Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
அத்தியாயம் - 42


42. மஹாஸமாதி (முதற் பகுதி)
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 ஓம் ஸ்ரீஸத்குருவே போற்றிõ கொடைவள்ளலேõ புண்ணிய நதி கோதாவரியின் கரையில் வசிப்பவரேõ உருவமேற்ற பிரம்மமேõ கோவணம் அணிந்தவரேõ ஞானிகளில் தலைசிறந்தவரேõ உம்மை வணங்குகின்றேன்.

2 ஞானியாக அவதாரம் செய்த ஸாயீயே பிறவிக் கடலைக் கடக்க வழிகாட்டுபவர்; பாதங்களில் தீனர்களுக்கு அடைக்கலம் அளிப்பவர்; பக்தர்களின் நிஜமான கற்பக விருட்சம்.

3 கடந்த அத்தியாயத்தில், அவருடைய புடைச்சிற்பம் தண்ணீரில் மூழ்கடிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்ட அற்புதமான லீலை விவரிக்கப்பட்டது.

4 அதுபோலவே, பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி அவருக்குத் தெளிவாக அறிவுரை வழங்கி, ஞானேச்வரி பாராயணத்தைத் தொடர்வதற்கு அருள் செய்து, அவருடைய ஆசையைப் பூர்த்திபண்ணிய விவரமும் சொல்லப்பட்டது.

5 சாராம்சம் என்னவெனில், குருவின் கிருபை உதித்தவுடன் உலகவாழ்வுபற்றிய பயமாகிய புதிர் விடுபடுகிறது; மோட்சத்தின் கதவுகள் திறந்துகொள்கின்றன; துன்பமெல்லாம் இன்பமாகிறதுõ

6 எந்நேரமும் ஸத்குருவின் பாதங்களை நினைத்துக்கொண் டிருப்பதால் வாழ்க்கையில் தடங்கல்கள் எல்லாம் விலகுகின்றன; வாழ்க்கையின் துன்பங்கள் மறைந்து போகின்றன; மரணத்திற்கு மரணம் ஏற்படுகிறதுõ

7 ஆகவே, கதைகேட்பவர்கள் அவர்களுடைய நன்மை கருதி ஸமர்த்தரின் கதைகளைக் கேட்கவேண்டும். கேட்பவர்களை அவை மிகப் புனிதர்களாக ஆக்கும்.

8 இந்த அத்தியாயத்தில், ஸாயீயின் இயல்பைப் பார்ப்போம். அவர் கடுமையான இதயம் படைத்தவரா; மென்மையானவரா?

9 இதுவரை நீங்கள் ஒருமுகப்பட்ட மனத்துடன் ஸாயீயின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கேட்டீர்கள். இப்பொழுது, அவர் உடலை உகுத்த சரித்திரத்தைக் கவனமாகக் கேளுங்கள்.

10 பாபாவுடன் சமகாலத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் சுகத்தை அனுபவித்த சிர்டீ மக்கள் எல்லாப் பேறுகளையும் பெற்றவர்கள்; எல்லாப் பேறுகளையும் பெற்றவர்கள்õ

11 1918 ஆம் ஆண்டு, தக்ஷிணாயன1 காலத்தில், வளர்பிறைப் பருவத்தில், விஜயதசமியன்று, பகல் நேரத்தில், பாபா தம் சரீரமாகிய ஆடையை உதறினார்.

12 அன்று மொஹர்ரம் மாதத்தில் 9 ஆவது தினம்; 'படுகொலை இரவுஃ2 நாள். அந்நாளில் பிற்பகல் 2:35 மணியளவில் ஸாயீநாதர் தம்முடைய நிர்யாணத்திற்குத்3 தயாரானார்.

13 கௌதம புத்தரின் பிறந்த நாள் புத்த ஜயந்தியாகக் கொண்டாடப்படுவதைப்போல், ஸாயீயின் புண்ணிய திதியும் மஹாஸமாதி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விழா கொண்டாடுவதற்கு தேவர்களுக்குப் பிறந்தநாள் எப்படி முக்கியமோ, அப்படியே ஞானிகளுக்கு முக்தியடைந்த நாள் முக்கியமானது.

14 அன்று (15.10.1918) மதியம் 12:30 மணி கடியாரத்தில் அடித்தபோது தசமி திதி கழிந்து ஏகாதசி திதி ஆரம்பமாகிவிட்டது. ஆகவே, பாபா முக்தியடைந்த திதி ஏகாதசியே.

15 ஆயினும், அன்று உதயகாலத்தில் தசமி திதியாக இருந்ததால், விஜயதசமியே பாபா முக்தியடைந்த திதியாகக் கொள்ளப்படுகிறது. உற்சவமும் விஜயதசமியன்றே கொண்டாடப்படுகிறது.

16 அந்தச் செவ்வாய்க் கிழமை, முஸ்லீம்களுக்குப் 'படுகொலை இரவுஃ நாள்; மிகப் பிரசித்தமான நாள். அந்த நாளில், ஸாயீ, ஜோதியை ஜோதியுடன் (தம்முடைய ஆத்மஜோதியைப் பரஞ்ஜோதியுடன்) கலந்துவிட்டார்.

17 விஜயதசமி, வங்காள தேசத்தில் துர்க்கா பூஜை முடியும் நாள். விஜயதசமி வடநாட்டிலும் எல்லாருக்கும் பண்டிகை நன்னாள்.

18 1916 ஆம் ஆண்டு (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு), இதே விஜயதசமி நாளன்று, சாயங்கால நேரத்தில், பிரதோஷ காலத்தில், பின்னர் நடக்கப்போவதை சூசகமாகத் தெரிவித்தார் பாபா.

19 அந்த அபூர்வமான லீலையை எவ்வாறு செய்தார் என்பதை இப்பொழுது சொல்கிறேன்; கேட்பவர்கள் வியப்படைவீர்கள். மேலும், எல்லாரும் ஸமர்த்த ஸாயீயின், திட்டமிட்டுச் செயலாற்றும் சாமர்த்தியத்தையும் அறிந்துகொள்வீர்கள்.

20 1916 ஆம் ஆண்டு நவராத்திரிப் பண்டிகை சமயத்தில், சிலங்கண்4 நாளன்று, சாயங்கால வேளையில், அவருடைய வழக்கமான சுற்றுலாவை முடித்தபின் ஓர் அற்புதமான லீலை பாபாவிடமிருந்து வெளிப்பட்டது.

1. சூரியன் தெற்கு நோக்கிச் சஞ்சரிப்பதுபோல் தோன்றும் ஆறு மாத காலம்.

