Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 30


30. கனவிலும் நனவிலும் அநுக்கிரஹம் (பகுதி 2)




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 ஓம் நமோ ஸாயீ தேவாõ பக்தவத்ஸலரேõ கருணாலயமேõ தரிசனமொன்றாலேயே பிறவிப்பயத்தை விலக்கி ஆபத்துகளி­ருந்து காப்பவரேõ உம்மை வணங்குகின்றேன்.

2 ஞானிகளுள் முடிமணியாகிய ஸாயீநாதரேõ ஆரம்பத்தில் நீர் குணமற்றவராக இருந்தீர். பிறகு, உம் பக்தர்களின் அன்பு, பக்தி ஆகிய விசைகளால் உந்தப்பட்டு உருவத்தையும் குணங்களையும் ஏற்று அவதரித்தீர்.

3 பக்தர்களை உத்தாரணம் செய்வதே (தீங்கி­ருந்து மீட்டு உயர்த்துதல்) குருமார்களின் ஜீவாதாரமான மூச்சுக் காற்று. குருவம்ச திலகமாகிய உங்களுக்கு வாழ்க்கையின் லட்சியம் வேறென்னவாக இருக்கமுடியும்õ

4 உமது இரு பாதங்களையும் பற்றிக்கொண்டவர்களுடைய பாவங்களனைத்தும் அழியும். பூர்வஜன்ம நல்வினைகளின் பலன் மேல் தளத்திற்கு எழும்பும். வாழ்க்கைப் பாதையில் பயமோ தடைகளோ வாரா.

5 மஹத்தான புனிதத் தலங்களில் வாழும் பிராமணர்களும் உம்முடைய பாதங்களை மறவாது இங்கு வந்து காயத்ரீ மந்திரத்தை இடைவிடாது ஓதுகிறார்கள்; போதி, புராணங்களையும் வாசிக்கிறார்கள்.

6 சடங்குகள் தெரியாத, அல்ப சக்தியுடைய எங்களுக்கு பக்தியைப்பற்றி என்ன தெரியும்? ஆயினும், ஸமஸ்தமான (எல்லா) மக்களும் எங்களை ஒதுக்கிவிட்டாலும், ஸாயீ எங்களைக் கைவிடமாட்டார்.

7 அவர் யாருக்குக் கிருபை செய்கிறாரோ, அவர் சிந்தனைக்கெட்டாத அளவிற்கு சக்தி பெறுகிறார். ஆத்மா எது, அனாத்மா எது, என்னும் விவேக சம்பத்தை அடைகிறார். அதி­ருந்து ஞானம் பிறக்கிறது.

8 ஸாயீயின் திருவாய்மொழியைக் கேட்கவேண்டும் என்ற தீவிர ஆசை பக்த ஜனங்களைப் பிச்சேற்றுகிறது. ஒவ்வொரு வார்த்தையும் மனத்தில் ஆழமாகப் பதிகிறது. வார்த்தைகளின் உட்பொருளை அனுபவத்தில் காண முயல்கின்றனர்.

9 பக்தர்களின் மனோரதங்களை ஸாயீ பரிபூரணமாக அறிவார்; அவற்றை நிறைவேற்றவும் செய்கிறார். அதன்மூலமாக, பக்தர்கள் வாழ்க்கையில் நிறைவு பெற்றவர்களாகிறார்கள்.

10 ஓ ஸாயீநாதரேõ என்னைக் காத்தருள ஓடிவாரும்õ உமது பாதங்களில் என் தலையைச் சாய்த்துவிட்டேன். அனைத்து அபராதங்களையும் (குற்றங்களையும்) மன்னித்து, இவ்வடிமையின் சஞ்சலங்களையும் கவலையையும் நிவாரணம் செய்யுங்கள்.

11 பல சங்கடங்களால் துன்பமுற்ற பக்தன், இவ்விதமாக ஸாயீயை அழைத்தால் தன்னுடைய உளையும் மனத்திற்கு சாந்தியை அளிக்கக்கூடிய சக்தி பெற்ற ஒரே தருமவானை ஸாயீயில் காண்பான்.

12 தயாசாகரமான ஸாயீ எனக்குச் செய்த கிருபையால்தான் என்னால் வாசகர்களுக்கு இந்த மங்களமான காவியத்தை அளிக்கமுடிகிறது.

13 இல்லையெனில், எனக்கு என்ன பவிசு இருந்தது? யார் இந்த மிக சிரமமான பணியைத் தலைமேல் ஏற்றுக்கொள்வார்? ஆனால், ஸாயீ தம்முடைய வேலைக்குத் தாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ளும்போது, அது எனக்கென்ன பாரம்?

14 அஞ்ஞான இருளை அழிப்பவரும் ஞானதீபமுமாகிய ஸமர்த்த ஸாயீ என்னுடைய எழுத்துக்கு ஒளியூட்டும்போது எனக்கென்ன சந்தேகம் வரமுடியும்?

