Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
அத்தியாயம் - 3939. கீதை சுலோகத்திற்கு விசேஷ விளக்கம் - ஸமாதி கோயில் நிர்மாணம்ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். 1 சிர்டீ ஒரு பாக்கியம் பெற்ற கிராமம். புண்ணியபாவனரான ஸ்ரீஸாயீ நிர்வாணம் (முக்தி) அடையும்வரை வசித்த துவாரகாமாயீ பவனம், மஹா பாக்கியம் பெற்ற ஸ்தானம் (இருப்பிடம்) அன்றோõ 2 சிர்டீயில் வாழ்ந்த மக்கள் அனைவரும் தன்னியர்கள். எக்காரணம்பற்றியோ அவர்களுக்காக ஸாயீ நெடுந்தூரம் வந்தார். சிர்டீ மக்களை அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டவர்களாகச் செய்துவிட்டார். 3 சிர்டீ ஆதியில் ஒரு குக்கிராமமாக இருந்தது. ஸாயீயின் சகவாசத்தால் மஹத்துவம் அடைந்தது. பின்னர் புனிதம் பெற்று க்ஷேத்திரமாக மாறியது. 4 சிர்டீவாழ் பெண்மணிகள் தன்னியர்கள் (எல்லாப் பேறுகளையும் பெற்றவர்கள்). அவர்களுடைய அனன்னியமான சிரத்தையால், மாவரைக்கும்போதும் உரல் தானியங்களைக் குற்றும்போதும் குளிக்கும்போதும் ஸாயீயின் பெருமையைப் பாடினர். 5 அவர்களுடைய பிரேமை பேறு பெற்றது. அவர்கள் பாடிய கீதங்கள் மிக உன்னதமானவை. ஈடிணையற்ற அந்தப் பாட்டுகளைக் கேட்டால் மனம் பற்றுகளிருந்து விடுபெறும். 6 கதைகேட்பவர்களின் ஆர்வத்தைத் தணிக்கும் வகையில் மனத்திற்கு விச்ராந்தி அளிக்கும் சில பாடல்களைக் கதையுடன் கலந்து தகுந்த சமயத்தில் அளிக்கிறேன். 7 ஸாயீ, நிஜாம் ராஜ்ஜியத்தில் சாலையோரத்திருந்த ஒரு மாமரத்தினடியில் காணப்பட்டார். பின்னர், சற்றும் எதிர்பாராதவிதமாக தூப்கேடாவிருந்து ஒரு கயாணகோஷ்டியுடன் சிர்டீக்கு வந்துசேர்ந்தார். 8 அந்த கிராமத்தைச் சேர்ந்த சாந்த்பாய் பாடீல் என்ற பெயர் கொண்ட புண்ணியவான்தான் முதன்முதலாக இந்தப் புதையலைக் கண்டுபிடித்தார். அவர்மூலம் மற்றவர்களும் ஸாயீதரிசனம் பெற்றனர். 9 பாடீல் குதிரையைத் தொலைத்தது, ஸாயீ அவருக்குப் புகைகுடிக்கச் சிலீம் கொடுத்தது, குதிரையைக் கண்டுபிடித்துக்கொடுத்தது, 10 சாந்த்பாய் பாடீன் மனைவியின் மருமகன் திருமணப் பிராயத்தை எட்டியது, மணமகள் சிர்டீயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது, கயாணகோஷ்டி மணமகளின் கிராமத்திற்கு வந்தது,-- 11 இந்த விவரங்களை ஏற்கெனவே கேட்டுவிட்டீர்கள் (5 ஆவது அத்தியாயம்). அது இந்த சமயத்தில் எனக்கு ஞாபகம் வந்தது; அவ்வளவே. அதை இங்கே மறுபடியும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. 12 சாந்த் பாடீல் என்னவோ, ஒரு நிமித்தகாரணமே. பக்தர்களை உத்தாரணம் செய்ய அத்தியந்தமான ஆர்வம் கொண்டதால் ஸாயீ பூலோகத்தில் அவதரித்தார். தம்மிச்சையாகவே சிர்டீக்கு வந்தார்õ 13 ஜடம் போன்ற மக்களையும் மூடர்களையும் பலவீனர்களையும் ஏழையெளியவர்களையும் கள்ளங்கபடமற்ற ஏதுமறியா ஜனங்களையும் பிறப்பால் விரதம், தவம், வைதீகச் சடங்குகள் ஆகியவற்றால் பயனடைய முடியாதவர்களையும் இந்த ஸாயீயைத் தவிர வேறு எவர் கைதூக்கிவிடுவார்? 14 பதினெட்டு வயதான இளைஞன் அந்தப் பருவத்திருந்தே தனிமையை நாடினான். இரவில் நிர்ப்பயமாக (பயமேயின்றி) எங்கும் படுத்து உறங்கினான். அவனுடைய கண்களுக்கு எல்லாமே ஈசுவரமயமாகத் தெரிந்தனõ 15 முன்னர் ஒரு பெரிய பள்ளம் இருந்த இடத்தில் கிராமமக்கள் குப்பைகளைக் கொட்டினர். பகலெல்லாம் எங்கெங்கோ அலைந்து திரிந்த பையன் இரவில் அங்கு உறங்கினான். 16 இவ்விதமாகப் பல ஆண்டுகள் கழிந்தன. அந்தப் பள்ளத்திற்கும் விடிவுகாலம் வந்தது. தீனதயாளரான ஸாயீயால் அவ்விடத்தில் ஒரு விசாலமான மாளிகை எழுந்தது. 17 முடிவில், அந்தப் பள்ளம் இருந்த இடமே ஸாயீயின் பூதவுடல் ஸமாதி செய்யப்பட்ட மூலஸ்தானம் ஆயிற்று, அதைத்தான் அவர் என்றும் உறையும் இடமாக ஏற்றுக்கொண்டார்; ஸமாதியும் கட்டப்பட்டது. 18 வணங்கியவர்களைப் பாக்கும் இந்த ஸமர்த்த ஸாயீதான் தம் பக்தர்களின் நலன் கருதி, கடத்தற்கரிய சம்சார சாகரத்தை பக்தர்கள் எளிதாகக் கடக்க உதவும் படகான தம்முடைய வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதியிருக்கிறார். 19 ''கடத்தற்கரிய பிறவிக்கடலைக் குருடர்களும் முடவர்களும் பக்த பரிவாரமும் எங்ஙனம் கடக்கப்போகின்றனர்?ஃஃ இந்த மனப்பூர்வமான ஆதங்கத்தால் உந்தப்பட்டு ஸாயீ அவ்வாறு செய்தார். 20 எல்லாரும் அவசியம் பிறவிக்கடலைக் கடந்தே ஆகவேண்டும். அதன் பொருட்டு நாம் அந்தக்கரண1 சுத்தம் பெறவேண்டும். இதற்கு மனத்தைத் தூய்மை செய்துகொள்வதே முக்கிய சாதனம். இறைவனிடம் பக்தியே அனைத்திற்கும் மூலம். 21 கேள்வி (காதால் கேட்டல்) இல்லாது பக்தி இல்லை. கேள்வி சகஜமாகவே குருவின்பால் அன்பைத் தூண்டுகிறது. அன்பிருந்து ஆன்மீகம் பிறக்கிறதுõ 22 ஸாயீயின் கதைகள் எண்ணற்றவை. அவையனைத்தையும் பாடினால், பெரியதான புராணம் ஆகிவிடும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்று சங்கற்பம் செய்துகொண் டேனெனினும், கதை கட்டுப்படாமல் விரிந்துகொண்டே போகிறது. 