயே இவ்வனுபவம் என்னுடைய மனத்திற்குப் பெரும் சாந்தியைக் கொணர்ந்தது.

167 சிர்டீயைப் போன்ற க்ஷேத்திரம், வியாழக்கிழமையைப் போன்ற மங்கள நாள்õ திடீரென்று, எனக்கு ராமநாமத்தை இடைவிடாது ஜபிக்கவேண்டுமென்ற எண்ணம் உதித்தது.

168 புதன்கிழமை இரவு படுக்கையில் படுத்தவாறே நான் ஸ்ரீராமனைப்பற்றிய சிந்தனையிலேயே என் மனத்தை மூழ்கடித்தேன். தூக்கம் வரும்வரை மௌனமாகவே ஜபம் ஓடியது.

169 காலையில் கண்விழித்தவுடனே, என் மனத்தில் ராமநாமம் உதித்தது. நாக்கு படைத்த பயனைப் பெற்றதை உணர்ந்தேன்.

170 மனத்தில் ராமநாம ஜபம் நிலைக்கவேண்டுமென்று நிச்சயம் செய்துகொண்டு, காலைக்கடன்களை முடித்தபின் கையிலகப்பட்ட பூக்களை எடுத்துக்கொண்டு ஸாயீயைக் காலை தரிசனம் செய்யச் சென்றேன்.

171 தீக்ஷித் வாடாவை (சத்திரம்) விட்டுக் கிளம்பி புட்டிவாடா அருகில் (இன்றைய ஸமாதி மந்திர்) வரும்போது, ஔரங்காபாத்கர் என்பவர் பாடிக்கொண்டிருந்த இனிமையும் அழகும் வாய்ந்த பதம்1 ஒன்றைக் கேட்டேன்.

172 அதையே நான் ஓவி வடிவத்தில் (சுலோகம்) இங்கு அளித்தால் மூலத்தின் சுவையும் சூழ்நிலைப் பொருத்தமும் காணாமற்போய்விடும்; கேட்பவர்கள் ஏமாறிப்போவார்கள்.

173 ஆகவே நான் மூலத்தையே அக்ஷரம் அக்ஷரமாக மேற்கோளாக வடிக்கிறேன். கேட்பவர்களும் மூலத்தின் தூய்மையான உபதேசத்தை அறிந்துகொண்டு மனம் மகிழலாம்.

174 மனம் ஏற்கெனவே ராமநாமத்தின்மீது ஒருமுகப்படவேண்டும் என்று நிச்சயம் செய்துவிட்டது. இந் நிச்சயத்தைச் செயல்படுத்திய உடனே, இப் பாட்டி­ருந்து ஊர்ஜிதமும் கிடைத்தது.

175 இதன் விளைவாக, கருணாமூர்த்தியான ஸமர்த்த ஸாயீ என்னுடைய தீர்மானம் என்னும் நாற்றின்மீது இப்பாட்டு என்னும் நீரைத் தெளிக்கிறாரோ என்று தோன்றியது.

176 தம்பூராவை ஏந்தி, மசூதியின் முற்றத்தில் ஸாயீநாதருக்கு எதிராக நின்றுகொண்டு ஔரங்காபாத்கர் உச்சஸ்தாயியில் பாடிக்கொண் டிருந்தபோது கேட்டேன்.

177 ஔரங்காபாத்கர் பாபா பக்தர்; என்னைப் போலவே பாபாவிடம் அனுரக்தி (மிகுந்த அன்பு) கொண்டவர். எவ்வளவோ பாட்டுகள் பாடாந்தரமாகத் தெரிந்த இவர், இந்த நேரத்தில் இந்தப் பாட்டைப் பாடவேண்டுமென்று எவ்வாறு உணர்வூட்டப்பட்டார்?