15 தயாநிதியான என் பிரபுவின்மேல் பாரத்தைப் போட்டுவிட்ட நான் அணுவளவும் சிரமப்படவில்லை. அவருடைய கிருபை என்னும் பிரசாதத்தினால் என்னுடைய இதயத்தின் தாபம் நிறைவேறிவிட்டது.

16 புத்தக ரூபத்தில் ஸாயீக்குச் செய்யும் சேவை எனது பூர்வஜன்ம புண்ணியங்களின் பலத்தால் விளைந்ததே. இறைவாõ தேவரீர் இந்த எளிய சேவையை ஏற்றுக்கொள்வதற்கு யான் என்ன பேறு பெற்றேன் ஐயனேõ

17 தயாசாகரமான ஸாயீ பலவிதமான தெய்வீகக் காட்சிகளை அளித்து பக்தர்களுக்குப் பிரதானமான போதனைகளை அருள் செய்ததுபற்றிக் கடந்த அத்தியாயத்தில் கேட்டீர்கள்.

18 இந்த அத்தியாயத்திலும், ஸப்தசிருங்கி1 தேவி உபாசகர் ஒருவரின் மிக சுவாரசியமானதும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதுமான கதையைக் கேளுங்கள்.

19 தேவர்களும் தேவிகளும் தங்களுடைய பக்தர்களை ஞானியரின் கைகளில் ஒப்படைக்கும் அதிசயத்தை பயபக்தியுடன் கேளுங்கள்.

20 ஒன்றைவிட மற்றொன்று அற்புதமானதாக, மஹராஜின் கதைகள் எத்தனையோ உண்டு. இந்தக் கதை கேட்பதற்குகந்தது. ஒருமுகப்பட்ட மனத்துடன் கேளுங்கள்.

21 இது வெறும் கதையன்று; அமிருத பானம். ஸாயீயின் மஹிமையையும் எங்கும் நிறைந்த தன்மையையும் எடுத்துக்காட்டும். கேட்பவர்கள் மனநிறைவு பெறுவர்.

22 தர்க்கவாதிகளுக்கும் விமரிசகர்களுக்கும் இக் கதை வேண்டா. வாதப்பிரதி வாதங்களுக்கும் இங்கு இடமில்லை. தேவை, அளவற்ற பிரேமையும் பக்தியுமேõ

23 கேட்பவர் புத்திசா­யாகவும் அதே சமயம் பக்தராகவும் இருக்கவேண்டும்; விசுவாசமும் சிரத்தையும் வேண்டும்; ஞானிகளின் தொண்டராகவும் இருக்கவேண்டும். மற்றவர்களுக்கு இக்கதைகள் மாயையாகத் தோன்றும்.

24 ஸாயீலீலை என்னும் இந்தக் கற்பக விருட்சம் சந்தேகமேயின்றிப் பூவாகவும் காயாகவும் பழமாகவும் அருளும். ஆயினும், சிறந்த பாக்கியவானால்தான் அவற்றை பூமிக்குக் கொண்டுவர முடியும்.

25 ஆன்மீக நாட்டமுள்ளவர்களுக்கு மோட்சம் அளிப்பதிலும் எல்லாருக்குமே மங்களம் விளைவிப்பதிலும், எல்லாச் சாதனங்களிலும் தலைசிறந்த சாதனமாகிய இப் பரம புனிதமான கதைகளைக் கேளுங்கள்; கேளுங்கள்.

26 இந்த ஸாயீ கதையாகிய அமிருத பானம், ஜடம் போன்ற மனிதனையும் உத்தாரணம் செய்யும்; முமுட்சுகளுக்கு (மோட்சத்தை நாடுபவர்களுக்கு) மோட்ச சாதனம்; உலகியல் வாழ்வில் ஈடுபட்டவர்களுக்குச் சுமைதாங்கிõ

27 ஒரு கதையை இங்கே சொல்லப் புகும்போது, பல கதைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஆகவே, கேட்பவர்களைக் கவனத்துடன் கேட்கும்படி ஹேமாட் பணிவுடன் வேண்டுகிறேன்.

28 இம்மாதிரியாக ஒவ்வொரு கதையாகக் கேட்டுக்கொண்டுவந்தால், ஸாயீலீலை ரசவாதம்1 புரியும். பிறவியெனும் காட்டுத்தீயில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள் திருப்தியும் சுகமும் பெறுவர். ஸமர்த்த ஸாயீ மஹத்தான சக்தி பெற்றவர் அல்லரோõ

29 நாசிக் ஜில்லாவில், வணி கிராமத்தில், காகாஜி வைத்யா என்று பெயர் கொண்ட ஒருவர் வசித்துவந்தார். அங்கிருந்த தேவியின் கோயி­ல் உபாத்தியாயராக (பூஜகர் - பூஜை செய்பவர்) இருந்தார்.

30 தேவியின் பெயர் ஸப்தசிருங்கி. வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளாலும் வேதனைகளாலும் துன்புற்ற பூஜகர் மனவுளைச்சலுற்றார்.