23 கேட்பவர்களின் உற்சாகம் எப்படிப் பெருகுகிறதோ அப்படியே கதைசொல்பவரின் ஆர்வமும். ஆகவே நாம் பரஸ்பரம் ஆவலைத் தணித்துக்கொண்டு உண்மையான ஆன்மீக முன்னேற்றம் அடைவோம். 24 இங்கு ஸாயீயே கப்பன் தலைவர். ஒருமுனைப்பட்ட கேள்வியே பயணக் கட்டணம். இக் கதையைப் பயபக்தியுடன் சிரத்தையாகக் கேட்பவர் தாமதமின்றி அக்கரை சேர்ந்துவிடுவார். 25 சென்ற அத்தியாயத்தில் ஹண்டி வர்ணனை சுருக்கமாகச் சொல்லப்பட்டது. தத்தாத்ரேய பக்தி வலுப்படுத்தப்பட்ட விவரமும் நைவேத்தியம் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட விவரமும் சொல்லப்பட்டன. 26 கதை சொல்லும் திட்டத்தில், ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அடுத்த அத்தியாயத்தின் விஷயம்பற்றிக் குறிப்பளிக்கப்படுவது அனைவருக்கும் தெரிந்ததே. 27 ஆனால், சென்ற அத்தியாயத்தை முடிக்கும் தறுவாயில், அடுத்துச் சொல்லவேண்டிய கதை எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை. ஆகவே, ஸாயீ எதை ஞாபகப்படுத்துகிறாரோ அதை எழுதலாம் என்று நினைத்தேன். 28 ஏற்கெனவே தெளிவாக அறிவித்தவாறு, ஸாயீயின் கிருபையால் எது ஞாபகப்படுத்தப்பட்டதோ அதை விவரிக்கிறேன். 29 ஆகவே, இடைஞ்சல்களைத் தூரமாகத் தள்ளிவைத்துவிட்டு சாந்தமான மனத்துடனும் முழுக்கவனத்துடனும் கேட்கும்படி கதைகேட்பவர்களைப் பிரார்த்தனை செய்கிறேன். உங்களுடைய மனம் ஆனந்தமடையும். 30 ஒருசமயம், சிறந்த பக்தரான நானா சாந்தோர்க்கர் மசூதியில் உட்கார்ந்துகொண்டு பாபாவின் பாதங்களைப் பிடித்துவிட்டுக்கொண்டே, ஸ்ரீமத் பகவத் கீதையின் சுலோகங்களை மெல்ய குரல் ஓதிக்கொண் டிருந்தார். 31 பாபாவின் பாதங்களைப் பிடித்துவிட்டுக்கொண்டே கீதையின் நான்காவது அத்தியாயத்தை மெல்ய குரல் ஓதிக்கொண் டிருந்தார். அப்பொழுது என்ன அற்புதம் நடந்ததென்று பார்க்கலாம்õ 32 நடந்தது, நடந்துகொண் டிருப்பது, நடக்கப்போவது, அனைத்தையும் அறிந்த ஸமர்த்த ஸாயீ, நானாவுக்கு கீதையின் அர்த்தத்தை விளக்கவேண்டுமென்று எண்ணம் கொண்டார். 33 கீதையில் 'ஞானகர்மசன்யாசயோகம்ஃ என்ற தலைப்பில் அமைந்த நான்காவது அத்தியாயத்தைத் தமக்குள்ளேயே நானா முணுமுணுத்துக்கொண் டிருந்ததை ஒரு சாக்குப்போக்காக உபயோகித்து பாபா அவரை ஒரு கேள்வி கேட்டார். 34 'ஓ பார்த்தனே, எல்லாச் செயல்களும் மொத்தமாக ஞானத்தில் முடிகின்றனஃ என்று முடியும் முப்பத்துமூன்றாவது சுலோகத்தை முடித்துவிட்டு, 'பணிவுடனும் வணக்கமாகவும் அறிவாயாகஃ என்று ஆரம்பிக்கும் முப்பத்துநான்காவது சுலோகத்தை நானா தொடர்ந்தார். 35 முப்பத்துநான்காவது சுலோகத்தில் நானாவின் பாராயணம் நின்றது. ஒரு கேள்வியைக் கேட்டு நானாவுக்கு போதனை அளிக்கவேண்டுமென்று பாபாவுக்குத் தோன்றியது. 36 பாபா கேட்டார், ''நானா, நீர் என்ன முணுமுணுக்கிறீர்? நீர் மெல்ய குரல் ஓதுவதைத் தெளிவாகவும் உரத்த குரலும் ஓதி என் காதுகளுக்குக் கேட்குமாறு செய்வீராக.ஃஃ 37 பாபாவின் ஆக்ஞையைப் பிரமாணமாக ஏற்றுக்கொண்டு நானா சுலோகம் (34 ஆவது) முழுவதையும் ஒப்பித்தார். அதன் பிறகு, அந்த சுலோகத்தின் பொருளைத் தெளிவாக விவரிக்கும்படி பாபா நானாவைக் கேட்டார். 38 மிகுந்த விநயத்துடன் கைகளைக் கூப்பிக்கொண்டு, அந்த சுலோகத்தின்மூலம் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் (அர்ஜுனனுக்கு) என்ன அறிவுரை தந்தார் என்பதை நானா மிக்க மகிழ்ச்சியுடன் விவரித்தார். 39 ஸாயீ-நானா உரையாடல் எல்லாருக்கும் நன்கு விளங்குமாறு கீதையிருந்து எடுத்து மூலசுலோகத்தைப் பதம் பதமாக அளிப்போமாக. 40 ஞானிகளின் மனோதர்மத்தையும் இக் கேள்வியின் சூக்குமத்தையும் ஐயம் திரிபின்றி எல்லாரும் புரிந்துகொள்ளும்படி தத்துவத்தை விளக்கும் முறையை நான் கையாளவேண்டும் என்பதை நன்கு உணர்கிறேன். 41 ''ஸம்ஸ்கிருத மொழி இயல்பாகவே கடினமானது. ஸாயீ பாபாவுக்கு அம்மொழி எப்படி சுலபமாகியது? எப்படி அவ்வளவு நுணுக்கமான கேள்வியொன்றைக் கேட்டார்? சாதுக்களின் ஞானம் அளவிடற்கரியதுõஃஃ என்று எல்லாரும் ஆச்சரியமடைந்தனர். 42 ''அவர் எப்பொழுது ஸம்ஸ்கிருதத்தை அத்தியயனம் செய்தார்? கீதையை எப்பொழுது வாசித்தார்? கீதையைக் கரைத்துக் குடித்தவரைப்போல் கேள்வி கேட்டாரே?ஃஃ 43 கேட்பவர்கள் தெளிவும் திருப்தியும் அடையுமாறு ஸ்ரீகிருஷ்ண பகவானின் திருவாய்மொழியான மூலசுலோகத்தை ஓரெழுத்தும் பிசகாமல் இங்கு அளிக்கிறேன். விளக்குவதற்கும் எளிதாக இருக்கும். 