Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 13

13. பிணி தீர்த்த பெம்மான்



ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 வெளிப்படும் பேச்சு சூத்திரங்களைப் போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பீரமானது; வெகு விஸ்தீரணமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது;--

2 பாபாவினுடைய திருவாய்மொழி இத்தகையதே; அர்த்தத்திலும் தத்துவத்திலும் மிகவும் ஆழமானது; சமச்சீரானது; விலைமதிப்பற்றது; காலத்தின் எல்லைவரை அர்த்தமுள்ளது; வீண் போகாதது.

3 ''ஏற்கெனவே என்ன நடந்ததோ, என்ன நடக்கப்போகிறதோ, அதற்கேற்றவாறு வாழ்க்கை நடத்துõ எது பிராப்தமென்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதை அறிந்துகொண்டு நடõ எப்பொழுதும் திருப்தியுள்ளவனாக இருõ சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்பொழுதும் இடம் கொடுக்காதேõ--

4 ''கவனிõ வீடு, குடும்பம் போன்ற தளைகளில் மாட்டிக்கொள்ளாமல் தொந்தரவுகளி­ருந்து முழுமையாக விடுபட்டு, வாழ்க்கையின் தொல்லைகளையும் ச­ப்புகளையும் அறவே தியாகம் செய்துவிட்டு ஒரு பக்கீராக நான் அமைதியாக ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்கும்போதே, --

5 ''எதற்கும் அடங்காத மாயை என்னை விடாது துன்புறுத்துகிறது. நான் அவளை உதறிவிட்டாலும், அவள் என்னை உதறாது என்னுடன் நிரந்தரமாக ஒட்டிக்கொள்கிறாள்õ--

6 ''அவள் ஸ்ரீஹரியின் ஆதிமாயை; பிரம்மாதி தேவர்களையே நிலைதடுமாறுமாறு செய்திருக்கிறாள்õ இந்நிலையில் அவள் முன்னிலையில் இந்த பலவீனமான பக்கீரின் கதி என்னவாக இருக்கமுடியும்?--

7 ''ஸ்ரீ ஹரியே விருப்பப்படும்போதுதான் மாயை ஒழியும். இடைவிடாத ஹரிபஜனையின்றி மாயையி­ருந்து விடுதலை கிடைக்காது.ஃஃ

8 பாபா, பக்தர்களுக்கு விளக்கம் செய்த மாயையின் மஹிமை இதுவே. மாயையின் பிடியி­ருந்து நிவிர்த்தி பெறுவதற்கு, இறைவனுடைய பெருமைகளைப் பாடும் ஸேவையையே பாபா பரிந்துரை செய்தார்.

9 ''ஞானிகள் என்னுடைய உயிருள்ள உருவங்கள்ஃஃ என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பாகவதத்தில் கூறியிருக்கிறார். ஸ்ரீஹரியால் உத்தவருக்குத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட இவ்வார்த்தைகளை அறியாதார் யார்?

10 தம் பக்தர்களுடைய நல்வாழ்வுக்காக தயாஸாகரமான ஸாயீ திருவாய் மலர்ந்தருளிய ஸத்தியமான வார்த்தைகளை மிகுந்த விநயத்துடன் கேளுங்கள்.

11 ''யாருடைய பாவங்கள் விலக்கப்பட்டுவிட்டனவோ அந்தப் புண்ணியசா­களே என்னை அறிந்துகொள்கிறார்கள்; என்னை வழிபடுகிறார்கள்.--

12 ''ஸாயீ, ஸாயீ என்று எந்நேரமும் ஜபம் செய்துகொண் டிருப்பீர்களானால், நான் என்னுடைய அருளால் உங்களுக்கு ஏழு கடல்களையும் அளிப்பேன் (ஏழு கடல்களுக்கப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன்). எவர்கள் என்னுடைய இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள்.--

13 ''எனக்கு அஷ்டோபசார1 பூஜையோ ஷோடசோபசார2 பூஜையோ வேண்டா. எங்கு பா(ஆஏஅ)வம் இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன்.ஃஃ

14 பக்தர்களின் மீதிருந்த அன்பினால் இதையே பாபா பலமுறைகள் திரும்பத் திரும்பச் சொல்­யிருக்கிறார். இப்பொழுது நாம் அவ்வன்பான வார்த்தைகளை ஞாபகப்படுத்திக்கொள்வதில்தான் மனத்தைத் திருப்தி செய்துகொள்ள வேண்டும். (நேரில் கேட்கமுடியாது.)3

15 தயாளமுள்ள துணைவரும் சரணாகதியடைந்தவர்களைப் பாதுகாப்பவரும் பக்தர்களோடு பிணைந்தவருமான ஸாயீயால் எப்படிப்பட்ட அற்புதம் விளைவிக்கப்பட்டது என்று சற்று பாருங்கள்õ

16 கவனத்தைச் சிதறவிடாது முழுமையாக ஈடுபட்டு நான் சொல்லப்போகும் புதிய காதையை முழுக்கக் கேளுங்கள்; செய்வன திருந்தச் செய்தவர்களாகி நன்மையடைவீர்கள்.

17 ஸாயீயின் முகத்தி­ருந்து வெளிப்படும் அமுதமழை, புஷ்டியையும் திருப்தியையும் அளிக்கும் அருட்புனலாக இருக்கும்போது, தம்முடைய நல்வாழ்வுபற்றிய அக்கறை கொண்டவர் எவராவது சிர்டீக்குப் போகும் யத்தனத்தைக் கஷ்டமாக நினைப்பாரா?

18 கடந்த அத்தியாயத்தில், ஸித்தியாகிவிட்ட தம் குருவின் தரிசனம் பெற்றதால் அளவிலா ஆனந்தமடைந்த அக்கினிஹோத்திரி பிராமணரின் காதை சொல்லப்பட்டது.

19 இந்த அத்தியாயம் முன்னதைவிட இனிமையானது. க்ஷயரோகத்தால் (காச நோயால்) ரத்தவாந்தி எடுத்துக்கொண்டிருந்த பக்தர் ஒருவர் கனவுக் காட்சியால் நிவாரணம் பெற்று நல்லாரோக்கியமடைந்தார்.

20 ஆகவே, விசுவாசமுள்ள பக்தர்களேõ கல்மஷங்களையெல்லாம் (மனமலங்களையெல்லாம்) எரித்துவிடும் சக்தியுடைய இவ்வற்புதமான ஸாயீநாத சரித்திரத்தை முழு கவனத்துடன் கேளுங்கள்.

21 இச் சரித்திரம் கங்கை நீரைப் போன்று புண்ணியமானது; பவித்திரமானது; இஹத்திலும் பரத்திலும் ஸாதகங்களை அளிக்கக்கூடியது. இதைக் கேட்பவர்களின் காதுகள் எல்லாப் பேறுகளையும் பெற்றவைõ

22 இச்சரித்திரத்தை தேவாமிருதத்திற்கு உபமானமாகச் சிலர் சொல்லலாம். ஆயினும் தேவாமிருதம் இவ்வளவு இனிக்குமா என்ன? அமிருதம் உயிரைத்தான் ரக்ஷிக்கும்; இச்சரித்திரமோ மேற்கொண்டு ஜனனமே இல்லாமல் செய்துவிடும்õ

23 உயிருள்ள ஜீவன்கள் எல்லா சக்திகளும் தங்களுக்கு இருக்கின்றன என்று நினைக்கின்றன. தாம் நினைத்ததைச் செய்யமுடியும் என்று யாராவது நினைத்தால், அவர் இக்காதையைக் கேட்கவேண்டும்.

24 மனிதன் வாஸ்தவமாகவே சுதந்திரமுள்ளவனாக இருந்தால், இரவு பகலாக சுகத்திற்காக உழைப்பவன் ஏன் கஷ்டத்தை மட்டுமே அடைகிறான்? அவனுடைய விதி அவ்வளவு வ­மையானது.