2. முஹம்மது நபியின் மகள் பாத்திமாவின் இரண்டாவது மகன் இமாம் ஹுசேன், தொழுகை செய்துகொண் டிருந்தபோது யாஜித்பின் மௌவியாவின் (விரோதி) சேனையால் படுகொலை செய்யப்பட்ட தேதி. சம்பவம் நடந்தது கி.பி. 680ஆம் ஆண்டில்.

3. நிர்யாணம் = முக்தி - மறைவு - புறப்படுதல் - கடைசிப் பயணம்.

4. 'ஸீமோல்லங்கனம்ஃ என்கிற ஸம்ஸ்கிருதச் சொல்லுக்கு எல்லையைக் கடத்தல் என்பது பொருள். இச் சொல் மராட்டியில் சிலங்கண் என்று திரிந்தது போலும். அரசர்கள் விஜயதசமியன்று கோலாகலமான ஊர்வலமாக எல்லையைக் கடந்துசென்று, எதிரிகளை வெல்லும் அறிகுறியாகச் சில அம்புகளை எய்துவிட்டுத் திரும்புவது ராஜதர்மம். சன்னியாசிகளும் விஜயதசமியன்று சாதுர்மாஸ்ய (மழைக்கால) விரதத்தை முடித்ததற்கு அறிகுறியாக, ஸ்ரீமத் பகவத் கீதையைப் பாராயணம் செய்துகொண்டே நடந்து சென்று அவர்கள் தங்கியிருந்த ஊரின் எல்லையைத் தாண்டிய பிறகு, திரும்பி வரவேண்டும் என்பது தர்ம சாஸ்திர விதி.

21 திடீரென்று பளபளவென்று மின்னலடித்துக் கடகடவென்று இடியிடிக்கும் கரிய மேகங்களைப் போன்று பரசுராம சொரூபமாக பாபா தோன்றினார்.

22 தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியை அவிழ்த்தார். சரக்கென்று கப்னியைக் கழற்றினார். லங்கோட்டை அவிழ்த்தார். மூன்றையும் துனியின் தீயில் போட்டுவிட்டார்.

23 ஏற்கெனவே துனி கொழுந்துவிட்டு எரிந்துகொண் டிருந்தது. துனிக்கு மேலும் ஆஹுதியாக (படையலாக) இந்த எரிபொருள்களும் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக ஜுவாலை ஆவேசத்துடன் உயரமாக எழுந்தது. தீயைக் கண்டு பக்தர்கள் மனம் கலங்கினர்.

24 ஈதனைத்தும் கணப்பொழுதில் நடந்ததால், பாபாவின் கோபத்திற்குக் காரணம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை. சிலங்கண் சமயத்தில் அவருடைய தோற்றம் பெரும்பீதியை விளைவித்தது.

25 அக்கினியோ பிரகாசமான ஒளியுடன் பரவியது. பாபாவின் முகமோ அதைவிடப் பிரகாசமாக ஜொ­த்தது. கண்ணைப் பறிக்கும் பிரகாசத்தைத் தாங்கமுடியாததால் அங்கிருந்தவர்களின் கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன; முகத்தை வேறுதிசையில் திருப்பிக்கொண்டனர்.

26 ஞானியின் கைகளால் அளிக்கப்பட்ட உணவைப் புசித்து அக்கினி நாராயணன் சந்தோஷமடைந்தார். பரசுராம சொரூபம் எடுத்த பாபாவோ, திகம்பரமாகக் (திசைகளையே ஆடையாக அணிந்து - அம்மணமாகக்) காட்சியளித்தார். அந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் பாக்கியசா­கள்õ

27 கோபத்தால் அவருடைய கண்கள் சிவந்தன. கடுஞ்சினத்துடன் வெறித்துப் பார்த்துக்கொண்டு உரக்கக் கத்தினார், ''ஓய்õ இப்பொழுது நீங்களே முடிவுகட்டுங்கள்; நான் முஸ்லீமா ஹிந்துவா என்றுõ--

28 ''இன்று பாருங்கள்; நான் ஹிந்துவா யவனனா (முஸ்லீமா) என்று. உங்கள் மனம் திருப்தியடையும்வரை பார்த்து நிர்த்தாரணம் செய்துகொள்ளுங்கள். சந்தேகத்தை விட்டொழியுங்கள்ஃஃ என்று பாபா கர்ஜித்தார்.

29 அந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் பயத்தால் நடுங்கினர், பாபாவை எப்படி சாந்தப்படுத்துவது என்று தெரியாது விழித்தனர், கவலையுற்றனர்.

30 பாகோஜீ சிந்தே ஒரு குஷ்டரோகி; ஆயினும் பக்தர்களில் சிரேஷ்டர் (சிறந்தவர்). பாகோஜீ தைரியமேற்று பாபாவின் அருகில் சென்று அவருடைய இடுப்பில் ஒரு லங்கோட்டைச் சுற்றினார்.

31 பாகோஜீ கேட்டார், ''என்ன பாபா இதெல்லாம்? இன்று தசரா பண்டிகையில் சிலங்கண் (எல்லை தாண்டும்) நாள் ஆயிற்றேõஃஃ பாபா ஸட்காவால் பலமாக அடித்துக்கொண்டே சொன்னார், ''இதுதான் என்னுடைய சிலங்கண்.ஃஃ

32 இவ்வாறு, துனியின் அருகில் பாபா திகம்பரமாக நின்றுகொண்டேயிருந்தார். அன்று அவர் சாவடியில் உறங்கும் முறைநாள். 'சாவடி ஊர்வலம் எப்படி நடக்கப்போகிறதுஃ என்று அனைவரும் சஞ்சலமடைந்தனர்.

33 சாவடி ஊர்வலம் இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கவேண்டும். ஆனால், அப்பொழுதே மணி பத்து. பாபா இன்னும் சாந்தமடைந்தாரில்லை. மக்கள் ஆங்காங்கே விழித்தகண் விழித்தவர்களாய் மௌனமாக நின்றுகொண் டிருந்தனர்.

34 அப்படியே இரவு மணி பதினொன்று ஆகியது. கொஞ்சங்கொஞ்சமாக பாபாவின் கோபம் தணிந்தது. ஒரு புதிய லங்கோட்டையும் கப்னியையும் அணிந்துகொண்டார்.

35 சாவடி ஊர்வலத்துக்கான மணி ஒ­த்தது. ஆங்காங்கே மௌனமாக உட்கார்ந்திருந்த பக்தர்கள் பல்லக்கிற்கு மலர் அலங்காரம் செய்தனர். பாபாவின் அனுமதி பெற்றபின் பல்லக்கை முற்றத்திற்குக் கொண்டுவந்தனர்.

36 வெள்ளித் தடி, பதாகைகள், சவரி, அலங்காரக் குடை, கொடிகள் போன்ற அரசர்களுக்குரிய அலங்காரங்களுடனும் மரியாதைகளுடனும் ஒருநாள் விட்டு ஒருநாள் நடக்கும் சாவடி ஊர்வலம் கிளம்பியது.

