Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 18

18. எனக்கு அநுக்கிரஹம் (பகுதி1)


ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 பரம நித்தியமான ஸத்குருவே ஜய ஜயõ பிரம்ம ஸத்தியமான ஸத்குருவே ஜய ஜயõ இவ்வுலகின் பொய்த்தோற்றமான மாயையை ஆள்பவரே ஜய ஜயõ

2 ஆதியும் அந்தமும் இல்லாதவரே ஜய ஜயõ இரட்டையாகிய மாயைக்கு அப்பாற்பட்டவரே ஜய ஜயõ நிர்விகாரராகிய (மாற்றமேயில்லாதவராகிய) உம்மால் மட்டுமே அடியவர்களின் நிஜமான ரூபத்தை அவர்களுக்கு போதிக்கமுடியும்.

3 உப்பால் செய்யப்பட்ட பொம்மை ஸமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதற்கு மூழ்கினால் திரும்பிவர இயலுமா? இது எக்காலத்தும் நடக்காது; நீங்களும் அவ்வாறேõ (பக்தன் உப்புப்பொம்மை; பாபா ஸமுத்திரம்)

4 வேதங்களும் உபநிஷதங்களும் இரவுபகலாக எதைப்பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கின்றனவோ அப் பரம்பொருளை உம்முடைய பக்தர்களுக்குப் பிரயாசை (முயற்சி) ஏதுமில்லாமலேயே விரலால் சுட்டிக்காட்டுகிறீர்.

5 சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் நிகழ்ச்சியாக எவராவது உம்முடைய அரவணைப்பில் அகப்பட்டால், அவருக்கு 'என்னுடையதுஃ என்பதும் 'மற்றொருவருடையதுஃ என்பதுமான குதர்க்க சிந்தனைகளுக்கே இடமில்லாமல் போகிறது.

6 கடந்த அத்தியாயத்தில் தூய்மையளிக்கும் ஒரு சிறுகதையின்மூலம், மர்மம் நிறைந்த பிரம்ம மூட்டை அவிழ்க்கப்பட்டு விரிக்கப்பட்டது. பிரம்ம ஞானம் தேடிவந்த மனிதரின் பேராசை எவ்வாறு அவரைத் தடுக்கிவிட்டுவிட்டது என்பது விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.

7 செவிமடுப்பவர்களேõ பாபாவிடமிருந்து எவ்வாறு நான் அநுக்கிரஹம் பெற்றேன் என்ற காதையைச் சொல்கிறேன்; கவனமாகக் கேளுங்கள். பாபாவினுடைய வழிகாட்டும் முறைகளை அது வெளிக்கொணரும்.

8 இதுவும் ஒரு சுவை மிகுந்த கதை. எவ்விதமாக நடந்ததோ அவ்விதமாகவே சொல்கின்றேன். கேட்பவர்கள் அவர்களுடைய நன்மை கருதி இதை அமைதியான மனத்துடன் கேட்கவேண்டும்.

9 கேட்பவர்கள் சுவாரசியமாகக் கேட்டால் கதை சொல்பவருக்கும் உற்சாகம் பிறக்கிறது. இருவருடைய இதயத்திலும் பிரேமை பொழிந்து அவர்களை ஆனந்தத்தால் நிரப்புகிறது.

10 ஆன்மீக அதிகாரத்திற்கேற்றவாறு, எள்ளளவும் புத்தி பேத­க்காத வகையில், பாபா ஒவ்வொரு பக்தருக்கும் அவருக்கேற்ற உபதேசத்தை அளித்து ஆன்மீகப் பாதையில் நடைபோட வைக்கிறார்.

11 குரு தங்களுக்கு என்ன திருவாய்மொழி அருளினார் என்பதை மற்றவர்களிடம் சொல்லக்கூடாது என்று பலர் நினைக்கின்றனர். அவ்வாறு செய்தால் குருவின் திருவாய்மொழி பயனற்றுப்போகும் என்றும் நம்புகின்றனர்.

12 இது வெறும் கற்பனையே. ஒன்றுமில்லாததைப் பெரிதுபடுத்தும் சமாசாரம்; ஆகவே அர்த்தமற்றது. உண்மையில், நேரடியாகச் செய்யப்பட்ட ஆன்மீக போதனைகளை மட்டுமல்லாமல் கனவில் தோன்றிய போதனைகளையும் மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும். அது பயன்தரக்கூடிய, நல்ல ஞானம்.

13 இவ்வபிப்பிராயத்திற்குப் பிரமாணம் ஏதும் இல்லை என்று நினைப்பவர்கள், புத்த கௌசிக ரிஷியே இதற்குப் பிரமாணம் என்பதை அறியவும். தமக்குக் கனவில் அளிக்கப்பட்ட உபதேசத்தை 'ஸ்ரீ ராம ரக்ஷா தோத்திரம்ஃ என்னும் உருவத்தில் அனைவருக்கும் அளித்துவிட்டார் அவர்.

14 குரு எல்லா ஜீவன்களின்மீதும் ஆனந்தமழை பொழியும் கனத்த மழைக்காலத்து மேகமாவார். இவ்வானந்தம் மறைத்தோ பதுக்கியோ வைக்கவேண்டிய பொருளா என்ன? இல்லவேயில்லைõ இதயம் நிரம்பும்வரை அனுபவித்துக்கொண்டே மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும்.

15 ஒரு தாய், முகவாய்க்கட்டையை மென்மையாகத் தூக்கிக் குழந்தையை மருந்து குடிக்க வைக்கிறார். அனைத்தும் குழந்தையினுடைய ஆரோக்கியத்திற்காகவே. இது போன்றதே பாபா உபதேசம் செய்யும் திறமையும் முறையும்.

16 அவருடைய பாதை மர்மமானதோ இரஹஸியமானதோ அன்று. எவ்வாறு, எவ்விதமான வழிமுறைகளைக் கையாண்டு பக்தர்களுயை மனோரதத்தை அவர்கள் எதிர்பாராதவிதமாக பாபா பூர்த்திசெய்தார் என்பதை கவனத்துடன் கேளுங்கள்.

17 ஸத்குருவின் ஸங்கம் புனிதமானது, புனிதமானதுõ அதனுடைய மஹத்துவத்தை எவரால் தேவையான அளவிற்கு விவரிக்கமுடியும்? அவருடைய திருவாய்மொழி ஒவ்வொன்றாகச் சேகரிப்படும்போது, மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்கிற உற்சாகம் கரைபுரளுகிறது.

18 ஈசுவரனைப் பிேைமயுடன் வழிபடுவதாலும், குருவிற்கு ஸேவைசெய்து பூஜை செய்வதாலும், குருவால் அளிக்கமுடிந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இது விஷயத்தில் வேறெந்த முயற்சியும் வியர்த்தமே.

