Tamil tuition | Tamil assessment books | Tamil eLearning
Tamilcube.comTamilCube
Learning made fun & easy
Join Tamil tuition at Bedok, Jurong East and Little India | Learn Tamil online at World's first Tamil ELearning Platform.Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
அத்தியாயம் - 32

32. குரு மஹிமை - ஸாயீ திருவாய்மொழி
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 கடந்த அத்தியாயத்தில், சன்னியாசி விஜயானந்தர் நிர்வாணம் (முக்தி) அடைந்ததையும் பாலாராம் ஸாயீயின் திருவடிகளில் கலந்ததையும் விவரித்தேன்.

2 அதுபோலவே, தாத்யாஸாஹேப் நூல்கரும் மிக உன்னதமான பக்தராகிய மேகாவும் ஸாயீயின் கண்முன்னே உடலை உகுத்த விவரமும் சொல்லப்பட்டது.

3 கொடிய மிருகமாகிய பு­யொன்று உயிர்நீத்த பாணி இதையெல்லாம்விடப் பெரிய அற்புதம். செவிமடுத்தவர்கள் இதை விவரமாகக் கேட்டார்கள்.

4 இப்பொழுது வந்தடைந்திருக்கும் அத்தியாயத்தில், பாபாவே திருவாய்மொழிந்து வர்ணித்த விருத்தாந்தமொன்றைச் சொல்கிறேன். கேட்பவர்கள் அமோகமாக நன்மை அடைவார்கள்.

5 ஒருசமயம் காட்டில் இருந்தபோது, பாபா சற்றும் எதிர்பாராதவிதமாக குருதரிசனம் பெற்றார். குரு விளைவித்த அற்புதங்களைக் கவனத்துடன் கேளுங்கள்.

6 ஸாயீயே திருவாய்மொழிந்ததும் பக்தி, சிரத்தை, முக்தி, இம்மூன்றையுமே அளிக்கக்கூடியதுமான மிக அற்புதமான இக் காதையை என் போன்ற பாமரன் எவ்வாறு போதுமான அளவிற்கு விவரிக்க முடியும்?

7 அதுபோலவே, பாபாவை தரிசனம் செய்துவிட்டு மூன்று நாள்கள் சிர்டீயில் தங்கி உபவாசம் இருக்கவேண்டும் என்ற விரத ஸங்கல்பத்துடன் வந்த ஒரு பெண்மணியை,--

8 விரதத்தை விடுத்து, பசியைக் கிளப்பிவிடுவதும் இனிமையானதுமான பூரணப்போளியைச் செய்யவேண்டிய சூழ்நிலையை பாபா எவ்விதம் உருவாக்கினார் என்பதையும் சொல்கிறேன்.

9 போளியைச் சமையல் செய்ய வைத்ததுமல்லாமல், மனம் நிறையும்வரை உண்ணவும் வைத்தார். பரோபகாரமாக நம்முடலைத் தேய்ப்பது போற்றத்தக்கது என்பதை அப் பெண்மணிக்கு விளங்கவைத்தார் பாபா.

10 உபவாசம் இருப்பதைவிடப் பரோபகாரச் செயல்கள் மங்களம் தருபவை என்பதை, வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாதவாறு அப் பெண்மணியின் மனத்தில் பதியவைத்தார்.

11 ஆன்மீக முன்னேற்றத்தை நாடுபவர் திடமான மனத்துடன் அப்பியாசங்களை மேற்கொண்டு சாகசங்கள் பல புரியவேண்டிய பாதையில் புகுந்து, என்றும் நிலையானதும் உயர்வானதுமான இலக்கை அடையவேண்டும்.

12 மேற்சொன்ன நிகழ்ச்சிகளை விவரிக்கும், அமிருதத்தைவிட ருசியான இக் கதைக் கொத்து, கேட்பவர்களின் மனத்தில் அன்பு தோய்ந்த பக்தியை எழுப்பும்; துக்கங்களை முடிவுக்குக் கொண்டுவரும்.

13 கேட்கவேண்டும் என்று ஆவலுற்றவர்களுக்கு, இங்கிருந்து விரியும் கதை திருப்தியைத் தரும். சொல்பவருக்கும் கேட்பவர்களுக்கும் ஆத்மானந்தத்தை அளிக்கும். கேட்பவர்கள் அனைவருக்கும் நிறைவு தரும்.

14 பிரேமை நிரம்பியதும் இவ்வுலக இயல்புக்கு அப்பாற்பட்டதுமான இக் கதையை ஸாயீ என்னை எழுதவைப்பார். மூடனும் பாமரனும் ஆகிய நான் ஒவ்வொரு கட்டத்திலும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவேன்õ

15 கங்கையின் தரிசனத்தால் பாவமும், சந்திர உதயத்தால் வெப்பமும் எவ்வாறு விலகுகின்றனவோ, அவ்வாறே ஸாயீயின் திருவாய்மொழியாக வெளிவந்த இக்கதை பாவத்தையும் துன்பங்களையும் அழித்துவிடும்.