37 ஊர்வலம் கிளம்பும்போது வாத்தியங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து பெருஞ்சத்தம் விளைவித்தன. அதையும் மீறி, மக்கள் ஸாயீநாதருக்கு 'ஜய ஜயஃ கோஷமிட்டனர். அதை யாரால் வர்ணிக்க முடியும்õ எங்கும் ஆனந்தம் பொங்கிவழிந்தது.

38 பிறகு பாபா வெள்ளைவெளேரென்ற துணியொன்றை எடுத்துத் தலையைச் சுற்றிக் கட்டிக்கொண்டார். கிளம்புவதற்கு சுபமுஹூர்த்த வேளை என்று அறிவிப்பதுபோல், சிலீம், புகையிலை, ஸட்கா இவற்றைக் கையில் எடுத்துக்கொண்டார்.

39 சிலர் அலங்காரக் குடையையும் சிலர் சவரியையும் (சாமரத்தையும்) ஏந்தினர். மற்றும் சிலர் மயிற்பீ­களை ஏந்தினர். சிலர் கருடக் கொடியையும் சிலர் வாயில்காப்போரின் அதிகாரச் சின்னமான கோல்களையும் ஏந்தினர்.

40 இவ்வாறாக, பிறவிக் கட­ன் எல்லையைக் கடப்பதற்கு விஜயதசமிநாள் சுபமான காலம் என்பதை பாபா குறிப்பால் உணர்த்தினார்.

41 ஆகவே, இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சிர்டீ மக்களுடன் பாபா ஒரு தசராவிற்குத்தான் (நவராத்திரிப் பண்டிகைக்குத்தான்) இருந்தார். அடுத்த விஜயதசமியை நல்ல முஹூர்த்தமாகக் கருதித் தம்முடைய தேகத்தை பூமிக்கு அர்ப்பணம் செய்தார்.

42 இதைக் குறிப்பால் உணர்த்தியதோடல்லாமல், தம்முடைய செயலால் சிர்டீ மக்களுக்கு நேரிடை அனுபவத்தையும் அளித்தார். 1916 ஆம் ஆண்டு துனியில் தம் ஆடைகளை எரித்ததுபோல், 1918 ஆம் ஆண்டு அதே நாளில் தம் தேகமெனும் சுத்தமான வஸ்திரத்தை யோகமெனும் அக்கினிக்குப் படையலாக அர்ப்பணம் செய்தார்.

43 1918 ஆம் ஆண்டின் விஜயதசமிநாளை ஒரு சுபதினமாகச் செய்து மெய்ப்பொருளோடு இரண்டறக் கலந்துவிட்டார்.

44 இதை நான் எழுதிக்கொண் டிருக்கும்போதே, விஜயதசமிநாளை அவர் முன்னரே தேர்ந்தெடுத்துவிட்டார் என்பதன் நிரூபணமாக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

45 ஒருசமயம், சிர்டீவாசி ராமச்சந்திர பாடீல் கோதே என்பவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் போ­ருந்த நோயின் தாக்குதலை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவருடைய நிலைமை அவ்வாறிருந்தது.

46 நோய் தீர்க்கும் எந்த உபாயத்தையும் பாக்கி வைக்கவில்லை. நோயின் உக்கிரத்தைக் குறைக்க முடியாதுபோகவே, அவருக்கு வாழ்க்கையின்மீதே வெறுப்பு ஏற்பட்டது.

47 அந்த மனநிலையில் அவர் இருந்தபோது, திடீரென்று ஒருநாள் பாபா அவருடைய படுக்கையின் அருகில் நள்ளிரவு நேரத்தில் தோன்றினார்.

48 பாடீல் உடனே பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொண்டு பெரிதும் மனமுடைந்தவராய் அவரிடம் சொன்னார், ''பாபா, எனக்கு எப்பொழுது நிச்சயமாகச் சாவு வரும்? இதை மட்டும் எனக்குச் சொல்லுங்கள்õ--

49 ''எனக்கு இனி உயிர்வாழ இஷ்டமில்லை; மரணம் எனக்குப் பெரிய சங்கடமொன்றுமில்லை. மரணத்தைச் சந்திக்க நான் காத்துக்கொண் டிருக்கிறேன்õஃஃ

50 கருணாமூர்த்தியான ஸாயீ அப்பொழுது அவரிடம் சொன்னார், ''சிறிதளவும் கவலைப்படாதீர். உயிரைப் பறிக்கக்கூடிய நிலைமையும் பீதியும் கடந்துவிட்டன. ஏன் ஓய், அனாவசியமாகக் கவலைப்படுகிறீர்?--

51 ''நீர் சிறிதும் பயப்படவேண்டா. உம்முடைய ஹுண்டி (மரண ஓலை) திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், ராமச்சந்திரா, தாத்யாவின் (தாத்யா கண்பத் பாடீல் கோதேவின்) கதியைப்பற்றி எனக்கு விடிவு ஏதும் தெரியவில்லைõ--

52 ''1918 ஆம் ஆண்டு, தக்ஷிணாயனத்தில், ஐப்பசி மாதத்தில், வளர்பிறை தசமி திதியில் (விஜயதசமியன்று) தாத்யா மேலுலகம் செல்வான்.--

53 ''ஆயினும், இதை அவனிடம் சொல்லாதீர். அவன் மனத்தில் மரணபயம் ஏறி உட்கார்ந்துகொள்ளும்; இரவுபகலாக சோகத்தால் நைந்துபோவான். யாருமே சாவதற்கு விரும்புவதில்லை.ஃஃ

54 இரண்டு வருடங்கள்தாம் இருந்தன. தாத்யாவின் வேளை நெருங்கிவிட்டது. பாபாவின் வார்த்தை வஜ்ஜிரம் போன்று உறுதியானதாயிற்றேõ பாடீல் கவலையில் ஆழ்ந்தார்.

55 விஷயத்தைத் தாத்யாவிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார். ஆயினும், வேறு யாருக்கும் சொல்லவேண்டா என்ற வேண்டுதலுடன் பாலா சிம்பியின் (தையற்காரர்-பாபா பக்தர்) காதில் போட்டார். இருவருமே மனம் கலங்கியவாறு இருந்தனர்.

56 ராமச்சந்திர பாடீல் எழுந்து உட்கார்ந்தார். அப்போதி­ருந்து அவரைப் பீடித்த வியாதி விட்டொழிந்தது. இதன் பிறகு அவருக்கே தெரியாதவாறு நாள்கள் வேகமாக ஓடின.

