Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 24

24. ஒளிவீசும் நகைச்சுவை உணர்வு




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 கடந்த அத்தியாயத்தின் இறுதியில் கூறியவாறு, கருணைக்கடலான ஸாயீநாத குரு கே­யும் ஹாஸ்யமும் (நகைச்சுவையும்) செய்வதன் மூலமாக எவ்வாறு போதனையளித்தார் என்பதை இப்பொழுது விவரமாகச் சொல்கின்றேன்; கேளுங்கள்.

2 'நான் சொல்லப்போகிறேன்ஃ என்று விளம்புவதே அஹங்காரந்தான். குருபாதங்களில் அஹங்காரமற்றவனாக இருக்க வேண்டும். கதை அப்பொழுதுதான், கேட்பவர்களின் இதயத்தைத் தொடும் சக்தி பெறும். பயபக்தியுடன் கதையைக் கேளுங்கள்.

3 ஸாதுக்களும் ஆன்றோர்களும் மஹாபுருஷர்களும் எப்பொழுதுமே தூயவர்கள்; குற்றமற்றவர்கள். நிர்மலமான, மேகமற்ற ஆகாயத்தைப் போன்று சுத்தமானவர்கள்; தோஷமற்றவர்கள்.

4 ஸாயீ மஹராஜின் புகழைப் பாடுவது இகத்திலும் பரத்திலும் நன்மை பயக்கக்கூடிய ஸாதனையாகும். 'நான் யார்ஃ எனும் சிந்தனை செழிக்கும்; மனம் ஒருமுகப்படும்.

5 ஆன்மீக முன்னேற்றம் அடையவேண்டுமென்று நினைப்பவர் இக் கதைகளை பயபக்தியுடன் கேட்கவேண்டும். வேறு முயற்சி ஏதுமில்லாமலேயே அவர் பரமானந்தத்தை அனுபவிப்பார்; வாழ்க்கையை அர்த்தமுடையதாக உணர்வார்.

6 கதை கேட்பவர் மன அமைதி பெறுவார்; உலகவாழ்வுபற்றிய பிராந்தி (ஆதாரமில்லாத மனக்கலக்கம்) விலகும்; பரமானந்த மெய்துவார்; நற்கதி சிரமமின்றிக் கிடைக்கும்.

7 பக்தர்களின் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் ஸமர்த்த ஸாயீ மனக்கண்ணால் அறிவார். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து தமது உறுதிமொழியை நிறைவேற்றுவார்.

8 ஸமர்த்த ஸாயீ என் புத்தியைத் தூண்டிவிட்டு அவருடைய வார்த்தைகளை என்னைச் சொல்லவைக்கிறார். உலகியலாகவும் ஆன்மீகமாகவும் சாதனைகள் புரியவல்ல அவருடைய செய்தியின் சாரத்தை என்னுடைய முழுத்திறமையையும் உபயோகித்துச் சொல்கிறேன்.

9 மக்கள் எவரும் குருடரல்லர்; அவர்களுக்கு மாலைக்கண் நோயும் இல்லை. 'தேஹமே நான்ஃ என்று நினைத்துக்கொண் டிருப்பவரும் தமக்கு எது நன்மையளிக்கும் என்று அறிந்துகொள்ளாதவரும் கண்ணிருந்தும் குருடர் அல்லரோ?

10 மேலும், இவ்வுடல் சாசுவதமாக இருக்கும் என்று ஒரு கணமும் நினைப்பதற்கில்லை. ஆகவே, இக் கதையின் இனிமையைச் சுவைக்குமாறு நான் உங்களை இரு கைகளையும் கூப்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

11 எல்லாருமே தமாஷையும் கே­யையும் விரும்புவர். ஆயினும், அனைவருக்கும் நன்மையளிக்குமாறு, கே­யாலும் ஹாஸ்யத்தாலும் தம்முடைய உபதேசத்தை பக்தர்களுடைய மனத்தில் நன்கு பதியச் செய்த பாபாவின் வழிமுறைகள் இவ்வுலக ரீதிக்கு அப்பாற்பட்டவையல்லவாõ

12 யாருமே தமாஷைப் பெரிதுபடுத்தமாட்டார்கள். பாபாவின் தமாஷை அனைவரும் விரும்பினர்; தங்களுடைய வாய்ப்பு எப்பொழுது வரும் என்று ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.

13 தாங்கள் கே­க்கு இலக்காவதைப் பொதுவாக மக்கள் விரும்புவதில்லை. ஆனால், பாபா தமாஷ் செய்வதை பக்தர்கள் பெரிதும் விரும்பினர். விகடத்துடன் அபிநயமும் சேர்ந்துகொண்டபோது எதிர்பார்த்த விளைவு உடனே ஏற்பட்டது.

14 பாபாவினுடைய விகடமும் கே­யும் பிரயாசையின்றி சகஜமாகவும் புதினமாகவும் வெளிப்பட்டது. புன்னகை தவழும் முகமும் கண்களில் விளையாடிய பா(ஆஏஅ)வமும் தமாஷின் சுவையைப் பன்மடங்காக்கின. அச்சுவையை வர்ணிப்பதென்பது இயலாத காரியம்.

15 போதனையும் புதினமும் நிரம்பிய அனுபவமொன்றைச் சொல்கிறேன், கேளுங்கள். நையாண்டியும் தமாஷுமாக வெளிவந்து, சிறந்த ஆன்மீக போதனையளித்த திருவாய்மொழியைக் கேளுங்கள்.

16 சிர்டீயில் ஒவ்வொரு ஞாயிறும் வாரச்சந்தை பெரியதாகக் கூடும். மைதானத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, வாங்குவதும் விற்பதுமான நடவடிக்கை மும்முரமாக நடக்கும்.

17 சாலையின் இருபுறங்களிலும் காய்கறிகளும் கீரைவகைகளும் அம்பாரமாகக் கொட்டி விற்கப்படும். சாலைச் சந்திப்புகளில் எண்ணெய், வெற்றிலை, பாக்கு, புகையிலை இன்னோரன்னபிற பொருள்களை விற்கும் அநேக வியாபாரிகள் உட்கார்ந்துகொண்டு வியாபாரம் செய்வர்.

18 இம்மாதிரியான ஞாயிற்றுக்கிழமை ஒன்றில், பிற்பகல் நேரத்தில், நான் பாபாவினுடைய பாதங்களைப் பிடித்துவிட்டுக்கொண் டிருந்தபோது ஒரு நூதனமான நிகழ்ச்சி ஏற்பட்டதுõ

19 எப்பொழுதுமே பிற்பகல் நேரத்தில் பாபாவினுடைய தர்பாரில் கூட்டம் அதிகமாக இருக்கும். போதாததற்கு அன்று ஞாயிற்றுக்கிழமை, சந்தைநாள் வேறு. ஏகப்பட்ட ஜனங்கள் மசூதியில் குழுமியிருந்தனர்.