44 ''தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயாப் உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வதர்சினஹப்ப்ஃஃ (பணிந்தும், கேட்டும், பணிவிடை செய்தும் நீ அதை அறிக. உண்மையை யுணர்ந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்-சுவாமி சித்பவானந்தர் பொழிப்புரை) 45 இதுவே கீதையின் மூலசுலோகம். கீதைக்கு எத்தனையோ மஹான்கள் பாஷ்யம் (விரிவுரை) எழுதியிருக்கின்றனர். அனைவருமே இந்த சுலோகத்திற்கு வேறுபாடு ஏதுமின்றி ஒரேவிதமாகப் பதவுரை செய்திருக்கின்றனர். 46 நானாவும் கல்விகேள்விகளில் சிறந்தவர். கீதையின் வியாக்கியானங்கள் பலவற்றைப் பல ஆண்டுகள் ஆழமாகப் படித்தவர். சுலோகத்தின் பொருளைப் பதம் பிரித்து விளக்கினார். 47 சுலோகத்தைச் செய்யுள் உருவிருந்து வசனநடைக்குக் கவனமாகக் கொண்டு வந்து, மிக்க மரியாதையாகவும் பணிவுடனும் ரஸம் ததும்பும் இனிமையான குரல் அர்த்தம் சொல்லத் தயாரானார். 48 நானா சொன்னார், ''குருவின் பாதங்களில் பணிவுடன் நமஸ்காரம் செய்து அவருடைய சேவையில் வாழ்நாள் முழுவதையும் கழிக்கத் தயாராகி, மரியாதையுடன் அவரைக் கேள்வி கேட்பவனுக்கு ஞானிகள் தத்துவ விளக்கத்தை அளிக்கின்றனர்.-- 49 ''கிருபாமூர்த்தியான ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அன்புடன் கூறியதன் சாராம்சம் என்னவென்றால், 'குருவைத் தொழுவதும் குருசேவையுமே ஞானத்தைப் பெறும் மார்க்கங்களாகும்.-- 50 '''ஓ, அர்ஜுனாõ இந்த மார்க்கத்தில் நீ நடந்தால் தத்துவ தரிசனம் பெற்ற ஞானிகள் உனக்கு ஞானம் பெறும் வழியைக் காட்டுவர்.ஃ பாபா, நான் புரிந்துகொண்ட அர்த்தம் இதுவே.ஃஃ 51 ஆதிசங்கரர், ஆனந்தகிரி, சங்கரானந்தர், ஸ்ரீதரர், மதுசூதனர், நீலகண்டர்--இவர்கள் அனைவரும் தேவனின் உபதேசத்திற்கு இவ்வாறே வியாக்கியானம் செய்திருக்கின்றனர். 52 ஸமர்த்த ஸாயீ சுலோகத்தின் முதல் அடியின் அர்த்தத்தைச் சரியென்று ஒப்புக்கொண்டார். இரண்டாவது அடியைப்பற்றி ஸாயீ என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள். 53 அங்கிருந்த சகோரப் பக்ஷிகளான பக்தர்களும் ஸாயீயின் சந்திரவதனத்திருந்து பொழியவிருந்த அமிருதத்தைப் பருக 'ஆஃ வென்று வாயைத் திறந்துகொண் டிருந்தனர். (பாபா அருளிய விசேஷ விளக்கம் இங்கு ஆரம்பமாகிறது.) 54 பாபா சொன்னார், ''நானா, சுலோகத்தின் இரண்டாவது அடியைப் பூரணமாகப் புரிந்துகொள்ள மறுபடியும் முயற்சி செய்யும். 'ஞானம்ஃ என்னும் பதத்தின் முன்னால், தொக்கிநிற்கும்1 உயிரெழுத்தாகிய 'அஃ வைச் சேர்த்து அர்த்தத்தின் சூக்குமத்தைப் பாரும்.-- 55 ''நான் விபரீதமாகப் பேசுகிறேனென்றோ அர்த்தத்தை அனர்த்தமாக்குகிறேன் என்றோ நீர் நினைக்கவேண்டிய அவசியம் இல்லை. பழைய வியாக்கியானங்கள் எல்லாம் எப்படி அஸத்தியமாகும்?-- 56 '''தத்துவ தரிசனம் பெற்ற ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசம் செய்வர்ஃ என்று நீர் அர்த்தம் சொல்கிறீர். ஆனால், 'ஞானம்ஃ என்ற பதத்திற்குப் பதிலாக 'அஞ்ஞானம்ஃ என்ற பதத்தைப் பொருத்தினால் யதார்த்தமான அர்த்தம் வெளிப்படும்.-- 57 ''ஞானம் என்பது பேச்சுக்குரிய விஷயமன்று. அப்படியிருக்க, அதை உபதேசம் செய்வதெப்படி? ஆகவே ஞானத்தின் எதிர்மறை வார்த்தையை எடுத்துக்கொண்டு சுலோகத்திற்கு அர்த்தம் செய்துபாரும்.-- 58 ''ஞானம் என்ற சொல்லைப் பொருத்தி நீர் சொன்ன அர்த்தத்தை நான் கேட்டேன். ஆனால், அது இருக்கும் இடத்தில் அஞ்ஞானம் என்ற சொல்லைப் பொருத்தி அர்த்தம் பார்ப்பதில் நஷ்டமென்ன? அஞ்ஞானம் பேச்சிற்குரிய விஷயமாகிறது. ஞானம் இயல்பால் பேச்சிற்கு அப்பாற்பட்டதன்றோ?-- 59 ''கர்ப்பத்திருக்கும் சிசுவைப் பனிக்குடமும், முகம் பார்க்கும் கண்ணாடியைத் தூசியும், நெருப்பைச் சாம்பலும் மூடியிருக்கின்றன அல்லவோ? அதுபோலவே ஞானத்தை அஞ்ஞானம் மூடியிருக்கிறது.-- 60 ''பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கீதையிலேயே வேறிடங்களில் ஞானத்தை அஞ்ஞானம் மூடியிருக்கிறது எனச் சொல்யிருக்கிறார். ஆகவே அஞ்ஞானத்தை எடுத்துவிட்டால், ஞானம் இயல்பாகவே பிரகாசிக்கும்.-- 61 ''ஞானம் சுயமாகவே நிறைவுபெற்றதாயினும், பாசி மூடிய சுத்தமான நீர் போன்று இருக்கிறது. பாசியை அகற்றும் விழிப்புணர்வு பெற்றவனே சுத்தநீரைப் பெறுகிறான்.-- 62 ''இது சூரிய, சந்திர கிரஹணங்களைப் போன்றது. அவையென்னவோ எப்பொழுதும் பிரகாசித்துக்கொண் டிருக்கின்றன. ராஹுவும் கேதுவும் அவற்றின் பாதையில் குறுக்கிட்டு நம்முடைய பார்வையை மறைக்கின்றன.-- 63 ''சூரியனுக்கும் சந்திரனுக்கும் எக் கெடுதலும் ஏற்படுவதில்லை. கெடுவது நம்முடைய பார்க்கும் சக்தியே. அதுபோலவே, ஞானமும் எந்த உபாதியும் இன்றித் தானிருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு ஒளிர்கிறது.-- 64 ''கண்களின் பார்க்கும் சக்தி ஞானம். கண்களில் வளரும் புரை அஞ்ஞானம். அதை அவசியம் எடுத்துவிடவேண்டும்.-- 65 ''கையின் திறமையால் புரையையோ திரையையோ விலக்கித் தூர எறிந்து, பார்க்கும் சக்தியைத் திரும்பப் பெறவேண்டும். அஞ்ஞான இருளை விலக்கவேண்டும்.