Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 36

36. எங்கும் நிறைந்த ஸாயீ -ஆசிகள் நிறைவேறுதல்




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டதை நிறைவேற்றும் வகையில் ஒரு திருடு பற்றிய ரம்மியமான கதையை விவரிக்கிறேன்; ஆசுவாசமாகக் கேளுங்கள்.

2 இது வெறும் கதையன்று; ஆத்மானந்த தீர்த்தம். குடித்தால், மேலும் குடிக்க வேண்டுமென்கிற ஆவல் பெருகும். அதைத் தணிக்க இன்னும் ஒரு கதை சொல்லப்படும்õ

3 ரஸமான இக் கதையைக் கேட்பவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். சம்சாரக் கட­ன் சிரமங்கள் நிவாரணமடையும். சாந்தியும் சந்தோஷமும் நிலவும்.

4 தன்னுடைய நல்வாழ்வை விரும்பும் பாக்கியசா­யான மனிதன், ஸாயீயின் கதைகள் சொல்லப்படும்போது பயபக்தியுடன் கேட்கவேண்டும்.

5 ஞானிகளின் மஹிமை அளவிடற்கரியது; எவராலும் முழுமையாக விவரிக்க முடியாதது. நிலைமை இவ்வாறிருக்க, என்னுடைய புலமை எந்த மூலைக்குப் போதுமானது? இதை நான் நன்கு அறிந்திருக்கிறேன்.

6 கதை சொல்பவரின் இந்தச் சிறிய 'நான்ஃ எனும் எண்ணமே ஸாயீக்குப் போதுமானது. கதை சொல்பவரின் கையை லாவகமாகப் பிடித்துக்கொண்டு பக்தர்களின் நன்மை கருதித் தம்முடைய உன்னதமான குணங்களை எழுதவைத்துவிடுகிறார்.

7 அவர் முழுமுதற்பொருளாகிய நீர்நிலையில் பிரம்ம ரூப முத்துகளை1 உண்ண விரும்பும் அன்னப்பறவை. 'நானே அவன்; அவனே நான்ஃ என்ற நிலையில் மூழ்கியிருப்பது மட்டுமல்லாமல் ஒப்பற்ற சாகசங்களும் புரிபவர்.

8 ஊரும் பெயரும் இல்லாத ஸாயீ அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர். கடைக்கண்பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்õ

9 தத்துவஞானத்தின் அவதாரமான ஸாயீ தாம் பெற்ற இறையனுபவத்தை மக்களுக்குக் காட்சிகள் அளிப்பதன் மூலமும் நிகழ்ச்சிகளை உண்டுபண்ணுவதன் மூலமும் அளிக்கிறார். அதேசமயம் எந்த விஷயத்திலும் சம்பந்தப்படாதவர்போல் தோன்றுகிறார்.

10 அவர் எவர்களுக்கெல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடமெல்லாம் பலவிதமான மாறுவேஷங்களில் தோன்றுகிறார். கணக்கற்ற அற்புதங்களைத் திட்டமிட்டு நிறைவேற்றுகிறார்.

11 அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவர்களுடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்.

12 அவருடைய கதைகளில் அவருக்கு விருப்பம் அதிகம். அனவரதமும் (எப்பொழுதும்) என்னைத் தூண்டிவிட்டு, என்னையும் கதைகேட்பவர்களையும் நிமித்த காரணமாக (கருவியாக) வைத்துத் தம் பக்தர்களின் மனோரதங்களைப் பூர்த்திசெய்கிறார்.

13 பரமார்த்த வாழ்வில் பூரணமான அபிமானம் கொண்டு இவ்வுலக வாழ்வி­ருந்து முழுமையாகத் துறவேற்று, சக்ரதாரியாகிய மஹாவிஷ்ணுவின் பிரியத்தை வென்ற ஸாயீ, எண்ணற்ற பிராணிகளை உத்தாரணம் செய்திருக்கிறார்.

14 எவர் இந் நாட்டிலும் (மஹாராஷ்டிரம்) வெளிநாடுகளிலும் தொழப்படுகிறாரோ, எவருடைய பக்திக்கொடி வானளாவிப் பறக்கிறதோ, அவர் தீனர்களையும் பலஹீனர்களையும் தம்மிடம் அழைத்து அவர்கள் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார்.

15 இப்பொழுது பரம பவித்திரமான இந்த ஸாயீ சரித்திரத்தைக் கேளுங்கள். கேட்பவர்களுடைய செவிகளும் சொல்பவருடைய வாயும் பரிசுத்தமடையட்டும்.

16 ஒரு சமயம் கோவாவி­ருந்து இரண்டு இல்லறத்தோர் ஸாயீ தரிசனத்திற்காக வந்திருந்தனர். இருவரும் ஸாயீபாதங்களில் வணங்கி தரிசனத்தால் ஆனந்தமடைந்தனர்.

17 அவர்கள் இருவரும் சேர்ந்தே வந்திருந்தபோதிலும், ஸாயீ அவர்களில் ஒருவரை மட்டும், ''எனக்குப் பதினைந்து ரூபாய் தக்ஷிணை கொடும்ஃஃ என்று கேட்டார். அவரும் சந்தோஷமாகக் கொடுத்தார்.

18 மற்றவர், ஸாயீ எதையும் கேட்காதபோதிலும், தாமாகவே முன்வந்து முப்பத்தைந்து ரூபாய் தக்ஷிணை கொடுக்க முயன்றார். ஸாயீ உடனே அதை நிராகரித்துவிட்டார். கொடுக்க முயன்றவர் மிக ஆச்சரியமடைந்தார்.

19 அந்த சமயத்தில் மாதவராவும் அங்கிருந்தார். இதை ஓர் இசைவற்ற செயலாகப் புரிந்துகொண்டு அவர் பாபாவிடம் என்ன கேட்டார் என்பதைக் கேளுங்கள்.

20 ''பாபா, நீங்கள் எப்படி இவ்வாறு செய்யலாம்? இரண்டு சிநேகிதர்கள் சேர்ந்தே வந்திருக்கும்போது நீங்கள் தக்ஷிணையை ஒருவரிடமிருந்து கேட்டு வாங்குகிறீர்கள். மற்றவர் அவராகவே மனமுவந்து கொடுத்த தக்ஷிணையை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டீர்கள்õ --

21 ''ஞானிகள் இம்மாதிரி விஷமம் செய்யலாமா? ஒருவரிடமிருந்து நீங்களே கேட்டு தக்ஷிணை வாங்கிக்கொண்டீர்கள். மற்றவர் தம்மிச்சையாகவே அளித்ததைத் திருப்பிக்கொடுத்து அவரை ஏமாற்றமடையச் செய்தீர்கள்.--

22 ''சிறிய தொகையை விரும்பி ஏற்றுக்கொண்டீர்கள்; பெரிய தொகையின்மீது ஆசை காட்டவில்லை. நான் உங்களுடைய ஸ்தானத்தில் (பதவியில்) இருந்திருந்தால் இந்த ரீதியில் செயல்பட்டிருக்கமாட்டேன்õஃஃ