178 என்னுடைய மனத்தில் நான் என்ன தீர்மானம் செய்துகொண்டேன் என்பது யாருக்குமே தெரியாத நிலையில், அவர் இந்த நேரத்தில் இக் குறிப்பிட்ட பாட்டை ஏன் பாடவேண்டும்? பாபா எவ்வாறு நூலை இழுக்கிறாரோ, அவ்வாறே நாம் உள்ளுணர்வு பெறுகிறோம்õ

179 நாமெல்லாரும் பொம்மைகளே; ஸாயீமாதாவே பொம்மலாட்டத்தின் ஸூத்ரதாரி. ஒரு வார்த்தையும் பேசாமலேயே, உபாஸனை செய்யவேண்டிய முறையை என் கைகளில் அளித்துவிட்டார்.

180 என்னுடைய மனத்தின் ஆழமான எண்ணங்கள் பாபாவின் மனத்தில் பிரதிப­த்தன போலும்õ இந்த வழியில் எனக்குப் பிரத்யக்ஷமாகவும் நிச்சயமாகவும் ஓர் அனுபவத்தை அளித்துவிட்டார்.

181 ஞானிகளும் மதகுருமார்களும் விளக்கியவாறு, நாமத்தின் மஹிமைதான் என்னேõ என்னைப் போன்ற ஒரு பாமரன் மேற்கொண்டு என்ன விளக்க முடியும்? நாமத்தின் மூலமாகத்தான் ஒரு மனிதன் தன்னுடைய உண்மையான சொரூபத்தை அறிந்துகொள்ள முடியும்.

182 'ராமஃ என்னும் இரண்டெழுத்துச் சொல் தலைகீழாகத் திருப்பப்பட்டு, (மரா) ஜபம் செய்யப்பட்டதாலேயே, வேடனும் வழிப்பறிக் கொள்ளைக்காரனுமாகியவன், வால்மீகி என்று பெயர் பெற்ற ரிஷி நிலைக்கு உயர்த்தப்பட்டான். தான் பாடியதெல்லாம் உண்மையாக நிகழும் வாக்குஸித்தியையும் பெற்றான்.

183 'மராஃ 'மராஃ என்று 'ராமஃ என்னும் நாமத்தைத் தலைகீழாக ஜபித்த அவருடைய நாவை ஸ்ரீராமர் ஆசீர்வதித்தார். ஸ்ரீராமர் பிறப்பதற்கு முன்னமேயே அவருடைய வாழ்க்கை வரலாற்றை வால்மீகி எழுதிவிட்டார்õ

184 ராமநாமம் ஒழுக்கம் தவறியவர்களையும் கரையேற்றுகிறது. ராமநாமம் அபரிமிதமான நன்மைகளை அளிக்கிறது. ராமநாமம் பேதமில்லாத வழிபாடு. ராமநாமம் பிரம்மத்தையடையும் வழி.

185 ராமநாமத்தை இடைவிடாது ஜபிப்பதால், ஜனனமரணச் சுழ­­ருந்து விடுதலை கிடைக்கிறது. ராமநாமத்தை அடிக்கடி உச்சரித்துவந்தால், கோடிவகையில் நன்மை ஏற்படுகிறது.

186 ராமநாமத்தைக் கர்ஜனை செய்தால், மஹாவிஷ்ணுவின் ஸுதர்சனச் சக்கரம் தோன்றி, கோடி விக்கினங்களை அழிக்கிறது. இதுவே தீனர்களை ஸம்ரக்ஷணம் (நன்கு ரட்சித்தல்) செய்யும் நாமம்.

187 போதனை செய்வதற்கு ஸாயீநாதருக்குக் குறிப்பிட்ட இடமோ காலமோ தேவைப்படவில்லை. அமர்ந்திருக்கும்போதும் நடக்கும்போதும் உபதேசங்கள் ஸஹஜமாகவே வெளிவந்தன.

188 செவிமடுப்பவர்களேõ இது சம்பந்தமாக ஒரு சுவாரஸ்யமான காதையைக் கவனத்துடன் கேளுங்கள். இக் காதை, ஸாயீ எங்கும் நிறைந்திருப்பதையும் அவருடைய தயையையும் வெளிக்காட்டும்.

