Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 38

38. அன்னதானம்




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 அகில உலகங்களுக்கும் ஆனந்தமளிப்பவரேõ பக்தர்களின் இஷ்டங்களைப் பூர்த்தி செய்பவரேõ சரணமடைந்தவர்களின் மூன்றுவிதமான இன்னல்களையும் அபகரிப்பவரேõ குருவரரேõ உம்முடைய பாதங்களில் வணங்குகிறோம்.

2 அடக்கமுள்ளவர்களைக் காப்பவரும் பரம உதாரகுணமுள்ளவரும் அடைக்கலம் புகுந்த பக்தர்களை உத்தாரணம் செய்பவருமாகிய தேவரீர், உலகமக்களுக்கு உபகாரம் செய்வதற்காகவே அவதாரம் செய்திருக்கிறீர்.

3 துவைத பா(ஆஏஅ)வத்தை நாசம் செய்பவரே ஜய ஜயõ பக்தர்களின் மனத்தைக் கொள்ளைகொள்பவரே ஜய ஜயõ பக்தர்களை உலகியல் வாழ்வி­ருந்து விடுவிப்பவரே ஜய ஜயõ கருணைக் கடலான குருராயரே ஜய ஜயõ

4 உம்முடைய புனிதமான பாதங்களைப் பார்ப்பதற்கும் உம்முடன் சமகாலத்தில் வாழும் சுகத்தை அனுபவிப்பதற்கும் நாங்கள் என்ன பேறு பெற்றோம் ஐயனேõ ஆனால், அந்தக் காலம் கடந்துவிட்டது; இனித் திரும்பி வரப்போவதில்லை.

5 முழுமுதற்பொருளின் சுத்த சொரூபமான ரசத்தை ஓர் அச்சில் ஊற்றியபோது உருவான மூர்த்தியே ஞானிகளில் சிறந்தவரான இந்த ஸாயீ.

6 ஸாயீயே ஆத்மாராமர். அவரே பூர்ணானந்தத்தின் இருப்பிடம். தாமே எல்லா விருப்பங்களும் நிறைவேறியவராதலால் பக்தர்களையும் ஆசையற்றவர்களாக ஆக்கிவிடுகிறார்.

7 எவர் எல்லா தர்மங்களையும் ரக்ஷிப்பவரோ, எவர் பிரம்ம பலத்தாலும் க்ஷத்திரிய பலத்தாலும் யமனையே விழுங்கக்கூடியவரோ, அவர் ஆடிய நாடகமே இந்தச் சரித்திரம்.

8 ஜனனமரண சம்பந்தத்தையும் மற்ற பந்தங்களையும் அறுத்தெறியக்கூடியவரின் சன்னிதியில் குருட்டு ஜடமாகிய நான் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.

9 சென்ற அத்தியாயத்தில், மிகுந்த அன்புடன் ஸாயீநாதரின் சாவடி ஊர்வலத்தை வர்ணித்தேன். இந்த அத்தியாயத்தில், இடையறாத ஆனந்தத்தை அளிக்கும் ஹண்டியின் (வாயகன்ற பெரிய தவலை - அன்னதானம்) விவரத்தைக் கேளுங்கள்.

10 ஒரு குழந்தைக்கு எப்படிச் சாப்பிடுவது என்றுதான் தெரியும்; எதைச் சாப்பிடுவது என்பது தெரியாது. தாய்தான் பாலூட்டியோ ஒரு கவளம் சோறூட்டியோ குழந்தையைப் பாதுகாக்கவேண்டும்.

11 அவ்வாறே, என் ஸாயீமாதாவும் என்னுடைய பேனாவைப் பிடித்துக்கொண்டு தம் பக்தர்களின்மேல் கொண்ட அன்பால் இந்தப் பிரபந்தத்தை (பாமாலையை) எனக்கு சிரமமேதுமின்றி எழுதி வாங்கிக்கொண்டார்.

12 மோக்ஷம் சித்தியாவதற்கான சாதனைகளை தர்மசாஸ்திரம் நான்கு யுகங்களுக்கும் நான்குவிதமாக விதித்திருக்கிறது. கிருதயுகம் அல்லது ஸத்தியயுகத்திற்குத் தவம்; திரேதாயுகத்திற்கு ஞானம்; துவாபரயுகத்திற்கு யாகம்; க­யுகத்திற்கு தானம்.

13 மனிதன் அடிக்கடி தானதர்மங்கள் செய்யவேண்டும். பசிப்பிணியைக் களைவதையே முக்கியமான தானமாகக் கருதவேண்டும். நித்தியநியமமாக அன்னதானம் செய்வதையே தலையாய கடமையாகக்கொண்டு வாழவேண்டும்.

14 மதியம் பன்னிரண்டு மணிக்கு அன்னமேதும் கிடைக்காவிட்டால் மனம் குழம்புகிறது. நமக்கெப்படியோ அப்படியே பிறருக்கும். இதை உள்ளுக்குள் நன்கு உணர்ந்தவன் உயர்ந்த மனிதன்.

15 ஆசாரதர்மத்தில் பிரதானமானதும் முத­ல் செய்யவேண்டியதுமான தானம் அன்னதானம். இதுபற்றி நன்கு சிந்தித்துப் பார்த்தால் அதைவிட சிரேஷ்டமான (சிறந்த) தானம் எதுவும் இல்லை என்பது நன்கு விளங்கும்.

16 அன்னம் பர பிரம்ம ரூபம். எல்லா உயிரினங்களும் அன்னத்தி­ருந்தே எழுகின்றன. அன்னமே உயிரைக் காப்பற்றும் சாதனம். உயிர் உடலைப் பிரிந்த பிறகு அன்னத்திற்குள்ளயே சென்று கலந்துவிடுகிறது.

17 அதிதி (விருந்தாளி) நேரத்தோடு வந்தாலும், நேரந்தவறி வந்தாலும், இல்லறத்தோன் அவருக்கு அன்னமிட்டுத் திருப்திசெய்யவேண்டும். அன்னமளிக்காமல் விருந்தாளியை அனுப்பிவிடுபவன் இன்னல்களுக்கு அழைப்புவிடுகிறான்; இதில் சந்தேகமே இல்லை.

18 வஸ்திரங்களையோ பாத்திரங்களையோ தானமாக அளிக்கும்போது தானம் வாங்குபவர் தகுதியுள்ளவரா என்று யோசிக்கவேண்டிய அவசியம் உண்டு. ஆனால், அன்னதானம் செய்வதற்கு இந்தச் சிந்தனையே தேவையில்லை. வீட்டுவாயிலுக்கு எவர் வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும், அவரை அனாதரவாக விட்டுவிடுவது தகாது.

19 அன்னதானம் அத்தனை மஹத்துவம் வாய்ந்தது; இதற்கு சுருதியே (தைத்திரீய உபநிஷதம்) பிரமாணம். ஆகவே, பாபாவும் உலகியல் ரீதியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஜனங்களுக்கு உணவளித்துத் திருப்திசெய்தார்.

20 அன்னதானம் இன்றிச் செய்யப்படும் காசுதானம் போன்ற மற்ற தானங்கள் முழுமை பெறாதவை. எத்தனை நட்சத்திரங்கள் இருப்பினும் சந்திரன் இன்றி வானம் அழகு பெறுமோ? பதக்கம் இல்லாமல் தங்கச்சங்கி­ முழுமை பெறுமோ?