57 பாபாவின் திருவாய்மொழி எவ்வளவு துல்­யமானது என்று பாருங்கள்õ 1918 ஆம் ஆண்டின் புரட்டாசி மாதம் கழிந்தது; ஐப்பசி மாதம் பிறந்தது; தாத்யா நோய்வாய்ப்பட்டுப் படுக்கையாகப் படுத்தார்.

58 அங்கே தாத்யா உக்கிரமான ஜுரத்தால் வாடினார்; இங்கே பாபா குளிரால் நடுங்கினார். தாத்யா தம் முழுப் பாரத்தையும் பாபாவின்மேல் போட்டிருந்தார்; பாபாவை ரட்சித்தவர் ஸ்ரீ ஹரியேõ

59 தாத்யாவால் படுக்கையி­ருந்து எழுந்திருக்க முடியாததால், பாபாவை தரிசனம் செய்ய வரமுடியவில்லை. தேகத்தின் யாதனையை (யமவேதனையை) அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

60 நோயால் துன்பப்பட்டுக்கொண் டிருந்தாலும் அவருடைய சித்தம் பாபாவிடமே இருந்தது. அவரால் எழுந்திருக்கவோ நடக்கவோ முடியவில்லை. நோய் நாளுக்குநாள் தீவிரமடைந்தது.

61 இங்கே பாபாவின் முக்கலும் முனகலும் நாளுக்குநாள் இரண்டு மடங்கு ஆகிக்கொண் டிருந்தது. அவருடைய நோயும் சீக்கரமாகக் கட்டுக்கடங்காமல் போயிற்று.

62 பாபாவால் வரும்பொருள் கணிக்கப்பட்ட நாள் வேகமாக நெருங்கியது. பயத்தாலும் கவலையாலும் பாலா சிம்பிக்கு முத்து முத்தாக வியர்த்துக்கொட்டியது. ராமச்சந்திர பாடீ­ன் நிலைமையும் அவ்வாறே.

63 அவர்கள் நினைத்தனர், 'பாபா சொன்ன வார்த்தை உண்மையாகிவிடும் போ­ருக்கிறது. சகுனம் ஒன்றும் சரியாக இல்லை. நோயாளியின் நிலைமை மோசமாகிவிட்டது.ஃ

64 வளர்பிறை தசமி நாள் உதித்தது. தாத்யாவின் நாடித்துடிப்புக் குறைந்தது; அவர் இறந்துகொண் டிருந்தார். உறவினர்களும் நண்பர்களும் முகம் வெளுத்தனர்.

65 பின்னர் நடந்ததோ ஓர் அற்புதம்õ தாத்யாவின் உயிருக்கு ஏற்பட்ட கண்டம் விலகியது. தாத்யா பிழைத்துவிட்டார்; போனவர் பாபாதான். தாத்யாவைக் காப்பாற்றத் தம்முயிரை ஈந்தாரோõ

66 பாபாவின் திருவாய்மொழி விநோதத்தைப் பாருங்கள். தம்முடைய பெயருக்குப் பதிலாகத் தாத்யாவின் பெயரைக் கொடுத்தார்õ உண்மையில், குறிக்கப்பட்ட நேரத்தி­ருந்து அணுவளவும் பிசகாமல் தம்முடைய இறுதிப் பயணத்தைத் துவங்குவதற்குத் தயார் செய்துகொண் டிருந்தார்.

67 நடக்கப்போவதை அனைவர்க்கும் அவர் சூசகம் காட்டியிருந்தார். ஆனபோதிலும், சம்பவம் நடக்கும்வரை யாருக்குமே அது மனத்தில் படவில்லை.

68 'தாத்யாவின் மரணத்தைத் தவிர்ப்பதற்காகத் தம்முடைய உயிரை பாபா தியாகம் செய்துவிட்டார்ஃ என்று மக்கள் பேசுகின்றனர். பாபா இவ்விதமான பண்டம் மாற்றும் விளையாட்டு விளையாடினாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்õ

69 பாபா தேகத்தை உதிர்த்துவிட்ட தினத்தன்று இரவுநேரத்தில், பண்டரிபுரத்தி­ருந்த தாஸகணுவின் கனவில் (விடியற்காலையில்) காட்சியளித்தார்.

70 பாபா கூறியது, ''மசூதி இடிந்து விழுந்துவிட்டது; சிர்டீயின் மளிகைக் கடைகாரர்களும் எண்ணெய் வியாபாரிகளும் என்னைத் துன்புறுத்தினர். ஆகவே, நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.-- (பாபா உருவகபாஷையில் பேசுகிறார்.)

71 ''நான் இங்குவரை வந்தேன். சடுதியாக சிர்டீக்கு வாரும்õ ஏராளமான வகுள மலர்களால் என்னைப் போர்த்திவிடும். என்னுடைய இந்த இச்சையைப் பூர்த்திசெய்யும்.ஃஃ

72 இதனிடையே, சிர்டீயி­ருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலமாக, பாபா மஹாஸமாதியாகிவிட்ட செய்தியை தாஸகணு அறிந்தார். ஒருகணமும் தாமதியாது சிர்டீக்குப் புறப்பட்டார்.

73 சிஷ்ய பரிவாரத்துடன் ஸமாதிக்கு முன்பாக நின்றுகொண்டு இரவுபகலாக பஜனையும் கீர்த்தனையும் பாடினார். அவ்வப்பொழுது பக்தர்கள் கூட்டம் நாமகோஷம் செய்தது.

74 தாஸகணு, ஹரிநாமம் என்னும் பூக்களால் தம்முடைய கைகளாலேயே மிக மனோஹரமான மாலையொன்றைத் தொடுத்துப் பிரேமையுடன் ஸமாதிக்கு அணிவித்தார். அன்னதானமும் செய்தார்.

75 அகண்ட பஜனையின் கோஷம் சிர்டீயைப் பூலோகவைகுண்டம்போல் தோற்றுவித்தது. தாஸகணு வாரிவழங்கிய நாமகோஷம் சிர்டீ கிராமத்தையே நிரப்பியது.

76 ஆயினும், பாபாவுக்கென்ன விஜயதசமிநாளின்மீது பிரீதி? வருடத்தின் மிகச் சிறந்த சுபமுஹூர்த்த தினங்களான மூன்றரை1 நாள்களில், இந்த நாள் (விஜயதசமி), பிரயாணம் கிளம்புவதற்கு விசேஷமான சுபதினமாகக் கருதப்படுகிறது. இது அனைவர்க்கும் தெரிந்ததே.

77 இருந்தபோதிலும், இவ்வாறு சொல்வது பிரமாணமாகாது. போவது வருவது என்று ஒன்றும் இல்லாதவருக்குப் புறப்பாடு என்று ஒன்று எப்படி இருக்கமுடியும்? அத்தகையவருக்கு சுபதினத்தால் என்ன பிரயோஜனம்?

