Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 45


45. குருபாத மஹிமை




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 ஒன்றுமறியாதவர்போல மாவரைக்கும் ஏந்திரத்தை இயக்கி பக்தர்களை நல்வழிப்படுத்துவதற்காகத் தம்முடைய ஸத் சரித்திரத்தை என்னை எழுதத் தூண்டியவரின் நுண்திறன் உலகநடைக்கு அப்பாற்பட்டதன்றோõ

2 நான்கு புருஷார்த்தங்களில் (அறம், பொருள், இன்பம், மோட்சம்) கடைநிலை மோட்சம். ஆயினும் அதுவும் குருபாதங்களின் சக்திக்கு ஒப்பாகாது. அத்தகைய குருவின் பாததீர்த்தத்தை அருந்தியவனின் வீட்டைத் தேடிக்கொண்டு மோட்சம் சத்தம் செய்யாமல் வரும்.

3 குரு கருணாமூர்த்தியாக அமைந்துவிட்டால், சம்சார வாழ்க்கை சுகமாக இருக்கும், நடக்காததெல்லாம் நடக்கும். அரைக்கணத்தில் உம்மை அக்கரை சேர்ப்பார்.

4 இந்தப் போதி இவ்வளவு நீளம் எழுதப்பட்டிருப்பினும், கதைகளை மிகச் சுருக்கமாகவே சொல்­யிருக்கிறேன். ஓõ ஸாயீயின் வானளாவிய கீர்த்தியை நான் எப்படித்தான் வர்ணிப்பேன்õ

5 எந்த உருவத்தின் தரிசனம் நித்தியதிருப்தியை அளித்ததோ, எந்த உருவத்தின் சகவாசத்தில் ஆனந்தத்தை அனுபவித்தோமோ, எந்த உருவம் நமக்குப் பிறவி பயத்தி­ருந்து சுலபமாக விடுதலையளித்ததோ, அந்த தெய்வீகமான ஸாயீயின் உருவம் மறைந்துவிட்டது.

6 எந்த உருவம் நம்மை ஆன்மீக மார்க்கத்தில் செலுத்தியதோ, எந்த உருவம் நமக்கு மாயையி­ருந்தும் மோஹத்தி­ருந்தும் நிவிர்த்தி அளித்ததோ, எந்த உருவம் நமக்கு அத்தியந்த க்ஷேமலாபங்களைக் கொணர்ந்ததோ, அந்த தெய்வீகமான ஸாயீயின் உருவம் மறைந்துவிட்டது.

7 எந்த உருவம் வாழ்க்கையின் பயங்களையும் பீதிகளையும் நாசம் செய்ததோ, எந்த உருவம் நியாயம்/அநியாயம்பற்றிய விழிப்புணர்வை ஊட்டியதோ, எந்த உருவம் சங்கடங்கள் வந்தபோது மனத்திற்குத் தைரியத்தைக் கொடுத்ததோ, அந்த தெய்வீகமான ஸாயீயின் உருவம் மறைந்துவிட்டது.

8 தியானம் செய்வதற்காக அவருடைய சொரூபத்தை நம்முடைய மனத்தில் ஸ்தாபனம் செய்துவிட்டு, அவதாரத்தை முடித்துக்கொண்டு தம்முடைய என்றும் நிலையான

9 அவதார காரியம் பூரணமானவுடனே அவருடைய ஆகிருதி நம் கண்பார்வையி­ருந்து மறைந்துவிட்டது. ஆயினும், 'ஸாயீ சொல்லோவியமானஃ இந்தக் காவியத்தின் ஒவ்வொரு பதமும் அவரை நினைவுக்குக் கொண்டுவரும்.

10 மேலும், கதைகளைக் கேட்பதால் மனத்திற்கு ஒருமுனைப்பட்ட நிலை லாபமாகும். அதி­ருந்து பிறக்கும் சாந்தி அபூர்வமானது. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

11 கதைகேட்கும் நீங்கள் சர்வ ஞானமும் படைத்தவர்கள்; உங்களுடைய முன்னிலையில் நான் ஓர் அற்ப ஞானமுடையவன். அவ்வாறு இருந்தபோதிலும், இது சொல்லால் ஸாயீக்குச் செய்யப்பட்ட யக்ஞம் (யாகம்). ஆகவே, நன்றியுணர்வுடனும் பயபக்தியுடனும் கேளுங்கள்.

12 இந்த வாக்கு யக்ஞம் மங்களங்களை விளைவிக்கக்கூடியது. என்போன்ற அஞ்ஞானியால் செய்யப்படும் இந்த யாகத்தை, 'செய்வது அறிந்து செய்யும்ஃ திறமை படைத்த ஸாயீ வெற்றிகரமாக நிறைவு செய்வார். அனைத்துமறிந்த கதைகேட்பவர்கள் இதையும் அறிவர்.

13 எவர் முத­ல் ஸாயீ பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, ஒருமுகப்பட்ட மனத்துடன் இந்த மஹா மங்களமானதும் பரம பாவனமானதுமான (ஒப்பில்லாத தூய்மையளிப்பதுமான) கதையைச் செவிமடுக்கிறாரோ, --

14 எந்த பக்தர் தமக்கு நன்மைகள் ஏற்படவேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு பக்திபா(ஆஏஅ)வத்துடனும் ஒருமுனைப்பட்ட மனத்துடனும் இந்தக் கதாமிருதத்தைச் சுவைக்கிறாரோ, அவருடைய வழிபாடு என்றுமே வியர்த்தம் ஆகாது.

15 ஸாயீ அவருடைய வேண்டுகோள்களை நிறைவேற்றுகிறார். உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறார். அவர் செய்யும் வழிபாடு என்றுமே வீண்போவதில்லை. கடைசியில் அவர் எல்லாப் பேறுகளையும் பெற்றவர் ஆகிறார்.

16 நாற்பத்துநான்கு அத்தியாயங்களின் முடிவில், ஸாயீயின் நிர்யாணம் (கடைசிப் பயணம்) பரிசீலனை செய்யப்பட்ட பிறகும், இந்தக் காவியம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே போகிறது. இந்த அற்புதத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

17 கடந்த அத்தியாயத்தில் ஸாயீயின் நிர்யாணம் கிரமமாக நிறைவு செய்யப்பட்டது. ஆயினும், ஸாயீலீலையும் காதிண்1 பூச்சியும் ஒருகணமும் ஓய்வு அறியமாட்டா.

