Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 37

37. சாவடி ஊர்வல கோலாகலம்




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 ஸாயீயின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்கமுடியாதவை.

2 அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது; பிழைக்கும் வழி பாக்கியம் அளிப்பது; நடைமுறையோ கத்திமுனையில் வேகமாக நடப்பதற்கு ஒப்பானது.

3 சிலசமயங்களில் பிரம்மானந்தத்தில் மூழ்கிய உன்மத்த நிலை; மற்றசமயங்களிலோ போதனை செய்வதில் திருப்தி, சிலசமயங்களில் எல்லாவற்றையும் செய்துவிட்டு எதிலுமே பட்டுக்கொள்ளாத தன்மை; எதையுமே நிச்சயமாகச் சொல்லமுடியாத நிலைõ

4 சிலசமயங்களில் செயல் ஏதும் இல்லாத சூனியநிலை; ஆயினும் தூக்கமா என்றால் அதுவும் இல்லை. தம்முடைய நன்மை கருதி ஆத்ம சொரூபத்திலேயே மூழ்கியிருப்பார்.

5 சிலசமயங்களில், கரையில்லாததும் கடக்கமுடியாததும் அளக்கமுடியாததும் ஆழமானதுமான சமுத்திரத்தைப்போல் சந்தோஷமாக இருப்பார். இக் கற்பனைக்கெட்டாத ரூபத்தை யாரால் யதார்த்தமாக வர்ணிக்கமுடியும்?

6 ஆண்களை உறவினர் போலவும் பெண்களைத் தாயாகவோ சகோதரியாகவோ அவர் நடத்தினார். அவர் ஒரு பிரம்மசாரி என்பதும் ஊர்த்துவரேதஸர் (மேல் நோக்கியே செல்லும் விந்து உடையவர்) என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

7 அவருடைய ஸத்சங்கத்தால் விளைந்த நன்மதி உறுதியாகவும் ஆடாதும் அசையாதும் மரணபரியந்தம் நிலைக்கட்டும்õ

8 சேவை மனப்பான்மை ஓங்கி வளரட்டும்õ அவருடைய பாதங்களில் அனன்னிய பக்தி செழிக்கட்டும்õ அவருடைய நாமத்தில் அகண்டமான பிரீதி உண்டாகட்டும்õ எல்லா உயிர்களிலும் இறைவனைக் காணும் பா(ஆஏஅ)வம் விருத்தியாகட்டும்õ

9 ஒன்றைவிட மற்றொன்று அற்புதமான அவருடைய லீலைகளைப் பார்த்துவிட்டுக் காரணத்தை ஆராய விரும்பியவர்கள், கடைசியில், புத்திக்கெதுவும் எட்டாதுபோய் வழியிலேயே சப்பணம்போட்டு உட்கார்ந்துவிட்டனர்õ

10 சொர்க்கத்தின் மஹிமையைத் துதிபாடுபவர் பலர் சொர்க்கத்திற்காகப் போராடுகின்றனர். அவர்கள் பூலோகத்தை மரணபீதி உள்ள இடம் என்று துச்சமாக மதிக்கின்றனர்.

11 அவர்களும் உருவமற்ற நிலையி­ருந்து உருவமுள்ள நிலைக்கு மாறியவர்கள்தாம். உருவநிலையி­ருந்து அருவநிலைக்குள் மறுபடியும் புகுவதற்கே மரணம் என்று பெயர்.

12 அதர்மம், அஞ்ஞானம், ஆசை, துவேஷம், இத்தியாதிகள் மரணத்தின் பாசக்கயிறுகள். இவற்றை மிச்சம்மீதி இல்லாமல் தாண்டக்கூடியவனே சொர்க்கத்தின் உள்ளே நுழையமுடியும்.

13 சொர்க்கம், சொர்க்கம் என்றால் என்ன? ஆசைகளையும் ஏக்கங்களையும் துறப்பதும், வ­களையும் துக்கங்களையும் கடந்த, பிரபஞ்சத்துடன் ஒன்றிய, ஆத்ம சொரூபத்திலேயே லயிப்பதுமே சொர்க்கம் அன்றோ?

14 வியாதிகளுக்கும் கவலைகளுக்கும் வ­களுக்கும் இன்னல்களுக்கும் எங்கு இடமில்லையோ, யாருமே பசியாலும் தாகத்தாலும் முதுமைபற்றிய பயத்தாலும் எங்கு வருத்தப்படுவதில்லையோ, --

15 எவ்விடத்தில் மரணபயம் இல்லையோ, எவ்விடத்தில் விதிக்கப்பட்டது-விதிக்கப்படாதது என்னும் பேதத்திற்கு இடமில்லையோ, எவ்விடத்தில் ஜீவன்கள் நிர்ப்பயமாக உலவுகின்றனவோ, அவ்விடமே தெய்வீகமான சொர்க்கம் என்று அறிக.

16 பிரம்மதேவரி­ருந்து புல்பூண்டுகள்வரை நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் நிறைந்திருக்கும் தத்துவந்தான், நாம் இவ்வுலகத்தில் வாழும்போதும் மரணத்திற்குப்பின் மேலுலகத்திலும் எந்தவிதமான பேதமுமின்றி நம்மில் நிறைந்திருக்கிறது.

17 ஆனாலும், அஞ்ஞானத்தில் மூழ்கிய மனிதன் சம்சார பந்தத்தி­ருந்து விடுபட்ட பின்பும், பலவிதமான உபாதிகள் அவனைப் பின்தொடர்வதால் இந்தத் தத்துவத்தை முழுமுதற்பொருளாகக் காண்பதில்லை.

18 'நான் அது இலóலை; அது நான் இல்லை; பர பிரம்மத்தி­ருந்து நான் வேறுபட்டவன்ஃ என்ற பேதபுத்தி எவனுக்கு இருக்கிறதோ அவன் எப்பொழுதுமே மரணத்தின் பிடியில் வாழ்கிறான்.

19 பிறப்பை இறப்பு தொடர்கிறது; மறுபடியும் பிறவி ஏற்படுகிறது. ஜனனமரணச் சக்கரம் அவனை முடிவேயில்லாமல் விரட்டுகிறது.

20 பெருமுயற்சி எடுத்துச் செய்யவேண்டியவையான யாகமும் தவமும் தானமும் அளிக்கக்கூடிய சொர்க்கத்தில், ஸ்ரீமன் நாராயணனை நினைப்பதற்கு வாய்ப்பில்லையெனில், அந்த சொர்க்கத்தினுள் புகுவதில் அர்த்தம் என்னவோõ

21 கேவலம் சுகபோகத்தை மட்டும் அளிக்கும் இடமாக இருந்தால் நமக்கு சொர்க்கம் வேண்டா. எங்கு கோவிந்த நாம சங்கீர்த்தனம் இல்லையோ அவ்விடத்தில் நமக்கென்ன வேலை?

22 சொர்க்கத்திற்குப் போனாலும் நரகத்திற்குப் போனாலும் இன்பதுன்ப அனுபவங்களில் பேதம் ஏதுமில்லை. இந்திரனானாலும் கழுதையானாலும் புலனின்ப அனுபவம் ஒன்றுதான்.

23 இந்திரன் நந்தவன சுகத்தில் புரள்கிறான்; கழுதை குப்பைமேட்டு சுகத்தில் புரள்கிறது. ஆனாலும், சுகம் என்ற நோக்கில் பார்க்கும்போது இரண்டிற்கும் சிறிதளவும் பேதம் இல்லை.

24 புண்ணியக் கணக்கு தீர்ந்தவுடன் எங்கிருந்து கீழே விழுந்துவிடுவோமோ, அங்கே செல்வதற்கு எக்காரணத்திற்காகப் பிரயத்தனம் செய்யவேண்டும்?

25 ஒரு கல்பகாலம்1 வாழக்கூடிய பிரம்மலோகத்திற்கு என்ன பெருமை? அற்ப ஆயுளாக இருப்பினும் பூலோக வாழ்க்கையே சிறந்ததன்றோõ

26 குறுகிய ஆயுளாக (பிரம்மலோக கால நிர்ணயத்திற்கு ஒப்பிடும்போது) இருந்தபோதிலும், ஈசுவர அர்ப்பணமாக ஒருகணம் வினையாற்றினாலும் அபயம் (அடைக்கலம்) கிடைக்கிறது.

27 ஹரியின் கதையையும் குருவின் கதையையும், வர்ணித்தும் ஆடியும் பாடியும் இறைவனைத் தொழும் பக்தர்கள் இல்லாத இடம் எதற்கு உபயோகம்?

28 முழுமுதற்பொருளும் ஆத்மாவும் ஐக்கியமானவை என்ற விஞ்ஞானமே, என்றும் அழியாத உன்னதமான பேற்றை அளிக்கக்கூடியது. இதைப் பெறுவதற்கு விண்ணில் இருக்கும் சொர்க்கத்தைவிட பூலோகமே சிறந்த இடம்.

29 உடலாலும் வாக்காலும் மனத்தாலும், ஐந்து பிராணன்களையும் புத்தியையும், உறுதியுடனும் பணிவுடனும் குருவின் ஆதீனத்தில் மொத்தமாக விட்டுவிடுங்கள்.