189 ஒருமுறை, சிரேஷ்டமான (சிறந்த) பக்தரொருவர் வேறொரு மனிதரைப்பற்றிப் பேசும்போது குதர்க்கமான எண்ணங்களால் கவரப்பட்டு, அவரைக் கடுமையாக விமரிசித்து நிந்தை செய்தார்.

190 மூன்றாமவருடைய நற்குணங்கள் மறந்துபோயின; நிந்தையே பிரவாஹமாக பக்தருடைய வாயி­ருந்து வெளிவந்தது. ஸம்பாஷணையின் முக்கிய விஷயம் அழிந்துபோய், வசையும் நிந்தையுமே கொந்தளித்தன.

191 தக்க காரணத்தால் ஒருவருடைய நடத்தை இழிவானதாகக் கருதப்பட்டால், அவரைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டியதே நியாயம்; திருந்துவதற்கான அறிவுரை நேரடியாகவும் அவருடைய முகத்துக்கு எதிராகவும் அளிக்கப்படவேண்டும். புறங்கூறல் செய்யலாகாது.

192 'எவரையும் நிந்தனை செய்யக்கூடாதுஃ என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. ஆயினும் அந்த மனப்போக்கை முளையிலேயே கிள்ளாவிடின் அதை உள்ளடக்கி வைக்கமுடியாது.

193 உள்ளேயிருந்து தொண்டைக்கு வந்து, அங்கிருந்து மெதுவாக நாக்கின் நுனிக்கு வரும். அங்கிருந்து ஸந்தோஷமாக உதடுகள் வழியாகப் பெருகும்.

194 மூவுலகங்களிலும் தேடினாலும் நம்மை நிந்தை செய்பவனைப்போல ஓர் உபகாரியைக் காணமுடியாது. நிந்தை செய்யப்படுபவனுக்கு அவன் பரம மங்களத்தைச் செய்கிறான்.

195 சிலர் அழுக்கை நீக்குவதற்குப் புங்கங்கொட்டையை உபயோகிக்கின்றனர். சிலர் சவர்க்காரம் (சோப்பு) போன்ற பொருள்களை உபயோகிக்கின்றனர். சிலர் சுத்தமான நிர்மலமான நீரை உபயோகிக்கின்றனர். நிந்தை செய்பவன் தன்னுடைய நாக்கை உபயோகிக்கிறான்õ

196 நிந்தை செய்பவர்கள் நிச்சயமாக வணக்கத்துக்குரியவர்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காகத் தங்களுடைய மனத்தை வீழ்ச்சியடையச் செய்துகொள்கிறார்கள். அவர்களுடைய பரோபகாரத்தை வர்ணிக்க இயலாதுõ

197 நிந்தையென்ற பெயரில் ஒவ்வொரு படியிலும் நம்முடைய தோஷங்களைத் தெரிவித்து, எதிர்காலத்தில் விளையக்கூடிய அநேக அனர்த்தங்களை (கெடுதல்களை) வராமல் தடுத்துவிடுகின்றனர். அவர்கள் செய்யும் உபகாரத்தை நான் எவ்விதம் போற்றுவேன்?

198 ஞானிகளாலும் ஸாதுக்களாலும் பலவிதமாகப் போற்றப்பட்ட நிந்தை செய்யும் கோஷ்டியை நான் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.

199 இந்த நிந்தையைக் கேட்டுக்கொண் டிருந்தவர்கள் வெறுப்படைந்தனர். நிந்தைசெய்தவர் காலைக்கடன்களைக் கழிப்பதற்காக ஓடைக்குச் சென்றார். பக்தர்களின் கூட்டம் பாபாவை தரிசிக்க மசூதிக்குச் சென்றுவிட்டது.

200 பாபா பரிபூரணமான அந்தர்ஞானியானதால் தம் பக்தர்களுக்குச் சரியான நேரத்தில் போதனை செய்வார். சிறிதுநேரம் கழித்து, அவர் விளைவித்த சம்பவத்தைப்பற்றிக் கேளுங்கள்.