23 ''சாம்யா (சாமா), உனக்குப் புரியவில்லைõ நானென்னவோ எதையும் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வதில்லை. கடனைத் திருப்பிக் கேட்பவள் இந்த மசூதிமாயீõ கொடுப்பவர் தம் கடனி­ருந்து விடுபடுகிறார்.--

24 ''எனக்கு என்ன வீடா, வாசலா, குடும்பமா, குழந்தையா? நான் ஏன் செல்வத்தை நாடவேண்டும்? எந்த வகையில் பார்த்தாலும் நான் விசாரமில்லாதவன்; தொல்லைகளற்றவன்.--

25 ''கடன், விரோதம், கொலைக்குற்றம் இவற்றி­ருந்து யுகமுடிவு பரியந்தம் முயன்றாலும் விடுபடமுடியாது. நீ இடர் வந்தபோது தேவிக்கு (ஸப்த சிருங்கி) நேர்ந்துகொண்டாய். உன்னை அதி­ருந்து விடுவிப்பதற்கு நான் படாதபாடு படவேண்டியிருந்தது.--

26 ''தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும் இரக்கமாகவும் கெஞ்சுகிறாய்; காரியம் கைகூடிய பிறகு அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படுவதில்லைõ என் பக்தர்களில் எவர் கடன் பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்õ--

27 ''ஆரம்பகாலத்தில் இந்த மனிதர் ஏழையாக இருந்தார். ரூ. 15/- சம்பளம் கிடைத்தால், முதல் சம்பளத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாக வேண்டிக்கொண்டார். ஆனால், பிறகு அதை அறவே மறந்துவிட்டார்õ--

28 ''பதினைந்து முப்பதாகி, முப்பது அறுபதாகி, அறுபது நூறாகியது. அவருடைய சம்பளம் இரண்டு மடங்காகவும் பின்பு நான்கு மடங்காகவும் ஆக ஆக, அவருடைய மறதியும் அதிகமாகியதுõ--

29 ''காலக்கிரமத்தில் அவர் ரூ. 700/- சம்பாதிக்க ஆரம்பித்தார். கர்மவசத்தால் (நல்வினைப்பயனால்) இன்று இங்கு வந்திருக்கிறார். ஆகவே, தக்ஷிணை என்ற பெயரில் அவரிடமிருந்து என்னுடைய பதினைந்து ரூபாயைக் கேட்டேன்.--

30 ''இப்பொழுது இரண்டாவது கதையைக் கேட்பாயாக. ஒரு காலத்தில் நான் சமுத்திரக் கரையோரமாகத் திரிந்துகொண் டிருந்தபோது ஒரு பெரிய மாளிகையைப் பார்த்தேன்; மாளிகையின் வராந்தாவில் உட்கார்ந்தேன்.--

31 ''அந்த மாளிகையின் யஜமானர் ஒரு பிராமணர்; நல்ல வம்சத்தில் பிறந்தவர்; பணக்காரர். அவர் என்னை அன்புடன் வரவேற்று யதேஷ்டமாக (நிரம்ப) அன்னமும் பானமும் அளித்தார்.--

32 ''அதன் பிறகு அதே இடத்தில், சுவரில் உள்ளடங்கிய அலமாரி இருந்த இடத்திற்கு அருகில், சுத்தமானதும் சுந்தரமானதுமான ஓரிடத்தில் என்னைத் தூங்குவதற்கு அனுமதித்தார். நான் அங்கே படுத்துத் தூங்கிவிட்டேன்.--

33 ''நான் ஆழ்ந்து தூங்குவதைப் பார்த்து, சுவரி­ருந்த நகரக்கூடிய கல் ஒன்றைப் பெயர்த்துவிட்டுத் திருடன் ஒருவன் உள்ளே புகுந்துவிட்டான். என்னுடைய பாக்கெட்டைக் கிழித்து என்னிடமிருந்த அனைத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.--

34 ''கண்விழித்து என்ன நடந்ததென்று தெரிந்துகொண்டபோது நான் கண்ணீர் விட்டு அழுதேன். நான் முப்பதாயிரம் ரூபாயை இழந்துவிட்டேன். என்னுடைய மனம் வருத்தம் நிறைந்து கலங்கியது.--

35 ''பணம் பூராவும் வங்கி நோட்டுகள். இந்த திடீர் இழப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சி என்னுடைய இதயத்தைத் தாக்கியது. மாளிகையின் யஜமானராகிய பிராமணர் எனக்கு ஆறுதல் சொன்னார்.--

36 ''எனக்கு அன்னமும் பானமும் ஏற்கவில்லை. பதினைந்து நாள்கள் நான் வராந்தாவில் ஒரே இடத்தில் பித்துப்பிடித்தது போலப் பரிதாபகரமாக உட்கார்ந்திருந்தேன்.--

37 ''பதினைந்தாவது நாள் முடியும்போது, எதிர்பாராமல் ஒரு பக்கீர் மறைபொருள் கொண்ட சித்தர் பாடல்களைப் பாடிக்கொண்டு தெருவழியே சென்றார். நான் அழுதுகொண் டிருந்ததைப் பார்த்தார்.--

38 ''என்னுடைய துக்கத்திற்குக் காரணமென்ன என்று கேட்டார். நான் நடந்ததையெல்லாம் விவரமாகச் சொன்னேன். பக்கீர் சொன்னார், 'நான் சொல்கிறபடி நீர் செய்தால் நிவாரணம் கிடைக்கும்.--

39 '''நான் ஒரு பக்கீரைப்பற்றியும் அவர் இருக்குமிடம் ஆகிய விவரங்களையும் சொல்கிறேன். நீர் அவரிடம் முழுமையாக சரணடைந்துவிடும். அவர் உம்முடைய செல்வம் திரும்பிவந்துசேரும்படி செய்வார்.--

40 '''ஆனால், வேண்டுதல் நிறைவேறும்வரை நான் சொல்லும் விரதமொன்றை நீர் அனுஷ்டிக்க வேண்டும். உமக்கு மிகவும் பிடித்தமான உணவுப்பண்டத்தை விட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்தால் உமக்குக் காரியசித்தி ஆகும்.ஃ--

41 ''அவருடைய அறிவுரையைக் கேட்டு நான் அவர் குறிப்பிட்ட பக்கீரைச் சந்தித்தேன். இழந்த என் செல்வத்தைத் திரும்பப் பெற்றேன். பின்னர் நான் அந்த மாளிகையை விடுத்து, முன்போலவே சமுத்திரக்கரையோடு சென்றேன்.--

42 ''அலைந்து திரிந்துகொண்டே சென்று கடைசியில் ஒரு கப்பலை அடைந்தேன். ஆனால், உள்ளே புக முடியவில்லை. ஆயினும், நல்ல சுபாவமுள்ள சிப்பாய் ஒருவர் எனக்கு எப்படியோ கப்ப­ல் ஓர் இடம் பிடித்துக்கொடுத்தார். --

43 ''தெய்வபலத்தால் காற்று அனுகூலமாக வீசியது; கப்பல் நேரத்தோடு அக்கரை சேர்ந்தது. பின்னர் நான் ஒரு குதிரைவண்டி பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். இந்தக் கண்களால் மசூதிமாயீயைப் பார்த்தேன்.ஃஃ

44 பாபா சொன்ன கதை இங்கு முடிந்தது. கோவா விருந்தாளிகளை வீட்டிற்கு அழைத்துச்சென்று உணவளிக்கும்படி சாமாவுக்கு பாபா ஆணையிட்டார்.