-- 66 ''இவ்வுலகில் கண்களால் பார்த்தறிவதனைத்தும் விவரிக்கமுடியாத மாயையால் நிரம்பியிருக்கிறது. மாயை அனாதி; அவித்யை; வெளிப்படாதது. இது, இதுவே அஞ்ஞானத்தின் விளையாட்டுõ-- 67 ''ஞானம் உணர்வுபூர்வமானது; உபதேசிக்கக்கூடிய விஷயம் அன்று. குருவைத் தொழுவதும் அவருக்கு சேவை செய்வதும் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டு விளக்கம் பெறுவதும் குருவின் கிருபையைப் பெறும் சாதனங்கள்.-- 68 ''உலகை ஸத்தியம் என்று நினைப்பது பெரிய பிரமை. இதுவே முதலாவதாக எடுத்தெறியப்படவேண்டிய, ஞானத்தை மூடியிருக்கும் இருள். அப்பொழுதுதான் பேரறிவாகிய முழுமுதற்பொருள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும், -- 69 ''உலகவாழ்வின் விதை அஞ்ஞானம். குருவின் கிருபையாகிய மையைக் கண்களில் இட்டுக்கொண்டால் கண்களை மூடியிருக்கும் மாயையாகிய திரை விலகும். சுபாவமான ஞானம் எஞ்சி நிற்கும்.-- 70 ''ஞானம் என்பது அடைய வேண்டிய பொருளன்று. அது ஏற்கெனவே அடையப்பட்டுப் பிரகாசித்துக்கொண்டு விளங்குகிறது. வழியிருக்கும் தடங்கல் அஞ்ஞானமே.-- 71 ''இறைவனையும் பக்தர்களையும் வெவ்வேறாகக் கருதுவது அஞ்ஞானத்தின் மூலம். இந்த அஞ்ஞானத்தை எடுத்தெறிந்துவிட்டால் எஞ்சியிருப்பது பூரணஞானம்.-- 72 ''பழுதையில் பாம்பு தெரிவது அஞ்ஞானத்தின் தூய உதாரணம். உண்மையில் அப் பொருள் என்னவென்று அறிந்துகொள்வது அஞ்ஞானத்தை விலக்கிவிடுகிறது. எஞ்சி நிற்பது அப் பொருள் பழுதையென்னும் ஞானமே.-- 73 ''உள்ளே இருப்பது பொன்; ஆனால், அது அழுக்கால் மூடப்பட்டிருக்கிறது. அழுக்கின் உள்ளே பொன் ஜொத்துக்கொண் டிருக்கிறது. ஆனால், அதை வெளிக்கொண்டுவர நெருப்பு தேவைப்படுகிறது.-- 74 ''தேகம் ஜனனமாவது மாயாமூலம். தேகத்தின் ஓட்டம் விதிவசப்பட்டது. வாழ்க்கையின் இரட்டைச் சுழல்களும் (இன்பம்/துன்பம்) ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டவை. ஆகவே, தேகாபிமானம் அஞ்ஞானம்.-- 75 ''தேகாபிமானத்தைத் துறந்தவர்களுக்கு சுகமும் இல்லை, துக்கமும் இல்லை. 'நான்ஃ என்ற நினைவின் சுழல்கள் முற்றும் அடங்கிய பிறகுதான் அஞ்ஞானம் விலகும்.-- 76 ''மனிதன் தன் சுயரூபத்தை அறியாமருப்பதே மாயையின் ஜன்மஸ்தானம் (பிறப்பிடம்). குருவருளால் மாயை விலக்கப்படும்போது இயல்பாகவே சுயரூபஞானம் வெளிப்படுகிறது.-- 77 ''இறைவனிடத்தில் பக்தியின்றி இதர சாதனைகளில் சிரமப்படுவதில் அர்த்தம் என்ன இருக்கிறது? படைக்கும் கடவுளான பிரம்மதேவரும் மாயையால் ஆளப்படுபவரே. அவருக்கும் பக்திதான் விடிமோட்சம்õ-- 78 ''பிரம்மலோகத்தை அடைந்தபின்னரும், பக்தியின்றி முக்தியில்லைõ அங்கே சென்றபிறகும் பகவானின்மீது பக்தி இல்லாமற்போனால், மறுபடியும் மனிதன் ஜனனமரணச் சுழல் மாட்டிக்கொள்கிறான்.-- 79 ''ஆகவே, மாயையை விரட்டுவதற்கான ஒரே உபாயம் இறைவனைத் தொழுவதே. இறைவனைத் தொழுபவருக்கு வீழ்ச்சியென்பதே இல்லை; பிறவி பந்தமும் இல்லை.-- 80 ''மாயை ஒரு பிரமை என்று ஜனங்கள் சொல்கின்றனர். ஆனால், மாயை, ஞானிகளையும் ஒவ்வொரு படியிலும் ஏமாற்றவல்ல சூனியக்காரி. மாறாக, இறையடியார்களோ, அவளை ஒவ்வொரு சொடக்குக்கும் நடனமாடவைக்கின்றனர்õ-- 81 ''பண்டிதர்களே ஏமாந்துபோகும் சந்தர்ப்பங்களிலும் எளிய பக்தர்கள் நிலைகுலையாது நிற்கின்றனர். ஏனெனில், அவர்கள் எப்பொழுதும் ஹரிபாதங்களில் மூழ்கியிருக்கின்றனர். பண்டிதர்களோ வித்யாகர்வத்தால் தோல்வியுறுகின்றனர்.-- 82 ''ஆகவே, மாயையைக் கடப்பதற்கு ஸத்குருவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும். அவரிடம் அனன்னியமாக சரணடைந்துவிடும். உலகவாழ்வின் பயங்கள் உடனே மறைந்துபோகும்.-- 83 ''மரணம் தவிர்க்கமுடியாதது; அது வரும்போது வரட்டும். ஆனால், ஹரியின் நினைவை விட்டுவிடாதீர். உடன் இந்திரியங்கள் வர்ணாசிரம தர்மத்தின்படி (குலம்-வாழ்க்கைப்படிநிலை விதிகளின்படி) செயல்படட்டும். மனம் மட்டும் ஹரிபாதங்களில் மூழ்கியிருக்கட்டும்.-- 84 ''குதிரைகளைத் தேரில் பூட்டியிருப்பதுபோலவே சரீரம் இந்திரியங்களால் பூட்டப்பட்டிருக்கிறது. திடமான லகான்களின்மூலம் புத்தியால் இந்தத் தேர் செலுத்தப்படுகிறது.-- 85 ''மனம் சங்கற்ப விகற்பங்களால் நிறைந்து சுயேச்சையாக எங்கெங்கோ திரிகிறது. புத்தியே லகான்களைப் பிடித்திழுத்து மனத்தை அடக்குகிறது.-- 86 ''தேரோட்டுபவன் திறமைசாயாக இருக்கும்போது தேரில் அமர்ந்திருப்பவர் ஏன் சஞ்சலப்பட வேண்டும்? உலக விவகாரங்களை அமைதியான மனத்துடன் நடத்த வேண்டியதுதானேõ-- 87 ''தேகத்தின் நடத்தையை மேற்பார்வை செய்யவேண்டியது புத்தி செய்யவேண்டிய வேலைதான். மனம் இதற்குப் பழகிவிட்டால் எல்லா முயற்சிகளும் விவகாரங்களும் நற்பலன்களை அளிக்கும்.