201 லெண்டிக்கு பக்தகோஷ்டியுடன் சென்றபோது, பாபா நிந்தை செய்த பக்தரைப்பற்றி விசாரித்தார். அவர் காலைக்கடன்களை முடிப்பதற்கு ஓடைக்குச் சென்றிருப்பதாக மற்றவர்கள் சொன்னார்கள்.

202 தம்முடைய காரியக்கிரமங்களை முடித்துக்கொண்டு பாபா திரும்பினார். நிந்தை செய்த பக்தரும் ஓடையி­ருந்து வீடு நோக்கிக் கிளம்பினார்.

203 இருவரும் சந்தித்தபோது என்ன நடந்தது என்பதை பயபக்தியுடன் நீங்கள் கேட்கும்படி நான் கைகூப்பி வேண்டுகிறேன்.

204 அவ்விடத்திலேயே ஒரு காம்பவுண்டு வே­க்கருகில் கிராமத்தின் பன்றியொன்று யதேஷ்டமாக மலத்தைச் சுவைத்துத் தின்றுகொண் டிருந்தது. பாபா தம்முடைய கையால் அப்பன்றியைச் சுட்டிக்காட்டினார்.

205 ''அந்த நாக்கு எவ்விதமாக பொதுஜனங்கள் கழித்த மலத்தைச் சுவைத்தும் ரஸித்தும் சாப்பிட்டுக்கொண் டிருக்கிறது என்று பார். தன் பந்துக்களையும் உறுமலால் விரட்டிவிட்டு தன் பெரும்பசியைத் தணித்துக்கொண் டிருக்கிறது.--

206 ''பல சுகிருதங்களைச் (நற்செயல்களைச்) செய்ததால் தனக்குக் கிடைத்த மனிதப் பிறவியை வீணடித்துவிட்டு, தன்னுடைய நாசத்திற்கே வழிகோலும் மனிதனுக்கு இந்த சிர்டீ என்ன ஸந்தோஷத்தையும் சாந்தியையும் அளிக்க முடியும்?ஃஃ

207 பாபா இந்த தொனியிலேயே பிரஸங்கம் செய்துகொண்டுபோனார். நிந்தை செய்த மனிதருக்குள்ளே தேள் கொட்டியது. காலையில் நடந்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. பாபாவின் வார்த்தைகள் அவருடைய இதயத்தைப் பிளந்தனõ

208 இவ்வாறாக, பாபா தம் பக்தர்களுக்கு சமயத்திற்கேற்றவாறு பிரஸங்கரூபமாக போதனையளித்தார். இந்த போதனையின் ஸாரத்தை மனத்தில் கவனத்துடன் ஏற்றிக்கொண்டால், ஆன்மீக முன்னேற்றம் தூரத்திலா இருக்கிறது?

209 'இறைவனின் அருள் இருந்தால் உட்கார்ந்த இடத்திலேயே சுண்டுவிரலைக்கூட அசைக்காமல் நான் அனைத்தையும் பெறுவேன்ஃ என்னும் பழமொழி ஸந்தேஹமில்லாமல் உண்மையே. ஆனால், அது உணவுக்கும் உடைக்கும் மட்டுந்தான் பொருந்தும்.

210 ஆன்மீக சம்பந்தமான விஷயங்களில் இந்த விதியைப் பொருத்த முயல்பவன் எவ்வித முன்னேற்றமும் இன்றி ஏமாறிப்போவான். 'தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.ஃ இது பாபாவின் விலைமதிக்கமுடியாத உபதேசம்.

211 பாபாவின் திருவாய்மொழியைக் கேட்கக் கேட்க, கேட்பவரை அது மேலும் மேலும் ஆனந்தத்தால் ஊஞ்சலாடச் செய்கிறது. பக்தியுடனும் விசுவாசத்துடனும், மண் செழுமையாகவும் தளர்வாகவும் இருப்பின் வேர்கள் ஆழமாகச் சென்று பாய்கின்றன.