18 ஆழ்ந்து பார்த்தால், இதில் வியப்பு ஏதுமில்லை; நிர்யாணம் (பூதவுடலைத் துறப்பது) என்பது உடலுக்கு மட்டுந்தான். இந்த ஸாயீ ஜனனமரணங்களுக்கு அப்பாற்பட்டவர்; முன்பிருந்தது போலத் தோன்றாநிலையில் இருக்கிறார்.

19 தேஹம் மறைந்துவிட்டது; உருவமும் மறைந்துவிட்டது. ஆனால், அவர் தோன்றாநிலையில் முன்பு எப்படி இருந்தாரோ அப்படியே இப்பொழுதும் இருக்கிறார்.

20 இது சம்பந்தமான கதைகள் அநேகம் உண்டு. விவரிக்கப் புகுந்தால் காவியம் வெகு விஸ்தாரமாகிவிடும். ஆகவே, அவற்றின் சாரத்தை மட்டும் பிழிந்தெடுத்துக் கேட்பவர்களுக்கு பயபக்தியுடன் அளிப்போமாக.

21 எந்தக் காலத்தில் ஸாயீ அவதரித்தாரோ அந்தக் காலத்திலேயே வாழ்ந்து, அவருடைய சத்சங்கத்தை சுலபமாகவும் திரும்பத் திரும்பவும் அனுபவித்த நாமெல்லாரும் மஹா பாக்கியசா­கள்.

22 இவ்வாறு பாக்கியம் பெற்ற போதிலும், சத்து இல்லாத விஷயங்களி­ருந்து விடுபட்டு, சம்சாரத்தி­ருந்து நிவிர்த்தியடைந்து, பகவானிடம் பிரீதி கொள்ளவில்லையெனில் நமக்கு நரகத்தைத் தவிர வேறென்ன கிடைக்கும்?

23 எல்லா இந்திரியங்களிலும் ஸாயீபக்தி நிரம்பியிருப்பதைத் தவிர, வேறு எது வழிபாட்டு ஒழுக்கம்? இல்லையெனில், கண்கள் ஸாயீயின் உருவத்தைப் பார்த்துக்கொண் டிருக்கும்போது வாய் திறக்காது; பேச்சு அடைத்துவிடும்.--

24 ஸாயீ பஜனையைக் கேட்டுக்கொண் டிருப்போம்; நாக்கோ தித்திப்பான மாம்பழச் சாற்றில் மூழ்கியிருக்கும். கைகள் ஸாயீபாதங்களைத் தொட்டுக்கொண் டிருக்கும்; அதே சமயம், சுற்றியிருக்கும் ரத்தினக் கம்பளத்தின் வழுவழுப்பைத் தொட்டுப் பார்க்கவும் துடிக்கும்.

25 ஒருகணம் ஸாயீயிடமிருந்து பிரிந்திருப்பதை சகித்துக் கொள்ளக்கூடியவர் எப்படி ஸாயீபக்தர் ஆகமுடியும்? உலகியல் வாழ்வில் விரக்தி (பற்றின்மை) ஏற்படாத மனிதரை ஸாயீபாதங்களின்மேல் காதல் கொண்டவர் என்று எப்படிச் சொல்லமுடியும்?

26 பதிவிரதையான பெண்மணி, தன் வழியில் எதிர்ப்படும் மற்ற ஆடவரை மாமனாராகவோ மைத்துனராகவோ சகோதரராகவோ கருதியே வணக்கம் செலுத்துவாள்.

27 பதிவிரதையின் மனம் நிச்சலமானது; எக்காரணம் கொண்டும் தன்னுடைய குடும்பத்தைக் கைவிடமாட்டாள். தன்னுடைய ஜன்மத்தின் ஒரே ஆதாரமான கணவனின்மீது அபாரமான பிரேமை செலுத்துவாள்.

28 கற்புநெறியில் ஒழுகும் பெண்மணி எந்த அன்னியரையும் கனவிலும் கணவனாக பா(ஆஏஅ)விக்கமாட்டாள். அன்னியர்களைச் சந்திக்கவேண்டுமென்ற எண்ணமே அவளுக்கு எழாது.

29 அவளுக்குத் தன் கணவனே தெய்வம். வேறெவரையும் எப்பொழுதும் கணவனுக்கு நிகராக ஒப்பிடமாட்டாள். அவளுடைய இணைபிரியாத அன்பு கணவனிடம் மட்டுமே. சிஷ்யன் குருவிடம் இந்த ரீதியிலேயே அன்பு காட்டவேண்டும்.

30 பதிவிரதை கணவனிடம் கொள்ளும் பிரேமை, குருவிடம் சிஷ்யன் கொள்ளவேண்டிய பிரேமைக்கு உபமானமாக ஒப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், சிஷ்யன் குருவிடம் கொள்ளக்கூடிய பிரேமைக்கு எல்லையே இல்லை. அதன் மஹிமையை, ஒழுக்கத்தில் சிறந்த சிஷ்யனே அறிவான்.

31 உலகியல் வாழ்க்கைக்கே ஸஹாயம் (உதவி) செய்யமுடியாதவர்களால் பரமார்த்த (ஆன்மீக) வாழ்வுக்கு எப்படி உதவி செய்யமுடியும்? சம்பந்தியானாலும் சரி, மாப்பிள்ளையானாலும் சரி, மனைவியேயானாலும் சரி, நம்முடன் சேர்ந்து பாரம் சுமப்பார்கள் என்று யாரையுமே எதிர்பார்ப்பதற்கில்லை.

32 அன்னையும் தந்தையும் 'இவன் என் மகன்ஃ என்று சொந்தம் கொண்டாடுவர். புத்திரனோ சொத்தின்மேல் கண்வைப்பான். கணவன் நெடுங்காலம் வாழவேண்டுமென்று மனைவி கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய்வாள். ஆனால், பரமார்த்த வாழ்வில் கூட்டுச் சேர்ந்து செயல்பட யாருமே இல்லைõ

33 பரமார்த்த வாழ்வில் உதவுவதற்கு இன்னும் வேறு யார் இருக்கிறார் என்று நிதானமாகச் சிந்தனை செய்து பார்த்தீரானால், கடைசியில் கிடைப்பது நீங்களே, நீங்கள் ஒருவரேõ

34 நித்தியம் எது, அநித்தியம் எது என்பதை அறிந்து, இவ்வுலக சம்பந்தமாகவும் மேலுலக சம்பந்தமாகவும் செய்யும் செயல்களுக்குப் பலன் நாடுவதைத் துறந்தபின், அஷ்டாங்க யோகம் பயின்று மோக்ஷம் அடைபவர் பாக்கியசா­யாவார்.