25 இங்கும், அங்கும், எங்குமே துக்கத்தைத் தவிர்ப்பதில் ஸாமர்த்தியம் மிகக் காட்டினாலும், விதி அவனை விடுவதாக இல்லை.

26 அதை உதறித்தள்ள முயன்றால், அது கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது; விலக்கிவிட முயன்றால், மேலும் அழுத்தமாகத் தழுவுகிறதுõ இரவுபகலாக மனிதன் நடத்தும் போராட்டமெல்லாம் வீணாகிப்போகிறது.

27 மனிதன் நிஜமான சுதந்திரம் பெற்றிருந்தால், சுகத்தைத் தவிர வேறெதையும் நாடமாட்டான்; லவலேசமும் (சிறிதளவும்) சந்தேஹமிருந்தால் துக்கத்தின் அருகிலேயே செல்லமாட்டான் அல்லனோ?

28 சுதந்திர புத்தியுள்ள மனிதன் பாவமே செய்திருக்க மாட்டான். சுகத்தை சம்பாதித்துக் கொள்வதற்கும் விருத்தி செய்துகொள்வதற்கும் புண்ணிய காரியங்களை ஸமிருத்தியாகச் (செழிப்பாகச்) செய்திருப்பான்.

29 ஆனால், எந்த மனிதனும் சுதந்திரமுள்ளவன் அல்லன்; கர்மத் தளைகள் அவனைப் பின்தொடர்கின்றன. கர்மத்தின் வழிமுறைகள் விசித்திரமானவை; மனிதனுடைய வாழ்க்கையின் சூத்திரத்தை அவையே இழுக்கின்றன.

30 இதன் காரணமாக, புண்ணியத்தை நாம் லக்ஷியமாகக் கொண்டாலும், பாவத்தை நோக்கி வ­மையாக இழுக்கப்படுகிறோம். நற்செயல்களைத் தேடும் பணியிலேயே நம்முடல் பாவங்களைத் தொட்டுவிடுகிறதுõ

31 என்னிடம் கதை கேட்பவர்களேõ புணே ஜில்லாவில் ஜுன்னர் தாலுகாவில் நாராயண்காங்வ் கிராமத்தில் வாழ்ந்த பீமாஜீ பாடீ­ன் காதையைக் கேளுங்கள். தேவாமிருதம் பொங்கி வழிந்தது போன்ற இனிமையுள்ளது இக்காதை.

32 பீமாஜீ பாடீல் ஒரு தனவந்தர். விருந்தோம்ப­ல், முக்கியமாக அன்னமிடுவதில் உற்சாகம் கொண்டிருந்தவர். சோகத்தையே அறியாத அவர் எப்பொழுதும் பிரஸன்னவதனமாகவே (மலர்ந்த முகம்) இருந்தார்.

33 ஆனால், விதியின் வழிமுறைகள் விளக்கமுடியாதவை; லாபத்தையும் நஷ்டத்தையும் மாறிமாறிக் கொடுக்கும்; அந்தக் கணக்கு நமக்குப் புரியாது. கர்ம வினைகளுக்கேற்றவாறு இன்னல்கள் விளைகின்றன; நமக்கு வரக்கூடாத வியாதிகளும் வந்து நம்மைத் துன்புறுத்துகின்றன.

34 1909 ஆம் ஆண்டு பீமாஜீயைப் பீடை பிடித்தது; நுரையீரல்களை க்ஷயரோகம் தாக்கி, ஜுரம் வர ஆரம்பித்தது.

35 பிறகு, பொறுக்கமுடியாத இருமல் தொடர்ச்சியாக வந்தது; ஜுரம் நாளுக்குநாள் அதிகமாகி பலமாக வளர்ந்தது; பீமாஜீ இடிந்துபோனார்.

36 வாயில் சதா நுரை கட்டியது; கோழையிலும் எச்சி­லும் உறைந்த ரத்தம் வெளியாகியது; வயிறு எந்நேரமும் குமட்டியது; ஓய்வற்ற நிலையில் உடல் அலட்டுவது நிற்கவேயில்லை.

37 பீமாஜீ படுத்த படுக்கையாகிவிட்டார். எத்தனையோ நிவாரணங்களை முயன்று பார்த்தும் பயனில்லாதுபோயிற்று. உடல் மெ­ந்து, காய்ந்து சுருங்கிய இலைபோல் ஆகிவிட்டார் பீமாஜீ.

38 அவருக்குச் சோறோ, நீரோ, எதுவுமே பிடிக்கவில்லை. கஞ்சியும் பத்தியச் சாப்பாடும்கூட ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிலை அவரை அமைதியிழக்கச் செய்துத் திக்குமுக்காட வைத்தது. உடல் பட்ட வேதனை பொறுக்கமுடியாததாக இருந்தது.

39 தெய்வங்களைப் பிரீதிசெய்ய மந்திர உச்சாடனம் எல்லாம் நடந்தது. டாக்டர்களும் வைத்தியர்களும் கைவிட்டுவிட்டனர். பீமாஜீயும் 'பிழைக்கமாட்டேன்ஃ என்று நினைத்து விசாரமடைந்தார்.

40 பாடீல் மனமுடைந்து போனார்; உயிர் நாள்கணக்கில்தான் தங்கும் போ­ருந்தது. நாளுக்குநாள் இத்தேய்வு அதிகமாகியது. பல நாள்கள் இவ்வாறு கடந்தன.

41 குலதேவதைக்கும் ஆராதனைகள் செய்துபார்த்தார்; பயனில்லை. குலதேவதை நல்லாரோக்கியத்தை மீட்டுத் தரவில்லை. ஜோதிடர்களையும் மந்திரவாதிகளையும் ஆலோசனைகள் கேட்டுக் கேட்டு, அலுத்துப்போனார்.

42 சிலர் கூறினர், ''இதென்ன அங்கரோகம்õ இவ்வளவு இன்னலைத் தரும் விதிதான் என்னேõ ஓ, மானிட யத்தனம் அனைத்தும் வீண்போல இருக்கிறதேõஃஃ

43 டாக்டர்கள் முயன்று பார்த்தனர்; ஹகீம்கள் (யுனானி மருத்துவர்கள்) அழைக்கப்பட்டனர். பீமாஜீக்கு வைத்தியம் செய்வதில் மேற்கொண்டு செய்வதென்ன என்று தெரியாது விழித்தனர். யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை; முயற்சிகளனைத்தும் வீணாயின.

44 பாடீல் தளர்ச்சியுற்று நம்பிக்கை இழந்தவராகத் தமக்குள்ளேயே பேசிக்கொண்டார். ''óஓ பகவானேõ நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் எல்லா முயற்சிகளும் தோல்வியைத் தழுவிவிட்டன? இம்மாதிரி இன்னல்படுவதற்கு நான் எத்தகைய கொடிய பாவம் செய்திருக்க வேண்டும்?ஃஃ

45 இறைவனின் லக்ஷணம் (சிறப்பியல்பு) எவ்வளவு விநோதமானதுõ சந்தோஷமாக இருப்பவரால் ஒருகணங்கூட அவர் நினைக்கப்படுவதில்லை. அவருடைய லீலை ஆராய்ச்சிக்கப்பாற்பட்டது.

46 அவர் வேண்டும்போது, வரிசையாக இன்னல்களைத் தந்து மனிதனைத் தம்மை ஞாபகப்படுத்திக்கொள்ளும்படி செய்து, துயரத்தில், ''ஓ நாராயணாõ என்னைக் காப்பாற்றும்ஃஃ என்று கதறும்படி செய்கிறார்.

47 துயரத்தில் பீமாஜீ பாடீல் கதறியதைக் கேட்டவுடனே இறைவன் கருணை புரிந்தார்õ பீமாஜீக்கு திடீரென்று நானாவுக்குக் (நானாஸாஹேப் சாந்தோர்க்கருக்குக்) கடிதம் எழுதவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது.