19 விக்ஷேபமும் (பொய், மெய்போலத் தோன்றுவது) ஆவரணமும் (மெய்யைத் திரை போட்டு மறைத்தல்) வாழ்க்கைப்பாதையை மங்கலாகவும் குழப்பமாகவும் ஆக்கிவிடுகின்றன. குருவின் திருவாய்மொழியே வாழ்க்கைப்பாதையில் தடங்க­ல்லாமல் நடக்க உதவும் ஒளிவிளக்காகும்.

20 குருவே பிரத்யக்ஷமான கடவுள்; குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் ஆவார். உண்மையில் குருராயரே முழுமுதற்கடவுளாவார்.

21 குருவே அன்னை; குருவே தந்தை. குரு, தேவர்களின் கோபத்தி­ருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார். குருவினுடைய கோபத்தி­ருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும்முடியாது என்பதை நன்கு அறிக.

22 உலகவாழ்க்கையின் வழிகாட்டி குரு. க்ஷேத்திராடனத்திற்கும் (புனிதப் பயணத்திற்கும்) விரதங்களுக்கும் தர்மம் எது, அதர்மம் எது, என்று அறிந்துகொள்வதற்கும் பற்றறுப்பதற்கும் குருவே வழிகாட்டி. வேதங்களையும் உபநிஷதங்களையும் நமக்குப் பிரவசனம் செய்பவரும் அவரே.

23 புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார். மஹா காருண்யமூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார்.

24 இதன் பிறகு புலனின்ப ஆசைகள் க்ஷீணமடைந்து (அழிவடைந்து), சிஷ்யன் தூக்கத்திலும் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறான்õ குருவின் அருளால் விவேகம், வைராக்கியம் என்னும் இரட்டைப் பழங்கள் கைக்கு வந்துசேர்கின்றன.

25 ஞானிகள் அடியவர்களுக்குக் கற்பகத்தரு ஆவர். அவர்களுடைய புனிதமான ஸந்நிதியில் இருந்துகொண்டு பிரேமையுடன் அவர்களுக்கு ஸேவை செய்தால், சிரமமான முயற்சிகள் எதுவும் தேவையில்லாது செய்துவிடுவர்.

26 ஆகவே, எப்பொழுதும் ஞானிகளின் உறவை நாடுங்கள். அவர்கள் சொல்லும் கதைகளைக் கேளுங்கள். எல்லாப் பாவங்களும் ஒழிய அவர்களுடைய பாதங்களை வழிபடுங்கள்.

27 பிரபு ரே (கர்ழ்க் தஹஹ்) என்பவர் பம்பாய் மாகாணத்தின் கவர்னராக இருந்தபோது, முனிசிபா­டி கமிஷனராக இருந்த திரு. கிராபோர்டு என்பவருடைய நிர்வாகத்தின்மீது ஒரு விசாரணை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பிரஸித்தியாகவும் கீர்த்தியுடனும் விளங்கிய ஒரு கனவான் பாபாவிடம் பக்தி கொண்டார்.

28 இக் கனவான் வியாபாரத்தில் பெருநஷ்டம் அடைந்ததால், வாழ்க்கையில் ச­ப்பும் வெறுப்பும் அடைந்தார். மூன்றுவிதமான தாபங்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையே வியர்த்தம் என்பதை உணர்ந்தபின், கையில் ஒரு லோட்டாவை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்.

29 மனம் நிலை கொள்ளாமல் தவித்ததால், தனிமையை நாடித் தூரமாக எங்காவது சென்றுவிட வேண்டுமென்று நினைத்தார். அந்த எண்ணத்தையே திடமாக்கிக் கொண்டார்.

30 மிக சங்கடமான நிலைமை வரும்போது தன்னுடைய கஷ்டத்தைத் தாங்க முடியாமல் மனிதனுக்கு இறைவனின் ஞாபகம் வருகிறது. முழுத்தீவிரத்துடன் பக்திசெய்து இறைவனைக் கூவி அழைக்கிறான்.

31 கெடுசெயல்களைத் தங்குதடையின்றித் தொடரும்வரை, இறைவனுடைய நாமம் தொண்டைக்கு வருவதில்லை. ஆயினும் முதன்முறையாக இது நிகழ்ந்தவுடன், அவனை ஒரு ஞானியை சந்திக்கும்படி இறைவன் ஏற்பாடு செய்கிறான்.

32 அந்த பக்தரின் வரலாறும் அவ்வாறே. வாழ்க்கையில் அவர் அடைந்த தளர்ச்சியைக் கண்ட சில நண்பர்கள், அவருக்கு இதமானதொரு பரிந்துரை வழங்கினர். அதைக் கேளுங்கள்.

33 ''சிர்டீக்குச் சென்று ஸமர்த்த ஸாயீயை தரிசனம் செய்யலாமே. அவசியம் அங்கே சென்று தயாஸாகரமான அந்த ஞானியிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.--

34 ''ஞானிகளுடைய ஸந்நிதியில் ஒரு கணம் இருந்தாலும் அலைபாயும் மனம் அமைதியுறுகிறது. உடனே ஹரிபாதங்களை நாடுகிறது. பிறகு அங்கிருந்து மனத்தைத் திரும்ப இழுப்பது கடினமாகிவிடுகிறது. --

35 ''பல தேசங்களி­ருந்து மக்கள் அங்கே குழுமுகின்றனர். ஸாயீயின் பாததூளியில் புரளுகின்றனர். மஹராஜ் அளிக்கும் உபதேசங்களுக்குப் பணிவுடன் கீழ்ப்படிகின்றனர். அவருக்கு ஸேவை செய்து, விரும்பியவற்றைப் பெறுகின்றனர்.--

36 ''இதுவே அவருடைய பிரஸித்தியான கீர்த்தி. குழந்தைகளி­ருந்து கிழவர்கள்வரை அனைவரும் அவரை அறிவர். அவர் உம்மீது கருணைவைத்தால் உம்முடைய துக்கம் நிவிர்த்தியாகிவிடும்.--

37 ''இக் காலத்தில் சிர்டீ ஒரு க்ஷேத்திரம் ஆகிவிட்டது. இரவுபகலாக யாத்திரிகர்கள் வந்துகொண்டேயிருக்கின்றனர். ஞானிகளின் தரிசனம் எவ்வளவு நன்மை செய்கிறது என்பதை நீங்களும் சொந்த அனுபவத்தில் உணரலாம்.ஃஃ

38 வறட்சியால் அடிபட்ட தரித்திரனுக்கு திடீரென்று பெய்யும் கனமழை எப்படியோ, பசியால் வாடிப் பிராணன் போய்விடும் போன்ற நிலையில் இருப்பவனுக்கு அறுசுவை உணவு கிடைப்பது எப்படியோ,--

39 அவ்வாறு இருந்தது நண்பர்களின் வார்த்தை அந்த பக்தருக்கு. அவர் அந்த அனுபவத்தைப் பெறவேண்டுமென்று முடிவுசெய்து, சிர்டீ செல்லும் பாதையில் பயணமாகக் கிளம்பிவிட்டார்.