-- 88 ''கேள்வி, தொடுமுணர்வு, பார்வை போன்ற விஷயங்களை (ஐம்புல ருசிகளை) இந்திரியங்கள் நாடும்போது வீணாகச் சக்தியிழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு படியிலும், விழுந்துவிடுவோமோ என்ற பயமும் ஏற்படுகிறது.-- 89 ''ஐம்புலன்களால் தேடும் சுகங்கள் அனைத்தும் கடைசியில் சுகமின்மையில் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. அஞ்ஞானம் பரம துக்கம்õ-- 90 ''செவி இனிமையில் (வேடன் ஊதும் குழல்) மயங்கும் மான், கடைசியில் தன் உயிரை இழக்கிறது. யானை தொடுமுணர்வு (சிற்றின்ப) சுகத்தில் மயங்கி மாட்டிக்கொண்டு அங்குசத்தின் குத்தலை அனுபவிக்கிறது.-- 91 ''ஒளியைக் கண்டு மயங்கும் விட்டில் பூச்சி நெருப்பில் எரிந்துபோகிறது. நாக்கின் சுவைக்கு அடிமையாகும் மீன் உடனே உயிரை இழக்கிறது.-- 92 ''வாசனையால் கவர்ந்திழுக்கப்படும் வண்டு தாமாரையினுள்ளே மாட்டிக்கொள்கிறது. ஒவ்வொரு புலனுமே இவ்வாறு பயங்கரமான விளைவை உண்டாக்கும்போது, ஐம்புலன்களும் ஒன்றுசேர்ந்தால் எப்படிப்பட்ட பயங்கரமான விளைவுகளை உண்டாக்கும்?-- 93 ''மேற்கூறியவையோ மிருகங்களும் பட்சிகளும் நீர்வாழ்ப் பிராணிகளுமே. இவற்றின் துக்கநிலையைத் திரும்பத் திரும்பப் பார்த்தபிறகும் விவேகமுள்ள மனிதன் ஐம்புலன்களின் பின்னால் ஓடவேண்டுமாõ ஜயகோõ இதுவின்றி வேறு எது அஞ்ஞானம்?-- 94 ''அஞ்ஞானத்தை நாசம் செய்து புலனின்பங்களுக்குக் கடுமுகம் காட்டினால், குழப்பமடைந்த மனம் மாயையிருந்து விடுபடும். ஜீவன் ஞான சொரூபத்தை நோக்கித் திரும்பும்; அளவிடமுடியாத சுகம் கிடைக்கும்.-- 95 ''இதயத்தால் ஹரி-குரு சிந்தனையைச் செய்யும். காதுகளால் அவருடைய சரித்திரத்தைக் கேளும். மனத்தால் இடைவிடாது அவருடைய உருவத்தை தியானம் செய்யும். நாக்கால் நாமஸ்மரணம் செய்யும்.-- 96 ''ஹரி-குருவின் கிராமத்திற்குக் கால்களால் நடந்து செல்லும். அர்ச்சனை செய்யப்பட்ட மலர்களின் நறுமணத்தை மூக்கால் நுகர்ந்து பாரும். இரு கைகளையும் கூப்பி அவருடைய பாதங்களுக்கு வந்தனம் செய்யும். கண்களால் அவரை தரிசனம் செய்யும்.-- 97 ''இவ்விதமாக ஐம்புலன்களின் நாட்டங்களும் பிரீதியுடன் அவரை நோக்கிச் செலுத்தப்படும்போது பக்தர்களின் நிலை பெரும்பேறு பெறுகிறது. இது கடவுள்-பக்தி இல்லையெனில் வேறு எது கடவுள்-பக்திõ-- 98 ''சாராம்சம் என்னவென்றால், அஞ்ஞானத்தை வேருடன் பிடுங்கி எறிந்துவிட்டால் எஞ்சியிருப்பது தன்னிறைவு பெற்ற ஞானமேõ ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இந்த சுலோகத்தின்மூலம் குறிப்பால் உணர்த்திய அறிவுரை இதுவே.ஃஃ (பாபா அளித்த விசேஷ விளக்கம் இங்கு முடிகிறது.) 99 இயல்பாகவே நானா அடக்கம் மிகுந்தவர். இந்தச் சிறப்புமிக்க வியாக்கியானத்தைக் கேட்டவுடன் பாபாவின் பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு இருகைகளையும் கூப்பிக்கொண்டார். 100 பிறகு, சிரத்தையுடனும் நிட்டையுடனும் பிரார்த்தனை செய்தார், ''பாபா, என்னுடைய அஞ்ஞானத்தை விலக்குங்கள்; யதார்த்தமான கல்வியை அளித்து என்னுடைய கெட்ட அகம்பாவத்தை ஒழித்துக்கட்டுங்கள்.-- 101 ''வெளித்தோற்றத்திற்கு சாத்விகனைப்போல் நடிப்பதில் பிரியம் கொண்டு உள்ளுக்குள் அகண்டமான விகற்பங்களை வைத்துக்கொண்டு ஒரு கணமும் அவமானத்தைப் பொறுத்துக்கொள்ளச் சக்தியில்லாத வாழ்க்கை -- இது அஞ்ஞானமில்லாமல் வேறென்ன?-- 102 ''உள்ளுக்குள்ளே கௌரவத்தையும் புகழையும் நாடுதல், காமமும் குரோதமும் உள்ளே பொங்கிக்கொண் டிருக்கும்போது வெளிப்பார்வைக்குத் தியானத்தில் மூழ்கியவன்போல் நடித்தல் -- இது அஞ்ஞானமில்லாமல் வேறென்ன?-- 103 ''உள்ளே ஆத்ம நஷ்டத்தைத் தரும் செயல்கள் நிரம்பியிருப்பதால், நற்செயல்களுக்கும் ஆத்மவிசாரத்திற்கும் மனத்தில் இடமில்லாத ஒழுக்கமற்ற வாழ்க்கை, வெளியுலகத்திற்குப் பிரம்ம நிட்டையுள்ளவன்போல் நடிப்பு -- இது சந்தேகத்துக்கு இடமில்லாத அஞ்ஞானம் அன்றோ?-- 104 ''பாபா, கிருபையால் கனக்கும் மேகமாகிய தேவரீர் தங்களுடைய அருள்மழையைப் பொழிந்து என்னுடைய அஞ்ஞானத் தீயை அணைத்துவிடுங்கள். நான் அவ்விதம், அவ்விதந்தான் தன்னியனாவேன்õ-- 105 ''எனக்கு ஞானத்தைப்பற்றிய உபநியாசம் தேவையில்லை. என்னுடைய இமாலய அஞ்ஞானத்தை அழித்து என்னைக் கிருபையுடன் நோக்குங்கள். அந்தக் கடைக்கண் பார்வையில்தான் என்னுடைய சுகமும் பூரணமான திருப்தியும் இருக்கின்றன.ஃஃ 106 ஸாயீ, பிரேமையும் கருணையும் நிரம்பியவர். நானாவை நிமித்தமாக வைத்து உங்களுக்கும் எனக்கும் எல்லாருக்கும் கீதையின் விசேஷ அர்த்தத்தை அளித்தார். 107 கீதை பகவானின் திருவாய்மொழி; ஆகவே, அது முக்காலத்திற்கும் பிரமாணமான சாஸ்திரம். அதை ஒருபோதும் லேசாக எடுத்துக்கொள்ளலாகாது. 