21 அறுசுவை உணவில் பருப்பு எவ்வாறு முக்கியமானதோ அவ்வாறே புண்ணியங்களிலெல்லாம் சிறந்த புண்ணியம் அன்னதானம். கலசமில்லாத கோபுரத்திற்கும் தாமரை இல்லாத நீர்நிலைக்கும் சோபை ஏது?

22 அன்னதானம் இல்லாது செய்யப்படும் தருமத்தைப் பிரேமை இல்லாத பஜனைக்கும் குங்குமத் திலகம் இட்டுக்கொள்ளாத சுமங்க­க்கும் குர­னிமை இல்லாதவனின் பாட்டுக்கும் உப்பு இடப்படாத மோருக்கும் ஒப்பிடலாம்.

23 அன்னதானம் செய்யும்போது, வியாதிஸ்தர்களுக்கும் பலம் குன்றியவர்களுக்கும் குருடர்களுக்கும் முடவர்களுக்கும் செவிடர்களுக்கும் ஏழையெளியவர்களுக்கும் முத­ல் உணவு அளிக்கப்படவேண்டும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அதன் பின்னரே அளிக்கவேண்டும்.

24 இப்பொழுது, பாபாவின் ஹண்டியைப்பற்றிய விவரங்களை அறிய ஆர்வமாக இருப்பவர்களைப் பிரீதிசெய்யும் வகையில் விவரம் சொல்ல முயல்கிறேன்.

25 மசூதியின் முற்றத்தில் ஒரு பெரிய மண் அடுப்பு நிறுவப்பட்டிருந்தது. அதன்மீது ஒரு வாயகன்ற பாத்திரம் வைக்கப்பட்டுத் தேவையான தண்ணீர் நிரப்பப்படும்.

26 சிலசமயங்களில் சர்க்கரைப் பொங்கலும் சிலசமயங்களில் மாமிசம் கலந்த புலாவும் செய்யப்படும். சிலசமயம் மாவைப் பிசைந்து வடைபோல் கையால் உருச்செய்து பருப்பு சூப்புடன் சேர்த்து சமையல் செய்யப்படும்.

27 சிலசமயங்களில், கொதிக்கும் பருப்பு சூப்பில், மாவால் செய்யப்பட்ட பானகாக்களையோ1 ரோடகாக்களையோ 2 பாபா லாவகமாக மிதக்கவிடுவார்.

28 மசாலாப் பொருள்களைத் தாமே அம்மியில் அரைத்துச் சமையலுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வார். பயத்தம் பருப்பு மாவால் தம் கையாலேயே சின்னச் சின்ன வடைகள் தட்டி லாவகமாக ஹண்டியில் நழுவவிடுவார்.

29 சொர்க்கம் கிடைக்கவேண்டுமென்ற நோக்கத்தில் சிலர், மிருகங்களைச் சடங்குபூர்வமாகக் கொன்று யாகத்தீயில் சமர்ப்பிக்கின்றனர். பிராமணர்களும் இம் மாமிசத்தில் சிறிது பிரசாதமாக (புரோடாஸம்) உண்கின்றனர். இதற்கு 'சாஸ்திரத்தால் அனுமதிக்கப்பட்ட ஹிம்ஸைஃ என்று பெயர்.

30 அவ்வாறே பாபாவும் முல்லாவுக்குச் சொல்­யனுப்புவார். இஸ்லாமிய சாஸ்திர விதிகளின்படி குரான் மந்திரங்களை ஓதிய பின்னரே, விதிக்கப்பட்ட சடங்குமுறையில் ஆடு கொல்லப்படும்.

31 ஹண்டிகள் இரண்டு இருந்தன; ஒன்று சிறியது; மற்றது பெரியது. இந்த ஹண்டிகளில் சமைத்து, அன்னத்தை நாடியவர்களுக்குப் போஜனம் செய்துவைத்தார் பாபா.

32 இரண்டு ஹண்டிகளில் சிறியது, ஐம்பது ஜனங்களுக்கு உணவளிக்கக்கூடிய கொள்ளளவு வாய்ந்தது. நூறு ஜனங்களுக்கு உணவளித்த பிறகும், சிறிது மீதம் இருக்கக்கூடிய அளவிற்குப் பெரிய ஹண்டி இருந்தது.

33 அவரே மளிகைக் கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கிக் கணக்கைக் கட்டுவார். கடன் என்ற பேச்சுக்கே இடமில்லை. எப்பொழுதுமே கைமேல் காசுதான்õ

34 உப்பு, மிளகாய், ஜீரகம், மிளகு போன்ற மளிகைச் சரக்குகளையும் காய்கறிகளையும் கொப்பரைத் தேங்காய்களையும், எவ்வளவு தேவைப்படும் என்பதுபற்றிப் பூரணமாகச் சிந்தித்து அவரே வாங்குவார்.

35 மசூதியில் உட்கார்ந்துகொண்டு ஏந்திரக்கல்லை எடுத்துவைத்து அவருடைய கைகளாலேயே கோதுமை, பருப்பு வகைகள், கேழ்வரகு, இவற்றை மாவுகளாக அரைத்துக்கொள்வார்.

36 ஹண்டிப்பிரீதி (அன்னதானம்) செய்வதற்கான அனைத்து வேலைகளையும் பாபாவே அயராது செய்தார். மசாலா அரைக்கும் வேலைகளையும் தாமே மிகுந்த சிரத்தையுடன் செய்தார்.

37 அடுப்பின் ஜுவாலையைக் குறைப்பதற்கும் பெருக்குவதற்கும் விறகுகுச்சிகளைக் கீழும் மேலும் தாமே தள்ளுவார்.

38 பருப்பைத் தண்ணீரில் ஊறவைத்துப் பெருங்காயம், ஜீரகம், கொத்தமல்­ போன்ற பொருள்களைச் சேர்த்து அரைத்துக் காரசாரமான பண்டமொன்றைச் செய்வார்.

39 பிசைந்த கோதுமை மாவை ஒன்றேகால்முழ நீளத்திற்கு வட்ட உருவில் நீட்டிச் சிறிய உருண்டைகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு உருண்டையையும் ஒரு சப்பாத்தியாகக் குழவியால் விஸ்தீரணம் செய்வார்.

40 ஏற்கெனவே அளந்துவைக்கப்பட்ட தண்ணீருடன் கேழ்வரகு மாவையும் மோரையும் சேர்த்து ஹண்டியில் அம்பீலையும்1 தயார் செய்வார்.

41 பிறகு, இவ்வாறு தயார் செய்த அம்பீலை மிகுந்த அன்புடன் தம்முடைய கைகளாலேயே மற்ற உணவுப்பண்டங்கள் பரிமாறப்படும்போது மரியாதையுடன் எல்லாருக்கும் பரிமாறுவார்.

42 இவ்வாறாக, உணவு நன்றாக வெந்துவிட்டது என்பதைப் பரிசோதித்தபின் ஹண்டியை அடுப்பி­ருந்து இறக்கி மசூதிக்குள் எடுத்துச் செல்வார்.

43 மௌல்வியின்மூலம் விதிகளின்படி பாதியா ஓதி, இவ்வுணவு புனிதமாக்கப்படும். அதன் பிறகு, பிரசாதம் முத­ல் மஹால்ஸாபதிக்கும் தாத்யாவுக்கும் அனுப்பப்படும்.

44 பின்னர் இவ்வுணவைப் பாபாவே எல்லாருக்கும் பரிமாறுவார். ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் ருசியான உணவளித்து திருப்தியும் மகிழ்ச்சியும் பெறுவார்.