35 வேறொருவர்மேல் சார்ந்து இருப்பதை விடுத்துத் தம்மிலேயே பலமான நம்பிக்கை வைத்துக் கச்சைக்கட்டிக்கொண்டு எவர் செய­ல் இறங்குகிறாரோ, அவரே பரமார்த்த வாழ்வில் வெற்றி பெறுகிறார் (மோக்ஷம் அடைகிறார்).

36 பிரம்மம் நித்தியம்; உலகவாழ்வு அநித்தியம். குருவே ஸத்தியமான பிரம்மம். அநித்தியமான விஷயங்களைத் துறந்துவிடுங்கள்; குருவைப்பற்றியே சிந்தியுங்கள். இந்த பா(ஆஏஅ)வனையே ஆன்மீக சாதனை மார்க்கம்.

37 அநித்தியங்களைத் துறந்துவிடின் வைராக்கியம் (உலகப்பற்று இன்மை) பிறக்கிறது. ஸத்குரு பிரபஞ்சப் பேருணர்வால் நிரம்பியிருப்பது தெரிகிறது. எல்லா உயிர்களிலும் இறைவன் உறைவது உணரப்படுகிறது. இதற்கு 'அபேத வழிபாடுஃ என்று பெயர்.

38 பயத்தாலோ பிரேமையாலோ யார், யார்மீது இடைவிடாது தியானம் செய்துவந்தாலும், தியானம் செய்பவர் தியானிக்கப்பட்டவராகவே மாறிவிடுகிறார். கம்சனும் ராவணனும் கீடமும் (வண்டின் புழுநிலை) இதற்கு உதாரணங்கள்1.

39 தியானம் ஒருமுகப்படவேண்டும். தியானத்திற்கு இணையான ஆன்மீக சாதனை வேறெதுவும் இல்லை. யார் இந்த சாதனையைத் தாமாகவே ஏற்றுக்கொண்டு செய்கிறாரோ, அவர் தம்மைத் தாமே உயர்த்திக்கொள்கிறார்.

40 அதன் பிறகு, ஜனனமும் மரணமும் இங்கு எப்படி இருக்கும்? ஜீவ பா(ஆஏஅ)வம் அறவே மறந்துபோகிறது. மனம் பிரபஞ்ச உணர்வில் மூழ்குகிறது. ஆத்மாவுடன் லயித்த சுகம் ஒன்றே மிஞ்சுகிறது.

41 உன் குருவின் நாமத்தை இடைவிடாது ஜபித்துக்கொண்டே இரு. அதி­ருந்து பரமானந்தம் பிறக்கும். உயிரினங்கள் அனைத்திலும் இறைவனை தரிசனம் செய்வாய். நாமத்தின் மஹிமை இதைவிட வேறென்னவாக இருக்கமுடியும்?

42 எவருடைய நாமம் இந்த மஹிமையை உடையதோ, அவரை நான் ஸத் பா(ஆஏஅ)வத்துடன் வணங்குகிறேன். உடலாலும் வாக்காலும் மனத்தாலும் ஒன்றி, அனன்னியகதியாக (வேறெந்த வழியையும் நாடாது) அவரிடம் நான் சரணடைகிறேன்.

43 இந்த சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கதையொன்றை கேட்பவர்களுக்குச் சொல்லுகிறேன். உங்களுடைய நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு முனைப்பட்ட சித்தத்துடன் கேளுங்கள்.

44 கைலாசவாசி1 ஆகிவிட்ட காகா தீக்ஷிதர் ஸமர்த்த ஸாயீயின் ஆக்ஞையின்படி நித்திய நியமமாக பாகவதம் வாசித்துவந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

45 ஒருநாள், சைளபாடீயில்2 இருந்த காகா மஹாஜனியின் இல்லத்தில் போஜனம் செய்த பிறகு, தீக்ஷிதர் நித்திய நியமத்தின்படி போதியை (ஏகநாத பாகவதம்) வாசித்தார்.

46 கூடியிருந்தவர்கள் ஒப்பில்லாத ஏகநாத பாகவதத்தின் சுவை மிகுந்த இரண்டாவது அத்தியாயத்தைச் செவிமடுத்தனர். கேட்டவர்களின் அந்தரங்கம் சாந்தியாலும் களிப்பாலும் நிரம்பியது.

47 காகா மஹாஜனி, மாதவராவ் (சாமா) என்ற மற்றொரு பாபாபக்தருடன் அமர்ந்து ஏகநாத பாகவதத்தை ஒருமுனைப்பட்ட மனத்துடன் கேட்டார்.

48 பாக்கியவசமாக, கதையும், கேட்பவர்களின் ஆசையைத் திருப்திசெய்யும் விதமாகவும், பகவானை வழிபடுவதில் ஆர்வம் விளைவிக்கும்படியாகவும் சுவாரசியமாக அமைந்தது.

49 விரித்துரைக்கப்பட்ட கதை ரிஷப குலத்தின் ஒன்பது3 ஒளிவிளக்குளான கவி, ஹரி, அந்தரிக்ஷர் ஆகியவர்களைப்பற்றியது. ஆனந்தத்தை விளைவித்து ஆன்மீக போதனையையும் அளிக்கக்கூடிய கதை.

50 அவர்கள் ஒன்பது பேர்களும் இறைவடிவானவர்கள். எல்லையற்ற பக்தியும் மன்னிக்கும் குணமும் நிரம்பியவர்கள். ஒருசமயம் அவர்கள் பாகவத4 தர்மத்தின் பிரதாபத்தை வர்ணித்தனர். அதைக் கேட்ட ஜனக மஹாராஜா ஆச்சரியத்தால் பேச்சிழந்துபோனார்.

51 எது அத்தியந்த க்ஷேமம்? ஹரிபக்தியில் உயர்ந்தது எது? ஹரியின் மாயையை சுலபமாகக் கடப்பது எப்படி? குருவின் திருவடியே சிரேயசு (மேன்மை) அளிப்பவற்றில் மிக உத்தமமானது.

52 கர்மம் (செயல் புரிதல்), அகர்மம் (பற்றின்றிச் செயல் புரிதல்), விகர்மம் (விலக்கப்பட்ட செயல்களைச் செய்தல்)- இவை எல்லாவற்றின் மருமமும் ஒன்றே. குருவே பரமாத்ம ரூபம். குருவழிபாடே பாகவத தர்மம்.