30 இவ்வாறு குருவிடம் சரணடைந்த பிறகு சம்சார பயம்பற்றிப் பேச்சுண்டோ? மொத்தமாகக் களைந்துவிட அவர் இருக்கும்போது, உலகவாழ்வின் விசாரங்களைப்பற்றி என்ன விசாரம்õ

31 மாயையும் அஞ்ஞானமும் எங்கு வாசம் செய்கின்றனவோ, அங்கே பிள்ளைகுட்டிகளையும் மாடுகன்றுகளையும்பற்றிய பாசமும் உலகவாழ்வுபற்றிய கவலைகளும் இரவுபகலாக ஓய்வின்றி இருக்கும். நல்ல விஷயங்களைப்பற்றிய சிந்தனை லவலேசமும் (சிறிதளவும்) இராது.

32 அஞ்ஞானமே பேதமனைத்திற்கும் மூலகாரணம். இக் காரணம்பற்றியே குருவிடம் சென்று சிறந்த ஞானத்தை சம்பாதித்துக்கொள்ள வேண்டும்.

33 அஞ்ஞானம் நிவிர்த்தியாகிவிட்டால் 'பல உண்டுஃ என்னும் பேதபுத்தி அணுவளவும் மீதி இருக்காது. 'உள்ளது ஒன்றேஃ என்ற ஞானத்தைப் பெற்றவன் ஜனனமரணச் சுழ­­ருந்து விடுபடுகிறான்.

34 ஆயினும், மிக அற்பமான அளவிற்குப் பேதக் கருத்தை வைத்திருந்தாலும், அவன் ஜனனமரணச் சுழ­ல் மாட்டிக்கொள்வான். சிருஷ்டியும் விநாசமும் அவனை விடாது தொடரும்.

35 சிரேயஸை (ஆன்மீக மேன்மை) அளிக்கும் ஞானமே கட்டாயமாக அடையவேண்டிய மெய்யான ஞானம். எது கேவலம் பிரேயஸை (உலகவாழ்வில் உழலுதல்) அளிக்கிறதோ அதற்கு அவித்யா அல்லது அஞ்ஞானம் என்று பெயர்.

36 மனித வாழ்க்கையின் மிகப் பெரிய பயம் மரணம்பற்றியதுதான். இந்த பயத்தி­ருந்து விடுபட்டு பயமற்ற நிலை பெறுவதற்கு 'உள்ளது ஒன்றேஃ என்ற அத்வைத ஞானத்தை அளிக்கும் குருவின் இருபாதங்களையும் கெட்டியாகப் பற்றிக்கொள்ளவேண்டும்.

37 எங்கு 'இரண்டுண்டுஃ என்னும் பிழையான கருத்து நுழைகிறதோ அங்கு பயமும் நுழைந்துவிடும். ஆகவே, பேதம் பாராத குருவின் திருவடிக்கு சேவை செய்தால் பயமென்பது லவலேசமும் இருக்காது.

38 தூய அன்பு என்னும் சந்தனத்தை அவருடைய நெற்றியில் இடுங்கள். எளிமையான விசுவாசம் என்னும் பீதாம்பரத்தை அவருக்கு ஆடையாக உடுத்துங்கள். அவர் உலகையே ஆடையாக அணிந்த இறைவனைத் தம் பக்தர்களுக்குக் காட்டிக்கொடுப்பார்.

39 அஷ்டபா(ஆஏஅ)வ நிலையில் பெருகும் கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டுங்கள். திடமான சிரத்தையென்னும் சிம்மாசனத்தில் அவரை எழுந்தருளச் செய்யுங்கள். அவர் உடனே முகம் மலர்வார்.

40 பக்தி என்னும் மேகலையை இடுப்பில் அணிவித்து அவரை உங்களுக்கே சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். உங்களிடம் இருப்பவை அனைத்தையும் அவருக்குப் பிரீதியுடன் சமர்ப்பித்து ஆரதி சுற்றுங்கள்.

41 இல்லாத பொருளை அழிக்கமுடியாது; இருக்கும் பொருளைத்தான் அழிக்கமுடியும். கல்லால் அடிபட்ட பானை உடையும்போது அதனுடைய உருவந்தான் இல்லாமற்போகிறது.

42 பானையின் இருக்கும் தன்மை சிறிதளவும் அழிவதில்லை. ஏனெனில், உடைந்த பாகங்களுக்கு மறுபடியும் பானையாக ஆகும் சக்தி இருக்கிறது.

43 ஆகவே ஒரு பொருளை அழிக்கமுடியுமா என்பது அதனுடைய இருக்கும் தன்மையையே சார்ந்திருக்கிறது. அதுபோலவே எந்த மரணமும் சூனியத்தில் முடிவதில்லை.

44 காரணம் இன்றி விளைவேதும் இல்லை. இதை எல்லா விஷயங்களிலும் அனுபவத்தால் காண்கிறோம். உருவநிலையில் இருப்பது அருவநிலைக்கு மாறினாலும், சத்தியத்தின் சம்பந்தத்தை விட்டுவிடுவதில்லை.

45 சூக்கும நிலையிலேயே பல படிகள் இருப்பது இதைத் தெளிவாக்குகிறது. பூதவுடல் அழிந்துபோன பின்பும் சூக்கும சரீரம் தொடர்ந்து வாழ்கிறதுõ

46 சூக்கும சரீரமும் மறையும்போது அதைவிடச் சூக்குமமான நிலை தொடர்கிறது. அந்த நிலையில் ஞானேந்திரியங்களும் மனமும் புத்தியும் இன்பங்களைத் துய்க்கும் சக்தியை இழந்துவிடுகின்றன.

47 தாத்பர்யம் (மூலக்கருத்து) என்னவென்றால், புத்தியும் ஓய்ந்துபோகும் நிலையில் உருவமுள்ளது உருவமில்லாமல் போகிறது, அப்பொழுதும் ஆத்மா அணைந்துபோவதில்லை; சுயமாகவே பிரகாசித்துக்கொண் டிருக்கிறது.

48 புத்திதான் ஆசைகளுக்கு இடமளிக்கிறது. ஆகவே, புத்தி அழிந்துபோகும்போது ஆத்மா எழும்புகிறது; அழியாத இடத்தை அடைந்துவிடுகிறது.

49 அஞ்ஞானம், மாயை, ஆசை, செயல் இவைதான் மரணத்தின் முக்கியமான வழிமுறைகள். இவையனைத்தும் அணைந்துபோகும்போது உலகவாழ்வின் பந்தங்களும் அறுந்துவிடுகின்றன.

50 மேகங்கள் விலகியவுடன் சுயம்பிரகாசியான சூரியன் ஒளிர்வதுபோல், பந்தங்கள் அறுந்து விழுந்தவுடன் ஆத்மா எந்த முயற்சியுமின்றித் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

51 'இந்த சரீரமே நான்; இது என்னுடைய செல்வம்ஃ. -- இதற்குத்தான் திடமான தேஹாபிமானம் என்று பெயர். இதுதான் முடிச்சுகளுக்குக் காரணம். இதுதான் மாயையால் விளையும் துக்கங்களுக்கும் காரணம்.

52 இந்த தேகம் ஒருமுறை விழுந்தவுடன் கர்மவிதையால் இன்னொரு தேகத்தை ஏற்றுக்கொள்கிறது. இந்தத் தடவையும் கர்மவிதை முழுமையாக அழிக்கப்படாவிட்டால் மற்றுமொரு ஜன்மம் ஏற்படுகிறது.

53 மறுபடியும் விதை மரமாகிறது. பூர்வஜன்ம வாசனை என்னும் விதை புதுப்புது தேகங்களை ஒவ்வொரு தடவையும் அளிக்கிறது. இந்தச் சக்கரம் பூர்வஜன்ம வாசனைகள் அழியும்வரை முடிவில்லாமல் சுழன்றுகொண்டேயிருக்கிறது.

54 ஆசைகள் வேரோடு அழிக்கப்பட்டவுடன் இதயத்தின் முடிச்சுகள் அவிழ்ந்து விடுகின்றன. அப்பொழுதுதான் மனிதன் மரணமிலாப் பெருவாழ்வை அடைகிறான். இதுவே வேதாந்த (உபநிஷதங்கள் தரும்) உபதேசம்.

55 தர்மம், அதர்மம், இரண்டையுமே கடந்த நிலைக்கு விரஜ நிலை (ஆசைகளைக் கடந்த நிலை) என்று பெயர். அஞ்ஞானமும் ஆசைகளும் அழிக்கப்பட்ட நிலையில் மரணத்திற்கு எந்தவிதமான சக்தியும் இல்லாமல் போகிறது.

56 பூர்வஜன்ம வாசனைகளால் விளையும் ஆசைகளை அறுப்பதே பிரம்மானந்தத்தை அடையும் வழி. இந் நிலை எழுத்தால் விவரிக்கமுடியாதது; ஆயினும் அதை எழுதி விவரிக்க முயல்கிறோம். பேச்சால் வர்ணிக்கமுடியாதது; ஆயினும் அதை வாய்ச்சொல்லால் வர்ணிக்க முயல்கிறோம்.