40 சிர்டீ கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்; தரிசனம் செய்தார்; பாபாவின் பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தார். உடனே அவருடைய கண்களில் அமைதி தவழ்ந்தது; மனத்தில் ஸமாதானம் நிரம்பியது.

41 பூரணமானதும் ஸநாதனமானதும் மாசற்றதும் சுயஞ்ஜோதியுமான ஸாயீயின் உருவத்தைப் பார்த்தவுடன் அவருடைய மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது.

42 பூர்வஜன்மத்தில் ஸம்பாதித்த பாக்கியத்தாலேயே தாம் ஸாயீயை தரிசனம் செய்ய நேர்ந்து, சாந்தியையும் கலக்கமில்லாத மனத்தையும் பெற்றதாக நினைத்தார்.

43 இந்த பக்தருடைய குடும்பப் பெயர் ஸாடே. மனத்திண்மை மிக்க இவர், நியமநிஷ்டையுடன் குருசரித்திர பாராயணத்தை ஆரம்பித்தார்.

44 ஸப்தாஹம் (ஒரு வாரத்திற்குள் பாராயணம் செய்து ஒரு சுற்று முடித்தல்) முடிந்த அன்று இரவே, பாபா ஸாடேவின் கனவில் தோன்றி, புத்தகமும் கையுமாக அவருக்கு அர்த்தத்தை விளக்கிக்கூற ஆரம்பித்தார்.

45 பாபா அமைதியாகத் தம்முடைய ஆஸனத்தில் உட்கார்ந்துகொண்டு ஸாடேவை தமக்கெதிரில் உட்காரவைத்து, குருசரித்திரம் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு பிரவசனம் செய்வதற்குத் தயாராக இருந்தார்.

46 பாபா ஒரு புராணிகரைப்போலப் (ஆன்மீகச் சொற்பொழிவாளரைப் போலப்) புத்தகத்தைப் படித்து விளக்கம் கூறினார். ஸாடே ஒரு கதைகேட்பவரைப்போல அமைதியாகவும் மரியாதையுடனும் குருகதையைக் கேட்டார் (கனவுக்காட்சி).

47 'அட இதென்ன தலைகீழான ஆள்மாறாட்டம்?ஃ என்று ஸாடே நினைத்தார். மிக ஆச்சரியமடைந்து அவருக்குப் பிரேமையால் தொண்டை அடைத்தது.

48 ''அஞ்ஞானமென்னும் தலையணையின்மேல் தலையை வைத்துக்கொண்டு புலனின்பங்களின்மேல் சாய்ந்துகொண்டு குறட்டை விட்டுக்கொண்டு தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பிவிடும் தயாளரேõ--

49 ''இதே நிலையில் இருந்த என்னை ஒரு தட்டுத் தட்டி எழுப்பி, குருசரித்திரம் என்னும் அமுதத்தை ஊட்டினீர்; கிருபாநிதியேõஃஃ

50 இந்தக் காட்சியைக் கண்டுகொண் டிருந்தபோதே ஸாடே தூக்கத்தி­ருந்து எழுந்துவிட்டார். தாம் கனவில் கண்ட காட்சியை விவரமாகக் காகாசாஹேப் தீக்ஷிதரிடம் சொன்னார்.

51 மேலும் அவர் கூறினார், ''காகா, இக் காட்சியினுடைய அர்த்தம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. பாபாவுக்குத்தான் அந்த ஸாமர்த்தியம் உண்டு. அவருடைய மனத்தில் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. இதைப்பற்றி நீங்கள் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்.--

52 ''நான் ஏற்கெனவே ஒரு சுற்று படித்தது போதுமா; அல்லது இன்னுமொரு சுற்று ஆரம்பித்துப் படிக்கவேண்டுமா? நான் என்ன செய்யவேண்டுமென்று பாபா விரும்புகிறார் என்று கேளுங்கள். அப்பொழுதுதான் என் மனம் அமைதியடையும்.ஃஃ

53 நல்ல வாய்ப்பொன்றைப் பயன்படுத்திக்கொண்டு, தீக்ஷிதர் பாபாவுக்கு ஸாடேயின் கனவை விவரித்தார். ''பாபா, இந்தக் கனவின்மூலம் ஸாடேவுக்கு என்ன சொல்லவேண்டுமென்று விரும்பினீர்?--

54 ''இன்னுமொரு ஸப்தாஹம் படிக்கவேண்டுமா அல்லது படித்தது போதுமென்று நிறுத்திவிடலாமா? இக் கனவுக் காட்சியின் முக்கியத்துவம் என்னவென்று நீங்களே விவரித்து அவருக்குப் பாதையைத் தெளிவாகக் காட்டுங்கள்õ--

55 ''இதுதான் என்னுடைய ஒரே வேண்டுகோள். ஸாடே ஒரு கபடமற்ற, நேர்மையான அடியவர். அவர்மீது கிருபைகூர்ந்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.ஃஃ

56 பாபா திருவாய்மலர்ந்து ஆணையிட்டார், ''இன்னும் ஒரு ஆவிருத்தி (சுற்று) படிக்கப்படட்டும். குருவினுடைய இந்தப் புனிதமான சரித்திரத்தைப் படிப்பதால் பக்தர்கள் நிர்மலமாக ஆகிவிடுகின்றனர்.--

57 ''இந்தப் போதியைப் (பாராயண நூல்) படிப்பதால் பக்தர்களுக்கு மங்களமுண்டாகும்; இறைவன் பிரீதியடைவான்; உலகபந்தங்களி­ருந்து விடுதலை கிடைக்கும்.ஃஃ

58 பாபா இதைத் திருவாய்மொழிந்துகொண் டிருந்தபோது நான் அவருடைய பாதங்களைப் பிடித்துவிட்டுக்கொண் டிருந்தேன். இவ்வார்த்தைகளைக் கேட்டு நான் எனக்குள்ளே வியப்படைந்தேன். என்னுடைய மனத்துள் ஓர் எண்ணம் எழுந்தது.

59 ''பாபா என்ன இவ்வாறு செய்கிறார்õ ஸாடேவின் சிறிய முயற்சி ஏழு நாள்களிலேயே பலன் அளித்துவிட்டது; நானோ வருஷக் கணக்காகக் கழித்துவிட்டேன்õ--

60 ''ஸாடே ஏழு நாள்களில் குருசரித்திரத்தை ஒரே ஒருமுறைதான் படித்தார். கடந்த நாற்பது வருடங்களாகப் படித்துக்கொண் டிருக்கும் எனக்குப் பலனேதும்

இல்லையா?--
61 ''ஒருவர் ஏழு நாள்களிலேயே பலனை அனுபவிக்கிறார். மற்றவர் (ஆசிரியர்) ஏழு வருஷங்களாகப் பலனேதுமில்லாமல் இருக்கிறார். இக் கருணை மேகம் எப்பொழுது அருள்மழை பொழியுமென்ற எதிர்பார்ப்பில் ஒரு சாதகப் பறவையைப்போல நான் ஏக்கத்துடன் காத்துக்கொண் டிருக்கிறேன்.--

62 ''ஞானிகளுள் மணிமகுடமானவர் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நாள் என்றைக்கு வரும்? என்றாவது எனக்கு உபதேசம் அளிப்பாரா?ஃஃ

63 பக்தவத்ஸலரான ஸாயீ என்ன அற்புதம் செய்தார் என்று பாருங்கள்õ என்னுடைய மனத்தில் இவ்வெண்ணம் எழுந்த உடனேயே அவருக்கு அது தெரிந்துவிட்டது.

