Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 23


23. பக்தர்களின்பால் லீலைகள்




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 இந்த ஜீவாத்மா1 முக்குணங்களுக்கு2 அப்பாற்பட்டதே. ஆயினும், மாயையின் மோஹத்தால், தான் ஸச்சிதானந்த சொரூபம் என்பதை மறந்து, வெறும் தேஹமே என்று நினைத்துக்கொள்கிறது.

2 இது நேர்ந்தபின், தேஹத்தின்மீது உண்டான அபிமானத்தினால் 'நானே செயல்புரிபவன், நானே அநுபவிப்பவன்ஃ என்ற நம்பிக்கை பெருகுகிறது. ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும் துன்பங்களால் வாழ்க்கையில் வெறுப்பேற்பட்டுத் தப்பிக்க வழி தெரியாமல் விழிக்கிறது.

3 குருபாத பக்தியே இந்த ஈனமான நிலையி­ருந்து விடுபடும் மார்க்கமாகும். மாபெரும் நடிகராகிய ஸ்ரீரங்கஸாயீ பக்தர்களைத் தமது லீலையெனும் அரங்கத்துள் இழுக்கிறார்.

4 நாம் ஸாயீயை ஓர் அவதார புருஷராக ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில், அவரிடம் அவதார புருஷருக்குரிய லட்சணங்கள் அனைத்தும் உண்டு. ஆனால், அவரோ, 'நான் அல்லாவின் உடுப்புத் தலைப்பில் கட்டப்பட்டவன்ஃ என்றே சொல்­க்கொண்டார்.

5 அவதார புருஷராக இருந்தபோதிலும், உலக நியமங்களுக்குக் கட்டுப்பட்டே வாழ்க்கை நடத்தினார். வர்ணாசிரம தர்மத்தின்படி தூய வாழ்க்கை நடத்தும்படி பக்தர்களுக்கு போதித்தார்.

6 அவர் யாரோடும் எவ்விதத்திலும் போட்டியிட்டதேயில்லை; மற்றவர்களையும் போட்டியிட ஊக்குவித்ததில்லை. இவ்வுலகில் இயங்கும் இயங்காப் பொருள்களனைத்திலும் இறைவனைக் கண்ட அவர், அடக்கமும் பணிவும் உருவானவர்.

7 அவர் யாரையும் இகழ்ந்து பேசியதில்லை; எவரையும் துச்சமாகக் கருதியதில்லை. எல்லா உயிர்களிலும் இப் பிரபஞ்சத்தின் உணர்வான நாராயணனையே கண்டார்.

8 'நான் இறைவன்ஃ என்று அவர் ஒருபொழுதும் சொன்னதில்லை. 'நான் இறைவனுடைய அடிமைஃ என்றும் 'நான் இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்திக் கொண்டிருக்கும் ஏழைஃ என்றுமே சொல்­க்கொண்டார். 'அல்லாமா­க், அல்லா மா­க்ஃ (அல்லாவே எஜமானர்) என்று சதா ஜபம் செய்துகொண் டிருந்தார்.

9 எந்த ஞானியையும் ஜாதியை வைத்தோ, உணவுப் பழக்க வழக்கங்களாலோ, மற்ற நடைமுறைச் செயல்களாலோ, எடைபோடமுடியாது. ஞானிகளுடைய நிலைமை இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.

10 ஜடமான ஜீவர்களைக் கைதூக்கி விடுவதற்காகப் பரோபகாரமே உருவான ஞானிகள் அவதாரம் செய்கின்றனர். இது, எல்லாம் வல்ல இறைவனின் கருணையால் நிகழ்கிறது.

11 பூர்வஜன்ம புண்ணியம் இருந்தால்தான் ஞானிகளின் சரித்திரத்தைக் கேட்கவேண்டுமென்ற ஆவல் எழும். அதன் விளைவாக, மகிழ்ச்சியும் சுகமும் லாபமாகும்.

12 ஒரு சமயம் யோகாப்பியாஸம் செய்பவர் ஒருவர்1 நானா சாந்தோர்கருடன் மசூதிக்கு வந்தார்.

13 அவர் பதஞ்ஜ­ முனிவர் அருளிய யோகசாஸ்திரத்தை நன்கு கற்றவர். ஆயினும் அவருடைய அனுபவம் என்னவோ விசித்திரமாக இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தபோதிலும், ஒரு கணமேனும் ஸமாதி அனுபவம் கிட்டவில்லைõ

14 ''யோகீச்வரரான ஸாயீ எனக்கு அருள் செய்தால், தடங்கல்கள் விலகிக் கட்டாயம் ஸமாதி அனுபவம் கிட்டும்.ஃஃ

15 இந்த நோக்கத்துடன் அவர் ஸாயீ தரிசனத்திற்கு வந்தார். அந்த நேரத்தில், பாபா சோளரொட்டியுடன் வெங்காயத்தைச் சேர்த்துச் சாப்பிட்டுக்கொண் டிருந்ததைப் பார்த்தார்.

16 பழைய சோளரொட்டியையும் காய்ந்துபோன வெங்காயத்தையும் பாபா வாய்க்கருகில் கொண்டுபோனபோது, 'இவர் எப்படி என்னுடைய பிரச்சினையை நிவிர்த்தி செய்யப்போகிறார்ஃ என்ற பெரியதொரு சந்தேகம் அவர் மனத்தைத் தாக்கியது.

17 இந்த விகற்பமான சிந்தனை யோகியின் மனத்தெழுந்தபோது, அந்தர்ஞானியான (பிறர்மனம் அறியும் ஞானியான) ஸாயீ மஹராஜ், ''நானாõ வெங்காயத்தை ஜீரணம் செய்யமுடிந்தவனே அதை உண்ணலாம்õ--

18 ''ஜீரணிக்கும் சக்தியுடையவன் எந்த பயமும் இல்லாமல் வெங்காயத்தைத் தின்னவேண்டும்õஃஃ என்று கூறினார். இதைக் கேட்ட யோகி வெட்கத்தால் தலைகுனிந்து தூய மனத்துடன் பாபாவை சரணடைந்தார்.

19 சிறிது நேரம் கழித்து, பாபா தாம் எப்பொழுதும் தரிசனம் தரும் இடத்திற்கு வந்து அமர்ந்தவுடன் யோகம் பயில்பவர் நிர்மலமான மனத்துடன் பாபாவுக்கருகில் சென்றமர்ந்தார்.

20 பணிவுடன் அவர் கேட்ட சந்தேகத்திற்கு பாபா திருப்திகரமாகப் பதிலளித்தார். யோகம் பயில்பவர் உதீயையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு ஆனந்தமாகத் திரும்பிச் சென்றார்.

21 இம்மாதிரியான கதைகள் அநேகம் உண்டு. பக்தி பா(ஆஏஅ)வத்துடன் கேட்கப்பட்டால், துக்கமும் மோஹமும் அனர்த்தமும் (கேடு, துன்பம்) நிவிர்த்தியாகும்; பக்தரின் வாழ்வு மேம்படும்.

22 எவ்வளவு துர்நாற்றம் அடித்தாலும், எத்தனை சிறிய நீர்நிலையாக இருந்தாலும், ஒரு பன்றிக்கு அதுவே சொர்க்கம் என்பதில் சந்தேகம் ஏதும் உண்டோ?

23 ஜீவாத்மாவுக்கும் கிளிக்கும் ஓர் ஒற்றுமையுண்டு; இரண்டுமே சிறைப்பட்டிருக்கின்றன; ஒன்று மனித உட­ல்; மற்றொன்று கூண்டில். சுதந்திரத்தை இழந்தபோதிலும் கிளிக்குக் கூண்டே சுவர்க்கம்õ

24 சுதந்திரத்தின் குதூகலம் அறியாத கிணற்றுத் தவளையைப்போல், கிளி தன் கூண்டிலேயே எல்லா சுகங்களையும் காண்கிறது; ஆசைகள் நிரம்பிய ஜீவாத்மாவும் அவ்வாறே.