53 ஒவ்வொரு அவதாரத்தின் விசேஷ குணங்களை விவரித்து, மஹாவிஷ்ணுவின் சரித்திரத்தை த்ரமீள நாதர் பிரவசனம் (சமயச் சொற்பொழிவு) செய்தார். நாராயணர், புருஷர் என்னும் பெயரைப் பெற்ற சூக்குமத்தையும் விளக்கினார்.

54 பின்னர், பகவானை வழிபடாதவர்களின் கதியைச் சமஸ நாதர் ஜனகருக்கு விவரித்தார். வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மாக்களைச் செய்யாமல் தூக்கியெறிந்தவர்களை சர்வநாசம் தொடரும் என்றும் எடுத்துரைத்தார்.

55 எல்லாருடைய அந்தரங்கத்திலும் ஹரி வாசம் செய்கிறார். ஆகவே, எவரையும் வெறுக்கக்கூடாது. ஒவ்வொரு பிண்டத்திலும் இறைவனைக் காணுதல் வேண்டும். ஏனெனில், அவன் இல்லாத இடமேயில்லைõ

56 ஒன்பதாவது சகோதரராகிய கரபாஜனர் கடைசியாக, கிருதயுகத்திலும் திரேதாயுகத்திலும் துவாபரயுகத்திலும் எந்தெந்த மூர்த்திகளை தியானம் செய்யவேண்டும் என்பதைச் சொல்­ ஆன்மீகப் பேருரையை முடித்தார்.

57 க­யுகத்தில் ஒரே சாதனைதான் உண்டு; ஹரிபாதத்தையும் குருபாதத்தையும் மனத்தில் இருத்துவது. அச் செய்கையே பிறவி பயத்தை அழித்துவிடும். சரணாகதி அடைந்தவர்களுக்கு உண்மையான அடைக்கலம் ஹரிபாதமும் குருபாதமுமேõ

58 போதி வாசிப்பில் இப் பகுதி முடிந்தபிறகு காகாஸாஹேப் உரக்கக் கூவினார், ''நவநாதர்களின் செயல்கள் எவ்வளவு அற்புதமானவைõ அவர்களுடைய மனோபாவம் கற்பனைக்கெட்டாதது அன்றோ?ஃஃ

59 பின்னர் அவர் மாதவராவிடம் கூறினார், ''அத்தகைய பக்தி எவ்வளவு கடினமானதுõ மூடர்களாகிய நாம் எவ்வாறு அந்த சக்தியைப் பெறுவோம்? ஓõ எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும் இது நிறைவேறப்போவதில்லைõ --

60 ''மஹா பிரதாபிகளாகிய (புகழ் பெற்றவர்களாகிய) நவநாதர்கள் எங்கே? பிறவிப் பாபிகளாகிய நாம் எங்கே? அத்தகைய பக்தி சுலபமா என்ன? ஸத்தியமும் ஞானமும் சேர்ந்து உருவெடுத்தாற்போன்ற நவநாதர்கள் பாக்கியவான்கள்.--

61 ''அத்தகைய பக்தியை நாம் என்றாவது பெறுவோமா? அதை அடைவதற்குண்டான உபாயந்தான் என்னவோ? எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை; மனோதிடத்தையும் இழந்துவிட்டேன். ஜன்மம் எடுத்து என்ன பிரயோஜனம்õஃஃ

62 'காகா ஸாஹேப் ஒரு பிரேமையுள்ள பக்தர். அவர் எதற்காக இவ்வாறு பச்சாத்தாபப்பட வேண்டும்? அவருடைய உறுதியான மனம் ஏன் சஞ்சலப்பட வேண்டும்?ஃ இவ்விதம் சிந்தித்த சாமா மனக்கலக்கம் அடைந்தார்.

63 சாமா என்பது மாதவராவின் செல்லப்பெயர். காகா ஸாஹேபிடம் மிகுந்த நல்­ணக்கம் கொண்டவர் சாமா. ஆகவே, அவருக்குக் காகாவின் மனோநிலை பிடிக்கவில்லை. கழிவிரக்கமும் இழிநிலை உணர்வும் காகா ஸாஹேபை ஆட்கொண்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

64 சாமா பதில் கூறினார், ''ஸாயீயைப் போன்ற ஓர் ஆபரணத்தை அணியும் பாக்கியம் பெற்றவர் எக்காரணத்துக்காக முகம் கவிழ வேண்டும்? அவர் உயிரோடிருப்பதே வீண்õ--

65 ''ஸாயீபாதங்களில் அமோகமாக (மிகுந்த) சிரத்தை இருக்கும்போது மனத்தில் ஏன் இந்தக் கலக்கம்? நவநாதர்களுடைய பக்தி பிரபலமாக இருக்கலாம். நம்முடைய பக்தியும் பிரேமையை அடித்தளமாகக் கொண்டது அன்றோ?--

66 ''ஏகநாதரின் விரிவுரையுடன் சேர்த்து பாகவதத்தின் பதினொன்றாவது அத்தியாயத்தையும், பா(ஆஏஅ)வார்த்த ராமாயணத்தையும் தினமும் நீங்கள் வாசிக்கவேண்டும் என்பது உங்களுக்கு இடப்பட்ட உறுதியான ஆணை அன்றோ?--

67 ''அதுபோலவே, ஹரியின் நாமத்தையும் குருவின் நாமத்தையும் ஸ்மரணம் செய்யவேண்டும் என்பது பாபாவின் ஆணையும் பிரமாணமும் அன்றோ? அதுவே உங்களைப் பிறவிக்கடலைக் கடக்கவைக்கும். நீங்கள் கவலைப்படுவதன் காரணந்தான் என்னவோ?ஃஃ இதைக் கேட்ட காகா சிறிது ஆறுதலடைந்தார்.

68 இருந்தபோதிலும், கத்திமுனையில் நடப்பது போன்ற, நவயோகிகளின் வாழ்நெறியையும் விரதங்களையும் சிறிதளவாவது கடைப்பிடிக்க முடியுமா என்பதே காகாவின் இடைவிடாத விசாரமாக இருந்துவந்தது.

69 'நவயோகிகளின் பக்தியே உயர்ந்தது; மிகச் சிறந்தது. எந்த உபாயத்தால் எனக்கு அது சித்திக்கும்? அப்பொழுதுதான் இறைவன் என் அருகில் வருவான்.ஃ இந்த எண்ணமே அவருடைய மனத்தை வாட்டி வதைத்தது.