78 எவர் எல்லாப் பற்றுகளையும் துறந்தவரோ, எவர் தர்மம், அதர்மம் என்னும் பந்தங்களி­ருந்து விடுபட்டவரோ, எவருடைய பிராணனுக்கு வெளியேறுவது என்பது இல்லையோ, அவருக்கென்ன கடைசிப் பயணம்?

79 ''பிரம்மத்தோடு ஒன்றாகியவர் பிரம்மத்தை2 அடைகிறார்.ஃஃ இதுவே ஸாயீ மஹராஜின் நிலை. அவருக்குப் போவதோ வருவதோ இல்லை. இவ்வாறிருக்க, அவர் நிர்யாண நிலையை அடைவதெப்படி?

80 உத்தராயனமாக இருந்தாலென்ன, தக்ஷிணாயனமாக இருந்தாலென்ன? தீபம் அணையும்போது, ஒளி தீபத்தினுள்ளேயே சென்றுவிடுவதுபோல், இருந்த இடத்திலேயே பிரம்மத்தில் ஐக்கியமானவருக்குப் பிரயாணம் என்று ஏதும் இல்லையேõ

81 மனிதவுடல் கேவலம், பஞ்சபூதங்களி­ருந்து கடன்வாங்கப்பட்ட பொருள். வேலை முடிந்த பிறகு எவரெவர்களுக்குச் சொந்தமோ அவரவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டியதுதானேõ

82 வரப்போகும் நிகழ்ச்சிக்கு பாபா முன்னதாகவே சூசகமாக எச்சரிக்கை விடுத்து மக்களை வியப்படையச் செய்தார். அந்தப் பொன்னானவேளை தன்னுடைய கீர்த்தியை ஸ்தாபித்துவிட்டுப் போய்விட்டது.

83 ஜுரம் வந்தது ஒரு நிமித்த காரணமே (சாக்குப்போக்குதான்). உலகியல் ரீதியையொட்டி பாபா சிலசமயம் முக்கினார்; சிலசமயம் முனகினார். ஆனால், எப்பொழுதும் உள்ளுக்குள் தெளிவான மனத்துடன் இருந்தார்.

1. மராட்டியர்களின் கணிப்பின்படி குடிபட்வா என்னும் புதுவருடப் பிறப்பு நாள், விஜயதசமி, தீபாவளியை ஒட்டிய அமாவாசை, தெலுங்கு வைகாசி மாதத்து வளர்பிறையில் மூன்றாம் நாளான அக்ஷய திருதீயையில் அரைநாள் ஆகிய மூன்றரை நாள்களும் மிகச் சிறந்த சுபதினங்களாகக் கருதப்படுகின்றன.

2. பிருஹதாரண்யக உபநிஷதப் பிரமாணம்.

84 பகல் நேரத்தில் சுமார் பத்து மணி ஆகியது; நிர்யாண நேரம் நெருங்கிக்கொண் டிருந்தது. யாருடைய உதவியும் இல்லாமல் பாபா தாமே எழுந்து உட்கார்ந்தார். குழப்பமேதுமில்லாத தெளிவான மனத்துடன் இருந்தார்.

85 அப்பொழுது பாபாவின் முகத்தைப் பார்த்த பக்தர்களின் மனத்தில் சமுத்திரம் போன்ற பெரிய நம்பிக்கை எழுந்தது. பயங்கரமான அமங்கல வேளை கடந்துவிட்டது என்றே நம்பினர்.

86 அவர்கள் அனைவரும் சஞ்சலப்பட்டவாறே சோகமாக உட்கார்ந்திருந்தபோது பாபாவின் நிர்யாண நேரம் நெருங்கிக்கொண் டிருந்தது. அப்பொழுது என்ன நடந்ததென்று கேளுங்கள்.

87 உயிர் பிரியப்போவதற்கு முன்னால் அவருடைய மனத்தில் என்ன தோன்றியதோ தெரியவில்லை. அது தர்மம் செய்யவேண்டிய வேளை என்றறிந்து தம்முடைய கப்னி பாக்கெட்டில் கைவிட்டார்.

88 சிறந்த லக்ஷணங்கள் பொருந்தியிருந்தவரும், பெயருக்கேற்ற நடத்தை கொண்டிருந்தவரும், ஸாயீபாதங்களிலேயே எப்பொழுதும் மூழ்கியிருந்தவருமான, லக்ஷ்மீ பாயீ என்பவர் அப்பொழுது அவருடைய சன்னிதியில் இருந்தார்.

89 கணநேரத்தில் பூதவுடலை உதறிவிடப் போகிறோம் என்று அறிந்த பாபா, மிகுந்த கவனத்துடன் திரவிய தானம் அளித்தது இவருக்கே.

90 இந்த லக்ஷ்மீ பாயீ சிந்தேதான், பாபா வசித்த மசூதியில் எல்லா வேலைகளையும் குறையேதுமின்றி நியம நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டுச் செவ்வனே செய்தவர்.

91 தினமும் பகல் நேரத்தில் பாபாவின் தர்பார் எல்லாருக்கும் திறந்தவாறே செயல்பட்டது. பெரும்பான்மையான நேரத்திற்கு எவரும் தடைசெய்யப்படவில்லை. ஆனால், இரவிலோ கெடுபிடிகள் அதிகம்.

92 மாலை நேரத்தில் பாபா தம் சுற்றுலாவை முடித்துக்கொண்டு மசூதிக்குத் திரும்பிய பிறகு, மக்கள் தம் தம் வீடுகளுக்குத் திரும்பிய பிறகு, மறுபடியும் மறுநாள் காலையில்தான் பாபாவை தரிசிக்க மசூதிக்கு வருவார்கள்.

93 ஆயினும், பகத் மஹால்ஸாபதி, தாதா, லக்ஷ்மீ பாயீ ஆகியவர்களுடைய பக்தியை மெச்சி, இரவில் அவர்கள் வருவதை பாபா தடைசெய்யவில்லை.

94 மேலும், இந்த லக்ஷ்மீ பாயீதான் பாபாவுக்கு தினமும் நேரம் தவறாது சோளரொட்டியும் காய்கறி பதார்த்தமும் அன்புடன் அனுப்பியவர். அவருடைய சேவையை யாரால் வர்ணிக்க முடியும்?

95 இந்தச் சோளரொட்டிக் கதையைக் கேட்டால் பாபாவுக்குப் பிராணிகளின்மீதும் இருந்த தயை விளங்கும். அவர் நாய்களிடமும் பன்றிகளிடமுங்கூடத் தம்மை ஐக்கியம் செய்துகொண்டதைக் கேட்டுக் கதைகேட்பவர்கள் ஆச்சரியமடைவீர்கள்.

96 ஒருசமயம் பாபா தம்முடைய மார்பைச் சுவரின்மேல் சாய்த்துக்கொண்டு பிரேமையுடன் உரையாடிக்கொண் டிருந்தபோது லக்ஷ்மீ பாயீ அங்கு வந்தார்.