57 முழுமுதற்பொருளை நன்கு அறிந்துகொள்வதே வேண்டாத விஷயங்களுக்கெல்லாம் ஒரு முடிவு; மனத்தில் விளைந்த அனைத்து ஆசைகளின் நிறைவேற்றம். இதுவே சுருதி (வேதங்கள்), ஸ்மிருதி (வாழ்க்கை நெறிக் கோட்பாடுகள்), இவை இரண்டின் பிரமாணம்õ

58 பிரம்ம ஞானத்தை அடைந்தவனே பரவுலகத்தை அடைந்தவன். அது மட்டுமே கடைமுடிவாக பிரம்மத்துடன் ஒன்றிய ஆனந்தத்தை அடையும் மார்க்கம். இதைவிட உயர்ந்த நிலை வேறெதுவும் உண்டோ? தன்னை அறிந்தவன் சோகத்தைக் கடந்தவன் அல்லனோ?

59 அஞ்ஞான இருளை மூலமாகக் கொண்ட சம்சாரக்கடலை பிரம்ம ஞானம் என்னும் ஒரே உபாயத்தால்தான் கடக்கமுடியும். அதுவே அனைத்துப் பேறுகளையும் பெறும் சாதனை மார்க்கம்.

60 ''பூரணமான சிரத்தையும், தைரியம் சேர்ந்த பொறுமையுமே உமையுடன் இணைந்த மகேசுவரன். அவர்களுடைய அருட்கரம் தலையில் படும்வரை உலகத்தையே ஆடையாக அணிந்தவனும் நம் ஹிருதயவாசியுமான ஆண்டவன் கண்ணுக்குப் புலப்படமாட்டான்.--

61 ''பொறுமையும் நிட்டையுள்ள விசுவாசமும் சிறந்த ஐசுவர்யங்களை அளிக்கும்ஃஃ. மேற்கண்டது, அமோகமான வீரியம் கொண்ட வார்த்தைகளை உடையவரும் குருமார்களில் தலைசிறந்தவருமாகிய ஸாயீநாதரின் திருவாய்மொழியாகும்.

62 கண்ணுக்குத் தெரியும் இப் பிரபஞ்சம் ஒரு மாயை என்பதையும், பிரத்யக்ஷமாக அனுபவிக்கப்பட்டபோதிலும் கண்விழித்தவுடன் காணாமற்போகும் கனவைப் போன்றது என்பதையும் அவசியம் ஒத்துக்கொள்ளவேண்டும்.

63 நம்முடைய புத்திக்கு அவ்வளவு தூரந்தான் எட்டும்; அதற்குமேல் எட்டாது. நாம் ஆத்மாவை அறிந்துகொள்வதும் அவ்வளவே. உண்மை எது என்பதை புத்தியால் அறிந்துகொள்ளமுடியாது. அதை உணரும் சக்தி ஆத்மாவுக்குத்தான் உண்டு.

64 இருக்கிறது என்னும் குணாதிசயமோ, இல்லை என்னும் குணாதிசயமோ, இரண்டுமே இல்லாததும் ­ங்க (ஆண்/பெண்) பேதம் இல்லாததும் எந்த குணமும் இல்லாததும் எங்கும் நிறைந்ததும் ஒ­யாலும் ஒ­யினுள்ளும் பலவிதமாக வர்ணிக்கப்பட்டதும்- குரு ரூபத்தில் இருக்கிறது.

65 ஆத்மா எந்த குணாதிசயமும் இல்லாதது; மூப்பிற்கும் ஜனனமரணத்திற்கும் அப்பாற்பட்டது; புராணமானது; சாசுவதமானது; என்றும் அழிவில்லாதது;--

66 நித்தியமானது; பிறக்காதது; புராதனமானது; விண்வெளியைப்போல் எங்கும் நிறைந்தது; ஆரம்பம் இல்லாதது; இடையறாதது; வளர்ச்சியோ மாறுதலோ இல்லாதது.

67 சொல்லுக்கு அப்பாற்பட்டதும் உருவமில்லாததும் ஆரம்பமில்லாததும் முடிவில்லாததும் அளக்கமுடியாததும் அழிவில்லாததும் வாசனையோ ருசியோ இல்லாததும் கறைபடாததுமான ஒன்றின் சொரூபத்தை யாரால் வர்ணிக்கமுடியும்?

68 இவ்வகையான நிர்க்குணமான ஆத்மாவை அஞ்ஞானத்தால் அறியமுடியாதபோது அஞ்ஞானத்தை ஞானத்தால் விலக்குங்கள். ஆத்மா சூனியம் என்று மட்டும் எப்பொழுதும் சொல்­விடாதீர்கள்.

69 ஸ்ரீஸாயீயின் சொந்தச் செல்வமான அந்தப் பரமஹம்ஸ நிலை எப்பேற்பட்டதுõ காலம் அதை ஒரு கணத்தில் திருடிக்கொண்டு போனபிறகு அதை மறுபடியும் பார்க்கமுடியுமா?

70 மனைவி, மக்கள், செல்வம் ஆகியவற்றால் பந்தப்பட்ட சாதாரண இல்லற பக்தனை விட்டுவிடுங்கள். அனைத்தையும் துறந்த யோகிகளும் ஸாயீதரிசனத்திற்கு வந்து பாதகமலங்களில் மூழ்கினர்.

71 ஆசை, வினையாற்றல் ஆகிய இவ்வுலக பந்தங்களி­ருந்து விடுபட்டவரும், தேகம் குடும்பம் போன்ற உலகியல் பாசங்களி­ருந்து முழுமையாக விடுபட்டவருமாகிய பக்தர் தன்யராவார் (சகல பேறுகளையும் பெற்றவராவார்).

72 ஸாயீயே அவருடைய பார்க்கும் விஷயமாக அமைந்துவிட்ட பிறகு அவர் வேறெதையும் நோக்குவாரா? பார்க்குமிடங்களிலெல்லாம் அவருக்கு ஸாயீயே தெரிவார். அவருக்கு இவ்வுலகில் ஸாயீ இல்லாத இடமே இல்லாமல் போய்விடும்.

73 ஸாயீயின் நாமத்தை வாயிலும், பிரேமையை இதயத்திலும் தரித்து, அவர் எப்பொழுதும் சாந்தமாகவும் க்ஷேமமாகவும் இருப்பார். ஏனெனில், ஸாயீயே அவரை ரட்சிப்பார்.

74 செவிச்செல்வ விஷயத்திலும் இதுவே கதி. காதுகளுக்கு ஸாயீயைத் தவிர வேறு கேள்வியே இல்லை. மூக்கும் ஸாயீயின் பரிமளத்தால் நிறையும்; நாக்கிலும் ஸாயீ நாமத்தின் இனிமையான சுவையே ஊறும்.

75 ஸாயீயின் புன்னகை தவழும் முகம் எவ்வளவு அற்புதமானதுõ அப் புன்னகை அளித்த சுகம் எவ்வளவு தூய்மையானதுõ ஸாயீயின் திருமுகத்தை நேரில் பார்த்தவர்களும் அமிருதத்தை ஒத்த அவருடைய திருவாய்மொழியைக் கேட்டவர்களும் மஹாபாக்கியம் பெற்றவர்கள்õ

76 மங்களங்களின் உறைவிடமும், சுகத்திற்கும் சாந்திக்கும் பிறப்பிடமும், விவேகமும் வைராக்கியமும் நிறைந்தவருமான ஸாயீ எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருந்தார்.

77 வயிறு நிரம்பப் பாலைக் குடித்த பிறகும் கன்று தாயிடமிருந்து பிரிவதற்கு விரும்பாது. கன்றைத் தாயிடமிருந்து பிரிக்கக் கயிறு கொண்டுதான் கட்டவேண்டும். அதுபோலவே, நம்முடைய மனத்தை உலக இன்பங்களி­ருந்து பிரித்து, குருபாதங்களில் கட்டிவிடவேண்டும்.

78 குருவின் கிருபையையும் காதலையும் பெறுவதற்கு அவருடைய பாதகமலங்களை வழிபடுங்கள். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அருளும் நலந்தரும் போதனையை ஏற்பதற்கு இதயத்தில் இடம் செய்துகொள்ளுங்கள்.

79 இந்திரிய சுகங்களை யதேச்சையாக அனுபவிக்கும் போதுங்கூட உள்ளுக்குள்ளே எப்பொழுதும் ஸாயீபிரீதி இருக்கட்டும். ஏனெனில், அதுவே உலகியல் விஷயங்களுக்கும் ஆன்மீக விஷயங்களுக்கும் அபயமளிக்கும்.

80 கால்கள் முதலாக வெளிவந்து பிறந்தவரின் கண்களில், ஸித்திகள்பெற்ற மந்திரவாதியின் மையைப் பூசினால், அவருக்கு மறைந்திருக்கும் புதையல்களும் கண்ணுக்குப் புலப்படும். அதுபோலவே, குருவின் பாததூளிகள் கண்களில் பட்டவருக்கு ஞானமும் விஞ்ஞானமும் மலரும்.

81 சித்தர்களுக்கு எந்தெந்த லக்ஷணங்கள் (சிறப்பியல்புகள்) உண்டோ, அவையே சாதகர்களின் பயிற்சிமுறையாக அமையவேண்டும். கடுமையான பயிற்சியும் நீண்டகாலப் பிரயத்தனமும் செய்பவரே வெற்றியடைகிறார்.

82 நெய் பாலுக்குள் இருக்கத்தான் செய்கிறது. ஆயினும், பாலைக் காய்ச்சி அது ஆறியபின் புளித்த மோரை உறையாக ஊற்றாவிட்டால் மோரும் கிடைக்காது; வெண்ணெயும் கிடைக்காது. முறையாகச் செயலாற்றி மோர் கிடைத்த பின்பும், நெய் கிடைப்பதற்கு மேலும் செயல்பட வேண்டும்.