70 ஆகவே, உட்கார்ந்திருந்தபோதும் படுத்திருந்தபோதும் இவ்வெண்ணமே அவருடைய மனத்தைக் குடைந்தது. அடுத்த நாள் ஓர் அற்புதம் நிகழ்ந்ததுõ கதைகேட்பவர்களே, அதைப்பற்றி விரிவாகக் கேளுங்கள்.

71 அந்த நிகழ்ச்சியின் அற்புதத்தைப் பாருங்கள். அன்று அதிகாலையில் பாகாடே என்னும் குடும்பப் பெயர் கொண்ட ஆனந்தராவ் என்பவர் (முழுப்பெயர் ஆனந்தராவ் பாகாடே) மாதவராவைத் தேடிக்கொண்டு வந்தார்.

72 அவர் வந்தது காகா தீக்ஷித் பாகவதம் வாசிக்கும் காலை நேரம். ஆனந்தராவ் மாதவராவின் அருகில் அமர்ந்து தமது கனவின் விசித்திரத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

73 இங்கு, போதி வாசிப்பு நடந்துகொண் டிருந்தது. அங்கு, இருவரும் பரஸ்பரம் குசுகுசுவென்று பேசிக்கொண் டிருந்தனர். இதன் விளைவாக, வாசிப்பவர், கேட்பவர்கள் இரு சாராரின் கவனமும் சிதறியது.

74 ஆனந்தராவ் சஞ்சலபுத்திக்காரர். அவர் மாதவராவிடம் சொப்பனத்தை விளக்கிக்கொண் டிருந்தார். இருவரும் இவ்வாறு பாகவதம் கேட்டுக்கொண்டே குசுகுசுவென்று பேசிக்கொண் டிருந்தனர். பாகவத வாசிப்பு ஒருகணம் நின்றது.

75 காகா ஸாஹேப் அவர்களை வினவினார், ''இப்பொழுது என்ன அற்புதம் நடந்துவிட்டது? நீங்கள் இருவர் மட்டும் மகிழ்ச்சி காட்டுகிறீர்கள். விஷயம் என்னவென்று விவரமாக எங்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாதா?ஃஃ

76 அதற்கு மாதவராவ் பதில் சொன்னார், ''நேற்றுதான் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதற்கு விளக்கம் உடனே கையோடு கிடைத்துவிட்டதுõ பக்தியின் கரைசேர்க்கும் லக்ஷணத்தைப் (சிறப்பியல்பைப்) பாருங்கள்.--

77 ''பாகாடேவின் சொப்பன விவரத்தைக் கேளுங்கள். பாபா எவ்வாறு தரிசனம் தந்தார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய சந்தேகம் நிவிர்த்தியாகும். நீங்கள் குருபாதங்களில் கொண்ட பக்தி பரிபூரணமானது என்றும் அறிவீர்கள்.ஃஃ

78 இந்தக் கட்டத்தில், சொப்பனத்தில் என்ன நடந்ததென்று அறிந்துகொள்ள எல்லாருமே ஆர்வமுற்றனர். குறிப்பாகக் காகா ஸாஹேப் மிகுந்த ஆர்வம் காட்டினார். சந்தேகம் எழுந்ததே அவருக்குத்தானே?

79 எல்லாருடைய ஆர்வத்தையும் கண்ட ஆனந்தராவ், தம்முடைய கனவை விவரித்தார். கூடியிருந்தவர்கள் ஸத்பா(ஆஏஅ)வம் நிறைந்த பக்தர்கள்; கேட்டு வியப்பிலாழ்ந்தனர்.

80 ''ஒரு மஹாசமுத்திரத்தில் நான் இடுப்பளவு நீரில் நின்றுகொண் டிருந்தேன். சற்றும் எதிர்பாராதவிதமாக ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ என் கண்பார்வையில் படும்படி அங்கே தோன்றினார்.--

81 ''ரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில் ஸாயீ அமர்ந்திருந்தார். அவருடைய பாதங்கள் நீரில் மூழ்கியிருந்தன. இதுவே நான் கண்ட காட்சி.--

82 ''அந்த மனோஹரமான உருவத்தைப் பார்த்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். அது ஒரு கனவு என்பது அப்பொழுது யாருக்கு ஞாபகமிருந்தது? தரிசனம் கண்டு மனம் ஆனந்தமடைந்தது.--

83 ''மாதவராவ் அப்பொழுது பக்கத்தில் நின்றுகொண் டிருந்தது எவ்வளவு அற்புதமான யோகம்õ அவர் என்னிடம் உணர்ச்சி ததும்பக் கூறினார், 'ஆனந்தராவ், ஸாயீயின் பாதங்களில் விழுந்து வணங்கும்.ஃ--

84 ''நான் அவருக்குப் பதிலுரைத்தேன், 'ஆஹாõ எனக்கும் மிகுந்த ஆசைதான். ஆனால், அவருடைய பாதங்கள் நீரில் மூழ்கியிருக்கின்றனவே; என் கைகளுக்கு எப்படி எட்டும்?--

85 '''பாதங்கள் நீரில் மூழ்கியிருக்கும்போது, நான் எப்படி என் தலையைப் பாதங்களின்மீது வைத்து வணங்க முடியும்? நான் இப்பொழுது செய்யவேண்டியது என்ன? இது என்ன தத்துவம் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லையேõஃ--

86 ''இதைக் கேட்ட மாதவராவ் பாபாவிடம் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள், 'தேவரே, தண்ணீரில் மூழ்கியிருக்கும் பாதங்களை வெளியே எடுப்பீர்களாக.ஃஃ--

87 ''இவ்வாறு மாதவராவ் கேட்டுக்கொண்ட கணமே பாபா பாதங்களை நீரி­ருந்து வெளியே எடுத்தார். உடனே நான் பாதங்களைப் பற்றிக்கொண்டு பாபாவுக்கு வந்தனம் செய்தேன்.--

88 ''நான் பாபாவின் பாதங்களை இவ்வாறு கெட்டியாகப் பிடித்துக்கொண் டிருந்தபோது பாபா ஓர் ஆசீர்வாதம் அருளினார், 'உமக்கு எல்லா மங்களங்களும் விளையுமய்யாõ பீதியடைவதற்குக் காரணம் ஏதுமில்லை.ஃ--

89 ''பாபா மேலும் கூறினார், 'என்னுடைய சாம்யாவுக்குப் (மாதவராவுக்குப்) பட்டுக்கரை வேஷ்டி ஒன்று அளிப்பீராக. நீர் சுகங்கள் நிறைந்தவராக ஆவீர்.ஃ--