97 தாத்யா பாடீல் அருகில் இருந்தார்; இன்னும் சிலரும் அங்கு இருந்தனர். லக்ஷ்மீ பாயீ பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். அப்பொழுது பாபா அவரிடம் சொன்னார்,--

98 ''லக்ஷ்மீ, எனக்குப் பசி எடுக்கிறது.ஃஃ ''பாபா, நான் இப்போதே போய் உங்களுக்குச் சில சோளரொட்டிகள் கொண்டுவருகிறேன்.ஃஃ

99 என்று சொல்­க்கொண்டே லக்ஷ்மீ தம் இல்லத்திற்குச் சென்றார். சோளரொட்டி, காய்கறி பதார்த்தம், சட்டினி இவற்றைச் சுடச்சுடச் செய்து எடுத்துக்கொண்டு தாமதம் இன்றித் திரும்பிவந்தார். அந்தச் சிற்றுண்டியை பாபாவின் எதிரில் வைத்தார்.

100 பாபா அந்தத் தட்டை எடுத்து ஒரு நாயின் முன்னே வைத்தார். லக்ஷ்மீ பாயீ உடனே கேட்டார், ''பாபா, நீங்கள் என்ன இவ்வாறு செய்கிறீர்கள்?--

101 ''நான் ஓடோடிச் சென்று என்னுடைய கைகளாலேயே சீக்கிரமாக ரொட்டி செய்துகொண்டு வந்தேன். அதற்குப் பலன் இதுதானா? உண்மையான மகிழ்ச்சியை நாய்க்கன்றோ கொடுத்துவிட்டீர்கள்õ --

102 ''நீங்கள் பசியாக இருந்தீர்கள்; அந்தப் பசியைத் தணிப்பதற்கு இதுதான் வழியா? ஒரு துண்டுகூட நீங்கள் வாயில் இடவில்லை; நான் இங்கே தவித்துக்கொண்டு நிற்கிறேன்õஃஃ

103 பாபா அப்பொழுது லக்ஷ்மீ பாயீயிடம் கூறினார், ''நீ ஏன் வீணாக வருத்தப்படுகிறாய்? நாயின் வயிறு நிறைந்தால், நான் திருப்தியடைகிறேன் என்று அறிவாயாக.--

104 ''இந்த நாய்க்கு உயிர் இல்லையா? எல்லாப் பிராணிகளுக்கும் பசி என்பது ஒன்றுதான். அது ஊமை; நான் பேசுகிறேன். எனினும், பசியில் ஏதாவது பேதம் உண்டா
Gu]?--

105 ''பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாகõ இது எங்கும், என்றும், பிரமாணம் என்றும் அறிவாயாக.ஃஃ

106 இது அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்ச்சி; ஆயினும் போதனையோ ஆன்மீக பாஷை. ஸாயீயின் உபதேசபரமான திருவாய்மொழி இவ்வாறே; பிரேமையெனும் ரசத்தால் பரிபக்குவம் செய்யப்பட்டது.

107 மக்கள் அன்றாடம் பேசும் எளிய மொழியில் பேசியே ஆன்மீகத் தத்துவங்களை உபதேசித்தார் பாபா. யாருடைய தோஷத்தையும் (குறையையும்) ரகசியத்தையும் சுட்டிக்காட்டாது, ஆன்மீக போதனை அளித்து சிஷ்யர்களை மகிழ்வித்தார்.

108 பாபாவின் இந்த உபதேசத்தி­ருந்து லக்ஷ்மீ பாயீயின் தினப்படிச் சோளரொட்டி ஸேவை ஆரம்பித்தது. தினமும் பகல் வேளையில் சோளரொட்டி செய்து அதை உடைத்துப் பா­ல் ஊறவைத்துப் பிரேமையுடன் பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தார்.

109 பாபாவும், பிரேமையுடனும் பக்தியுடனும் அளிக்கப்பட்ட அந்தச் சோளரொட்டியைத் தினமும் சாப்பிட ஆரம்பித்தார். சில சமயங்களில் அது நேரத்துடன் வந்து சேராவிட்டால், பாபா சாப்பிடுவதற்கு எழுந்திருக்கமாட்டார்.

110 லக்ஷ்மீயின் சோளரொட்டி நேரம் தவறினால், தட்டுகளில் உணவு பரிமாறப்பட் டிருந்தாலும், சாப்பிடும் வேளை கடந்துவிட் டிருந்தாலும், பாபா ஒரு கவளம் உணவையும் வாயில் இடமாட்டார்.

111 தட்டுகளில் பரிமாறப்பட்ட உணவு ஆறிப்போகலாம்; சாப்பிட உட்கார்ந்தவர்கள் காத்திருக்கும்படி நேரலாம்; ஆனாலும் லக்ஷ்மீ பாயீயின் சோளரொட்டி வரும்வரை உணவு தொடப்படாது.

112 பிற்காலத்தில், தினமும் பிற்பகல் மூன்றரை மணியளவில் லக்ஷ்மீயின் கைகளால் செய்யப்பட்ட இடியாப்பம் வேண்டுமென்று பாபா கேட்பார். அவரருகிலேயே உட்கார்ந்து அதை உண்பார். இது சில நாள்களுக்கு நடந்தது.

113 பாபா அதில் சிறிதளவே உண்பார். மீதியை லக்ஷ்மீயின் மூலமாகவே ராதாகிருஷ்ண பாயீக்குக் கொடுத்தனுப்புவார். காரணம், ராதாகிருஷ்ண பாயீக்கு பாபா அருந்திய உணவில் மீதியை உண்பதில் பிரியம் அதிகம்.

114 பாபா தேகத்தை உதறிய விவரத்தைச் சொல்­க்கொண் டிருக்கும்போது சம்பந்தமில்லாத சோளரொட்டிபற்றிய வெறும்பேச்சு எதற்கு என்று கதைகேட்பவர்கள் நினைக்க வேண்டா. ஸாயீ எங்கும் நிறைந்தவர் என்பதற்கு நிதரிசனம் (எடுத்துக்காட்டு) இக் கிளைக்காதை.

115 கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகின் நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும், அவ்வாறே மேலுலகத்திலும் ஸாயீ நிரந்தரமாக வியாபித்திருக்கிறார். எவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவரோ, அவரே இந்த ஸாயீ.