212 ''நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும் நிலத்திலும் காய்ந்துபோன கொம்பிலும் மனிதர்களிடையேயும் வனத்திலும் இந்த தேசத்திலும் வெளிதேசங்களிலும்-- எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லேன். ஒளியுடைய ஆகாயத்திலும் நான் வியாபித்திருக்கிறேன். --

213 ''மூன்றரை முழம் உயரமுள்ள இம் மனிதக்கூட்டில்தான் நான் வியாபித்திருக்கிறேன் என்ற தவறான அபிப்பிராயத்தை அகற்றுவதற்காகவே நான் இப்புவியில் அவதரித்திருக்கிறேன்.--

214 ''என்னை வேறொன்றிலும் நாட்டமில்லாமலும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமலும் இரவுபகலாகத் தொழுபவன் இரண்டென்னும் மாயையை வென்று என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறான். --

215 ''வெல்லத்தை விட்டு இனிப்பு வெளியே சென்றுவிடலாம். கடல், அலைகளைப் பிரிந்துவிடலாம். கண், கருமணியைப் பிரியலாம். என் கபடமற்ற, விசுவாசமுள்ள பக்தன் என்னி­ருந்து வேறுபடமாட்டான்.--

216 ''ஜனனமரணச் சுழ­­ருந்து நிச்சயமாக விடுபடவேண்டுமென்று உறுதியாக நினைப்பவன், தர்மசாஸ்திர விதிகளின்படி வாழ்க்கை நடத்தப் பிரயத்தனம் செய்யவேண்டும். எப்பொழுதும் தனக்குள் அடங்கிய மனத்தினனாக இருக்கவேண்டும்.--

217 ''பிறர் மனத்தைப் புண்படுத்தவோ தாக்கவோகூடிய சொற்களைப் பேசக்கூடாது. எவரையும் மர்மஸ்தானத்தில் அடிக்கக்கூடாது. தன்னுடைய கடமையையே கருத்தாகக்கொண்டு, சுத்தமாக சுயதர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.--

218 ''உன்னுடைய மனத்தையும் புத்தியையும் என்னிடம் ஸமர்ப்பணம் செய்துவிட்டு என்னையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிரு. அவ்வாறான மனிதன், தனது தேஹத்திற்கு எப்பொழுது என்ன நடந்தாலும் அதுபற்றிக் கவலைப்படமாட்டான். அவனுக்கு எந்தவிதமான பயமும் இல்லை.--

219 ''எவனொருவன் வேறொன்றிலும் நாட்டமில்லாது என்னையே வரித்து, என்னுடைய புண்ணிய கதைகளைக் கேட்டுக்கொண்டு, என்னில் அன்னியமான எதிலும் ஈடுபாடு கொள்ளாதிருக்கின்றானோ, அவன் இறைவனுடன் ஒன்றிவிடுகிறான்.ஃஃ

220 'என்னுடைய நாமத்தைத் தியானம் செய்; என்னிடம் சரணடைந்துவிடுஃ என்று பாபா எல்லாரிடமும் திரும்பத் திரும்பச் சொன்னார். தம்மை யாரென்று தெரிந்து கொள்வதற்காகத் தம்முடைய கதைகளைக் கேட்டு அவற்றின்மீது சிந்திக்கச் சொன்னார்.

221 சிலரை பகவந்நாமஸ்மரணம் செய்யச் சொன்னார். சிலரை பகவானுடைய லீலைகளைக் கேட்கச் சொன்னார். சிலரை பகவானுடைய பாதங்களுக்குப் பூஜை செய்யச் சொன்னார். இவ்வாறு அவர் பக்தரின் ஆன்மீகத் தகுதிக்கேற்றவாறு வெவ்வேறு விதிகளையும் வழிமுறைகளையும் நியமனம் செய்தார்.