45 அன்னத்தை நாடியவர்கள் வயிறு நிரம்பும்வரை திருப்தியாகச் சாப்பிடுவார்கள். பாபா அவர்களை, ''போட்டுக்கொள்; இன்னும் கொஞ்சம் போட்டுக்கொள்ஃஃ என்று வற்புறுத்துவார்.

46 ஓ, இவ்வுணவை உண்டு திருப்தியடைந்தவர்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கவேண்டும்õ பாபா தம்முடைய கைகளாலேயே பரிமாறிய உணவை உண்டவர்கள் மஹா பாக்கியசா­கள்õ

47 பாபா, மாமிசம் கலந்த உணவைப் பிரசாதமாகப் பல பக்தர்களுக்குத் தங்குதடையில்லாமல் ஏன் விநியோகம் செய்தார்? இந்த சந்தேகம் இங்கு எழுவது இயற்கையே.

48 இந்த சந்தேகத்தை நிவிர்த்தி செய்வதில் சிரமம் ஏதும் இல்லை. மாமிசம் கலந்த உணவை வழக்கமாகச் சாப்பிடுபவர்களுக்குத்தான் பாபா அந்த உணவை அளித்தார்.

49 பிறந்ததி­ருந்து மாமிசம் சாப்பிடும் பழக்கமில்லாதவர்களை அவ்வுணவைத் தொடவும் விடமாட்டார். அம்மாதிரியான சாகசங்களை அவர் என்றுமே செய்ததில்லை. பிரசாதம் வேண்டுமென்று நாடியவர்களுக்கே மாமிச உணவு அளிக்கப்பட்டது.

50 குருவே ஒரு பிரசாதத்தை அளிக்கும்போது அது ஏற்றுக்கொள்ளத் தக்கதா, தகாததா, என்று விகற்பமாகச் சிந்திக்கும் சிஷ்யன் அதலபாதாளத்தில் வீழ்ந்து தன்னையே அழித்துக்கொள்கிறான்.

51 இந்தத் தத்துவத்தை பக்தர்கள் நன்கு உணர்ந்துகொண் டிருக்கிறார்களா என்பதைக் கே­யாலும் நகைச்சுவை மூலமாகவும் பாபா தாமே நேரிடையாகத் தெரிந்துகொள்வார்.

52 இதை எழுதிக்கொண் டிருக்கும்போதே எனக்கு ஒரு சுவையான நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. கதைகேட்பவர்களேõ உங்களுடைய நன்மை கருதி இதை அமைதியான மனத்துடன் கேளுங்கள்.

53 பாபா ஒரு ஏகாதசி தினத்தன்று தாதா கேள்கரைக் கேட்டார், ''கோர்ஹாலாவி­ருந்து எனக்குக் கொஞ்சம் மாமிசம் வாங்கிவர முடியுமா?ஃஃ

54 ஸாயீ கொஞ்சம் பணத்தை எடுத்து அதை எண்ணிப் பார்த்துவிட்டு தாதாவிடம் கொடுத்தார். ''நீரே போய் வாரும். நீர்தான் இப்பணியைச் செய்யவேண்டும்ஃஃ என்றும் ஆணையிட்டார்.

55 கணேஷ் தாமோதர் என்ற பெயரும் கேள்கர் என்ற குடும்பப் பெயரும் கொண்டவரை அவருடைய மூப்பின் காரணமாக சிர்டீ மக்கள் 'தாதாஃ என்றழைத்தனர்.

56 தாதா சிர்டீயில் முதல் சத்திரம் கட்டிய ஹரிவிநாயக் ஸாடேவின் மாமனார்; ஸாயீபாதங்களில் அளவுகடந்த பிரேமை கொண்டவர்; தம்முடைய ஆசார அனுஷ்டானங்களை சிரத்தையுடன் கடைப்பிடித்த பிராமணர்.

57 இரவுபகலாக பாபாவுக்கு சேவை செய்தும் திருப்தியடையாத இவர், பாபாவின் இந்த ஆணையைக் கேட்டு எப்படி ஆச்சரியப்படாதுபோனார் என்றுதான் எனக்கு விளங்கவில்லைõ

58 உடல் வ­மை குறைவாக இருப்பினும், ஆன்மீக அப்பியாசங்கள் செய்து சாதனை பலம் பெற்றவர்கள் எப்பொழுதும் மனச்சஞ்சலம் அடையமாட்டார்கள்; அவர்களுடைய புத்தியும் ஆடாது அசையாது குருபாதங்களில் நிலைத்திருக்கும்.

59 தனத்தையும் தானியத்தையும் வஸ்திரங்களையும் அளிப்பது மட்டும் தக்ஷிணையாகிவிடாது. குருவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றி அவரை சந்தோஷப்படுத்துவதும் தக்ஷிணையே.

60 எவர் தம்முடைய மனத்தையும் வாக்கையும் செயலையும் குருபாதங்களில் அர்ப்பணித்து, முடிவில் குருவின் கிருபையை சம்பாதிக்கிறாரோ, அவருக்கு உண்மையான சிரத்தை லாபமாகிறது.

61 ஆணையை சிரமேற்கொண்டு வணங்கிவிட்டு தாதா உடனே உடையணிந்துகொண்டு கோர்ஹாலா கிராமத்திற்குச் செல்லக் கிளம்பியபோது திருப்பியழைக்கப்பட்டார்.

62 ''ஓய்õ வாங்கும் வேலையைச் செய்வதற்கு வேறு யாரையாவது அனுப்பலாமே. நீர் எதற்கு அனாவசியமாக அலையவேண்டும்?ஃஃ என்று பாபா சொன்னார்.

63 ஆகவே, மாமிசம் வாங்கிக்கொண்டு வருவதற்குப் பாண்டுவை அனுப்பலாம் என்று தாதா முடிவு செய்தார். அப்பொழுது பாபா தாதாவிடம் என்ன சொன்னார் என்று கேளுங்கள்.

64 பாண்டு கிளம்பிச் சிறிது தூரம் சென்றபிறகு, ''சரி, இன்னொரு நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்ஃஃ என்று சொல்­ பாபா பாண்டுவைத் திரும்பி வரும்படி செய்தார்.

65 பின்னர் ஒருசமயம், ஹண்டி செய்யவேண்டுமென்ற திடீர் உற்சாகம் பாபாவுக்கு எழும்பியது. அடுப்பின்மேல் அண்டாவை ஏற்றி மாமிசத் துண்டுகளைப் போட்டார்.

66 பிறகு அரிசியைக் களைந்து அளவான நீருடன் அதைச் சேர்த்தார். விறகுகளை அடுக்கி அடுப்பை மூட்டி அருகில் உட்கார்ந்துகொண்டு வாயால் ஊத ஆரம்பித்தார்.

67 கிராமமக்கள் அனைவருமே அவர் காலால் இட்ட பணியைத் தலையால் செய்யத் தயாராக இருந்தனர். எவராவது ஒருவர் நெருப்பை ஊதி ஜுவாலையைப் பெருக்கும் பணியை மகிழ்ச்சியுடன் செய்திருப்பார். ஆனால், பாபாவின் ஆணையின்றி ஒருவருக்கும் இதைச் செய்ய தைரியமில்லை.