20 நான் பாபாவினுடைய வலப்பக்கம் உட்கார்ந்துகொண்டு அவரை நோக்கியவாறு தலையைக் குனிந்துகொண்டு அவருடைய பாதங்களைப் பிடித்துவிட்டுக்கொண்டு மனத்துக்குள்ளேயே நாமஜபம் செய்துகொண் டிருந்தேன்.

21 மாதவராவ் பாபாவுக்கு இடப்பக்கத்திலும் வாமன்ராவ் பாபாவுக்கு வலப்பக்கத்திலும் இருந்தனர். ஸ்ரீமான் கோபால் ராவ் புட்டியும் அங்கே பாதசேவை செய்வதற்குத் தம்முடைய வாய்ப்பு வருவதற்குக் காத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

22 காகா ஸாஹேப் தீக்ஷிதரும் அதற்காகவே அங்கு அமர்ந்திருந்தார். திடீரென்று மாதவராவ் சிரித்தார், ''என்ன, அண்ணாஸாஹேப்õ இங்கு ஒட்டிக்கொண்டிருக்கும் தானியங்கள் எங்கிருந்து வந்தன?ஃஃ

23 இவ்வாறு கேட்டுக்கொண்டே மாதவராவ் என்னுடைய கோட்டின் மடிப்புகளை விரலால் தொட்டார். ஆஹாõ அங்கு உடைத்த கடலைப் பருப்புகள் ஒட்டிக்கொண் டிருந்தன.

24 அது என்னவென்று பார்க்க நான் முழங்கையை நீட்டியபோது சில உடைத்த கடலைப் பருப்புகள் உருண்டோடியதையும் சுற்றியிருந்தவர்கள் அவற்றைப் பொறுக்கியதையும் பார்த்தேன்.

25 கவனத்துடன் பொறுக்கியெடுத்து ஒன்றுசேர்க்கப்பட்டபோது சுமார் 25 பருப்புகள் இருந்தன. அதுவே அந்த நேரத்தில் தமாஷ் செய்யவும் என்னை நையாண்டி செய்யவும் காரணமாக அமைந்ததுõ ஆனால், இது எவ்விதம் நிகழ்ந்தது?

26 ஊகத்திற்கு மேல் ஊகம் தொடர்ந்தது. ஒவ்வொருவரும் தம்முடைய எண்ணங்களிலேயே மூழ்கியிருந்தனர். அந்த உடைத்த கடலைப் பருப்புகள் கோட்டில் ஒட்டிக்கொண் டிருந்தது எல்லாரையுமே ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

27 அந்தக் காக்கிக் கோட்டில் எத்தனை மடிப்புகள்தாம் இருந்திருக்க முடியும்? உடைத்த கடலைப் பருப்புகளை மடிப்புகள் எப்படி அடக்கி வைத்திருக்க முடியும்? முதலாவதாக, அங்கு எப்படி, எவ்விதமாக, உடைத்த கடலை வந்திருக்க முடியும்? யாருக்குமே இது தெளிவாக விளங்கவில்லைõ

28 மனத்தளவில் நான் நாமஜபத்தில் மூழ்கிக் கைகளால் பாதசேவை செய்துகொண் டிருந்தபோது, நடுவில் இந்த உடைத்த கடலைக் கதை எங்கிருந்து முளைத்தது?

29 மேலும், இவ்வளவு நேரம் நான் பாபாவின் பாதங்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தபோது உடைத்த கடலைப் பருப்புகள் ஏன் உருண்டோடவில்லை? அவ்வளவு நேரமாக அவை கோட்டிலேயே ஒட்டிக்கொண் டிருந்தன என்பது எல்லாருடைய மனத்திலும் ஆச்சரியத்தை விளைவித்தது.

30 உடைத்த கடலைப் பருப்புகள் எங்கிருந்து வந்தன என்பதுபற்றியும் கோட்டு மடிப்பில் எப்படி இவ்வளவு நேரம் பதுங்கியிருந்தன என்பதுபற்றியும் எல்லாரும் தலையைப் பிய்த்துக்கொண்டு யோசனை செய்துகொண் டிருந்தபோது பாபா என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.

31 அநேக மக்களுக்கு அநேக விதமாகவும் விசித்திரமாகவும் போதனையளிக்கும் வழிமுறை பின்பற்றப்பட்டது. ஒவ்வொருவருக்கும் அவருடைய தகுதிக்கேற்றவாறு பாபா போதனை அளித்தார்.

32 ஸாயீ மஹராஜினுடைய போதனை முறைகள் அபூர்வமானவை. போதனை முறை மிக சுவாரசியமாக இருந்ததால், மனத்தில் நிலைத்தது. இம்மாதிரியான போதனை முறைகளை நான் வேறெங்கும் பார்த்ததோ கேள்விப்பட்டதோ கிடையாது.

33 பாபா சொன்னார், ''இந்த மனிதருக்குத் தின்பண்டங்களை முழுக்கத் தாமே தின்றுவிடும் கெட்ட பழக்கம் இருக்கிறது. இன்று சந்தை நாளாக இருப்பதை நன்கு சாதகப்படுத்திக் கொண்டு உடைத்த கடலையைப் பேராவலுடன் தின்றுகொண்டே விசாரமேதுமின்றி இங்கு வந்திருக்கிறார்.--

34 ''ஒருவருக்குக் கிடைத்ததை முழுவதும் அவரே தின்றுவிடுவது நற்செயல் ஆகாது. ஆயினும் எனக்கு இவருடைய கெட்ட பழக்கம் தெரியும். இந்த உடைத்த கடலைப் பருப்புகளே அதற்குச் சாட்சி. இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?ஃஃ

35 நான் பதில் கூறினேன், ''மற்றவர்களோடு பகிர்ந்துண்ணாமல் நான் மாத்திரம் உண்பதென்பதை நான் அறியேன் ஐயனேõ இவ்வாறிருக்கும்போது கெட்ட பழக்கத்தைப்பற்றிய பேச்சு எவ்வாறு எழும்? யார் எவ்வளவு முயற்சி செய்தாலும் இந்தக் கெட்ட பழக்கம் என்னை அணுகாது.--

36 ''பாபா, இந்நாள்வரை நான் சிர்டீ சந்தையைப் பார்த்ததே இல்லை. நான் அங்கே சென்றால்தானே உடைத்த கடலை வாங்க முடியும்? தின்பதென்பது அதன்பிறகேயன்றோõ--

37 ''தனிமையில் எல்லாவற்றையும் தாமே உண்ண விருப்பமுள்ளவர்கள் அவ்வாறே செய்யட்டும்õ என்னைப் பொறுத்தவரை எனக்கு அந்தக் கெட்ட பழக்கம் இல்லை. கொஞ்சமாவது மற்றவர்களுக்குக் கொடுக்காமல் நான் என் வாயில் எதையும் போடுவதில்லை.ஃஃ

38 பாபா தம் பக்தனுடைய நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எப்படித் தமது சாமர்த்தியமான யுக்தியினால் உறுதிப்படுத்தினார் என்று பாருங்கள். என்னுடைய தெளிவானதும் கபடமற்றதுமான வார்த்தைகளைக் கேட்டபிறகு, பாபா என்ன கூறினார் என்பதை கவனத்துடன் கேளுங்கள்.