16 தாம் எவ்வாறு தம் குருவை தரிசனம் செய்தார் என்ற விவரத்தை ஸாயீயின் வாய்மூலமாகவே வெளிவந்தவாறு சொல்கிறேன்; கேளுங்கள்; கவனத்துடன் கேளுங்கள்.

17 வேதங்களையும் வேதாங்கங்களையும்1 அத்யயனம் (மனப்பாடம்) செய்தாலும் ஸ்மிருதியையும் (வாழ்க்கை நெறி நூல்களையும்) சாஸ்திரங்களையும் திரும்பத் திரும்ப வாசித்தாலும் குருவின் அருளின்றி ஞானம் பிறக்காது. இதர முயற்சிகள் அனைத்தும் வீண்.

18 முத­ல் தோன்றா நிலையில் இருந்த சம்சாரமென்னும் விருட்சம், பிறகு பார்வையால் தோற்றுவிக்கப்பட்டது. ஜனனமரண சோகத்தால் நிறைந்த இம்மரம் அழியக்கூடியது.

19 இதை வெட்டி வீழ்த்திவிடலாம்; அழியக் கூடியது; ஆகவே மரம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒருசமயம் தோன்றா நிலையி­ருந்து, பின்னர்த் தோற்றுவிக்கப்பட்ட உலகியல் வாழ்க்கை. ஆகவே விஸ்தாரமான மரம் இதற்கு உவமையாகச் சித்தரிக்கப்படுகிறது.

20 இப்பொழுது கண்களுக்குப் புலப்பட்டுப் பின்னர் அழியக்கூடிய இந்த சம்சார விருட்சத்தின் வேர்கள் மேலே இருக்கின்றனõ அபாரமான கிளைகளின் எண்ணிக்கையும் வியாபகமும் கற்பனைக்கப்பாற்பட்டது.

21 ஒவ்வொரு கணமும் இம் மரம் மேலும் மேலும் கப்புகளை விட்டுக்கொண்டு விரிந்துகொண்டே போகிறது. தூரத்தி­ருந்து பார்க்க ரமணீயமாக (அழகாக) இருக்கும் இம்மரம், அணைத்துக்கொண்டால் அங்கமெலாம் முள்மயம்õ

22 வாழைத்தண்டைப்போல் இம்மரம் வைரம் இல்லாதது. ஆசைகளும் ஏக்கங்களுமாகிய தண்ணீரை விட்டு வளர்ப்பவர்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் கானல்நீர்; கந்தர்வ நகரம் (மாய உலகம்).

23 அஞ்ஞானத்தால் செய்யப்பட்ட தீவினைகளால் விளைந்ததும் தோன்றா நிலையில் விதையுள் மறைந்திருப்பதும் பௌதிகமான இருப்பு ஏதும் இல்லாததுமான இம் மரம் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு குணத்தை ஏற்பதுபோல் தெரிகிறது.

24 இயல்பாகவே அனர்த்தத்தை (கேடுகளை) விளைவிக்கக்கூடிய இம் மரம் அஞ்ஞானத்தில் பிறந்தது. ஆவல்களும் ஆசைகளும் ஏக்கங்களும் தண்ணீராக மாறி, இம்மரத்தைச் சுற்றித் தேங்குகின்றன; செழிப்பூட்டுகின்றன.

25 மனைவி, மக்கள், தனம், தானியம் போன்ற பரிவாரங்களை உடைய இம் மரம், மனிதர்களின் மனத்தில் 'உடலே நான்ஃ என்ற புத்தியுடன் தன்னை ஒன்றுபடுத்திக் கொண்டு அடையாளம் காட்டுவதால், அதையே ஆதாரமாகக்கொண்டு வாழ்கிறது.

26 சம்சார வாழ்வென்ற இம் மரத்தின் கிளைகள், சகலமான பிராணிகளின் ­ங்கபேதத்தால் (ஆண்-பெண் பேதம்) விளைந்தவையே. கர்ம வாசனைகளும் பந்தங்களுமாகிய கீழ்நோக்கி வளரும் விழுதுகளால் தாங்கப்பட்டு, இம் மரம் பரந்து விரிந்து செழிக்கிறது.

27 சுருதி, ஸ்மிருதி ஆகிய இலைகளால் மூடப்பட்டு, ஐம்புலன்களாகிய கொழுந்துவிட்டு வளரும் இளந்தளிர்களால் செழிப்புற்று, யாகம், தானம் போன்ற சடங்குகளாகிய மலர்கள் பூத்துக் குலுங்கும் இம் மரம், இரட்டைச் சுழல்களெனும் (இன்பம் - துன்பம், வெப்பம் - குளிர் போன்ற இரட்டைகள்) சாறு நிறைந்தது.