222 ஒருவரை அத்யாத்ம இராமாயணம் படிக்கச் சொன்னார். மற்றொருவரை சடங்கை முன்வைத்து ஞானேச்வரி படிக்கச் சொன்னார். வேறொருவரை ஹரிவரதம் படிக்கச் சொன்னார். இன்னொருவரை குருசரித்திரம் படிக்கச் சொன்னார்.

223 ஒருவரைத் தம்முடைய காலடியிலேயே கிடக்கச் சொன்னார். அச்சமயத்திலேயே அடுத்தவரை கண்டோபா (ஓட்ஹய்க்ர்க்ஷஹ) கோயிலுக்கு அனுப்பினார். வேறொருவர் மீதிருந்த அளப்பரிய அன்பினாலும் அக்கறையாலும் அவரை ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம் செய்யவைத்தார்.

224 ஒருவர் 'ராம விஜயம்ஃ படிக்கும்படி உபதேசம் செய்யப்பட்டார். மற்றொருவருக்கு நாமத்தினுடைய மஹாத்மியமும் தியானத்தினுடைய முக்கியத்துவமும் விளக்கப்பட்டது. வேறொருவர் சாந்தோக்கிய உபநிஷதத்தையும் கீதாரஹஸ்யத்தையும்1 விசுவாசத்துடன் படித்து சுவாரசியத்தை அனுபவிக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டார்.

225 ஒருவருக்கு ஒன்று, மற்றொருவருக்கு வேறு. தீக்ஷை2 அளிக்கும் வழிகள் எண்ணிலடங்கா. சிலருக்குப் பிரத்யக்ஷமாகவே (நேருக்கு நேர்) உபதேசம். சிலருக்கு திருஷ்டாந்தமாக (உருவகக் கதைகள் மூலமாக) உபதேசம். அவருடைய உபதேசப் புதினம் அபூர்வமானதுõ

226 அனைத்து இனத்தினரும் ஜாதியினரும் அவரை தரிசனம் செய்ய ஓடிவந்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவரின் கனவிலும் அவர் தோன்றினார்.

227 அவருடைய மார்பில் அமர்ந்துகொண்டு கைகளாலும் கால்களாலும் அவரை அமுக்கினார். குடிகாரர் தம்முடைய கைகளைக் காதுகளில்3 வைத்துக்கொண்டு இனி மதுவைத் தொடமாட்டேனென்றும் அறவே விட்டுவிடுவேனென்றும் பிரமாணம் செய்தபின்னரே அவரை விடுதலை செய்தார்.

228 க­யாண4 வீட்டுச் சுவரில் ஜோதிடர்கள் விஷ்ணு, சிவன், ஆகிய தெய்வங்களின் ஓவியங்களை வரைவதுபோல 'குருர் பிரம்மாஃ போன்ற மந்திரங்களை பக்தருக்காக அவருடைய கனவில் பாபா எழுதுவார்.

229 யாராவது யோகாசனங்களையோ அல்லது ஹடயோகத்தின் மற்றப் பயிற்சிகளையோ திருட்டுத்தனமாகப் பழகினால், பாபாவுக்கு அது உள்ளுணர்வால் தெரிந்துவிடும்; சொல்லம்பினால் அதை அவருக்குத் தப்பாது தெரிவித்துவிடுவார்.

230 முன்பின் தெரியாத ஒருவருடைய கையைப் பிடித்துக்கொண்டு, 'நீ சோளரொட்டியைத் தின்றுவிட்டுச் சும்மா இருக்கமாட்டாயா? பொறுமையைக் கடைப்பிடிõஃ என்று கண்டனச் செய்தி சொல்லுவார்.

231 யாரோ ஒருவருக்கு நேரிடையாக அதிகார தோரணையில் சொன்னார், ''நாங்கள் கண்டிப்பு மிகுந்த, இரக்கமில்லாத ஜாதி. ஓரிரு முறை சொல்­ப்பார்ப்போம். திருந்தாவிட்டால் கடுமையான தண்டனை கொடுப்போம்.--

232 ''எம்முடைய சொல்லைக் கேட்காதவனை இரண்டாகத் துண்டித்துத் தூக்கியெறிந்து விடுவோம்; எம் குழந்தையாக இருப்பினும் சரி.ஃஃ (பிறந்தவுடனே சிசுவின் தொப்புள் கொடியை அறுத்துவிடும் செய்கை இங்கு உபமானப்படுத்தப்படுகிறது.)