83 மோரைக் கடையாமல் வெண்ணெய் கிடைக்காது. வெண்ணெயையும் அடுப்பிலேற்றிப் பதமாகக் காய்ச்சினால்தான் சுவை மிகுந்த நெய் கிடைக்கும்.

84 தேவையானவை என்னவென்றால், கடமையைச் செய்தும் தூய்மை தரும் சடங்குகளைச் செய்தும் கிடைக்கும் பலமும், பிறந்ததி­ருந்தே செய்யும் ஆன்மீக அப்பியாசங்களால் விளையும் விவேகபுத்தியுந்தான். பயிற்சியின்றிச் சித்தம் சுத்தமடையாது; மனம் தூய்மையடையாது; ஞானம் பிறக்காது.

85 நிர்மலமான சித்தத்தை விருத்தி செய்துகொள்ளாவிட்டால் ஆத்மஞானம் பிறக்காது. ஆகவே, தன்னை அறிந்த நிலையை அடையும்வரை பக்திமார்க்கத்தைக் கைவிடலாகாது.

86 நான்கு முக்திநிலைகள் என்னும் கலசங்களுக்குமேல் துறவென்னும் கொடி உயரப் பறக்குமாறு ஆத்மஞானமாகிய கோயிலை எழுப்புவதற்கு பகவானின்மீது பக்தியென்பதே அஸ்திவாரம்.

87 நாய்களும் பன்றிகளும் மலத்தைத் தின்றுவிட்டு இரவுபகலாகக் குப்பைமேட்டில் புரளுகின்றன. அவையும் விஷயபோகங்களை அனுபவிக்கின்றன. மனிதப்பிறவி எடுத்த பிறகும் நாம் அவற்றைப் போலவே செயல்படுவது முறையா?

88 மனித தேகத்தில் வாழும்போது, கடமைகளைச் செவ்வனே செய்தும் சுயதர்ம அனுஷ்டானங்களைச் செய்தும் தவம் செய்தும் மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். தூய்மையான மனம் அகண்டமான பிரம்ம ஸித்தியை அளிக்கும்.

89 'சாதுக்களுக்கு சேவை செய்வது முக்தி மார்க்கத்தின் வீடு; சிற்றின்பம் நரகத்தின் நுழைவாயில்.ஃ பூஜைக்குரிய ஆன்றோர்களின் இந்த வாக்கு எப்பொழுதும் சிந்தனையில் வைக்கத்தக்கது.

90 எப்பொழுதும் நன்னெறியில் நடந்து உயிரைக் காப்பதற்கு மட்டும் உணவுண்டு வீடும் குடும்பமும் வேண்டாவென்று ஒதுக்கி வாழும் சாது தன்னியராவார்.

91 எவர்களெல்லாம் கண்களையும் சிமிட்டாமல் ஸாயீயைப்பற்றிச் சிந்தனை செய்கிறார்களோ, அவர்களெல்லாம் அற்புதமான அனுபவத்தைப் பெறுகிறார்கள். அவர்களிடம் விசுவாசம் ஏற்பட்டு ஸாயீ அவர்களின்மேல் தியானம் செய்கிறார்õ

92 குரு நாமஸ்மரணம் மஹத்தான முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், குருவும் பக்தஸ்மரணம் செய்கிறார்õ தியானம் செய்பவர், தியானம் செய்யப்படுபவருடன் ஒன்றிவிடுகிறார்õ இருவரும் பூரணமாகத் தம்மை மறந்துவிடுகின்றனர்.

93 ''நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும். நானோ இரவுபகலாக உங்களையே நினைத்துக்கொண் டிருக்கிறேன்.ஃஃ இது பாபாவின் பிரேமை பொதிந்த திருவாய்மொழி; பலருக்கு ஞாபகமிருக்கும்.

94 நமக்கு ஞானக்கதைகள் ஏதும் வேண்டா. இந்த ஸாயீயின் போதியே (தினமும் பாராயணம் செய்யும் நூலே) நமக்குப் போதுமானது. எத்தனையோ பாவங்கள் நம் தலையில் இருந்தாலும் சங்கடங்களி­ருந்து விடுவிப்பவர் அவரே.

95 தினமும் முழுமையாகப் பாராயணம் செய்யமுடியாவிட்டாலும், குருபக்தி சம்பந்தப்பட்ட அத்தியாயங்களையாவது தினமும் காதால் கேட்டு இதயத்தின் ஆபரணமாக அணிந்துகொள்ள வேண்டும்.

96 ஒரு நாளின் எப்பகுதியிலாவது தினமும் இந்தச் சரித்திரத்தைப் படிப்பவருக்கு ஸ்ரீஹரி குருராஜருடன் சேர்ந்து காட்சி அளிப்பார்.

97 அகண்டமாக இச் சரித்திரம் படிக்கப்படும் வீடுகளில் திருமகள் நித்தியவாசம் செய்வாள். ஸப்தாஹமாகப் (ஏழு நாள்களுக்குள் ஒரு சுற்று படித்து முடித்தல்) படிப்பவர்களின் தரித்திரம் பறந்தோடும்.

98 இவ்வாறு நான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டா. ஏனெனில், என் சொல் உங்களுக்கு சமுசயங்களை (ஐயங்களை) விளைவிக்கலாம். என்னுடைய வாய்மூலமாக ஸாயீயே இதைச் சொல்கிறார். ஆகவே, இது விஷயத்தில் அனாவசியமான கற்பனைகளையும் சந்தேகங்களையும் தூக்கியெறியுங்கள்.

99 சகலமான நற்குணங்களின் சுரங்கமும் பக்தர்களுக்குக் கைவல்ய பதவியை (முக்தியை) அளிப்பவருமான ஸாயீயின் கதையை பக்தர்கள் இப்பொழுது கேட்கவேண்டும். அவருடைய கதைகள் க­யுகத்தின் பாவங்களை அழிக்கும்.

100 ஓ, ஞானிகளின் சரித்திரங்களுக்குமுன், சொர்க்கத்தின் சுகங்கள் எம்மாத்திரம்? உடனுக்குடன் பலனளிக்கும் சுவாரசியமான இக் கதைகளைக் கேட்பதை விடுத்து, யார் அந்த சுகங்களைச் சீந்துவார்?

101 இன்பமும் துன்பமும் மனத்தின் விகாரங்கள். சத்சங்கம் நம்மை இந் நிலைக்குமேல் இட்டுச்செல்கிறது. நம்முடைய மனத்தை சுகமோ துக்கமோ இல்லாத பிரபஞ்ச உணர்வுடன் சத்சங்கம் ஒன்றுசேர்க்கும்.

102 துறவி தனிமையில் காணும் சுகத்தையும் பக்தன் பக்தியில் காணும் சுகத்தையும் தேவலோகத்து இந்திரனோ பூலோகத்துச் சக்கரவர்த்தியோ யுகமுடிவுவரை முயன்றாலும் அடையமுடியாது.

103 பிராரப்த கர்மத்தினால் (முன்ஜன்ம வினைகள்) விளையும் சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்தே தீரவேண்டும். கர்மத்தை அனுசரித்தே புத்தியும் வேலை செய்யும்õ ஆயினும், விதியால் நிர்ணயிக்கப்பட்டதையும் பக்தன் சுலபமாகத் தவிர்த்துவிடலாம்.

104 பிராரப்த கர்மத்தின் விளைவுகளி­ருந்து பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் விடுபடமுடியாது. அவசியம் நடந்தே தீரவேண்டிய நிகழ்ச்சிகளி­ருந்து தப்புவதற்கு வழியேதும் இல்லை.

105 துக்கங்கள் எவ்வாறு வேண்டப்படாதவையோ, அவ்வாறே சுகங்களும் எதிர்பார்க்கப்படாதவைõ முன்ஜன்ம வினைகளால் ஒரு மனிதனுக்கு என்னென்ன நடக்கப்போகின்றன என்பது ஞானிகளுக்கு முன்கூட்டியே தெரியும்õ

106 அகண்டமாக அவருடைய நாமத்தை ஜபம் செய்வதே நமது விரதமும் தவமும் தானமும். அவ்வப்பொழுது சிர்டீக்குப் பிரயாணம் செய்வதே நமது தீர்த்த யாத்திரை.

107 ஸாயீ, ஸாயீ என்று நாமஸ்மரணம் செய்வதே நமது மந்திரமும் அனுஷ்டானமும் தியானமும் புரஸ்சரணமும்1. ஆகவே அவரிடம் அனன்னியமாக சரணடையுங்கள்.

108 கள்ளங்கபடமற்ற பிரேமையுடனும் ஒருமித்த மனத்துடனும் அவரைப் பூஜைசெய்து பாருங்கள். அவர் செய்யும் விவரிக்கமுடியாத அற்புதங்களை மனத்துள்ளே அனுபவியுங்கள்.

109 கரும்பைச் சக்கையாய்ப் பிழிவது போன்ற ஆயாஸம் தரும் விவரங்கள் தற்பொழுது போதும்õ நமக்கு உடனே வெல்லம் வேண்டும்õ முன்னரே குறிப்பறிவிக்கப்பட்ட ரசமான கதையைக் கேட்க எல்லாரும் ஆவலாக இருக்கிறீர்கள்.