39 ''அருகில் இருப்பவனுக்கு நீர் கொடுப்பீர்; உண்மைதான். யாரும் அருகில் இல்லையென்றால் நீர்தான் என்ன செய்யமுடியும்? நானுந்தான் அந்த நிலையில் என்ன செய்யமுடியும்? ஆனால், நீர் என்னை அந் நேரத்தில் நினைக்கிறீரா?--

40 ''நான் உமது அருகில் இல்லையா? எனக்கு ஒரு கவளமாவது அளிக்கிறீரா?ஃஃ இந்தத் தத்துவத்தை எங்கள் மனத்தில் உறுதியாக ஏற்றுவதற்காகவே உடைத்த கடலைச் சாக்குப்போக்கு உபயோகிக்கப்பட்டது.

41 தெய்வங்களையும், புலனுறுப்புகளைக் காக்கும் தேவதைகளையும், பஞ்சாக்கினிகளையும், பஞ்சப் பிராணன்களையும், வைச்வதேவர்களையும், உணவு நேரத்தில் வரும் அதிதியையும் ஏமாற்றிவிட்டு, ஊனை வளர்ப்பதற்காகத் தான் மட்டும் உண்ணும் அன்னம் பெரும் நிந்தனைக்குரியது.

42 இந்தத் தத்துவம் மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில் முக்கியமில்லாததுபோல் தோன்றலாம். ஆயினும், நடைமுறை வாழ்க்கையில் மிக்க மஹத்துவம் வாய்ந்தது. உணவைச் சுவைப்பதுபற்றிச் சொல்லப்பட்ட இவ் விதி முழுமையின் ஒரு பகுதியே. இந்த விதி ஐந்து புலன்களுக்குமே பொருந்தும்.

43 புலனின்பங்களின் பின்னால் ஓடுபவன் ஆன்மீக முன்னேற்றம் காணவேமுடியாது. புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனுக்கு ஆன்மீக முன்னேற்றம் அடிமையாகும்.

44 வேதமந்திரங்கள் சாற்றிய கருத்தைத்தான் பாபா கே­யையும் நகைச்சுவையையும் உபயோகித்து திடப்படுத்தினார். அதாவது, ''எல்லாப் புலன்களும் உறைந்துபோன நிலையில் மனம் அமைதியாக இருந்து புத்தியும் சலனமில்லாமல் இருக்கும் நிலையே உயர்ந்த நிலை என்பது ஞானியரின் கருத்து.ஃஃ (கடோபநிஷதம்)

45 கேள்வி, தொடும் உணர்வு, பார்வை, வாசனையறிதல் ஆகிய மற்ற நான்கு புலன்களின் விஷயத்திலுங்கூட, நாக்கையும் உணவையும்பற்றி பாபா செய்த போதனையே உண்மை. இன்று நேர்ந்த சூழ்நிலைக்கு எவ்வளவு பொருத்தமானவை பாபாவின் வார்த்தைகள்õ என்ன அற்புதமான போதனைõ

46 மனமும் புத்தியும் புலனுறுப்புகளும் உலக இன்பங்களைத் துய்க்க ஈர்க்கப்படும்போது முத­ல் என்னை நினை. பிறகு அவற்றை அம்சம் அம்சமாக எனக்கு ஸமர்ப்பணம் செய்வாயாக.

47 இவ்வுலகம் அழியும்வரை புலன்கள் அவற்றுக்குரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும்; இதைத் தடுக்க இயலாது. ஆனால், அந் நாட்டங்களை குருவின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வலுவிழந்துவிடும்.

48 காமம் எழும்போது என் விஷயமாகவே காமப்படு. கோபம் வரும்போது கோபத்தை என்மீது காட்டு. அபிமானத்தையும் (தேஹத்தின் மீதுள்ள பிடிப்பையும்) துராகிருதத்தையும் (உரிமை இல்லாத இடத்து வ­ய நிகழ்த்தும் செயலையும்) பக்தர்கள் என்னுடைய பாதங்களை நோக்கியே செலுத்தட்டும்.

49 காமம், கோபம், தேஹாபிமானம் போன்ற இயற்கையான உணர்ச்சிகள் பொங்கியெழும்போது என்னைக் குறியாக ஆக்கி அவற்றை என்மீது ஏவுக.

50 காலக்கிரமத்தில் ஹரி இவற்றை ஒவ்வொன்றாக அழித்துவிடுவான். இம் மூன்று விஷ அலைகளையும் (காமம், கோபம், தேஹாபிமானம்) கோவிந்தன் பரிகாரம் செய்துவிடுவான்.

51 வேறுவிதமாகச் சொன்னால், பலாத்காரமானதும் கொடியதுமான உணர்ச்சிகள் அனைத்தும் என்னுடைய சொரூபத்தில் லயமாகிவிடும் (கலந்துவிடும்). என்னுடைய பாதங்களில் இளைப்பாறி என்னுடன் ஒன்றாகிவிடும்.

52 இம்மாதிரியாக அப்பியாசம் (பயிற்சி) செய்துவந்தால், மனத்தின் வேகங்களும் தீவிரமான உணர்ச்சிகளும் தாமாகவே பலமிழந்துவிடும். காலக்கிரமத்தில் வேருடன் அறுக்கப்படும். மனம் வேகங்களி­ருந்து விடுபட்டுவிடும்.

53 குரு நிரந்தரமாகவே தன்னுடைய அருகில் இருக்கிறார் என்று மனம் ஆழமாக நம்ப ஆரம்பித்துவிட்ட பிறகு, மேற்சொன்ன அவலங்கள் அதைப் பாதியா.

54 இந்த நல்லொழுக்கம் வேர்விட்ட பிறகு, உலகவாழ்வின் பந்தங்கள் நசித்துவிடும். குரு உலக விஷயங்கள் அனைத்திலும் தோன்றுகிறார்; வேறுவிதமாகச் சொன்னால், ஒவ்வொரு உலகவிஷயமும் குருவின் உருவத்தை அணிந்துகொள்கிறது.

55 புலனின்பம் துய்க்க வேண்டும் என்கிற சிறிய ஆசை தோன்றும்போதே, பாபா நம்முடன் இருக்கிறார் என்ற எண்ணம், அந்த இன்பம் துய்ப்பதற்குத் தகுதியுடையதா, தகுதியற்றதா என்கிற கேள்வியை மனத்தில் எழுப்பும்.