108 உலகியல் வாழ்வில் மூழ்கிப்போனவர்களுக்கும் ஜீவன்முக்தர்களுக்கும்1 இருவகையினருக்குமே சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பது தேவையில்லை. சாஸ்திரங்கள் முமுக்ஷுகளுக்காகவே (முக்தியை நாடுபவர்களுக்காகவே) உண்டாக்கப்பட் டிருக்கின்றன. 109 ''உலகவிஷய பாசங்களால் பிணைக்கப்பட் டிருக்கிறேனே; எப்பொழுது நான் அவற்றிருந்து விடுதலை பெறுவேன்?ஃஃ என்று சொல்த் துடிக்கும் முமுக்ஷுகளைக் கரையேற்றுவதற்காகவே சாஸ்திரங்கள் ஏற்பட்டன. 110 அவ்வகையான உண்மையான பக்தரைக் கண்டதும் ஞானியர் இரக்கத்தால் உந்தப்பட்டு ஏதாவதொரு சாக்குப்போக்கைக் கண்டுபிடித்து அவருக்கு சுலபமாக உபதேசம் செய்வர். 111 இறைவனும் குருவும் பக்தனுடைய ஆளுமையில் இருக்கின்றனர். பக்தனுடைய மங்களத்தையே சிந்தையிற்கொண்டு அவனுடைய சங்கடங்களையெல்லாம் தம் தலைமேல் ஏற்றுக்கொள்கின்றனர். 112 ஸாயீயின் விசித்திரமான செயல்முறைபற்றிய கதை இன்னொன்றை இப்பொழுது சுருக்கமாகச் சொல்கிறேன். எவரும் அறியாதவாறு ஒரு பெரிய நிர்மாணத் திட்டத்தை ஆரம்பித்துவைத்தார் ஸாயீõ 113 வேலை சிறியதோ, பெரியதோ, காரணம் எப்பொழுதுமே சொல்லப்படவில்லை. வேலை மாத்திரம் கொஞ்சங்கொஞ்சமாக முன்னேறும். ஒரு வார்த்தையும் யாருக்கும் சொல்லப்படவில்லை. 114 திட்டம் இயல்பாக நேர்ந்ததுபோல் ஆரம்பிக்கப்படும். திட்டத்தின் மூலகாரணமோ பெயரோ எவருக்கும் தெரியாது. அதற்கு நேர்மாறாக, எல்லார் மனத்திலும் சம்பந்தமேயில்லாத காரணம் பதியவைக்கப்படும். 115 ''வாய்ப்பேச்சு வீரன் எதைச் சாதிப்பான்? வெறும் கர்ஜனை செய்யும் மேகம் என்ன மழையைக் கொடுக்கும்?ஃஃ இப் பழமொழிக்கு நேரிடை அனுபவத்தை அளிப்பதுபோலவே பாபா செயல்பட்டார் என்பதில் சந்தேகமேயில்லை. 116 பாபாவைப் போன்ற அவதார புருஷர்கள் மக்களுக்கு நன்மை விளைவிக்கவே தோன்றுகிறார்கள். அவர்கள் விரும்பிய காரியம் முடிந்தவுடன் கடைசியில் உருவமில்லாத நிலையில் ஒன்றிவிடுகின்றனர். 117 ஆனால் நாமோ, ஏன் பிறந்தோம்?- எங்கிருந்து வந்தோம்?- எங்கே செல்கிறோம்?- பிறவிக்கு மூலகாரணம் என்ன?- பிறவியின் பிரயோஜனம் என்ன?- என்பதையெல்லாம் அறியமாட்டோம். 118 விரும்பியதுபோல் வாழ்க்கை நடத்துகிறோம். இந்திரியங்களெல்லாம் சக்தியிழந்து போகின்றன. அந்நிலையிலும் ஒரு நல்ல எண்ணம் தோன்றுவதில்லை. என்றோ ஒருநாள் மரணம் வருகிறது. 119 அன்னை, தந்தை, மனைவி, மக்கள், உடன் பிறந்தவர்கள், இஷ்டமித்திர பந்துக்கள் ஆகியவர்கள் இறந்துபோவதைக் கண்களால் பார்த்தபிறகும் நமக்கு மனத்தில் நல்ல சிந்தனைகள் தோன்றுவதில்லை. 120 ஆனால், சாதுக்களும் ஞானிகளும் இவ்வாறல்லர். அவர்கள் தங்களுடைய அந்திமகாலம் எப்பொழுது என்பதை நன்கு அறிந்தவர்கள். கடைசிவரை ஒருமுக மனம் பெற்றவர்கள். நிர்வாண (முக்தி) நேரத்தையும் அறிந்தவர்கள். 121 தேகத்துடன் வாழும்போது பக்தர்களுக்காகப் பிரீதியுடன் உழைப்பால் உடலைத் தேய்க்கின்றனர். தேகவியோகம் அடைந்த பிறகும் தேகம் விழுந்த இடத்தை பக்தர்களைக் கைதூக்கிவிடுவதற்காக உபயோகிக்கின்றனர். 122 இவ்வாறாக, சில ஞானிகள் தேகவியோகம் அடையுமுன்பே தங்கள் ஸமாதியைக் கட்டும்படி செய்கின்றனர். காலம் வரும்போது, தாங்கள் விரும்பிய இடத்திலேயே தங்கள் உடல் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம். 123 பாபாவும் அவ்வாறே செய்தார். ஆனால், அது யாருக்கும் அப்பொழுது தெரியாது. தம்முடைய ஸமாதி கோயிலைக் கட்டிக்கொண்டார். அவருடைய லீலை அற்புதமானதுõ 124 பாபுஸாஹேப் புட்டி என்ற பெயர் கொண்டவர் நாக்பூரைச் சேர்ந்த கோடீசுவரர். பாபா அவருடைய கைகளால் தம்முடைய நினைவுச் சின்னத்தை எழுப்பிக்கொண்டார். 125 பாபுஸாஹேப் ஒரு பரமபக்தர். ஸாயீ பாதங்களில் சதா மூழ்கியவர். தம் பரிவாரத்துடன் சிர்டீக்கு வந்து பாபாவுக்கு சேவை செய்வதற்காக அங்கேயே தங்கினார். 126 ஸாயீபாதங்களின் மீதிருந்த அன்பினால் திரும்பத் திரும்ப சிர்டீக்கு வந்து தங்கினார். ஒரு காலகட்டத்தில், சிர்டீயிலேயே நிரந்தரமாக வசிக்கவேண்டுமென்று விரும்பினார். 127 ஒர் இடத்தை விலைக்கு வாங்கி அங்கு ஒரு சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டு சுதந்திரமாக வாழவேண்டுமென்று நினைத்தார். 128 இன்று நாம் பார்க்கும் ஸமாதி மந்திர் (கோயில்) என்னும் பெரிய விருட்சத்திற்கு அப்பொழுதுதான் விதை விதைக்கப்பட்டது. ஸாயீமஹராஜுக்குப் பக்தர்களின்பால் இருந்த அன்பின் நினைவுச் சின்னமாக ஸமாதி கோயில் விளங்குகிறது. 129 இந்த வேலை எவ்வழியாக ஆரம்பிக்கப்பட்டது? எப்படிக் கொஞ்சங்கொஞ்சமாக எழுப்பப்பட்டது? எவ்வாறு தற்பொழுது நாம் பார்க்கும் பரிமாணத்திற்கு வந்தது?-- முழு விருத்தாந்தத்தையும் இப்பொழுது கேளுங்கள். 130 சிர்டீயில் சிறிய வீடொன்றைக் கட்டவேண்டுமென்ற சிந்தனை எழுந்தபோதே, தீக்ஷித் வாடா மாடியில் படுத்து உறங்கிக்கொண் டிருந்தபோது பாபுஸாஹேப் புட்டிக்கு ஒரு சுவாரசியமான காட்சி கிடைத்தது. 