Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 2

2. காவியத்தின் பிரயோஜனம் -
ஆசிரியருக்கு பாபா பெயரிடுதல்



ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 கடவுள் வாழ்த்து முதல் அத்தியாயத்தில் கூறப்பட்டது; குலதேவதைகளுடைய கடாக்ஷத்தையும் ஸத்குருவினுடைய கடாக்ஷத்தையும் வேண்டிப் பாடிவிட்டோம். ஸாயீயின் வாழ்க்கைச் சரித்திரத்திற்கு விதை போட்டாகிவிட்டது. இப்பொழுது இக் காவியம் எழுதுவதன் பிரயோஜனம் என்னவென்று பார்ப்போம்.

2 யார் இந்தக் காவியத்தை அவசியம் படிக்கவேண்டுமென்பதும் இக் காவியத்திற்கும் இதன் நாயகனுக்கும் என்ன சம்பந்தம் என்பதும் இப்போது சுருக்கமாகச் சொல்லப்படும். இதுவே வாசகர்களுக்கு இக் காவியத்தை சிரமம் ஏதுமின்றி அறிமுகப்படுத்திவிடும்.

3 முதல் அத்தியாயத்தில், கிராமமக்கள் அதிசயிக்கும் வகையில் பாபா கோதுமைமாவு அரைத்து, எப்படிக் காலரா கொள்ளைநோயை விரட்டினார் என்று பார்த்தோம்.

4 ஸாயீயின் அற்புதமான லீலைகளை நான் கேட்டவுடன் என் மனம் ஆனந்தவெள்ளமாகியது; அன்பு பொங்கி வழிந்தது. அவ் வெள்ளமே கரைபுரண்டு இக் காவியம் ஆகிறது.

5 ஆகவே, நான் என்னுடைய முழுத்திறமையுடன் ஸாயீயின் அருள் வெளிப்பாடுகளை விவரிக்க வேண்டும் என்றெண்ணினேன். இவ்விவரணம் பக்தர்களுக்கு போதனையாகவும் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாகவும் அமையும்.

6 ஆத­ன், நான் இக் காதைகளை ஆரம்பிக்கும் வாயிலாக, இவ்வுலகத்திலும் மேலுலகத்திலும் சுகமளிக்கும் புனிதமான ஸாயீயின் சரித்திரத்தை எழுதுவதை மேற்கொண்டுவிட்டேன்.

7 ஒரு மஹானின் வாழ்க்கைச் சரித்திரம் அறவழியில் வாழ்வதற்குண்டான பாதையாகும்; நியாய சாஸ்திரமோ தர்க்க சாஸ்திரமோ அன்று. ஆகவே, ஒரு மஹானின் அருளுக்குப் பாத்திரமாகும் யோக்கியதை உள்ளவர்களுக்கு, எதிர்பாராததாகவோ அயலாகவோ எதுவும் இச் சரித்திரத்தில் இருக்காது.

8 வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான காதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசா­.--

9 ''என்னோடு இரவுபகலாக பல ஆண்டுகள் அன்னியோன்னியமாக வாழ்ந்த அருமை நண்பனைப்பற்றியே என்னால் சொற்சித்திரம் வரையமுடியவில்லை; ஒரு மஹானின் சரித்திரத்தை என்னால் எப்படி எழுதமுடியும்?--

10 ''என்னுடைய அந்தரங்கமே எனக்கு முழுமையாக விளங்கவில்லை; நான் எப்படி ஒரு மஹானின் சிந்தனைகளையும் போதனையையும் பிழைகள் ஏதுமின்றி விவரிக்க முடியும்?--

11 ''ஆத்மாவின் உண்மையான சுபாவத்தை விவரிக்கும் முயற்சியில் நான்கு வேதங்களும் தோல்வியடைந்து மௌனமாகிவிட்டன. உம்முடைய உண்மையான சுபாவத்தை யான் எங்ஙனம் அறுதியிட்டு விவரிப்பேன்? ஓ ஸாயீõஃஃ

12 ஒரு மஹானால்தான் இன்னொரு மஹானைப் புரிந்துகொள்ள முடியும். நிலைமை இவ்வாறிருக்க நான் எப்படி மஹான்களை விவரிக்க முடியும்? என்னுடைய தகுதியின்மை எனக்கு நன்கு தெரிந்திருக்கிறது.

13 ஏழ்கடல் நீரையும் அளந்துவிடலாம்; பரந்த வானத்தையும் மூடிவிடலாம்; ஆனால் ஞானிகளை முழுவதும் அறிந்துகொள்வதென்பது மானிடனால் ஆகாத காரியம்.

14 நான் ஒரு பாமரன் என்பதை நன்கு அறிவேன். ஆயினும், பாபாவின் எல்லையற்ற சக்தியையும் பிரபாவத்தையும் வர்ணித்துப் பாடவேண்டுமென்ற அடக்கமுடியாத ஆசை என்னுள்ளே எழும்புகிறது; இதைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

15 ஜயஜய ஸாயீராயாõ ஏழை எளியவர்களின் புக­டமேõ ஆழங்காணமுடியாத உமது மாயையை விவரிக்கவே இயலாது. விசுவாசமுள்ள தாசனான (அடிமையான) எனக்கு அருள்புரிவீராகõ

16 உம்முடைய இதிஹாஸத்தை எழுதவேண்டுமென்று நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். அதே நேரத்தில், என்னால் செய்யமுடியாத காரியத்தை ஆரம்பித்துவிட்டேனோ என்று பயப்படுகிறேன். என்னைப் பார்த்து உலகம் கைகொட்டிச் சிரிக்காமல் ரக்ஷிப்பீர் ஐயனேõ

17 இருந்த போதிலும், நான் எதற்காக பயப்படவேண்டும்? ஞானிகளின் சரித்திரத்தை எழுதுபவர்கள் கடவுளால் நேசிக்கப்படுகிறார்கள் என்று ஞானேச்வர்1 மஹாராஜ் அவர்களே எடுத்தியம்பியிருக்கிறாரேõ

18 அந்தக் கடவுளேதான் என் இதயத்துள் புகுந்து, 'எழுதுஃ என்று உணர்வூட்டியிருக்கிறார். ஆகவே யான் மூடமதி படைத்தவனாயினும், அவருடைய வேலையை எப்படிச் சிறப்பாக நடத்திக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

19 பக்தர்கள் எவ்விதமாகச் சேவை செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்தாலும், வாஸ்தவத்தில் ஞானிகள்தாம் பக்தர்கள் மூலமாக சேவையைச் செய்துகொள்கிறார்கள். இதுவிஷயத்தில் உணர்வூட்டுதலை ஞானிகளே செய்கின்றனர்; பக்தர்கள் வெறும் கருவி மாத்திரமேõ

20 சுருங்கச் சொன்னால், என்னைப் போன்ற ஒரு ஞானமில்லாத மடையனின் மூலமாக ஸாயீ தம்முடைய சரித்திரத்தை எடுத்தியம்புகிறார். நாம் பயபக்தியுடன் படிக்க வேண்டிய இக் காதையின் பெருமை இதுவே.

21 ரிஷிகளும் ஞானிகளும், ஏன், ஸ்ரீஹரியும்கூட அவர்கள் கருவியாகத் தேர்ந்தெடுத்த மானிடனின் சிரசின்மேல் கையை வைத்துத் தங்களுடைய புராணங்களைத் தாங்களே எடுத்தியம்புவர்.

22 உதாரணமாக, சக வருஷம் 1700 (கி.பி.1778) இல் மஹீபதி என்பவருக்கு உணர்வும் எழுச்சியுமூட்டி, ஸாதுக்களும் ஞானிகளும் அவரைத் தங்களுடைய சரித்திரங்களை எழுதவைத்தனர். அவருடைய ஸேவையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

23 அதுபோலவே, சக வருஷம் 1800 (கி.பி.1878)இல் கவி தாஸகணுவை எழுதவைத்துப் பிற்கால ஞானியர்களின் சரித்திரங்கள் எழுதப்பட்டு, அவருடைய ஸேவையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக மக்கள் பரிசுத்தத்தையும் உயர்வையும் அடைந்தனர்.

24 பக்த விஜயம், பக்தலீலாமிருதம், ஸந்த (ஸாதுக்கள்) விஜயம், ஸந்த லீலாமிருதம் என்னும் மஹீபதி இயற்றிய நான்கு காப்பியங்களைப் போலவே கவி தாஸகணுவும் இரு வேறு காப்பியங்கள் இயற்றியிருக்கிறார்.

25 பிற்காலத்தைச் சேர்ந்த இவை இரண்டில் ஒன்று பக்தலீலாமிருதம், மற்றது ஸந்தலீலாமிருதம். இரண்டுமே சமீப காலத்தில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும், ஞானியர்களையும் பக்தர்களையும் பற்றியவைதான்.