48 ''மற்றவர்களால் சாதிக்க முடியாததைக் கட்டாயம் நானாவால் சாதிக்கமுடியும்.ஃஃ பாடீல் வைத்த நம்பிக்கை அவ்வளவு உயர்வானதாக இருந்தது.

49 இதுவே, பாடீலுக்கு ஒரு சுபசகுனமாகவும் அவருடைய வியாதி நிவாரணத்தின் ஆரம்பமாகவும் ஆகியதுõ அவர் நானாவுக்கு ஒரு விவரமான கடிதம் எழுதினார்.

50 நானாஸாஹேபைப்பற்றி அந்த நேரத்தில் வந்த நினைவு ஸாயீநாதரின் உந்துதலேயன்றி வேறெதுவுமில்லை. அதுவே அவரது வியாதி நிவாரணத்தின் உத்பவம் (உற்பத்தி) ஆயிற்று. ஞானிகளின் செயல்முறைகள் அற்புதமானவைõ

51 காலச்சக்கரத்தின் சுழற்சியிலுங்கூட இறைவனின் திட்டம் இருக்கும்போலத் தெரிகிறது. ஆகவே, எவரும் வேறுவிதமான கற்பனைகள் செய்துகொண்டு வீண்பெருமை பேச வேண்டா.

52 நற்செயல்களுக்கும் தீச்செயல்களுக்கும் இறைவனே சூத்ரதாரி. அவனே காப்பவன்; அவனே அழிப்பவன்; அவன் ஒருவனே செயலாளி.

53 பாடீல் சாந்தோர்க்கருக்கு எழுதினார், ''எனக்கு மருந்து தின்று தின்று அலுத்துப் போய்விட்டது; வாழ்க்கையே வெறுத்துவிட்டது. இவ்வுலகமே எனக்கு சோகமயமாகிவிட்டது.--

54 ''இந்த வியாதியைக் குணப்படுத்துவது ஸாத்தியமில்லை என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். வைத்தியர்களுக்கும் ஹகீம்களுக்குங்கூட, மேற்கொண்டு யோசனை ஏதும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை அதலபாதாளத்தில் விழுந்துவிட்டது.--

55 ''ஆகவே, நான் ஒரே ஓர் உதவியை விநயத்துடன் கடைசியாகக் கேட்கிறேன்õ என்னுடைய மனத்தில் இருக்கும் ஒரே பலமான ஆசை உங்களை நிச்சயமாகச் சந்திக்க வேண்டுமென்பதுதான்.ஃஃ

56 கடிதத்தைப் படித்த சாந்தோர்க்கரின் மனம் சோகத்திலாழ்ந்தது. பீமாஜீ பாடீல் ஓர் உயர்ந்த மனிதர் என்று அவருக்குத் தெரிந்திருந்ததால், நானா மனமுருகிப்போனார்.

57 நானா எழுதினார், ''உங்களுடைய கடிதத்திற்குப் பதிலெழுதும் வகையில் நான் ஓர் உபாயத்தைப் பரிந்துரை செய்கிறேன். ஸாயீ பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளுங்கள்õ அவரே நம் அன்னையும் தந்தையும்õ--

58 ''அவரே அனைவர்க்கும் கருணைமயமான அன்னை; கூவி அழைக்கும்போது ஓடிவந்து அணைத்துக்கொள்வாள்; தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிவாள்.--

59 ''கொடிய குஷ்டரோகம் அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது எனில், க்ஷயரோகம் என்ன பெரிய பிரச்சினை? எள்ளளவும் ஸந்தேஹம் வேண்டா; போய் ஸாயீயின் திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளுங்கள்.--

60 ''யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். இது அவருடைய உறுதிமொழி; இதற்குக் கட்டுப்பட்டவர் அவர். ஆகவே, நான் கூறுகிறேன், துரிதமாகச் சென்று ஸாயீ தரிசனம் செய்யவும்.--

61 ''மரணபயத்தைவிடப் பெரிய பயம் என்ன இருக்கிறது? சென்று, ஸாயீயின் பாதங்களைப் பற்றிக்கொள்ளும். அவரால்தான் உங்களுடைய பயத்தைப் போக்கமுடியும்.ஃஃ

62 பொறுக்கமுடியாத அவதியாலும் அந்திமகாலம் நெருங்கிவிட்டதோவென்ற பயத்தாலும் பொறுமையிழந்த பாடீல் நினைத்தார், ''நான் எப்பொழுது ஸாயீநாதரை தரிசிப்பேன்? எப்பொழுது எனக்குக் காரியசித்தி ஆகும்?ஃஃ

63 பாடீலுடைய படபடப்பு மிக அதிகமாக இருந்தது. ''உடனே வேண்டியதையெல்லாம் மூட்டைகட்டுங்கள்; நாளைக்கே கிளம்ப ஆயத்தம் செய்யுங்கள்; சீக்கிரமாக சிர்டீக்குப் போவோம்.ஃஃ

64 இவ்வாறு திடநிச்சயமாகப் பிரமாணம் செய்துகொண்ட பாடீல், எல்லாரிடமும் விடைபெற்றுக்கொண்டு ஸாயீ தரிசனத்திற்காக சிர்டீக்குப் பயணமானார்.

65 தம்முடைய உறவினர்களை அழைத்துக்கொண்டு, எப்படி சிர்டீக்குப் போய்ச் சேர்வது என்னும் சஞ்சலமும் எதிர்பார்ப்பும் நிரம்பிய மனத்துடன் பீமாஜீ சிர்டீக்குக் கிளம்பினார்.

66 பாடீலுடைய வண்டி மசூதிக்கருகில் இருந்த சவுக்கத்திற்கு வந்து, பிறகு மசூதியின் வாயிலுக்கு வந்துசேர்ந்தது. நான்கு பேர்கள் பீமாஜீயைக் கைகளால் தூக்கிக்கொண்டு வந்தனர்.

67 நானா ஸாஹேப்பும் அவருடன் வந்தார். எல்லாருக்கும் சுலபமாக தரிசனம் செய்துவைக்கும் மாதவராவும் ஏற்கெனவே அங்கு வந்திருந்தார்õ

68 பாடீலைப் பார்த்துவிட்டு பாபா சாமாவிடம் கேட்டார், ''சாமா, இன்னும் எத்தனை திருடர்களை என் தலையில் கட்டப் போகிறாய்? என்ன, நீ செய்வது நியாயமா?ஃஃ

69 பீமாஜீ ஸாயீபாதத்தில் சிரம் வைத்து வணங்கிக் கூறினார், ''ஸாயீநாதா, இந்த அனாதைக்குக் கிருபை செய்யுங்கள்õ தீனநாதா, என்னைக் காப்பாற்றுங்கள்õஃஃ

70 பாடீ­னுடைய துன்பத்தைப் பார்த்த ஸாயீநாத் பரிதாபப்பட்டார். அந்நேரத்திலேயே பாடீல் தம்முடைய துன்பத்திற்கு ஒரு முடிவு வந்துவிட்டதை உணர்ந்தார்.

71 பீமாஜீயினுடைய பரிதாபகரமான நிலையைப் பார்த்த கருணாஸாகரமான ஸமர்த்த ஸாயீ, மனம் நெகிழ்ந்து முகத்தில் புன்னகை தவழக் கூறினார்,--

72 ''கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்; சிந்தனையாளர்கள் துக்கப்படுவதில்லை. சிர்டீயில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது. --

73 ''நீர் தடங்கல்களெனும் கட­ல் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம்; துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்துபோயிருக்கலாம்; ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ, அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும்.--

74 ''இவ்விடத்தி­ருக்கும் பக்கீர் மஹா தயாளன்; உம்முடைய வியாதியையும் வ­யையும் நிர்மூலமாக்கிவிடுவான். அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மைப் பாதுகாப்பான்.--

75 ''ஆகவே, நீர் அமைதிகொள்ளும்; பீமாபாயீயின் வீட்டில் தங்கும்; போய்வாரும்; இரண்டொரு நாள்களில் உமக்கு நிவாரணம் கிடைக்கும்.ஃஃ

76 ஆயுள் முடிந்துபோன ஒருவனுக்கு திடீர் அதிருஷ்டத்தால் அமுதமழை பெய்து புத்துயிர் கிடைத்தது போன்ற உணர்வு பாடீலுக்கு ஏற்பட்டது.