131 மாதவராவும் அப்பொழுது அங்கு உறங்கிக்கொண் டிருந்தார். அவருக்கும் அதே காட்சி தோன்றியது. இருவரும் பெருவியப்படைந்தனர். 132 ''உம்முடைய வாடாவை நிச்சயமாகக் கட்டும்; தேவாலயத்தையும் உள்ளடக்கிக் கட்டும்ஃஃ என்று பாபா ஆணையிடுவதுபோல் பாபுஸாஹேப் புட்டி கனவொன்று கண்டார். 133 இந்தக் காட்சியைக் கனவில் கண்டவுடன் பாபுஸாஹேப் விழித்துக்கொண்டார். ஆரம்பத்திருந்து கனவை விரிவாக ஞாபகப்படுத்திக்கொள்வதற்காகப் படுக்கையிலேயே அரைவிழிப்பு நிலையில் படுத்திருந்தார். 134 இங்கு இது இவ்வாறு நடந்துகொண் டிருந்தபொழுது, மாதவராவ் திடீரென்று அழும் சத்தம் கேட்டது. புட்டி அவரை எழுப்ப முயன்றபோது, நித்திரை முழுவதுமாகக் கலைந்தது. 135 மாதவராவை, ''நீர் ஏன் அழுதீர்?ஃஃ என்று புட்டி கேட்டபோது, அவர் பதில் கூறினார், ''ஸ்ரீஸாயீயின் அன்பு ததும்பிய வார்த்தைகளைக் கேட்டவுடன் நான் பிரேமாவேசம் கொண்டேன்.-- 136 ''எனக்குத் தொண்டையை அடைத்தது. கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருகியது. என்னுடைய இதயத்தில் பொங்கிய அன்பு எனக்குக் கட்டுப்படாமல் அழுகையாக வெடித்தது.-- 137 ''பாபா என்னருகில் வந்து தெளிவாக ஆணையிட்டார், 'வாடாவும் தேவாலயமும் திடமான உருவம் பெறட்டும். நான் எல்லோருடைய அபீஷ்டங்களையும் (தீவிரமான விருப்பங்களையும்) நிறைவேற்றுகிறேன்.ஃஃஃ 138 இருவரும் ஒரேவிதமான கனவுக் காட்சி பெற்றதுபற்றி பாபுஸாஹேப் மனம் வியந்தார். மனத்திருந்த சந்தேகம் விலகியது. வேலையை ஆரம்பித்துவிடுவது என்று தீர்மானம் செய்தார். 139 புட்டி, தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே பணக்காரர்õ கோயிலுடன் வாடா கட்டுவதற்குண்டான வசதி படைத்திருந்தார். மாதவராவுக்கு நடுத்தர வசதிதான் இருந்தது. ஆயினும் இருவருக்கும் ஒரேவிதமான காட்சி கிடைத்தது. 140 பரஸ்பரம் கனவுக் காட்சிகள் ஒத்துப்போயின. இருவருமே பரமானந்தத்தால் நிறைந்தனர். கட்டடத்திற்கு ஒரு வரைபடம் தயாரித்தனர். இந்த வரைபடத்தைக் காகா (ஹரி ஸீதாராம் தீக்ஷிதர்) ஆமோதித்தார். 141 அடுத்த நாள் காலையில் இம் மூவரும் பாபாவுடன் இருந்தபோது எப்பொழுதும்போல் பாபா சாமாவின் முகத்தைப் பிரேமையுடன் உற்றுப்பார்த்தார். 142 அப்பொழுது சாமா கேட்டார், ''ஓ, தேவாõ இதென்ன உம்முடைய புரிந்துகொள்ளமுடியாத விளையாட்டுõ எங்களை நிம்மதியாகத் தூங்கவும் விடமாட்டேன் என்கிறீர்கள். தூக்கத்திலும் எங்களை உணர்ச்சிவசப்படுத்தி அழவைக்கிறீர்கள்.ஃஃ 143 இதைக் கேட்டவுடனே பாபா தம் காதுகளைக் கைகளால் மூடிக்கொண்டு, ''யார் என்ன சொன்னாலும் சரி, நாம் உம்மிடத்திற்கு வந்திருந்தோம்ஃஃ என்று சொன்னார். 144 பிறகு, ஏற்கெனவே விவரிக்கப்பட்ட யோசனை-வரைபடம் பாபாவின் முன்னால் வைக்கப்பட்டது. கோயிலை உள்ளடக்கி வீட்டைக் கட்டும் யோசனைக்கு பாபா உடனே அனுமதியளித்தார். 145 மாதவராவ் வரிந்துகட்டிக்கொண்டு செயல் இறங்கினார். நிலவறையும் முதல் தளமும் அவருடைய நேரடி மேற்பார்வையில் கட்டப்பட்டன. கிணறும் அவருடைய கைகளால் கட்டப்பட்டதுõ கட்டுமான வேலை இதுவரை முன்னேறியது. 146 லெண்டிக்குப் போகும்போதும் திரும்பிவரும்போதும் கதவுகளும், ஜன்னல்களும் பொருத்தப்படும்போதும் பாபா ஆர்வத்துடன் கட்டுமான வேலையின் முன்னேற்றத்தைக் கவனிப்பார். 147 சுட்டுவிரலைத் தூக்கி, ''இங்கே ஒரு கதவைப் பொருத்து; அங்கே ஒரு ஜன்னல் வை. இங்கே கிழக்குப் பக்கமாக ஒரு நீளமான கூடத்தைக் கட்டு. அது கட்டடத்தின் அழகை மேம்படுத்தும்ஃஃ என்று யோசனைகள் கூறினார். 148 பின்னர், காரியகாரண நிமித்தமாக, பாபுஸாஹேப் ஜோக்(எ)கின் கைகளால் செய்யப்படவேண்டிய நிர்மாண வேலை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 149 வேலை இவ்வாறு நடந்துகொண் டிருந்தபோது புட்டியின் சித்தத்தில் ஓர் எண்ணம் ஸ்புரித்தது (உதித்தது). ''இக் கட்டடத்தில் ஒரு கர்ப்பகிருஹம் (கருவறை) சேர்க்கப்பட்டால், முரளீதரனின் சிலை ஒன்றை அங்கு ஸ்தாபனம் செய்யலாம்.ஃஃ 150 எண்ணம் உதித்ததே தவிர, பாபாவின் விருப்பம் என்னவென்று தெரிந்துகொள்ளாமலும் அவருடைய தெளிவான ஆணையைப் பெறாமலும் புட்டி எந்த வேலையையும் ஆரம்பிக்கமாட்டார். 151 இதுவே அவருடைய நித்தியநியமமாக இருந்தது. பாபாவின் அனுமதியே முக்கியம். அது இல்லாமல் எக் காரியத்திலும் புட்டி இறங்கமாட்டார். 152 ''கூடத்தின் மத்தியில் தடுப்புச்சுவர் எதற்கு? அதனால் என்ன பிரயோஜனம்? இருபுறங்களிலும் சுவர்களை எடுத்துவிட்டு முரளீதரனை அங்கு ஸ்தாபனம் செய்துவிடலாம்.ஃஃ (புட்டியின் சிந்தனை) 153 தடுப்பு உள்ள கூடத்திற்குப் பதிலாக ஒரு தேவாலயத்தை அமைத்துவிடலாம் என்பதே புட்டியின் விருப்பம். ஆயினும், பாபாவின் விருப்பம் என்னவென்று தெரிந்துகொண்டு, அவர் அனுமதியளித்தால் சந்தேகமில்லாமல் அவ்வாறே கட்டவேண்டும்õ 154 ஆகவே அவர் மாதவராவிடம் சொன்னார், ''பாபாவை இதுபற்றிக் கேட்போம். பிறகு, தேவனின் (பாபாவின்) விருப்பம் எப்படியோ அப்படியே மேற்கொண்டு திட்டம் போடுவோம்.