45 தட்டுகள் வைக்கப்பட்டன. சாப்பிட உட்காரும்போது மாதவராவுக்கு ஆர்வம் எழும்பியது. விருந்தாளிகளை அவர் கேட்டார், ''பாபா சொன்ன கதைகள் உங்களுக்குப் பாடம் ஆயிற்றா?--

46 ''உண்மையைச் சொல்லப்போனால், ஸாயீ பாபா இந்த இடத்தில் பல வருடங்களாக நிலைபெற்றவர். அவர் சமுத்திரத்தையோ கப்பலையோ சிப்பாயையோ அறிய மாட்டார்.--

47 ''ஓ, பிராமணரென்ன, மாளிகையென்னõ ஜன்மம் பூராவும் ஒரு மரத்தடியில் கழித்தவர் அவர். திருடன் கொண்டுபோன செல்வமெல்லாம் எங்கிருந்து வந்தது?--

48 ''ஆகவே, இந்த நிகழ்ச்சிகள் ஆரம்பகாலத்தில் உங்களுடைய வாழ்க்கையில் நடைபெற்றனவாகத்தான் இருக்கவேண்டும். இக் கதையை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில், நீங்கள் வந்தவுடனே பாபா கதையை ஆரம்பித்தார் என்று தோன்றுகிறது.ஃஃ

49 விருந்தாளிகள் உணர்ச்சிவசப்பட்டுத் தொண்டை அடைக்கக் கூறினார், ''ஸாயீ எல்லாம் அறிந்தவர்; பர பிரம்ம அவதாரம்; இரட்டைச் சுழல்களி­ருந்து விடுபட்டவர்; இறைவனோடு ஒன்றியவர்; பேதமேதுமில்லாதவர்; எங்கும் நிறைந்தவர்.--

50 ''அவர் இப்பொழுது சொன்ன கதை எழுத்துக்கு எழுத்து எங்களுடையது. போஜனம் முடிந்த பிறகு உங்களுக்கு விஸ்தாரமாகச் சொல்கிறோம்.--

51 ''பாபா சொன்ன அத்தனை நிகழ்ச்சிகளும் எங்கள் வாழ்வில் நடந்தவை. எங்களை முன்பின் பாராதவருக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது? ஆகவே இவையனைத்தும் அதிசயமேõஃஃ

52 உணவுண்ட பிறகு மாதவராவுடன் வெற்றிலைபாக்கு சுவைத்துக்கொண் டிருந்தபோது விவரணம் ஆரம்பித்தது.

53 ஒருவர் சொன்னார், ''என்னுடைய ஆதி குடியிருப்பு ஸஹயாத்ரி மலைத்தொடரில் இருக்கிறது. ஆனால், பிழைக்கும் வழி விஷயத்தில் சமுத்திரக்கரைக்குத் தொடர்பு இருந்திருக்க வேண்டும்.--

54 ''ஆகவே நான் ஏதாவது வேலை கிடைக்குமென்று நினைத்து கோவாவுக்குச் சென்றேன். காரியசித்தி ஆகவேண்டுமென்று நான் தத்தாத்ரேயரை1 அத்தியந்தமான பயபக்தியுடன் ஆராதனை செய்தேன்; நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டேன்.--

55 ''நான் தத்தரின் பாதங்களில் விழுந்து வேண்டிக்கொண்டேன், 'இறைவாõ என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக எனக்கொரு வேலை தேவைப்படுகிறது. கிருபை செய்து எனக்கு ஒரு வேலை வாங்கிக்கொடுங்கள்.--

56 '''இன்றி­ருந்து சொற்ப அவகாசத்திற்குள் என்னுடைய வேண்டுகோள் நிறைவேறினால், முதல் மாதத்தில் எனக்கு என்ன கிடைக்கிறதோ அதை முழுவதுமாக உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்ஃ.--

57 ''பாக்கியவசமாக தத்தர் என்னுடைய பிரார்த்தனையை சீக்கிரமாகவே நிறைவேற்றி வைத்தார். அப்பொழுதி­ருந்து நான் மாதம் பதினைந்து ரூபாய் சம்பாதிக்க
ஆரம்பித்தேன்.--

58 ''பிறகு, ஸாயீ பாபா வர்ணனை செய்தவாறே எனக்குப் பதவி உயர்வுகள் பல கிடைத்தன. நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்ட விஷயத்தை எப்படியோ என் மனம் அடியோடு மறந்துவிட்டது. ஆகவே, அது இந்த ரீதியில் எனக்கு ஞாபகப்படுத்தப்பட்டது.--

59 ''அவர் தக்ஷிணை வாங்கிக்கொண்டார் என்று யாராவது நினைக்கலாம். அது தக்ஷிணை அன்று; என்னால் திருப்பிக் கொடுக்கப்பட்ட கடனேயாகும். தக்ஷிணை என்ற சாக்குப்போக்கில் என்னுடைய பழைய நேர்த்திக்கடன் எனக்கு ஞாபகப்படுத்தப்பட்டது.ஃஃ

60 தாத்பரியம் என்னவென்றால், ஸாயீ திரவியம் எதையும் யாசிப்பதில்லை; தம்முடைய நிஜமான பக்தர்களையும் யாசிக்க அனுமதித்ததில்லை. செல்வத்தை அவர் அனர்த்தமாகவே (கேடாகவே) கண்டார். பக்தர்களையும் பணமோகத்தி­ருந்து காப்பாற்றினார்.

61 சதா ஸாயீபாதங்களிலேயே மூழ்கியிருந்த மஹால்ஸாபதி என்ற பக்தர் சங்கடத்தில் உழன்றவாறே வறுமையில் காலந்தள்ளினார். ஸாயீ அவரைச் சிறிதளவும் செல்வம் சேர்க்க விடவில்லை.

62 தமக்கு தக்ஷிணை ரூபத்தில் வந்த பணத்தை ஸாயீ பல பேர்களுக்கு விநியோகம் செய்தார். ஆனால், வறுமையில் வாடிக்கொண்டிருந்த மஹால்ஸாபதிக்கு ஒருநாளும் ஒருபைசாவும் கொடுத்தாரில்லை.

63 ஸாயீ இவ்வளவு உதாரகுணமுள்ளவராக இருந்தபோதிலும், மஹால்ஸாபதி1 ஒருநாளும் அவர்முன் கெஞ்சிக் கையை நீட்டினாரில்லை. அவருடைய தன்மான உணர்வு போற்றுதற்குரியது.