56 தகுதியற்றதும் பொருந்தாததுமான உலகவிஷயம் சகஜமாகவே நிராகரிக்கப்படும். கெட்ட பழக்கமுள்ளவன் அதி­ருந்து விடுபடுகிறான். நன்மையளிக்காத விஷயசுகங்களி­ருந்து திரும்பத் திரும்ப வெளியேறும் அப்பியாசத்தினால், மனம் தனக்கு ஒவ்வாத உலகவிஷயங்களையும் சுகங்களையும் வெறுக்க ஆரம்பிக்கும்.

57 ஆன்மீக சாதகன் எப்பொழுது வேண்டுமானாலும் புலன்களின்மேல் ஆதிக்கம் செலுத்தக்கூடிய தயார்நிலைக்கு உயர்கிறான். இதற்கான விதிகள் வேதங்களி­ருந்து வெளிப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் சாதகன் உலக விஷயங்களை நியமத்துடன் அனுசரிக்கிறான்; இஷ்டம்போல் நடப்பதில்லை.

58 மனம் இவ்விதமாகத் தன்வயப்பட்டுவிட்டால், விஷயசுகங்கள் நசித்துப் போகின்றன. மாறாக, குரு வழிபாட்டில் மனம் காதல் கொள்கிறது; அதி­ருந்து சுத்த ஞானம் பிறக்கிறது.

59 சுத்த ஞானம் வளர வளர, 'உடலே நான்ஃ என்னும் எண்ணம் அறுந்துபோகிறது. அதே புத்தி இப்பொழுது, 'நானே பிரம்மம் (முழுமுதற்பொருள்)ஃ என்னும் உணர்வில் ஆழ்ந்துவிடுகிறது. அந்நிலையில் எல்லையற்ற ஆனந்தம் துய்க்கப்படுகிறது.

60 மனித உடல் கணநேரத்தில் அழியக்கூடியதாக இருப்பினும், அதை வைத்துத்தான் பரமபுருஷார்த்தத்தை (மோட்சம்) அடைய வேண்டும். மோட்சத்தைவிடச் சிறந்ததான பக்தியோகத்தை அனுசரிக்க உடல் தேவைப்படுகிறது.

61 மனிதன் அடையவேண்டிய நான்கு பேறுகளையும் (அறம், பொருள், இன்பம், வீடு) கடந்த ஐந்தாவது பேறு பக்தியோகம். பக்தியோகம் ஒப்பற்றது; மற்றெதுவும் அதற்கு ஈடாகாது.

62 குருசேவை செய்து வாழ்க்கையில் திருப்தியடைந்தவன் பக்தியும் ஞானமும் வைராக்கியமுமே தனக்கு நன்மையளிக்கும் என்ற யதார்த்தமான உண்மையை நன்கு உணர்ந்துகொள்கிறான். அவனே ஆன்மீகப் பாதையில் முன்னேற்றம் காண்பான்.

63 பாகவதத்தைத் (ஸ்ரீகிருஷ்ணனின் கதையைத்) தலைகீழாகப் படித்தவனாக இருந்தாலும், குருவிற்கும் இறைவனுக்குமிடையே வித்தியாசம் காண்பவன் இறைவனை அறிந்தவனல்லன்.

64 இது, இராமாயணத்தை முழுக்கப் படித்த பின்பும் சீதைக்கு இராமன் என்ன உறவு என்று கேட்பது போலாகும். 'இரண்டுண்டுஃ என்னும் எண்ணத்தை அழித்துவிட்டு குருவும் இறைவனும் ஒன்றே என அறிந்துகொள்ள வேண்டும்.

65 குருவிற்கு நிர்மலமான மனத்துடன் சேவை செய்வதன் மூலம் உலகவிஷய வாசனைகள் நிர்மூலமாகிவிடும். சித்தம் சுத்தமாகி சுயவொளியுடன் பிரகாசிக்கும். மனிதனின் நிஜமான சொரூபம் தன்னை வெளிக்காட்டும்.

66 ஆகவே, தாம் விரும்பியபோது, விரல்களால் சொடக்குப்போடுவது போல சுலபமாக அவரால் உடைத்த கடலைப் பருப்புகளை அங்கே தோன்றச்செய்ய முடிந்தது. பார்க்கப்போனால், இதைவிட அற்புதமான லீலைகளைக் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

67 கேவலம் இந்திரஜாலம் செய்பவன் தன் வசீகர சக்தியால் ஓர் எலும்பை அசைத்துப் பொருள்களை சிருஷ்டி செய்வதுபோல் நமக்குக் காட்டி வயிறு வளர்க்கிறான்.

68 ஆனால், ஸாயீநாதரோ தனித்தன்மை வாய்ந்த விசேஷமான ஜாலவித்தைக்காரர்õ ஆஹாõ அவருடைய லீலைதான் எவ்வளவு அழகானதுõ அவர் விரும்பினால் கண்ணிமைக்கும் நேரத்தில் எண்ணிலடங்காத உடைத்த கடலைப் பருப்புகளை உற்பத்தி செய்வார்.

69 நாம் இந்தக் காதையின் சாரமென்ன என்று சிந்திப்போம். ஐம்புலன்களில் எது ஒன்றும் பாபாவை நினைக்காமல் இவ்வுலக இன்பங்களை அனுபவிக்கலாகாது.

70 மனத்திற்கு இப் பாடம் ஒருமுறை புரிந்துவிட்டால், அது மறுபடியும் மறுபடியும் ஞாபகத்திற்கு வரும். ஒவ்வொரு உலகியல் கொடுக்கல் வாங்க­லும் ஸாயீயின் பாதங்களையே இடையறாது சிந்திக்கும்.

71 குணங்களுடன்கூடிய சுத்தப் பிரம்மம் கண்முன்னே தோன்றும். பக்தியையும் விரக்தியையும் முக்தியையும் மலரச் செய்து பரமபதத்தை அளிக்கும்.

72 கண்கள் அந்த சுந்தரமான உருவத்தை உற்றுப் பார்க்கும்பொழுது இவ்வுலக உணர்வும் பசியும் தாகமும் உருகி ஓடிவிடும். இவ்வுலக இன்பங்கள்பற்றிய உணர்வே தொலைந்துபோகும்õ மனம் சாந்தத்தையும் திருப்தியையும் அனுபவிக்கும்.