90 ''அவருடைய ஆணையை சிரமேற்கொண்டு நான் ஒரு பட்டுக்கரை வேஷ்டி கொண்டுவந்திருக்கிறேன். காகா ஸாஹேப் அவர்களே, இதை உங்களுடைய கைகளால் அளித்து மாதவராவை ஏற்றுக்கொள்ளச் செய்யுங்கள்.--

91 ''என்னுடைய விநயமான வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள். மாதவராவ் இதை அணிந்துகொண்டால் நான் ஆனந்தமடைவேன். நீங்கள் எனக்குப் பெரிய உபகாரம் செய்தவர் ஆவீர்கள்.ஃஃ

92 ஆனந்தராவின் இந்த வேண்டுகோளை மாதவராவும் கேட்டுக்கொண் டிருந்தார். ஆயினும், காகா ஸாஹேப் வேஷ்டியை அளிக்க முயன்றபோது மாதவராவ் அந்த வஸ்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

93 அவர் மனத்தில் நினைத்தார், 'இது ஒரு கனவுதான். நான் ஒப்புக்கொள்வதற்குமுன், எனக்கு ஒரு சூசகம் கிடைக்கவேண்டும். எனக்கு ஒரு காட்சி கிடைக்காமல் நான் அந்த வேஷ்டியை ஏற்றுக்கொள்ளக்கூடாது.ஃ

94 காகா ஸாஹேப் அப்பொழுது சொன்னார், ''நாம் இப்பொழுது திருவுளச்சீட்டுப் போட்டுப் பார்ப்போம். வேஷ்டியை ஏற்றுக்கொள்ளுதல் உசிதமா (மேன்மையா) இல்லையா என்று தெரிந்துகொள்வோம். பாபாவின் திருவாய்மொழியை இந்த அனுபவத்தால் உணர்வோம்.--

95 ''எந்தச் சீட்டை பாபா நமக்கு அளிக்கிறாரோ அதையே அவருடைய ஆணையாக ஏற்றுக்கொள்வோம்.ஃஃ ஆகவே, அவர்கள் பாபாவின் ஆணையின்படி நடப்பது என்று தீர்மானம் செய்துகொண்டு பாபாவின் பாதங்களில் திருவுளச்சீட்டுப் போட்டனர்.

96 எந்த விஷயமாக இருப்பினும் முத­ல் பாபாவின் எண்ணத்தை அறிந்த பிறகே செயல்படுவது என்பது காகா ஸாஹேபின் பழக்கமாக இருந்தது. தம்முடைய பாரமனைத்தையும் பாபாவின்மீது போட்டுவிட்ட பெருமகன் அவர்.

97 பாபா ஜீவிதமாக இருந்தபோதும் இதே பழக்கந்தான். பாபா நிர்யாணம் அடைந்த பிறகு, திருவுளச்சீட்டுப் போட்டு அவருடைய ஆக்ஞையை அறிந்த பின்னரே அதன்படி உறுதியுடன் செய­ல் இறங்குவார்.

98 செய்யவேண்டிய காரியம் சிறியதானாலும் பெரியதானாலும், திருவுளச்சீட்டுப் போட்டுப் பார்க்காமல் எக் காரியத்தையும் தொடங்கமாட்டார்; தம் உயிரே போவதானாலும் சரி.

99 தேகமே தம்முடையதில்லை என்று ஒருவர் நிர்ணயித்து அதை ஸாயீ பாதங்களில் கிடத்திய பிறகு, அதனுடைய சலனவலனங்களின்மீது அவருக்கு ஏது அதிகாரம்?

100 இந்த விரதத்தை வரித்ததால், லக்ஷக்கணக்கான ரூபாய் வருமானத்தை வேண்டாவென்று அவர் ஒதுக்கியதைப்பற்றி நினைத்துப் பாருங்கள்õ மரணபரியந்தம் அவர் இந்த விரதத்தைத் திடமாகக் கடைப்பிடித்தார்.

101 ''உம்முடைய நம்பிக்கையும் விசுவாசமும் பலன் அளிக்கும். நான் உமக்கு ஓர் ஆகாயவிமானம் அனுப்பி, அதில் உம்மை அமரவைத்துக் கொண்டுசெல்வேன்õ நீர் நிச்சிந்தையான (கவலையற்ற) மனத்துடன் இரும்.ஃஃ

102 பாபாவின் மேற்கண்ட ஆசீர்வாதத் திருவாய்மொழி எழுத்துக்கு எழுத்து உண்மையாகியது. காகா ஸாஹேப் தீக்ஷிதர் அமரரான அபூர்வமான வழிவகை ஸாயீலீலா மாதப் பத்திரிகை வாசகர்களுக்கு ஏற்கெனவே தெரியும்.

103 அவர் மரணமடைந்த சூழ்நிலையை நினைத்துப்பார்த்தால், அது ஆகாயவிமானப் பயணமின்றி வேறென்ன? குருவின் நாமத்தை இடைவிடாது ஜபம் செய்துகொண்டே மரணம். ஆஹாõ எவ்வளவு ஆனந்தமான முடிவுõ

104 இவ்வாறாக, தீக்ஷிதர் ஒரு திடசித்தம் வாய்ந்த மனிதர்; நிரந்தரமாக ஸாயீ பாதங்களில் மூழ்கியவர். பிரியமான நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அதே அறிவுரையை வழங்கினார். கடைசியில் குருபாதங்களுடன் கலந்துவிட்டார்.

105 இப்பொழுது கதையை விட்ட இடத்தி­ருந்து தொடர்வோம். இருவருமே காகா தீக்ஷிதரின்மேல் பிரியம் வைத்திருந்தவர்கள். ஆதலால், திருவுளச்சீட்டு யுக்தியை இருவரும் ஒப்புக்கொண்டனர். தாமதமின்றிச் சீட்டுகள் எழுதப்பட்டன.

106 ஒரு சீட்டில் 'வேஷ்டியை ஏற்றுக்கொள்ளவும்ஃ என்று எழுதப்பட்டது. மற்றொரு சீட்டில் 'வேஷ்டியை நிராகரிக்கவும்ஃ என்று எழுதப்பட்டது. இவ்வாறு எழுதப்பட்ட சீட்டுகள் பாபாவின் புகைப்படத்தின் காலடியில் இடப்பட்டன.