64 அவருடைய செல்வநிலை எவ்வளவு தாழ்ந்திருந்ததோ, அவ்வளவு உயர்ந்திருந்தது அவருடைய துறவு மனப்பான்மை. சொற்ப வருமானத்திலேயே திருப்தி கண்டு அவர் வறுமையின் கஷ்டங்களை தைரியமாக வாழ்க்கையில் எதிர்கொண்டார்.

65 ஒருசமயம், ஹம்ஸராஜ் என்னும் பெயர்கொண்ட தயாளகுணமுள்ள வியாபாரி ஒருவர் மஹால்ஸாபதிக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென்று எண்ணம் கொண்டார்.

66 அவருடைய கொடிய வறுமையைக் கண்டு தம்மால் முடிந்த உதவியைச் செய்யவேண்டுமென்ற எண்ணம் ஹம்ஸராஜின் மனத்தில் உதித்தது.

67 மஹால்ஸாபதியின் வறுமை நன்கு தெரிந்திருந்தும் அவர் வேறு யாரிடமிருந்தும் உதவி பெறுவதை ஸாயீ அனுமதிக்கவில்லை. அவர் திரவியத்தை உதாசீனம் செய்வதையே ஸாயீநாதர் ஊக்குவித்தார்.

68 ஆகவே அந்த வியாபாரி என்ன செய்தாரென்றால், இந்த பக்தருக்காக மனம் இளகி, பாபாவின் தர்பார் நடந்துகொண் டிருந்தபோது, அனைவருடைய கண்களுக்கும் தெரியும்படி மஹால்ஸாபதியின் கைகளில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார்.

69 ''ஸாயீயின் அனுமதியின்றி நான் இதை ஏற்றுக்கொள்ளமுடியாதுஃஃ என்று சொல்­ மிகப் பணிவாக மஹால்ஸாபதி பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

70 சுயநலமில்லாத, செல்வத்தை நாடாத, ஆன்மீக ஏற்றத்தையே நாடிய, உடலாலும் உள்ளத்தாலும் ஸாயீபாதங்களை சரணடைந்துவிட்ட, பிரேமை மிகுந்த பக்தரை இங்கு நாம் பார்க்கிறோம்.

71 ஆகவே ஹம்ஸராஜ் ஸாயீயை அனுமதி வேண்டிக் கெஞ்சினார். ஆனால், மஹால்ஸாபதியை ஒரு பைசாவைக்கூடத் தொட ஸாயீ அனுமதிக்கவில்லை. ஸாயீ சொன்னார், ''என்னுடைய பக்தர் திரவியத்தைத் தேடமாட்டார். அவர் ஒருபொழுதும் செல்வத்தின் வைபவத்தில் மாட்டிக்கொள்ளமாட்டார்.ஃஃ

72 இப்பொழுது இரண்டாவது விருந்தாளி பேச ஆரம்பித்தார். ''நானும் என் சூசகத்தைப் புரிந்துகொண்டேன். மொத்த கதையையும் சொல்கிறேன்; கேளும். கேட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்.--

73 ''ஒரு பிராமணர் எனக்கு முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பணி செய்துவந்தார். அவர் அயராது உழைப்பவர்; நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். துரதிருஷ்டவசமாக அவருடைய புத்தி மயங்கியது. என்னுடைய பணத்தை அபகரித்தார்.--

74 ''என்னுடைய வீட்டில் சுவருக்குள் அடங்கிய அலமாரி ஒன்று இருந்தது. அவர் யாருக்கும் தெரியாமல் சுவரின் கற்களை மெதுவாக நகர்த்தி ஒரு துவாரம் செய்துகொண்டார்.--

75 ''பாபா முன்பு குறிப்பிட்ட அலமாரியின் பின்பக்கந்தான் அவர் துவாரம் செய்த இடம். அதற்காக, எல்லாரும் தூங்கிக்கொண் டிருந்தபோது சுவரின் கற்களை நகர்த்தினார்.--

76 ''பாபா, 'என்னுடைய பணம் திருடு போய்விட்டதுஃ என்று சொன்னாரல்லவா? அது முற்றிலும் உண்மை. ஒரு கற்றை ரூபாய் நோட்டு திருடப்பட்டது.--

77 ''அக் கற்றையின் மதிப்பு சரியாக முப்பதாயிரம் ரூபாய். பாபாவுக்கு இந்த விவரமெல்லாம் எப்படித் தெரிந்தது என்று எனக்கு விளங்கவில்லை. ஆனால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பறிபோனதைக் கண்டு நான் இரவுபகலாக அழுதுகொண் டிருந்தேன்.--

78 ''திருட்டைக் கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகளால் நான் களைப்படைந்தேன். மன உளைச்சலாலும் சோகத்தாலும் நான் நீர்ச்சுழ­ல் மாட்டிக்கொண்டவன்போல் பதினைந்து நாள்கள் அவஸ்தைப்பட்டேன். மீளும் வழி தெரியவில்லை.--

79 ''ஒருநாள் நான் மனமுடைந்தவனாய் வராந்தாவில் உட்கார்ந்திருந்தபோது, உரக்கக் கேள்விகளைக்1 கேட்டுக்கொண்டு ஒரு பக்கீர் வீதி வழியாக நடந்து வந்தார்.--

80 ''என்னுடைய சோகம் ததும்பிய முகத்தைப் பார்த்துவிட்டு சோகத்திற்குக் காரணம் என்னவென்று கேட்டார். நான் விவரமனைத்தையும் சொல்­முடித்த பிறகு நிவாரணம் பெறுவதற்கு அவர் ஓர் அறிவுரை அளித்தார்.--

81 '''கோபர்காங்வ் தாலுகாவிலுள்ள சிர்டீ என்னும் கிராமத்தில் ஸாயீ அவ­யா (முஸ்லீம் ஞானி) வாசம் செய்கிறார். அவரிடம் பிரார்த்தனை செய்துகொண்டு ஒரு நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ளும்.--

82 '''உமக்கு மிகவும் விருப்பமான உணவுப்பொருள் ஒன்றைச் சாப்பிடாமல் நிறுத்திவிடும். அவரை தரிசனம் செய்யும்வரை அதைச் சாப்பிடாமல் விட்டுவிடுவதாக அவரிடம் சொல்லும்.ஃ--

83 ''பக்கீர் என்னிடம் இதைச் சொன்னவுடன் ஒரு நிமிடமும் தாமதியாது நான் அரிசிச் சோற்றை விட்டுவிட்டேன். 'பாபா, என்னுடைய திருடுபோன பணம் திரும்பக் கிடைத்து, உங்களை தரிசனம் செய்த பிறகுதான் மறுபடியும் நான் அரிசிச் சோறு தின்பேன்ஃ என்று விரதம் எடுத்துக்கொண்டேன்.--

84 ''இதன் பிறகு பதினைந்து நாள்கள் கழிந்தன. பிராமணருடைய மனத்தில் என்ன தோன்றியதோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்õ அவர் தாமாகவே என்னிடம் வந்து திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.--