64 இம்மாதிரியான (என்னுடையது போன்ற) அஞ்ஞானத்தினால், கோடிக்கணக்கான நல்லதும் கெட்டதுமான எண்ணங்கள் பக்தர்களின் மனத்தில் எழுகின்றன. பாபாவுக்கு இவையனைத்தும் தெரியும்.

65 நம்முடைய மனமே நமக்கு விரோதியென்பதும், பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்திசெய்யும் என்பதும், எல்லாருக்கும் நிச்சயமாகத் தெரியும். மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம்; மஹாராஜருக்கு உடனே தெரிந்துவிடும்õ

66 ஆயினும் பரமகிருபையுள்ள அன்னை (ஸாயீ), நிந்தனையான எண்ணங்களை மன்னித்து ஒதுக்கிவிட்டுப் பெருந்தன்மையான நல்லெண்ணங்களுக்கு, நல்வாய்ப்பு வரும்போது ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிறார்.

67 ஆகவே, என்னுடைய எண்ணத்தைப் படித்தறிந்துகொண்ட பாபா என்னிடம் கூறினார், ''எழுந்திரும், போய் அந்த சாமாவிடம் (மாதவராவ் தேச்பாண்டே) பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு வாரும்.--

68 ''அவருடன் சிறிது நேரம் அமர்ந்து பரஸ்பரம் ஸம்பாஷணை செய்துவிட்டு அவர் கொடுக்கும் தக்ஷிணையை வாங்கிக்கொண்டு திரும்பி வாரும்.ஃஃ

69 ஸாயீநாதர் எனக்கு அருள்செய்யக் கருணை கொண்டதால், தக்ஷிணை என்னும் சாக்கில், ''உடனே சென்று, என் சார்பாக சாமாவிடம் பணம் கேளும்ஃ என்று கூறினார்.

70 இவ்விதமான ஆக்ஞை பிறந்த பிறகு, எவருக்கு அவர் முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் திமிர் இருக்கும்? அது கீழ்ப்படியாத செயலாகிவிடுமன்றோõ ஆகவே, அனுமதி பெற்றுக்கொண்டு நான் எழுந்தேன்.

71 நான் உடனே கிளம்பினேன். சாமாவும் வீட்டிற்கு வெளியே வந்தார். அப்பொழுதுதான் ஸ்நானத்தை முடித்துவிட்டு வேட்டியைக் கட்டிக்கொண்டு நின்றுகொண் டிருந்தார்.

72 ஸ்நானம் செய்தவுடன் சுத்தமான மடிவேட்டியை அணிந்துகொண்டு நாமஜபம் செய்துகொண்டே கச்சத்தைச் சரிசெய்துகொண் டிருந்தார்.

73 அவர் வினவினார், ''என்ன, இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்? மசூதியி­ருந்து வருகிறீர்போல் தெரிகிறதேõ ஏன் முகத்தில் இந்தச் சஞ்சலம்? இன்று ஏன் தனியாக வந்திருக்கிறீர்?--

74 ''வாரும் வாரும்õ அமரும்; நான் இப்பொழுதுதான் ஸ்நானத்தை முடித்துவிட்டுக் கச்சத்தைச் சரிசெய்துகொண் டிருக்கிறேன். நான் என்னுடைய நித்திய பூஜையை முடித்துவிட்டு உடனே வந்துவிடுகிறேன்.--

75 ''நீங்கள் ஒரு தாம்பூலம் தயாரித்துத் தின்பதற்குள் நான் பூஜையை சீக்கிரமாக முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு இருவரும் அமைதியாகவும் திருப்தியடையும் வரையிலும் சாவதானமாகப் பேசலாம்.ஃஃ

76 இவ்வாறு சொல்­க்கொண்டே மாதவராவ் வீட்டின் உள்ளே சென்றார். பிறகு நான் யதேச்சையாக ஜன்னல் விளிம்பில் இருந்த ஏகநாத பாகவத போதியைக்1 கையிலெடுத்தேன்.

77 புத்தகத்தைக் கைவந்தவாக்கில் ஏதோ ஓர் இடத்தில் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். பிரித்த பக்கம், நான் அன்று காலை பாராயணத்தைப் பூர்த்திசெய்யாமல் நடுவில் நிறுத்திய பக்கமாக இருந்தது.

78 மிக ஆச்சரியமடைந்தேன்õ காலையில் படிக்காமல் விட்டுவிட்ட பகுதியைப் பூர்த்தி செய்யவைத்துப் பாபா என்னை ஒழுக்கமாகச் செயல்படவைக்கிறாரோõ

79 இங்கு ஒழுக்கம் என்பது, நியமனம் செய்த நூலைத் தவறாமல் பாராயணம் செய்வது. நியமிக்கப்பட்ட நித்திய உபாஸனையை முடிக்காமல் இடத்தை விட்டு நகரக்கூடாது.

80 இந்த ஸந்தர்ப்பத்தில் ஏகநாத பாகவதத்தைப்பற்றிய சிறு விளக்கம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது; அதைச் சொல்லாமல் விடமுடியாது. கதை கேட்பவர்கள் கவனமாகக் கேளுங்கள்.

81 குருபக்தி நிரம்பிய இந்த ஏகநாத பாகவதத்தைத்தான் ஸாயீயின் கிருபாபாத்திரரான (அருளைப் பெற்றவரான) காகாஸாஹேப் தீக்ஷிதர், மற்ற பக்தர்கள் சிறுகுழுவாக அமைந்து கேட்கும்வகையாக தினமும் வாசித்துவந்தார்.

82 மஹாவிஷ்ணு உலக மக்களை உத்தாரணம் செய்வதற்காக பிரம்மா என்ற மண்ணில் விதைத்த விதையானது நாரதர் என்னும் சோளக்கொல்லையாக விளைந்தது.

83 அந்தச் சோளக்கொல்லையி­ருந்து வியாஸமுனி சோளக்கதிர்களை அறுவடை செய்துக் கிடங்கில் சேர்த்துவைத்தார். பத்து லக்ஷணங்களையுடைய இச் சோளக்கதிர்களை சுகதேவ மஹரிஷி, பரீக்ஷித்து ராஜா2 என்னும் களத்தில் அடித்துத் துவைத்துச் சோளத்தை தானியமாகப் பிரித்து எடுத்தார்.