ஃஃ 155 பாபா தம்முடைய தினசரி உலாவில் வாடாவுக்கு வந்து கதவருகில் நின்றபோது, சாமா அவரை என்ன வினவினார் என்பதைக் கேளுங்கள். 156 ''தேவாõ கூடத்தின் தடுப்புச் சுவர்கள் இரண்டையும் இடித்துவிட்டுக் குழலூதும் கண்ணனை அங்கு ஸ்தாபனம் செய்யவேண்டுமென்று பாபுஸாஹேப் சொல்கிறார்.-- 157 ''மத்தியபாகத்தில் ஒரு மண்டபம் வரும்படியாக அமைத்து, அதில் ஒரு சிம்மாசனம் கட்டி, அதன்மேல் முரளீதரனை ஸ்தாபனம் செய்யலாம். பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.-- 158 ''இவ்வாறு பாபுஸாஹேப் யோசிக்கிறார். ஆயினும் தங்களுடைய அனுமதி தேவை. இந்த ரீதியில், கோயிலும் வாடாவும் இரண்டுமே கிடுகிடுவென்று முடிந்துவிடும்.ஃஃ 159 சாமாவின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பாபா ஆனந்தம் நிரம்பியவராகச் சொன்னார், ''கோயில் வேலை பூரணமாக முடிந்தவுடன் நாமும் அங்கு வந்து வசிப்போம்.ஃஃ 160 வாடாவின் சுவர்களையே பார்த்துக்கொண்டு பாபா மதுரமான வார்த்தைகளைப் பேசுவார், ''வாடாவின் வேலை பூராவும் முடிந்தபிறகு அதை நாமே உபயோகிப்போம்.-- 161 ''அங்கேதான் நாம் வளையவருவோம்; பேசுவோம். அங்கேதான் நாம் ஒருவரையொருவர் அன்புடன் அணைத்துக்கொண்டு விளையாடுவோம்; எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிப்போம்.ஃஃ 162 மாதவராவ் ஸ்ரீஸாயீயைக் கேட்டார், ''இதுதான் நிச்சயமான ஆணையென்றால் அஸ்திவாரத்தை சுபதினமான இன்றே போட்டுவிடுவோம். -- 163 ''தேவாõ இது முஹூர்த்த வேளையா? உடனே சென்று ஒரு தேங்காயைக் கொண்டுவந்து உடைக்கட்டுமா?ஃஃ பாபா உடனே சொன்னார், ''உடை, உடை.ஃஃ மாதவராவ் ஒரு தேங்காயைக் கொண்டுவந்து உடைத்தார். 164 பின்னர் ஒரு கர்ப்பகிருஹம் எழுப்பப்பட்டது. முரளீதரனுக்கு ஒரு மேடையும் அமைக்கப்பட்டது. சிலை செதுக்கும் வேலை ஒரு சிற்பியிடம் ஒப்படைக்கப்பட்டது. 165 ஆனால், பின்னர் இவ்வாறு நிகழ்ந்தது. பாபாவின் உடல்நலம் தீவிரமாகக் குன்றியது. அந்திமகாலம் நெருங்கியது. பக்தர்கள் மனம் குழம்பினர். 166 பாபுஸாஹேபும் அமைதியிழந்தார். 'வாடாவின் கதி என்ன ஆகப்போகிறதென்று நிச்சயமாகத் தெரியவில்லையேஃ என்றெண்ணி வருத்தமுற்றார். 167 ''கடைசியில், பாபாவின் பாதங்கள் கோயில் தரையை மிதிக்கப்போகின்றனவா, இல்லையா? லட்சக் கணக்கில் பணம் செலவழித்தாகிவிட்டது; இப்பொழுது பெரிய தடங்கல் வந்துவிட்டதேõ-- 168 ''பாபா தேகத்தை உதிர்த்துவிட்டபின், முரளீதரன் எதற்கு? வீடு எதற்கு? வாடா எதற்கு? கோயில் எதற்கு?ஃஃ என்றெண்ணி புட்டி மனமுடைந்துபோய் சோகமுற்றார். 169 பின்னர், கர்மமும் தர்மமும் ஒன்றுசேர்ந்ததாலும் வாடா செய்த பெரும் பாக்கியத்தாலும் முடிவில் எல்லாமே பக்தர்களின் விருப்பப்படியும் ஸாயீயின் ஆணைப்படியுமே நடந்தன. 170 உயிர் பிரியும் நேரத்தில் பாபாவின் திருமுகத்திருந்து ''என்னை வாடாவில் வையுங்கள்ஃஃ என்று வெளிப்பட்ட திருவாய்மொழியைக் கேட்டு அனைவரும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். 171 பிறகு, ஸாயீயின் புனிதவுடல் (முரளீதரனுக்குக்காகக் கட்டப்பட்ட) கர்ப்பகிருஹத்தில் (கருவறையில்) அடக்கம் செய்யப்பட்டது. வாடா, ஸமாதி கோயில் ஆயிற்றுõ ஸாயீயின் வாழ்க்கைச் சரித்திரம் கற்பனைக்கெட்டாதது அன்றோõ 172 எவருக்குச் சொந்தமான வாடாவில், காதால் கேட்பதற்கே பரமபுனிதமான பெயருடைய ஸாயீயின் புனிதவுடல் அடக்கம் செய்யப்பட்டதோ, அந்த புட்டி மஹா பாக்கியசா; எல்லாப் பேறுகளையும் பெற்றவர். 173 இந்தக் கதை அவ்வளவு பவித்திரமானது. கேட்பவர்கள் சந்தோஷத்தையும் செல்வத்தையும் பெறுவர். ஹேமாட் ஸாயீநாதரை சரணடைகிறேன்; ஒருகணமும் அவருடைய பாதங்களை விட்டுப் பிரியமாட்டேன். 174 ஸாயீ உபதேசித்த மார்க்கத்தில் வாழ்க்கை நடத்தி அவரை சந்தோஷப்படுத்தினால், அனுபவங்கள் இஷ்டமாக இருப்பினும் கஷ்டமாக இருப்பினும், சந்தேகமேயில்லாமல் வாழ்க்கையின் அபீஷ்டங்கள் (தீவிரமான விருப்பங்கள்) நிறைவேறும். 175 கதையும் கதையைச் சொல்லும் வாயும் சொல்பவரும் ஸமர்த்த ஸாயீயாக இருக்கும்போது இந்த ஹேமாட் பந்த் யார்? வெறும் புனைபெயரேõ 176 ஆகவே, மேற்கொண்டு அவருடைய மனத்தில் என்ன உதிக்கிறதோ அதைத்தான் நீங்கள் கேட்கப்போகிறீர்கள். வேளை வரும்போது தானாகவே வெளிப்படப் போவதைப்பற்றி இன்றென்ன கவலை? எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'கீதை சுலோகத்திற்கு விசேஷ விளக்கம் -- ஸமாதி கோயில் நிர்மாணம்ஃ என்னும் முப்பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும். ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். சுபம் உண்டாகட்டும். |