73 நான் எவ்வளவு முயற்சி செய்தாலும், ஓவி (செய்யுள்) சில சமயங்களில் என் மனத்தே தோன்ற மறுக்கிறது. ஆயினும், ஏந்திரத்தில் மாவு அரைக்கும்பொழுது பளிச்சென்று ஞாபகத்திற்கு வருகிறதுõ அதுபோலவே உடைத்த கடலைக் காதையை விவரிக்கும்பொழுது எனக்கு சுதாமரின் (குசேலர்) கதை ஞாபகத்திற்கு வருகிறதுõ

74 ஒருகாலத்தில், பலராமனும் ஸ்ரீகிருஷ்ணனும் சுதாமனும் குரு சாந்தீபனியின் ஆசிரமத்தில் வசித்துவந்த காலத்தில், ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனும் விறகு சேகரித்துக்கொண்டு வரக் காட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

75 குருபத்னியின் ஆணைக்கிணங்கி ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனும் காட்டினுள்ளே சென்றனர். அவர்கள் புறப்பட்டவுடனே சுதாமனும் அவர்களுடன் செல்லுமாறு பணிக்கப்பட்டான்.

76 குருபத்னி சுதாமனிடம் கொஞ்சம் உடைத்த கடலையைக் கொடுத்து, 'காட்டில் திரியும்பொழுது பசியாக இருந்தால் மூவரும் பகிர்ந்து உண்ணுங்கள்ஃ என்று ஆணையிட்டு அனுப்பினார்.

77 பிறகு, சுதாமன் காட்டில் ஸ்ரீகிருஷ்ணனை சந்தித்தான். ஸ்ரீகிருஷ்ணன் சுதாமனிடம் சொன்னான், ''தாதா, எனக்கு தாகமாக இருக்கிறது.ஃஃ சுதாமன் தன்னிடம் இருக்கும் உடைத்த கடலையைப்பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் என்ன பதில் சொன்னான் என்பதை கவனமாகக் கேளுங்கள்.

78 ''எப்பொழுதும் கா­ வயிற்றில் தண்ணீர் குடிக்காதே; மாறாக, முத­ல் சிறிது ஓய்வெடுத்துக்கொள்.ஃஃ ஸ்ரீகிருஷ்ணன் சுதாமனுடைய துடையின்மேல் தலைவைத்து ஓய்வெடுத்தபொழுதும் சுதாமனால், ''இந்த உடைத்த கடலையைக் கொஞ்சம் சாப்பிடுஃஃ என்று சொல்ல முடியவில்லை.

79 ஸ்ரீகிருஷ்ணன் சிறுதுயில் கொண்டுவிட்டான் என்று தெரிந்துகொண்டபின், சுதாமன் உடைத்த கடலையைத் தானே தின்ன ஆரம்பித்தான். ஸ்ரீகிருஷ்ணன் கேட்டான், ''தாதா, நீ என்ன தின்கிறாய்? இது என்ன சத்தம்?ஃஃ

80 ''ஹே கிருஷ்ணாõ இவ்விடத்தில் தின்பதற்கு என்ன இருக்கிறது. குளிரில் என்னுடைய பற்கள் நடுங்கிச் சத்தம் செய்கின்றன; அவ்வளவேõ நீயே பார், என்னால் விஷ்ணு ஸஹஸ்ர நாமங்கூடத் தெளிவாக ஓத முடியவில்லைõஃஃ

81 சுதாமனின் பதிலைக் கேட்டு ஸர்வவியாபியான பகவான் ஸ்ரீகிருஷ்ணன், ''ஓ, அப்படியாõ எனக்கும் அம்மாதிரியே கனவொன்று வந்ததுõ--

82 ''மற்றொருவருக்கு உரியதை ஒருவர் தின்றுகொண் டிருந்தபொழுது, என்ன தின்கிறீர் என்று உடையவர் கேட்டார். தின்றுகொண் டிருந்தவர் எரிச்சலடைந்து, 'ஆ, நான் எதைத் தின்கிறேன் - இந்த மண்ணைத்தான் தின்கிறேன்ஃ என்று பொய் சொன்னார். பளிச்சென்று 'அப்படியே ஆகட்டும்ஃ என்று பதில் வந்தது.--

83 ''ஆனால் தாதாõ இதெல்லாம் ஒரு கனவுக் காட்சிதான். என்னை விட்டுவிட்டு நீ எப்பொழுதாவது எதையாவது தின்பாயா? என்ன தின்கிறாய் என்று உன்னைக் கேட்டபொழுது நான் கனவு நிலையில் இருந்தேன் போலும்.ஃஃ

84 சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்திற்கு வருவதற்குமுன் ஸ்ரீகிருஷ்ணன் புரிந்த லீலைகளை சுதாமன் அறிந்திருந்தால், இம்மாதிரியான பெருங்குற்றத்தைச் செய்து அதன் விளைவாகப் பிற்காலத்தில் கஷ்டத்தை அனுபவித்திருக்கமாட்டான்.

85 இதன் விளைவு சாதாரணமானதா என்ன? இல்லவேயில்லைõ அவர் கொடுமையான வறுமையில் வாட நேர்ந்தது. ஆகவே, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் தாம் மாத்திரம் தின்பவர்கள் இதை நினைவில் வைக்கவேண்டும்.

86 சுதாமர் ஒரு பக்தர்; ஸ்ரீகிருஷ்ணரின் நண்பர். ஆயினும், தார்மீக நெறியி­ருந்து சிறிது புரண்டதற்காகவே உலக வாழ்வில் வறுமையில் உழல வேண்டியதாயிற்று.

87 அதே சுதாமர் (குசேலர்), தம் மனைவி கஷ்டப்பட்டுச் சேகரித்த ஒரு பிடி அவலை ஸ்ரீகிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்தபோது, பரமாத்மா மனம் மகிழ்ந்து சுதாமருக்கு சகல சௌபாக்கியங்களையும் செல்வங்களையும் அளித்தார்.

88 இப்பொழுது, மஹத்தான போதனையை உள்ளடக்கிய காதை ஒன்றைச் சொல்கிறேன்; கேளுங்கள். அது ஆரம்பத்தில் விநோதமாகவும் நகைச்சுவையுள்ளதாகவும் இருப்பினும், முடிவில் சிறந்த போதனையை அளிக்கும்.

89 சிலருக்கு அறநெறிப் போதனைகள் பிடிக்கும்; சிலருக்குத் தர்க்கமும் யுக்தியான வாதங்களும் பிடிக்கும்; இன்னும் சிலர் நகைச்சுவையையும் நையாண்டியையும் விரும்புவர். எல்லாருமே மகிழ்ச்சியாக இருப்பதை விரும்புகின்றனர் அல்லரோ?

90 இதுவும் ஒரு வகையில் ஹாஸ்யமும் கே­யும்தான். பிடிவாதக்காரர்களான ஒரு பெண்மணிக்கும் ஒரு பெரிய மனிதருக்கும் இடையே ஸாயீயின் தர்பாரில் ஒரு தண்டா (சச்சரவு) எழுந்தது. கடைசியில் இந்தத் தண்டா யார் மீதும் பழி ஏற்படாதவாறு சுமுகமாகத் தீர்த்துவைக்கப்பட்டது.