84 களத்தி­ருந்த சோளத்தை ஸ்ரீதர ஸ்வாமிகள் காற்றில் தூற்றி, நோம்பிச் சுத்தம் செய்தார். ஜனார்த்தன ஸ்வாமிகள் சுத்தம் செய்யப்பட்ட சோளத்தை அளந்து மதிப்பிட்டு, ஏகநாதரிடம் தந்தார். ஏகநாதர் அதி­ருந்து பல இனிப்பான பண்டங்களைச் சமைத்து விருந்து தயாரித்தார்.

85 ஸ்ரீமத் பாகவத புராணத்தின் 11ஆவது காண்டம், பக்தியும் பிரேமையும் ஆனந்தமும் நிரம்பிவழியும் பாகம். ஸ்ரீகிருஷ்ணன் விளையாடி லீலைகள் புரிந்த பிருந்தாவனத்தைப் போன்ற இந்தக் காண்டம் 32 அத்தியாயங்களைக் கொண்டது. இந்தப் பகுதியைத்தான் தீக்ஷிதர் தினமும் வாசித்துக்கொண் டிருந்தார்.

86 பகல் நேரத்தில் தீக்ஷிதர் இதை உரக்க வாசித்து விவரிப்பார். இரவில் பாவார்த்த இராமாயணத்தைப் படிப்பார். அதுவும் குருவினுடைய ஆக்ஞையில் தீக்ஷிதருக்கு ஒரு பிரமாண (அத்தாட்சி) நூலாக அமைந்தது.

87 பக்தி, பிரேமை, ஆனந்தம் இவற்றின் ஸாரம் ஏகநாத பாகவதம். ஞானேச்வரியின்1 இரண்டாவது அவதாரத்தைப் போன்றது. ஏகநாதர் மஹாராஷ்டிரர்களுக்கு அளித்த உருவமுள்ளதும் மிகப்பெரியதுமான வரம்.

88 விடியற்காலையில் ஸ்நானம், நியமநிஷ்டையுடவன் ஸாயீ பூஜை, மற்ற தேவர்களுக்கும் தேவதைகளுக்கும் அர்ச்சனை, நைவேத்தியம், ஹாரதி, இவையெல்லாம்

முடிந்தபின்,--
89 நிவேதனம்செய்த பால், சொற்பமான ஆஹாரம், இவையிரண்டையும் மற்ற பக்தர்களுடன் பகிர்ந்துகொண்ட பிறகு, தீக்ஷிதர் பயபக்தியுடன் போதியைப் படிக்க ஆரம்பிப்பார்.

90 பாகவதர்களில் உத்தமரான துகாராமை2, பண்டாரா மலையில் ஏகாந்தமாக ஆயிரம் முறைகள் படிக்கவைத்த அக்காவியத்தின் இனிமையை யாரால் வர்ணிக்கமுடியும்?

91 ஆ, எவ்வளவு பெரிய திருவருளான திவ்விய கிரந்தம்õ எவ்வளவு நிஷ்டையுள்ள சிஷ்யர் இந்த தீக்ஷிதர்õ இவ்விரு காரணங்களால்தான், மக்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்காக தீக்ஷிதரை ஏகநாத பாகவதத்தை தினமும் படிக்கச்சொல்­ ஸமர்த்த ஸாயீ ஆணையிட்டார்.

92 வனத்தைத் தேடிப் போக வேண்டா. உத்தவ கீதையில்3 பகவான் இருக்கிறார். சிரத்தையுடன் அதைப் பாராயணம் செய்பவர்கள் சடுதியில் பகவானை அடைகிறார்கள்.

93 ஸ்ரீமத் பகவத் கீதை கிருஷ்ணருக்கும் அர்ஜுனருக்கும் போர்க்களத்தில் நேர்ந்த உரையாடலை விவரிக்கிறது. கிருஷ்ணருக்கும் உத்தவருக்கும் நடந்த இந்த உரையாடல் (உத்தவ கீதை) அதனினும் சிறந்தது. இந்த உபதேசத்தைத்தான் பிரேமை பூண்ட வார்த்தைகளால் ஏகநாதர் தம்முடைய மராட்டி பாகவதத்தில் விளக்கியிருக்கிறார்.

94 இக்காரணத்தினால், கிருபையே உருவான ஸமர்த்த ஸாயீநாதர் தெய்வப் பிரஸாதமான இந்த கிரந்தத்தையும் ஞானேச்வரியையும் சேர்த்துத் தம் பக்தர்களை தினமும் படிக்கும்படி செய்தார்.

95 பாபா ஸகாராம் ஹரி ஜோக்(எ)கைப் படிக்கச் சொல்­யிருந்தார். அவரும் மற்ற பக்தர்கள் பயனுறும் வகையில் ஸாடேவாடாவில் தினமும் படித்துக்கொண் டிருந்தார்.

96 பக்தர்களுடைய ஆன்மீக முன்னேற்றத்தில் நேர்மையான ஆர்வம் கொண்ட பாபா, ஒவ்வொரு நாளும் பல பக்தர்களை இதைக் கேட்கச் செய்தார்.

97 பக்தர்களுக்கு அனுக்கிரஹமும் உபதேசமும் அளிப்பதில் பாபாவினுடைய ஸாமர்த்தியம் ஆழங்காணமுடியாதது. அதை அவர் பல வழிமுறைகளில் செய்தார். அவர்கள் அருகி­ருந்தாலும் சரி, வெகுதூரத்தி­ருந்தாலும் சரி, பாபா ஹிருதயவாசியாக (இதயத்தில் வசிப்பவராக) அவர்களுடனேயே இருந்தார்.

98 அவர் மசூதியில் உட்கார்ந்துகொண்டே ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு வேலையை நியமித்துத் தம்முடைய சக்தியையும் அளித்து, அவர்கள் மூலமாகக் காரியங்களை சாதித்து முடித்தார்.

99 பாபுஸாஹேப் ஜோக்(எ)கை தினமும் வாடாவில் போதி படிக்கச் சொல்லுவார். ஜோக் தினமும் தவறாது படித்தார்; அங்கு அதைக் கேட்க மக்கள் குழுமினர்õ

100 ஜோக்கும் தினமும் மதியவுணவு உண்ட பிறகு, பிற்பக­ல் பாபாவிடம் செல்வார். நமஸ்காரம் செய்துவிட்டு அவரிடமிருந்து விபூதியைப் பெற்றுக்கொண்டு போதி படிப்பதற்கு அனுமதி கேட்பார்.

101 சில சமயங்களில் அவர் ஞானேச்வரி படிப்பார்; சில சமயங்களில் ஏகநாத பாகவதத்தை வியாக்கியானத்துடன் படிப்பார். படிப்பதை மிக்க மகிழ்ச்சியுடன் படிப்பார்.