68 சமையல் செய்வதற்கோ உணவுப் பொருள்களைக் கொண்டுவருவதற்கோ பக்தர்களுக்கு ஒரு கோடிகாண்பித்தால் போதும்; அவர்மேல் கொண்ட அன்பினால் அதை மிகுந்த உற்சாகத்துடன் செய்துமுடிக்கப் பலர் தயாராக இருந்தனர். இதுவிஷயமாக உதாசீனம் காட்டியவர் ஸாயீயேõ

69 அவர் உதாசீனம் செய்தார் என்று சொல்வதும் சரியாகாது. தாமே சமையல் செய்வது தம்முடைய நன்மைக்கே என்று அவர் நினைத்ததால், அன்னதானம் செய்வதில் மற்றவர்களைக் கஷ்டப்படுத்துவதில் அர்த்தம் என்ன இருக்கிறது?

70 அவரோ மதுகரீப்1 பிச்சை எடுத்தவர்; அதற்காகத் தம்முடைய உயிரைக் காத்துக்கொள்ளும் அளவிற்கு மட்டும் வீடு வீடாகச் சென்று கால் பாகம் சோளரொட்டி இரந்தவர்.

71 அப்படிப்பட்ட மனிதர் அன்னதானம் செய்வதற்குத் தாமே கஷ்டப்பட்டு உழைத்தால்தான் திருப்தியடைவார். ஆகவே, பாபா இதற்காக யார்மீதும் சார்ந்திருப்பதை விரும்பவில்லை.

72 நூறுபேர்களுக்குச் சுயமாகச் சமைப்பதற்கு மாவு, அரிசி, பருப்புகள் போன்ற சாமான்களை அவரே பார்த்து வாங்கிக்கொண்டு ரொக்கமாகப் பணம் பட்டுவாடா செய்தார்.

73 கூடையைக் கையில் எடுத்துக்கொண்டு அவரே மளிகைக் கடைக்குச் சென்ற காட்சி, உலகவிவகாரங்களில் மனிதன் எவ்வளவு உஷாராக இருக்கவேண்டு மென்பதை மக்களுக்கு உணர்த்தியது.

74 ஒரு மளிகைச் சாமானைக் கையில் எடுத்துப் பார்த்துப் பேரம் பேசிய பிறகே விலையை நிர்ணயம் செய்வார். ஏமாற்ற முயன்றவர்கள் கர்வபங்கமடைந்தனர்.

75 கூட்டல் கணக்குப் போடுவதுபோல் பாசாங்கு செய்வார். ஆனால், பணம் கைக்குக் கை பட்டுவாடா செய்யும்போது கடைகாரர் ஜந்து ரூபாய் கேட்ட இடத்தில் பத்து ரூபாய் கொடுப்பார்.

76 அவர் இவ்வேலைகளைத் தாமே செய்ய விரும்பினார். மற்றவர்கள் செய்வதை அவர் அனுமதிக்கவில்லை; மற்றவர்கள் தமக்காகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கவும் இல்லை; யாரையும் அவமதிக்கவுமில்லை.

77 இந்த ஒரு கொள்கையில் அவர் இரவுபகலாக விழிப்புணர்வுடன் இருந்தார். ஆகவே, ஹண்டி வேலைக்கு பாபா யாருடைய உதவியையும் நாடவில்லை.

78 ஹண்டி வேலை மாத்திரமில்லை, துனிக்கருகில் உள்ள விறகுகிடங்கின் கிழக்குப்புறச் சுவரில் முக்கால் பங்கைத் தம்முடைய கைகளாலேயே கட்டினார்.

79 மஹாதூ காரையைக் கலந்து கொடுப்பார். பாபா செங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்துக் கொல்லறுவை உபயோகித்துத் தம்முடைய கையாலேயே காரை பூசிச் சுவரை எழுப்பினார்.

80 ஓ, பாபா செய்யாத வேலைதான் என்ன? மசூதியின் தரையைத் தாமே சாணியால் மெழுகினார். யாரையும் எதிர்பார்க்காமல் கப்னியையும் லங்கோட்டையும் தாமே தைத்துக்கொண்டார்.

81 ஹண்டி கொதித்துப் பயங்கரமாக நீராவி வெளிவந்துகொண் டிருக்கும்போது கப்னியின் கைகளை மடித்துவிட்டுக்கொண்டு உணவை மேலுங்கீழுமாகத் தம் கையால் கிளறுவார்.

82 ஹண்டி தளதளவென்று கொதித்துக் கிளறுவதற்குத் தயாராகிவிட்டது என்று தெரிந்தபின் பாபா இந்த அற்புதமான லீலையைச் செய்வார்.

83 ஓ, ரத்தமும் சதையுமான கை எங்கே? கொதிக்கும் ஹண்டி எங்கே? ஆயினும், பீதியடைந்த முகத்தையோ கை வெந்துபோன அடையாளத்தையோ சிறிதளவும் காணமுடியவில்லைõ

84 பக்தர்களின் தலைமேல் இன்னல் விழுந்தவுடன் எடுத்தெறியும் கையை, கொதிக்கும் சோறு என்ன செய்யமுடியும்? அவருடைய மஹத்துவம் அதற்குத் தெரியாதா என்ன?

85 ஊறவைத்த பருப்புகளை அவரே அம்மியின்மீது பரப்பிச் சுத்தம் செய்தபின் குழவியால் அரைப்பார். அரைத்த மாவைத் தம்முடைய கைகளாலேயே வடை உருவில் தட்டுவார்.

86 பிறகு அவற்றை லாவகமாக ஹண்டியில் நழுவவிடுவார். அவை பாத்திரத்தின் அடியில் ஒட்டிக்கொள்ளாதவாறு புரட்டிவிடுவார். உணவு தயாரானவுடன் ஹண்டியைக் கீழே இறக்கி எல்லாருக்கும் பிரசாதம் அளிப்பார்.

87 'ஏன் எல்லாருக்கும் அளித்தார்? ஸாயீ பாபா ஒரு முஸ்லீம். மற்றவர்களை எப்படி அவர் இம்மாதிரியாக அதர்ம வழியில் இறக்கலாம்?ஃ என்று கதைகேட்பவர்கள் வினவலாம்.

88 இக் கேள்விக்கு ஒரே பதில்தான் உண்டு. ஸாயீ பாபா எது தர்மம், எது அதர்மம் என்பதை நிரந்தரமாக அறிந்திருந்தார்.

89 ஹண்டியில் தயாரிக்கப்பட்ட பதார்த்தத்தை எல்லாரும் சாப்பிடவேண்டுமென்று பாபா என்றுமே சிறிதளவும் வற்புறுத்தியதில்லை.

90 பிரசாதத்தை அடையவேண்டுமென்று எவரெவர் தம்மிச்சையாகவே விரும்பினார்களோ, அவர்களுடைய ஆசையே பாபாவால் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டது. அவர் யாரையும் ஏமாற்றவில்லைõ

91 மேலும், அவர் எந்த ஜாதியென்பதை யார் அறிவார்? மசூதியில் வாழ்ந்தாரென்பதால் அவர் ஒரு முஸ்லீம் என்று எல்லாரும் சொன்னார்கள். ஆயினும், அவருடைய வாழ்க்கைநெறியைக் கண்டு ஜாதியென்னவென்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

92 எவரைக் கடவுளாக ஏற்று பக்தர்கள் பாததூளியில் புரளுகின்றனரோ, அவருடைய ஜாதி என்னவென்று ஆராய்ச்சி செய்யவேண்டுமா? ஐயகோõ என்ன ஆன்மீகத் தேடல் இதுõ

93 எவரிடம் இகபர நாட்டமின்மை உட்பொதிந்திருந்ததோ, எவருக்கு விவேகமும் வைராக்கியமுமே செல்வமோ, அவருடைய ஜாதியை ஒரு பிரச்சினையாக எழுப்பவேண்டுமாõ ஐயகோõ என்ன ஆன்மீகத் தேடல் இதுõ

94 தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் அப்பாற்பட்டவரும் சுத்த ஆனந்தத்தில் சதா மூழ்கியவருமானவரின் ஜாதி என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமா? ஐயகோõ என்ன ஆன்மீகத் தேடல் இதுõ

95 இவ்வாறே பாபாவின் சரித்திரம். நானோ நிஜமான சுகத்தையும் ஆனந்தத்தையும் அனுபவிப்பதற்காகவே அவருடைய சரித்திரத்தைப் பாடுகிறேன். கேட்க வேண்டுமென்று விரும்புவர்களின் ஆவலை என் பாட்டு பூர்த்திசெய்யும்.