25 ஆஹா, என்னுடைய கூண்டு எவ்வளவு அழகாக இருக்கிறதுõ தங்கத்தாலான குறுக்குத்தண்டி­ருந்து இங்குமங்கும் சிறகடிப்பது எவ்வளவு ஆனந்தம்õ தலைகீழாகத் தொங்கினாலும் கால் நழுவி விழுந்துவிடுவோமோ என்ற பயம் இல்லையேõ

26 இக்கூண்டி­ருந்து வெளியேறினால், என்னுடைய சுகங்களனைத்தையும் இழப்பேன். அது, தன்னுடைய சுகத்தைத் தானே அழித்துக்கொள்ளும் செய்கையாகிவிடும்õ மாதுளம் முத்துகளோ சுவையான மிளகாய்ப் பழமோ கிடைக்காது.

27 ஆயினும், நேரம் வரும்போது, அன்பாகத் தட்டிக்கொடுத்துக் கண்களுக்கு ஞானமெனும் மையை இட்டு சுதந்திரத்தின் உல்லாசத்தை உணர வைக்கும் அற்புதம் நிகழ்கிறது.

28 அன்பான தட்டு, (கையால் தொட்டு குரு அளிக்கும் தீட்சை) கிளியின் இயல்பான சுதந்திர உணர்வை எழுப்பிவிடுவதால் கிளி பறந்தோடிவிடுகிறது. திறந்த கண்ணோட்டத்துடன் சுதந்திரமாக வானமெங்கும் சிறகடித்து சந்தோஷமாகப் பறக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த யாரால் முடியும்?

29 இவ்வுலகமே கிளியை வா, வா என்றழைக்கிறது. பழத்தோப்புகளில் மாதுளையையும் கொய்யாவையும் வயிறு புடைக்கும்வரை தின்னலாம். எல்லையற்ற வானில் எங்கும் பறந்து திரியலாம். புதிதாகக் கண்டெடுத்த சுதந்திரத்தை அமோகமாக அனுபவிக்கலாம்.

30 ஜீவாத்மாவின் நிலையும் இதுவேõ இறைவனின் கருணையால் ஒரு குரு கிடைத்தவுடன் பந்தங்களி­ருந்து விடுபடுவது மட்டும் அல்லாமல் சுதந்திரத்தின் முக்தியையும் அனுபவிக்கிறான்.

31 கதை கேட்கும் அவதான சீலர்களேõ (கவனத்துடன் பின்தொடரும் நற்குணவான்களேõ) சுத்தமான பிரேமையின் ரசமான ஒரு கதையை முழு கவனத்துடன் இப்பொழுது கேட்பீர்களா?

32 கடந்த அத்தியாயத்தில், சாமாவையும் உடன் சேர்த்து மிரீகரைச் சிதலீக்கு அனுப்பிய சமத்காரத்தைப் (திறமை மிக்க செயலைப்) பார்த்தீர்கள்.

33 நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்து, நீளமான ஆசாமியால் (பாம்பால்) நேரக்கூடிய ஆபத்தைப்பற்றிச் சரியான நேரத்தில் மிரீகருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

34 சூசகமாகச் சொன்னதுமட்டும் அல்லாமல், பேராபத்தி­ருந்து விடுபட ஆதரவையும் அளித்தார். மிரீகர் வேண்டாவென்று ஒதுக்கிய போதிலும், ஆதரவை அவர்மீது திணித்து அவரை ஆபத்தி­ருந்து ரட்சித்தார்.

35 பக்தர்களின் நல்வாழ்வில் எப்பொழுதும் அக்கறை கொண்ட பாபா, மிரீகருக்கு நேரவிருந்த ஆபத்தை விலக்கி, அவருக்கு விசித்திரமானதொரு அனுபவத்தையும் அளித்தார்.

36 சாமாவின் அனுபவமோ அதனினும் விசித்திரமானது. ஒரு நாகத்தால் தீண்டப்பட்டு உயிருக்கே ஆபத்தான நிலையி­ருந்த அவரை பாபா காப்பாற்றினார்.

37 அதுவும் பாபாவின் லீலைகளில் ஒன்றேõ அதை ஆதியி­ருந்து சொல்கிறேன்; கேளுங்கள். சாமாவை ஒரு நாகம் தீண்டிவிட்டது. அப்பொழுது பாபா என்ன மருந்து கொடுத்தார் என்று பாருங்கள்õ

38 அப்பொழுது சுமாராக மாலை ஏழு மணி இருக்கலாம். சாமாவின் சுண்டுவிரலை திடீரென்று ஒரு நாகம் தீண்டிவிட்டது. கையில் விஷம் ஏறி எரிச்சலெடுத்தது.

39 சகிக்க முடியாத, மட்டற்ற வேதனையால் உயிரே போய்விடும் போ­ருந்தது. மாதவராவ் பீதியும் கவலையும் அடைந்தார்.

40 உடல் முழுவதும் சிவந்து போயிற்று. நண்பர்களும் உறவினர்களும் சூழ்ந்து கொண்டனர். உயிருக்கே ஆபத்தாகத் தோன்றியதால், கூடியிருந்தவர்கள் விரோபா1 கோயிலுக்கு வரும்படி வற்புறுத்தினர்.

41 நிமோண்கர்2 என்பவர் முன்னுக்கு வந்து, ''முத­ல் உதீ ஏற்றுக்கொள்; பிறகு போஃஃ என்று சொன்னார். மாதவராவ் (சாமா) மசூதிக்கு ஓடினார். ஐயகோõ பாபா என்ன செய்தார் தெரியுமாõ

42 பாபாவினுடைய வழிமுறைகள் திகைப்புண்டாக்குபவை அல்லவா? சாமாவைக் கண்டவுடனே பாபா படியேறவும் விடாது திட்டினார்; சாபமிட்டார்.

43 ''ஓ 3பாப்பானேõ ஏறாதே ஏறாதே, ஏறினால் தெரியும் சேதிõ போ வெளியே உடனேõ இறங்கி ஓடுõஃஃ என கர்ஜனை செய்தார்.

44 பாபாவின் கோபம் சாமாவுக்கு வியப்பை அளித்தது. சற்றும் எதிர்பாராத, நெருப்பைக் கக்கும் சொற்கள் வெளிவந்தன. சாமா செய்வதறியாது பிரமித்துப்போனார். பாபா எதற்காக இவ்வளவு கடுமையாகப் பேசினார் என்று புரியவில்லை.

45 இதையெல்லாம் கண்ட மாதவராவ் திகிலடைந்தார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை; கல்லாய்ச் சமைந்து உட்கார்ந்துவிட்டார்.

46 தெய்வத்துக்கே கோபம் வந்ததைப் பார்த்து சாமாவின் இதயம் சுக்குநூறாகியது. பாபா தம்மை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாரென்றும் நினைத்தார். சிகிச்சை கிடைக்குமென்ற நம்பிக்கையை அறவே இழந்தார்.

47 யார்தான் திகிலடையமாட்டார்? பாபா கடுங்கோபம் கொண்டதும் வசைச் சொற்களையும், சாபங்களையும் சரமாரியாகப் பொழிந்ததும் சூழ்நிலையையே பயங்கரமாக்கியதல்லவாõ

48 இந்த மசூதி என் தாயகம்; நான் பாபாவின் செல்லப்பிள்ளைõ இவ்வாறிருக்கையில், தாய் குழந்தையின்மீது ஏன் இன்று கடுங்கோபம் கொள்கிறாள்?

49 பாம்பு தீண்டிவிட்டபோது தாயைத் தவிர வேறு யாரிடம் செல்லவேண்டும்? அந் நிலையில் தாயே உதைத்துத் தள்ளினால் குழந்தையின் கதி என்னவாகும்?

50 மாதவராவும் பாபாவும், குழந்தையும் தாயும் போலல்லரோ? இரவுபகலாக நிலைத்த அந்த உறவு இன்றுமட்டும் ஏன் இக் கதியை அடைந்தது?

51 ஒரு குழந்தையைத் தாயே உதைத்து விரட்டினால், வேறு எவர் காப்பாற்றுவார்? அந்த நேரத்தில், மாதவராவ் உயிர்பிழைப்போம் என்ற நம்பிக்கையை இழந்தார்.

52 சிறிது நேரம் சென்ற பின், பாபா அமைதியடைந்த பிறகு மாதவராவ் தைரியம் பெற்றுப் படியேறிச்சென்று அமர்ந்தார்.