28 இம் மரத்தின் பழங்களுக்குக் கணக்கேயில்லை; சகலருக்கும் இம் மரமே பிழைக்கும் வழி ஆகிவிட்டது. பூலோகத்திலும் புவர்லோகத்திலும்1 இம் மரம் இல்லாத இடமே இல்லை.

29 சிலசமயங்களில் பாட்டும் கூத்தும் வாத்திய இசையும்; சிலசமயங்களில் விளையாட்டும் சிரிப்பும் அழுகையும் -- இவ்வாறே இந்த மிகப் பழமையானதும் தலைகீழானதுமான அரசமரம்.

30 உருவத்தை ஏற்றுக்கொண்ட பிரம்மத்தின் மாயையால் விளைந்த இம் மரத்தைப் பற்றற்ற மனப்பான்மை என்னும் கோடாரியால் வெட்டி வீழ்த்திவிடலாம். ஸத் பா(ஆஏஅ)வமே இதற்கு மூலாதாரமென்றும் ஜோதியே இதன் சுபாவமென்றும் அறிக.

31 பிரம்மமே சத்தியம், சர்வாதாரம். இவ்வுலகம் சொப்பனத்தைப் போன்றதொரு மாயை. இவ்வுலகத்திற்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை; ஆதாரமும் இல்லை. இந்நிலையில் அது தன்னைத்தானே எப்படிக் காப்பாற்றிக்கொள்ள முடியும்?

32 பற்றற்றவர்கள் எதை அடைய பலமாக முயற்சி செய்கிறார்களோ, ஞானிகள் எதன்மீது காதல் கொள்கிறார்களோ, மோட்சநாடிகள் எதைத் தேடுகிறார்களோ, சாதகர்கள் எதை நாடுகிறார்களோ--

33 அதை அடைய விரும்புபவர் ஞானிகளின் பாதங்களில் சரணடைந்து, குதர்க்கத்தை வேருடன் களைந்தெறித்துவிட்டு அவர்களுடைய சொற்படி நடக்கவேண்டும்.

34 மனத்தின் தாவல்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு புத்தியின் சாமர்த்தியத்தையும் போ­ ஞானத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு சங்கத்தை விடுத்துப் பற்றற்று, குருபாதங்களையே லட்சியமாகக் கொள்ளவேண்டும்.

35 குதர்க்கத்தை முழுமையாக உதறித் தள்ளுக; இல்லையெனில் அது உங்களை வழி மடக்கும். கர்வத்தைக் காலால் மிதித்து நாசம் செய்க; அதன் பிறகே அக்கரை சேரமுடியும்.

36 இப்பொழுது, பாபாவே சொன்ன சிறப்பானதொரு கதையைக் கேளுங்கள். குருவின் திருவாய்மொழியான இவ்வமுதத்தை அருந்திப் பரமானந்தத்தை அடையுங்கள்.

37 (ஸாயீயின் திருவாய்மொழியாக வெளிவந்த உருவகக் கதை இங்கு ஆரம்பம்) ''ஒருசமயம் நாங்கள் நால்வர் ஏற்கெனவே போதிகளையும் புராணங்களையும் படித்து ஞானம் பெற்றிருந்ததால், பிரம்ம (முழுமுதற்பொருள்) நிரூபணம் செய்ய ஆரம்பித்தோம்.--

38 எங்களில் ஒருவர் கீதையி­ருந்து ஒரு சுலோகத்தை1 மேற்கோள் காட்டி, 'ஒருவன் தன்னுடைய முயற்சியாலேயே தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும். இதற்காக வேறெவரையும் சார்ந்து இருத்தல் தகாதுஃ என்று வாதம் செய்தார்.--

39 அவருக்கு மற்றொருவர் பதிலுரைத்தார், 'யாருடைய மனம் அவருக்கு அடங்கி இருக்கிறதோ அவரே பாக்கியசா­. ஆகவே, தன்னைத் தவிர வேறெதுவும் இவ்வுலகில் இல்லை என்றறிந்து ஸங்கல்பங்களையும் விகல்பங்களையும் சூன்யமாக்கிவிட வேண்டும்.ஃ--

40 மூன்றாமவர் சொன்னார், 'எல்லாமே அழியக்கூடியன (அநித்தியம்); மாறுதல் அடைந்துகொண்டேயிருக்கும். மாறுதல் ஏதும் அடையாததே அழியாதது (நித்தியம்). நித்தியம் எது, அநித்தியம் எது என்ற சிந்தனையை எப்பொழுதும் செய்து கொண்டிரு.ஃ--