96 ஹண்டிக் கதையின் நூலை வழியில் எங்கோ விட்டுவிட்டோம். இப்பொழுது, பாபா தாதாவிடம் என்ன கேட்டார் என்பதைச் சொல்கிறேன்; கவனத்துடன் கேளுங்கள்.

97 ''சுவையான புலாவ் கொஞ்சம் சமைக்கப்பட்டிருக்கிறது. அது எப்படி அமைந்திருக்கிறது என்று பார்த்தீரா?ஃஃ ''ஆஹா, ஆஹா, மிகச் சுவையாக இருக்கிறதுஃஃ என்று தாதா உபசார வார்த்தையாகச் (புகழ் மொழியாகச்) சொன்னார்.

98 தாதா கேள்கர் வயதான பக்த சிரேஷ்டர். ஸ்நானம், ஸந்தியாவந்தனம் போன்ற தினசரிச் சடங்குகளை நியம நிஷ்டையுடன் செய்துவந்தவர். எந்தக் காரியமும் சாஸ்திரவிதிகளுக்கு உடன்பட்டதா, உடன்படாததா என்று பார்த்து சதா அனுசரித்துவந்தவர். அவருக்கு இச்செயல் (மாமிசம் கலந்த உணவைச் சுவைத்துப் பார்த்தல்) முறையானதாகத் தோன்றவில்லை.

99 பாபா தாதாவிடம் சொன்னார், ''நீர் எப்பொழுதும் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை; எப்பொழுதும் சுவைத்தும் பார்த்ததில்லை. அவ்வாறிருக்க, அது சுவையாக இருக்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்?--

100 ''பாத்திரத்தின் மூடியைத் திறந்துவிட்டு உள்ளே கையை விட்டு நீரே பாரும்õஃஃ என்று சொல்­க்கொண்டே, தாதாவின் கையைத் தம்முடைய கையால் பிடித்து பாத்திரத்தினுள்ளே பலவந்தமாகச் செருகினார்.

101 பிறகு பாபா சொன்னார், ''இப்பொழுது உமது கையை வெளியே எடும். கரண்டியால் எடுத்து ஒரு தட்டில் பரிமாறிக்கொள்ளும். மடி ஆசாரத்தைப்பற்றிக் கவலைப்பட வேண்டா. வெறும்பேச்சில் ஈடுபடவும் வேண்டா.ஃஃ

102 ஞானிகள் தம் சிஷ்யர்களை துராசாரமான செயல்களில் ஈடுபடுத்துவார்கள் என்று கனவிலும் நினைக்க வேண்டா. ஞானிகள் கிருபையால் நிரம்பிவழிபவர்கள். அவர்களுடைய வழிமுறைகள் அவர்களுக்குத்தான் விளங்கும்õ

103 ஒரு தாயும் தம்முடைய மனத்தில் பிரேமபாசம் அலையாகப் பொங்கியெழும்போது குழந்தையைக் கிள்ளிவிடுவார். குழந்தை அலறி அழும். தாய்தாம் உடனே அணைத்துக்கொள்ளவும் செய்வார்.

104 ஓர் உணவைத் தின்னவேண்டுமென்று ஒருவர் மனத்தால் ஆசைப்பட்டபோதுதான் பாபா அவருடைய ஆசையைப் பூர்த்திசெய்தார். மனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவரே பாபாவின் ஆமோதிப்பை வென்றார்õ

105 பாபாவின் ஆணையைப் பா­க்கவேண்டும் என்ற உறுதி சில பக்தர்களின் விஷயத்தில் வரம்புமீறிச் சென்றது. ஜன்மம் முழுவதும் மாமிசத்தைத் தொட்டறியாதவர்கள்கூடத் தங்களுடைய விரதத்தில் தடுமாறினர்õ

106 உண்மை நிலை என்னவென்று பார்த்தால், அதுமாதிரியான பக்தர்களை அவர்கள் தவறு என்று கருதிய செயல்களைச் செய்ய பாபா தூண்டியதில்லை; அனுமதிக்கவுமில்லை.

107 ஆக, 1910 ஆம் ஆண்டிற்கு முன்பாக ஹண்டி நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் அடிக்கடி நடந்தது.

108 அதன் பிறகு தாஸகணு பம்பாய் நகரத்திற்குச் சென்றார். ஸாயீயின் மஹிமையைக் கதாகீர்த்தனங்கள் செய்து எல்லாருடைய மனத்திலும் பதியும்படி செய்தார்.

109 அப்பொழுதி­ருந்து குழந்தைகள் முதல் முதியோர்கள்வரை அனைவரும் பாபாவின் மஹத்துவத்தை அறிந்தனர். கணக்கற்ற மக்கள் சிர்டீக்கு விஜயஞ்செய்ய ஆரம்பித்தனர்.

110 பின்னர் ஐந்து உபசாரங்களுடன் கூடிய பூஜை ஆரம்பித்தது. மதிய உணவும் சிற்றுண்டிகளுமாகப் பல நைவேத்தியங்கள் வந்து குவிந்தன.

111 அரிசிச்சோறு, பருப்பு சூப்பு, பூரி, ரவாகேசரி, சப்பாத்தி, சட்டினி, கோசுமல்­, பலவிதமான பாயசங்கள், பஞ்சாமிருதம் -- இவ்வகையான உணவுப்பண்டங்கள் மசூதிக்கு வந்துசேர்ந்தன.

112 அபரிமிதமான எண்ணிக்கையில் யாத்திரிகர்கள் வந்தனர். எல்லாரும் பாபாவை தரிசனம் செய்ய விழுந்தோடிச் சென்றனர். ஸாயீபாதங்களில் நைவேத்தியம் சமர்ப்பித்தனர். இப் பண்டங்களெல்லாம் பசித்தவர்களைத் திருப்திசெய்யச் சென்றடைந்தது இயல்பே.

113 பக்தர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக, பாபாவுக்கு ராஜோபசாரங்கள் செய்யப்பட்டன. பல இன்னிசை வாத்தியங்கள் ஒ­க்க, தலைக்குமேல் குடை பிடிக்கப்பட்டது; சாமரம் வீசப்பட்டது.

114 அவருடைய புகழ் திக்கெட்டும் பரவியது. மக்கள் பாபாவைத் தோத்திரம் செய்யவும் புகழ்பாடவும் ஆரம்பித்தனர். சிர்டீ, புனிதப் பயணிகளுக்குப் புண்ணிய க்ஷேத்திரம் ஆகியது.

115 அந்த நிலையில் ஹண்டிக்குத் தேவை இல்லாமல் போய்விட்டது. பக்கீர்களும் ஏழையெளிவர்களும் வயிறார உண்டு திருப்தியடைந்த பிறகும், உணவு மீந்துபோகும் அளவிற்கு நைவேத்தியம் வந்து குவிந்தது.