26 பக்தலீலாமிருதத்தில் மூன்று அத்தியாயங்களில் மனத்தைச் சுண்டி இழுக்கும் ஸ்ரீ ஸாயீயின் வாழ்க்கை விவரிக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் தாங்களே இதைப் படித்துக்கொள்ளலாம்.

27 அது போலவே, ஸந்த கதாமிருதத்திலும் 57ஆவது அத்தியாயத்தில், ஸாயீ, பக்தர் ஒருவருக்குச் சொன்ன, ஞான அமுதமானதும் சுவாரசியமானதுமான கதை ஒன்று விவரிக்கப்பட்டிருக்கிறது.

28 மேலும், ரகுநாத் தேண்டூல்கரும் ஸாவித்திரிபாயி தேண்டூல்கரும் தங்களுடைய சொந்த அனுபவத்தி­ருந்து ஸாயீயின் அற்புதமான லீலைகளைப் பதங்களாகவும்1 அபங்கங்களாகவும்1 வடித்து, 'ரகுநாத்-ஸாவித்திரி பஜன்மாலாஃ என்னும் பாமாலையைத் தொடுத்திருக்கின்றனர். இது ஜனங்களுக்கு மங்களம் அளிக்கக்கூடிய ஊற்றாக அமைந்திருக்கிறது.

29 பாபாவின் அருட்செல்வர் ஒருவர்2 பாபாவின் மீதான அபரிமிதமான அன்பினால் இதே பஜன்மாலாவுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். இம் முன்னுரை தாகம் மிகுந்த சகோரப்3 பட்சிகளுக்கு (பக்தர்களுக்கு) அமுத மழையாகும். வாசகர்கள் இதை பயபக்தியுடன் பருக வேண்டும்.

1 மராட்டி இசைச்செய்யுள் வடிவங்கள்

2 ஹரி ஸீதாராம் தீக்ஷிதர்

3 சகோரம் - இதிஹாஸங்களில் இடம் பெறும் ஒரு பறவை. எவ்வளவு தாகமாக இருப்பினும் பூமியிலுள்ள நீரை அருந்தாது; மேகத்திலுள்ள நீரையே அருந்தும்.

30 கவி தாஸகணுவினுடைய பல்சுவைக் கவிதைகள் உணர்ச்சிமயமானவை. பாபாவின் லீலைகளை இக் கவிதைகளில் படிக்கும்போது வாசகர்கள் ஆனந்தமடைவர்.

31 அமீதாஸ் பவானிதாஸ் மேதா என்னும் பக்தரும் பாபாவின் அற்புதங்கள் நிறைந்த கதைகளை மிகுந்த பிரேமையுடன் குஜராத்தி மக்களுக்காகப் பிரத்யேகமாக (குஜராத்தி மொழியில்) எழுதியிருக்கிறார்.

32 இவை மட்டுமல்லாமல், புணேயி­ருந்து சில பக்த சிரோமணிகள் பாபாவைப்பற்றிய கதைத்தொகுப்பு ஒன்றை 'ஸாயீ பிரபாஃ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள்.

33 இவ்வகையில் இத்தனை இலக்கியங்கள் ஏற்கெனவே இருக்கும்போது, இன்னும் ஒரு புத்தகம் எதற்காக? வாசகர்கள் மனத்தில் இந்த சந்தேகம் எழலாம்; நிராகரித்துவிடாமல் என்னுடைய பதிலைக் கேளுங்கள்.

34 ஸாயீயினுடைய சரித்திரம் ஒரு மஹாஸமுத்திரம்; முடிவில்லாததும் அபாரமானதும் ரத்தினங்கள் நிறைந்ததுமான சுரங்கம். சிட்டுக்குருவியான நான் இந்த ஸமுத்திரத்தைக் கா­செய்ய முயற்சி செய்கிறேன். இது எவ்வாறு நடக்கும்?

35 ஸாயீயினுடைய சரித்திரம் ஆழங்காணமுடியாதது; பூரணமாகவும் திருப்தியளிக்கும் வகையிலும் எடுத்துரைக்கமுடியாதது. முழுத்திறமையுடன் முடிந்தவரை சொல்­விட்டு மனத்தைச் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான்.

36 துன்பத்தில் உழலும் மக்களுக்கு சாந்தி அளிக்கக்கூடிய, பாபாவின் அபூர்வமான கதைகள் எண்ணற்றவை. உண்மையான பக்தர்களுக்கு மேலும் மேலும் கேட்கவேண்டுமென்ற ஆர்வத்தையூட்டி, திடமான சித்தத்தை நல்குகின்றன.

37 பாபா சொன்ன கதைகள் பலவிதமானவை; சில உலகியல் ஞானம் அளிப்பவை; சில அனைவருக்கும் பொதுவான அனுபவம்; சில அவருடைய புதிரான செயல்களைப் புரியவைப்பவை.

38 தெய்வீகமானவையும் கணக்கற்றவையுமான வேதகாலத்துக் கதைகள் எவ்வாறு பிரபலமோ, அவ்வாறே பாபா சொன்ன அநேக அர்த்தபுஷ்டியுள்ளவையும் மதுரமானவையுமான கதைகள் பிரபலம்.

39 மன ஒருமையுடன் கேட்கப்படும்போது பசியும் தாகமும் மறந்துபோகும்; மற்ற இன்பங்களைத் துரும்பாக்கிவிட்டு ஆழமான அமைதி செங்கோலோச்சும்.

40 சிலர் பிரம்மத்தோடு ஐக்கியமாவதை நாடுவர்; சிலர் அஷ்டாங்கயோகத்தில் தேர்ச்சியைத் தேடுவர்; மேலும் சிலர் ஸமாதி நிலையின் முழுமையான சுகத்தை நாடுவர்; இந்தக் கதைகளைக் கேட்டால் அவர்களனைவருக்கும் நாடியதும் தேடியதும் கிட்டும்.

41 இக் கதைகளைக் கேட்பவர்கள் கர்மபந்தத்தி­ருந்து விடுவிக்கப்படுகிறார்கள்; புத்தியும் பிரகாசம் அடைகிறது; ஏற்றத்தாழ்வு ஏதுமின்றி அனைவரும் சுகம் பெறுகிறார்கள்.

42 இக் காரணம்பற்றி, ஒன்றுசேர்ப்பதற்குகந்த இவ் வண்ணவண்ணக் கதைகளைத் தொகுத்து, மாலையொன்று கட்டவேண்டும் என்னும் அவா என் மனத்தெழுந்தது. இதுவே, சிறந்த உபாஸனை (வழிபாட்டுமுறை) என்று நான் கருதினேன்.

43 இக் கதைகளின் சில வார்த்தைகள் தற்செயலாகக் காதில் விழுந்தாலே அந்த ஜீவனுடைய துரதிருஷ்டம் உடனே பின்வாங்குகிறது. இவ்வாறிருக்கையில், நம்பிக்கையுள்ள எளிய பக்தர் பயபக்தியுடன் கதை முழுவதையும் கேட்டால், நிச்சயமாக இவ் வுலகவாழ்வெனும் ஸமுத்திரத்தைக் கடந்துவிடுவார்.

44 என்னை எழுத்தாணியாக்கி, என் கையைப் பிடித்துக்கொண்டு, அக்ஷரங்களை பாபா உருவாக்குவார். பாபா வழிகாட்ட, இயந்திர கதியில் இயங்கும் கருவி மாத்திரமே யான்.

45 ஆண்டாண்டாக பாபாவின் லீலைகளை நேரில் கண்டதால், அன்புள்ள எளிய பக்தர்களின் நன்மை கருதி, பாபாவின் கதைகளனைத்தையும் ஒன்றுசேர்க்க வேண்டும் என்னும் அவா என் மனத்து உருண்டு விளையாடியது.

46 கண்களுக்கு விருந்தாகும் வகையில் பாபாவைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்ய வாய்ப்பின்றிப் போனவர்கள், அவருடைய மஹாத்மியத்தைக் காதால் கேட்டாவது புண்ணியம் சேர்க்கலாம்.

47 பாக்கியவானாகிய ஒருவருக்கு இக் கதைகளைப் படிக்க வேண்டுமென்ற தாகம் ஏற்பட்டால், அவ்வாறு செய்வதால் அவர் பரமானந்தத்தையும் அக அமைதியையும் பெறுவார்.

48 இம் மாதிரியான எண்ணங்கள் என் மனத்தே எழுந்தன; இதை நான் மாதவராவுக்குத்1 தெரிவித்தேன். ஆயினும் இக் காவியத்தை என்னால் எழுதமுடியுமா என்ற சந்தேகம் என்னை உறுத்திக்கொண் டிருந்தது.