41 நான்காமவர் புத்தக ஞானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சாஸ்திரவிதிகளின்படி வாழ்க்கை நடத்தி, மனம், பேச்சு, உடல், பஞ்சப் பிராணன்கள் அனைத்தையும் குருபாதங்களில் ஸமர்ப்பணம் செய்துவிடுவதையே நம்பினார்.--

42 குருவே இவ்வுலகின் உள்ளும் வெளியும் பரவியிருக்கும் நகரும் நகராப் பொருள்களில் உறைந்திருக்கும் இறைவன், என்று மனத்துள் நிர்த்தாரணம் செய்வதற்கு ஆழமானதும் அசைக்க முடியாததுமான விசுவாசம் (நிஷ்டை) அவசியம்.--

43 வெறும் சாஸ்திர நிபுணர்களோ, வாதத்தில் மட்டும் வல்லவர்களோ, எதையும் உரித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்பவர்களோ, சொப்பனத்திற்கூட ஞானத்தை அடைய முடியாது. இங்கே தேவையானது சுத்தமான விசுவாசமுள்ள பக்தனே.--

44 இவ்வாறாக, நான்கு புத்திசா­களும் (நாங்கள்) அதைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்றெண்ணித் தேட ஆரம்பித்தோம். வேதனையேதும் இல்லாத சுதந்திரமான மனத்துடன் சொந்த புத்தியாலேயே கண்டுபிடிக்கவேண்டும்.--

45 மூன்று பேர்கள் மனத்திலும் இந்த இச்சையே மேலோங்கியது. ஆயினும் காட்டில் இஷ்டம்போல் திரிந்துகொண் டிருந்தபோது, வழியில் ஒரு 'வண்ஜாரியைச்ஃ2 சந்தித்தோம். அவர் எங்களைக் கேட்டார்,-- (நான்காமவர் ஸாயீ)

46 'வெயி­ன் கடுமை அதிகமாக இருக்கும் இந்நேரத்தில் நீங்கள் எதற்காக, எங்கே செல்கிறீர்கள்?ஃ நாங்கள் பதில் சொன்னோம், 'காட்டிலும் காட்டின் உட்பகுதிகளிலும் தேடப்போகிறோம்.ஃ --

47 வண்ஜாரி கேட்டார், 'நீங்கள் எதைத் தேடப்போகிறீர்கள்?ஃ நாங்கள் பதில் சொன்னோம், 'ரஹசியமான விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவது நல்லதில்லை.ஃ--

48 நாங்கள் அவசரமாக இங்குமங்கும் அலைந்து தவித்ததைப் பார்த்த வண்ஜாரி மனம் கனிந்தார். அவர் சொன்னார், 'வனம் அணுகுவதற்குக் கடுமையானது; வனத்தின் உட்புறத்தை நன்கு தெரிந்துகொள்ளாமல், இஷ்டம்போல் அலையக்கூடாது.--

49 'இம்மாதிரி வனங்களுக்குள் போய்வருவதற்கு எப்பொழுதும் ஒரு வழிகாட்டியைத் துணையாக வைத்துக்கொள்ளுங்கள். உச்சிவெயில் வேளையில் ஏன் இந்த சாகசச் செயல்? எதற்காக இந்த சிரமமும் ஆயாசமும்?--

50 'விருப்பமில்லையென்றால் உங்களுடைய ரகசியத்தேடல்பற்றி ஏதும் சொல்ல வேண்டா. ஆனால், சிறிது நேரம் உட்காரவாவது செய்யுங்கள். ஒரு சோளரொட்டித் துண்டாவது தின்றுவிட்டுத் தண்ணீர் குடியுங்கள். அதன் பிறகு விருப்பம்போல் செல்லுங்கள். மனத்தில் சிறிது பொறுமைக்கு இடம் கொடுங்கள்õஃ--

51 அவர் எங்கனை மனப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டார். ஆயினும் நாங்கள் அவருடைய வேண்டுகோளைத் தூக்கியெறிந்துவிட்டு, அவருடைய அறிவுரையைக் கேட்காமல் எங்கள் வழி சென்றோம். ஆனால், பின்னர்க் காட்டினுள் சோர்வுற்றுக் களைத்துப்போனோம். --

52 ஓ, நாங்கள் புத்திசா­கள் அல்லோமோõ நாங்களே வழியைக் கண்டுபிடிப்போம். வழிகாட்டி எதற்காகத் தேவை?ஃ கர்வத்தால் நாங்கள் இவ்வாறு நினைத்தோம்.--

53 ஆனால், காடோ மிக விஸ்தீரணமானது; வானளாவி ஓங்கியும், பருத்தும் வளர்ந்த மரங்கள் நிறைந்து சூரிய ஒளிக்கதிர்களும் உள்ளே புகமுடியாதபடி இருந்தது. இவ்விடத்தில் வழியின் போக்கை எவ்வாறு கண்டுபிடிக்கமுடியும்?--