31 காலச்சக்கரம் கேடுகளைக் கொண்டுவரும்போது, மனம் நீர்ச்சுழியைப்போல் சுழல்கிறது. உடல் இங்குமங்கும் அலைகிறது. ஒருகணமும் சாந்தி கிடைப்பதில்லை.

32 மிகுந்த சோகமுற்ற காகாஜி, கோயிலுக்குச் சென்று தம்மைக் கவலைகளி­ருந்தும் சஞ்சலங்களி­ருந்தும் விடுவிக்குமாறு தேவியை வேண்டினார்.

33 தேவியின் அருள் வேண்டி மனமாரப் பிரார்த்தனை செய்தார். தேவியும் அவருடைய பக்தியையும் பா(ஆஏஅ)வத்தையும் மெச்சித் திருப்தியடைந்தார். அன்றிரவே அவருக்கொரு காட்சியளித்தார். கதை கேட்பவர்களேõ இந்த அற்புதத்தைக் கேளுங்கள்õ

34 தேவி ஸப்தசிருங்கி மாதா காகாஜியின் கனவில் தோன்றி, ''பாபாவிடம் செல்வீராக; மனம் அமைதியுறும்ஃஃ என்று கூறினார்.

35 'யார் இந்த பாபா? அவரை எங்கே போய்க் காண்பது?ஃ என்பதை தேவி மேலும் தெளிவுபடுத்துவார் என நினைத்துக் காத்திருந்தபோதே அவர் விழித்துக்கொண்டார்.

36 மேற்கொண்டு விவரம் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பம் நிறைவேறுவதற்கு முன்பாகவே சட்டென்று கனவு மறைந்துவிட்டது. தேவி குறிப்பிட்ட பாபா யாராக இருக்கக்கூடுமென்று தம்முடைய புத்திக்கெட்டியவாறு அனுமானித்தார்.

37 பாபா என்று தேவி குறிப்பிட்டது அநேகமாக திரியம்பகேசுவரராகத்தான் 1 இருக்கவேண்டும் என்று தீர்மானம் செய்தார். உடனே சென்று திரியம்பகேசுவரரை தரிசனம் செய்தார். அப்பொழுதும் மனவுளைச்சல் நிற்கவில்லை.

38 திரியம்பகேசுவரத்தில்1 பத்து நாள்கள் இருந்தார். கடைசிவரை சோகமாகவே இருந்தார். மனம் அமைதியோ மகிழ்ச்சியோ அடையவில்லை.

39 உளைச்சல் மனத்தைவிட்டு அகலவில்லை; மனக்கொதிப்பும் அடங்கவில்லை. நாளுக்குநாள் அமைதியின்மையும் சஞ்சலங்களும் அதிகரித்தன. ஆகவே காகா வீடு திரும்பினார்.

40 தினமும் விடியற்காலையில் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு, ருத்ர பாராயணம் செய்துகொண்டே சிவ­ங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். ஆயினும் மனம் அமைதியற்று இருந்தது.

41 மறுபடியும் தேவியின் கோயிலுக்குச் சென்று, ''என்னை எதற்காகத் திரியம்பகேசுவரத்துக்கு அனுப்பினீர் அம்மா? இப்பொழுதாவது என் மனத்திற்கு அமைதி கொடுங்கள்õ என்னை இங்குமங்கும் அலைக்கழிக்க வேண்டாஃஃ என்று மனமுருகி வேண்டினார்.

42 தீனமான குர­ல் இவ்வாறு அம்பாளை அருள் செய்ய வேண்டினார். தேவி அன்றிரவு காகாஜியின் கனவில் மறுபடியும் தோன்றி,--

43 ''பாபா என்று நான் குறிப்பிட்டது சிர்டீயில் வாழும் ஸமர்த்த ஸாயீயை. திரியம்பகேசுவரத்துக்குச் செல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எனக்குப் புரியவில்லையேõஃஃ எனச் சொல்­ அருள் செய்தார்.

44 ''இந்த சிர்டீ எங்கிருக்கிறது? அங்கே போவது எப்படி? இந்த பாபா யார் என்று தெரியவில்லையே; சிர்டீ விஜயம் எப்படி நடக்கப்போகிறதென்றும் தெரியவில்லையேõஃஃ என்று காகாஜி குழம்பினார்.

45 ஆயினும், ஒரு ஞானியின் பாதங்களில் ஈடுபாடு கொண்டு தரிசனம் செய்யவேண்டுமென்று ஏங்குபவரின் விருப்பத்தை ஞானிமட்டுமல்லாமல் இறைவனும் பூர்த்தி செய்கிறார்.

46 ஞானியே இறைவன். இருவருக்குமிடையே லவலேசமும் வித்தியாசம் இல்லை. இருவரையும் பிரித்துப் பார்ப்பது துவைதம். ஞானிகளும் இறைவனும் அத்வைதம்.