53 பாபா அப்பொழுது சொன்னார், ''தைரியத்தை இழந்துவிடாதே; உன் மனத்தில் எந்தவிதமான கவலையும் வேண்டா; சுகமாகிவிடும்; கவலையை விடு. பக்கீர் தயாளகுணமுள்ளவர்; உன்னை ரட்சிப்பார்.--

54 ''வீட்டிற்குப் போய் அமைதியாக இரு; வீட்டை விட்டு வெளியே எங்கும் போகாதே. தைரியமாக இரு; கவலையை விட்டொழி; என்னிடம் நம்பிக்கை வைப்பாயாக.ஃஃ

55 பிறகு, சாமா வீடு போய்ச் சேருமுன்பே அவருக்கு ஆதரவாகத் தாத்யா1 கோதேவை ஒரு செய்தியுடன் அனுப்பினார்.

56 ''தூங்கக்கூடாது என்று அவனிடம் சொல். வீட்டினுள்ளேயே நடமாட்டமாக இருக்க வேண்டும். எது பிரியமோ அதைச் சாப்பிடலாம். தூக்கம்பற்றி மட்டும் உஷாராக இருக்கச் சொல்.ஃஃ

57 அன்றிரவு, ''மாதவராவுக்குத் தூக்கக் கலக்கமாக இருக்கலாம்; ஆனால், அவனை இன்றிரவு தூங்குவதற்கு அனுமதிக்கக்கூடாதுஃஃ என்று பாபா காகாஸாஹேப் தீட்சிதரிடம் சொன்னார்.

58 இவ்விதமான முன்னெச்சரிக்கையை அனுசரித்ததால், சாமாவின் வ­யும் வேதனையும் மறைந்தன. சுண்டுவிர­ல் கடிவாயில் மட்டும் சிறிது விஷத்தின் எரிச்சல் இருந்தது.

59 பிறகு அவ்வெரிச்சலும் மறைந்தது. ஓ, எவ்வளவு பயங்கரமான கெட்டநேரம் கடக்கப்பட்டதுõ இதுவே, பக்தர்களின்பால் உண்டான அன்பாலும் இரக்கத்தாலும் பொங்கும் ஸாயீமாதாவின் கருணை.

60 ''ஓ பாப்பானேõ ஏறாதே ஏறாதே.ஃஃ இதுவே பாபா சொன்ன சுடுசொல். ஆனால், இது மாதவராவை நோக்கிச் சொல்லப்பட்டதா என்ன?

61 இல்லவே இல்லைõ அம்புபோல் துளைத்த இச் சொற்கள் மாதவராவிற்கு விடுக்கப்பட்டவை அல்லõ அது, நாகம் தீண்டிய விஷத்திற்கு இடப்பட்ட கடுமையான ஆணையாகும்.

62 ''ஏறினால் தெரியும் சேதிõஃஃ என்பதே ஸாயீயின் முகத்தி­ருந்து வெளிப்பட்ட கண்டிப்பான ஆணை. அவ்வாணை விஷம் பரவுவதை உடனே தடுத்தது.

63 இது போதாதென்று என்னவோ, ''போ வெளியே உடனே; இறங்கி ஓடுõஃஃ என்ற ஸாயீ பஞ்சாட்சர மந்திரம் விஷத்தை உடனே இறங்க வைத்தது.

64 சம்பிரதாயமான மந்திரவாதிகளைப் போன்றோ, பேய் ஓட்டுபவர்களைப் போன்றோ, வேறெந்த வழிமுறைகளையும் கையாளாமல், பக்தர்களின் ஆதரவாளரான ஸாயீ பலப்பல வழிகளில் அவர்களைப் பேராபத்துகளி­ருந்து விடுவித்தார்.

65 அவர் மந்திர ஜபம் ஏதும் செய்யவில்லை; அட்சதைக்கும் தண்ணீருக்கும் சக்தி ஏற்றவில்லை; ஜபஞ்செய்த தீர்த்தத்தையும் தெளிக்கவில்லை. பிறகு எவ்வாறு அந்த விஷம் இறங்கியது?

66 பாபாவின் வாயி­ருந்து வெளிப்பட்ட வார்த்தைகளாலேயே மாதவராவ் குணமடைந்தார். இது ஓர் அற்புதம் அன்றோõ ஸாயீயினுடைய கிருபைக்கு எல்லையே இல்லைõ

67 கதை கேட்பவர்களேõ கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட சுவாரசியமானதும் அற்புதமானதுமான கதையை விரிவாகச் சொல்கிறேன்; கவனத்துடன் கேளுங்கள்.

68 கடந்த அத்தியாயத்தில் வர்ணனை செய்யப்பட்ட கதையைவிட இது விநோதமானது. பாபா எவ்விதமாக லீலைகள் புரிந்தார் என்பதை எடுத்து விவரிக்கிறேன்.

69 சுவாரசியமான இக்கதைகளைக் கேட்டால், குருவின் திருவாய்மொழி மனத்தில் ஆழமாகப் பதியும். கர்மம்1 எது? அகர்மம்2 எது? விகர்மம்3 எது? என்பதெல்லாம் புரியும். குருவின் பாதங்களிடத்து சிரத்தை வளரும்.

70 எளிமையான உபாயங்களிலேயே மிக எளிமையான உபாயம் ஸாயீயின் பாதங்களை இதயத்தில் நிறுத்துவதுதான். மாயையை ஒழிக்கும் ஒரே வழி இதுவே; புக­டமும் இதுவே.

71 மாயையின் சுழல் ஏற்படுத்தும் சம்சார பயம் கொடிது. இக் கதைகளைக் கேட்பதால், மாயை தவிடுபொடியாகி அகண்டமான (இடையறாத) ஆனந்தம் விளையும்.

72 ஒரு சமயம் சிர்டீயைக் காலரா கொள்ளைநோய் தாக்கியது. மக்கள் பயந்துபோனார்கள். வெளிமனிதர்கள் யாரையும் கிராமத்துள் அனுமதிக்கக்கூடாது என்று ஏகமனதாக முடிவெடுத்தனர். தமுக்கடித்துச் செய்தியும் பரப்பப்பட்டது.

73 காலராவைக் கண்ட சிர்டீவாழ் மக்கள் மரணபீதி அடைந்தனர். கொள்ளைநோய் விலகும்வரை வெளிமனிதர்களிடம் எந்த உறவும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. வர்த்தகமும் போக்குவரத்தும் செய்தித்தொடர்பும் உறைந்துபோயின.

74 காலரா நோய் இருக்கும்வரை எவரும் ஆடு வெட்டக்கூடாது. வெளியி­ருந்து கிராம எல்லையைத் தாண்டி வண்டி ஏதும் ஊருக்குள் வரக்கூடாது. அனைவரும் இந்த விதிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது.

75 பாபாவுக்கோ கிராம மக்களின் இம் மூடநம்பிக்கை ஒப்புதல் இல்லை. இம் மூடநம்பிக்கைகள் மக்களுடைய அஞ்ஞானத்தைப் பிரதிப­க்கின்றன என பாபா அபிப்பிராயப்பட்டார்.

76 ஆகவே, ஒரு பக்கம் கிராம மக்கள் சட்டதிட்டங்களை விதித்திருந்தபோது, மறுபக்கம் பாபா அவற்றை உடைத்துக்கொண் டிருந்தார். எப்படியெல்லாம் உடைத்தார் என்பதுபற்றி கவனமாகக் கேளுங்கள்.

77 கிராமப் பஞ்சாயத்து விதித்த சட்டதிட்டங்களை மக்கள் நேர்மையுடன் அனுசரித்தனர். யாரேனும் சிறிதளவு மீறினாலும், அபராதம் கட்டிய பிறகே விடுவிக்கப்படுவார்.

78 பாபாவுக்கோ அபராதம் பற்றிய பயமேதுமில்லை. அவர் சதாசர்வகாலமும் நிர்ப்பயமாக இருந்தார். ஹரியின் பாதங்களில் லயித்துவிட்ட மனத்தை எவராலும் எக்காலத்தும் வெல்லமுடியாதுõ

79 இந்த சமயத்தில், விறகுகள் ஏற்றப்பட்ட பாரவண்டியொன்று கிராமத்தின் எல்லையைக் கடந்து உள்ளே வந்தது. இது பிரச்சினையைக் கிளப்பியது; ஜனங்கள் வாக்குவாதம் செய்தனர்.