77 ஸாயீயின் திருமுகத்தி­ருந்து வெளிவந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட பாடீல், மரணப் படுக்கையில் இருப்பவன் அமிருதபானத்தாலும், தாஹத்தால் நெஞ்சுலர்ந்து போனவன் நீர் கிடைத்ததாலும், எவ்வளவு திருப்தியும் சந்தோஷமும் அடைவார்களோ, அவ்வளவு திருப்தியையும் சந்தோஷத்தையும் அடைந்தார்.

78 ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை வாய்க்கு ஏறிவந்த இரத்தம், பாபாவுடன் ஒரு மணி நேரம் உட்கார்ந்துகொண் டிருந்தபோது அடங்கிவிட்டது.

79 பாபா நோயாளியைப் பரிசோதிக்கவில்லை; நோய் எப்படி ஏற்பட்டது என்று காரணமும் கேட்கவில்லை. அவருடைய அருட்பார்வையே கணமாத்திரத்தில் வியாதியினுடைய வேரை அறுத்துவிட்டது.

80 அவருடைய கிருபை கனிந்த பார்வையொன்று போதும்; பட்டமரம் துளிர்த்துவிடும்; வஸந்தகாலம் வருவதற்கு முன்னரே மரம் பூத்துக் குலுங்கும்; சுவையான பழங்களின் பளு தாங்காது மரம் தழையும்.

81 ரோகம் எது, ஆரோக்கியம் எது? ஒருவருடைய புண்ணியமோ பாவமோ தீராமல், கர்மவினை கழியாமல், எந்த வைத்தியமும் பலன் தராது.

82 கர்மத்தை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். எத்தனை ஜன்மம் எடுத்தாலும் இதுவே நிச்சயம். கர்மவினை அனுபவித்து அழிவதற்கு முன்பு, எந்த உபாயமும் எடுபடாது.

83 இருப்பினும், ஒருவருடைய பாக்கியத்தால் ஞானியின் அருட்பார்வை கிடைத்தால், அது வியாதியைத் துடைத்துவிடுகிறது. பீடிக்கப்பட்டவர் வியாதியைச் சுலபமாகவும் துன்பமின்றியும் பொறுத்துக்கொள்வார்.

84 வியாதி பொறுக்கமுடியாத வ­யையும் கஷ்டத்தையும் கொணர்கிறது. ஞானி தம்முடைய கருணை மிகுந்த பார்வையால் எந்த துக்கமும் ஏற்படாதவாறு வியாதியை நிவாரணம் செய்துவிடுகிறார்.

85 இங்கே பாபாவின் சொற்களே பிரமாணம். அதுவே ராமபாணம் போன்ற, குறிதவறாத ஔஷதம். இதுபோலவே, கறுப்புநாய்க்குத் தயிர்ச்சோறு போட்டதால் மலேரியா ஜுரம் நிவாரணம் ஆகியது.

86 இம்மாதிரியான கிளைக்கதைகள் பிரதமமான கதையி­ருந்து விலகிச் செல்வதுபோலத் தோன்றலாம். கேட்டு, ஸாராம்சத்தைப் புரிந்துகொண்டால், அவற்றின் சம்பந்தம் நன்கு விளங்கும். மேலும், என்னுடைய மனத்திற்கு இக் கிளைக்கதைகளைக் கொண்டுவருபவர் ஸாயீதானேõ

87 'என்னுடைய காதையை நானே விவரிக்கிறேன்ஃ என்று ஸாயீ சொல்­யிருக்கிறார். அவர்தான் இந்த சமயத்தில் எனக்கு இக்காதைகளை ஞாபகப்படுத்துகிறார்.

88 பாலா கணபத் என்னும் பெயர்கொண்ட சிம்பி (தையற்கார) ஜாதியைச் சேர்ந்த தீவிர பக்தரொருவர் ஒருசமயம் மசூதிக்கு வந்து பாபாவின் எதிரில் வந்து நின்று, தீனமான குர­ல் வேண்டினார்,--

89 ''நான் என்ன பெரும் பாவம் செய்துவிட்டேன்? ஏன் இந்த மலேரியா ஜுரம் என்னை விடமாட்டேன் என்கிறது? பாபா, எத்தனையோ உபாயங்களைச் செய்து பார்த்துவிட்டேன்; ஆனால், இந்த ஜுரம் என் உடலைவிட்டு நீங்கமாட்டேன் என்கிறது.--

90 ''ஓ, நான் இப்பொழுது என் செய்வேன்? எத்தனையோ மருந்துகளையும் கஷாயங்களையும் அருந்தி பார்த்துவிட்டேன்õ நீங்களாவது இந்த ஜுரம் நீங்குவதற்கு ஒரு நிவாரணம் சொல்லுங்கள்õஃஃ

91 பாபாவினுடைய இதயம் கனிந்தது. பதில் சொல்லும் வகையில் மலேரியா நீங்க விநோதமான ஓர் உபாயம் சொன்னார். அது என்னவென்று கேளுங்கள்õ

92 ''லக்ஷ்மி கோயிலுக்கருகி­ருக்கும் கறுப்புநாய் தின்பதற்குச் சில கவளங்கள் தயிர்ச்சோறு கொடு; உடனே உன்னுடைய ஜுரம் குணமாகிவிடும்õஃஃ

93 பாலா உணவு தேடுவதற்காகச் சிறிது பீதியுடன் வீடு திரும்பினார். அதிருஷ்டவசமாக, ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் சோறு இருப்பதைப் பார்த்தார்; அருகிலேயே தயிரும் இருந்தது.

94 'தயிரும் சோறும் கிடைத்தது மிக்க நன்று. ஆயினும், இந்த வேளையில் கோயிலுக்கருகில் கறுப்புநாய் இருக்குமா?ஃஃ என்று பாலா யோசனை செய்துகொண்டே போனார்.

95 தேவையில்லாத கவலைõ குறிப்பிட்ட இடத்தை அவர் சென்றடையுமுன்பே ஒரு கறுப்புநாய் வாலை ஆட்டிக்கொண்டு தம்மை நோக்கி வருவதைப் பார்த்தார்.

96 பாபா குறிப்பிட்டவாறே அனைத்தும் நடப்பதுபற்றி பாலா கணபத் மிக்க ஆனந்தமடைந்தார். உடனே அவர் நாய்க்குத் தயிர்ச்ாேறு போட்டார். பிறகு, பாபாவிடம் சென்று நடந்ததனைத்தையும் சொன்னார்.

97 யார் இந்த நிகழ்ச்சியைப்பற்றி என்ன சொன்னாலும், சாராம்சம் என்னவென்றால், அப்பொழுதே மலேரியா ஜுரம் பாலாவை விட்டு நீங்கியது. பாலா நிவாரணம் அடைந்தார்.

98 அதுபோலவே, பாபுஸாஹேப் புட்டிக்கு ஒருசமயம் குடல் சீதளத்தினால் பேதியும் வாந்தியும் கண்டது.

99 அலமாரி பூராவும் பலவகையான மருந்துகளால் நிரம்பியிருந்தது. ஆயினும், அம்மருந்துகளில் எதுவுமே நிவாரணமளிக்கவில்லை. பாபுஸாஹேப் மனத்தில் கலவரமடைந்தார்; கவலைப்பட ஆரம்பித்தார்.