47 ''என்னுடைய விருப்பத்தாலும் முயற்சியாலும் நான் சென்று ஞானியை தரிசனம் செய்து திருப்தியடைவேன்.ஃஃ இவ்விதம் நினைப்பதோ சொல்வதோ கேவலம் அகங்காரமும் வீண்பெருமையுமாகும். ஞானிகளின் செயல்முறைகள் செயற்கரியவற்றைச் செய்யவல்லவை.

48 ஞானிகள் மனம் வைக்காமல், யார் அவர்களை தரிசனம் செய்யச் செல்லமுடியும்? அவர்களுடைய ஆணையின்றி மரத்திலுள்ள இலையும் அசையாது.

49 பக்தர்களில் சிரேஷ்டமானவருக்கு தரிசனம் செய்யவேண்டுமென்ற தாபம் எவ்வளவோ, பக்தியும் பா(ஆஏஅ)வமும் நிட்டையும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே அவருடைய ஆனந்த அனுபவம் விளைகிறது.

50 இவ்விதமாகக் காகாஜி, 'சிர்டீ தரிசனத்திற்கு எப்படிச் செல்வேன்ஃ என்று மூளையைக் குழப்பிக்கொண் டிருந்தபோது அவருடைய விலாசத்தைத் தேடிக்கொண்டு சிர்டீயி­ருந்து ஒரு விருந்தாளி வந்துசேர்ந்தார்õ

51 விருந்தாளி என்ன சாமானியமான ஆளா? ஓ, இல்லவேயில்லை. எவரை பாபா மற்றவர்களைவிட அதிகமாக விரும்பினாரோ, எவருடைய பிரேமை இணையில்லாததோ, எவரிடத்தில் உயர்ந்த அதிகாரம் இருந்ததோ, அவரே விருந்தாளியாக வந்திருந்தார்õ

52 அவருடைய பெயர் மாதவராவ் தேச்பாண்டே (சாமா). அவரொருவரால்தான் பாபாவிடம் இனிமையாகப் பேசியும் புகழ்ந்தும் வெற்றி காணமுடியும். வேறெவராலும் இதைச் செய்ய இயலாது.

53 சதாசர்வகாலமும் இருவருக்குமிடையே அன்புப் பூசல்கள் நடக்கும். ஒருவரையொருவர் ஏகவசனத்தில் ('நீ, வா, போஃ என்னும் ரீதியில்) பேசி சகஜமாக உறவாடுவர். பாபா மாதவராவிடம் மகனைப் போன்று பாசம் வைத்திருந்தார். வணிக்கு அப்பொழுது வந்துசேர்ந்த விருந்தாளி இவர்தான்.

54 குழந்தை நோயுற்றபோது, தாயார் தேவியிடம் வேண்டிக்கொண்டார், ''இக்குழந்தையை உன்னுடைய பொறுப்பில் விட்டுவிடுகிறேன்; ஆக்குவதோ அழிப்பதோ உன் பாடு.--

55 ''குழந்தை பிழைத்தெழுந்து என்னுடையதாகிவிட்டால், கட்டாயம் அவனை உன் பாதங்களில் கொண்டுவந்து போடுகிறேன்.ஃஃ இவ்விதமாக தேவிக்கு நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டபின் குழந்தை நோயி­ருந்து விடுபட்டது.

56 வைத்தியரானாலும் சரி, இறைவனாயினும் சரி, வேலை முடிந்தவுடன் அவர்களை மறந்துவிடுகிறோம். சங்கடம் வரும்போதுதான் வேங்கடரமணன்õ நிறைவேற்றப்படாமல் கிடக்கும் நேர்த்திக்கடன் பயத்திற்குக் காரணம் ஆகிறது.

57 நாள்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, காலம் உருண்டது. நேர்த்திக்கடன் முழுமையாக மறந்துபோய்விட்டது. கடைசியாக, தாயார் தம் இறுதிக்காலத்தில் மாதவராவிடம் விநயமாகத் தெரிவித்தார்,--

58 ''பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தப் பிரார்த்தனையை நேர்ந்துகொண்டேன். அது தாமதமாகித் தாமதமாகி இன்றைய தினத்திற்கு வந்துவிட்டது. இவ்விதமாக இழுத்துக்கொண்டே போவது நன்றன்று. ஆகவே நீ போய் தேவியை தரிசனம் செய்துவிட்டு வா.ஃஃ

59 தேவிக்கு நேர்ந்துகொண்ட பிரார்த்தனை இன்னுமொன்றும் இருந்தது. தாயாரின் இரண்டு முலைகளிலும் கட்டிகள் தோன்றித் தாங்கமுடியாத வ­யையும் துன்பத்தையும் அளித்தன.

60 ''தாயே, உன் பாதங்களில் விழுகிறேன். இந்த வ­யையும் துன்பத்தையும் நிவிர்த்தி செய்; நான் வெள்ளியால் இரண்டு முலைகள் செய்து உன் சன்னிதியில் ஆரதிபோல் சுற்றியபின் பாதங்களில் ஸமர்ப்பிக்கிறேன்.ஃஃ

61 செய்யலாம், செய்யலாம் என்று சொல்­ இழுத்தடிக்கப்பட்டு, அந்த நேர்த்திக்கடனும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. உடலை உதிர்க்கும் சமயத்தில் தாயாருக்கு அதுவும் ஞாபகம் வந்தது.