54 இங்குமங்கும் சுற்றிச் சுற்றிப் பயனின்றித் திரிந்து, திக்குத் தெரியாமல் மாட்டிக் கொண்டோம். பின்னர் தெய்வபலத்தால், எங்கிருந்து கிளம்பினோமோ அங்கேயே வந்துசேர்ந்தோம்.--

55 தெய்வம் எங்களை வந்தவழியே திருப்பி அனுப்பியது. மறுபடியும் அதே வண்ஜாரியைச் சந்தித்தோம். அவர் சொன்னார், 'நீங்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள் போ­ருக்கிறது; சிலசமயங்களில் புத்தியின் சாதுர்யம் செல்லுபடியாவதில்லைõ --

56 'எடுத்த காரியம் சிறியதாகவிருப்பினும் பெரியதாகவிருப்பினும் வழிகாட்டுவதற்கு ஒருவர் தேவை. மேலும், வெறும் வயிற்றுடன் எதையும் கண்டுபிடிக்கமுடியாது. புத்தியும் மிரண்டுபோய்த் தடுமாறும்.--

57 'இறைவனால் திட்டமிடப்படாது, நீங்கள் வழியில் யாரையும் சந்திக்கமுடியாது. ஆகவே கொடுக்கப்பட்ட அன்னத்தை நிராகரிக்க வேண்டா; உணவுத் தட்டை ஒருபொழுதும் கையால் ஒதுக்கித் தள்ளாதீர்.--

58 'உண், என்று வேண்டி, யாராவது ஒரு சோளரொட்டித் துண்டு அளித்தால், அதை உங்களுடைய காரியத்தை நிர்விக்கினமாக (இடையூறின்றி) முடித்துக்கொடுக்கும் சுபசகுனமாகக் கருதி ஏற்றுக்கொள்ளுங்கள்.--

59 'இப்பொழுது சொற்பமாக ஆகாரத்தை உட்கொள்ளுங்கள். சிறிது இளைப்பாறி உடலையும் மனத்தையும் திடப்படுத்திக்கொள்ளுங்கள்.ஃ ஆனால், மற்ற மூவரும் இந்த நல்ல வார்த்தையை நிராகரித்துவிட்டனர். ஏதும் உண்ணாமலேயே மறுபடியும் அங்கிருந்து கிளம்பினர்.--

60 தேட­ல் வெற்றி பெறாமல் நாங்கள் உணவுண்ணப் போவதில்லை, என்று சொல்­க்கொண்டு அவர்களுடைய முரண்டுக்கு அவர்களே ப­யானார்கள்.--

61 எனக்கோ நல்ல பசி; தொண்டையும் வறண்டு போயிருந்தது. மேலும், நான் வண்ஜாரியின் உலகியல் நடப்பிற்கு அப்பாற்பட்ட பிரேமையைக் கண்டு அவர்மீது வாஞ்சையுடன் பெருமதிப்புக் கொண்டேன்.--

62 மெத்தப் படித்த பண்டிதர்களாகிய எங்களுக்குக் கருணையோ இரக்கமோ இல்லை. செல்வராக இருந்தாலும், எச்சிற்கையால் காக்கை ஓட்டாதவர் எத்தனையோபேர்.--

63 ஆனால், காட்டில் சந்தித்த மனிதரோ தாழ்குலத்தவர்; வண்ஜாரி சாதி; படிப்பறிவில்லாதவர்; அந்தஸ்தில்லாதவர். ஆயினும், 'கொஞ்சம் சோளரொட்டியும் வியஞ்சனமும் (உணவுக்குரிய கறிகள்) சாப்பிடுங்கள்ஃ என்று வேண்டிக்கொள்ளும் அளவிற்கு அவருடைய இதயத்தில் இயல்பாகவே எவ்வளவு பிரேமை இருந்திருக்கவேண்டும்õ --

64 லாபம் கருதாது இவ்விதமாக அன்பு செலுத்துபவரே சிறந்த புத்திமான். ஆகவே, அவருக்கு மரியாதை செலுத்துவதே உயர்ந்த ஞானத்தை அடையும் உத்தமமான மார்க்கம் என்று நான் உணர்ந்தேன்.--

65 ஆகவே நான் மிகப் பணிவுடன் வண்ஜாரி அளித்த கால் ரொட்டியைத் தின்று சிறிது தண்ணீரும் குடித்தேன். ஆஹாõ எவ்வளவு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி நடந்ததுõ--