107 அங்கிருந்த சிறுவன் ஒருவன் ஏதாவது ஒரு சீட்டை எடுக்கும்படி வேண்டப்பட்டான். சிறுவன் திருவுளச்சீட்டை எடுத்தான். எடுக்கப்பட்ட சீட்டி­ருந்து 'வேஷ்டியை ஏற்றுக்கொள்ளவும்ஃ என்று மாதவராவுக்கு ஆக்ஞை கிடைத்தது.

108 கனவு எப்படியோ அப்படியே சீட்டும் அமைந்தது. எல்லாரும் அகமகிழ்ச்சி அடைந்தனர். பட்டுக்கரை வேஷ்டி சாமாவின் கரங்களில் இடப்பட்டது.

109 ஆனந்தராவின் சொப்பனமும் மாதவராவின் சீட்டும் பரஸ்பரம் ஒத்துப்போனபோது மகிழ்ச்சி கட்டுக்கடங்கவில்லைõ திருவுளச்சீட்டு இருவருக்குமே ஆனந்தத்தையும் திருப்தியையும் கொண்டுவந்தது.

110 மாதவராவ் உள்ளத்தில் குஷியடைந்தார். ஆனந்தராவும் சந்தோஷமடைந்தார். காகாஸாஹேப்பின் சந்தேகம் நிவிர்த்தியடைந்தது. ஸாயீபக்தி மேலோங்கியது.

111 எல்லாரும் சிந்திக்கவேண்டிய விஷயம் ஒன்று இங்கு உண்டு. குருபாதங்களில் சிரம் தாழ்த்துபவர் குருவின் திருவாய்மொழியின்படி கண்ணுங்கருத்துமாய்ச் செயல்படவேண்டும். இதுவே இக் காதையின் சாரம்.

112 நம்முடைய நிலைமை, உலகெனும் நாடகமேடையில் நாம் நடிக்கவேண்டிய வேஷம், மனச்சாயல்கள், எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை நகத்தி­ருந்து சிகைவரை முழுமையாக குருவே அறிவார். நம்மைக் கைதூக்கி உயர்த்திவிடும் வழிமுறையையும் அவரே அறிவார்.

113 வியாதி என்னவோ அதற்கேற்ற சிகிச்சை, சிகிச்சைக்கேற்ற பானம் (மருந்து), பானத்துக்கேற்ற அனுபானம் (துணைமருந்து). இந்த முறையில்தான் ஸத்குரு சிஷ்யனின் பிறவியெனும் நோயை நிவாரணம் செய்கிறார்.

114 குரு செய்யும் செயல்களை நாம் காப்பியடிக்கக்கூடாது. அவருடைய திருவாய்மொழியைத்தான் பயபக்தியுடன் பின்பற்றவேண்டும்.

115 குருவின் திருவாய்மொழியாக வெளிவந்த சொற்களை மனத்தில் நிலைநிறுத்துங்கள்; அறிவுரையை எப்பொழுதும் சிந்தனை செய்துகொண் டிருங்கள். அதுவே உங்களுடைய ஆன்மீக ஏற்றத்திற்குக் காரணமாக அமையும். இக் கருத்தை நிரந்தரமாக மனத்தில் இருத்துங்கள்.

116 குருவின் சொற்களே போதியும் புராணமும்; அவையே அவற்றுக்குத் தெளிவுரையும் விரிவுரையும் ஆகும். முக்கியமான உபதேசத்தை தியானம் செய்யவேண்டும். ஏனெனில், அதுவே நம்முடைய வேதஞானம்.

117 எந்த ஞானியின் சொற்களையும் அவமதியாதீர்õ நம்முடைய தாய் நம்மைக் கவனித்துக் காப்பாற்றுவது போல, வேறு எவர் நம்மைக் காப்பாற்றுவார்?

118 தாயன்பு பரிசுத்தமானது. குழந்தையைப் போஷிப்பதில் அவள் அடையும் மகிழ்ச்சி குழந்தைக்குத் தெரியாது. குழந்தை ஆசைப்பட்டு விரும்புவதையெல்லாம் நிறைவேற்றிச் செல்லங்கொடுக்கிறாள்.

119 உலகில் எத்தனையோ ஞானிகள் இருக்கின்றனர். ஆயினும், கருணையால் வெளிப்பட்ட, ''நம்முடைய பிதாவே (குருவே) நம்முடைய பிதா (குரு)ஃஃ என்னும் ஸாயீயின் திருவாய்மொழியை நம்முடைய இதயத்தில் ஆழமாகப் பொறித்துக்கொள்ள வேண்டும்.

120 சொல்கிறேன்; ஸாயீயின் வாயி­ருந்து வெளிவந்த வசனங்களை அனுசந்தானம் செய்யுங்கள் (இடையறாது சிந்தியுங்கள்). காரணம், கிருபாநிதியான அவர்தான் நம்முடைய முத்தாபங்களையும் தணிக்கக்கூடியவர்.

121 அவருடைய கலைகளை அவர்தான் அறிவார்õ அவருடைய லீலைகளின் அற்புதத்தையும் அவை ஸஹஜமாக (இயல்பாக) வெளிப்படுவதையும் குதூகலத்துடன் கண்டு களிக்கத்தான் நம்மால் முடியும்.

122 யார் எதைச் சொன்னாலும் சொல்லட்டும். அவையனைத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாம். ஆனால், நம்முடைய லட்சியப் பாதையி­ருந்து தடம்புரளக்கூடாது. நம் குருவின் வார்த்தைகளை மறந்துவிடக்கூடாது.

123 அதுதான் (குருவின் திருவாய்மொழிதான்) நமக்குப் பரம மங்களங்களை விளைவிக்கும். அதன் மூலமாகத்தான் நாம் பிறவி பயத்தை வெல்லமுடியும். அதுதான் நம் போதியும் புராணமும் அனுஷ்டானமும் ஜபமும் தவமும் - அனைத்தும் ஆகும்.

124 சாராம்சம் என்னவென்றால், பரமகுருவைப் பிரேமை செய்யுங்கள். அனன்னிய பா(ஆஏஅ)வத்துடன் நமஸ்காரம் செய்யுங்கள். சூரியனுக்கு எதிரில் இருட்டு எப்படி இருக்கமுடியும்? அதுபோலவே பிறவிக்கடலும் இல்லாதுபோகும்.

125 சிருஷ்டியின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். கிட்டவோ எட்டவோ ஏழுகடல் தாண்டியோ செல்லுங்கள். குருவுக்கு பக்தர்களின்மேல் உண்டான பிரேமை எல்லை அறியாதது. ஆகவே, கவலையின்றி எங்கும் செல்லுங்கள்.