85 ''அவர் சொன்னார், 'என்னுடைய புத்தி என்னை ஏமாற்றிவிட்டது. அதனால்தான் இச்செயல் என்னால் செய்யப்பட்டது. நான் என் தலையை உமது பாதங்களில் வைக்கிறேன். உன்னை மன்னித்துவிட்டேன் என்று சொல்லுங்கள்.ஃ--

86 ''அதன் பிறகு எல்லாம் நல்லபடியாக நடந்தது. ஸாயீயை தரிசனம் செய்யவேண்டுமென்ற தீவிர ஆவல் ஏற்பட்டது. அதுவும் இன்று நிறைவேறியது. பாக்கியசா­யாகவும், தன்யனாகவும் (எல்லா சம்பத்துகளையும் பெற்றவனாகவும்) ஆனேன்.--

87 ''ஆனால், நான் சங்கடத்தில் ஆழந்து சோகமாக வராந்தாவில் உட்கார்ந்துகொண் டிருந்தபோது எவர் எனக்கு ஆறுதல் அளித்தாரோ, அவரை நான் மறுபடியும் பார்க்கவேயில்லைõ--

88 ''எவர் என்மேல் பரிதாபப்பட்டு என்மீது அக்கறை கொண்டு சிர்டீயைச் சுட்டிக்காட்டி ஸாயீயைப்பற்றி எனக்குத் தெரிவித்து அனுக்கிரஹம் செய்தாரோ, அவரை நான் மறுபடியும் சந்திக்க முடியவில்லை.--

89 ''எவர் நான் சற்றும் எதிர்பாராது தெருவழியே சூக்குமமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு வந்தாரோ, எவர் என்னைக் கடைசியில் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ள வைத்தாரோ, அவரை மறுபடியும் பேட்டி காண முடியவில்லை.--

90 ''உண்மையில், உங்களுடைய அவு­யா ஸாயீதான் அந்தப் பக்கீராக வந்தார் என்று தோன்றுகிறது. அவரே விருப்பப்பட்டு எங்களுக்கு தரிசனம் அளித்தார்.--

91 ''ஏதாவது விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால் மக்கள் ஒரு ஞானியை தரிசனம் செய்ய விரும்புகின்றனர். நான் அவ்வாறு தரிசனம் செய்ய நினைக்கவில்லை. ஆயினும் நான் இழந்த பொருளைத் திரும்பப் பெறுவதற்காக, எடுத்தவுடன் என்னை ஞானிதரிசனம் செய்யப் பக்கீர் தூண்டினார்.--

92 ''எவரிடம் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டதால் நான் இழந்த செல்வத்தை சுலபமாகத் திரும்பப் பெற்றேனோ, அவர் என்னுடைய முப்பத்தைந்து ரூபாய் தக்ஷிணைக்கு ஆசைப்படுவது என்பது கனவிலும் நடக்காத காரியம்.--

93 ''நேர்மாறாக, அஞ்ஞான மனிதர்களை ஆன்மீக நாட்டங்கொள்ளச் செய்வதற்காகவும் நம்முடைய மங்களத்தை உத்தேசித்து நம்மை நல்வழிப்படுத்துவதற்காகவும் அவர் நிரந்தரமாகத் தக்ஷிணை என்னும் சாக்குப்போக்கை உபயோகிக்கிறார்.--

94 ''இந்த அவதாரம் இதற்காகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்படி இல்லையென்றால், பாமரர்களும் பக்தி இல்லாதவர்களுமாகிய நாம் எவ்வாறு பிறவிக்கடலைக் கடக்க முடியும்? இதை நிதானமாக யோசித்துப் பாருங்கள்õ--

95 ''இவ்வாறாக, நான் இழந்த செல்வத்தைத் திரும்பப் பெற்ற பிறகு மகிழ்ச்சிக் கட­ல் திளைத்தேன். இதன் விளைவாக நேர்த்திக்கடனை முற்றிலும் மறந்துபோனேன். செல்வத்தின் மோஹத்தை வெல்வது எளிதோõ--

96 ''பின்னர் ஒரு சமயம் நான் குலாபா பக்கம் சென்றபோது கனவில் ஸாயீயைக் கண்டேன். உடனே சிர்டீ செல்வதற்குக் கிளம்பினேன்.--

97 ''ஸமர்த்த ஸாயீ தம் பயணத்தை விளக்கியவாறு, கப்பலுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்காதது, சிப்பாயின் முயற்சியால் தடங்கல் விலகியது, இவை அனைத்தும் உண்மை.--

98 ''இவையனைத்தும் என்னுடைய பிரச்சினைகள். கப்பல் நின்றுகொண்டிருந்த இடத்தை நான் அடைந்தபோது சிப்பாய் எனக்காக மனப்பூர்வமாக சிபாரிசு செய்தார்.--

99 ''அதன் பிறகே, முத­ல் எனக்குப் பயணம் செய்ய அனுமதி தர மறுத்த அதிகாரி இடம் கொடுத்து உதவி செய்தார்.--

100 ''அந்த சிப்பாயும் எனக்கு முன்பின் தெரியாதவர்; ஆயினும் அவருக்கு என்னைத் தெரியுமென்று சொன்னார். ஆகவே யாரும் எங்களைத் தடுக்கவில்லை. நாங்கள் சுகமாகக் கப்ப­ல் அமர்ந்துகொண்டோம்.--

101 ''இதுதான் கப்ப­ன் கதையும் சிப்பாயின் கதையும். இதெல்லாம் எனக்குத்தான் நேர்ந்தது; ஆயினும் ஸாயீ இவற்றைத் தம்மேல் ஏற்றிக்கொண்டு கதை
சொன்னார்.--

102 ''இந்த அற்புதத்தை நினைத்துப் பார்க்கும்போது என்னுடைய மனம் செய­ழந்து போகிறது. ஸாயீ இந்த உலகம் முழுவதும் வியாபித்திருப்பதை நான்
உணர்கிறேன்.--

103 ''இவ்வுலகில் ஓர் அணுவளவுகூட அவர் இல்லாத இடம் இல்லை. எங்களுக்கு எவ்வாறு இந்த அனுபவத்தை அளித்தாரோ, அவ்வாறே மற்றவர்களுக்கும் அனுபவங்களை அளிப்பார்.--

104 ''நாங்கள் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? எங்களை அலக்காகத் தூக்கித் தம்மிடம் கொண்டுவந்து நல்வழிப்படுத்த, நாங்கள் எவ்வளவு பாக்கியம் செய்தவர்கள்õ--

105 ''ஆஹாõ என்னுடைய செல்வம் திருடுபோனதுதான் என்னõ நான் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டதுதான் என்னõ திருடுபோன செல்வம் சிரமமின்றித் திரும்பி வந்ததுதான் என்னõ நேர்த்திக்கடன் நிறைவேறிய அற்புதந்தான் என்னேõ--

106 ''எங்களுடைய வானளாவிய பாக்கியம் என்னேõ நாங்கள் அவரை இதற்குமுன் தரிசனம் செய்தது கிடையாது; அவரைப்பற்றிக் கேள்விப்பட்டதும் இல்லை; சிந்தனை செய்ததும் இல்லை. ஆயினும் அவர் எங்களை நினைவில் வைத்திருந்தார்; அனுக்கிரகமும் செய்தார்õ--