49 ஏனெனில், எனக்கு அப்பொழுது அறுபது வயதுக்கு மேலாகிவிட்டது. அறுபது வயதில் இந்தப் பாழாய்ப்போன புத்தி, பிரச்சினைகளையும் முட்டுக்கட்டைகளையுமே உற்பத்தி செய்ய முயல்கிறது. மேலும், தளர்ந்துபோன உடல் பிரம்மாண்டமான இம் முயற்சியைத் தடுத்தாலும் தடுக்கலாம். கடைசியில் பார்த்தால் எழுதியதெல்லாம் ஒரே பிதற்றலாக முடியலாம்.

50 ஆயினும், பயனற்றதும் அர்த்தமில்லாததுமான செயல்களைச் செய்துகொண்டு வாழ்வதைவிட, ஸாயீயின் ஸேவையில் ஈடுபடுவதே சிலாக்கியம் (சிறப்பு). ஆன்மீக வளர்ச்சி பெறலாம்; ஆகவே இந்த யத்தனம்.

51 இரவுபகலாக நான் கண்டனுபவித்த நிகழ்ச்சிகளை விவரமாக எழுதிவைத்துவிட வேண்டுமென்ற எண்ணம் என்னுள் தோன்றியது. எழுதிவைத்ததை அசை போட்டால் சாந்தியும் விச்ராந்தியும் (இளைப்பாறுதல்) லாபமாகும்.

52 ஆத்மானுபவத்தின் அஸ்திவாரமும் ஆத்மதிருப்தியை அளிப்பதும் பாபா அடிக்கடி சரளமாக விடுத்ததுமான அமுதமொழிகளை நான் மற்றவர்களுக்கும் கிடைக்கவைக்க விரும்பினேன்.

53 பாபா சொன்ன, ஞானத்தை அருளும் கதைகள் எத்தனையோõ பக்தி மார்க்கத்தை வழியாகக் காட்டப்பட்ட பக்தர்கள் எத்தனையோõ இவையனைத்தையும் நான் தொகுத்துவிட்டேனானால் அது ஸாயீ பாபாவின் புராணமாக அமைந்துவிடும்.

54 இக் கதைகளை பயபக்தியுடன் சொல்பவர்களும் கேட்பவர்களும் பூர்ணசாந்தியையும் விச்ராந்தியையும் அனுபவிப்பார்கள்.

55 பாபாவின் திருமுகத்தி­ருந்து வெளிப்பட்ட இக் கதைகளைக் கேட்டால், பக்தர்கள் உடல் உபாதிகளை மறந்துவிடுவார்கள்; இடைவிடாது தியானம் செய்தால், உலகியல் தளைகளி­ருந்து விடுபடுவார்கள்.

56 பாபாவின் திருமுகத்தி­ருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் தேவாமிருதம் போன்று இனிப்பவை; கேட்டால் பரமானந்தம் விளையும்; நான் எவ்விதம் இவ்வார்த்தைகளின் மதுரத்தை (இனிமையை) விவரிப்பேன்?

57 வித்துவான் போலவும் பேரொழுக்கமுடையவர் போன்றும் நடிக்காமல், இக்கதைகளை யாராவது ஒருவர் பிரவசனம் (விரிவாக மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல்) செய்தால், அவருடைய பாததூளிகளில் விழுந்து புரண்டாலே எனக்கு மோக்ஷம் நெருங்கும் என்பதை உணர்கிறேன்.

58 இக் கதைகள் சொல்லப்படும் அசாதாரணமான பாணியும் கற்பனை வளத்துடன் பிரயோகிக்கப்பட்ட வார்த்தைகளும் சொற்றொடர்களும் கேட்பவர்களை மெய்மறக்க வைத்து எல்லாருக்கும் மிகுந்த ஆனந்தத்தை அளிக்கும்.

59 காதுகள் இக் கதைகளைக் கேட்கவும் கண்கள் அவரை தரிசனம் செய்யவும் ஏங்குவதுபோல, மனம் தெய்வீகமான தியானத்தில் மூழ்கி, பிரக்ஞையை இழந்துவிடும்.

60 அன்பான குருவே என் அன்னை. அவருடைய கதைகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வாய்மொழிச் செய்தியாகப் பரவும் போது, நாம் பயபக்தியுடன் அவற்றைக் காதுகளால் கேட்டுச் சேமித்து வைத்துக்கொள்வோம்.

61 இக் கதைகளை நாம் திரும்பத் திரும்ப மனத்தில் ஓடச்செய்வோம். அன்பெனும் கயிற்றால் கட்டி எத்தனை முடியுமோ அத்தனை சேமிப்போம். பிறகு இப் புதையலைப் பரஸ்பரம் ஸமிருத்தியாகப் (தேவைக்கு மேலாகவே) பகிர்ந்துகொள்வோம்.

62 இவையனைத்திலும் என்னுடையது ஒன்றுமேயில்லை; இயக்கம் முழுக்க முழுக்க ஸாயீநாதனைச் சேர்ந்ததே. கவனியுங்கள்õ அவர் எதைச் சொல்லச் சொல்­ என்னை உந்துகிறாரோ, அதையே நான் சொல்கிறேன்.

63 அடடாõ நான் சொல்கிறேன் என்று சொல்வது அஹங்காரம்; சூத்ரதாரி ஸாயீயே. என்னுடைய நாவை அசைப்பதே அவர்தான். நான் பேசுகிறேன் என்று சொல்­க்கொள்வதற்கு எனக்கென்ன தகுதி இருக்கிறது?

64 அஹங்காரத்தை பாபாவின் பாதகமலங்களில் ஸமர்ப்பித்துவிட்டால் அபாரமான சுகம் விளையும். அஹங்காரம் நாசமாகிவிட்டால் வாழ்க்கை ஸந்தோஷமயமாகிவிடும்.

65 இந்தத் திட்டம் எனக்குத் தோன்றியபோது பாபாவிடம் இதைத் தெரிவிக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோதிலும், தைரியம் வரவில்லை. தற்செயலாக மசூதியில் மாதவராவைப் பார்த்தேன். உடனே அவரிடம் என்னுடைய எண்ணங்களைத் தெரிவித்தேன்.

66 வேறு எவரும் அந்நேரத்தில் அங்கு இல்லை. மாதவராவ் கிடைத்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டு பாபாவைக் கேட்டார்.

67 ''பாபாõ இந்த அண்ணாஸாஹேப்1 தாபோல்கர், நீங்கள் அனுமதி கொடுப்பதாக இருந்தால் உங்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தைத் தம்முடைய முழுத்திறமையையும் காட்டி எழுத விரும்புவதாகச் சொல்கிறார்.--

68 ''நான் ஒரு பிச்சைக்காரன்; வீடுவீடாக இரந்து, சேர்த்துண்ண காய்கறி பதார்த்தங்கள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சோளரொட்டியைத் தின்று ஏதோ காலம் தள்ளுகிறேன்.--

69 ''என்னைப் போன்ற பிச்சைக்காரன் ஒருவனுடைய சரித்திரத்தை ஏன் எழுத விரும்புகிறாய்? பரிஹாஸத்திற்குக் காரணம் ஆகிவிடுமேõ என்று சொல்­விடாதீர்கள். ரத்தினத்தைப் பதக்கத்தில் பொருத்துவதே சிறப்புஃஃ. (மாதவராவ்)

70 அனுமதியை ஈந்து உதவியும் செய்தீரானால் காவியம் தன்னைத்தானே எழுதிக் கொண்டுவிடும். இல்லை, இல்லை, பாதையில் நேரும் தடைகளனைத்தையும் நீக்கி, நீர் என்னை எழுத வைப்பீர். (70 & 71 ஆசிரியரின் எண்ண ஓட்டம்)

71 ஞானிகளின் ஆசிகளே ஒரு புத்தகத்தின் மங்களகரமான ஆரம்பம்; உம்முடைய கடைக்கண் பார்வையின்றி என்னுடைய எழுதுகோல் ஓடாது.

72 என்னுடைய எண்ண ஓட்டத்தை அறிந்துகொண்ட ஸமர்த்த ஸாயீ கருணையால் ததும்பி, ''உம்முடைய மனோரதம் நிறைவேறும்ஃஃ என்று கூறினார். நான் உடனே அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினேன்.

73 வரம் தரும் கரத்தை என் சிரத்தின்மேல் வைத்து, எனக்கு உதியைப் (திருநீறு) பிரஸாதமாக அளித்தார். சகல தர்மங்களிலும் விற்பன்னரான இந்த ஸாயீ, பக்தர்களை உலக பந்தங்களினின்று விடுவிப்பவர் அல்லரோõ

74 மாதவராவினுடைய வேண்டுகோளைக் கேட்ட ஸாயீ, என்மீது இரக்கம் கொண்டு, பொறுமையற்றுக் கொந்தளித்துக் கொண்டிருந்த என் மனத்தை சாந்தப்படுத்துவதற்காக எனக்கு தைரியமூட்ட ஆரம்பித்தார்.