91 இக்கதை பரம சுவாரசியமானது; கேட்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பக்தையும் பக்தரும் சச்சரவு செய்தபொழுது கே­யும் சிரிப்பும் உல்லாசமும் உச்சத்தை எட்டின.

92 அண்ணா சிஞ்சணிகர்1 என்று எல்லாராலும் அழைக்கப்பட்ட தாமோதர் கனச்யாம் பாபரே என்ற பெயர் கொண்ட பக்தரொருவர் இருந்தார். இவர் பாபாவிடம் எல்லையற்ற பிரேமை வைத்திருந்தார்.

93 கோபக்காரரான இவர் கடுஞ்சொல்லர்; இதமாகப் பேசத் தெரியாதவர். தாம் பேசுவது நல்லதா, கெட்டதா - முறையானதா, முறையற்றதா - என்று யோசியாமல், மற்றவர்களுடைய மனம் புண்படுவதுபற்றிக் கவலைப்படாமல் தமக்கு என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாகவும் கபடமற்றும் கொட்டிவிடுவார்.

94 இயற்கையாகவே முரடரும் கண்டிப்பு மிகுந்தவருமாகிய இவர், மிக நேர்மையானவர்; யோக்கியர்; வஞ்சனை தெரியாதவர்; சாத்விகர். ஆனால் செயல்பாட்டில், எப்பொழுது வெடிக்குமோ என்று பயப்படவேண்டிய, தோட்டாக்கள் நிரம்பிய கைத்துப்பாக்கியை ஒத்திருந்தார்.

95 எல்லாச் செயல்களையும் 'தடபுடஃவென்று செய்துவிடுவார். எதுவும் அங்கேயே, அப்பொழுதே, முடிய வேண்டும். தள்ளிப்போடுவதோ கடன் என்ற பேச்சோ கிடையாது. மற்றவர்களைப்பற்றிய சிந்தனையே இல்லாது, எல்லா விவகாரங்களிலும் தயவு தாட்சிண்ணியம் பார்க்காது நேரம் தவறாது செயல்பட்டார்.

96 எரியும் தணலையும் கையிலேந்திவிடலாம்; அண்ணா சிஞ்சணிகரின் சுபாவத்தை எதிர்கொள்ளமுடியாது. இவ்வளவு முரட்டுத்தனமான மனிதராக இருந்தாலும் அவர் கபடமற்றவர்; நேர்மையானவர். இக் காரணம்பற்றியே பாபா அவரிடம் பிரீதி கொண்டிருந்தார்.

97 ஒருநாள் பிற்பகல் நேரத்தில், பாபா தம்முடைய இடக்கையை மரக்கிராதியின்மேல் வைத்துக்கொண்டு மசூதியில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி மக்கள் கூடியிருந்தனர்.

98 பாபா அம்மாதிரியான நேரங்களில், என்ன நடக்கிறது என்பதில் ஆர்வமில்லாதவர் போன்றும் எதிலும் ஈடுபடாதவர் போன்றும் அமைதியாக உட்கார்ந்திருப்பார். ஆனால், யாருமே அறியாத வகையில் பக்தர்களுக்கிடையே சச்சரவு மூட்டிவிடுவார். சம்பந்தப்பட்டவர்கள் சிடுசிடுப்புடன் அவ்விடத்தி­ருந்து வெளியேற முயல்வர். கடைசியில் இருதரப்பினரையும் பாபா சமரசம் செய்துவிடுவார்.

99 சில பக்தர்கள் அவருடைய உட­ன் இரு பக்கங்களையும் பிடித்துவிடுவர். சிலர் பாதசேவை செய்வர். சிலர் முதுகையும் சிலர் வயிற்றுப் பகுதியையும் மஸாஜ் செய்துவிடுவர். எல்லாருமே ஏதாவது ஒரு வகையில் பாபாவுக்குத் தொண்டு செய்யவேண்டுமென்று விரும்பினர்.

100 பாபா ஒரு பால பிரம்மசாரி; ஊர்த்துவரேதஸர் (விந்து மேல்நோக்கியே செல்லும் தன்மையுடையவர்); தூய நடத்தையுள்ளவர். ஆகவே, அவர் ஆடவர்கள் பெண்மணிகள் இருபாலரையுமே தமக்கு சேவை செய்ய அனுமதித்தார்.

101 அண்ணா சிஞ்சணிகர் மரத்தாலான கிராதிக்கு வெளியில் நின்றுகொண்டு குனிந்து மெதுவாக பாபாவின் இடக்கையைப் பிடித்துவிட்டுக்கொண் டிருந்தார். வலப்பக்கம் என்ன நடந்தது என்பதை கவனமாகக் கேளுங்கள்.

102 அங்கு ஒரு பெண்மணி இருந்தார். பாபாவிடம் அனன்னிய (வேறெதிலும் நாட்டமில்லாத) பக்தி கொண்டவர். பாபா அவரை 'அம்மாஃ என்று அழைப்பார். மற்றவர்கள் மாவசிபாயி (தாயுடன் பிறந்தவர்) என்று அழைத்தனர்.

103 மாவசிபாயி என்று மக்களால் விரும்பி அழைக்கப்பட்டாலும், அவருடைய இயற்பெயர் வேணுபாயி கௌஜல்கி. ஸாயீ பாதங்களில் ஈடிணையற்ற பக்தி கொண்டிருந்தார்.

104 அண்ணா சிஞ்சணிகருக்கு ஐம்பது வயதிற்குமேல் ஆகியிருந்தது; பற்கள் விழுந்துவிட்டன. மாவசிபாயியும் வயதானவர்; முதிர்ச்சியடைந்தவர். இருவருக்குமிடையேதான் தண்டா எழுந்தது.

105 அண்ணா சிஞ்சணிகர் பாபாவுக்கு சேவை செய்ய சிர்டீயில் தம் மனைவியுடன் வசித்துவந்தார். வயது முதிர்ந்த மாவசிபாயி ஒரு விதவை. பாபாவின் வயிற்றைப் பலமாகப் பிசைந்துவிட்ட வேகத்தில் மாவசிபாயிக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

106 நிர்மலமான மனமுடைய மாவசிபாயி, பாபாவுக்கு சேவை செய்வதில் தம்முடைய பலத்தையெல்லாம் காண்பித்தார். தம்முடைய இரு கைகளையும் சேர்த்துக்கொண்டு பாபாவின் வயிற்றை உக்கிரமாகப் பிசைந்துவிட்டார்.

107 பாபாவுக்குப் பின்னால் உறுதியாக நின்று கொண்டு அவருடைய வயிற்றை இரு கைகளாலும் மாற்றி மாற்றி அமுக்கிப் பிசைந்தார். அவருடைய செய்கை, பார்ப்பதற்குத் தயிர்கடைவதுபோல இருந்தது.