80 கிராமத்தில் எரிபொருளுக்குப் பஞ்சம் இருந்தது என்பது கிராம மக்களுக்குத் தெரிந்திருந்தது. ஆயினும், காலரா காலத்தில் பஞ்சாயத்து இட்ட கட்டுப்பாட்டை எங்ஙனம் மீறுவது? மக்கள் செய்வதறியாது விழித்தனர்.

81 வண்டியோட்டியை மிரட்டி வண்டியைத் திருப்பியனுப்பிவிட முயன்றனர். செய்தி பாபாவை எட்டியது; உடனே பாபா அவ்விடத்திற்கு விரைந்தார்.

82 பாபா வண்டியின் முன்னே சென்று நின்றார். இதைக் கண்டவுடன் வண்டியோட்டியின் தைரியம் மேலோங்கியது; கிராம மக்களின் எதிர்ப்பு உடைந்தது. விறகுவண்டி எல்லையைத் தாண்டி சிர்டீக்குள் நுழைந்ததுõ

83 வண்டியை அங்கிருந்து நேராக மசூதியின் சபாமண்டபத்திற்கு ஓட்டி விறகை அங்கு இறக்கிவிடும்படி சொன்னார் பாபா. எவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

84 கோடைகாலமோ, குளிர்காலமோ, இலையுதிர்காலமோ, வசந்தகாலமோ, மழைகாலமோ- ஆண்டு முழுவதும் மசூதியில் பாபா துனியை (ஈஏமசஐ - புனிதத் தீ) வளர்த்து வந்தார்.

85 பாபாவின் மனோதிடம் விசித்திரமானதுõ அக்கினிஹோத்திரம்1 செய்யும் பிராமணர்களின் வேள்வித்தீயைப் போன்று, பாபாவின் துனி இரவு பகலாக அணையாமல் எரிந்துகொண் டிருந்ததுõ

86 துனிக்காகவே பாபா விறகுகட்டுகள் வாங்குவார். சபா மண்டபத்தின் சுவரை ஒட்டி, விறகு குவியலாக வைக்கப்பட்டிருக்கும்.

87 வாரச்சந்தை நாளின் நிலவரத்தை அனுகூலமாக உபயோகித்து பாபா விறகு வாங்கிச் சேமித்து வைப்பார். அந்த விறகுகுவிய­ன் மீதும் அண்டை அயலார் கண் வைத்தனர். சுயநலம் கருதாதவர் இவ்வுலகில் அரிதினும் அரிதன்றோõ

88 ''பாபா, அடுப்பெரிக்க ஒரு குச்சியும் இல்லை; இன்று சமையல் செய்யமுடியாது போ­ருக்கிறதுஃஃ என்று புனைந்துரைப்பர். அவர்களுக்கும் அவ்விறகில் கொஞ்சம் பங்கு கிடைக்கும்.

89 சுயநலவாதிகள் இயல்பாகவே துஷ்டர்கள். சபாமண்டபத்திற்குக் கதவு ஏதும் இல்லாதது அவர்களுக்கு நல்ல வாய்ப்பை அளித்தது. வறியவர்கள், வஞ்சகர்கள், இருசாராருமே சமமாகப் பயனடைந்தனர்õ

90 பாபா மஹா பரோபகாரி. அவருடைய பெருந்தன்மையை எவ்வாறு வர்ணிப்பேன்? வெளிப்பார்வைக்கு உக்கிரமாகத் தோன்றிய போதிலும், உள்ளே இளகிய மனமுடையவர்.

91 அவருடைய பெருமை அளவிடமுடியாதது. தன்னுடைய அஹம்பாவத்தை விடுத்து, வாக்கு அவருடைய பாதங்களைப் பணிந்தால்தான் பெருமையை விளக்கும் சக்தியைப் பெறும்.

92 இறைவன் இப் பிரபஞ்சமெங்கும் நிறைந்து நிற்கின்றான் என்பதை நிரந்தரமாக உணர்ந்தவரால் யாரை விரோதியாகப் பார்க்க முடியும்?

93 சிருஷ்டியனைத்தையும் பத்துத் திசைகளையும் நமக்கு முன்னேயும் பின்னேயும் இறைவன் வியாபித்திருக்கும்போது, யார்மீதும் வக்கிரமான பார்வை அவருக்கு வருத்தமளித்தது.

94 தம்மளவில் பூரணமான துறவியாக இருந்தபோதிலும், பக்தர்களுக்கு போதனையளிப்பதற்காகவும் நல்வழி காட்டுவதற்காகவும் இல்லறத்தாரைப் போல நடந்துகொண்டார்.

95 ஓ, இந்த மஹாத்மாவின் தன்னடக்கந்தான் என்னேõ அதை விவரித்தால், கேட்டு ஆச்சரியப்படுவீர்கள். கேட்டால், பக்தர்களின்மீது அவருக்கிருந்த அன்பும் அவதார நோக்கம் நிறைவேறியதும் அறியப்படும்.

96 தீனர்களிடம் அவருக்கிருந்த தாயன்பு இணையற்றது; அவர் நைச்சிய பா(ஆஏஅ)வத்தையே (அடியார்க்கும் அடியேன் பண்பையே) விரும்பி நாடினார். இதைத் தெளிவுபடுத்தக் கோடானுகோடி கதைகள் சொல்லமுடியும்.

97 அவர் உபவாசம் இருந்ததில்லை; ஹடயோகமும் பயின்றதில்லை. உணவில் ருசி தேடவில்லை; எப்பொழுதுமே சொல்பமான ஆஹாரத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார்.

98 குறிப்பிட்ட சில இல்லங்களுக்குச் சென்று, சோளரொட்டி (வெறும் ரொட்டியோ, பதார்த்தத்துடனோ) பிச்சை கேட்பார். இவ்வாறு எடுத்த மதுகரி (தேனீ பல பூக்களி­ருந்து உணவு தேடுவது போன்ற) பிச்சையே அவருடைய உணவாகியது. நாவின் சுவைக்கு அவர் இடம் கொடுக்கவேயில்லை.

99 நாவின் சுவைக்கு அவர் இடமே அளிக்காததால், அறுசுவைப் பண்டங்களுக்காக அவர் ஏங்கவில்லை. பிச்சை கிடைக்குமோ கிடைக்காதோ என்றோ, கிடைத்த உணவின் தரம் என்னவென்றோ அவர் கவலைப்படவில்லை. எது கிடைத்ததோ அதில் திருப்திகொண்டார்õ

100 இவ்விதமாக, அவர் உயிர்பிழைத்திருப்பதற்காக உணவு கொண்டார். சரீரத்தை ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் உண்டான ஒரு சாதனமாகவே கண்டு ரட்சித்தார். சரீரத்தின்மீது அபிமானம் என்பது இல்லை.

101 ஆத்ம சாந்தியையே பூஷணமாக அணிந்தவருக்குக் கழுத்தைச் சுற்றி மாலையும் அணிகலன்களும் எதற்காக? உடலுக்குச் சந்தனமும் விபூதியும் பூசவேண்டிய அவசியமும் இல்லை. பிரம்மத்தால் (முழுமுதற்பொருள்) நிறைந்தவரல்லரோ ஸாயீõ

102 வாழ்க்கையில் குருபக்தியே பிரதானமென்று எடுத்துக்காட்டும் இக்காதை மிகப் புனிதமானது; நமக்கு போதனையளிப்பது. கவனமாகக் கேட்பவர்கள் உலக சுக நாட்டங்கள் படிப்படியாகக் குறைவதை உணர்வார்கள்.

103 எவ்வளவுக்கெவ்வளவு கதை கேட்பவர்களின் நம்பிக்கையும் விசுவாசமும் அதிகரிக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு ஸாயீயின் பண்டாரம் (பொக்கிஷம்) அவர்களுக்குத் திறக்கும். குதர்க்கிகளுக்கும் தொந்தரவு கொடுப்பவர்களுக்கும் இந்த லாபம் கிடைக்காது. அன்பார்ந்த, நம்பிக்கையுள்ள பக்தனே இதை அனுபவிக்க முடியும்.

104 சொல்லப்போகும் இக் காதையை மனமொன்றிக் கேட்பவர்கள் பிரேமையால் பூரித்து நயனங்களி­ருந்து ஆனந்தக்கண்ணீர் வடிப்பர்.