100 பல தடவைகள் பேதியும் வாந்தியும் ஆகி, பாபுஸாஹேப் க்ஷீணமடைந்து போனார். தினப்படிப் பழக்கமான 'பாபா தரிசனத்திற்குச்ஃ செல்வதற்குக்கூட சக்தியற்று இருந்தார்.

101 இச்செய்தி பாபாவின் காதுக்கு எட்டியது. அவர் புட்டியை அழைத்துவரச்சொல்­, தம்மெதிரில் உட்காரவைத்தார். பாபா கூறினார், ''இதோ பார், இப்பொழுதி­ருந்து நீ மலம் கழிக்கப் போகமாட்டாய்õ--

102 ''அத்தோடு, ஞாபகமிருக்கட்டும், வாந்தியும் நின்றுவிட வேண்டும்.ஃஃ புட்டியை நேருக்கு நேராகப் பார்த்து, ஆட்காட்டி விரலை ஆட்டிக்கொண்டே அதே வார்த்தைகளை மறுபடியும் கூறினார்.

103 அவ்வார்த்தைகளின் தாத்பரியத்தைக் கேட்டு பயந்துபோய், வியாதி உடனே ஓட்டம் பிடித்ததுõ ஸ்ரீமான் புட்டி சொஸ்தமடைந்தார்.

104 இதுபோலவே, புட்டி முன்னம் ஒருசமயம் பேதியாலும் வாந்தியாலும் அவதிப்பட்டார். அப்பொழுது சிர்டீயில் காலராநோய் கண்டிருந்தது. புட்டிக்குத் தாகத்தால் தொண்டை வரண்டுபோயிற்று; வயிறு எந்நேரமும் குமட்டியது.

105 சிர்டீயிலேயே இருந்த டாக்டர் பிள்ளை பல மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார். எதுவும் நிவாரணம் அளிக்காத நிலையில், முடிவாகப் பிள்ளை பாபாவிடம் சென்றார்.

106 பணிவுடன் பாபாவிடம் எல்லா விவரங்களையும் சொல்­விட்டு, பிள்ளை பாபாவைக் கேட்டார், ''அவருக்குக் காபி கொடுக்க வேண்டுமா? அல்லது தண்ணீரே நல்லதா?ஃஃ

107 பாபா டாக்டரிடம் கூறினார், ''அவருக்குப் பால் கொடுங்கள்; பாதாம், பிஸ்தா, அக்ரூட், பருப்புகளும் கொடுங்கள்õ அவர் குடிப்பதற்கு அரிசிநொய்யும் பருப்புநொய்யும் சேர்த்துக் கஞ்சி போட்டுக்கொடுங்கள். --

108 ''அவருடைய தாகமும் அவஸ்தையும் உடனே ஒழியும்.ஃஃ சாராம்சமான விஷயம் இதில் என்னவென்றால், புட்டி அந்தக் கஞ்சியைக் குடித்தவுடனே அவருடைய வியாதி மறைந்ததுõ

109 பாதாம், பிஸ்தா, அக்ரூட், பருப்புகளைச் சாப்பிட்டுக் காலராநோய் கண்டவர் நிவாரணம் அடைவதாõ இங்கு பாபாவின் வார்த்தைகளே நம்பிக்கையின் அஸ்திவாரம்; ஸந்தேஹம் என்பதற்கு இங்கு இடமேதுமில்லை.

110 ஒரு முறை ஆலந்தியி­ருந்து1 ஒரு ஸந்நியாசி2 ஸமர்த்த ஸாயீயை தரிசனம் செய்தவற்காக சிர்டீக்கு வந்தார். பாபாவினுடைய ஆசிரமத்திற்கு (மசூதிக்கு) வந்து சேர்ந்தார்.

111 அவர், காதில் ஏதோ ஒரு நோயினால் இன்னல்பட்டு, சரியான தூக்கமுமின்றி அவதிப்பட்டுக்கொண் டிருந்தார். ஏற்கெனவே ஓர் அறுவைச்சிகிச்சையும் நடந்திருந்தது. ஆனால் எள்ளளவும் உபயோகம் ஏற்படவில்லை.

112 காதுவ­ பொறுக்கமுடியாம­ருந்தது; எந்த உபாயமும் வேலை செய்யவில்லை. ஆகவே, அவர் ஆலந்தியி­ருந்து கிளம்பி பாபாவின் ஆசீர்வாதம் பெறுவதற்காக வந்தார்.

113 ஸந்நியாசி ஸாயீயின் பாதங்களில் விழுந்து வணங்கி, உதீ பிரஸாதம் வாங்கிக்கொண்டு, பாபாவினுடைய அருள் தமக்கு எப்பொழுதும் இருக்கண்ேடும் என்று பிரார்த்தனை செய்தார்.

114 மாதவராவ், ஸந்நியாசிக்காக, அவருடைய காதுரோகத்தை நிவிர்த்தி செய்யுமாறு பாபாவை விநயத்துடன் கேட்டுக்கொண்டார். ''அல்லா சுகம் செய்துவிடுவார்ஃஃ என்று மஹராஜ் உறுதியளித்தார்.

115 இந்த ஆசீர்வாதத்தை வாங்கிக்கொண்டு, ஸந்நியாசி புணேவுக்குத்3 திரும்பினார். பொறுக்கமுடியாத வ­ அப்பொழுதே நின்றவிட்டது, என்னும் செய்தி தாங்கிய கடிதம் எட்டு நாள்கள் கழிந்து வந்தது.

116 ''வீக்கம் என்னவோ இன்னும் இருக்கிறது; இன்னும் ஓர் அறுவைச்சிகிச்சை செய்யப்படவேண்டுமென்ற பரிந்துரை இருந்தது; அதற்காகவே நான் மறுபடியும் மும்பயி (பம்பாய்) சென்றேன்.--

117 ''அதே டாக்டரிடம் சென்றேன். பாபாவை சங்கடத்தில் ஆழ்த்திவிட்டேனோ என்னவோ தெரியவில்லை. என்னுடைய காதைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டரால் வீக்கம் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.--

118 ''ஆகவே, டாக்டர் அறுவைச்சிசிச்சை செய்யவேண்டிய அவசியமில்லை என்று சொல்­விட்டார்.ஃஃ ஸந்நியாசியின் பெரிய கவலை ஒழிந்தது. எல்லாரும் பாபாவின் லீலையைக் கண்டு வியப்படைந்தனர்.

119 இந்த சந்தர்ப்பத்தில் இதே மாதிரியான காதையொன்று எனக்கு ஞாபகம் வருகிறது. அந்தக் காதையைச் சொல்­விட்டு இந்த அத்தியாயத்தை முடித்துவிடுகிறேன்.

120 ஸபாமண்டபத்தின் தரைக்குத் தளம் போடும் வேலை ஆரம்பிப்பதற்கு எட்டு நாள்களுக்கு முன்பு மஹாஜனி காலராநோயினால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

121 அவருக்குப் பல தடவைகள் பேதியாகியது. ஆனால், இதயத்தின் ஆழத்தில் பாபாவின்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, மிகவும் நொந்துபோயிருந்த நிலையிலும் எந்த மருந்தையும் வைத்தியமுறையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

122 பாபா பூரணமான அந்தர்ஞானி என்று மஹாஜனிக்குத் தெரியும். ஆகவே, தம்முடைய நோய்பற்றி ஏதும் பாபாவுக்குத் தெரிவிக்கவில்லை.

123 பாபா விருப்பப்பட்டபோது அவராகவே அந்த நோயை நீக்கிவிடுவார் என்னும் முழு நம்பிக்கையுடன் தம்முடைய வேதனையையும் துன்பத்தையும் பொறுத்துக்கொண்டார்.

124 எவ்வளவு துன்பப்பட்டாலும் சரி, தினப்படிப் பூஜைக்கும் ஹாரதிக்கும் செல்வதற்குத் தடை ஏற்படக்கூடாது என்றே அவர் விரும்பினார்.