75 என்னுடைய நேர்மையான நோக்கத்தை அறிந்துகொண்டார் ஸாயீ. அனுமதியைத் தெரிவிக்கும் வகையில் அவருடைய திருமுகத்தி­ருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன, ''அனுபவங்கள், சம்பாஷணைகள், பேச்சு, வாஸ்தவமான கதைகள் போன்றவற்றைத் தொகுத்துக்கொள்வீராக 2.--

76 ''குறிப்பெடுத்துக்கொள்வதே நன்று; என்னுடைய முழமையான ஆதரவு அவருக்கு2 உண்டு. அவர் ஒரு கருவி மாத்திரமே; என்னுடைய சரித்திரத்தை நானே எழுதுவேன்.--

77 ''என்னுடைய சரித்திரத்தை நானே எழுதி என் பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன். 'நான்ஃ எனும் எண்ணத்தை வென்று, அதை என் பாதங்களில் அவர் ஸமர்ப்பிக்க வேண்டும்.--

78 ''இவ்வாறு வாழ்க்கை நடத்தும் ஒருவருக்கு நான் காவியம் எழுத முழு ஆதரவு நல்குவதுமட்டுமல்லாமல், அவருக்காக எல்லா வழிகளிலும் கடுமையாக உழைப்பேன்.--

79 ''அஹங்காரத்தையும் கர்வத்தையும் நிழலும் படாதவாறு முழுமையாக அவர் அழித்துவிட்டால், நான் அவருள் புகுந்து என்னுடைய கையாலேயே இக்காவியத்தை எழுதுவேன்.--

80 ''செவிமடுக்கவோ சிந்திக்கவோ எழுதவோ ஆரம்பிக்கும்போது, மேற்சொன்ன எண்ணம் அவரை ஆட்கொள்ளுமேயானால், அவரைக் கருவியாக மாத்திரம் வைத்துக்கொண்டு, அந்த வேலையை நானே செய்து முடிப்பேன்.--

81 ''குறிப்புகளென்னவோ எழுதப்படவேண்டும். வீட்டிற்குள் இருந்தாலும் வெளியி­ருந்தாலும் எங்கிருந்தாலும் திரும்பத் திரும்ப என்னை நினைத்தால் நீர் சாந்தியை அனுபவிப்பீர்.--

82 ''என் கதையைச் செவிமடுத்தலும் கீர்த்தனமாக மற்றவர்களுக்குப் பிரவசனம் செய்தலும் தியானித்தலும் என்மீது அன்பையும் பக்தியையும் பெருக்கும்; அஞ்ஞானத்தைக் கடிதே ஒழிக்கும்.--

83 ''எங்கு பக்தி, சிரத்தை இரண்டுமே இருக்கின்றனவோ, அங்கு நான் சேவகனாக என்றும் இருக்கிறேன்; சந்தேகமே வேண்டா. இவ்விரண்டும் இல்லையெனில் நான் என்றுமே எட்டிப்பிடிக்க முடியாதவனாகவே ஆகிறேன்.--

84 ''ஒன்றிய மனத்துடனும் நல்லுணர்வுகளுடனும் செவிமடுக்கப்படும்போது, இக்கதைகள் பக்தியை ஊட்டும்; ஆத்மானுபவமும் ஆனந்தமும் இயல்பாகவே மலரும்; நித்திய சுகம் லாபமாகும்.--

85 ''ஜீவனும்1 சிவனும்2 சுருதி சேர்ந்து, பக்தன் தன்னை அறிந்துகொள்வான். குணாதிசயங்கள் ஏதுமற்ற, புரிந்துகொள்ளமுடியாத வஸ்துவைப் புரிந்துகொள்வான். இறை அவனுக்குத் தன்னைத்தானே வெளிப்படுத்திக் காட்டும்.--

86 ''என்னுடைய கதைகளின் பலனும் பரிசும் இவையே; வேறென்ன வேண்டும்? வேதங்களின் இறுதி இலக்கும் இதுவே; இதை அடைந்தவன் எல்லாமடைந்தவனாவான்.--

87 ''எதற்கெடுத்தாலும் வாதம் செய்பவன் அஞ்ஞானத்தையும் மாயையையும் அபரிமிதமாக வளர்ப்பான். தனக்கு ஹிதத்தையும் (நன்மையையும்) பரிசுத்தத்தையும் நல்கும் எண்ணமே தோன்றாமல், சதா துர்ப்புத்தியிலும் குதர்க்க வாதங்களிலுமே உழன்றுகொண் டிருப்பான்.--

88 ''இம் மனிதன் ஆத்மஞானத்திற்குப் பாத்திரமல்லன்; இவன் மாயையிலேயே மூழ்கிப் போகிறான்; இகத்திலும் சுகம் இல்லை; பரத்திலும் சுகம் இல்லை; எங்கும் எப்பொழுதும் இவனால் சுகம் அடைய முடிவதில்லை.--

89 ''நம் கட்சியையே (கோட்பாடு) நிர்த்தாரணம் செய்ய வேண்டும், மாற்றான் கட்சியை நிராகரித்துவிட வேண்டும், என்னும் எண்ணங்கள் நமக்கு வேண்டா; எதிரும் புதிருமான கருத்துகளின்மேல் விவாதமும் வியாக்கியானமும் வேண்டா; எதற்காக இந்த வீண்முயற்சிகள்?ஃஃ

90 'எதிரும் புதிருமான கருத்துகளின்மேல் விவாதமும் வியாக்கியானமும்ஃ -- இச்சொற்றொடர், ஏற்கெனவே நான் வாசகர்களுக்கு அளித்திருந்த வாக்கை ஞாபகப்படுத்துகிறது.

91 முதல் அத்தியாயத்தின் முடிவில், 'ஹேமாட்ஃ என்று நான் நாமகரணம் (பெயரிடுதல்) செய்யப்பட்ட விவரத்தை எல்லாருக்கும் சொல்வதாக வாக்களித்திருந்தேன்.

92 கதைக்குள் கதையான இதைக் கேட்டால் உங்களுடைய ஆர்வம் திருப்தியுறும்; பொருத்தமான பெயரா அல்லது பொருத்தமில்லாததா என்றும் நீங்கள் தீர்மானிக்கலாம். உண்மையில் இதை ஞாபகப்படுத்துபவரும் ஸாயீயே.

93 அதற்குப் பிறகு, ஸாயீயின் பிரதானமான காதை விட்ட இடத்தி­ருந்து தொடரும். ஆகவே, இக் காதையை கவனமாகக் கேளுங்கள்.

94 ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் 'பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்டதுஃ என்று கேள்வியுறுகிறோம். யார் இந்த ஹேமாட் பந்த்?

95 இக் கேள்வி கதை கேட்பவர்களின் மனத்தில் இயற்கையாக எழும். அவர்களுடைய ஆர்வத்தைத் திருப்தி செய்துகொள்ள, இப்பெயர் அவருக்கு இடப்பட்ட முகாந்திரத்தை கவனமாகக் கேட்கவேண்டும்.

96 ஜனனத்தி­ருந்து மரண பரியந்தம், தேஹ ஸம்பந்தமாக பதினாறு ஸம்ஸ்காரங்கள் (தூய்மை அளிக்கும் சடங்குகள்) சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் நாமகரணம் பிரஸித்தியானதாகும்.

97 செவிசாய்ப்பவர்களேõ இது விஷயம்பற்றிய சிறுகாதை ஒன்றைக் கவனத்துடன் கேளுங்கள். காதை மலர்கையில் 'ஹேமாட் பந்த் என்று (ஆசிரியருக்கு) நாமகரணம் ஆன விவரமும் மலரும்.

98 இயற்கையாகவே குறும்பு பிடித்த இவ்வெழுத்தாளன் (தாபோல்கர்) அதிகப்பிரஸங்கி; வாய்ச்சாலகன்; அவதூறு பேசுபவன்; கே­யை நாடுபவன்; ஞானத்தைத் தொட்டும் பார்த்தவனல்லன்.

99 ஒரு ஸத்குருவினுடைய மேன்மையையும் முக்கியத்துவத்தையும் அறிந்தவனில்லை; கெட்டபுத்தியும் குதர்க்கமுமே உருவானவன்; தன்னுடைய மேதாவிலாஸத்தைப்பற்றிப் பெருமை கொண்டு வாதப்பிரதிவாதம் செய்வதில் ஆர்வம் மிகக் கொண்டவன்.

100 ஆயினும், விதியின் பலமான பிடி, அவனுடைய எதிர்ப்பையும் மீறி, அதிருஷ்டவசமாக ஸாயீயின் பொற்பாதங்களை தரிசனம் செய்யவைத்தது.