62 தாயார் அதுபற்றியும் மாதவராவுக்கு ஞாபகப்படுத்தி, 'நேர்த்திக் கடனை நிறைவேற்றுவேன்ஃ என்று சத்தியம் வாங்கிக்கொண்டு நிம்மதியான மனத்துடன் இவ்வுலக பந்தங்களி­ருந்து விடுபட்டு, ஹரியின் பாதங்களைச் சென்றடைந்தார்.

63 மறுபடியும், 'போவோம், போவோம்ஃ என்று சொல்­யே தாமதம் ஏற்பட்டது. நாள்கள், மாதங்கள், வருடங்கள் உருண்டன. மாதவராவ் அனைத்தையும் மறந்துபோனார். நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படாமலேயே இருந்தது.

64 30 ஆண்டுகள் இவ்வாறு கடந்தபின், ஒருநாள், ஊர் ஊராகச் சென்றுகொண்டிருந்த ஒரு ஜோதிடர் சிர்டீக்கு வந்துசேர்ந்தார்.

65 ஜோதிட சாஸ்திரத்தில் வானளாவிய ஞானம் படைத்திருந்த அவர், நடந்தது, நடக்கப்போவது, நடந்துகொண் டிருப்பது அனைத்தையும் சொல்லக்கூடிய சக்தி பெற்றிருந்தார். பலபேர்களுக்கு வரும்பொருள் உரைத்துத் திருப்திசெய்து பெரும் புகழ் சேர்த்திருந்தார்.

66 ஸ்ரீமான் புட்டிக்கும் அவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் ஜோதிடம் சொல்­ எல்லாரையும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடையச்செய்து மதிப்புப் பெற்றிருந்தார்.

67 மாதவராவின் தம்பி பாபாஜியும் அவரை வருங்காலத்தைப்பற்றிக் கேட்டார். தேவி அவரிடம் மனவருத்தம் கொண்டிருக்கிறாள் என்று ஜோதிடர் சொன்னார்.

68 ஜோதிடர் கூறினார், ''உமது தாயார் மரணத் தறுவாயில் உமக்கு அண்ணனைத் தம்முடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிவைக்கச் சொன்னார்.--

69 ''ஆனால், இன்றுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், தேவி உங்களுக்குத் துன்பம் கொடுக்கிறாள்.ஃஃ மாதவராவ் வீட்டுக்கு வந்தபோது பாபாஜி முழுக்கதையையும் அவரிடம் சொன்னார்.

70 மாதவராவுக்கு இக் குறிப்பு உடனே விளங்கிவிட்டது. பொற்கொல்லரை அழைத்துவந்து வெள்ளியில் இரண்டு முலைகள் செய்யச் சொன்னார். வேலை முடிந்ததும் அவற்றை மசூதிக்கு எடுத்துக்கொண்டு போனார்.

71 பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, இரண்டு வெள்ளிமுலைகளையும் அவரெதிரில் வைத்து, ''என்னுடைய நேர்த்திக்கடனை எடுத்துக்கொண்டு என்னை விடுதலை செய்யுங்கள்ஃஃ என்று வேண்டினார்.--

72 ''நீரே எனது ஸப்தசிருங்கி; நீரே எமது தேவி. தாயார் வாக்குக் கொடுத்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு சமாதானமடையுங்கள்.ஃஃ

73 பாபா பதில் கூறினார், ''நீ ஸப்தசிருங்கி கோயிலுக்கே சென்று, தேவிக்காக அழகாக வடிக்கப்பட்டுள்ள இந்த முலைகளை உன் கைகளாலேயே ஸமர்ப்பணம் செய்.ஃஃ

74 பாபாவின் வற்புறுத்தல் இவ்வாறு இருந்ததால், மாதவராவின் மனச்சாயலும் அவ்வாறே மாறி, கோயிலுக்குப் போவதென்று முடிவு செய்துகொண்டு வீட்டுக்குத் திரும்பினார்.

75 பாபாவை தரிசனம் செய்துவிட்டு, அவரிடம் அனுமதியையும் ஆசீர்வாதங்களையும் உதீ பிரசாதத்தையும் வாங்கிக்கொண்டு ஊருக்குக் கிளம்பினார்.

76 ஸப்தசிருங்கிக்கு வந்துசேர்ந்து, குல உபாத்தியாயருக்காகத் தேடினார். தெய்வாதீனமாகக் காகாஜியின் வீட்டை அனாயாசமாகச் சென்றடைந்தார்.

77 காகாஜியோ இங்கு பாபா தரிசனத்திற்காகத் துடித்துக்கொண் டிருக்கிறார். அதே சமயத்தில் மாதவராவும் அங்கு வந்துசேர்கிறார். இது சாமானியமாக நடக்கக்கூடிய சம்பவமா என்ன?