233 ஸாயீபாபா பேரறிவு படைத்த மஹானுபாவர்; அவருடைய ஸாமர்த்தியமான செயல்களைப் பாமரனாகிய நான் எவ்வாறு வர்ணிக்க முடியும்? சிலருக்கு அவர் ஞானத்தையும் துறவு மனப்பான்மையையும் அளித்தார்; சிலருக்கு நன்னெறியையும் பக்தியையும் அளித்தார்.

234 சிலரை, பிறர் போற்றும் வகையில் உலக வாழ்க்கையை மங்களமாக நடத்துமாறு ஒழுங்குபடுத்தினார். இது விஷயமாகக் கதை கேட்பவர்களுக்கு ஒரு சுவையான நிகழ்ச்சியை உதாரணமாகச் சொல்லுகிறேன்.

235 ஒருநாள் உச்சிவேளையில், எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணமாயியின் வீட்டுக்கருகில் பாபா வந்தார். பாபா மனத்துள் என்ன வைத்திருந்தாரோ தெரியவில்லை.

236 அங்கே சிலர் அவருடன் இருந்தனர். பாபா அவர்களை ஏவினார், ''கொண்டுவா, உடனே ஓர் ஏணி கொண்டு வாõஃஃ அவர்களில் ஒருவர் உடனே சென்று ஓர் ஏணியைக் கொண்டுவந்து அங்கு வைத்தார்.

237 பாபா அந்த ஏணியை வீட்டின்மீது சார்த்தித் தாமே கூரையின்மீது ஏறினார். அவர் மனத்தில் என்ன திட்டம் வைத்திருந்தார் என்பது எவருக்கும் தெரியாது.

238 அந்த நேரத்தில் ஏணியானது வாமன் கோந்த்கருடைய வீட்டின்மேல் சார்த்தப்பட்டிருந்தது. ஸ்ரீ ஸாயி கிடுகிடுவென்று ஏணியில் ஏறிக் கூரையை அடைந்தார்.

239 அங்கிருந்து, அவர் கோந்த்கரின் பக்கத்து வீடான ராதாகிருஷ்ண பாயியின் வீட்டுக் கூரைக்குச் சென்றார். அந்தக் கூரையையும் சடுதியில் கடந்தார். யாருக்கும் இந்த மர்மம் என்னவென்று புரியவில்லை.

240 ஆனால், அந்த நாளில் ராதாகிருஷ்ணபாயி குளிர்காய்ச்சலால் நடுங்கிக்கொண்டு அவஸ்தைப் (துன்பப்) பட்டுக்கொண்டிருந்தாள்.

241 பக்கத்துக்கொருவராக, இருவர் தாங்கினால்தான் பாபாவால் நடக்க முடியும். அவ்வளவு பலஹீனமானவருக்கு இவ்வளவு பலம் எங்கிருந்து வந்தது?

242 உடனே பாபா கூரையின் மறுபக்கச் சார்ப்பில் இறங்கி, விளிம்பிற்கு வந்து, அதே ஏணியை அங்கே கொண்டுவரும்படி செய்தார். ஏணியை உபயோகித்துக் கீழே இறங்கிவிட்டார்.

243 கால் பூமியில் பட்டவுடனே ஏணியின் சொந்தக்காரருக்குக் கணநேரமும் தாமதியாமல் இரண்டு ரூபாய் உடனடியாகக் கொடுத்தார்.

244 அவர் செய்த வேலை இரண்டு இடங்களில் ஏணியைச் சார்த்தியதைத் தவிர வேறெதுவுமில்லை. அதற்கென்ன பாபா அவருக்கு அவ்வளவு தாராளமாகப் பணம் கொடுத்தார்?