101 காகாஸாஹேப் தீக்ஷிதர்1, நானாஸாஹேப் சாந்தோர்கர்2 போன்ற சிறந்த பக்தர்களின்

102 காகாஸாஹேப் என்னைத் திரும்பத் திரும்ப வற்புறுத்தியதால் சிர்டீக்குப் போவதென்று நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கிளம்பவேண்டிய நாளன்று இத்தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

103 என்னுடைய நெருங்கிய நண்பரொருவர், குருவின் அனுக்கிரஹம் பெற்று குருபுத்திரன் என்று பெயரும் பெற்றவர், லோனவாலாவில்1 குடும்பத்துடன் வசித்துவந்தபோது ஒரு விசித்திரமான இடரில் மாட்டிக்கொண்டார்.

104 ஆரோக்கியமான சீதோஷ்ணநிலை கொண்ட அம் மலைவாசத்தலத்தில் அவருடைய திடகாத்திரமானவனும் குணவானுமான ஒரே மகன் ஜுரத்தால் பீடிக்கப்பட்டுத் தீவிர நோயாளியாகிவிட்டான்.

105 மனிதர்களுக்குத் தெரிந்த ஸகல நிவாரணங்களும் கையாளப்பட்டன; தெய்வப் பிரீதியாக சாந்திகளும் செய்யப்பட்டன; குருவும் அழைக்கப்பட்டு அவனுடைய படுக்கைக்கருவில் அமரவைக்கப்பட்டார். கடைசியில் அவன் எல்லாரையும் ஏமாற்றிவிட்டான்.

106 அபாயமான கட்டத்தில், துக்க சம்பவத்தைத் தவிர்ப்பதற்காக குரு அவனுடைய அருகில் உட்காரவைக்கப்பட்டார். ஆனால், அனைத்தும் பயனின்றிப் போய்விட்டன.

107 மனிதவாழ்க்கை மஹாவிசித்திரமானது. மனைவி யார்? மகன் யார்? யாருக்கு யார் சொந்தம்? அத்தனை நிகழ்ச்சிகளும் நமது கர்மாவினாலேயே (முன்ஜன்ம வினை) நிர்ணயிக்கப்படுகின்றன. விதி------------------வ­துõ

108 இந்த துர்ச்செய்தியைக் கேட்டவுடன் என் மனம் அலைமோதி சோர்வுற்றது. சிஷ்யனின் ஒரே மகனைக் காப்பாற்றமுடியாத குருவால் என்ன பிரயோஜனம்?

109 கர்மாவினுடைய பலத்தையும் விதியினுடைய வ­மையையும்பற்றிய என்னுடைய சிந்தனை, ஸாயீ தரிசனம் செய்யவேண்டுமென்ற தீர்மானத்தை வலுவிழக்கச் செய்தது; சிர்டீ யாத்திரைக்குத் தடையாகவும் ஆகிவிட்டது.

110 சிர்டீக்குப் போவதால் என்ன லாபம்? என்னுடைய சிநேகிதருடைய நிலைமையைப் பாருங்கள்õ குருவின் பிணைப்பால் அடையும் லாபம் இதுதானோ? கர்மவினையை குருவால் என்ன செய்துவிட முடியும்?

111 தலையெழுத்துப்படி நடப்பது நடந்தே தீரும் என்றால், குரு என்று ஒருவரை எதற்காக வைத்துக்கொள்ள வேண்டும்? இவ்விதமான எண்ணங்களாலும் சிர்டீ விஜயம் ரத்து செய்யப்பட்டது.

112 நம்மிடத்தை விட்டுவிட்டு ஏன் போகவேண்டும்? குருவின் பின்னால் எதற்காக ஓடவேண்டும்? சுகமாக வாழ்ந்துகொண் டிருக்கும்போது வம்பை விலைக்கு வாங்குவதில் என்ன ஆசை?

113 சுகமோ துக்கமோ, எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை அனுபவிப்போம். நடக்கப் போவதைத் தடுக்க முடியாதென்றால், குருவிடம் போவதால் பிரயோஜனம் என்ன?

114 வேண்டும் என்று விரும்பினாலும், வேண்டாவென்று வெறுத்தாலும் ஒருவர் சேர்த்த புண்ணிய பாவங்களுக்கேற்றவாறே நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விதிவசமான நடப்புகளை யாராலும் தடுக்கமுடியாது. விதியே என்னைக் கடைசியில் சிர்டீக்கு இழுத்ததுõ

115 சப்-கலெக்டராக இருந்த நானாஸாஹேப் சாந்தோர்கர், வேலைநிமித்தம் சுற்றுப்பயணமாக தாணேவி­ருந்து1 கிளம்பினார். வஸயீக்குப்2 (இன்றைய பஸ்ஸீன்) போகும் வழியில் ரயிலுக்காக தாதர்3 புகைவண்டி நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.

116 வஸயீ ரயில் வருவதற்கு ஒருமணி நேர அவகாசம் இருந்ததால் அந்த நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிக்கலாம் என எண்ணினார்.

117 இவ்வெண்ணம் தோன்றிய உடனே பாந்த்ரா4வரை செல்லும் ரயில் ஒன்று வந்தது. அதில் ஏறிக்கொண்டார்.

118 பாந்த்ரா வந்தடைந்தவுடன் அவரிடமிருந்து எனக்குச் செய்தி வந்தது. நான் போய் அவரைச் சந்தித்தேன். என்னைப் பார்த்தமாத்திரத்தில் சிர்டீ விவகாரத்தைப்பற்றிப் பேசினார்.

119 ''எப்போதுதான் ஸாயீ தரிசனத்திற்குக் கிளம்பப் போகிறீர்? சிர்டீ போகும் விஷயத்தில் ஏன் இந்த அசிரத்தை? கிளம்புவதில் ஏன் இந்த இழுபறி? எடுத்த காரியத்தைச் செய்துமுடிக்கும் மனோதிடம் ஏன் இல்லை?ஃஃ என்றெல்லாம் கேட்டார்.

120 நானாவினுடைய உற்சாகம் என்னை வெட்கித் தலை குனியச் செய்தது. ஒளிக்காமல், என்னுடைய மனத்தில் இருந்த போராட்டத்தை வெளிப்படையாக அவருக்கு விளக்கினேன்.

121 அதைக் கேட்ட நானா அன்புடனும் ஆத்மார்த்தமாகவும் எனக்கொரு உபதேசம் அளித்தார். அதைக் கேட்டவுடன் எனக்கு சிர்டீ செல்லவேண்டுமென்ற ஆசை (மகிழ்ச்சியுறும் வகையில்) மறுபடியும் தோன்றியது.

122 ''இப்பொழுதே கிளம்புகிறேன்ஃஃ என்று என்னிடம் வாக்கு வாங்கிக்கொண்ட பிறகுதான் நானா கிளம்பினார். நானும் அந்த முஹூர்த்தத்திலேயே கிளம்பிவிட வேண்டுமென உறுதி செய்துகொண்டு வீட்டிற்குச் சென்றேன்.

123 பிறகு, நான் மூட்டை கட்டிக்கொண்டு தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அன்று சாயங்காலமே சிர்டீ செல்லக் கிளம்பினேன்.

124 சாயங்கால மெயில் வண்டி தாதர் ரயில் வண்டி நிலையத்தில் நிற்கும் என்று நினைத்து தாதர்வரை உண்டான கட்டணத்தைச் செலுத்திப் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டேன்.

125 பாந்த்ராவில் நின்றுகொண்டிருந்த ரயி­ல் ஏறி உட்கார்ந்தேன். வண்டி கிளம்பி நிலையத்தை விட்டு மெதுவாக நகர்ந்துகொண் டிருக்கையில், ஒரு முஸ்லீம் சட்டென்று என்னுடைய பெட்டியில் ஏறிக்கொண்டார்.

126 முதல் கவளச் சோற்றிலேயே ஈ அகப்பட்டது போல, நான் தாதருக்குப் பயணச்சீட்டு வாங்கியது பிரயாணத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலேயே ஏற்பட்ட அபசகுனம் போலும்õ

127 என்னுடைய மூட்டை முடிச்சுகளைப் பார்த்துவிட்டு, ''எங்கே பிரயாணம்?ஃஃ என்று (முஸ்லீம்) கேட்டார். ''தாதருக்குப் போய் அங்கு மன்மாட் மெயிலைப் பிடிக்கப் போகிறேன்ஃஃ என்று நான் பதிலளித்தேன்.

128 உடனே அவர் என்னை உஷார்ப்படுத்தினார், ''தாதரில் இறங்காதீர்; மெயில் அங்கு நிற்காது; நேராக போரீபந்தருக்குப் (இன்றைய விக்டோரியா டெர்மினஸ்) போய்விடுங்கள்ஃஃ.