116 இப்பொழுது இன்னுமொரு காதை சொல்கிறேன்; கேட்டால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பக்தர்கள் ஆராதனை செய்யவேண்டிய தெய்வங்களை அனாதரவாக விட்டுவிடும்போது பாபா அகம் குவிந்தார்.

117 ஜாதியே இல்லாதவருடைய ஜாதியைப் பலர் பலவிதமாக அனுமானம் செய்தனர். சிலர் ஸாயீயை பிராமணர் என்று நினைத்தனர்; சிலர் முஸல்மான் என்று நினைத்தனர்.

118 அவர் எந்த ஊரில் பிறந்தார்? எந்த ஜாதியில் எப்பொழுது பிறந்தார்? அவருடைய பெற்றோர்கள் பிராமணர்களா முஸ்லீம்களா? இவற்றில் எதுவுமே தெரியாமல் கற்பனையில் அனுமானம் செய்தனர்.

119 அவர் முஸ்லீம் என்ற அனுமானத்தை ஏற்றுக்கொண்டால், அவர் எப்படி மசூதியில் அக்கினி வழிபாட்டை அனுமதித்தார்? துளசி பிருந்தாவனம் இருந்திருக்குமா? மணி அடிப்பதை எப்படி சகித்துக்கொண்டார்?

120 சங்கு ஊதுவதையும் தாளம், மிருதங்கம் போன்ற இன்னிசை வாத்தியங்களுடன் நடந்த கதாகீர்த்தனத்தையும் ஹரிநாம கோஷத்தையும் மசூதியில் அனுமதித்திருப்பாரா?

121 அவர் முஸ்லீமாக இருந்திருந்தால், மசூதியில் உட்கார்ந்துகொண் டிருக்கையில் நெற்றியில் சந்தனம் இட அனுமதித்திருப்பாரா? சமபந்தி போஜனம் செய்திருப்பாரா?

122 அவர் முஸ்லீமாக இருந்திருந்தால், தம்முடைய பாக்கெட்டி­ருந்து பணம் கொடுத்து இந்து ஆலயங்களைப் புனருத்தாரணம் செய்திருப்பாரா? அவருடைய காதுகள் குத்தப்பட்டிருந்தனவேõ

123 ஸ்நானம் செய்தபிறகு பட்டுப் பீதாம்பரங்களைத் தமக்கு அணிவிக்க அனுமதித்திருப்பாரா? ஆராதனை செய்யவேண்டிய தெய்வங்களை அனாதரவாக விட்டுவிடுவதை அவரால் ஒருகணமும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

124 நான் இதை எழுதிக்கொண் டிருக்கும்போதே இது சம்பந்தமான ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. மிக விநயமாக அதை உங்களுக்குச் சொல்கிறேன். அமைதியான சித்தத்துடன் கேளுங்கள்.

125 ஒருசமயம் இவ்வாறு நிகழ்ந்தது. பாபா அப்பொழுதுதான் லெண்டியி­ருந்து திரும்பிவந்து மசூதியில் அமர்ந்திருந்தார். பக்தர்களும் தரிசனத்திற்காகக் கூடியிருந்தனர்.

126 இக் கூட்டத்தில், பாபாவிடம் மிகுந்த பிரியம் கொண்ட உயர்ந்த பக்தரான சாந்தோர்க்கரும் இருந்தார். தரிசனம் செய்ய ஆர்வமுற்றுத் தம் சகலபாடி பினீவாலேயுடன் வந்திருந்தார்.

127 ஸாயீநாதருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு இருவரும் அவருடைய முன்னிலையில் அமர்ந்தனர். குசலம் விசாரித்துக்கொண் டிருந்தபோது பாபா திடீரென்று கோபமடைந்தார்.

128 பாபா கேட்டார், ''நானா, இதை எப்படி நீர் மறந்துபோகலாம்? என்னுடன் இவ்வளவு நாள்கள் பழகி இதைத்தான் கற்றுக்கொண்டீரா?--

129 ''என்னுடைய கூட்டுறவில் இவ்வளவு காலம் கழித்த பிறகு இந்த கதியைத்தான் அடைந்தீரா? ஓ, உம்முடைய மனம் எப்படி இவ்வாறு மயங்கலாம்õ அனைத்தையும் என்னிடம் விவரமாகச் சொல்லும்.ஃஃ

130 இதைக் கேட்ட நானா தலையைக் குனிந்துகொண்டார். கோபத்தின் காரணத்தை ஆராய ஆரம்பித்தார். அவரால் எதையும் யூகிக்க முடியவில்லை; மனம் குழம்பினார்.

131 என்ன தவறு செய்தோம் என்று அவருக்கு விளங்கவில்லை. கோபத்திற்குக் காரணமும் தெரியவில்லை. ஆனால், பாபா காரணமின்றி எவர் மனத்தையும் புண்படுத்தமாட்டார்.

132 ஆகவே, அவர் பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொண்டு பலவிதமாகக் கெஞ்சினார். கடைசியாகத் தம்முடைய அங்கவஸ்திரத்தை பாபாவின் சன்னிதியில் விரித்து, ''ஏன் என்மீது இவ்வளவு கோபம் கொள்கிறீர்?ஃஃ என்று கேட்டார்.

133 பாபா நானாவைக் கேட்டார், ''என்னுடைய சங்கத்தில் வருடக்கணக்காகக் கழித்த பிறகும் உம்முடைய நடத்தை ஏன் இப்படி இருக்கிறது? உம்முடைய மூளைக்கு என்ன ஆயிற்று?--

134 ''நீர் எப்பொழுது கோபர்காங்வ் வந்தடைந்தீர்? வழியில் என்ன நேர்ந்தது? நீர் வழியில் எங்காவது இறங்கினீரா, அல்லது குதிரைவண்டியில் நேராக இங்கு வந்தீரா?--

135 ''வழியில் விநோதமாக ஏதாவது நடந்ததா? எல்லாவற்றையும் விவரமாக அறிந்துகொள்ள விரும்புகிறேன். சிறியதாக இருப்பினும் பெரியதாக இருப்பினும் எங்கு, என்ன நடந்தது என்பதை எனக்குச் சொல்லும்.ஃஃ

136 இதைக் கேட்டவுடன் நானாவுக்கு விஷயமென்ன என்பது புரிந்துவிட்டது. அவருடைய முகம் கவிழ்ந்தது. உள்ளூர அவமானமாக இருந்தாலும், நானா விவரமனைத்தையும் பாபாவிடம் சொன்னார்.

137 இங்கே கண்ணாம்பூச்சி ஆட்டம் செல்லாது என்பதை நிச்சயம் செய்துகொண்டார். ஆகவே அவர் நடந்ததனைத்தையும் பாபாவிடம் விவரமாகச் சொன்னார்.

138 அஸத்தியம் ஸாயீயிடத்தில் செல்லாது. பொய்யைச் சொல்­ ஸாயீயின் அருளை என்றுமே சம்பாதிக்கமுடியாது. அஸத்தியம் மனிதனைக் கீழே தள்ளிவிடும்; கடைசியில் துர்க்கதிதான் (நரகந்தான்) கிடைக்கும்.

139 குருவை வஞ்சிப்பது மஹா பாதகச் செயல். அதி­ருந்து விடுபடவேமுடியாது. இதை நன்கு அறிந்த நானா, ஆரம்பத்தி­ருந்து கடைசிவரை என்ன நடந்ததென்பதை பாபாவிடம் சொன்னார்.