245 இயல்பாகவே மக்கள் ஆவலுற்றனர். ஒருவர் சொன்னார், ''ஏணியின் சொந்தக்காரருக்கு இவ்வளவு பணம் ஏன் கொடுத்தீர்கள் என்று பாபாவைக் கேளுங்கள்.ஃஃ

246 அவர்களிலொருவர் தைரியம்கொண்டு கேட்டார். பாபா பதிலுரைத்தார், ''சிறிதளவாயினும், யாருடைய உழைப்பையும் இலவசமாகப் பெற்றுக்

247 ''யாருடைய உழைப்பையும் எப்பொழுதும் இலவசமாகப் பெறக்கூடாது என்னும் விதியைக் கடைப்பிடி. மற்றவர்களிடம் வேலை வாங்கிக்கொள். ஆனால், அவர்களுடைய உழைப்பு எவ்வளவு என்பதை அறிந்துகொள்.ஃஃ

248 இவ்வாறு பாபா செய்ததன் நோக்கமென்ன என்பது யாருக்குத் தெரியும்? அது அவரொருவருக்குத்தான் தெரியும். ஞானிகளுடைய மனம் திறக்கமுடியாத பெட்டியன்றோõ

249 அவருடைய திருவாய்மொழியே நமக்கு ஸகல ஆதாரமும். அவர் சொன்னபடி நடந்தால், தடங்கல்கள் ஏதுமின்றி வாழ்க்கை சுமுகமாக நடக்கிறது.

250 அடுத்த அத்தியாயம் இதைவிட இனிமையானது. வீட்டுவேலை செய்யும் ஒன்றுமறியாத சிறுமி ஒருத்தி, வேதத்தி­ருந்து எழுந்த, திகைக்கவைக்கும் ஸந்தேஹத்திற்கு விளக்கம் அளிக்கப்போகிறாள்õ

251 தாஸகணு1 ஒரு தெய்வ அருள் பெற்ற ஹரிதாஸர் (கதாகீர்த்தனம் செய்பவர்). சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், ஈசாவாஸ்ய உபநிஷதத்தை மராட்டியில் மொழிபெயர்த்து வழங்க அவர் விரும்பினார்.

252 ஸாயீயினுடைய அருளால் அந்நூலை எழுதிமுடித்தார். ஆயினும் உபநிஷதத்தின் ரஹஸியமான அர்த்தம் தமக்குப் பிடிபடவில்லையோ என்ற ஸந்தேஹம் அவருக்கு இருந்தது. பாபா அந்தப் பிரச்சினையை எப்படித் தீர்த்துவைத்தார்?

253 சிர்டீயில் உட்கார்ந்துகொண்டே பாபா கூறினார், ''நீர் விலேபார்லேவுக்குச்2 செல்லும்போது, காகாவின் (ஹரிஸீதாராம் தீக்ஷிதரின்) வீட்டு வேலைக்காரி உம்முடைய ஸந்தேஹத்தைத் தீர்த்துவைப்பாள்.ஃஃ

254 ஈசாவாஸ்ய உபநிஷதம் என்னும் தாமரையின்மீது, வாக்தேவதையாகிய ஸரஸ்வதி என்னும் வண்டு ரீங்காரமிட்டுக்கொண்டு சுற்றிவரும். அத் தாமரையின் நறுமணத்தை நுகர்ந்து அனுபவிப்பதற்கு, செவிமடுப்பவர்கள் தங்களுடைய ஸாமர்த்தியத்தையெல்லாம் உபயோகிக்க வேண்டியிருக்கும்.

255 ஆகவே, அது அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும். எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா.

256 பந்த் ஹேமாட் ஸாயீயை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப் பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு. ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட. 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில். 'எனக்கு அநுக்கிரஹம்ஃ என்னும் பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும்,

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்,
சுபம் உண்டாகட்டும்.