129 சரியான நேரத்தில் இவ்வெச்சரிக்கை எனக்குக் கிடைத்திராவிட்டால், என்னால் தாதரில் மெயில் வண்டியைப் பிடித்திருக்கமுடியாது. ஏற்கெனவே சஞ்சலமடைந்திருந்த என் மனத்தை, எத்தனை முட்டாள்தனமான கற்பனைகள் தாக்கியிருக்கும் என்று தெரியவில்லை.

130 ஆனால் அன்று எனக்கு சிர்டீக்குப் போகும் பிரயாண யோகம் இருந்தது. ஆகவே, நடுவில் ஏற்பட்ட சம்பவம் நான் எதிர்பாராமலேயே எனக்கு சாதகமான திருப்பத்தை அளித்தது.

131 அடுத்த நாள் காலை ஒன்பது-பத்து மணியளவில் நான் சிர்டீ சென்றடைந்தேன். பாவுஸாஹேப்1 தீக்ஷிதர் எனக்காக சிர்டீக்கு வந்து, அங்கே காத்துக்கொண் டிருந்தார்.

132 இந்த சம்பவம் நடந்தது 1910ஆம் ஆண்டாகும். வருபவர்கள் தங்குவதற்கு ஸாடே வாடா (சத்திரம்) மட்டுமே அக்காலத்தில் சிர்டீயில் இருந்தது.

133 குதிரைவண்டியி­ருந்து இறங்கியவுடன் பாபாவை தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆர்வம் பொங்கியது. உடனே அவருடைய பொற்பாதங்களில் விழுந்து வணங்க வேண்டுமென்ற ஆவலை அடக்கமுடியவில்லை; என் மனத்தே ஆனந்த அலைகள் ஆரவாரித்தன.

134 அந்நேரத்தில், ஸாயீயின் பரமபக்தரும் பிரபலமானவருமான தாத்யாஸாஹேப்2 நூல்கர் என்பவர் மசூதியி­ருந்து3 அப்போதுதான் திரும்பி வந்துகொண்டிருந்தார். என்னிடம் அவர் சொன்னார், ''சீக்கிரம் தரிசனம் செய்துகொள்.--

135 ''பாபா பக்தர்களுடன் வாடாவின் மூலைக்கு வந்துவிட்டார். முத­ல் 'தூள்பேட்ஃ4 தரிசனத்திற்குப் போõ தாமதித்தால் பாபா லெண்டிக்குக்5 கிளம்பிவிடுவார்.--

1 பாவுஸாஹேப் தீக்ஷிதர் = காகாஸாஹேப் தீக்ஷிதர் = ஹரிஸீதாராம் தீக்ஷிதர்

2 லக்ஷ்மண்ராவ் நூல்கர் - பண்டர்பூரில் சப்-ஜட்ஜாக உத்தியோகம் பார்த்தவர் - ஓய்வு பெற்றபிறகு சிர்டீயில் வாழ்ந்தார்.

3 சிர்டீயில் பாபா ஒரு பாழடைந்த மசூதியில்தான் வாழ்ந்தார்.

4 நடந்து வந்ததால் தூசி படிந்த பாதங்களைக்கூடக் கழுவாமல் (தரிசனம்).

5 கிராமத்தின் எல்லையி­ருந்த ஓடை

136 ''பிறகு ஸ்நானம் செய்து கொள்ளலாம். பாபா திரும்பிவந்த பிறகு, மசூதிக்குச் சென்று ஆசுவாசமாக இன்னுமொரு தரிசனம் செய்ஃஃ.

137 இதைக்கேட்ட நான், பாபா இருந்த இடத்திற்கு ஓடினேன்; அவரது பாததூளிகளில் விழுந்து நமஸ்காரம் செய்தேன்; என் ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

138 நானாஸாஹேப் ஏற்கெனவே எனக்கு பாபாவைப்பற்றிச் சொல்­யிருந்தார்; ஆயினும் பிரத்யக்ஷமாக அதற்கு மிகையாகவே கண்டேன். இந்த தரிசனத்தால் நான் தன்யனானேன் (எல்லாச் செல்வங்களையும் படைத்தவனானேன்); கண் பெற்ற பயனைப் பெற்றேன்.

139 நான் பாபாவின் சுந்தரமான ரூபத்தைக் கண்டவனும் இல்லை, கேட்டவனும் இல்லை. இப்போது பார்க்கும்போது கண்கள் அமைதியுற்றன; பசி, தாஹம் அனைத்தும் மறந்து போயின; இந்திரியங்கள் அசையாது நின்றன.

140 ஸாயீயின் பாதங்களைத் தொட்ட உணர்வும் அவருடைய அன்பான விசாரிப்புகளும் என்னுடைய வாழ்நாளில் நான் அனுபவித்தறியாத பூரிப்பை என் ஜீவனுக்கு அளித்தன.

141 இம்முனிவரின் தொடர்பை எனக்கேற்படுத்தியவர்களுக்கு யான் என்றென்றும் தவிர்க்க முடியாதபடி கடமைப்பட்டுள்ளேன். இந்த ஸத்ஸங்கம் (நல்லோர் கூட்டுறவு) என்னுடைய உட­ன் ஒவ்வொரு அங்கத்தையும் மகிழ்ச்சியுறச் செய்துவிட்டது.

142 ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுபவர்களே உற்றாரும் உறவினரும்; வேறு எந்தச் சொந்தமும் அவர்களைப்போல் ஆகாது; இதையே நான் இதயபூர்வமாக நம்புகிறேன்.

143 இப் பெரும் நன்றிக்கடனை நான் எப்படித் திருப்பப் போகிறேனோ, அறியேன். ஆகவே நான் அவர்களுடைய பாதங்களில் சிரம் தாழ்த்திக் கைகூப்பி, மரியாதையுடன் வணங்குகிறேன்.

144 எனக்கு ஸாயீ தரிசன பாக்கியம் கிடைத்துவிட்டது; என்னுடைய சந்தேகங்கள் நிவிர்த்தியாயின; ஸாயீயின் புனிதமான சங்கம் கிடைத்தது; நான் பரமானந்தம் அடைந்தேன்.

145 ஸாயீ தரிசனத்தின் அற்புதம் இதுவேõ அவருடைய தரிசனமே ஒழுக்கத்திலும் நடத்தையிலும் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர வல்லது. மிச்சம்மீதி இருக்கும் பூர்வஜன்மவினை துடைக்கப்பட்டு, இந்திரிய சுகங்களின்மீது விருப்பமின்மை படிப்படியாகப் படரும்.

146 ஸாயீயினுடைய கிருபைமிகுந்த பார்வை பல ஜன்மங்களாக நான் சேமித்த பாவங்களை அழித்து, அவருடைய பாதங்கள் அழியாத ஆனந்தத்தை எனக்களிக்கும் என்னும் நம்பிக்கையை வேர்விடச் செய்தது.

147 ஸாயீ ஒரு மஹான்; மஹாயோகீச்வரர்; பரமஹம்ஸர்; ஞானிகளில் சிரேஷ்டமானவர். மானஸஸரோவர் போன்ற ஸாயீயின் பொற்கமலப் பாதங்கள், காக்கையான என்னையும் அன்னபக்ஷியாக மாற்றும்; மாபெரும் பாக்கியத்தால் அவர் பாதம் கண்டேன்õ

148 பாவங்களையும் இடர்களையும் இன்னல்களையும் நாசம் செய்யும் ஸாயீயினுடைய தரிசனமும் புனிதமான சங்கமும் என்னைத் தூய்மைப்படுத்திவிட்டன.

149 ஸாயீ மஹராஜரை நான் சந்தித்தது பல ஜன்மங்களில் சம்பாதித்த புண்ணியத்தின் பலனேõ ஸாயீயின் உருவம் நம் பார்வையில் பரவியவுடனே சகல சிருஷ்டிகளும் ஸாயீ ரூபமாகத்தான் தெரிகின்றன.

150 சிர்டீக்கு நான் வந்துசேர்ந்த தினத்தன்றே, பாலாஸாஹேப்1 பாடேவுக்கும் எனக்கும் 'குரு எதற்காகத் தேவைஃ என்ற வாக்குவாதம் எழுந்தது.

151 எதற்காக ஒருவர் சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டு, தன்னார்வமாகவே இன்னொருவருக்குப் பணிந்து கிடப்பதை அணைத்துக்கொள்ள வேண்டும்? கடமைகளையும் அனுஷ்டானங்களையும் செய்யும் திறன் இருக்கும்போது, குரு எதற்காகத் தேவை?

152 பார்க்கப்போனால், ஒவ்வொருவருக்கும் வேண்டியது சுயமுயற்சியே. சுயமுயற்சி இல்லாதவனுக்கு குரு என்ன செய்துவிடமுடியும்? விரலைக்கூட அசைக்காமல் சோம்பேறித்தனமாக முடங்கிக் கிடப்பவனுக்கு, யார்தான் என்னதான் கொடுக்கமுடியும்?