140 நானா சொன்னார், ''குதிரைவண்டி அமர்த்தியபோது நேராக சிர்டீக்குச் செல்லவேண்டுமென்றே பேசினோம். ஆனால், அவ்வாறு செய்திருந்தால், கோதாவரி நதிக்கரையில் இருக்கும் தத்தாத்ரேயரை பினீவாலே தரிசனம் செய்திருக்க முடியாது.--

141 ''தத்தாத்ரேய பக்தரான அவர் எங்களுடைய மார்க்கத்தி­ருந்த தத்தாத்ரேயர் கோயில் வழியாக வண்டி சென்றபோது, இறங்கி தரிசனம் செய்ய விரும்பினார்.--

142 ''நான் இங்கு வரும் அவசரம் காரணமாக, 'சிர்டீயி­ருந்து திரும்பிவரும்போது தரிசனம் செய்துகொள்ளலாம்ஃ என்று சொல்­ அவரைத் தடுத்துவிட்டேன்.--

143 ''சிர்டீ வந்துசேர்வதில் தாமதம் ஏற்படும் என்ற காரணத்தால், பொறுமையிழந்து, தத்தர் தரிசனம் அப்பொழுது வேண்டாவென்று சொல்­ப் புறக்கணித்துவிட்டேன்.--

144 ''பின்னர், கோதாவரி நதியில் ஸ்நானம் செய்தபோது ஒரு பெரிய முள் என் பாதத்தில் குத்தி சதைக்குள் ஏறிவிட்டது. வழியில் மிக அவஸ்தைப்பட்டேன். கடைசியில், பிரயத்தனம் செய்து எப்படியோ முள்ளைப் பிடுங்கிப் போட்டேன்.ஃஃ

145 பாபா நானாவைக் கண்டித்தார், ''உமக்கு இந்த அவசரம் உதவாது. தரிசனம் செய்வதைப் புறக்கணித்த குற்றத்திற்கு இம்முறை லேசான தண்டனையுடன் தப்பித்துக்கொண்டீர்.--

146 ''தொழுகைக்குரிய தேவரான தத்தர், நீர் எவ்விதமான பிரயாசையும் செய்யாமல் தரிசனம் தரக் காத்துக்கொண் டிருக்கும்போது அவரைப் புறக்கணித்துவிட்டு நீர் இங்கு வந்தால் நான் மகிழ்ச்சியடைவேனா என்னõஃஃ

147 இப்பொழுது மறுபடியும் ஹண்டியைப்பற்றிப் பேசுவோம். ஓ, மசூதியில் ஸாயீயுடன் அமர்ந்து உண்ட அந்த மதியவுணவு எத்தனை புனிதமானதுõ ஸாயீ, பக்தர்களின்பால் எவ்வளவு பிரேமை செலுத்தினார்õ

148 ஒவ்வொரு நாளும் பாபாவுக்குப் பூஜையும் ஆரதியும் முடிந்து பக்தர்கள் தம் தம் வீடுகளுக்குத் திரும்பும்போது,--

149 பாபா வெளியே வந்து மசூதியின் கைப்பிடிச்சுவர் முனையில் நிற்பார். பக்தர்கள் அனைவரும் முற்றத்தில் காத்திருப்பர். பிறகு அவர்கள் ஒவ்வொருவராக பாபாவை வணங்கிவிட்டுச் செல்வர்.

150 பாதங்களில் வணங்கிவிட்டு எழுந்து எதிரே நின்றபோது பாபா ஒவ்வொருவருக்கும் நெற்றியில் உதீ இடுவார்.

151 ''இப்பொழுது, குழந்தைகள் பெரியோர்கள் எல்லாரும் அவரவர் வீட்டிற்குச் சென்று சாப்பிடுங்கள்.ஃஃ பாபாவின் ஆணையை சிரமேற்கொண்டு அனைவரும் வீடு திரும்புவர்.

152 பாபா திரும்பியவுடன் படுதா இறக்கப்படும். தட்டுகளும் கரண்டிகளும் கணகணவென்று ஒ­க்கும். பிரசாத விநியோக நிகழ்ச்சி ஆரம்பிக்கும்.

153 ஸாயீயின் கரம் பட்டுப் புனிதமடைந்த பிரசாதம் சிறிது கிடைக்கும் என்ற ஆசையுடன் சில பக்தர்கள் கீழே முற்றத்தில் காத்திருப்பர்.

154 உள்ளே, சுவரி­ருந்த மாடத்தில் சாய்ந்துகொண்டு பாபா உட்கார்ந்திருப்பார். சாப்பிடுபவர்கள் அவருக்கு இரண்டு பக்கங்களிலும் கண்கவர் பந்தியாக உட்கார்ந்திருப்பர். சகலரும் ஆனந்தத்தின் உச்சியில் இருப்பார்கள்.

155 எல்லாரும் தம் தம் நைவேத்தியத்தை ஸமர்த்த ஸாயீயின் முன்பு நகர்த்துவர். ஸாயீயும் ஒரு பெரிய தட்டில் எல்லாப் பிரசாதங்களையும் தம்முடைய கைகளாலேயே ஒன்றாகக் கலப்பார்.

156 பாபாவின் கையி­ருந்து ஒரு பருக்கை சோறு பெறுவது மஹா பாக்கியம். உண்பவரின் உள்ளும் புறமும் புனிதமாகும்; வாழ்க்கை பயனுள்ளதாக ஆகும்.

157 வடை, அப்பம், பூரி, ஸாஞ்ஜோரி- சில சமயங்களில் சிகரண், கர்க்கா, பேணி, பலவித பாயசங்கள்- பாபா இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்துவிடுவார்.

158 இந்தக் கூட்டுக்கலவையை பாபா இறைவனுக்கு அர்ப்பணம் செய்வார். பின்னர், சாமாவையும் நிமோண்கரையும் தட்டுத் தட்டாக நிரப்பிப் பரிமாறச் சொல்வார்.

159 பக்தர்களை ஒவ்வொருவராகக் கூப்பிட்டுத் தம்மருகில் உட்காரவைத்து பரமானந்தத்துடனும் பிரீதியுடனும் தொண்டைவரை நிரம்புமாறு போஜனம் செய்விப்பார்.

160 சப்பாத்திகளையும் பருப்பு சூப்பையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, நெய் கலந்து சுவையூட்டி எல்லாருக்கும் தாமே பரிமாறுவார்.

161 அந்தப் பிரேமையின் கலவையைச் சுவைத்தபோது-- ஆஹாõ அந்த பிரம்மானந்தத்தை யாரால் வர்ணிக்கமுடியும்õ அதை உண்டவர்கள் வயிறு நிரம்பிய பிறகும் விரலை நக்கிக்கொண்டே போவார்கள்õ

162 சில சமயங்களில் மாண்டாவும் பூரணப் போளியும் - சில சமயங்களில் சர்க்கரை ஜீராவில் தோய்த்த பூரி- சில சமயங்களில் பாசந்தி, ரவாகேசரி, ஸாஞ்ஜோரி- சில சமயங்களில் வெல்லம் கலந்து செய்த சப்பாத்தி- இத்தனை வகைகளில், சுவையான உணவை பாபா அளித்தார்.

163 சில சமயங்களில், வெண்மையான அம்பேமொஹொர் அரிசிச்சாதம், அதன்மேல் பருப்பு சூப்பு, அதற்கும் மேல் சுவை மிகுந்த நெய், சுற்றிலும் பலவிதமான காய்கறிகள் பரிமாறப்படும்.