125 பேதி அடிக்கடியும் பலமுறைகளும் வரையின்றிப் போனபோது, தினப்படி ஹாரதி ஸேவையை இழந்துவிடக்கூடாது என்னும் நோக்கத்தில் அவர் என்ன செய்தாரென்றால்,--

126 நீர் நிரம்பிய ஒரு தாமிரச் சொம்பை இருட்டிலும் சுலபமாக எடுக்கக்கூடிய இடத்தில் மசூதியில் தம்முடன் வைத்துக்கொண்டார்.

127 பாபாவின் பக்கத்தில் அமர்ந்து, பாபாவினுடைய பாதங்களைப் பிடித்துவிட்டுக் கொண்டு தம்முடைய நித்திய பழக்கப்படி ஹாரதி நேரத்தில் தவறாது அங்கிருந்தார்.

128 வயிறு சத்தமிட்டாலோ குழம்பினாலோ நீர்ப்பாத்திரம் அருகிலேயே இருந்தது. தனிமையான இடத்திற்குச் சென்று மலம் கழித்துவிட்டுத் திரும்பி வந்துவிடுவார்.

129 இந்நிலையில், தாத்யா (கணபத் கோதே பாடீல்) தரைக்குத் தளம் போடுவதற்கு அனுமதி கேட்டார். பாபா அனுமதியளித்தார். பாபா அவரிடம் என்ன சொன்னாரென்று கேளுங்கள்õ

130 ''நாங்கள் இப்பொழுது லெண்டிக்குப் போய்க்கொண் டிருக்கிறோம். நாங்கள் எப்பொழுது திரும்பி வருகிறோமோ, அப்பொழுது தளம் போடும் வேலையை ஆரம்பியுங்கள்.ஃஃ

131 பிறகு பாபா திரும்பிவந்து, தம்முடைய வழக்கமான இடத்தில் உட்கார்ந்துகொண்டார். காகாமஹாஜனியும் சரியான நேரத்தில் அங்கு வந்து, பாபாவினுடைய பாதங்களைப் பிடித்துவிட ஆரம்பித்தார்.

132 கோபர்காங்வி­ருந்து குதிரைவண்டிகள் வந்தன. பம்பாயி­ருந்து சில பக்தர்களும் வந்து சேர்ந்தனர். பூஜை சாமான்களை எடுத்துக்கொண்டு பக்தர்கள் மசூதியின் படிகளில் ஏறி பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர்.

133 இக்குழுவினருடன் அந்தேரியி­ருந்து1 ஒரு பாடீல் மலர்கள், அக்ஷதை இன்னும் பிற பூஜை சாமான்களை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். தம்முடைய முறை வருவதற்காகக் காத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

134 திடீரென்று, கீழேயிருந்த முற்றத்தில், தேர் வழக்கமாக நிறுத்தப்படும் இடத்தில் கூந்தா­யின்2 முதல் வெட்டு விழுந்தது. தளம் போடும் வேலை ஆரம்பமாகியிருந்தது.

135 சத்தத்தைக் கேட்டவுடனே பாபா நரஸிம்ஹ அவதாரம் எடுத்தவர்போல் கண்களைப் பயங்கரமாக உருட்டிக்கொண்டு, விசித்திரமான குர­ல் சத்தம் போட்டார்.

136 ''யார் அங்கே கூந்தா­யால் குத்தினான்? அவனுடைய முதுகெலும்பை உடைத்துவிடுவேன்ஃஃ என்று கூவிக்கொண்டே தம்முடைய ஸட்காவை எடுத்துக்கொண்டு எழுந்தார். சுற்றி இருந்த அனைவரும் பீதியடைந்தனர்.

137 பணியாள் கூந்தா­யைக் கீழேபோட்டுவிட்டுத் 'தப்பித்தேன், பிழைத்தேன்ஃ என்று ஓடிவிட்டான்; எல்லாரும் ஓடிவிட்டனர். பாபா காகாவின் கையைத் திடீரென்று பிடித்தபோது அவரும் திடுக்கிட்டுப்போனார்.

138 ''நீர் எங்கே போகிறீர்? இங்கு உட்காரும்ஃஃ என்று பாபா கூறினார். இதற்குள் தாத்யாவும் லக்ஷ்மிபாயியும் அங்கு வந்தனர். பாபா அவர்களைத் தம் மனம் திருப்தியடையும்வரை கண்டபடி ஏசினார்.

139 முற்றத்திற்கு வெளியே இருந்தவர்களையும் பாபா வசைமாரி பொழிந்தார். திடீரென்று அங்கே கிடந்த வறுத்த வேர்க்கடலை நிரம்பிய பை ஒன்றை பாபா எடுத்தார்.

140 பாபா எதிர்பாராமல் கோபாவேசம் கொண்டபோது, மசூதியி­ருந்து உயிருக்கு பயந்து சிதறி ஓடியவர்களில் யாராவது ஒருவருடைய கையி­ருந்து இந்தப் பை விழுந்திருக்க வேண்டும்.

141 வேர்க்கடலை ஒரு சேராவது3 இருக்கும். பிடிப்பிடியாக எடுத்து, உள்ளங்கைகளால் தேய்த்து வாயால் ஊதித் தோலை நீக்கினார் பாபா.

142 ஒரு பக்கம் வசவுகளைப் பொழிந்துகொண்டே மறுபக்கம் வேர்க்கடலையைத் தேய்த்துத் தோல் நீக்கி ஊதித் தள்ளினார். சுத்தம் செய்யப்பட்ட கடலையை மஹாஜனியைத் தின்னவைத்தார்.

143 ''தின்றுவிடும்ஃஃ என்று திரும்பத் திரும்பச் சொல்­ மஹாஜனியின் கையில் வேர்க்கடலைகளைத் திணித்தார். அவ்வப்போது தாமும் சிறிது வாயில் போட்டுக்கொண்டார்õ இவ்விதமாக முழுப் பையும் கா­யாகியது.

144 வேர்க்கடலை கா­யானவுடன், ''தண்ணீர் கொண்டு வாரும், எனக்கு தாகமாக இருக்கிறதுஃஃ என்று பாபா சொன்னார். காகா ஜாடி நிறையத் தண்ணீர் நிரப்பி பாபாவுக்குக் கொண்டுவந்தார். அதி­ருந்து தண்ணீர் குடித்துவிட்டு, காகா மஹாஜனியையும் குடிக்கச் சொன்னார் பாபா.

145 காகா தண்ணீர் அருந்திக்கொண் டிருந்தபோதே பாபா அவரிடம் சொன்னார். ''இப்பொழுது போம், உம்முடைய பேதி நின்றுவிட்டதுõ ஆனால், எங்கே? ஓ, எங்கே போய்விட்டனர் அந்த பிராமணர்களெல்லாம்1? போய் அவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு வாரும்.ஃஃ

146 சிறிது நேரம் கழித்து அனைவரும் திரும்பினர்; மசூதி முன்போலவே நிரம்பி வழிந்தது. மறுபடியும் தளம் போடும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. காகா மஹாஜனியின் காலராவும் ஒழிந்ததுõ

147 ஆஹாõ பேதிக்கு எப்படிப்பட்ட மருந்துõ உண்மையான மருந்து ஞானியின் சொல் அன்றோõ எவர் அதைப் பிரஸாதமாக எடுத்துக்கொள்கிறாரோ, அவருக்கு மருந்தேதும் தேவையில்லை.

148 ஹரதா நகரத்தில் வாழ்ந்த கிருஹஸ்தரொருவர் சூலைநோயினால் (வயிற்றுவ­யால்) பதினான்கு ஆண்டுகள் அவதிப்பட்டார். எல்லா வைத்தியமுறைகளையும் செய்து பார்த்தார்; பிரயோஜனம் ஏதுமில்லை.