110 கேட்பவர்களின் இந்த உணர்வை நன்கு அறிந்த நான், நான் சொல்லப்போகும் அற்புதமான கதையை அவர்கள் கவனத்துடன் கேட்கும் வகையிலும் அவர்களுடைய ஆர்வம் மழுங்காத வகையிலும் கதாம்சம் இல்லாத பொதுவான தத்துவ விவரணத்தை இப்பொழுது நிறுத்திக்கொள்கிறேன்.

111 பாமரனும் மந்தமதி படைத்தவனுமாகிய நான் சொற்களைக் கோர்த்துச் செய்யுள் படைக்கும் திறமை பெற்றவனில்லை. நான் எழுதுவது, என்னுடைய பேனாவை அவருடைய கையால் பிடித்துக்கொண்டு ஸாயீ என்னை எழுதவைப்பதுவே.

112 ஸாயீ எனக்கு புத்தியைக் கொடுத்திராவிட்டால், அவருடைய சரித்திரத்தை எழுத நான் யார்? அவரே அவருடைய கதையைச் சொல்­ என்னிடமிருந்து எழுதி வாங்கிக்கொள்கிறார்.

113 நான் ஏற்கெனவே உறுதியளித்தபடி, சாவடி, ஹண்டி, பிரசாத விநியோகம் இவற்றைப்பற்றிய கதையை இப்பொழுது தொடர்வோமாக. கதையைக் கவனத்துடன் கேளுங்கள்.

114 சம்பந்தப்பட்ட கதைகள் ஏதாவது ஞாபகத்திற்கு வந்தால் அவற்றையும் சொல்கிறேன். விவரணத்தைக் கவனமாகக் கேளுங்கள்.

115 ஸாயீயின் அற்புதமான கதைகள் பாக்கியமளிப்பவை. கேட்பதால் ஏற்படும் விளைவுகளும் பாக்கியமளிப்பவை. மனத்தில் சிந்திக்கச் சிந்திக்க நம்முடன் பிறந்த நற்குணங்கள் மேலோங்கும். ஸாயீபாதங்களில் ஸத்பா(ஆஏஅ)வம் வளரும்.

116 இப்பொழுது நாம் முத­ல் சாவடி வர்ணனை செய்வோம். அலங்கார அணிவகுப்புத் திருவிழாவைப்பற்றிச் சொற்சித்திரம் ஒன்று வரைவோம். ஒருநாள் விட்டு ஒருநாள் நியமமாக பாபா சாவடியில் உறங்கினார்.

117 ஒருநாள் மசூதியில் உறங்கினார்; மறுநாள் சாவடியில் உறங்கினார். மஹாசமாதி அடையும்வரை பாபா இரவில் உறங்கும் கிரமம் இவ்வாறு இருந்தது.

118 பின்னர், 1909 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் தேதியி­ருந்து சாவடி வழிபாடும் பஜனையும் பூஜையும் தொடங்கின.

119 சாவடியில் நடந்த திருவிழாவை என் புத்திக்கு எட்டியவாறு விவரிக்கிறேன். ஸாயீயின் கிருபை இதற்குத் தேவையான அருள்வெளிப்பாட்டைத் தந்து என்னுடைய முயற்சியைப் பூரணமாகப் பலனுள்ளதாகச் செய்யும்.

120 சாவடியில் உறங்கும் முறைநாளன்று பஜனை மண்ட­ மசூதிக்கு வரும். பிற்பகல் வேளையி­ருந்தே சபாமண்டபத்தில் பஜனை ஆரம்பித்துவிடும்.

121 பின்புறத்தில், துளசி பிருந்தாவனத்திற்கு இடப்பக்கத்தில் ஒளிவீசும் ரதம் நிற்கும். பாபா முன்னால் அமர்ந்திருப்பார். மத்தியில் பஜனை பாடும் பக்தர்கள் அமர்ந்திருப்பர்.

122 ஹரிபஜனையில் ஈடுபாடுகொண்ட ஆடவரும் பெண்டிரும் நேரத்தோடு வந்து சபாமண்டபத்தில் தம் தம் இடங்களில் அமர்ந்துகொள்வர்.

123 சிலர் சேகண்டியைக்1 கையில் எடுத்துக்கொள்வர்; சிலர் சப்பளாக்கட்டையால் கைத்தாளம் போடுவர். சிலர் மிருதங்கத்துடனும் வேறு சிலர் கஞ்சிராவுடனும் பஜனையில் சேர்ந்துகொள்வர். இவ்வாறாக, பஜனை கோலாகலமான கூட்டிசையாக அமையும்.

124 ஸமர்த்த ஸாயீ தம்முடைய காந்தசக்தியால் இரும்பு உலோகமான பக்தர்களை அவர்கள் அறியாதவாறு இழுத்தார்.

125 தீவட்டி ஏந்துபவர்கள் முற்றத்தில் தங்களுடைய தீவட்டிகளைத் தயார் செய்துகொள்வர். சிலர் பல்லக்கை அலங்கரிப்பதில் ஈடுபட்டிருப்பர். வாயி­ல் பல்தார்கள் (வாயில்காப்போர்) ஜயகோஷமிட்டுக் கட்டியங்கூறுவர்.

126 மக்கள் கூடுமிடம் மாவிலைத் தோரணங்களாலும் உயர்ந்து பறக்கும் கொடிகளாலும் அலங்கரிக்கப்படும். சிறுவரும் சிறுமியரும் புத்தாடைகளையும் ஆபரணங்களையும் அணிந்துகொண்டு மகிழ்ச்சியுடன் ஜம்பமாக நடமாடுவர்.

127 மசூதியைச் சுற்றி வரிசைவரிசையாக தீபங்கள் ஏற்றிவைக்கப்படும். 'சியாம்கர்ணஃ என்ற பெயர்கொண்ட அருமையான குதிரை பூரணமாகச் சிங்காரிக்கப்பட்டு வாயி­ல் தயாராக நின்றுகொண் டிருக்கும்.

128 தாத்யா பாடீல் தம்முடைய நண்பர்களுடன் திடீரென்று வந்து, பாபாவுக்கு அருகில் அவருடன் கிளம்புவதற்குத் தயார் நிலையில் உட்கார்ந்துகொள்வார்.

129 பாபா தாம் கிளம்புவதற்குத் தயாராகிவிட்டாலும், தாத்யா பாடீல் வரும்வரை தாம் இருக்குமிடத்திலேயே உட்கார்ந்துகொண்டு காத்திருப்பார்.

130 தாத்யா பாடீல் பாபாவின் அக்குளுக்குக்கீழ் கைகொடுத்து எழுந்திருப்பதற்குக் கைலாகு கொடுத்த பிறகுதான், பாபா சாவடிக்குச் செல்வதற்குக் கிளம்புவார்.

131 தாத்யா பாடீல் பாபாவை மாமாவென்று அழைத்தார். அவர்களுடைய பரஸ்பர பிரேமை அவ்வாறு இருந்தது. அவர்களிடையே நிலவிய நெருக்கமான உறவிற்கு ஈடிணையே இல்லை.

132 உட­ன்மேல் எப்பொழுதும் அணியும் கப்னி, அக்குளில் இடுக்கப்பட்ட ஸட்கா, கைகளில் புகையிலையும் சிலீமும், தோளின்மேல் ஒரு துணி.

133 பாபா இவ்வாறு தயாரானவுடன் தாத்யா பாடீல் அவருக்கு ஒரு ஜரிகைக்கரை போட்ட அழகான சால்வையை அணிவிப்பார்.

134 சுவரோரமாக விறகுகுச்சிகள் ஒரு கட்டாக இருக்கும். பாபா தமது வலக்கால் கட்டைவிரலால் அதை அப்பொழுதுக்குப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்.

135 உடனே தமது வலக்கையால் ஜுவாலையை அணைத்துவிடுவார். அதன் பிறகே சாவடிக்குப் போகக் கிளம்புவார்.

136 ஸாயீ கிளம்பும்போது இன்னிசை வாத்தியங்கள் முழங்க ஆரம்பிக்கும். தீவட்டிகளும் சந்திரஜோதிவாணங்களும் நான்கு பக்கங்களிலும் ஏற்றப்படும்.

137 வில் போன்று வளைந்தும் வட்டமாகவும் பலவிதமான வடிவமைப்புகளில் அமைந்த, சிறிய மற்றும் பெரிய கொம்புகள் ஊதப்படும். சிலர் எக்காளம் ஊதினர். சிலர் ஜால்ராவாலும் சிலர் சேகண்டியாலும் தாளம் போட்டனர். கைத்தாளம் போட்டுக்கொண்டு வந்தவர்கள் அநேகம்.

138 மிருதங்கங்களையும் வீணைகளையும் 'ஜண்ஜண்ஃ என்றொ­த்துக்கொண்டு ஆண்களும் பெண்களும் பிரேமையுடன் வரிசைவரிசையாகப் பஜனையுடன் சேர்ந்து ஊர்வலமாக நடந்தனர். ஸாயீ நாம கோஷம் வானைப் பிளந்ததுõ

139 சிலர் பதாகைகளை (விருதுக்கொடிகளை) நிலைதவறாது கவனமாகப் பிடித்துக்கொண்டு ஊர்வலத்தில் நடந்தனர். சிலர் கருடன் சித்திரம் வரையப்பட்ட கொடிகளை ஏந்திப் பெருமையுடன் நடந்தனர். இவ்வாறாக, மக்கள் அனைவரும் சந்தோஷமாக பஜனை பாடிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

140 சகல ஜனங்களும் மிக்க மகிழ்ச்சியுடன், பறக்கும் பதாகைகளுக்கும் உரத்த மேளதாளச் சத்தத்திற்கும் கொம்புகளின் சத்தத்திற்கும் சியாம்கர்ண செய்த குளம்படிச் சத்தத்திற்கும் ஜயகோஷச் சத்தத்திற்கும் இடையே, ஊர்வலமாகச் சென்றனர்.