102 ஜோக்குக்குப் போதி படிக்க அனுமதியளித்தவுடனே, பாபா தம்மை தரிசனம் செய்ய வந்த பல பக்தர்களைப் போதியைச் செவிமடுக்க அனுப்புவார்.

103 சிலசமயங்களில் பாபா குட்டிக்கதைகள் சொல்லுவார். இதை பக்தர்கள் கேட்டு மனத்தில் பதியவைத்துக்கொள்ளும் முன்னரே, 'எழுந்திருங்கள், வாடாவிற்குப் போதி கேட்பதற்குச் செல்லுங்கள்ஃ என்று பாபா சொல்­விடுவார்.

104 விசுவாசமுள்ள பக்தர் போதியைக் கேட்கச் சென்றால், போதியில் வரும் கதை ஏற்கெனவே பாபாவிடம் கேட்டதை நிரூபணம் செய்யும் வகையில் அமையும்; முக்கியத்துவம் பூரணமாகவும் தெளிவாகவும் புரிந்துவிடும்.

105 ஞானேச்வரர் அருளிய ஞானேச்வரியும் ஏகநாதர் அருளிய பாகவதமும் பாபா ஏற்கெனவே சொன்ன கருத்துகளை மேலும் வற்புறுத்துவதாகவே இருப்பது கண்டு பக்தர்கள் வியப்படைவர்.

106 ஒரு குறிப்பிட்ட போதியில் குறிப்பிட்ட பகுதியைக் குறிப்பிட்ட நாளில் படிக்க வேண்டுமென்ற கட்டளை ஏதுமில்லாவிட்டாலும், ஜோக்(எ) படிப்பது, பாபா அன்று சொன்ன கதைக்கு நேரடி சம்பந்தம் உடையதாகத் தவறாது அமையும்õ

107 ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் என்னும் இரண்டு நூல்களைத்தான் ஜோக் தினமும் படித்தார். இரண்டுமே, பக்தி மார்க்கத்தைக் கைக்கொள்ளும் மனிதர் எவ்விதமாக வாழ்க்கை நடத்தவேண்டும் என்பதன் ஸாரமே.

108 ஞானேச்வரி என்னும் நூல் ஸ்ரீமத் பகவத் கீதைக்கு எழுதப்பட்ட மராட்டி பாஷ்யம் (விரிவுரை). இந்நூலுக்கு பா(ஆஏஅ)வார்த்த தீபிகா என்றும் பெயர். ஏகநாதர் ஆன்மீக விஷயங்களைப்பற்றி எழுதிய ஏகநாத பாகவதத்திற்கு ஸ்ரீமத் பாகவதத்தின் 11ஆவது காண்டமே ஆதாரம்.

109 ஆகவே, பாகவத தர்மத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் நானும் தினமும் ஏகநாத பாகவதத்தைப் படித்துக்கொண் டிருந்தேன். ஆனால் அன்று என்னுடைய தினசரி நடைமுறையில் ஒரு தடங்கல் ஏற்பட்டுவிட்டது.

110 ஒரு கதையைப் பாதி படித்துக்கொண் டிருந்தபோது, சுற்றியிருப்பவர்கள் மசூதிக்குக் கிளம்பிக்கொண் டிருந்ததை கவனித்தேன். போதி படிப்பதைப் பாதியில் நிறுத்திவிட்டு, அவர்களோடு நானும் மசூதிக்கு விரைந்தேன்.

111 நான் என்னவோ, பாபா சொல்லும் கதைகளைக் கேட்க விருப்பப்பட்டேன்; ஆனால், பாபா வேறு விதமாக நினைத்தார். நான் பாகவதம் படிப்பதை நிறுத்திவிட்டு வேறெதையும் செய்வது பாபாவுக்குப் பிடிக்கவில்லை போலும்õ

112 இக் காரணத்திற்காகவே, நான் அன்று படிக்கவேண்டிய பகுதியை பாபா பூர்த்தி செய்யவைத்தார் என்றே இந்த சம்பவத்தின்மூலம் உணர்ந்தேன். பாபாவினுடைய அற்புதமான வழிமுறைகள் இவ்வாறேõ இது ஞாபகத்திற்கு வரும்போது, மனம் பிரேமையால் பொங்கிவழிகிறது.

113 ஏகநாத பாகவதத்தின் விளக்கம் இங்கு முடிகிறது; சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் முடிவடைகின்றன. மாதவராவ் பூஜையை முடித்துவிட்டு வெளியில் வந்தார். நான் சொன்னேன்,--

114 ''பாபா உமக்கு ஒரு செய்தி அனுப்பியிருக்கிறார்; அதைச் சொல்லத்தான் நான் வந்திருக்கிறேன். 'சாமாவிடமிருந்து பதினைந்து ரூபாய் தக்ஷிணை வாங்கிக்கொண்டு வாரும்ஃ என்பது எனக்கிடப்பட்ட ஆணை.--

115 ''நான் அவருடைய பாதங்களைப் பிடித்துவிட்டுக்கொண் டிருந்தேன். திடீரென்று அவருக்கு உம்முடைய ஞாபகம் வந்தது. 'சாமாவிடம் போம்; தக்ஷிணையுடன் திரும்பி வாரும்ஃ என்று அவர் சொன்னார்.--

116 ''அவருடன் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிரும்; இருவரும் பேசிமுடித்தபின் நீர் திரும்பி வாரும்ஃ என்று சொன்னார்.ஃஃ

117 மாதவராவ் இதைக் கேட்டு மிக ஆச்சரியமடைந்து சொன்னார், ''பணத்திற்குப் பதிலாக என்னுடைய நமஸ்காரங்களை தக்ஷிணையாக அளியுங்கள்.ஃஃ

118 ''அதுசரி, உங்களுடைய பதினைந்து நமஸ்காரங்களை என்னுடன் எடுத்துக் கொண்டுவிட்டேன். அது விஷயம் முடிந்துவிட்டதுõ இப்பொழுது சீக்கிரமாக வந்து என்னுடன் உரையாடுங்கள்ஃஃ என்று நான் அவரிடம் சொன்னேன்.