78 காகாஜி அவரை யார் என்றும் எங்கிருந்து வந்திருக்கிறாரென்றும் விசாரித்தார். மாதவராவ் சிர்டீயி­ருந்து வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் காகாஜி அளவிலாத மகிழ்ச்சி அடைந்தார். போற்றத்தக்க இந்த சம்பவக் கூடலைக் கண்டு இருவரும் துள்ளிக் குதித்தனர்.

79 இவ்வாறாக, இருவரும் மகிழ்ச்சி பொங்கும் மனத்துடன் ஸாயீ லீலையைப் புகழ்ந்து கொண்டே நேர்த்திக்கடன் சம்பந்தமான சடங்குகளை முடித்தனர். அது முடிந்ததும் உபாத்தியாயர் (காகாஜி) சிர்டீக்குக் கிளம்பினார்.

80 மாதவராவின் மதிப்பிற்குரிய சங்கமும் தோழமையும் கிடைக்குமென்று கனவிலும் எதிர்பாராத காகாஜி ஆனந்தத்தால் நிரம்பினார். அவருடைய கவனம் முழுவதும் சிர்டீ செல்லும் பாதைக்குத் திரும்பியது.

81 நேர்த்திக்கடன் சம்பந்தமான சடங்குகள் முடிந்தவுடன், ஸாயீ தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவலாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பியவர்களாய் இருவரும் சீக்கிரமாக சிர்டீக்குக் கிளம்பினர்.

82 அவர்கள் கிளம்பிய வேகம், காகாஜியின் மனத்தில் முன்னமிருந்த ஆவலையும் துடிப்பையும் ஒத்திருந்தது. கோதாவரிக் கரையை சீக்கிரமாகச் சென்றடைந்தனர். அங்கிருந்து சிர்டீ சமீபத்தில் இருந்தது.

83 காகாஜி பாபாவை வணங்கி அவருடைய பாதங்களைத் தம் கண்ணீரால் குளிப்பாட்டினார். பாபாவின் தரிசனத்தால் சாந்தியையும் மகிழ்ச்சியையும் திரும்பப்பெற்றார்.

84 இதற்காகத்தான் தேவி அவருடைய கனவில் தோன்றினாள். ஸமர்த்த ஸாயீயைக் கண்டவுடனே காகாஜி உண்மையான சந்தோஷமடைந்தார். அவருடைய மனோரதம் நிறைவேறியது.

85 ஸாயீ தரிசனம் கண்ட காகாஜி மனம் மகிழ்ந்தார். அவருடைய இதயம் நெகிழ்ந்தது. பாபாவின் அருள் அவர்மீது பொழிந்தவுடன் மனம் நிச்சிந்தையாகியது; கவலைகள் பறந்தோடின.

86 வியப்புறும் வகையில் மனத்தின் சஞ்சலங்கள் ஓய்ந்தன. அவர் தமக்குத் தாமே, 'ஓ இதென்ன அசாதாரணமான லீலைõஃ என்று சொல்­க்கொண்டார்.

87 ''என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை; ஒரு கேள்வியும் கேட்கவில்லை; சமாதானமும் செய்யவில்லை; ஆசீர்வாதமும் செய்யவில்லை; வெறும் தரிசனமே எனக்கு மகிழ்ச்சியையும் சுகத்தையும் அளித்துவிட்டதுõ--

88 ''சஞ்சலங்களால் அலைபாய்ந்துகொண் டிருந்த என்னுடைய மனம், தரிசனத்தால் அமைதியுற்றது. இவ்வுலகுக்கப்பாற்பட்ட சந்தோஷத்தை நான் அடைந்திருக்கிறேன். இது தரிசன மஹிமையே அன்றி வேறெதுவும் இல்லைõஃஃ

89 ஸாயீ பாதங்களில் பார்வை குத்திட்டது; வார்த்தைகள் வெளிவர மறுத்தன. பாபாவின் லீலையை எண்ணியெண்ணி ஆனந்தம் பொங்கி வழிந்தது.

90 உபாத்தியாயர் (காகாஜி) பா(ஆஏஅ)வத்துடன் ஸாயீயின் பாதங்களில் சரணடைந்தபோது அகத்தில் ஆனந்தம் பொங்கியது. பழைய சஞ்சலங்களை அறவே மறந்துவிட்டார்.

91 இவ்விதமாகக் காகாஜி பன்னிரண்டு நாள்கள் சிர்டீயில் தங்கினார். மனம் சாந்தியடைந்து நிலைபெற்று, ஸப்தசிருங்கிக்குத் திரும்பினார்.

92 விடியற்காலையில் (சூரிய உதயத்திற்கு 48 நிமிடங்களுக்கு முன்) தோன்றும் கனவுகள் உண்மையாகிப் பலனளிக்கும். மற்ற நேரங்களில் தோன்றும் கனவுகளால் பலனேதும் இல்லை.