141 இவ்வளவு ஆரவாரத்திற்கும் இன்னிசை வாத்தியங்களின் பேரொ­க்கும் நடுவே பாபா மசூதியை விட்டுக் கிளம்புவார். அவர் படியை மிதித்தவுடன் வாயில்காப்போர் பாபாவுக்குக் கட்டியங்கூறுவர்.

142 சேகண்டிகளும் மிருதங்கங்களும் கஞ்சிராக்களும் பக்கவாத்தியங்களாக ஒ­க்க, சிலர் வீணை வாசித்தனர்; சிலர் சப்ளாக்கட்டையால் தாளம் போட்டனர்; பக்த மண்ட­ பஜனை பாடியது. பக்த சம்மேளனம் பிரேமையால் பொங்கியது.

143 பல பக்தர்கள் பதாகைகளையும் கொடிகளையும் ஏந்திக்கொண்டு ஆனந்தமாக ஊர்வலத்தில் நடந்து வந்தபோது, சிலர் பாபாவின் இருபக்கங்களிலும் சவரியால் (சாமரத்தால்) தலைக்குமேல் விசிறிக்கொண்டு வந்தனர்.

144 சிலர் முன்னோடிகளாகச் சென்று ஒற்றையாகவும் இரட்டையாகவும் நடைவிரிப்புகளை விரித்தனர். பாபா விரிப்பின்மீது மெதுவாக நடந்துசென்றார். சிலர் அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டனர். சிலர் சவரியால் அவருக்கு விசிறினர்.

145 தாத்யா ஸாஹேப் இடக்கையைப் பிடித்துக்கொள்வார். மஹால்ஸாபதி வலக்கையைப் பிடித்துக்கொள்வார். பாபு ஸாஹேப் ஜோக்(எ) ஒரு பெரிய குடையை பாபாவின் தலைக்குமேல் உயரமாகப் பிடித்துக்கொள்வார். இவ்வாறு பாபா சாவடியை நோக்கி ஊர்வலமாகச் செல்வார்.

146 சியாம்கர்ண என்ற பெயர்கொண்ட தாமிரவர்ணக் குதிரை எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுக் கால்களில் கட்டிய சதங்கைகள் 'ஜண்ஜண்ஃ என்றொ­க்க வழிவகுத்துக்கொண்டு நடந்துசெல்லும்.

147 அதிகாரக் கோலேந்திகள் அவ்வப்பொழுது ஸாயீ நாம கோஷம் செய்துகொண்டு முன்னால் சென்றனர். குடையேந்துபவர் பெரிய குடையொன்றை ஏந்திச் சென்றார். சிலர் சவரிகளை ஏந்திச் சென்றனர்.

148 வாத்தியங்கள் இன்னிசை முழங்கின. பக்தர்கள் பாபாவுக்கு ஜயஜயகோஷம் கர்ஜித்தனர். இவ்வாறு பக்தர்களின் கூட்டம் நடந்துசென்றபோது அதிகாரக் கோலேந்திகள் அவ்வப்பொழுது ஜயகோஷத்தில் பிரேமையுடன் கலந்துகொண்டனர்.

149 ஹரிநாமமும் அவ்வப்பொழுது கர்ஜிக்கப்பட்டது. பக்தர்களின் சம்மேளனம் சேகண்டி, மிருதங்கம், ஜால்ரா இவற்றின் ஒ­களுக்கேற்ப நடைபோட்டுச் சென்றது.

150 ஊர்வலம் தெருமுனையை அடையும் சமயத்தில், ஆனந்தமாக ஜயஜயகோஷம் போட்டுக்கொண்டு ஸாயீக்கு முன்னால் செல்லும் பஜனைகோஷ்டி நிற்கும்.

151 சேகண்டிகள், ஜால்ராக்கள், டோலக்குகள் போன்ற வாத்தியங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒ­க்கப் பக்தி பா(ஆஏஅ)வத்துடன் பாடப்பட்ட பஜனை இசையின் ஆரவாரம் உச்சக்கட்டத்தை எட்டும். ஸாயீ நாம கோஷம் இவற்றையும் மீறி ஒ­க்கும்.

152 பஜனை இசையால் கிளர்ந்த ஆனந்தம் நிரம்பியவர்களாய் இருமருங்கிலும் ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் ஆண்களும் பெண்களும் எழுப்பும் ஸாயீ நாம கோஷம் வானைப் பிளக்கும்.

153 அவர்களுக்கு மே­ருந்த வானமே இசையால் நிறைந்தபோது மக்கட்கூட்டம் அகமகிழ்ச்சியால் பொங்கியது. இவ்விதமாகச் சாவடி ஊர்வலம் அனைவரும் கண்டு அனுபவிக்கவேண்டிய கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அந்த விழாக்கோலத்திற்கும் சோபைக்கும் ஈடிணையே இல்லை.

154 சாவடியின் முன்பாக பாபா நின்றபோது அவருடைய திருமுகத்தின் சோபை, உருக்கிய பொன் போன்றும், உதயகாலத்திலும் அஸ்தமனகாலத்திலும் வானை நிரப்பும் சூரியனுடைய பிரபையைப் போன்றும் செந்நிற ஒளி வீசியது.

155 அந்நேரத்தில் அவருடைய திருமுகத்தி­ருந்து வீசிய ஒளி உதயசூரியனின் பிரபையை ஒத்திருந்தது. இக் காட்சி, பிரபஞ்ச சக்தியே அவருடைய திருமுகத்தில் ஒளியாக வீசியது போன்றிருந்தது. இந்த லாபத்தை யாராவது விட்டுவிடுவார்களா என்னõ

156 அந்த சமயத்தில் அவரை தரிசனம் செய்தவர்கள் தன்யர்கள். அவர் வடக்கு நோக்கி யாரையோ கூப்பிடுபவரைப்போல ஒருமுனைப்பட்ட மனத்துடன் நின்றபோது அவருடைய திருமுகம் செந்நிறத்தில் ஜொ­த்தது.

157 இன்னிசை வாத்தியங்களின் முழக்கத்திற்கு நடுவே மஹராஜ் ஆனந்தம் நிரம்பியவராகத் தம்முடைய வலக்கையை மேலும் கீழுமாக மீண்டும் மீண்டும் ஆட்டுவார்.

158 பக்தர்களில் சிரேஷ்டராகிய (தலை சிறந்தவராகிய) ஹரி ஸீதாராம் தீக்ஷிதர் ஒரு வெள்ளித்தட்டு நிறையப் பூக்களை வைத்துக்கொண்டு பாபாவின்மேல் மறுபடியும் மறுபடியும் பூமாரி பொழிவார்.

159 இவ்வாறாக, காகாஸாஹேப் தீக்ஷிதர் 'குலால்ஃ (சிவப்பு வர்ணப் பொடி) கலந்த ரோஜாக்களைப் பிரேமையுடன் பாபாவின் சிரத்தின்மீது மீண்டும் மீண்டும் பொழிவார்.

160 குலால் கலந்த ரோஜாக்களை அவர் பொழியும்போது கஞ்சிராக்களும் ஜால்ராக்களும் சேகண்டிகளும் பேரிகைகளும் ஒருசேர ஒ­த்து ஆரவாரம் செய்யும்.

161 கிராமமக்களும் பாபாவின் பக்தர்களும் பிரீதியுடன் தரிசனம் செய்ய வந்தனர். அந்த வேளையில் பாபாவின் திருமுகம் அருணன் (உதயகால சூரியன்) உதித்ததுபோல் செந்நிற ஒளியால் அற்புதமாக ஜொ­த்தது.

162 அந்தத் தேஜோவிலாஸத்தைப் பார்த்தவர்களின் கண்கள் வியப்பால் விரிந்து மலர்ந்தன. அவர்களுடைய மனம் பிரேமையால் உல்லாசமடைந்தது; உலகியல் துன்பங்கள் அனைத்தும் ஒழிந்ததுபோல் உணர்ந்தனர்.

163 ஓ, பாலசூரியனைப் போன்ற அந்த திவ்விய தேஜசும் அற்புதமுந்தான் என்னேõ அவருக்கு முன்னால் பேரிகைகள் நெடுநேரம் முழங்கின.

164 வடக்குப் பார்த்தவாறு, ஒரே இடத்தில் ஒன்றரை மணி நேரம் தம்முடைய வலக்கையை மேலும் கீழும் மீண்டும் மீண்டும் ஆட்டிக்கொண்டே பாபா நிற்பார்.

165 பாபாவின் திருமுகவொளிவட்டம் அப்பொழுது தாழம்பூவின் நடுப்பாகம்போல் கொஞ்சம் சிவப்பு கலந்த மஞ்சள் நிறமாக ஜொ­க்கும். இந்த அழகை வாக்கால் வர்ணிக்க இயலாது; கண்களால் பார்த்துத்தான் அனுபவிக்கமுடியும்.