107 ''ஆண்டாண்டாக அவருடைய கூட்டுறவில் மூழ்கி இரவுபகலாக அவருடைய பாதங்களுக்கு சேவை செய்யும் கடவுள்-பக்தர்கள் எவ்வளவு பாக்கியசா­களாகவும் தன்யர்களாகவும் இருக்கவேண்டும்?--

108 ''எவர்களுடைய கூட்டுறவில் ஸாயீ விளையாடினாரோ சிரித்தாரோ பேசினாரோ அமர்ந்துகொண்டாரோ நடந்து சென்றாரோ சாப்பிட்டாரோ படுத்துக்கொண்டாரோ கோபங்கொண்டாரோ, அவர்கள் அனைவரும் சிரேஷ்டமான பாக்கியசா­கள்.--

109 ''எங்களுடைய கைகளால் அவருக்கு ஒரு சேவையும் செய்தோமில்லை. ஆயினும் அவர் எங்களுக்குப் பெருங்கருணை காட்டினார். அவருடைய சங்கத்திலேயே எப்பொழுதும் இருக்கும் உங்களுடைய பாக்கியத்தை நான் என் சொல்வேன்õ--

110 ''சிர்டீவாழ் மக்கள் புண்ணியம் செய்து சம்பாதித்த நற்பலன்களையெல்லாம் ஒன்றுசேர்த்து உருக்கி ஒரு மனித உருவத்தை வார்த்து எடுத்தீர்கள் போலும்õ பரம பாக்கியசா­களாகிய நீங்கள் இவ்வுருவத்தை சிர்டீக்குக் கொண்டுவந்து
விட்டீர்கள்.--

111 ''அளவற்ற புண்ணியத்தின் பலத்தால் நாங்கள் சிர்டீக்கு வந்திருக்கிறோம். ஸ்ரீஸாயீயின் புனிதமான தரிசனத்திற்காக எங்களிடம் இருப்பதனைத்தையும் அவருக்கு சமர்ப்பணம் செய்யவேண்டுமென்று நினைக்கிறோம்.--

112 ''தருமநெறி வாழும் ஸாயீ ஓர் அவதாரம்; ஆயினும் அவர் ஒரு விஷ்ணுபக்தரைப் போல் வாழ்கிறார்; அவர் ஒரு ஞானவிருட்சம்; சோபையில் ஆகாயத்தில் ஒளிரும் சூரியன்.--

113 ''பெரும் புண்ணியம் செய்ததால் இந்த மசூதிமாயீயைக் கண்டோம். எங்களுடைய நேர்த்திக்கடனையும் நிறைவேற்றிவைத்து தரிசனமும் தந்தார்.--

114 ''இவர்தான் எங்களுடைய தத்தாத்ரேயர். இவர்தான் எங்களை நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ள வைத்தவர். இவர்தான் கப்ப­ல் இடம் வாங்கிக்கொடுத்தவர். இவரே எங்களை தரிசனத்திற்காக சிர்டீக்கு இழுத்தவர்.--

115 ''இவ்வழியாக, ஸாயீ, தாம் எங்கும் நிறைந்தவர் என்பதையும் எல்லார் மனத்திலும் உறைபவர் என்பதையும் எங்கு நடப்பதையும் சாட்சியாக அறிபவர் என்பதையும் எங்களுக்கு உணர்த்தினார்.--

116 ''அவருடைய புன்னகை தவழும் முகத்தைப் பார்த்து நாங்கள் பரமானந்தம் அடைந்தோம். உலக வாழ்வின் பிடுங்கல்களையும் துக்கங்களையும் மறந்தோம்; பொங்கும் மகிழ்ச்சியை எங்களால் அடக்கமுடியவில்லை.--

117 ''கர்மவினைகளின் விளைவாக வாழ்க்கையில் நடப்பது நடக்கட்டும். அதை எங்களுடைய மனம் உறுதியாக எதிர்கொள்ளட்டும். ஆனால், ஸாயீபாதங்களின் மீது அகண்ட பிரேமை என்றென்றும் நிலவட்டும். அவருடைய புனிதமான உருவம் எங்கள் கண்களின் எதிரில் எப்பொழுதும் நிற்கட்டும்.--

118 ''ஸாயீயின் லீலை ஆழங்காணமுடியாதது; கற்பனைக்கு எட்டாதது; அவர் செய்யும் உபகாரத்திற்கு எல்லையே இல்லைõ தயாநிதியேõ என்னுடைய தேகத்தை உங்களுக்கு சமர்ப்பணம் செய்யவேண்டுமென்பதை உணர்கிறேன்.ஃஃ

119 இப்பொழுது இன்னொரு கதையைச் சிறிது நேரம் கவனமாகக் கேளுங்கள். ஸாயீயின் திருவாய்மொழி பிரம்மதேவரால் எழுதப்படும் தலைவிதிபோல் ப­த்தது.

120 ஸோலாபூர் நகரில் வாழ்ந்துவந்த ஸகாராம் ஔரங்காபாத்கர் என்பவர் புத்திரசந்தானம் வேண்டுமென்று விரும்பினார். ஆகவே, அவர் மனைவி சிர்டீக்கு வந்தார்.

121 புனிதஞானி ஸாயீ பாபாவின் அற்புதமான வாழ்க்கைச் சரித்திரத்தைக் கேள்விப்பட்டுத் தம்முடைய சக்களத்தியின் மகனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அவரை தரிசனம் செய்ய வந்தார்.

122 திருமணமாகி இருபத்தேழு ஆண்டுகள் கழிந்தும் அவருக்கு மகப்பேறு இல்லை. எத்தனையோ தேவர்களையும் தேவிகளையும் பிரார்த்தனை செய்துகொண்டும் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டும் பலனேதும் இல்லை; அவர் மனமுடைந்துபோனார்.

123 ஆகவே, இந்த சுமங்க­ பாபாவை தரிசனம் செய்வதற்காக சிர்டீக்கு வந்தார். இருப்பினும் அவருடைய மனத்தின் ஒரு விசாரம் எழுந்தது.

124 ''அவரைச் சுற்றி எப்பொழுதும் பக்தர்கள் சூழ்ந்திருக்கிறார்களே, நான் என்னுடைய இதயத்தில் இருப்பதை அவரிடம் எப்படித் தெரிவிப்பேன்?--

125 ''மசூதியோ திறந்தமயமாக இருக்கிறது; வெளிமுற்றமும் அவ்வாறே. பாபாவை சதா பக்தர்கள் சூழ்ந்திருக்கின்றனர். என்னுடைய மனக்குறையை எடுத்துச் சொல்லத் தனிமையில் ஒரு நிமிடம் எப்படிக் கிடைக்கப்போகிறது?ஃஃ

126 அவரும், விசுவநாதன் என்ற பெயர் கொண்ட, சக்களத்தியின் மகனும் பாபாவுக்கு சேவை செய்துகொண்டு இரண்டு மாத பரியந்தம் (காலம்) சிர்டீயில் தங்கினர்.