153 இந்த எளிமையான தத்துவத்தை நான் முன்வைத்தேன். எதிர்க்கட்சிக்காரர்கள் இதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவித்தார்கள். விடாப்பிடியாகத் தன் கட்சியே சரி என்று வாதித்தபின் இருதரப்பு வாதங்களும் சமமாயின. ஆகவே இந்தச் சர்ச்சை சூடுபிடித்தது.

154 சிந்தித்துப் பார்த்தால், தேஹாபிமானமே வாதப்பிரதிவாதங்களை வளர்க்கிறது. அஹம்பாவத்தை அழித்துவிட்டால் வாதமும் அழிந்துபோகிறதுõ

155 ஒருவர் எவ்வளவு சிறந்த வேதசாஸ்திர விற்பன்னராக இருப்பினும், குருவின் அருள் இன்றி அவருக்குக் 'காகித முக்திதான்ஃ கிடைக்கும் என்னும் வாதத்தை எதிர்க்கட்சி பலமாக எடுத்து வாதாடியது.

156 விதியா? மதியா? எது வ­து? என்பதுபற்றிச் சூடாக வாக்குவாதம் கொந்தளித்தது. ''எல்லாம் விதிதான் என்று விதியின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டால் என்னதான் நடக்கும்?ஃஃ என்று நான் கேட்டேன்.

157 என்னை எதிர்த்தவர்கள், நடப்பது நடந்தே தீரும் என்றும் விதிக்கப்பட்டதை விலக்கவே முடியாது என்றும் அஹங்காரம் பிடித்தவர்களும், மஹா கர்விகளும் அடிபட்டுவிட்டார்கள் என்றும் வாதித்தனர்.

158 ''யாரால் விதிக்கெதிராக வேலை செய்யமுடியும்? நீ ஒன்று செய்கிறாய், விளைவு வேறாக இருக்கிறது. உன்னுடைய சாதுர்யத்தையெல்லாம் ஒதுக்கிவைத்துவிடுõஃஃ என்றும் வாதித்தனர். ஆனால் என்னுடைய அஹங்காரம் தோல்வியை சுலபமாக ஒப்புக்கொள்வதாக இல்லை.

159 ''நீங்கள் எப்படி இவ்வாறு பேசலாம்? முயற்சி திருவினையாக்குமன்றோ? சோம்பேறித்தனமாக உட்கார்ந்திருப்பவனுக்கு விதி எதைத்தான் தரமுடியும்?ஃஃ என்று நான் வாதித்தேன்.

1 ஆரம்பகாலத்தில் சிர்டீக்குச் சென்ற பக்தர்களைக் கடுமையாக விமரிசித்த இவர், பிற்காலத்தில் தீவிர பக்தராகிவிட்டார். பாபாவுக்கு ஈமச்சடங்குகள் செய்த புண்ணியவான்.

160 ''உன்னுடைய முயற்சியால்தான் உன்னை உயர்த்திக்கொள்ளமுடியும் என்று வேதங்கள் கர்ஜிக்கின்றன. இதைத் தூக்கியெறிந்துவிட்டு வாழ்க்கையில் கரையேறுவது என்பது நடக்காத காரியம்.--

161 ''இவ்வுலகில் ஒருவருடைய முக்திக்கு அவரேதான் பாடுபட வேண்டும். குருவைத் தேடிக்கொண்டு எதற்காக அலையவேண்டும்? தன்னைத்தான் காத்துக் கொள்ளாதவனுக்கு குரு இருந்து மட்டும் என்ன பயன்?--

162 ''தன்னையே தூய்மையாக்கிக்கொண்டு நாடுவதை அடையவல்ல, நன்மை தீமை அறியும் புத்தியைத் தூக்கியெறிந்துவிட்ட முட்டாளுக்கு குரு என்ன ஸித்தியை அளித்துவிட முடியும்?ஃஃ

163 இந்த வாதப்பிரதிவாதம் முடிவடையவில்லை; எந்த நற்பயனும் ஏற்படவில்லை. இந்த வாதத்தால் நான் மன அமைதியை இழந்தேன்; அதுதான் நான் கண்ட பலன்õ

164 கடுமையான வாதப்பிரதிவாதம் செய்தபோதிலும் இருதரப்பும் சோர்வேதும் காட்டவில்லை. முக்கால் மணி நேரம் கழிந்தது. முடிவேதும் ஏற்படாமலேயே இவ்வாதம் நிறுத்தப்பட்டது.

165 பிறகு, மற்ற பக்தர்களுடன் நானும் மசூதிக்குச் சென்றேன். பாபா காகா ஸாஹேபை என்ன வினவினார் என்பதைக் கேளுங்கள்.

166 ''வாடாவில் என்ன நடந்தது? எதுபற்றிப் பெரிய வாக்குவாதம்? இந்த ஹேமாட் என்ன சொன்னார்?ஃஃ கடைசிக் கேள்வியைக் கேட்டபோது என்னை உன்னிப்பாக நோக்கினார் பாபா.

167 வேடிக்கையைப் பாருங்கள்õ வாடாவிற்கும் மசூதிக்கும் கணிசமான தூரம் இருந்தது. அங்கு நடந்த நிகழ்ச்சி எப்படி பாபாவுக்குத் தெரிந்தது? நான் ஆச்சரியப்பட்டேன்õ

168 பாபாவின் சொல்லம்பால் தாக்கப்பட்ட நான் நிசப்தமாகிவிட்டேன். முதற் சந்திப்பிலேயே இவ்வாறு கண்ணியமில்லாமல் நடந்துகொண்டுவிட்டோமே என்று வருந்தி, வெட்கத்தால் தலை குனிந்தேன்.

169 'ஹேமாட் பந்த்ஃ என்று பாபா எனக்களித்த பெயர், அன்று காலை நடந்த சூடான வாக்குவாதத்தின் நேரடி விளைவே என்பதை நான் உணர்ந்தேன். அந் நிகழ்ச்சிதான் பாபாவுக்கு ஹேமாட் பந்தை ஞாபகப்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் மனத்தில் குறித்துக்கொண்டேன்.

170 தேவகிரியைத்1 தலைநகராகக் கொண்ட யாதவ அரசர்களும் தௌலதாபாத்1தைத் தலைநகராகக் கொண்ட ஜாதவ அரசர்களும் ஒரு வம்சத்தினரே. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இவர்களுடைய இராஜ்ஜியத்தின் செழிப்பு மஹாராஷ்டிரத்திற்குப் புகழ் சேர்த்தது.

171 இந்த வம்சத்தில் மஹாதேவர் எனப் பெயர் கொண்டவர் பராக்கிரமும் பிரக்கியாதியும் படைத்த சக்கரவர்த்தியாக விளங்கினார்.

172 இவருக்குப் பிறகு ராமராஜா எனப் பெயர்கொண்ட அரசர் யதுவம்சத்தின் மிகச்சிறந்த ரத்தினமாக விளங்கினார். பல நற்குணங்கள் வாய்ந்தவரும் எல்லா யோக்கியதைகளும் பெற்றவருமான ஹேமாத்ரி என்பவர் இவர்கள் இருவருக்குமே மந்திரியாகப் பதவி வகித்தார்.

173 ஹேமாத்ரி பிராமணர்களுக்குப் போஜனம் செய்விப்பதைப் பெரிதும் விரும்பினார். சுருதிகளையும் (வேதங்கள்) ஸ்மிருதிகளையும் (ஒழுக்க விதி நூல்கள்) நன்கு ஆராய்ந்து, வாழும் விதிமுறைகளைத் தொகுத்து, 'தர்ம சாஸ்திரம்ஃ என்னும் நூலை மராட்டியில் முதன்முதலாக எழுதியவர் இவரே.

174 இவர் 'சதுர்வர்க்க சிந்தாமணிஃ என்னும் நூலையும் எழுதினார்.

1. விரதங்களும் அனுஷ்டானமும் 2. தானதருமங்கள் 3. புனித யாத்திரைகள்
4. மோக்ஷமார்க்கம் என்று இந்நூலை நான்கு அத்தியாயங்களாகப் பிரித்து, எல்லா விவரங்களையும் அளித்திருக்கிறார். இந் நூல் மிகப் புகழ் பெற்றது.

175 ஸம்ஸ்கிருத பாஷையின் ஹேமாத்ரி பந்த் என்னும் சொல் மராட்டியில் ஹேமாட் பந்த் எனத் திரிந்தது. ஹேமாத்ரி அக்காலத்தின் தலைசிறந்த ராஜதந்திரியாகவும் சாணக்கியராகவும் திகழ்ந்தார்.