166 மஹால்ஸாபதி ஆவேசம் பிடித்து நடனமாட ஆரம்பித்த பிறகும், பாபா ஒருமுகமான நிலையி­ருந்து கலையாதது அனைவர்க்கும் ஆச்சரியத்தை விளைவித்தது.

167 ஊர்வலத்தில் மஹால்ஸாபதி பாபாவின் கப்னியின் நுனியைப் பிடித்துக்கொண்டு அவருக்கு வலப்பக்கத்தில் நடந்து வருவார். பாபாவின் இடப்பக்கத்தில் தாத்யா கோதே பாடீல் ஒரு லாந்தரைக் (கஹய்ற்ங்ழ்ய்) கையில் பிடித்துக்கொண்டு வருவார்.

168 ஓ, அந்த உற்சவந்தான் எவ்வளவு அற்புதமானதுõ அந்தப் பிரேமபக்தி எவ்வளவு உன்னதமானதுõ அந்தக் கோலாகலத்தைக் காண்பதற்குச் சான்றோர்களும் செல்வர்களும் அங்கு ஒன்றுகூடினர்.

169 பாபாவின் சந்திரவதனம் பொன்னிற ஒளியுடன் ஜொ­த்த காட்சி வர்ணனைக்கு அப்பாற்பட்டது. அங்கிருந்த மக்கள் அதைக் கண்கொட்டாமல் பார்த்தனர்; ஆனந்தத்தால் நிரம்பினர்.

170 எல்லையற்ற பிரேமபக்தியாலும் இதயத்தை மூழ்கடித்த ஆனந்தத்தாலும் நிரம்பியவர்களாய் மக்கள் இருமருங்கிலும் மெதுவாக ஊர்வலத்தில் நடந்தனர்.

171 வருங்காலத்தில் யாருமே இந்தக் கோலாகலமான சாவடி ஊர்வலத்தைக் கண்களால் காணமுடியாது. அந்த நாள்கள் கடந்துவிட்டன; அக் காலம் மலையேறிவிட்டது. பழைய நினைவுகளை அசைபோட்டு மனத்தைச் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான்.

172 இவ்விதமாக, வாத்தியங்களின் இன்னிசைக்கும் அவ்வப்பொழுது எழும்பிய ஜயகோஷத்திற்கும் இடையே, பாபா சாவடியி­ருந்த ஆசனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தெய்வங்களுக்குரிய உபசாரங்கள் செய்யப்பட்டன.

173 தலைக்குமேல் வெள்ளைத் துணியொன்று விதானமாகக் (கூரை போன்ற விரிப்பு) கட்டப்படும். தொங்கும் சரக்கொத்து விளக்குகளும் சாதாரண விளக்குகளும் ஏற்றப்படும். பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளில் விளக்குகளின் ஒளி பிரதிப­க்கும். சாவடி பார்ப்பதற்கு ஜகஜ்ஜோதியாகக் காட்சியளிக்கும்õ

174 பின்னர் பக்தர்கள் ஒன்றுசேர்ந்து சாவடிக்குள் செல்வர். தாத்யா, பாபாவின் ஆசனத்தைத் தயார் செய்துவிட்டு பாபாவைக் கையைப் பிடித்து அழைத்துவந்து உட்காரவைப்பார்.

175 சாய்ந்து உட்காருவதற்காக, பஞ்சடைக்கப்பட்ட நீண்ட திண்டுடன் விளங்கிய இந்த உன்னதமான ஆசனத்தில் பாபா அமர்ந்தவுடன் அவருக்கு மேலாக ஒரு நீளமான அங்கவஸ்திரம் அணிவிக்கப்படும்.

176 மகிழ்ச்சி பொங்கும் இதயத்துடன் திவ்வியமான ஆடைகளை அணிவித்தபின் மக்கள் பக்தியுடன் பூஜை செய்வர். அவருக்கு மாலைகளை அணிவித்தபின் ஆரதிப் பாட்டை உரக்கப் பாடுவர்.

177 மணம் கமழும் சந்தனத்தை இடுவர். கைகளில் வாசனை திரவியங்களைப் பூசுவர். அழகான ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிவிப்பர். கடைசியாக, ஒரு கிரீடத்தைத் தலைமேல் பொருத்துவர்.

178 சிலசமயங்களில் பொன்னாலான கிரீடம்; சிலசமயங்களில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டதும் மயிற்பீ­ செருகப்பட்டதுமான தலைப்பாகை. தொண்டைக்கு நேராக வைரமும் மாணிக்கமும் அணிவிப்பர்.

179 பிறகு கழுத்திற்கு நல்முத்துமணிமாலைகளை அணிவிப்பர். தீபங்களின் ஒளியில் இவ்வழகான ஆடைகளும் அணிகலன்களும் ஜொ­த்த அழகே அலாதியானது.

180 நெற்றியில் நறுமணம் கமழும் கஸ்தூரியால் கறுப்பு நிறத்தில் ஒற்றைக்கோடு நாமம் இடப்படும். நடுவில் வைஷ்ணவ குல சம்பிரதாயத்தையொட்டி ஒரு கறுப்புநிற வட்டப் புள்ளியும் இடப்படும்.

181 நுணுக்கமான தங்கச்சரிகை வேலைப்பாடு நிறைந்த, விலையுயர்ந்த, கத்தரிப்பூ நிற அங்கவஸ்திரம் நழுவினால், இரண்டு பக்கங்களி­ருந்தும் ஜாக்கிரதையாகவும் யாரும் அறியாதவாறும் பக்தர்களால் பிடித்துக்கொள்ளப்பட்டது.

182 அதுபோலவே, தங்கக்கிரீடத்தையோ தலைப்பாகையையோ பின்னா­ருந்து பக்தர்கள் மெலுக்காகவும் ஜாக்கிரதையாகவும் முறைபோட்டுப் பிடித்துக்கொண்டனர்.

183 தப்பித்தவறித் தலையி­ருக்கும் பளு தெரிந்துவிட்டால், பாபா அதைத் தூக்கி எறிந்துவிடுவார் என்பதே பக்தர்களுடைய பயமும் விசாரமும். ஆயினும், பாபாவின் தலையில் மகுடம் அணிவிக்கவேண்டும் என்ற எல்லையில்லாத பிரேமையும் ஆசையும் அவர்களுக்கு இருந்தது.

184 சர்வாந்தர்ஞானியான பாபாவுக்கா அவர்களுடைய தந்திரம் தெரியாம­ருக்கும்? பக்தர்களின் உற்சாகத்திற்கு இடமளித்து, விருப்பப்பட்டே பாபா மௌனமாக இருப்பார்.

185 பிரம்மானுபவத்தில் மூழ்கியவருக்கு தங்கஜரிகை வேய்ந்த அங்கவஸ்திரம் எதற்கு? உண்மையான சாந்தியின் சோபையால் ஒளிர்பவருக்கு மணிமகுடம் என்ன அழகு சேர்க்கும்?

186 ஆயினும், பக்தர்கள் பாபாவுக்கு நானாவிதமாக அலங்காரங்கள் செய்தனர்; நெற்றியில் மனோஹரமான சந்தனத் திலகம் இட்டனர்; குங்குமப் பொட்டும் இட்டனர்.

187 சிலர் வைரம் கட்டிய முத்துமாலைகளைக் கழுத்தில் அணிவித்தனர். சிலர் நெற்றியில் திலகமிட்டனர். இவ்வாறான சின்னச் சின்ன விஷயங்களை அனுமதித்து பாபா அவர்களுக்குச் செல்லம் கொடுத்தார்.

188 எல்லாச் சிங்காரிப்புகளும் முடிந்து, முத்து மாலைகள் கழுத்தில் ஜொ­க்க, தலைமேல் மகுடம் வைக்கப்பட்டவுடன் வீசிய சோபை காண்பதற்கு மிக அற்புதமாக இருந்தது.

189 நானாஸாஹேப் நிமோண்கர் குஞ்சலங்கள் தொங்கும் மஞ்சள் நிறத் துணிக்குடையை பாபாவின் தலைக்குமேல் பிடித்துக்கொண்டு பிடியுடன் சேர்த்துக் குடையைச் சக்கரம்போல் சுழற்றிக்கொண்டேயிருப்பார்.

190 பாபுஸாஹேப் ஜோக்(எ) குருவின் பாதங்களை அலம்பியபின் அர்க்கியம்1 பாத்யம் ஆகிய உபசாரங்களை மிகுந்த பக்தியுடன் செய்வார். பிறகு விதிமுறைகளின்படி பாபாவுக்குப் பூஜை செய்வார்.

191 முன்னால் ஒரு வெள்ளித்தட்டை வைத்து அதில் பாபாவின் பாதங்களை எடுத்துவைத்து மிகுந்த மரியாதையுடன் தம்முடைய இரண்டு கைகளாலும் அலம்புவார்.

192 குங்குமப்பூக் குழம்பைப் பேலாவில் எடுத்துக்கொண்டு குழம்பை பாபாவின் கைகளுக்குப் பூசுவார். பின்னர் உள்ளங்கையில் ஒரு பீடாவை வைப்பார். ஈதனைத்தையும் பாபா புன்னகை மலர்ந்த முகத்துடன் பார்த்துக்கொண் டிருப்பார்.