93 இதுவே மக்களின் பொதுவான நம்பிக்கை. ஆயினும், சிர்டீ சம்பந்தப்பட்ட கனவுகள் எங்கே தோன்றினாலும் எப்பொழுது தோன்றினாலும் ஸித்தியாகும். இதுவே பக்தர்களின் இடையூறற்ற அனுபவம்.

94 இது சம்பந்தமாக இப்பொழுது ஒரு சிறுகதை சொல்கிறேன். செவிமடுப்பவர்கள் மனமகிழ்ச்சியடைந்து மேலும் கேட்க ஆவலுறுவார்கள்.

95 ஒரு நாள் பிற்பகல் நேரத்தில் பாபா தீக்ஷிதரிடம் சொன்னார், ''குதிரை வண்டியில் ராஹாதாவுக்குச் சென்று குசால்பாவுவை அழைத்துக்கொண்டு வாரும்.--

96 ''அவரைச் சந்திக்க மனம் ஏங்குகிறது; பார்த்துப் பல நாள்கள் ஆகிவிட்டன. 'பாபா உங்களைச் சந்திக்க விரும்புகிறார்; ஆகவே வரச் சொல்கிறார்ஃ என்று அவரிடம் சொல்லும்.ஃஃ

97 பாபாவின் ஆணைக்கு வந்தனம் செலுத்திவிட்டு, தீக்ஷிதர் ஒரு குதிரைவண்டியில் போனார். குசால்பாவுவைச் சந்தித்து, உடனே தாம் வந்த காரணத்தைத் தெரிவித்தார்.

98 பாபாவின் செய்தியைக் கேட்ட குசால்பாவு ஆச்சரியமடைந்தார். அவர் சொன்னார், ''நான் இப்பொழுதுதான் தூக்கத்தி­ருந்து எழுந்தேன். கனவில் பாபா எனக்கு இதே ஆணையைத்தான் இட்டார்.--

99 ''மதிய உணவு முடிந்தபின் இப்பொழுதுதான் சிறிது நேரம் ஓய்வாகப் படுத்தேன். கண்களை மூடியவுடன் பாபா இதைத்தான் என் கனவில் சொன்னார்.--

100 ''அவர் என்னிடம் சொன்னார், 'உடனே கிளம்பி சிர்டீக்கு வாரும்ஃ என்று. எனக்கும் அவரை சந்திக்கவேண்டுமென்ற தாபம் இருந்தது. என்னுடைய குதிரை இங்கு இல்லாமல் நான் என்ன செய்வது? ஆகவே என் மகனிடம் இச் செய்தியைச் சொல்­ யனுப்பினேன்.--

101 ''ஆனால், அவன் கிராம எல்லையைத் தாண்டுவதற்கு முன்னரே உங்களுடைய குதிரைவண்டி வந்துவிட்டது.ஃஃ தீக்ஷிதர் கே­யாகச் சொன்னார், ''ஆமாம், அதற்காகத்தான் பாபா எனக்கு ஆணையிட்டு இங்கு அனுப்பினார்õ--

102 ''நீங்கள் இப்பொழுது வருவதாக இருந்தால், குதிரைவண்டி வெளியே தயாராக நிற்கிறது.ஃஃ குசால்பாவு ஆனந்தம் நிரம்பியவராக தீக்ஷிதருடன் சிர்டீக்கு வந்தார்.

103 தாத்பரியம் என்னவென்றால், குசால்பாவு வந்ததால் பாபாவின் ஆவல் நிறைவேறியது. பாபாவின் லீலையைக் கண்டு குசால்பாவுவும் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.

104 பம்பாயில் வசித்துவந்த, ராம்லால் என்ற பெயர்கொண்ட பஞ்சாபி பிராமணர் ஒருவருக்குக் கனவில் பாபாவின் தரிசனம் கிடைத்தது.

105 ஆகாயம், காற்று, சூரியன், வருணன் போன்ற இயற்கை தெய்வங்களின் அனுக்கிரஹ சக்தியால் நமக்கு உள்ளுலக, வெளியுலக ஞானம் கிடைக்கிறது. இது விழித்திருக்கும் நிலை.

106 உடலுறுப்புகள் அனைத்தும் ஓய்வெடுத்துக்கொண் டிருக்கும்போது (தூக்கத்தில்), விழிப்பு நிலையில் செய்த செய்கைகளால் மனத்தில் ஏற்பட்ட சுவடுகள் உயிர்பெற்று, ஏற்றுக்கொள்பவரையும் ஏற்றுக்கொள்ளத்தக்க விஷயங்களையும் பொறுத்து, மறுபடியும் மனத்திரையில் ஓடுகின்றன. இதுவே கனவுகளின் குணாதிசயம்.