127 ஒரு சமயம், விசுவநாதனோ வேறெவருமோ இல்லாதபோது அவர் மாதவராவிடம் என்ன மன்றாடிக் கேட்டுக்கொண்டார் என்பதைக் கேளுங்கள்.

128 ''ஐயா, நீங்களாவது பாபா சாந்தமாகவும் ஸ்திரமாகவும் இருக்கும் நேரம் பார்த்து என்னுடைய மனத்தின் ஏக்கத்தை அவருடைய காதுகளில் போடுங்கள்.--

129 ''இந்த விஷயத்தை அவர் பக்தர்களால் சூழப்படாது தனிமையில் இருக்கும்போது யாரும் காதால் கேட்கமுடியாத வகையில் சொல்லுங்கள்.ஃஃ

130 மாதவராவ் பதில் கூறினார், ''இதோ பாருங்கள். இந்த மசூதி கா­யாக இருப்பதென்பதே கிடையாது. பாபாவை தரிசனம் செய்ய யாராவது ஒருவர் வந்துகொண்டே இருப்பார்.--

131 ''ஸாயீ தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இங்கு வருவதற்கு எவருக்குமே தடை கிடையாது. நான் சொல்வதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்õ--

132 ''முயற்சி செய்வது என்னுடைய கடமை; வெற்றியை அளிப்பவர் மங்களங்களுக்கு அடித்தளமானவர். கடைசியில் அவரே சாந்தியை அளிப்பார்; உங்களுடைய கவலை விலகும்.--

133 ''இருப்பினும், நீங்கள் பாபா சாப்பாட்டுக்கு அமரும் நேரத்தில் ஒரு தேங்காயையும் ஊதுவத்திகளையும் கையில் வைத்துக்கொண்டு கீழே சபாமண்டபத்தில் ஒரு கல்­ன்மேல் உட்கார்ந்திருங்கள்.--

134 ''அவர் உணவுண்ட பிறகு, ஆனந்தமாக இளைப்பாறும் சமயம் பார்த்து நான் உங்களுக்குச் சைகை செய்கிறேன். அதன் பிறகே நீங்கள் படியேறி மேலே வரவேண்டும்.ஃஃ

135 இவ்வாறாகக் காத்திருந்து காத்திருந்து, ஒரு சமயம் ஸாயீ உணவுண்டவுடனே பிராப்த காலம் (அடையவேண்டிய நேரம்) வந்ததும் ஒரு நல்வாய்ப்புக் கிடைத்தது.

136 ஸாயீ வாயைக் கழுவிக்கொண்டபின் மாதவராவ் கைகளைத் துணியால் துடைத்துவிட்டுக்கொண் டிருந்தார். ஸாயீ ஆனந்தமான மனநிலையில் இருந்தார்; அப்பொழுது என்ன செய்தார் என்று கேளுங்கள்.

137 மாதவராவின்மீது பிரேமை பொங்க, அவருடைய கன்னத்தைக் கிள்ளினார் பாபா. தேவருக்கும் பக்தருக்கும் அப்பொழுது நடந்த அன்பான சம்வாதத்தைக் (உரையாடலைக்) கேளுங்கள்.

138 எப்பொழுதும் விநயமாக நடந்துகொள்ளும் மாதவராவ் பொய்க்கோபம் ஏற்று, ''இது என்ன லட்சணமான (சிறப்பான) செயலா?ஃஃ என்று கே­யாகக் கேட்டார்.

139 ''எங்களுக்குக் கன்னத்தை அழுத்திக் கிள்ளும் குறும்புத்தனமான கடவுள் வேண்டாõ நாங்கள் உங்களுக்கு பந்தப்பட்டவர்களா என்ன? இதுதான் எங்களுடைய நெருங்கிய தொடர்புக்குப் பரிசோ?ஃஃ

140 பாபா சொன்னார், ''சாமா, எழுபத்திரண்டு ஜன்மங்களாக நான் உன்னைத் தொட்டதுண்டா? ஞாபகப்படுத்திப் பார்õஃஃ

141 மாதவராவ் சொன்னார், ''பசிக்கும்போதெல்லாம் புதிது புதிதாக இனிப்புகள் வழங்கும் கடவுளே எங்களுக்குத் தேவை.--

142 ''உங்களிடமிருந்து கௌரவமோ சுவர்க்கலோகத்தின் புஷ்பகவிமானமோ எங்களுக்குத் தேவையில்லை. உங்களுடைய பாதங்களில் என்றென்றும் விசுவாசம் என்னும் ஒரே வரத்தைக் கொடுங்கள்; அது போதும்.ஃஃ

143 பாபா சொன்னார், ''இதற்காகவேதான் நான் இங்கு வந்திருக்கிறேன். உங்களிடமுள்ள அளவுகடந்த பிரேமையால் உங்களனைவருக்கும் உணவூட்டவே வந்திருக்கிறேன்.ஃஃ

144 இதன் பிறகு பாபா கிராதிக்கருகி­ருந்த தமது இருக்கைக்குச் சென்று அமர்ந்தார். மாதவராவ் பெண்மணிக்குச் சைகை காண்பித்தார். பெண்மணி தாம் வந்த நோக்கம் பற்றி உஷாரானார்.

145 சைகை கிடைத்தவுடனே, அவர் எழுந்து தடதடவென்று படியேறிச் சென்று பாபாவின் சன்னிதியில் மிகப் பணிவாகத் தலைவணங்கி நின்றார்.

146 உடனே தேங்காயை சமர்ப்பித்துவிட்டுப் பாதகமலங்களில் வணங்கினார். பாபா தேங்காயைத் தமது கைகளாலேயே கிராதியின்மேல் மோதி உடைக்க முயன்றார்.

147 பாபா கேட்டார், ''இந்தத் தேங்காய் என்ன சொல்கிறது? ஏகமாக குடுகுடுவென்று ஆடுகிறதேõஃஃ கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாது சாமா கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அவர் பாபாவிடம் என்ன சொன்னாரென்று கேளுங்கள்.