108 ஸாயீ நாமத்தை ஜபம் செய்வதிலேயே மனத்தைப் பறிகொடுத்த மாவசிபாயி, பயமேதுமின்றி வயிற்றை அமுக்கியும் பிசைந்தும் செய்யும் சேவையைத் தொடர்ந்தார். பாபாவும் வ­யோ அசௌகரியமோ ஏதும் இருந்ததாகக் காட்டவில்லை. நல்லாரோக்கியத்திற்கு உதவும் செயலாகவே இதை ஏற்றுக்கொண்டார்.

109 ஆயினும் இது வயிற்றையும் முதுகையும் ஒன்றாக்கிவிடுவது போன்ற அசாதாரணமான மஸாஜ்தான்õ இந்த சேவை மாவசிபாயிக்கு பாபாவிடம் இருந்த பிரேமையைத்தான் வெளிப்படுத்தியது. ஆயினும், பார்ப்பவர்கள் பாபா அவதிப்படுவது கண்டு இரக்கம் கொண்டனர்.

110 தம் மீது இருக்கும் கபடமற்ற அன்பால் விளைந்ததென்று அறிந்து, பாபா இம்மாதிரியான கடுமையான சேவைகளை ஏற்றுக்கொண்டார். இதன் மூலமாக அவர்கள் தம்மை என்றென்றும் நினைவில் வைத்துக்கொண்டு க்ஷேமத்தை அடையட்டும் என்றெண்ணினார்.

111 ஒரு ஞானியின் சங்கத்தில் இருக்கும் பேற்றை அடைய நாம் என்ன பெரிய தவம் செய்துவிட்டோம்? ஒன்றும் இல்லையேõ எந்த பக்தனையும் ஒதுக்கிவிடாத தீனவத்ஸலரான ஸாயீயின் கருணையன்றோ இதற்குக் காரணம்õ

112 மஸாஜ் செய்யும் பொழுது மாவசிபாயி காட்டிய திறமைதான் என்னேõ அவருடைய பலம் வாய்ந்த இயக்கத்தால் பாபா மேலும் கீழுமாகப் போய் வந்தார். அவ் வம்மையாரும் அவ்விதமே அசைந்தார்.

113 அண்ணா சிஞ்சணிகர் என்னவோ, மறுபக்கத்தில் லேசாகக் குனிந்தவாறு தம்முடைய சேவையைச் சீராகச் செய்துகொண் டிருந்தார். தம்முடைய சேவையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த மாவசிபாயிக்குத் தம்முடைய முகமும் விசையுடன் மேலும் கீழும் போய்வந்துகொண் டிருந்தது தெரியவில்லை. இதனால் என்ன நடந்ததென்று கேளுங்கள்.

114 சேவை செய்ய வேண்டுமென்கிற தீவிர ஆவலால் உந்தப்பட்ட மாவசிபாயிக்கு பாபாவின் வயிற்றைப் பிசைந்துவிட்டதில் பரம திருப்தி ஏற்பட்டது. ஆயினும் சேவை செய்யும் உற்சாகத்தில் அவர் ஆடிய ஆட்டத்தில், தலை ஒரு பக்கமாகச் சாய்ந்து அண்ணா சிஞ்சணிகரின் தலையை உரசியதுõ

115 மாவசிபாயி ஒரு தமாஷான பெண்மணி. இந்த வாய்ப்பைச் சிக்கெனப் பற்றிக்கொண்டு சொன்னார், ''ஓ, இந்த அண்ணா எவ்வளவு சபலபுத்தியுடையவன்õ முத­ல் என்னிடம் ஒரு முத்தம் கேட்கிறான்õ--

116 ''என்னை முத்தமிட விரும்புகிறாயே, தலை நரைத்துப்போன உனக்கு வெட்கமாக இல்லை?ஃஃ இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அண்ணா சிஞ்சணிகர் சண்டைக்குக் கிளம்பினார்.

117 ''வயோதிகனும் வலுவிழந்தவனுமாகிய நான் அத்தகைய மூர்க்கனா, பைத்தியக்காரனா? நீயே வ­ய வந்து என்னைச் சண்டைக்கு இழுக்கிறாய்; சண்டை போடவும் ஆர்வம் காட்டுகிறாய்õஃஃ

118 அவர்கள் இருவர் மீதும் அன்பும் பரிவும் கொண்ட பாபா, ஒரு சண்டை மூள்கிறதென்று தெரிந்து இருவரையும் சமரசப்படுத்த ஒரு சாமர்த்தியமான யுக்தியைக் கையாண்டார்.

119 பிரேமையுடன் அவர் கூறினார், ''ஓய் அண்ணா, எதற்காக இந்த அவசியமில்லாத கூப்பாடு? தாயை முத்தமிடுவதில் தவறென்ன என்று எனக்கு விளங்கவில்லையே.ஃஃ

120 சச்சரவு செய்தவர்கள் இருவருமே வெட்கித் தலை குனிந்தனர். ஏற்கெனவே பேசப்பட்ட கே­யும் கோபமான பதிலும் அசைவற்று நின்றன. நகைச்சுவையை அனுபவித்த சிரிப்பொ­ எங்கும் பரவியது. குழுமியிருந்தவர்கள் அனைவருமே நகைச்சுவை ததும்பிய இந் நிகழ்ச்சியை ரசித்தனர்.

121 இக் காதை ஒரு சாதாரண நிகழ்ச்சியாகத் தோன்றலாம். ஆயினும், ஒரு வாக்குவாதத்தை முடித்துவைக்கப் பலவிதமான யுக்திகள் இருக்கின்றன என்பதை இக் காதை வெளிப்படுத்துகிறது என்னும் காரணத்தால், புத்திகூர்மையுள்ள கதை கேட்பவர்கள் இதன் மதிப்பை உணர்வார்கள்.

122 சச்சரவு செய்தவர்களுக்கு ஒரு தாய்க்கும் மகனுக்கும் உரிய அன்பு இருந்திருந்தால், இவ்விதமான தண்டா எழுந்தே இருக்காது; கோபத்திற்கு எங்கே இடம்?

123 பிரம்படி வாங்கிக்கொண் டிருக்கும்பொழுது ஒருவர் மகிழ்ச்சியால் பூரித்துச் சிரிக்கலாம்; மென்மையான மலரால் அடிக்கப்படும்பொழுது கண்ணீர் பெருக்கலாம்õ உள்ளுக்குள் ஏற்படும் அனுபவமே மனக்கிளர்ச்சி அலைகளாக வெளிப்படுகிறது. இந்த அனுபவம் எல்லாருக்கும் பொதுவன்றோ?

124 பாபாவினுடைய சகஜமான யுக்தி அற்புதமானதுõ அவருடைய வார்த்தைகள் சூழ்நிலைக்கு மிகப்பொருத்தமாக அமைந்ததால், கேட்டவர்கள் திருப்தியடைந்தது மட்டுமல்லாமல் போதனையையும் மின்னலெனப் புரிந்துகொண்டார்கள்.