105 பாபாவின் வழிமுறைகள் சாமர்த்தியம் ததும்பியவை அல்லவாõ அவருடைய யுக்திகளும் இலக்குகளும் எவ்வளவு அற்புதமாக இருந்தனõ அவருடைய நெருக்கமான பக்தர்கள் திரும்பத் திரும்பக் கிடைத்த அனுபவத்தால் அதன் சாரத்தை அறிந்திருந்தனர்.

106 ஸாயீயின் சரித்திரத்தைக் கேட்பது இனிமையான அமுதத்தைப் பருகுவது போன்றதாகும்õ உங்களுடைய மனத்தை குருவின் பாதங்களில் பயபக்தியுடன் வைத்து, சொல்லப்போகும் கதையைக் கேளுங்கள்.

107 இக் காதை ஒரு பல்சுவை விருந்தாகும்; அவசரமாக உண்ணக்கூடாது. ஒவ்வொரு பதார்த்தத்தையும் ரசித்து உண்டால்தான் விருந்தின் புதுமையைத் திருப்தியாக அனுபவிக்கலாம்.

108 இப்பொழுது விறகு வண்டியைப்பற்றிய விவரணம் போதும்õ அதைவிட உயர்ந்தது வெள்ளாட்டுக்கடாவின் கதை. கேட்பவர்கள் ஆச்சரியமடைவார்கள்; குரு பக்தர்கள் ஆனந்தமடைவார்கள்.

109 ஒரு சமயம் சிர்டீயில் விசேஷமான சம்பவமொன்று நிகழ்ந்தது. பலம் குன்றியதும் சாகும் தறுவாயி­ருந்ததுமான வெள்ளாட்டுக்கடா ஒன்றை யாரோ ஒருவர் கொண்டுவந்தார். மக்கள் அதைப் பார்க்கக் கூடினர்.

110 யாருக்குப் பொறுப்பாளரோ பாதுகாப்பாளரோ இல்லையோ, அவரை ஸாயீமாதா ஆதரித்தார். இடுக்கண்ணில் மாட்டிக்கொண்டவர்களும் துன்பப்படுபவர்களும் வேண்டாவென்று ஒதுக்கப்பட்டவர்களும் மசூதியில் புக­டம் கண்டனர் அல்லரோ?

111 அந்த வேளையில் படே பாபா1 பக்கத்திலேயே இருந்தார். ஆகவே, பாபா அவரிடம் கூறினார், ''இவனைப் ப­யிட்டுவிடு. ஒரே வெட்டில் கொன்றுவிடுõஃஃ

112 படே பாபாவின் மஹிமை பெரிது. பாபாவின் வலப்பக்கந்தான் அவருடைய இடம். படே பாபா சில்­மைப் புகைத்த பிறகே பாபா புகைபிடிப்பார்.

113 ஸாயீ பாபாவைப் பொறுத்தவரை படே பாபா இல்லாமல் ஓர் இலையும் அசையாது. படே பாபா சாப்பிடும்வரை ஸாயீ பாபா சாப்பிடமாட்டார்.

114 ஒரு சமயம் இவ்வாறு நிகழ்ந்தது. ஒரு தீபாவளிப் பண்டிகையின்போது எல்லா இனிப்புகளும் தட்டுகளில் பரிமாறப்பட்டு எல்லாரும் உண்பதற்காக அவரவர் இடத்தில் அமர்ந்துவிட்டனர். படே பாபா இதை அவமதிப்பாகக் கருதிக் கோபித்துக்கொண்டு வெளியேறினார்.

115 படே பாபா இல்லாமல் ஸாயீ பாபா உணவைத் தொடமாட்டார். ஸாயீ பாபாவே தொடாதபோது மற்றவர்கள் என் செய்வர்?

116 ஆகவே, அனைவரும் பொறுமையாகக் காத்துக்கொண் டிருந்தனர். சிலர் படே பாபாவைத் தேடி அழைத்துக்கொண்டு வந்தனர். படே பாபாவுடன் சேர்ந்தே ஸாயீ பாபா உணவுண்டார்.

117 சொல்லவந்த கதையை விட்டுவிட்டு, பாதைவிட்டு விலகிச் சென்றாவது வேறு விவரங்களைச் சொல்லவேண்டுமென்ற உந்துதல் எனக்கு ஏற்படுகிறது.

118 படே பாபா பாபாவின் விருந்தாளி. போஜன (சாப்பாட்டு) நேரத்தில், பாபா எப்பொழுது கூப்பிடப்போகிறார் என்று அவர் சபாமண்டபத்தில் காதைத் தீட்டிக்கொண்டு காத்திருப்பார்.

119 போஜனம் செய்பவர்கள் இரண்டு வரிசைகளாக உட்காருவர். பாபா இரண்டு வரிசைகளின் நடுவே ஒரு கோடியில் அமருவார். படே பாபாவுக்கு பாபாவின் இடப்பக்கத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.

120 நிவேதனம் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் தட்டுகளில் பரிமாறப்படும். தட்டுகள் இரண்டு பந்திகளாக வைக்கப்படும். போஜன நேரம் நெருங்கியவுடன் அனைவரும் அவரவர் இடங்களில் அமருவர்.

121 பாபா, மிக்க மரியாதை தொனிக்க, 'படே மியாஃ என்று உரக்கக் கூப்பிடுவார். இக்குரலைக் கேட்டவுடனே படே பாபா வணக்கம் தெரிவித்துக்கொண்டே படியேறி வருவார்.

122 எக்காரணமுமின்றி அன்னத்திற்குப் புறங்காட்டிக் கோபப்பட்டு வெளியேறியவருக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கிறது? அன்னத்தை அவமானம் செய்தவருக்கு சன்மானம் எதற்கு?

123 ஆயினும், இதுவும் மக்களுக்கு போதனையளிப்பதற்காகவே தாமே முன்மாதிரியாக இருந்து, பாபாவால் செய்துகாட்டப்பட்டது. அதிதியை (விருந்தாளியை) அழைக்காமல் உணவுண்பது என்பது நற்செயல் அன்று, என்பதை பாபா செய்முறையால் மற்றவர்களுக்கு உணர்த்தினார்.

124 எந்த ஆபத்தும் வாராமல் தடுத்துக் காப்பாற்றக்கூடிய இந்த சாஸ்திர விதி இல்லறத்தாருக்கே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும், இந்த விதியை பாபா எந்நாளும் மீறியதில்லை; குற்றமேற்படாத வகையில் அனுசரித்தார்.

125 அதிதிகளை வணக்கமாகவும் மரியாதையுடனும் நடத்துவதால் இஷ்டப்பட்டவை கிடைக்கின்றன; விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் விலகுகின்றன. அதிதிகளைப் புறக்கணித்தால் தீமை விளையும். ஆகையினால், நல்லொழுக்கமுடைய மேன்மக்கள் அதிதிகளை தேவர்களாகக் கருதிப் பூஜை செய்கின்றனர்.

126 அதிதிக்குப் போஜனமளிக்காது விட்டுவிடுவது, பசு, புத்திரன், தனம், தானியம் இவற்றின் நாசத்திற்கு அறிகுறியாகும். அதிதியைப் பட்டினிகிடக்க விடுவது, கெடுதல்களுக்கு அழைப்பு விடுவதாகும்.

127 ஸாயீ பாபா தினமும் படே பாபாவுக்கு ஐம்பது ரூபாய் தக்ஷிணை கொடுத்து அவர் பிரிந்து செல்லும்போது நூறு அடிகள் அவருடன்கூட நடந்து செல்வார்.

128 இந்த படே பாபாவின் வாயி­ருந்துதான், ஆட்டுக்கடாவை வெட்டச் சொன்னபோது, ''காரணமில்லாமல் எதற்காகக் கொல்ல வேண்டும்ஃஃ என்ற சால்ஜாப்பு பளிச்சென்று வெளிவந்தது.

129 மாதவராவும் அப்பொழுது அங்கே இருந்தார். ஆகவே, பாபா அவருக்கு ஆணையிட்டார், ''சாமா, நீயாவது சடுதியாகச் சென்று ஆட்டை வெட்டுவதற்கு ஒரு கொடுவாளைக் கொண்டு வா; சீக்கிரமாகப் போ.ஃஃ

130 பயமில்லாத பக்தராகிய சாமா, ராதாகிருஷ்ணபாயியிடமிருந்து ஒரு கத்தியை வாங்கிக்கொண்டுவந்து பாபாவின் எதிரில் வைத்தார்.