149 அவருடைய பெயர் தத்தோ பந்த். சிர்டீயில் ஸாயீ என்று அழைக்கப்பட்ட மஹா ஞானி ஒருவர் இருக்கிறார் என்றும் அவருடைய தரிசனமே எல்லா வியாதிகளையும் நிவிர்த்தி செய்துவிடுகிறது என்றும் ஒரு செவிவழிச் செய்தி அவரைச் சென்றடைந்தது.

150 இக்கீர்த்தியைக் கேள்விப்பட்டு, அவர் சிர்டீக்குச் சென்று பாபாவின் பாதங்களில் தம் சிரத்தை வைத்துக் கருணை வேண்டினார்.

151 ''பாபா, பதினான்கு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இச்சூலைநோய் என்னை விடமாட்டேன் என்கிறது. போதும், போதும், நான் பட்டது போதும். நான் பொறுமையின் எல்லைக்கே வந்துவிட்டேன்; இனிமேலும் இவ்வ­யை அனுபவிப்பதற்கு எனக்கு சக்தி இல்லை.--

152 ''நான் யாருக்குமே துன்பம் இழைத்ததில்லை; எவரையும் ஏமாற்றியதில்லை. மாதா பிதாக்களை அவமதித்ததில்லை. பூர்வ ஜன்மத்தில் என்ன கர்மம் செய்தேன் என்று தெரியவில்லை; அதன் காரணமாக இந்த ஜன்மத்தில் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறேன்õஃஃ

153 ஞானிகளுடைய கருணாகடாக்ஷமும் ஆசீர்வாதமும் பிரஸாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை.

154 தத்தோ பந்தினுடைய அனுபவம் அவ்வாறு இருந்தது. பாபாவினுடைய கரம் அவருடைய சிரத்தின்மீது வைக்கப்பட்டு, விபூதியையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்ட பின்னர் அவருடைய மனம் அமைதியடைந்தது.

155 மஹராஜ் அவரைச் சிலநாள்கள் சிர்டீயில் தங்கும்படி செய்தார். படிப்படியாக அவருடைய சூலைநோய் நிர்மூலமாகியது.

156 மஹாத்மாக்கள் இவ்விதமேõ அவர்களுடைய பிரபாவத்தை நான் எங்ஙனம் தேவையான அளவுக்கு வர்ணிப்பேன்? நகரும் நகராப் பொருள்கள் அனைத்தின் மீதும் ஸத்பா(ஆஏஅ)வம் கொண்ட மஹான்களுக்கு பரோபகாரமே நித்திய சுபாவம்.

157 இப்பெருமைகளைப் பேசிக்கொண் டிருக்கும்போதே எனக்கு மற்ற காதைகள், ஒன்றைவிட மற்றொன்று அற்புதமானதாக ஞாபகத்திற்கு வருகின்றன. ஆனால், நாம் இப்பொழுது பிரதமமான பீமாஜீயின் காதையை விட்ட இடத்தில் தொடர்வோமாகõ

158 ஆக, பாபா உதீயைக் கொண்டுவரச் செய்து, பீமாஜீக்கு அளித்துச் சிறிது அவருடைய நெற்றியிலும் இட்டுவிட்டார். பிறகு பாபா தம்முடைய அருட்கரத்தை பீமாஜீயின் தலைமேல் வைத்தார்.

159 தங்குமிடத்திற்குச் செல்லும்படி பீமாஜீ ஆக்ஞையிடப்பட்டார். பாடீல் சில அடிகள் மெதுவாக எடுத்துவைத்த பிறகு, வண்டிவரை நடந்து சென்றார். தமக்குத் தெம்பு வந்துவிட்டதை உணர்ந்தார்.

160 பாபா ஆலோசனை கூறிய இடத்திற்குச் (பீமாபாயீயின் வீட்டிற்குச்) சென்றார். அவ்விடம் குறுகலாகவும் காற்றோட்டமின்றியும் இருந்தபோதிலும், பாபா அவ்வாறு செய்யச் சொல்­யிருந்தார்; அதுதான் முக்கியம்.

161 சமீபத்தில் களிமண்ணால் சமம் செய்யப்பட்டிருந்ததால், தரை ஈரமாக இருந்தது. ஆனால், பாபாவின் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பீமாஜீ அவ்விடத்திலேயே தங்குவதற்கு வசதிகள் செய்துகொண்டார்.

162 பீமாஜீக்குக் கிராமத்தில் பலர் தெரிந்திருந்ததால், ஈரமில்லாத உலர்ந்த இடம் கிடைத்திருக்கும். ஆனால், பாபாவினுடைய திருவாய்மொழியாக வந்த இடத்திற்குப் பதிலாக, வேறு இடத்திற்கு மாற்றமுடியாது.

163 ஆகவே, அவர் அங்கே கோணிப்பைகளைத் தரையில் விரித்துத் தம்முடைய படுக்கையை அதன்மீது அமைத்துக்கொண்டார். மன அமைதியுடன் படுக்கையில் படுத்துக்கொண்டார்.

164 அன்றிரவே பீமாஜீ ஒரு கனவு காணும்படி நேர்ந்தது. கனவில் அவருடைய பாலபருவத்து ஆசிரியர் தோன்றி, அவரை அடிக்க ஆரம்பித்தார்.

165 கையில் பிரம்பை எடுத்துக்கொண்டு, அவரைச் சில மராட்டிச் செய்யுள்களை மனப்பாடமாக ஒப்பிக்கவைக்க, முதுகொடிந்துபோகுமாறு கடுமையாக அடிக்க ஆரம்பித்தார். சிஷ்யனுக்கு பயங்கரமான கஷ்டத்தைக் கொடுத்தார்.

166 கதை கேட்பவர்களுக்கு இச்செய்யுள்கள் யாவை என்று அறிந்துகொள்ளும் ஆவல் மிக இருக்கும். ஆகவே, நான் கேட்டதை விரிவாகவும் பதம் பதமாகவும் இங்கே தருகிறேன்.

167 ஆனால், எந்தப் பிழைக்காக இந்தத் தண்டனை என்று புரிந்துகொள்வது கடினம். ஆயினும், ஆசிரியர் பிரம்பைக் கீழே வைப்பதாக இல்லை. வெறிபிடித்தவர்போல அடித்தார்.

168 இதையடுத்து, பீமாஜீ முதற்கனவைவிட விசித்திரமான கனவொன்று கண்டார். ஒரு மனிதர் அவருடைய மார்பின்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு பலமாக மார்பை அமுக்கினார்.

169 ஒரு குழவியைக் கையிலெடுத்துக்கொண்டு பீமாஜீயினுடைய மார்பை அம்மியாக ஆக்கி அரைத்தார். தாங்கமுடியாத வ­யால், பரலோகப் பயணம் கிளம்பிவிட்டோம் என்று பீமாஜீ நினைக்கும் வண்ணம், உயிரே எம்பி வாய்க்கு வந்துவிட்டதைப் போ­ருந்தது.

170 கனவு முடிந்தது; அவர் தூக்கத்திலாழ்ந்தார்; தூக்கம் கொஞ்சம் சுகத்தை அளித்தது. உதயசூரியன் தோன்றினான்; பாடீல் விழித்துக்கொண்டார்.

171 எப்பொழுதும் கண்டிராத வகையில் புத்துணர்ச்சி பெற்றார்õ வியாதி பிடித்த உணர்வு நிர்மூலமாகியது. அம்மியும் குழவியும் பிரம்பும் சொன்ன குறிப்பு என்னவென்று தெரிந்துகொள்வதற்கு யாருக்கு ஞாபகம் இருந்தது?

172 மக்கள் கனவுகளை அர்த்தமற்றனவாகவே நினைக்கின்றனர். ஆனால், சில நேரங்களில் நம்முடைய அனுபவம் எதிர்மாறாக இருக்கிறது. கனவு கண்ட அதே மங்களகரமான நேரத்தில் வியாதி ஒழிக்கப்பட்டது; பாடீ­ன் துன்பம் முடிவுற்றது.