125 பிறிதொரு சமயத்தில் இதேபோன்று பாபாவின் வயிறு உக்கிரமாகப் பிசைந்துவிடப்பட்ட நேரத்தில், பாபாவின் சிறந்த பக்தர்களிலொருவர் சேவை அதீதமாக (மிகையாக) இருக்கிறதே என்று ஆதங்கப்பட்டு இரக்கம் கொண்டார்.

126 ''அம்மையே, கொஞ்சம் தயவு காட்டுங்கள்õ இவ்வளவு கடுமையாகவா உடலைப் பிடித்துவிடுவார்கள்? உங்களிடம் கொஞ்சம் கருணை இருக்கட்டும். பாபாவின் ரத்த நாளங்கள் வெடித்துவிடும் போ­ருக்கிறதேõஃஃ

127 இந்த வார்த்தைகள் காதில் பட்டவுடனே பாபா தம்முடைய இருக்கையி­ருந்து சட்டென்று எழுந்தார். ஸட்காவைக் கையிலெடுத்து பூமியின்மேல் பலமாக அடித்தார்.

128 அவருக்கு பயங்கரமாகக் கோபம் வந்தது. நெருப்புக் கோளங்களைப் போன்று சிவந்த கண்கள் சுற்றும் முற்றும் உருட்டி உருட்டி விழித்தன. அந்த சமயத்தில் அவரெதிரில் யாரால் நிற்க முடியும்?

129 இருட்டில் பூனையின் கண்கள் பளபளப்பதைப்போலப் பக­லேயே அவருடைய கண்கள் ஜொ­த்தன. கண்களி­ருந்து எழுந்த ஜுவாலையால் சிருஷ்டியனைத்தையுமே பொசுக்கிச் சாம்பலாக்கிவிடுவார் போலத் தோன்றியது.

130 ஸட்காவின் ஒரு முனையை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு அதைத் தம்முடைய வயிற்றின் நடுவில் ஆழமாகப் பதித்துக்கொண்டார். மறுமுனையைத் தமக்கெதிரி­ருந்த கம்பத்தில் பதித்துக் கம்பத்தை இருகைகளாலும் அணைத்துப் பலமாக அழுத்தினார்.

131 ஒன்றேகால் முழம் நீளமுள்ள ஸட்கா முழுவதும் வயிற்றினுள் சென்றுவிட்டதுபோல் தோன்றியது. வயிறே வெடித்து பாபாவின் உயிருக்கே உலை வைத்துவிடும் போலத் தோன்றியது.

132 கம்பவோ ஆழமாக நடப்பட்டு உறுதியாக இருந்தது. அது எவ்விதம் நகரமுடியும்? பாபா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கடைசியில் கம்பத்தைத் தம் வயிற்றோடு சேர்த்து அணைத்துப் பிடித்தார். பார்வையாளர்கள் நடுநடுங்கினர்.

133 அவருடைய வயிறு வெடித்துவிடப் போகிறதென்று பயந்து எல்லாரும் வியப்பிலாழ்ந்து உறைந்து போயினர். ''இறைவாõ இதென்ன திடுக்கிடவைக்கும் வேண்டப்படாத நிகழ்ச்சிõ எவ்வளவு துர்ப்பாக்கியகரமான பேராபத்துõஃஃ

134 கவலையுற்ற மக்கள் இவ்வாறு புலம்பினர். இந்தக் கொடுமையான துரதிருஷ்ட நிலையில் என் செய்வது? மாவசிபாயீ கொண்டுவந்ததா இந்தப் பேராபத்து? ஆனால், பாபா தம் பக்தையைக் கைவிடுவதாக இல்லை.

135 சேவை செய்யும் பக்தரை யாராவது குற்றங்குறை கூறினால், எப்பொழுதுமே பாபா அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்.

136 பாபாவின் மீதிருந்த பிரேைைமயால், பாபாவின் நலன் கருதி அந்த பக்தர் மாவசிபாயிக்கு ஜாடைமாடையாக ஒரு பரிந்துரை செய்ய நினைத்தார். அது இந்த ஆபத்திலா கொண்டுவந்து விடவேண்டும்?

137 இறைவனுக்கே கருணை பிறந்துவிட்டதுõ ஸாயீயின் மனம் சாந்தமடைய ஆரம்பித்ததுõ பயங்கரமான அம் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, பாபா தமது இருக்கையில் வந்தமர்ந்தார்.

138 பிரேமையுடைய பக்தர் தைரியமுள்ள மனிதர். ஆனால், பாபாவின் கண்டிப்பான எதிர்ப்பைப் பார்த்த பிறகு, மறுபடியும் அம்மாதிரியான தவறு செய்வதில்லை என்று பிரதிக்ஞை (சூளுரை) செய்துகொண்டார்.

139 அந்த நாளி­ருந்து, யாருடைய விவகாரங்களிலும் தலையிடுவதில்லையென்றும் அவரவர் விருப்பப்படி அவரவர் செயல்படட்டும் என்றும் தீர்மானம் செய்துகொண்டார்.

140 ஸமர்த்த ஸாயீ எதை ஏற்றுக்கொள்வது, எதை நிராகரிப்பது என்பதை நன்கு அறியக்கூடிய மகத்தான சக்திவாய்ந்தவர். அவ்வாறிருக்கும்பொழுது, வேறொருவர்

எதற்காக சேவை செய்பவர்களின் அருகதையையும் தவறுகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்?

141 இந்த சேவை பாபாவை மகிழ்ச்சியுறச் செய்கிறது, அந்த சேவை பாபாவிற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது, என்று நினைப்பதெல்லாம் நமது மனத்தின் விகாரங்களே. உண்மை நிலை நமக்கென்றுமே புலப்படாது.

142 ஆக, இக் காதை நகைச்சுவையும் கே­யும் நிறைந்தது. அவரவர்களுடைய சக்திக்கேற்றவாறு கேட்பவர்கள் போதனை பெறுவார்கள். ஸாயீகாதையின் இனிமையைப் பூவிலுள்ள மகரந்தத்தைத் தேனீ சுவைப்பது போலச் சுவைப்பீர்களாகõ

143 ஹேமாட் ஸாயீயின் பாதங்களில் விநயத்துடன் பணிகிறேன். அடுத்த அத்தியாயம் இதைவிட அர்த்தபுஷ்டி (பொருட்செறிவு) வாய்ந்தது. தயாசாகரமான ஸாயீ, தாமோதர் என்னும் பக்தரின் வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பார்.

144 அதுவும் ஒரு மஹத்தான அற்புதம்õ உலகவாழ்வில் அடிபட்டு ஓய்ந்துபோன தாமோதரைத் தம்மிடம் அழைத்து அவருடைய விசாரங்களி­ருந்து விடுதலையளித்தார்.