131 வெட்டுக்கத்தியைக் கொண்டுவருவதென்பது மாதவராவுக்கு மனவேதனையளிக்கும் செயல்தான். ஆயினும், மாதவராவ் வெறுங்கையுடன் திரும்பிவருவதை பாபா விரும்பியிருக்கமாட்டார்.

132 இதனிடையே, செய்தி ராதாகிருஷ்ணபாயியின் செவிகளை எட்டியது. அவர் தயையால் உந்தப்பட்டுக் கத்தியை உடனே திரும்பப் பெற்றுக்கொண்டார்.

133 மாதவராவ் வேறொரு கத்தி கொண்டுவருவதற்காக மறுபடியும் கிளம்பினார். ஆனால், தம் கையால் ஆடு கொல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காக, இம்முறை வாடாவில் கொஞ்சநேரம் தலைமறைவாக உட்கார்ந்து தாமதம் செய்தார்.

134 காகாவின் மனத்தை சோதிப்பதற்காக பாபா அவருக்கு ஆணையிட்டார், ''போங்கள், ஆட்டை வெட்டுவதற்கு ஒரு வெட்டுக்கத்தி கொண்டு வாருங்கள். வேதனையி­ருந்தும் வ­யி­ருந்தும் ஆட்டிற்கு முக்தி அளித்துவிடுங்கள்.ஃஃ

135 காகா (ஹரி ஸீதாராம் தீக்ஷீதர்) சொக்கத்தங்கம் என்பது பாபாவுக்கு நன்கு தெரியும். ஆயினும் புடம்போட்டு எடுக்காவிட்டால் மக்கள் நம்பமாட்டார்களேõ

136 உரைகல்­ல் தேய்த்தும் திராவகம் ஊற்றியும் பரீட்சை செய்யாது, சொக்கத்தங்கமா, தாமிரம் கலந்த மட்டத் தங்கமா என்பதை எப்படி அறிவது? துருவிப் பார்த்துப் பகுத்துணரும் மக்கள் இது விஷயத்தில் பிறர் கூற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டார்களேõ

137 வைரமும் ஒளி பெறுவதற்காகச் சுத்தியடியையும் சாணைக்கல்­ல் உரசலையும் சகித்துக்கொண்டே ஆகவேண்டும். தெய்வத்தின் உருவச்சிலையும் உளிவெட்டுப் பட்டுத்தான் ஆகவேண்டும்.

138 கழுத்தைச் சுற்றி அணியும் தாயித்தைப் போன்று, காகா விலைமதிப்பற்றவர் என்பதில் ஐயம் ஏதுமில்லை. ஆயினும், இதை மற்றவர்கள் ஒப்புக்கொள்ளும்படி செய்வது எவ்வாறு? இரத்தினக்கலை வல்லுநர் வைரத்தையும் நூ­ல் கட்டி அக்கினிப் பரீட்சை செய்கிறார் அல்லரோ?

139 ஞானிகளின் திருவாய்மொழியை விகற்பமாகப் பார்ப்பவர்களுக்கு எந்த சங்கற்பமும் நிறைவேறாது. சங்கற்பம் சக்தியில்லாததும் பலனளிக்காததுமான பிதற்றலாகவே முடியும். ஆன்மீக முன்னேற்றம் சொற்பமாகக்கூடக் கிடைக்காது.

140 குருவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ, அவர் இகத்திலும் பரத்திலும் நலம் பெறுவார். எவர் அதில் தோஷமும் குதர்க்கமும் காண்கிறாரோ, அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார்.

141 எந்நேரமும் குருசேவை செய்வதிலேயே கண்ணாக இருப்பவர், குருவின் ஆணைக்குக் கீழ்ப்படிபவர், இஷ்டமான செயலா/அனிஷ்டமான செயலா என்பதுபற்றிய விசாரத்தையெல்லாம் குருவின் தலைச்சுமைக்கு விட்டுவிடுகிறார்.

142 குருவின் ஆணைக்கு அவர் அடிமை; சுதந்திரமான கருத்தென்பது அவருக்கு இல்லை. குருவின் வசனத்தை எந்நேரமும் பரிபாலனம் செய்யும் ஆர்வத்தில், நல்லதா/கெட்டதா என்ற ஆராய்ச்சியும் அவருக்கு இல்லை.

143 சிந்தனையை ஸாயீயின் நினைவில் வைத்து, கண்கள் ஸமர்த்த ஸாயீயின் பாதங்களில் நிலைபெற்று, மனம் ஸாயீ தியானத்திலேயே ஈடுபடுபவருடைய தேஹம் முழுவதும் ஸாயீயின் சேவைக்கு அர்ப்பணமாகிறது.

144 குருவின் ஆணைக்கும் அதை நிறைவேற்றுவதற்கும் இடையே ஒரு கணநேரத் தாமதம் ஏற்பட்டாலும் அதை அவரால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. என்னே விந்தை இச் செயல்பாடுõ

145 தீட்சிதர் (காகா) மிகத் தூய்மையான ஸத்வகுணம் படைத்தவர். தீரத்திலும் திடமான செயலாக்கத்திலும் மேருமலைக்கொப்பானவர். உயிருடன் இருக்கும் ஆட்டுக்கடாவை எப்படிக் கொல்வது என்ற சந்தேகம் அவரைத் தொடவேயில்லை.

146 நிரபராதியான வெள்ளாட்டுக்கடா மரணமடையும்; அதனுடைய ஆத்மா துடிதுடிக்கும். மஹாபாவத்தைச் செய்வதால் என்னுடைய தூய்மையான கீர்த்தி கறைபடும்.--

147 இவ்வெண்ணங்கள் அவர் மனத்தில் எழவேயில்லைõ குருவின் ஆணையை பங்கம் செய்வதே மிகப் பெரிய பாவம். உடனே கீழ்ப்பணிந்து செயல்படுதலைவிடப் புண்ணியம் வேறெதுவுமில்லை.

148 காகாவினுடைய இளகிய இதயம் குருவின் ஆணையைப் பிரமாணமாக ஏற்றுக்கொண்டு ஆட்டைக் கொல்லத் தீர்மானித்தபோது அவருடைய பிராணனே நடுங்கியது.

149 பிறகு அவர் பாபாவின் ஆணையின்படி ஸாடே வாடாவுக்குச் சென்று ஆயுதத்தைக் கொண்டுவந்தார். எள்ளளவும் பிசகாதவாறு ஆட்டுக்கடாவைக் கொல்லத் தம்மைத் தயார் செய்துகொண்டார்.

150 குருவாக்கிய பரிபாலனம் வீரலட்சுமியை அளித்தது. ஆயுதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு மனத்தைத் திடம் செய்துகொண்டார்.

151 நிர்மலமான பிராமண வம்சத்தில் பிறந்து, பிறந்ததி­ருந்தே அஹிம்சையைக் கடைப்பிடித்தவருக்கு, அடடாõ என்ன இக்கட்டான நிலைமை இதுõ கொலை செய்யக் கை எவ்வாறு ஓங்கும்?

152 குருவின் ஆணையைப் பரிபாலனம் செய்வதில் அதைரியத்திற்கு இடம் கொடாமல் மனத்தை ஒருவழியாக திடம் செய்துகொண்டார். ஆயினும் இதயம் படபடவென்று துடித்தது; உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது.

153 எண்ணத்தாலோ சொல்லாலோ செயலாலோ ஹிம்சையை ஒருபொழுதும் செய்யாதவர், கொடுவாளை எடுத்து ஆட்டை வெட்டுவதாõ துரதிருஷ்டமே உருவெடுத்து வந்ததோ?

154 குருவின் வசனத்தை அவமானம் செய்பவர்கள் பூர்வ புண்ணியங்கள் அனைத்தையும் நிச்சயமாகப் பறிகொடுத்துவிடுவார்கள்.

155 ஆபரணங்களிலெல்லாம் சிறந்த ஆபரணம் குருவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதே. நல்ல சிஷ்யனுக்கு அடையாளம் இதுவே. குருவின் ஆணையை மீறுவது மஹாபாவமாகும்.