116 சோளரொட்டிக் கதையின் சாராம்சம் இந்த ஒரு தத்துவமே. லக்ஷ்மீ பாயீபற்றிய இனிமையான இக் காதை தானாகவே என் மனத்தில் உதித்தது, கதைகேட்பவர்களின் நன்மைக்காகவே என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

117 லக்ஷ்மீ பாயீயின் ஸேவை மஹத்தானதுõ ஸாயீ அதை எப்படி மறக்கமுடியும்? அவர் அதை ஞாபகத்தில் வைத்திருந்தார் என்பதை நிதரிசனம் செய்யும் அற்புதத்தைச் சொல்கிறேன்; பயபக்தியுடன் கேளுங்கள்.

118 பிராணன் தொண்டைவரை வந்துவிட்டிருந்த போதிலும், சரீரத்தில் கொஞ்சமும் திராணி இல்லாதுபோன போதிலும், உயிர் பிரியும் நேரத்தில் பாபா தமது கைகளாலேயே லக்ஷ்மீ பாயீக்குத் தானம் கொடுத்தார்.

119 தம்முடைய பாக்கெட்டில் கையைவிட்டு முதல் தடவை ஐந்து ரூபாயும் இரண்டாவது தடவை நான்கு ரூபாயும் வெளியே எடுத்து லக்ஷ்மீ பாயீயின் கையில் வைத்தார். இதுவே பாபாவின் கடைசிச் செயல்õ

120 இச் செயல் நவவித பக்திபற்றி பாபா அளித்த சூசகமா? அல்லது, நவராத்திரிப் பண்டிகையில் செய்யப்படும் துர்க்கா பூஜையையொட்டி சிலங்கண் (விஜயதசமி) நாளன்று எல்லையைக் கடக்கும் சடங்கில் அளிக்கப்படும் தக்ஷிணையா?

121 அல்லது, ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் உத்தவருக்கு அளித்த உபதேசத்தில் விவரித்த, சிஷ்யர்களுக்குண்டான ஒன்பது ஒழுங்கு நெறிமுறைகளை ஞாபகப்படுத்தினாரா?

122 ஸ்ரீமத் பாகவதத்தில் 11 ஆவது காண்டத்தில் 10 ஆவது அத்தியாயத்தில் 6 ஆவது சுலோகத்தின் அற்புதத்தைப் பாருங்கள். இந்த சுலோகம் குருவிடமிருந்து சிஷ்யன் எவ்வாறு பயனடையவேண்டும் என்பதையும், எந்தெந்த ஒழுங்கு நெறிமுறைகளைக் கையாளவேண்டும் என்பதையும் விவரிக்கிறது.

123 இந்த சுலோகத்தின் முதல் அடியில் ஐந்து ஒழுங்கு நெறிமுறைகளும், இரண்டாவது அடியில் நான்கு ஒழுங்கு நெறிமுறைகளும், பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றன. பாபாவும் அதே நோக்கத்துடன் அந்தக் கிரமத்தையே அனுசரித்தார் என்று என் உள்மனம் சொல்கிறது.

124 சிஷ்யன், 1 கர்வமில்லாதவனாகவும் 2 பொறாமை இல்லாதவனாகவும் 3 சாமர்த்தியம் உள்ளவனாகவும் 4 மமதை இல்லாதவனாகவும் 5 திடமான அன்புள்ளவனாகவும்,--

125 6 அவசரப்படாதவனாகவும் 7 அர்த்தத்தை அறிய ஆவலுள்ளவனாகவும் 8 அசூயை (குறைபடும் இயல்பு-பிறர் செழிப்பு கண்டு ஏக்கம்/வெறுப்பு) இல்லாதவனாகவும் 9 வீண்பேச்சுப் பேசாதவனாகவும் இருந்துகொண்டு குருவை உபாசிக்கவேண்டும்.

126 ஸாயீநாதரின் நோக்கமும் இதுவாகவே இருந்திருக்க வேண்டும்; அதை இந்த ரூபத்தில் வெளிப்படுத்தினார். ஞானிகள் தங்களுடைய பக்தர்களின் நல்வாழ்வுக்காக எந்நேரமும் கருணை பொங்கும் இயல்புடையவர்கள் அல்லரோõ

127 லக்ஷ்மீ பாயீ, உணவுக்கும் உடைக்கும் நல்ல வசதி படைத்த பெண்மணி. அவருக்கு ஒன்பது ரூபாய் ஒரு பெரிய தொகை அன்று. தாமே அந்த அளவிற்கு தருமம் செய்யக்கூடியவர் அவர். ஆயினும் அவருக்கு அளிக்கப்பட்ட இந்த தானம் அபூர்வமானதன்றோõ

128 அவருடைய பாக்கியம் மிகச் சிறந்தது. அதனால்தான் அவருக்கு இவ்விதமான அற்புதம் நிகழ்ந்தது. ஸாயீயின் கரகமலங்களி­ருந்து நவரத்தினங்களுக்கு இணையான, ரூபாய் நாணயங்கள் ஒன்பதைப் பெற்றுக்கொண்டார்.

129 ஒன்பது ரூபாய் பணம் அவர் கைவழியாக எத்தனையோ தடவைகள் செலவாகியிருக்கும்; இனியும் பல தடவைகள் செலவாகும். ஆனால், இந்த ஒன்பது ரூபாய்1 இமாலயச் சிறப்புடையது; அவருடைய வாழ்நாள் முழுவதும் ஸாயீயை நினைவூட்டப்போகும் தானம் அன்றோõ

130 தேகத்தை விடுக்கும் நேரம் வந்துவிட்டது. ஆயினும், தம்முடைய நினைவு லக்ஷ்மீ பாயீக்கு மரணபரியந்தம் இருக்கவேண்டுமென்பதை மனத்தில் கொண்டு, முத­ல் ஐந்து ரூபாயும் பின்னர் நான்கு ரூபாயும் பாபா தானமாகக் கொடுத்தார்.

131 தமதருகில் இருந்தவர்களைச் சாப்பிடப் போகச் சொல்­, மனத்தளவில் தாம் தெளிவாகவும் உஷாராகவும் இருந்ததை பாபா வெளிப்படுத்தினார். ஆனாலும், ஓரிரு கிராமவாசிகள் அங்கேயே இருக்க விரும்பினர்.

132 நெருக்கமான நேரம் என்பதை அறிந்து, பிரேமை மிகுந்த கிராமவாசிகள் சிலர், தங்களை பாபாவிடமிருந்து அகன்று போகச் சொல்லக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தனர்.

133 ஆனால், உயிர் பிரியும் நேரத்தில் மோஹத்தில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று பயந்தவர்போல் பாபா விரைவாக அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டார்.

1. இந்த ரூபாய் நாணயங்கள் ஒன்பதை, சிர்டீக்குச் செல்லும் புனிதப் பயணிகள் தற்காலத்திலும் லக்ஷ்மீ பாயீயின் வீட்டில் காணலாம். வம்சாவளியினர் இவற்றைப் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர்.