66 எங்கிருந்தோ, எதிர்பாராமலேயே குருராஜர் தோன்றினார். எங்களிடம் கேட்டார், 'எதற்காக இந்த வாதப்பிரதிவாதங்கள்?ஃ நான் அப்பொழுது அவரிடம், நடந்த விருத்தாந்தத்தைச் சொன்னேன்.--

67 'நீங்கள் என்னுடன் வருகிறீர்களா? நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அதை உடனே உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன். ஆனால், என்னுடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டவனே தான் விரும்பியதை அடைவான்.ஃ-- (குருராஜர்)

68 மற்ற மூவரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை; ஆனால், நான் அவருடைய அழைப்பை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டேன். மற்ற மூவரும் அங்கிருந்து வெளியேறினர். குருராயர் என்னை மட்டும் தம்முடன் அழைத்துக்கொண்டு சென்றார்.--

69 அவர் என்னை ஒரு கிணற்றுக்கு அழைத்துச் சென்று கால்களை ஒரு கயிற்றால் கட்டி கிணற்றினுள் என்னைத் தலைகீழாகத் தொங்கவிட்டார்.--

70 என்னுடைய கைகளோ வாயோ நீர்மட்டத்தை எட்டாதவகையில் என்னைக் கிணற்றினுள் தொங்கவிட்டார்.--

71 கிணற்றங்கரையில் ஒரு மரம் இருந்தது. கயிற்றின் மறு நுனி அந்த மரத்தில் கட்டப்பட்டது. குருராயர் சஞ்சலம் ஏதுமின்றி எங்கோ சென்றுவிட்டார். அவர் எங்கே சென்றார் என்பதை யாரறிவார்?--

72 இவ்வாறு நான்கைந்து மணி நேரம் கழிந்தது; அதன் பின் குரு திரும்பிவந்தார். உடனே என்னை வெளியே எடுத்து, 'நீ நலமாக இருக்கிறாயா?ஃ என்று கேட்டார்--

73 நான் பதில் சொன்னேன், 'நான் ஆனந்தம் நிரம்பிவழிந்தேன். நான் அனுபவித்த சுகத்தை என் போன்ற பாமரன் எப்படி வர்ணிக்க முடியும்?ஃ--

74 குருராயர் என்னுடைய பதிலைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். அவர் என்னுடைய முதுகை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்து, என்னைத் தம்முடன் வைத்துக் கொண்டார்.--

75 இதை நான் (பாபா) உங்களிடம் சொல்லும்போதே என் மனத்தில் அன்பு அலைமோதுகிறது. பின்னர் குரு என்னைத் தம்முடைய பாடசாலைக்கு அழைத்துச் சென்றார். தாய்ப்பறவை தன் குஞ்சைச் சிறகுகளுக்குள் வைத்துக் காப்பாற்றுவதைப் போல் என்னை அரவணைத்துப் பாதுகாத்தார்.--

76 ஆஹாõ குருவின் பாடசாலை எவ்வளவு கவர்ச்சிகரமானதுõ நான் என் பெற்றோர்களின் பாசப்பிணைப்பையே மறந்துவிட்டேன். மோகம், மமதை ஆகிய சங்கி­களி­ருந்து சுலபமாக விடுபட்டேன்.--

77 கெட்ட ஆசாபாசங்கள் சகலமும் அறுக்கப்பட்டன. ஆன்மீக முன்னேற்றத்தைத் தடை செய்யும் பந்தம் வெட்டப்பட்டது. குருவின் உருவத்தைக் கண்களிலேயே நிறுத்தி அவரை அணைத்துக்கொள்ள விரும்பினேன்.--

78 குருவின் பிரதிபிம்பம் எந்நேரமும் கண்களில் வாசம் செய்யாவிட்டால், கண்களை இரண்டு மாமிசக் கோளங்களாகத்தான் கருதவேண்டும். அவருடைய பிம்பம் கண்களில் நிலைக்காதுபோகுமானால், நான் குருடனாக இருப்பதே நல்லது. குருவின் பாடசாலை எனக்கு அவ்வளவு சிறப்பாக அமைந்தது.--

79 ஒருமுறை அந்தப் பாடசாலையில் காலெடுத்து வைத்தபின், திரும்பிப் போகவேண்டும் என்று நினைக்கும் துரதிருஷ்டசா­ எவனும் உளனோõ குருராயரே எனக்கு வீடும் குடும்பமும் பெற்றோரும் ஆனார்.--

80 மற்ற இந்திரியங்களோடு மனமும் சேர்ந்துகொண்டு தம் தம் இடங்களை விட்டுவிட்டு குருவின்மேல் தியானம் செய்வதற்காக என் கண்களில் வந்து தங்கின.--