156 குருவின் ஆணையை ஒரு கணமும் தாமதியாது நிறைவேற்ற வேண்டும். சந்தேகிப்பவரும் இழுத்தடிப்பவரும் ஈனர்கள்; பார்க்கப்போனால், அவர்கள் வா­ல்லாத இருகால் மிருகங்கள்.

157 குருவின் ஆணையை நிறைவேற்ற முகூர்த்தம் பார்க்கவேண்டியதில்லை. சுபம்/அசுபம், உடனே செய்தல்/தள்ளிப் போடுதல், என்ற கேள்விக்கெல்லாம் இங்கு இடமே இல்லை. உடனே ஆணையை நிறைவேற்றுபவன் சான்றோன்; நீளமாக நூல் இழுப்பவன் (தாமதிப்பவன்) துர்ப்பாக்கியசா­.

158 வேட்டியின் நுனியை ஒரு கையால் இடுப்பில் செருகிக்கொண்டு இன்னொரு கையில் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஆடு இருந்த இடத்திற்குச் சென்றவாறே சட்டையின் கைகளை மடித்துவிட்டுக்கொண்டார் (காகா).

159 கிராமமக்கள் ஆச்சரியமடைந்தனர், ''இதென்ன, உலகம் விரும்பாத செயல்õ காகாவின் இளகிய மனம் எங்கு ஓடி மறைந்தது?--

160 ''முஸ்லீமும் மாமிச உணவு சாப்பிடுபவருமாகிய பக்கீர் பாபா, இம்சைப்படும் ஆட்டின்மேல் கத்தி ஓங்க மறுத்துவிட்டார்; அக் காரியத்தைச் செய்யக் காகா தயாராகிவிட்டாரேõஃஃ

161 உலகின் உத்தமர்கள் செயல்புரிவதில் இந்திரனுடைய வஜ்ராயுதத்தைவிட உறுதியானவர்கள்; இதயத்திலோ மலரினும் மென்மையானவர்கள்õ

162 வெட்டுவதற்காக ஓங்கிய ஆயுதத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு காகா கேட்டார், ''பாபா, ஒரே ஒரு முறை கேட்கிறேன்; இந்த ஆட்டை வெட்டிவிடட்டுமாõஃஃ

163 இன்னல் படுபவர்களையும் எளியவர்களையும் காப்பதற்குண்டான இவ்வாயுதத்தை நிரபராதியான ஆட்டைக் கொல்லவா உபயோகிக்க வேண்டும்? மறுபக்கம் பார்த்தால், குருசேவையில் உயிரையே வைத்திருக்கிறோமே? சிறிய சந்தேகம் எழுவது இயற்கையன்றோõ

164 ஆட்டை வெட்டும் செயலை எவ்வளவு சீக்கிரமாகச் செய்யமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாகச் செய்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருப்பினும், திடீரென்று அவருடைய மனம் உருகி, ஆயுதத்தைப் பிடித்துக்கொண் டிருந்த கை நடுங்கிப் பின்வாங்கியது; மறுபடியும் முன்னேற மறுத்ததுõ

165 ''ஹூம்õ வெட்டும்õ ஏன் தயங்குகிறீர்?ஃஃ இந்த முடிவான ஆணையைக் கேட்டவுடன் ஆவேசமாக வெட்டுவதற்காகக் காகா ஓர் அரைவட்டம் சுற்றினார்.

166 ஆயுதம் ஏந்திய கையைக் காகா உயர்த்தினார்; ஆட்டுக்கடாவுக்கு வேளை வந்துவிட்டது. ஆயினும் கடாவைக் காக்க இறைவன் கடைசிக் கணத்தில் ஓடோடி வந்தான்õ

167 தீட்சிதர் எக்கணமும் வெட்டலாம் என்பதை நிச்சயமாகத் தெரிந்துகொண்ட ஸாயீமாதா, ஒரு கணம் தாமதித்தாலும் அசம்பாவிதம் நேருமென அறிந்து, திடீரென்று சொன்னார், ''ஓ, விட்டுவிடும், விட்டுவிடும்õ--

168 ''காகாõ வேண்டா, வேண்டாõ திரும்பிவிடும்õ ஒரு பிராமணராகிய நீர் ஆட்டை வெட்ட விரும்புகிறீரா? உமது மனத்தில் பரிவு என்பதே இல்லையா?ஃஃ

169 இதைக் கேட்டவுடன் காகா ஆயுதத்தைக் கீழே போட்டார். கூடியிருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஆட்டுக்கடா உயிர் தப்பியது; குருபக்தி சிகரத்தை எட்டியதுõ

170 கத்தியைக் கீழே போட்டுவிட்டுக் காகா என்ன கூறினார் என்பதை கவனமாகக் கேளுங்கள். ''பாபா, தங்களுடைய அமுதமொழியே எங்களுக்கு தருமசாஸ்திரம்.--

171 ''அதை விடுத்து வேறெந்த தருமநெறியும் எங்களுக்குத் தெரியாது. இது விஷயமாக எங்களுக்கு வெட்கமோ அவமானமோ சிறிதும் இல்லை. குருவசன பரிபாலனமே எங்கள் வாழ்வின் சாரம்; அதுவே எங்களுடைய ஆகமம்.--

172 ''குருவின் ஆணையை நிறைவேற்றுவதில்தான் சிஷ்யனுடைய சிஷ்யத்தன்மையே இருக்கிறது. அதுவே எங்களுக்கு ஆபரணம். ஆணையை எவ்விதமாக அவமதித்தாலும் அது இழுக்காகும்.--

173 ''சுகத்தைக் கொடுக்குமா, கஷ்டத்தைக் கொடுக்குமா என்கிற விளைவைப்பற்றிய பார்வையே எங்களுக்கு இல்லை. நடப்பதெல்லாம் விதிப்படியே நடக்கும்; அதை இறைவனிடம் விட்டுவிடுகிறோம். --

174 ''எங்களுக்கு ஒன்றுதான் தெரியும். எந்நேரமும் தங்களுடைய நாமத்தை மனத்தில் இருத்துதல், தங்களுடைய தெய்வீகமான தோற்றத்தைக் கண்களில் நிலைபெறச் செய்தல், இரவு பகலாகத் தங்களுடைய ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடத்தல் (ஆகியவையே).--

175 ''ஹிம்ஸையோ அஹிம்ஸையோ எங்களுக்குத் தெரியாது; ஏனெனில் ஸத்குருவின் பாதங்களே எங்களுக்குத் தாரகம். ஆணை எதற்காக என்று கேட்பதறியோம்; அதன்படி நடக்கவேண்டியதே எங்களுடைய கடமை.--

176 ''குருவின் ஆணை தெளிவாக இருக்கும்போது, இது செய்யக்கூடிய செயலா, செய்யத்தகாத செயலா, இது இஷ்டமா, அனிஷ்டமா (பிரியமற்றதா) என்றெல்லாம் கேள்வி எழுப்பும் சிஷ்யன் கடமையி­ருந்து வீழ்ந்தவன் என்றே நான்
அறிகிறேன்.--

177 ''குருவின் ஆணையை மீறுவது என்பது ஒரு ஜீவனின் வீழ்ந்த நிலையாகும். ஆணையை நிறைவேற்றுவது தருமசாஸ்திரத்தின் வழியில் ஒழுகுவதாகும்.--

178 ''குருபாதங்களிலேயே சித்தம் நிலைக்க வேண்டும்; பிராணன் இருந்தாலென்ன, போனாலென்ன? எங்களுக்கு குருவின் ஆணையே பிரமாணம். பரிணாமமாக ஏற்படப் போவதையும் கடைசியான முடிவையும் அவரே அறிவார்õ--

179 ''எங்களுக்கு அர்த்தம் எது, அனர்த்தம் எதுவெனத் தெரியாது. அதுபோலவே நமக்கு எது நன்மை, பிறருக்கு எது நன்மை என்பதும் தெரியாது. குருவின் காரியார்த்தமாகச் செயல்படவே தெரியும். எங்களைப் பொறுத்தவரை அதுவே ஆன்மீக லாபம்.--

180 ''குருவசனத்தின் எதிரில் விதிமுறைகளும் விலக்குகளும் தடைகளும் வியர்த்தமாகப் போகின்றன. சிஷ்யனுடைய லட்சியம் குரு ஏவிய பணியைச் செய்வதே; அதனால் எற்படும் சங்கடங்கள் அனைத்தும் குருமாதாவினுடையது.ஃஃ --

181 ''நாங்கள் தங்களுடைய ஆணைக்கு அடிமைகள். யோக்கியமான செயலா, அயோக்கியமான செயலா என்று கேள்வி எழுப்பமாட்டோம். தேவையானால் உயிரையும் கொடுத்து குருவின் ஏவலை நிறைவேற்றுவோம்.ஃஃ

182 சுபாவத்தில் தயை மிகுந்த இதயம் திடீரெனக் கல்லாகிறதுõ ஒரு முஸ்லீம் செய்ய விரும்பாத செயலை, பிராமணர் ஒருவர் செய்யத் தயாராக இருக்கின்றார்õ

183 கேட்பவர்கள் நம்புவதற்குத் தயங்கும் விஷயம் இது. ஆனால், இந்தப் பரம இரகசியம் குருவினுடையது. ஒருமுறை குருவசனத்திற்கு அடிமை செய்யுங்கள்; இந்த இரகசியம் பளிச்சென்று விளங்கிவிடும்.