119 ''என்னென்ன கதை சொல்ல விரும்புகிறீர்களோ அதையெல்லாம் சொல்­ என் காதுகளின் ஏக்கத்தைத் தணியுங்கள். நிர்மலமானதும் புனிதமானதுமான பாபாவின் கதைகளாகிய கங்கையில் ஆழமாக மூழ்கி நம்முடைய பாவங்களனைத்தையும் ஒழிக்கலாம்.ஃஃ

120 மாதவராவ் அப்பொழுது சொன்னார், ''பொறுங்கள்õ சிறிது ஓய்வெடுங்கள்õ இவ்விறைவனுடைய லீலைகள் தனித்தன்மை வாய்ந்தன என்றுதான் உமக்கு நன்கு தெரியுமேõ--

121 ''இந்த வெற்றிலைப்பெட்டியை எடுத்துக்கொள்ளுங்கள்; வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை ஆகிய எல்லாப் பொருள்களும் இதில் இருக்கின்றன. ஒரு தாம்பூலம் தயார் செய்துகொண்டு மெல்லுங்கள். நான் என்னுடைய குல்லாயைப் போட்டுக்கொண்டு ஒரு கணத்தில் வந்துவிடுகிறேன்.--

122 ''ஸாயீ பாபாவினுடைய லீலைகள் ஆராய்ச்சிக்கப்பாற்பட்டவைõ ஓ, நான் எத்தனை நிகழ்ச்சிகளைப்பற்றிச் சொல்லுவேன்? நீங்கள் சிர்டீக்கு வந்தபிறகு, நாம் நிறையவே பார்க்கவில்லையா?--

123 ''நான் ஒரு படிப்பறிவில்லாத பட்டிக்காட்டான்; நீங்களெல்லாம் பட்டணவாசிகள். புரியாத புதிரான அவருடைய லீலைகளைப்பற்றி உங்களுக்கு நான் என்ன சொல்வேன்?ஃஃ

124 இதைச் சொல்­க்கொண்டே அவர் வீட்டின் உள்ளே சென்று, தேவதைகளுக்குப் புஷ்பாஞ்ச­ செய்துவிட்டுக் குல்லாயை மாட்டிக்கொண்டு உடனே திரும்பி வந்தார். பிறகு அவர் உட்கார்ந்து என்னுடன் பேச ஆரம்பித்தார்.

125 ''ஓõ அவருடைய லீலைகள் கற்பனை செய்யமுடியாதவைõ அவருடைய ஸாமர்த்தியமான வழிமுறைகளை எவர், எப்பொழுது புரிந்துகொள்ளப்போகிறார்? அவருடைய லீலைகளுக்கு எல்லையே இல்லை. அவர்தான் விளையாட்டை நடத்துகிறார்; ஆயினும் அவர் விளையாட்டில் மாட்டிக்கொள்வதில்லைõ --

126 ''ஒருவரைவிட மற்றவர் உயர்ந்த அறிவாளிகளான நீங்களெல்லாம் அறிவுஜீவிகள். கற்பனைக்கெட்டாத பாபாவின் வாழ்க்கையைப் பட்டிக்காட்டுமக்களாகிய நாங்கள் எவ்வாறு அறிவோம்?--

127 ''அவரே அவருடைய கதையைச் சொல்லாமல், உங்களை என்னிடம் எதற்காக அனுப்புகிறார்? அவருக்கு மாத்திரந்தான் அவருடைய வழிமுறைகள் தெரியும்; அவை மானிடமானவையல்ல.--

128 ''இத் தருணத்தில் எனக்கு ஒரு நல்ல கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஆகவே நமது நேரத்தை உபயோகமாகச் செலவழிக்கும் வகையில் ஏதாவது பேசுவோம்.--

129 ''என்னுடைய கண்ணெதிரிலேயே இங்கு நடந்த சம்பவமொன்றை விவரிக்கிறேன். நம்முடைய மனத்தில் என்ன நிர்த்தாரணம் செய்துகொள்கிறோமோ அதை பாபா நிறைவேற்றிவைப்பார்.--

130 ''சில சமயங்களில் பாபா மனிதனை எல்லைவரை இழுத்துவிடுகிறார். அவனுடைய பக்திக்கும் பிரேமைக்கும் கடுமையான பரீக்ஷை வைத்துவிடுகிறார். அதன்பிறகே அவனுக்கு உபதேசமளிக்கிறார்.ஃஃ

131 உபதேசம் என்கிற வார்த்தை என் காதில் விழுந்தவுடனே என் மனத்துள்ளே ஒரு மின்னல் பாய்ந்தது. உடனே எனக்கு ஸாடேவின் குருசரித்திர பாராயண நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது.

132 சாமாவிடம் என்னை அனுப்பிய இந்த யோசனை, மசூதியி­ருந்தபோது சஞ்சலமடைந்திருந்த என் மனத்தை அமைதிப்படுத்துவதற்காகவோ? பாபாவினுடைய வழிமுறைகள் விசித்திரமாவைõ

133 அப்படியிருப்பினும், என் மனத்தே உதித்த இந்த எண்ணத்தை நான் அமுக்கிவிட்டேன். ஏனெனில், கதையைக் கேட்கவேண்டுமென்ற ஆவல் அதிகமாக இருந்தது. அதை சீக்கிரமாகத் தணித்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பினேன்.

134 பிறகு லீலைகள்பற்றிய கதைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, பாபாவின் பக்தவத்ஸல1 அருள் வெளிப்போந்து, என் மனம் ஆனந்தமடைந்தது.

135 பிறகு, அவர் இன்னுமொரு கதை சொன்னார். தேச்முக் என்னும் குடும்பப் பெயர் கொண்ட பெண்மணி ஒருவர் இருந்ததாகச் சொன்னார். அப் பெண்மணி, திடீரென்று ஸாதுக்களின் ஸங்கத்தில் வாழவேண்டும் என்று உணர்ந்தார்.

136 பாபாவினுடைய கீர்த்தியைக் கேள்விப்பட்டு அவரை தரிசனம் செய்யவேண்டுமென்ற தீவிரமான ஆவலுடன், ஸங்கம்னேரி­ருந்து2 வந்த மக்களுடன் சிர்டீக்கு வந்தார்.

137 அப்பெண்மணி காசாபா தேச்முக் என்பவரின் தாயார்; ராதாபாய் என்று பெயர். ஸாயீ பாதங்களின்மேல் நிஷ்டை (பக்தியும் விசுவாசமும்) கொண்டு பாபாவை தரிசனம் செய்தார்.

138 அவருக்கு அருமையான தரிசனம் கிடைத்ததால் பயணம்செய்த சோர்வெல்லாம் மறைந்துவிட்டது; மனத்தில் ஸாயீயின்மீது அன்பு மலர்ந்தது. 'எதற்காக இங்கு வந்தோம்ஃ என்பதும் ஞாபகம் வந்ததுõ

139 அவருடைய மனத்தில் ஸமர்த்த ஸாயீயை குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவரிடம் உபதேசம் பெற்றுப் பரமார்த்த மார்க்கத்தில் முன்னேற்றமடைய வேண்டுமென்றும் தீவிரமான ஆவல் இருந்தது.

140 அப்பெண்மணி மிக வயது முதிர்ந்தவர். பாபாவினிடம் அளவுகடந்த விசுவாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தார். பாபாவிடமிருந்து உபதேசம் பெறவேண்டி, மனத்துள்ளே ஓர் உறுதி செய்துகொண்டார்.