164 ஊறுகாய், அப்பளம், ரைதா, பலவித பஜ்ஜிகள் -- புளித்த தயிர், மோர்,
பஞ்சாமிருதம்-- இவையும் எப்பொழுதாவது இருந்தன. இந்த திவ்வியமான அன்னத்தை உண்டவர் தன்யராவார் (எல்லாப் பேறுகளையும் பெற்றவராவார்).

165 எங்கே ஸாயீநாதரே பரிமாறினாரோ அங்கே சாப்பாட்டைப்பற்றி என்ன சொல்லமுடியும்õ பக்தர்கள் அங்கே வயிறு புடைக்கும்வரை உண்டு திருப்தியுடன் ஏப்பம் விட்டனர்.

166 ஒவ்வொரு கவளமும் சுவையாகவும் பசியைத் தீர்ப்பதாகவும் திருப்தியளிப்பதாகவும் புஷ்டியளிப்பதாகவும் அமைந்தது. பிரேமையுடன் அளிக்கப்பட்ட புனிதமான இவ்வுணவு மிகச் சுவையாக இருந்தது.

167 அதை உண்டவர்கள் அனைவரும் ஒவ்வொரு கவளத்திற்கும் ஸாயீ நாமத்தைச் சொல்­க்கொண்டே அக்கினியில் ஆஹுதி (படையல்) இடுவதுபோல் வாயி­ட்டனர். ஆயினும், பாத்திரம் கா­யானதே இல்லை; எப்பொழுதும் நிரம்பியே இருந்தது.

168 யாருக்கு எந்த உணவில் ஆசை அதிகமாக இருந்ததோ, அவருக்கு அந்த உணவு பிரேமையுடன் மறுபடியும் பரிமாறப்பட்டது. பலர் மாம்பழச் சாற்றை விரும்பினர். அவர்களுக்கு மாம்பழச் சாறு பிரீதியுடன் அளிக்கப்பட்டது.

169 இந்த உணவைப் பரிமாற நானா நிமோண்கரையோ மாதவராவ் தேச்பாண்டேவையோ பாபா தினமும் ஆணையிட்டார்.

170 அவர்களும் நைவேத்தியத்தை அனைவருக்கும் பரிமாறும் பணியை நித்திய நியமமாக ஏற்றுக்கொண்டனர். சிரமமான செயலாக இருந்தபோதிலும் மிகுந்த அன்புடன் அப்பணியைச் செய்தனர்.

171 ஒவ்வொரு பருக்கையும் மல்­கை மொட்டுப்போல் இருந்த 'ஜிரேஸாஃ அரிசிச்சோறு, அதன்மீதாக பொன்னிறத்தில் துவரம் பருப்பு சூப்பு, அதற்கும் மேல் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றப்பட்டு எல்லாருக்கும் அளிக்கப்பட்டது.

172 பரிமாறப்படும்போதே இவ்வுணவின் நறுமணம் காற்றை நிரப்பும். பலவித சட்டினிகளுடன் சேர்த்து உண்ணும்போது இவ்வுணவு காரசாரமாக இருக்கும். எந்த உணவும் அரைவேக்காடாகவோ சுவை குறைவானதாகவோ இருந்ததில்லை. எல்லோரும் யதேஷ்டமாக (திருப்தியாகும்வரை) உண்டனர்.

173 ஆத்மானந்தமாகிய தட்டில் சேமியா- பிரேமபக்தியாகிய தட்டில் இடியாப்பம்- இவ்வுணவை ஏற்க சாந்தியையும் சுகத்தையும் ஆத்மானந்தத்தையும் அனுபவிப்பவர்களைத் தவிர வேறு எவர் வருவார்õ

174 அன்னமும் அன்னத்தின் சுவையும் அதை உண்பவரும் ஹரியே. அன்னத்தைப் பரிமாறுபவர் தன்யர். அன்னத்தை உண்பவர், அளிப்பவர், இருவருமே தன்யர்கள்.

175 இந்த இனிப்புக்கெல்லாம் மூலம் குருபாதங்களில் பலமான நிட்டை. இனிப்பது சர்க்கரையோ வெல்லமோ அன்று. இனிப்பது, ஆழமாக வேர்விட்ட சிரத்தையேõ

176 அங்கிருந்த நித்தியஸ்ரீயும் (எப்பொழுதும் உறையும் செல்வம்) நித்திய மங்களமும் அவ்வாறேõ பாயசமும் ரவாகேசரியும் பல உணவுப்பண்டங்களின் கூட்டுக்கலவையும் ஏராளமாக இருந்த இடத்தில், தட்டை எதிரில் வைத்துக்கொண்டு உட்கார்ந்த பிறகு, தயக்கம் காட்டுவதோ முன்னும் பின்னும் பார்ப்பதோ முட்டாள்தனமான காரியம்.

177 நானாவிதமான உணவுப்பண்டங்களை உண்டபிறகும் மக்களுக்குக் கொஞ்சம் தயிர்சாதம் சாப்பிடவில்லையென்றால் வயிறு நிரம்பிய திருப்தி ஏற்படாது. குடிப்பதற்குக் கொஞ்சம் மோராவது கேட்பார்கள்õ

178 ஒருசமயம் ஒரு லோட்டா சுத்தமான மோர் குருராயரின் கையாலேயே நிரப்பப்பட்டுப் பிரேமையுடன் எனக்கு அளிக்கப்பட்டது. லோட்டாவை என் உதடுகளுக்கிடையில் வைத்தபோது,

179 வெள்ளைவெளேரென்றிருந்த மோரைக் கண்ணால் கண்டு நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். லோட்டாவை உதடுகளில் வைத்தபோதே ஆத்மானந்த புஷ்டியை அடைந்தேன்.

180 ''ஏற்கெனவே பல உணவுப்பண்டங்களைச் சாப்பிட்டதால் வயிறு நிரம்பிவிட்டது. இந்த மோரையும் எப்படிக் குடிக்கப்போகிறேன்?ஃஃ இந்த வக்கிரமான சந்தேகம் என் மனத்தில் உதித்தபோது, முதல் மிடறே மிகச் சுவையுள்ளதாக இருந்தது.

181 நான் சங்கோசப்பட்டுத் தயங்குவதைக் கண்ட பாபா மனப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டார், ''அதை முழுக்கக் குடித்துவிடும்.ஃஃ மறுபடியும் அந்த நல்வாய்ப்பு எனக்குக் கிடைக்காதென்பதை மறைமுகமாகச் சொன்னார் போலும்õ

182 பின்னர் அவ்வாறே நடந்ததுõ அன்றி­ருந்து இரண்டு மாதங்களில் பாபா தம்முடைய அவதாரத்தை முடித்துக்கொண்டு நிர்வாணம் (முக்தி) அடைந்தார்.

183 இப்பொழுது, அந்த மோருக்கு ஏற்படும் தாகத்தைத் தணித்துக்கொள்ளும் வழி, ஸாயீ கதாமிருதத்தைக் குடிப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. கைகொடுப்பதற்கு வேறெதுவுமே இல்லைõ

184 ஹேமாட் ஸாயீநாதரை சரணடைகிறேன். ஸாயீநாதரே எந்தக் கதையை ஞாபகப்படுத்துகிறாரோ அதை அடுத்தபடியாகச் சொல்கிறேன். கதைகேட்பவர்கள் தங்களுடைய கவனத்தை நீடிக்கட்டும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'ஹண்டி வர்ணனைஃ என்னும் முப்பத்தெட்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.