134 உடலை உதறும் நேரம் நெருங்கிவிட்டது என்று அறிந்து, புட்டி, காகா, ஆகியவர்களிடம் பாபா சொன்னார், ''போங்கள்; வாடாவிற்குச் சென்று போஜனத்திற்குப் பிறகு வாருங்கள்.ஃஃ

135 சுற்றியிருந்தவர்களின் முகத்தில் பிரதிப­த்த சஞ்சலமும் கவலையும் பாபாவின் மனத்தைத் தடுமாறச் செய்தது போலும். அவர் எல்லாருக்கும் ஆணையிட்டார், ''போங்கள், போங்கள், போய்ச் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.ஃஃ

136 இவ்வாறாக, நிரந்தரமாக அவருடைய சங்கத்தை அனுபவித்தவர்களும், இரவுபகலாக அவருடன் இருந்த நண்பர்களும், பாபாவின் ஆணையை மீறமுடியாத நிலையில் மனம் குழம்பியவாறே அங்கிருந்து எழுந்து சென்றனர்.

137 பாபாவின் ஆணையை மீற அவர்கள் விரும்பவில்லை; அவருடைய சன்னிதியி­ருந்து அகலவும் விரும்பவில்லை. பாபாவின் மனத்தைப் புண்படுத்த விரும்பாது போஜனத்திற்காக வாடாவிற்குச் சென்றனர்.

138 பாபாவின் உடல்நிலை கவலைக்குரியதாக இருந்தபோது, சோறென்ன; நீரென்னõ அவர்களுடைய பிராணன் பாபாவிடமே இருந்தது; பிரிவைப்பற்றிய நினைவை அவர்களால் ஒருகணமும் சகித்துக்கொள்ள இயலவில்லை.

139 எப்படியோ போய், வாடாவில் சாப்பாட்டிற்கு அமர்ந்தனர். சாப்பிட்டுக்கொண் டிருந்தபோதே அவசர அழைப்பு வந்தது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஓடோடி வந்தனர். இருந்தபோதிலும், கடைசி சந்திப்பைக் கோட்டைவிட்டுவிட்டனர்õ

140 ஆயுளென்னும் எண்ணெய் தீர்ந்துவிட்டது; பிராணஜ்யோதி மங்கியது. அங்கே, பயாஜீ ஆப்பா கோதேவின் மார்பின்மேல் சாய்ந்தவாறு மீளாத்துயில்கொண்ட பூதவுடல் கிடந்தது.

141 படுக்கையில் படுத்தவாறோ தூக்கத்திலோ உயிர் பிரியவில்லை. ஆசனத்தில் அமைதியாக அமர்ந்துகொண்டு, தம்முடைய கைகளாலேயே தானம் கொடுத்த பிறகு பாபா தேகத்தை உதறினார்.

142 தம்முடைய மனோகதியை எவரும் அறியாதவாறு சட்டென்று தம் உடலை உதறினார்; முழுமுதற்பொருளுடன் ஐக்கியமாகிவிட்டார்.

143 ஞானிகள் மாயையின் சக்தியால் தங்களையே சிருஷ்டி செய்துகொண்டு அவதாரம் செய்கின்றனர். மக்களைத் துன்பத்தி­ருந்து கைதூக்கிவிடும் காரியம் முடிந்தவுடனே தோன்றாநிலையோடு ஒன்றிவிடுகின்றனர்.

144 ஒரு நடிகன் பல வேஷங்களில் நடிக்கலாம்; ஆனாலும் தான் யார் என்பதைப் பூரணமாக அறிந்திருக்கிறான். இவ்வாறிருக்க, தம்மிச்சையாக அவதாரம் செய்தவருக்கு மரணம் என்ன சங்கடம்?

145 உலகத்தின் க்ஷேமத்திற்காக அவதரித்தவர், வேலை முடிந்தவுடன் அவதாரத்தை முடித்துக்கொண்டார். அவரை எப்படி ஜனனத்தாலும் மரணத்தாலும் கட்டிப்போட முடியும்? அவர் லீலைக்காக மானிட உருவத்தை ஏற்றுக்கொண்டவர் அல்லரோ?

146 பர பிரம்மம் என்று பெருமை பெற்றவருக்கு முடிவு எப்படி சம்பவிக்கமுடியும்? 'என்னுடையது என்று எதுவும் இல்லைஃ என்ற அனுபவம் பெற்றவருக்கு இருப்பதோ இல்லாமற்போவதோ என்ன துன்பத்தை அளிக்கமுடியும்?

147 செயல்புரியும் உலகியல் வாழ்வில் ஈடுபட்டவர்போல் தோன்றினாலும், அவர் சிறிதளவும் செயலேதும் புரியவில்லை. 'நான்ஃ என்ற உணர்வை முழுவதும் இழந்துவிட்டதால், கர்மத்தில் அகர்மத்தைக் (செயல் புரிவதில் செயல் புரியாமையைக்) கண்டார் பாபா.

148 ''கர்மவினை அனுபவிக்காமல் அழியாது.ஃஃ கர்மவினைபற்றிய இந்த சூக்குமம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்ம ஞானம் பெற்றவருக்கு இதுபற்றிக் குழப்பம் ஏதும் இருக்கமுடியாது. ஏனெனில், அவர் எல்லா வஸ்துகளிலும் பிரம்மத்தையே பார்க்கிறார்.

149 செய­ன் பலன், செய­­ருந்தே விளைகிறது. துவைத பா(ஆஏஅ)வத்தின் (இரண்டுண்டு என்னும் கோட்பாட்டின்) இந்த நியதி பிரசித்தமானது. பிரம்மத்தை அறிந்தவர்கள் கிளிஞ்சலையும் வெள்ளியையும் சமமாகப் பார்ப்பதுபோல், இந்த நியதியையும் பிரம்மமாகவே கருதுகின்றனர்.

150 எல்லாருக்கும் கருணைகாட்டும் அன்னையான ஸாயீ, எப்படி மரணத்தின் பிடியில் சிக்கிக்கொண்டார்? கரிய இரவு, பகலை விழுங்கிய கதையாயிற்றேõ

151 ஒவ்வொரு மாதத்தின்1 வரையறையை மனத்தில் கொண்டு இந்த அத்தியாயத்தை இங்கு முடிப்போமாகõ மிக விஸ்தாரமாக்கிவிட்டால் கேட்பவர்கள் அயர்ந்துபோவார்கள்.

152 மஹாஸமாதிபற்றிய மற்ற விவரங்களைப் பின்னர்க் கிரமமாகக் கேட்கலாம். எவருடைய கிருபையால் யான் பேறுபெற்றவனாக ஆனேனோ, அந்த ஸமர்த்த ஸாயீயை ஹேமாட் சரணடைகிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'ஸ்ரீ ஸாயீநாத நிர்யாணம்ஃ என்னும் நாற்பத்திரண்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.