173 பாடீ­ன் மனத்தில் சந்தோஷம் பொங்கியது; தாம் புனர்ஜன்மம் எடுத்துவிட்டதாகவே நினைத்தார். பிறகு அவர் மெதுவாக ஸாயீ தரிசனத்திற்குக் கிளம்பினார்.

174 சந்திரனைப் போன்ற பாபாவின் முகத்தைப் பார்த்தவுடனே பாடீலுடைய மனத்தில் ஆனந்த ஸமுத்திரம் பொங்கியது. அவருடைய கண்கள் ஆனந்தமான அனுபவத்தில் செருகிக்கொண்டன. முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது.

175 பாபாவினுடைய பாதங்களில் தலைவைத்தபோது ஆனந்தக்கண்ணீர் மடை திறந்தாற்போல் வழிந்தது. பிரம்படியும் இதயமே வெடித்துவிடும்போன்று மார்பு அமுக்கப்பட்டதுமாகிய தண்டனைகளின் முடிவான விளைவு சந்தேகமில்லாமல் சுகத்தை அளிப்பதாகவே அமைந்தது.

176 ''பாமரனாகிய என்னால் என்மீது காட்டப்பட்ட கருணைக்குப் பிரதி உபகாரமாக எதுவும் என்றுமே செய்ய இயலாது. ஆகவே, நான் என்னுடைய சிரத்தை உம்முடைய பாதங்களில் வைப்பதிலேயே திருப்திகொள்கிறேன். --

177 ''இந்த வழியில்தான் நான் சிறிதளவாவது என்னுடைய நன்றிக்கடனைக் கழிக்க முடியும்; வேறு வழி ஏதுமே இல்லை. பாபா ஸாயீ, உம்முடைய அற்புதமான வழிமுறைகள் புரிந்துகொள்ளமுடியாதவைõஃஃ

178 பாடீல் பாபாவின் மஹிமையைப் பாடியவாறு அங்கு ஒரு மாதம் தங்கினார். நானாவினுடைய உபகாரத்தை நன்றியுணர்வுடன் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, முயற்சிக்குப் பலன் கிடைத்த முழுத்திருப்தியுடன் வீடு திரும்பினார்.

179 ஸாயீயின் கருணைக்கு என்றும் நன்றிசொல்லக் கடமைப்பட்ட பாடீல், பக்தியுடனும் சிரத்தையுடனும், ஆனந்தம் நிரம்பிய மனத்துடன் சிர்டீக்கு அடிக்கடி வந்து போனார்.

180 ஸாயீநாதருக்கு, இரண்டு கைகளையும் (வணக்கம் செய்பவை) ஒரு தலையையும் (தாழ்த்தி வணங்கும் அங்கம்) ஸ்திரமான நம்பிக்கையையும் வேறெதிலும் நாட்டம் கொள்ளாத சிரத்தையையும் தவிர வேறென்ன வேண்டும்õ பக்தனின் நேர்மையான நன்றியுணர்வே அவருக்குப் போதுமானது.

181 ஒருவருக்குத் துன்பம் நேரும்போது, ஸத்தியநாராயணருக்குப் பூஜை செய்கிறேன் என்று வேண்டிக்கொள்கிறார். துன்பத்தி­ருந்து விடுதலை அடைந்தபின் ஸாங்கோபாங்கமாக (சடங்கு விதிமுறைகளின்படி) பூஜையைச் செய்கிறார்.

182 அதுபோலவே, பாடீல் அக்காலத்தி­ருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் தூய்மையாக, ஸ்நானம் செய்துவிட்டு ஸத்திய ஸாயீ விரதத்தை முறைப்படி அனுஷ்டானம் செய்தார்.

183 ஸத்திய நாராயண பூஜையின்போது மக்கள் ஸத்தியநாராயணரின் கதையைப் பாராயணம் செய்வார்கள். பாடீல் அதற்குப் பதிலாக தாஸகணு இயற்றிய 'நவீன பக்தலீலாமிருதம்ஃ என்னும் நூ­­ருந்து ஸாயீ சரித்திரத்தைப் பாராயணம் செய்தார்1.

184 இக்காவியத்தின் நாற்பத்தைந்து அத்தியாயங்களில் தாஸகணு பல உயர்ந்த பக்தர்களின் சரித்திரத்தை (அனுபவங்கள்) விவரித்திருக்கிறார். இதில் மூன்று அத்தியாயங்களில் ஸாயீநாதரின் ஸத்திய ஸாயீ காதை சொல்லப்பட்டிருக்கிறது.

185 விரதங்களிலேயே உத்தமமான விரதம், பாடீல் பாராயணம் செய்த இம்மூன்று அத்தியாயங்களைப் பாராயணம் செய்வதுதான். அதன் பயனாக அவர் அபரிமிதமான சௌக்கியத்தையும் மன அமைதியையும் பெற்றார்.

186 பாடீல், தம்முடன் பிறந்தவர்களையும் உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து, இந்த ஸத்திய ஸாயீ விரதத்தை ஆனந்தம் நிரம்பிய மனத்துடன் தவறாது செய்துவந்தார்.

187 நைவேத்தியமும் (படையல்) ஸத்தியநாராயண பூஜைக்குச் செய்யப்பட்ட பொருள்களுடனும்2 அதே விகிதத்திலும் கலந்து செய்யப்பட்டது. மங்கள உற்சவமும் அதே முறையில் கொண்டாடப்பட்டது. அதில் தொழப்பட்ட தெய்வம் நாராயணர்; இதில் தொழப்பட்ட தெய்வம் ஸாயீ; விரதத்தில் வேறு எந்த வித்தியாஸமும் இல்லை.

188 பாடீல் இதுவிஷயத்தில் முன்னோடியாக விளங்கினார். கிராமத்தில் அது ஒரு வழக்கமாகிவிட்டது. ஒருவர் பின் ஒருவராக மக்கள் அனைவரும் ஸத்திய ஸாயீ விரதத்தை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர்.

189 ஞானிகளின் கிருபை இவ்வாறேõ உரிய காலத்தில் பிராப்தம் நேரும்போது, தரிசனத்தினாலேயே பக்தர்களுடைய இன்னல்கள் அழிந்துபோகின்றன. யமனும் திருப்பியனுப்பப்படுகிறான்.

190 அடுத்த காதை, ஸந்ததி இல்லையே என்று ஒருவர் பட்ட கவலையையும் எல்லா ஞானிகளும் ஏகாத்மமாக (ஒன்றேயாக) இருக்கும் அற்புதத்தையும் விவரிக்கும்.

191 நாந்தேட் நகரத்தில் வசித்த, பார்ஸி மதத்தைச் சார்ந்த பணக்காரர் ஒருவர் பாபாவின் ஆசீர்வாதத்தால் புத்திரபாக்கியம் பெற்றார்.

192 நாந்தேடில் வசித்த மௌ­ஸாஹேப் என்ற ஞானியும் பாபாவும் ஒன்றே என்பது நிரூபிக்கப்பட்டது. பார்ஸி கனவான் ஆனந்தம் பொங்க வீடு திரும்பினார்.

193 இக்காதை உள்ளத்தைத் தொடும். கேட்பவர்களேõ அமைதியுடன் இக்காதையைக் கேளுங்கள். ஸாயீ எங்கும் நிறைந்தவர் என்பதும் அவருடைய வாத்ஸல்யமும் (தாயன்பும்) உங்களுக்கு நன்கு விளங்கும்.

194 ஹேமாட் பந்த் ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் பரிபூரணமாக சரணடைகிறேன். ஞானிகளையும் கதை கேட்பவர்களையும் வணங்குகிறேன். அடுத்த அத்தியாயத்தின் விவரணத்தை பயபக்தியுடன் கேளுங்கள்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'பீமாஜீ க்ஷயரோக நிவாரணம்ஃ என்னும் பதின்மூன்றாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.