81 குருவுக்குப் புறம்பாக வேறெதுவுமின்றி, எல்லாமே குருவாகத் தெரியுமாறு குருவை மாத்திரம் தியானத்தின் இலக்காகக் கொண்டு செய்யப்படும் தியானம், 'அனன்னிய அவதானம்ஃ (மன ஒருமைப்பாடு) என்றழைக்கப்படும்.--

82 குருவின் சொரூபத்தை தியானம் செய்யும்போது மனமும் புத்தியும் உறைந்து போகின்றன. ஆகவே, அவருடைய திருவடிகளுக்கு வணக்கம் செலுத்திவிட்டு சத்தமில்லாத மௌனத்தில் கரைந்துவிட வேண்டும்.--

83 இதற்கு மாறாக, ஞானம் பெறுவதற்காக ஒரு குருவை வேண்டுமானால் அமர்த்தலாம். தக்ஷிணை கொடுத்தே செல்வம் கரையுமே தவிர, நல்லுபதேசம் என்ன கிடைத்ததென்று பார்த்தால், கடைசியில் பூஜ்யம் ஒன்றே தெரியும். மிஞ்சுவது தன்னிரக்கம் ஒன்றே.--

84 பாஷாண்டியாகவே வளர்ந்து, யோக்கியரைப் போலவும் நாணயமானவரைப் போலவும் நடித்து, மனிதசக்திக்கு மீறிய ரகசிய ஞானத்தைப்பற்றி டம்பம் அடித்துக்கொள்பவரால் சிஷ்யனுக்கு என்ன அளிக்க முடியும்?--

85 வெளிப்பார்வைக்கு மடி ஆசாரங்களைக் கடைப்பிடிப்பவர்; ஆனால், அகமுதிர்ச்சி இல்லாதவர்; சுயமாக அனுபவம் பெறாதவர்; இவருடைய பாடசாலை உபயோகமற்றது.--

86 எங்கு வார்த்தை ஜாலமும் புத்தக அறிவும் மிகுந்திருக்கிறதோ, எவர் தம்முடைய பெருமையில் தாமே மகிழ்ந்துபோகிறாரோ, எங்கு பிரம்ம ஞான அனுபவம் இல்லையோ, அங்கிருந்து சிஷ்யன் என்ன லாபம் பெறுவான்?--

87 எவருடைய போதனை சிஷ்யனின் இதயத்தைத் தொடவில்லையோ, எவருடைய சாட்சியும் நிரூபணமும் சிஷ்யனின் மனத்தில் உறுதியான நம்பிக்கையைத் தோற்றுவிக்க முடியவில்லையோ, அவருடைய பாடத்தால் யாருக்கு என்ன பயன்? அது உள்ளீடற்ற வெறும் பிதற்றலன்றோõ--

88 என் குரு, தியான முறையில் என்னை உபாசனை செய்யவைத்து எனக்கு உண்மையான ஞானக்கருவூலத்தைக் காட்டினார். நான் அதைத் தேடி அலையவேண்டிய அவசியமே ஏற்படவில்லை. மற்றப் பொருளை அறியவும் நான் முயற்சி ஏதும் எடுக்கவில்லை.--

89 உட்பொருளும் மறைபொருளும் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொண்டன. பிரயாசை (முயற்சி) ஏதும் செய்யாமலேயே அவை என் கைக்கு வந்துசேர்ந்தன. இதுவே குருவருள் செய்யும் அற்புதம்õ தேடல்கள் அனைத்தும் அங்கேயே அப்பொழுதே ஒரு முடிவுக்கு வந்தனõ--

90 குருராயர் என்னைத் தலைகீழாகத் தொங்கவிட்டபோது, நான் எங்ஙனம் ஆனந்தமடைந்தேன் என்பதைப் புரிந்துகொள்ளும் சக்தி அவருக்கே உண்டு.@@

(உருவகக் கதை இங்கு முற்றும்)

91 ஞானியரின் நடைமுறை, உலகியல் நடைமுறைக்கு எதிராகத்தான் இருக்கும். அவர்களுடைய ஞானம் அனுபவத்தால் விளைந்தது. இங்கு நிஷ்டை ஒன்றே பிரமாணம்; குருவின் கிருபை ஒன்றே சாதனம்.

92 சடங்குச் செல்வர்களுக்கு விதிகளும் தடைகளும் கட்டுமானங்களும்; பண்டிதர்களுக்கு வித்யா கர்வம்; யோகிகளுக்கோ டம்பமே படுகுழி. ஆகவே, விசுவாசத்தை விடுத்தால் வேறெதுவும் இங்கே செல்லுபடியாகாது.

93 பண்டிதர்கள் கல்விச் செருக்கால் குருடர்கள் ஆகின்றனர். அவர்கள் அகங்காரத்தின் வடிவமே ஆவர். சாதுவோ பண்டிதர்களைக் கண்டால் ஓட்டம் பிடிக்கிறார்; அவர்களுடைய சங்கத்தை விரும்புவதில்லை.