126 நான் இதை எழுதிக்கொண் டிருக்கும்போதே இன்னுமொரு காதை ஞாபகத்திற்கு வருகிறது. ஒருவரைக் காப்பியடித்து மற்றொருவர் அதே காரியத்தைச் செய்ய முயலும்போது, ஆபத்துக்கு உள்ளாகலாம் என்பது இக் காதையின் சாரம்.

127 ஒரு சமயம் மஹால்ஸாபதியுடன் பாபா மசூதியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று தாம் ஒருகாலத்தில் பலகையின்மேல் படுத்துறங்கிய ஞாபகம் வந்தது.

128 ஒன்றேகால்சாண் (சுமார் பதினொன்று அங்குலம்) அகலமிருந்த மரப்பலகை, இரு பக்கங்களிலும் கிழிந்த ஆடைகளால் பிணைக்கப்பட்டு மசூதியின் கூரையி­ருந்து ஓர் ஊஞ்ஜலைப் போலத் தொங்கவிடப்பட்டது.

129 யாரும் இருட்டில் படுத்து உறங்கக்கூடாது. ஆகவே, தலைமாட்டிலும் கால்மாட்டிலும் விளக்குகளை எரியவிட்டுக்கொண்டு பாபா இரவில் மரப்பலகையின்மேல் படுத்து உறங்குவார்.

130 இந்தப் பலகையின் விருத்தாந்தம் முந்தைய அத்தியாயம் ஒன்றில் (அத். 10) விவரிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, இப்பொது அப் பலகையின் மஹத்துவத்தை மட்டும் கேளுங்கள்.

131 ஒருசமயம், அந்தப் பலகையின் மஹிமையை பாபா உணர்ச்சிப் பெருக்குடன் வர்ணித்தார். அதைக் கேட்ட காகா ஸாஹேபின் மனத்தில் எழுந்த எண்ணம் என்னவென்ற விவரம் கேளுங்கள்.

132 அவர் பாபாவிடம் கூறினார், ''நீங்கள் மரப்பலகையில் தூங்க விரும்பினால் நான் பிரீதியுடன் மறுபடியும் ஒரு பலகையைத் தொங்கவிடுகிறேன். அதன் பின்னர் நீங்கள் பலகையின்மேல் நிம்மதியாகப் படுக்கலாம்.ஃஃ

133 பாபா அவருக்குப் பதிலுரைத்தார், ''மஹால்ஸாபதியைக் கீழே விட்டுவிட்டு நான் எப்படித் தனியாகத் தூங்க முடியும்? தற்பொழுது இருப்பது போலக் கீழே இருப்பதே எனக்குத் திருப்தி.ஃஃ

134 இதைக் கேட்ட காகா மிகுந்த அன்புடன் மீண்டும் சொன்னார், ''அப்படியானால், நான் இன்னுமொரு பலகையையும் தொங்கவிடுகிறேன். நீங்கள் ஒரு பலகையிலும் மஹால்ஸாபதி இரண்டாவது பலகையிலும் படுத்துறங்கலாம்.ஃஃ

135 பாபா இதற்கு என்ன பதில் சொன்னார் என்பதைக் கேளுங்கள், ''மஹால்ஸாபதியால் பலகையில் தூங்க முடியுமா என்ன? எவர் அங்கமெலாம் நற்குணங்கள் நிரம்பியவரோ, அவரே மரப்பலகையில் படுத்து உறங்க முடியும்.--

136 ''பலகையில் படுப்பது சுலபமா என்ன? என்னைத் தவிர வேறு யாரால் பலகையில் படுக்கமுடியும்? தூக்கத்தை விரட்டிவிட்டுக் கண்களைத் திறந்துகொண்டு இருக்க முடிந்தவர்தாம் பலகையில் படுக்கலாம்.--

137 ''நான் படுக்கப் போகும்போது மஹால்ஸாபதிக்கு ஆணையிடுகிறேன், 'கையை என்னுடைய இதயத்தின்மேல் வைத்துக்கொண்டு எதிரில் உட்கார்ந்திரும்ஃ என்று.--

138 ''அந்த வேலையைக்கூட அவரால் செய்யமுடிவதில்லை. உட்கார்ந்தவாறே தூங்கிவிடுகிறார். அவருக்குப் பலகையால் பயன் ஏதும் இல்லை. மரப்பலகை எனக்குத்தான் படுக்கையாகும்.--

139 '''என்னுடைய இதயத்தில் நாமஸ்மரணம் இடைவிடாது ஓடிக்கொண் டிருக்கிறது. நீர் உம்முடைய கையை வைத்து என்னைக் கண்காணியும். நான் தூங்குவதாகத் தெரிந்தால் என்னை எழுப்பிவிடும்.ஃ இவ்வாறு நான் ஆணையிட்டிருக்கும்போது,

140 ''அதை விடுத்து அவரே தூங்கிவிழுகிறார். அவருடைய கை, கல் போலக் கனக்கிறது. 'பகத்ஃ என்று நான் விளிக்கும்போது அவருடைய கண்களி­ருந்து தூக்கம் கலைந்து அவரை நிலைகுலையச் செய்கிறது.--

141 ''தரையிலேயே நிலைப்பட உட்காரமுடியாதவர், ஸ்திரமான ஆசனம் இல்லாதவர், தூக்கத்திற்கு அடிமையாகிய மனிதர், உயரத்தில் எப்படித் தூங்கமுடியும்?ஃஃ

142 'உன்னுடைய இயல்பு நிர்ணயிக்கும் வழியில் நீ நட; மற்றவருடைய இயல்பு நிர்ணயிக்கும் வழியில் அவர் நடக்கட்டும். (பிறரைப் பின்பற்றும் முயற்சியில் உன் இயல்புக்கு எதிராகச் செயல்படாதே.)ஃ இந்த அறிவுரையை பக்தர்களின் மீதிருந்த அனுராகத்தினால் (காதலால்) பாபா சமயம் பார்த்து அளித்தார்.

143 ஸாயீநாதரின் செய்கைகள் மனித அறிவுக்கெட்டாதவைõ ஹேமாட் அவருடைய பாதங்களில் இணைந்துகொள்கிறேன். கிருபையுடன் என்னை ஆசீர்வதித்த காரணத்தால், அவரும் என்னை அகண்டமாக நினைவுகொள்கிறார்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'குருபாத மஹிமைஃ என்னும் நாற்பத்தைந்தாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.