193 அரியணையில் பாபா அமர்ந்திருக்கையில் தாத்யாவும் மற்றும் சிலரும் பாபாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவர் ஆசுவாசமாக உட்கார்ந்திருக்க உதவி செய்வர். பிறகு அவருடைய பாதங்களை மரியாதையுடன் வணங்குவர்.

194 சாவடியின் தரை பல தடவைகள் தேய்த்துப் பெருக்கிச் சுத்தம் செய்யப்பட்டு ஸ்படிகம் போல் நிர்மலமாக மின்னியது. ஸாயீயின் அன்பில் கட்டுண்டவர்களாக சிறுபிள்ளைகளி­ருந்து வயோதிகர்கள்வரை எல்லாரும் அங்கு வந்தனர்.

195 பாபா அவ்வாறு 'காதியில்ஃ (அரியணையில்) சாய்ந்துகொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கையில் இருபுறங்களிலும் சவரிகளும் (சாமரங்களும்) விசிறிகளும் வீசப்பட்டன.

196 பிறகு, மாதவராவ் புகையிலையைக் கசக்கிச் சிலீமைத் தயார் செய்வார். அதைத் தாத்யா பாடீ­டம் கொடுப்பார். தாத்யா சிலீமை உறிஞ்சிப் புகையைவைத்துக் கொடுப்பார்.

197 புகையிலையில் ஜுவாலை வந்தவுடன் தாத்யா சிலீமை பாபாவின் கையில் கொடுப்பார். ஒருதடவை புகைத்த பிறகு, பாபா சிலீமை மஹால்ஸாபதியிடம் கொடுப்பார்.

198 சிலீம், புகையிலை தீர்ந்துபோகும்வரை மஹால்ஸாபதி, சாமா (மாதவராவ்), தாத்யா, என்று மாற்றி மாற்றிச் சுற்றிவரும்.

199 அந்தச் சிலீம் மஹா பாக்கியசா­. உயிரற்ற ஜடப்பொருளாக இருந்தபோதிலும் எவ்வளவு பாக்கியம் பெற்றது அந்தச் சிலீம்õ உயிருள்ளவர்களாகிய நம்மாலும் சிலீமின் சேவைக்கு இணையாக சேவை செய்யமுடியுமோ?

200 சிலீம் மஹா கடினமான தவத்தைச் செய்த பொருளாகும். சிறுவயதில் அது காலால் மிதித்துத் துவைத்துத் துவம்சம் செய்யப்பட்டது. பிறகு வெயி­ன் காய்ச்சலைத் தாங்கிக்கொண்டது. கடைசியாகச் சூளையில் அக்கினிப் பிரவேசமும் செய்தது.

201 பாபாவின் கையால் தொடப்படும் பாக்கியத்தைப் பெற்றது. மறுபடியும், எரியும் புகையிலையின் சூட்டைப் பொறுத்துக்கொண்டது. சூளையி­டப்பட்ட பிறகு, செம்மண் பூசப்பட்டு மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டாலும், பின்னர் பாபாவின் உதடுகளால் முத்தமிடப்படும் கௌரவத்தைப் பெற்றது.

202 கற்பூரமும் குங்குமப்பூவும் சந்தனமும் சேர்த்து அரைத்த குழம்பை பக்தர்கள் பாபாவின் கைகளில் பூசுவர். கழுத்தில் பூமாலைகளை அணிவித்து கைகளில் ஒரு பூச்செண்டையும் அளிப்பர்.

203 சதா புன்னகைபூத்த முகத்துடன், மிகுந்த பிரேமையுடனும் தயையுடனும் பக்தர்களை நோக்கியவருக்குத் தம்மைச் சிங்காரித்துக்கொள்வதில் என்ன அபிமானம் இருந்திருக்கமுடியும்? பக்தர்களைத் திருப்திசெய்வதற்காகவே இவையனைத்தையும் பாபா ஏற்றுக்கொண்டார்.

204 பக்தியென்னும் விலைமதிப்பற்ற ஆபரணத்தை அணிந்து சாந்தியென்னும் அழகில் மூழ்கியவருக்கு, மாலைகளாலும் மணிகளாலும் செய்யப்பட்ட உலகநடையான அலங்காரத்தில் என்ன நாட்டம் இருந்திருக்க முடியும்?

205 துறவின் உருவாக வாழ்ந்தவருக்கு மரகதக் கற்களாலான அட்டிகை எதற்கு? ஆயினும், பக்தர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டபோது அவர்களுடைய களிப்பு நாட்டத்தைத் திருப்திசெய்வதற்காகக் கழுத்தில் அவற்றை அணிந்துகொள்வார்.

206 மரகதம் இழைத்த தங்கச் சங்கி­களும் பதினாறு சரம் முத்துமாலைகளும் அன்றலர்ந்த தாமரைகளுடன் சேர்ந்து அவருடைய கழுத்தை அலங்கரித்தன.

207 மல்­கையும் முல்லையும் துளசியும் சேர்த்துக் கட்டப்பட்ட மாலைகள் அவருடைய கழுத்தி­ருந்து கால்வரை நீண்டு புரண்டன. கழுத்தைச் சுற்றி முத்தாலான ஆபரணங்கள் அபூர்வமாக ஜொ­த்தன.

208 அவருடைய மார்பில் தங்கப்பதக்கம் பதிக்கப்பட்ட மரகத அட்டிகை தவழ்ந்தது. நெற்றியில் இடப்பட்ட கறுப்பு நிறத் திலகம் அழகுக்கு அழகு சேர்த்தது.

209 அவர் ஒரு சிறந்த வைஷ்ணவரைப்போல ஜொ­த்தார். தலைக்குமேல் குடை சுழன்றது; சாமரங்கள் வீசின. தங்கச்சரிகைக்கரை போட்ட சால்வை போர்த்தியிருந்தார். அவரை எப்படிப் பக்கீர் என்று சொல்லமுடியும்?

210 மங்கள வாத்தியங்கள் பின்புலத்தில் முழங்க, ஜோக்(எ)தான் பெரும்பாலும் ஐந்து விளக்குகள் பிரகாசமாக எரியும் ஆரதியைச் சுற்றுவார்.

211 ஐந்து1 உபசாரங்களுடன் கூடிய பூஜை முடிந்த பிறகு, பளபளக்கும் பெரிய பஞ்சாரதித் தட்டை பத்திரமாக எடுத்து ஐந்து திரிகளையும் கற்பூரத்தையும் ஏற்றி பாபவுக்கு ஆரதி சுற்றுவார்.

212 ஹாரதி நடந்து முடிந்த பிறகு எல்லா பக்தர்களும் ஒவ்வொருவராக வந்து பாபாவுக்கு ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்வர். பின்னர் தம் தம் வீடுகளுக்குச் செல்வர்.

213 சிலீம், அத்தர், பன்னீர் இவற்றை பாபாவுக்குக் கொடுத்துவிட்டு அனுமதி பெற்றுக்கொண்டு, தாத்யா பாடீல் வீட்டிற்குக் கிளம்பும் சமயத்தில் பாபா அவரிடம் சொல்வார், ''என்னைக் கவனித்துக்கொள்.--

214 ''போவதாக இருந்தால் போ. ஆனால், இரவில் அவ்வப்பொழுது என்னை விசாரித்துக்கொள்.ஃஃ ''சரிஃஃ என்று உறுதி கூறிவிட்டுத் தாத்யா சாவடியை விட்டுத் தமது இல்லம் நோக்கிச் செல்வார்.

215 இவ்வாறாக எல்லா ஜனங்களும் சென்ற பிறகு, பாபா தம்முடைய கைகளாலேயே படுக்கைச் சுருளை எடுத்து ஒவ்வொரு வேட்டியாகச் சீர்செய்து பல படலங்களைப் பரப்பித் தம்முடைய படுக்கையைத் தாமே தயார் செய்துகொள்வார்.

216 சுமார் அறுபது - அறுபத்தைந்து வெண்ணிறத் துணிகளை ஒன்றன்மேல் ஒன்றாக விரித்து அதன்மீது பாபா படுத்துக்கொள்வார்.

217 இவ்வாறாக, சாவடியின் கதை எவ்விதம் நடந்ததோ, அவ்விதமாகவே இதுவரை எடுத்துரைக்கப்பட்டது. மற்ற கதைகள் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும்.

218 இந்த ஸாயீயின் மஹிமை ஆழங்காணமுடியாதது. நான் சுருக்கமாகச் சொல்ல நினைத்தாலும் அது எல்லையில்லாமல் என்னை இழுத்துக்கொண்டே போகிறது. குருதர்மம் (குருநெறி) எல்லையற்றதன்றோõ

219 ஹண்டியின் கதையையும் விட்டுப்போன கதைகளையும் அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன். ஒருமித்த மனத்துடன் கேளுங்கள்.

220 இடையறாத குருநினைவே ஹேமாடுக்கு இகவுலக க்ஷேமமும் பரவுலக க்ஷேமமும். குருசரணங்களில் பணிவதே செய்யவேண்டிய செயல்கள் அனைத்தும்; அடையவேண்டிய பலன்கள் அனைத்தும். ஏனெனில், அவருடைய பாதங்களில்தான் நான்கு புருஷார்த்தங்களையும் (அறம்-பொருள்-இன்பம்-வீடு) அடையமுடியும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'சாவடி வர்ணனைஃ என்னும் முப்பத்தேழாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.