141 ''பாபாவிடமிருந்து பிரத்யேகமாக காதில் மந்திர உபதேசம் பெற்று அவருடைய அருளுக்குப் பாத்திரமாகாமல் சிர்டீயி­ருந்து நகரமாட்டேன்.--

142 ''அந்த மந்திரம் ஸாயீயினுடைய திருவாய்மொழியாகத்தான் வரவேண்டும். வேறு எவரிடமிருந்தாவது பெற்றால் அது பவித்திரமானது ஆகாது. புனிதர்களில் புனிதரும் ஞானிகளில் சிறந்தவருமான ஸாயீ, அவருடைய அருளுக்கு என்னைப் பாத்திரமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.ஃஃ

143 இவ்வாறு திடமாக மனத்தில் நிச்சயம் செய்துகொண்டு, அம் மூதாட்டி அன்னத்தையும் பானத்தையும் நீத்துத் தம்முடைய உறுதிமொழியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

144 வயது முதிர்ந்த அவ்வம்மையார், உபதேச மந்திரம் பெறுவதில் இருந்த சிரத்தையால் எள்ளளவும் உணவு உட்கொள்ளாமலும் ஒரு மிடறு நீரும் அருந்தாமலும் இருந்தார்.

145 'பாபா மந்திர உபதேசம் தரும்வரை உணவோ நீரோ அருந்துவதில்லைஃ என்னும் விரதமேற்று மூன்று நாள்கள் இரவுபகலாக உபவாஸமிருந்தார்.

146 மந்திர உபதேசம் பெறாமல் சிர்டீக்கு வருவதும் போவதுமாக இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஆகவே, தாம் தங்கியிருந்த இடத்திலேயே, 'என்ன ஆனாலும் சரிõ என்னுடைய விரதத்தைக் கைவிட மாட்டேன்; முடித்தே தீருவேன்ஃ என்ற உறுதியுடன் விரதமிருந்தார்.

147 மூன்று நாள்களுக்கு அன்னபானம் இல்லாமல் தவமிருந்து அவர் களைப்புற்றார்; மனமுடைந்துபோனார்.

148 மாதவராவ் விசனமுற்றார். 'நடப்பது நல்லதற்கில்லை; மூதாட்டி மரணத்தைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்த அஸம்பாவிதம் (நேரக்கூடாதது) நிகழாமல் தடுப்பதெப்படி?ஃ என்று யோசித்தார்.

149 ஆகவே அவர் மசூதிக்குச் சென்று பாபாவுக்கு எதிரில் அமர்ந்தார். வழக்கம்போல் மக்களுடைய நல்வாழ்வுபற்றி பாபா ஆதங்கத்துடன் விசாரித்தார்,--

150 ''ஆக, சாமா, இன்று என்ன செய்தி? எல்லாம் நலமாக இருக்கிறதன்றோ? அந்த எண்ணெய்1 வியாபாரி நாராயணன் தடம் புரண்டு என்னை மிகவும் தொந்தரவு செய்கிறான்.ஃஃ

151 மூதாட்டியின் விரதத்தைப்பற்றி அறிந்திருந்த சாமா கவலையுற்றிருந்தார். ஆகவே அவர் உடனே பாபாவைக் கேட்டார், ''இப்பொழுது என்னதான் செய்வது?--

152 ''மேலும், உம்முடைய இந்த மர்மந்தான் என்னவோ, ஓ இறைவாõ உம்முடைய லீலையை அறிந்தவர் யாருமில்லை. இந்த கிராமத்திற்கு ஒவ்வொரு மனிதராக வரச்செய்பவர் நீரன்றோ? என்னைப்போய் செய்தியென்ன என்று வினவுகிறீர்õ--

153 ''அந்த வயதான மூதாட்டி ராதாபாய் தேச்முக், மூன்று நாள்களாக அன்னபானம் இன்றி வாடுகிறார்; உம்முடைய அருள்வேண்டி உபவாஸம் இருக்கிறார்.--

154 ''அந்த மூதாட்டி மஹா அடம்பிடித்தவராக இருக்கிறார். ஆனால் உம்முடைய பாதங்களின்மீது இருக்கும் நிஷ்டையோ அசைக்கமுடியாததாக இருக்கிறது. ஆனால் நீங்களோ, அவர் பக்கமே திரும்பமாட்டேன் என்கிறீர்õ ஏன் இவ்வாறு அவரைக் கஷ்டப்படுத்துகிறீர்?--

155 ''ஏற்கெனவே அம் மூதாட்டி உலர்ந்துபோன கட்டையைப்போல் இருக்கிறார். பிடிவாதியாகவும் அடவாதியாகவும் முரடாகவும் இருக்கிறார். உபவாஸம் தொடர்ந்தால் உயிர் போய்விடும்போலத் தோன்றுகிறது.--

156 ''அவ்வாறு நேர்ந்துவிட்டால், 'அந்த மூதாட்டி உபதேசம் பெறவேண்டுமென்ற தீவிர ஆவலுடன் பாபாவை தரிசனம் செய்யச் சென்றார். ஆனால், ஸாயீ கருணை காட்டாமல் அவரை இறந்துபோகும்படி விட்டுவிட்டார்ஃ என்று மக்கள் பேசுவர்.--

157 ''பாபாõ மக்கள் இவ்வாறாக அவதூறு பேசும்படி விட்டுவிடாதீர்கள். ஏன் அவருக்கு நீங்கள் பயனளிக்கும்படியான உபதேசம் அளிக்கமாட்டேன் என்கிறீர்? அவதூறு வாராதவாறு செய்துவிடுங்கள்.--

158 ''அவருக்குப் போராடத் திராணியில்லாமல் போய்விட்டது. துன்பப்பட்டே இறந்துபோகப் போகிறார் அம்மூதாட்டி. உங்களுக்குக் கெட்டபெயர் வரும்.--

159 ''அவருடைய தொல்லைபிடித்த உபவாஸம் எங்களுக்கெல்லாம் கவலையைத் தருகிறது. துரதிருஷ்டவசமாக, அம்மூதாட்டி இறந்துபோனால் பெரிய அசம்பாவிதம் விளையும்.--

160 ''நீங்கள் கிருபை செய்யவில்லையெனில் உயிரை விட்டுவிடுவதாக அம் மூதாட்டி அடம் பிடிக்கிறார். அவர் ஒன்றும் தேறுவார் என்று எனக்குத் தோன்றவில்லைõ நீங்களே அவருக்கு ஏதாவது சொல்லுங்கள்õஃஃ

161 இந்த அத்தியாயத்தின் எல்லைக்கு இங்கு வந்துவிட்டோம். கேட்பவர்களுக்கு மேற்கொண்டு என்ன நிகழ்ந்தது என்று அறிந்துகொள்வதில் இருக்கும் ஆவல், பிரேமை பொங்கும் அடுத்த அத்தியாயத்தில் நிறைவேறும்.

162 பாபா அம் மூதாட்டிக்கு அளித்த பிரேமை மிகுந்த உபதேசமும் பரிந்துரையும் பயபக்தியுடன் செவிமடுக்கப்பட்டால், அஞ்ஞானமனைத்தையும் போக்கிவிடும்.

163 ஹேமாட் ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் காதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'எனக்கு அநுக்கிரஹம்ஃ என்னும் பதினெட்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.