107 ராம்லா­ன் கனவோ விசித்திரமானதுõ அவர் எப்பொழுதுமே பாபாவை தரிசனம் செய்ததில்லை. பாபாவின் உருவத்தைப்பற்றியோ குணங்களைப்பற்றியோ எதுவுமே தெரியாது. ஆனால், பாபா அவரிடம் சொன்னார், ''என்னைப் பார்க்க வாரும்.ஃஃ

108 கனவில் தெரிந்த உருவத்தை வைத்துக் கணித்தால், அவர் ஒரு ஞானியாகத் தென்பட்டார். ஆனால், அவர் எங்கு வசித்தார் என்பது ராம்லாலுக்குத் தெரியவில்லை. விழித்துக்கொண்ட ராம்லால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.

109 அவர் போக விரும்பினார். ஆனால், இடமோ விலாசமோ தெரியவில்லை. தரிசனத்திற்கு எவர் அழைத்தாரோ, அவருக்குத்தான் திட்டம் என்னவென்று தெரியும்õ

110 அன்றைய தினமே பிற்பகல் வேளையில் ஒரு தெரு வழியாக நடந்துபோனபோது ஒரு கடையில் இருந்த படத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார்.

111 கனவில் பார்த்த உருவம் இதுவே என்று ராம்லால் நினைத்தார். உடனே கடைகாரரிடம் விசாரிக்க ஆரம்பித்தார்.

112 நிழற்படத்தில் உருவத்தின் லட்சணங்களைக் கவனமாகப் பார்த்தபின், ''இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?ஃஃ என்று கடைகாரரை விசாரித்தார். ''இது சிர்டீயில் இருக்கும் ஸாயீஃஃ என்று அறிந்துகொண்ட பிறகே நிம்மதியடைந்தார்.

113 மற்ற விவரங்களைப் பிறகு தெரிந்துகொண்டார். பின்னர் ராம்லால் சிர்டீக்குச் சென்றார். பாபா மஹாஸமாதி அடையும்வரை அவருடன் இருந்தார்.

114 பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்வதும், அவர்களை தரிசனத்திற்கு அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றிவைப்பதுமே பாபாவின் மனோரதமாக இருந்தது.

115 அவர், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறிய நிலையில், விருப்பம் என்று எதுவும் இல்லாதவர்; சுயநலமற்றவர்; அஹங்காரமில்லாதவர்; பற்றற்றவர்; பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே அவதாரம் செய்தவர்.

116 கோபம் எவரைத் தொட்டதில்லையோ, எவரிடத்தில் துவேஷம் புக முடியாதோ, எவர் வயிறு நிரப்புவதைப்பற்றிக் கவலைப்படுவதில்லையோ அவரையே உண்மையான ஸாது என்றறிக.

117 'எல்லாரிடத்தும் சுயநலமில்லாத அன்புஃ என்பதே ஒரு ஸாதுவின் உன்னதமான வாழ்க்கை லட்சியம். தரும விஷயங்களைத் தவிர வேறெதிலும் அவர் தம்முடைய வார்த்தைகளை வீண் செய்வதில்லை.

118 சாராம்சமான ரஹஸியம் இங்கென்னவென்றால், என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு தம்முடைய சரித்திரத்தைத் தாமே எழுதிக்கொள்வதன்மூலம், பக்தர்கள் தம்மை ஞாபகப்படுத்திக்கொண்டு அந்நினைவிலேயே மூழ்க வேண்டுமென்று ஸாயீ விரும்புகிறார்.

119 அதனால்தான் பக்தர்கள் ஸாயீ சரித்திரத்தை சிரத்தையுடனும் பக்தியுடனும் கேட்கவேண்டும் என்று ஹேமாட், கதை கேட்பவர்களை அடிக்கடி வேண்டுகிறேன்.

120 கேட்பவர்களின் மனத்தில் சாந்தி நிலவும். விசனத்தில் மூழ்கியவர்கள் விசனத்தி­ருந்து விடுபடுவார்கள். ஸாயீ பாதங்களில் பக்தி வளர்த்துப் பிறவிப் பிணியி­ருந்து விடுதலை பெறுவார்கள்.

121 மானஸஸரோவருக்கு யாத்திரையாகக் கிளம்பி, போகும் வழியில் ஸாயீ பாதங்களில் முக்தியடைந்த சன்னியாசி விஜயானந்தரின் கதை அடுத்த அத்தியாயத்தில் மலரும்.

122 பக்தர் பாலாராம் மாங்கரும் பாபாவின் முன்னிலையிலேயே முக்தி பெற்றார். அம்மாதிரியாகவே, நூல்கர், மேகா ஆகியவர்களுடைய வேண்டுதலையும் ஸாயீநாதர் பூர்த்தி செய்துவைத்தார்.

123 குரூரமான பிராணியான ஒரு பு­க்கும் பாபாவின் பாதங்களில் அடைக்கலம் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, ஸாயீயின் செயல்கள் ஆழங்காணமுடியாதவை. கேட்பது திருவிழாவைப்போன்று மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் உரிய அரிய நல்வாய்ப்பு.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'நேர்த்திக்கடனும் மற்ற கதைகளும்ஃ என்னும் முப்பதாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.