176 அவர் ஸ்ரீவத்ஸ கோத்திரத்தில் பிறந்தவர்; நான் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவன். அவருக்கு முன்னோர்களில் ஐவர் மஹரிஷிகள்; எனக்கு முன்னோர்களில் மூவர் மஹரிஷிகள். அவர் யஜுர் வேதம் ஓதியவர்; நான் இருக்குவேதி. அவர் சிறந்த அறிவாளி; நானோ ஒரு மூடன்.

177 அவர் யஜுர் வேதத்தின் 'மாத்யாந்தினஃ கிளையைச் சார்ந்தவர். நான் இருக்கு வேதத்தின் 'சாகலஃ கிளையைச் சேர்ந்தவன். அவர் தர்ம சாஸ்திரத்தில் சிறந்த ஞானம் பெற்றிருந்தார்; நானோ நாகரிகமற்ற அடங்காப்பிடாரி. அவர் கல்விகேள்வி மிக்க ஞானி; நானோ ஒரு தகுதியுமற்ற அறிவி­. இவ்வாறிருக்க, ஏன் எனக்கு இந்தத் தகுதியற்ற பட்டம்?

178 அவர் ஓர் அனுபவமிக்க அரசியல்வாதியும் கூர்ந்த மதி மிகுந்த ராஜதந்திரியும் ஆவார். நானோ மந்தபுத்தியும் சிறுமதியும் படைத்தவன். அவர் 'ராஜ்யப்ரசஸ்திஃ என்னும் ஸம்ஸ்கிருதக் காவியம் இயற்றிப் புகழ் பெற்றவர். நானோ ஸமஸ்கிருதத்தில் ஒரு செய்யுள்கூட எழுத இயலாதவன்.

179 அவர் ஓர் எழுத்துச் சித்தர்; நானோ படிப்பறிவில்லாதவன். அவர் தர்ம சாஸ்திரங்கள் நன்கு தெரிந்த அறிவாளி; என்னுடைய ஞானம் சொல்பமே.

180 'லேகனகல்பதருஃ என்பது அவர் இயற்றிய பல்சுவைக் கவிதைக் கொத்து; நானோ ஓர் ஓவியும் (மராட்டிச் செய்யுள்) எழுத இயலாத பாபாவின் மட்டிப்பிள்ளைõ

181 சுமார் 8-ல் இருந்து 14ஆவது நூற்றாண்டு வரை மஹாராஷ்டிர தேசத்தில் கோராகும்பர், சோகாமஹர், ஸாவதாமா­, நிவிருத்தி நாதர், ஞானேச்வர் மஹராஜ், நாமதேவர் போன்ற ஞானிகள் தோன்றி பக்தி மார்க்கத்தை வளர்த்தனர்.

182 பண்டித போபதேவ் போன்ற வித்தியாரத்தினங்கள் அலங்கரித்த ராஜசபையில் ஹேமாட் பந்த் மந்திரியாக அமர்ந்து, அறிவாளிகள் மற்றும் திறமைசா­களின் நடுவே பெயரும் புகழும் பெற்றார்.

183 இதன் பிறகு, முகலாயப்படை தக்காணத்தை வடதிசையி­ருந்து தாக்கி, எங்கும் பரவியது; அதுவே தக்காண அரசர்களின் முடிவாகியது.

184 இந்தப் பட்டப்பெயர் சந்தேகமில்லாமல் என்னுடைய சாமர்த்தியத்திற்காகச் சூட்டப்பட்ட புகழாரம் எனினும், நோக்கமேதுமின்றி வழங்கப்பட்டதன்று. எதற்கெடுத்தாலும் வாதத்தில் இறங்கும் என்னுடைய இயல்பின்மேல் எய்யப்பட்ட, என் அஹங்காரத்தை அழிக்கத் தொடுக்கப்பட்ட சொல்லம்பாகும்.

185 அறைகுறை ஞானத்தை வைத்துக்கொண்டு நான் போட்ட ராஜநடை எல்லாம் வெறும் பிதற்றலே. என்னுடைய ஞானஹீன நிலையை அறிந்துகொள்ளும் வகையில் இலேசான கண்டிப்பு என்னும் மையைத் தடவி, என் கண்களைத் திறந்துவிட்டார் பாபா.

186 எது எப்படியிருப்பினும், மிக முக்கியமானதும் தக்க சமயத்தில் வெளிவந்ததும் ஸாயீயினுடைய திருவாயி­ருந்து மலர்ந்ததுமான இந்தப் பட்டப்பெயரை நான் ஒரு பூஷணமாக (அணிகலனாக) எடுத்துக்கொண்டேன்.

187 இருப்பினும், எதற்கெடுத்தாலும் வாதம் செய்வதென்னும் கெட்டபழக்கம் ஒருகணம்கூட என்னைத் தொடுவதை அனுமதிக்கக்கூடாது என்னும் பாடத்தை நான் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதை உணர்ந்தேன். ஏனெனில், இக்குணம் பல கெடுதல்களை விளைவிக்கக்கூடியது.

188 என்னுடைய வாதத்திறமையைப்பற்றிய கர்வத்தை ஒழித்துவிடுவதற்காகவும், பணிவுடன் வாழவேண்டுமென்பதை இறுதிநாள்வரை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவுமே இப்பட்டம் எனக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

189 தசரத புத்திரனும் மஹாவிஷ்ணுவின் அவதாரமானவரும் பூரணஞானியும் பிரபஞ்சத்தைக் காப்பவரும் ரிஷிகணங்களின் மனத்தில் நிலைபெற்றவருமான ஸ்ரீராமரே தம் குலகுரு வசிஷ்டரின் பாதங்களில் வணங்கினார்.

190 ஸ்ரீகிருஷ்ணர் பர பிரும்மத்தின் சுந்தரமான உருவமேயாவார். அவரும் ஸாந்தீபனி முனிவரை குருவாக ஏற்றுக்கொண்டு, பல சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. குருவின் ஆசிரமத்திற்கு விறகு சேகரித்துக் கொண்டுவந்து போட நேர்ந்தது.

191 அவர்களோடு ஒப்பிடும்போது நான் எம்மாத்திரம்? வாதப்பிரதிவாதங்களைச் செய்வதில் என்ன பயன்? குருவின்றி ஞானமும் இல்லை, மோக்ஷமும் இல்லை. சாஸ்திரங்களில் கூறப்பட்ட இக்கருத்து என் மனத்தில் திடமாகியது.

192 எதற்கெடுத்தாலும் வாதம் செய்யும் இயல்போ மற்றவர்களுடன் போட்டிபோடுவதோ நற்குணம் அன்று. உள்ளார்ந்த நம்பிக்கையும் தைரியமும் பொறுமையும் இல்லையெனில், ஆன்மீக முன்னேற்றம் சிறிதும் ஏற்படாது.

193 பின்வந்த நாள்களில் நானே இவ்வுண்மையை அனுபவித்தேன். இவ்வாறாக, அன்புடனும் நல்லுணர்வுடனும் தூய இதயத்துடனும் அடக்கத்துடனும் யான் இந்த கௌரவமளிக்கும் பட்டப்பெயரை ஏற்றுக்கொண்டேன்.

194 'என் கட்சி - எதிர்க்கட்சிஃ என்னும் கருத்தையே சேதம் செய்வதும் வாதப்பிரதிவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுமானதும் எல்லாருக்கும் போதனையாக அமைவதுமான இக் காதையை இங்கு முடிப்போம்.

195 இக்காவியத்தின் பிரயோஜனத்தையும் யாருக்காக எழுதப்பட்டது என்பதையும் காவியத்திற்கும் பொருளுக்கும் உண்டான சம்பந்தம்பற்றியும் ஹேமாட் என்று நான் பெயரிடப்பட்டதையும் விவரித்து எழுதிவிட்டேன்.

196 இந்த அத்தியாயத்தின் விஸ்தாரம் போதும்õ சில நாள்கள் கழிந்தபின், மற்ற விவரமான காதைகளையும் வரிசைக்கிரமப்படி ஸாயீயின் பாதங்களில் ஹேமாட் ஸமர்ப்பிப்பேன். கதை கேட்பவர்களேõ கவனத்துடன் கேளுங்கள்.

197 ஸாயீயே நமது சுகமும் செல்வமும்; ஸாயீயே ஸச்சிதானந்தம்; ஸாயீயே நமக்கு உலகத்துன்பங்களி­ருந்து விடுதலையளிப்பவர்; கடைசியில் நாம் சென்றடைவதும் ஸாயீயையேõ

198 ஸாயீயின் காதைகளைக் கேட்க உடம்பெல்லாம் காதுகளாகுங்கள். அவருடைய அருளால்தான் க­யுகத்தின் மலங்களனைத்தும் நாசமாகி, இவ்வுலக வாழ்வின் பயங்களை வெல்லமுடியும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'காவியத்தின் பிரயோஜனம் - ஆசிரியருக்குப் பெயரிடுதல்ஃ என்னும் இரண்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்.