148 ''அதுமாதிரியாகவே இவருடைய வயிற்றிலும் (குழந்தை) உருளவேண்டுமென்று இப் பெண்மணி மனம் கனிந்து வேண்டுகிறார். இவருடைய விருப்பம் நிறைவேறட்டும். இவருடைய மனம் உங்களுடைய பாதங்களில் அகண்டமாக லயிக்கட்டும்; இவருடைய பிரச்சினைக்கு விடை கிடைக்கட்டும்.--

149 ''உங்களுடைய கருணாகடாட்சத்தை இவர்மீது செலுத்துங்கள். இந்தத் தேங்காயை இவருடைய முந்தானையில் போடுங்கள். உங்களுடைய ஆசீர்வாதத்தால் இவருக்குப் பல பிள்ளைகளும் பெண்களும் பிறக்கட்டும்.ஃஃ

150 பாபா அப் பெண்மணியைக் கேட்டார், ''என்ன? தேங்காய்கள் குழந்தைகளை உண்டுபண்ணுமா? இம்மாதிரியான மூடநம்பிக்கைகளை நீங்கள் எப்படி வளர்க்கலாம்? ஓ, ஜனங்களுக்கு புத்தி பேத­த்துவிட்டதுபோல் இருக்கிறதுõஃஃ

151 சாமா சொன்னார், ''ஓ, உங்களுடைய வாக்கின் அற்புதமான சக்தி எங்களுக்குத் தெரியும். இப் பெண்மணிக்கு வரிசையாகப் பல குழந்தைகள் சுகமாகப் பிறக்குமளவிற்கு உங்களுடைய வாக்குக்கு சக்தி இருக்கிறது.--

152 ''ஆனால், நீங்கள் இப்பொழுது விதண்டை செய்கிறீர்களே தவிர, மனப்பூர்வமாக ஆசீர்வாதம் செய்யவில்லை. தேவையில்லாமல் வாதம் செய்கிறீர்கள். கொடுங்கள்; ஓ, அந்தத் தேங்காயை இப் பெண்மணிக்குப் பிரசாதமாகக் கொடுங்கள்.ஃஃ

153 பாபா சொன்னர், ''சரி, சரி, தேங்காயை உடை.ஃஃ சாமா சொன்னார், ''ஓ, அதை இவருடைய முந்தானையில் இடுங்கள்.ஃஃ இவ்விதமாக இந்த வாக்குவாதம் சிறிது நேரம் தொடர்ந்தது. கடைசியில் பாபா விட்டுக்கொடுத்தார்.

154 பாபா சொன்னார், ''போ, போ, இவருக்குக் குழந்தை பிறக்கும்.ஃஃ சாமா விடுவதாக இல்லை. ''எப்பொழுது பிறக்கும்? அதை அறுதியிட்டுப் பதில் சொல்லுங்கள்.ஃஃ ''பன்னிரண்டு மாதங்களில்ஃஃ என்று சொல்­விட்டு பாபா தேங்காயைப் பட்டென்று உடைத்தார்.

155 ஒரு மூடியைப் பெண்மணியிடம் கொடுத்துவிட்டு மற்றொரு மூடியை அவர்கள் இருவரும் உண்டனர். மாதவராவ் அப் பெண்மணியிடம் சொன்னார், ''நீர் இதை சாட்சியாகக் கேட்டுக்கொண் டிருக்கிறீர்.--

156 ''இன்றி­ருந்து பன்னிரண்டு மாதங்கள் முடிவதற்குமுன், நீங்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்காவிட்டால், நான் என்ன செய்வேன் என்பதைக் கேளுங்கள்õ--

157 ''நான் இதேபோன்ற ஒரு தேங்காயை இவருடைய தலையில் உடைத்து, இந்தத் தெய்வத்தை மசூதியி­ருந்து விரட்டாவிட்டால், என்னுடைய பெயர் மாதவராவ் இல்லைõ --

158 ''அதுமாதிரி தெய்வத்தை இந்த மசூதியில் தங்கும்படி விட்டுவைக்கமாட்டேன். உமக்குச் சரியான நேரத்தில் நிரூபணம் தெரியும். இதை என்னுடைய சர்வ நிச்சயமான பிரகடனம் என்று அறிவீராகõஃஃ

159 இவ்வகையாக உறுதிமொழி அளிக்கப்பட்ட பெண்மணி பெருமகிழ்ச்சியடைந்தார். பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, திருப்தியடைந்தவராகத் தம்முடைய கிராமத்திற்குத் திரும்பினார்.

160 பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவரும் பிரேமபாசத்தால் பக்தர்களிடம் கட்டுண்டவரும் சாமாவைத் தம் அணுக்கத் தொண்டராக ஏற்றுக்கொண்டவருமான ஸாயீ, சாமாவின்மேல் எள்ளளவும் கோபப்படவில்லைõ

161 அண்டியவர்களைக் காக்கும் கருணைக்கடலும் தம்மிடம் சரணடைந்தவர்களுக்கு அடைக்கலமுமான தயாளர் ஸாயீ, தம் பக்தனின் வாக்கைத் தவறாது நிறைவேற்றினார்.

162 ''சாமா என் செல்லப்பிள்ளை. அவனுடைய முரட்டு பக்தியின் காரணமாகச் சில சமயங்களில் ஏடாகூடமாகப் பேசிவிடுகிறான். ஆயினும் பக்தனின் சங்கற்பத்தை நிறைவேற்றிவைப்பது ஞானியரின் விரதமன்றோõஃஃ

163 ஆகவே, பன்னிரண்டு மாதங்களில் பாபா தம்முடைய வாக்கை நிறைவேற்றினார். பாபா ஆசீர்வதித்த மூன்றாவது மாதம் அப் பெண்மணி கருத்தரித்தார்.

164 பாக்கியவசமாக அவருக்கு ஒரு புத்திரன் பிறந்தான். ஐந்து மாதக் குழந்தையை எடுத்துக்கொண்டு கணவரும் மனைவியும் தரிசனம் செய்ய சிர்டீக்கு வந்தனர்.

165 கணவரும் ஸாயீ பாதங்களில் விழுந்து வணங்கினார். பெருமகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் பாதங்களில் ஐந்நூறு ரூபாயை சமர்ப்பணம் செய்தார்.

166 சிலகாலம் கழித்து அந்தப் பணத்தை உபயோகித்து, 'சியாம்கர்ணஃ என்ற தம் செல்லக்குதிரையைக் கட்டுவதற்காக ஒரு குதிரைலாயத்தை பாபா கட்டினார்.

167 ஆகவே இந்த ஸாயீயை தியானம் செய்யுங்கள். ஸாயீயை நினைவில் வையுங்கள். ஸாயீயைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள். வேறெங்கும் எதையும் தேடி அலையாதீர்கள். ஹேமாட் பந்துக்கு என்றென்றும் அவரே அடைக்கலம்.

168 தொப்புளிலேயே ஜவ்வாது வைத்துக்கொண் டிருப்பவன் வாசனை தேடித் தெருத்தெருவாக ஏன் அலையவேண்டும்? ஹேமாட் அகண்டமாக ஸாயீபாதங்களில் மூழ்கி எல்லையற்ற ஆனந்தத்தை அடைகிறான்.

169 மசூதியி­ருந்து சாவடிவரை பக்தர்கள் ஆனந்தமாக பாபாவை ஊர்வலம் அழைத்துவந்ததை விவரிக்கும் அடுத்த அத்தியாயம் இதைவிடச் சுவையானது.

170 அதுபோலவே பாபாவின் ஹண்டியைப்1 பற்றிய கதையையும் பிரசாத விநியோக விவரத்தையும் மற்றும் பல சுவையான கதைகளையும் அடுத்த அத்தியாயத்தில் கேளுங்கள். கதைகேட்பவர்களேõ உங்களுக்கு மேலும் கேட்கவேண்டுமென்ற உற்சாகம் எழும்பும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'எங்கும் நிறைந்த ஸாயீ - ஆசிகள் நிறைவேறுதல்ஃ என்னும் முப்பத்தாறாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.