184 பக்தன் ஒருமுறை பூரண விசுவாசத்துடன் குருவின் பாதங்களில் புக­டம் தேடி தன்னை ஏற்றுக் காப்பாற்றும்படி வேண்டினால், குரு அவனுடைய பாரத்தை ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகு அவன் செய்யவேண்டியது ஏதுமில்லை.

185 எல்லாவற்றையும் குருவின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டவருக்கு பயமென்பதே இல்லை. குரு அவருக்குத் தன்னம்பிக்கையை அளித்து அக்கரை சேர்ப்பார்.

186 சிஷ்யர்கள் மூன்று வகைப்படுவர்; உத்தமர், மத்திமர், அதமர். ஒவ்வொரு வகையினரையும் சுருக்கமாக விவரிக்கிறேன்.

187 குரு என்ன விரும்புகிறார் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டு, அவர் வாய்திறந்து சொல்வதற்கு முன்பே சேவையை ஆரம்பித்துச் செய்பவனை உத்தம சிஷ்யன் என்று அறிக.

188 குருவின் ஆணையை அட்சர சுத்தமாகத் தெரிந்துகொண்டு, காலங்கடத்தாது உடனே சேவையில் ஈடுபடுபவனை மத்திம சிஷ்யன் என்று அறிக.

189 குரு திரும்பத் திரும்பச் சொன்னபிறகும், செய்கிறேன், செய்கிறேன் என்று சொல்­க்கொண்டு, ஒவ்வொரு படியிலும் தடுக்கி விழுபவனை அதம சிஷ்யன் என்று அறிக.

190 பரம வைராக்கியம் (ஆசையற்ற நிலை) மனத்துள்ளே இல்லை; எது நித்தியம் (சாசுவதம்), எது அநித்தியம் என்னும் விவேகமும் இல்லை. இம் மனிதருக்கு ஜன்மம் முழுவதும் தேடினாலும் குருவின் அருள் எப்படிக் கிடைக்கும்?

191 குருவின் பாதங்களில் நிரந்தரமாக மனத்தை இருத்தியவரின் இச்சைகளை இறைவன் பூர்த்திசெய்கிறான். பராத்பரன் (பரமேசுவரன்) அவரைச் சலனமில்லாதவராகவும் ஆசைகளி­ருந்து விடுபட்டவராகவும் மாற்றிவிடுகிறான்.

192 சிரத்தை நிர்மலமாகவும் பலமாகவும் இருக்கவேண்டும். கூடவே பிரக்ஞையின் (உள்ளுணர்வின்) பலமும் வேண்டும். இவையிரண்டுடன் ஸபூரியும் (ஆடாத, அசையாத தீரமும்) சேரவேண்டும். ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவது உறுதி.

193 மூச்சையடக்கும் முயற்சி இங்கே தேவையில்லை. பிராணாயாமம், ஹடயோகம், ஸமாதிநிலை, உலகவுணர்வுக்குத் திரும்புதல், இதெல்லாம் நம்மால் முடியாத காரியம்.

194 சிஷ்யனென்னும் பூமி தயாரானவுடன்குருவினிடமிருந்து விதையைப் பெற்றுக்கொள்ள அதிக நாள்கள் ஆவதில்லை. ஏனெனில், குரு அனுக்கிரஹம் செய்வதற்கென்றே ஆர்வத்துடன் காத்துக்கொண் டிருக்கிறார்.

195 உருவத்தோடுகூடிய இறைவனின் பிரத்யட்சமான காட்சியை உண்மையான பக்தர்களே காணமுடியும். பா(ஆஏஅ)வனை உள்ளவர்களுக்கே பக்தி பொங்கும்; மற்றவர்கள் பாஷாண்ட (நடிப்பு) யுக்தியைத்தான் கையாள வேண்டும்õ

196 பாபா பிறகு காகாவிடம் சொன்னார், ''இந்தக் குடுவை நீரைக் கையில் வைத்துக்கொள்ளும். நான் இப்பொழுது ஹலால்1 செய்து ஆட்டிற்கு நற்கதியளிக்கிறேன்.ஃஃ

197 ஆட்டுக்கடா மரணத்தறுவாயில் இருந்தது. பக்கீர் பாபாவுக்கு (படே பாபாவுக்கு) சமயோசிதமான யோசனை ஒன்று தோன்றியது. அருகில் ஒரு தகியா2 இருந்தது.

198 ஆகவே அவர், 'ஆட்டைத் தகியாவில் ப­யிடலாமா?ஃ என்று பாபாவை யோசனை கேட்டார். பாபாவிடம் அனுமதி பெற்றபின், ஆட்டைத் தகியாவுக்குக் கொண்டுபோகும் முயற்சியில் அவ்விடத்தி­ருந்து நடத்தியபோது ஆடு இயற்கையாகவே மரணமடைந்தது.

199 ஆடு மரணமடைவது தவிர்க்கமுடியாதது என்பது சகலருக்கும் தெரிந்திருந்தது. ஆயினும் அந்த வேளையை உபயோகித்து பாபா ஒரு லீலை புரிந்தார்.

200 ஸத்குருவிடம் சரணடைந்தவர்கள் அவருடன் ஒன்றிவிடுவர். உப்புப்பொம்மை சமுத்திரத்தில் குளிக்கச் சென்றால் திரும்பி வருமோõ

201 ஜீவாத்மா உலகத்தின் சுக துக்கங்களை அனுபவிக்கிறது. உலக போகத்தை அளிப்பவன் இறைவனேயாயினும், மோட்சத்தை அளிக்க வல்லவர் ஸத்குருவே. அவரே ஆத்மாக்களை ஒன்றுபடுத்தும் சக்தியின் களஞ்சியம்.

202 ஒரே சமயத்தில் சகலவிதமான சிருஷ்டிகளையும் பார்க்கக்கூடிய தெய்வ திருஷ்டியை (பார்வையை)க் கிருபை ஏற்படும்போது குரு வழங்குவார்.

203 ஹேமாட் ஸாயீயை சரணடைகின்றேன்; தேஹாபிமானத்தை ஸாயீ பாதங்களில் ஒப்படைத்துவிடுகிறேன். எப்பொழுதும் என்னை மனவொன்றிப்பு உடையவனாகவும் ஆசைகளி­ருந்து விடுபட்டவனாகவும் வைத்திருக்கும்படி இதயபூர்வமாகப் பிரார்த்திக்கிறேன்.

204 அடுத்த இரண்டு அத்தியாயங்களில் ஸாயீ மஹராஜ் ஹாஸ்யமும் பரிஹாஸமும் நிரம்பிய விருந்தை அளிப்பார். அவருடைய அற்புதமான லீலைகளைக் கேளுங்கள்.

205 லீலைகள், மேலெழுந்த பார்வைக்கு விநோதமாகவும் நகைச்சுவை மிகுந்ததாகவும் தெரிந்தாலும், சிறந்த போதனை அளிக்கக்கூடியவை. பா(ஆஏஅ)வமுள்ள பக்தர் கவனத்துடன் அதைப் பாராயணம் செய்தால் பரம சுகங்களை அடைவார்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'பக்தர்களின்பால் லீலைகள்ஃ என்னும் இருபத்துமூன்றாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.