94 ஞானமார்க்கி, 'என்னைத் தவிர கடவுள் யாராவது இருக்கமுடியுமா? பரிபூரணமாக ஞானம் பெற்ற நானே ஸச்சிதானந்தம்ஃ எனச் சொல்கிறார்.

95 பக்திமார்க்கத்தில் செல்பவர், அவருடைய அன்பான பக்தி விசேஷத்தால் தம்முடைய ஞானத்தைப் பறைசாற்றமாட்டார். அவர் தம்முடைய உடலையும் மனத்தையும் செல்வத்தையும் சுவாமியிடம் சமர்ப்பித்துவிடுகிறார். அவர் தம்மையும் தம்மிடம் இருப்பதனைத்தையும் சுவாமியிடம் ஒப்படைத்துவிடுகிறார்.

96 'இது என்னுடைய சாதனை; இது என்னுடைய அதிகாரத்தின் காம்பீர்யம்; இது என்னுடைய புத்திசக்தியின் வைபவம்ஃ என்று அவர் கர்வத்தால் உப்புவதில்லை.

97 என்ன நடக்கிறதோ, அது இறைவனின் ஆணைப்படியே நடக்கிறது. அவரே தூக்கிவிடுகிறார்; அவரே தள்ளியும்விடுகிறார். அவரே சண்டையிடுகிறார்; அல்லது மற்றவர்களைச் சண்டையிடவைக்கிறார். அவரே காரியங்களைச் செய்பவரும் செய்யவைப்பவரும் ஆவார்.

98 செயல்புரியும் அதிகாரத்தை சுவாமியின் கைகளில் ஒப்படைத்துவிட்டு, பக்தன் 'அடியார்க்கும் அடியேன்ஃ என்றும் சுபாவத்தை சுவீகரித்துக்கொள்கிறான். பக்தன் எப்பொழுதும் சுவாமியின் ஆதீனத்தில் வாழ்கிறான். அவனுக்கென்று தனியான இருப்பு ஒன்றும் இல்லை.

99 அந்த நான்கு புத்திசா­களுக்கு அவர்கள் எதைத் தேடினார்களோ அது இதுவரை வெளிப்படவில்லை. விளக்கமாகச் சொல்கிறேன்; கேளுங்கள்.

100 அவர்கள் அனைவரும் கனபாடிகள் (வேதப்படிப்பில் உச்சநிலை); சடங்குச் செல்வர்கள். தங்களுடைய பாண்டித்தியத்தைப் பற்றி உள்ளூர கர்வம் கொண்டிருந்தனர். புத்தக அறிவைப் பீத்திக்கொண் டிருந்தபோது இறைவனைப்பற்றிய பேச்சு எழுந்தது.

101 எந்தத் திட்டத்தால், எந்த வழியால், எந்த யுக்தியால், நம்முடைய பாண்டித்தியத்தை உபயோகிக்கலாம்? இறைவனை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகப் பேட்டி காணவேண்டும் என்பது ஒன்றே அவர்களின் நோக்கம்.

102 என் ஸ்ரீஸாயீயும் அந்நால்வரில் ஒருவர். பர பிரம்மமேயானவரும் வைராக்கியமும் விவேகமும் உருவெடுத்து வந்தவருமான ஸாயீ, எதற்காக இந்த விவேகமற்ற செயலை ஏற்றுக்கொண்டார்?

103 கதைகேட்பவர்கள் இந்த சந்தேகத்தை எழுப்பலாம். ஈதனைத்தும் உலக மக்களுக்கு போதனை செய்வதற்காகவும் அவர்களுடைய நன்மைக்காகவுமே செய்யப்பட்டது. பக்தர்களை உத்தாரணம் செய்வதற்காகவே வந்த பாபாவை இச்செயல் எப்படி மாசுபடுத்த முடியும்?

104 தாமே ஒரு அவதாரியாக இருந்தும், வண்ஜாரிக்கு மரியாதை செலுத்தினார். 'அன்னம் பிரம்மம்ஃ1 என்பதை நிர்த்தாரணம் செய்யும் வகையில் அவரளித்த உணவை உண்டார்.

105 அதேசமயம், சமர்ப்பிக்கப்பட்ட உணவை நிராகரித்து அவமானம் செய்தவர்கள் கேடுறுகிறார்கள் என்பதைக் காண்பித்தார். பண்டிதர்களின் கதையை மேற்கொண்டு சொல்­, குருவின்றி எவரும் ஞானம் பெற இயலாது என்பதை விளக்கினார்.

106 தாய், தந்தை, குரு இவர்களிடமிருந்து பாடம் பெறாமல் தருமவழிபற்றிய ஞானத்தைப் பெறமுடியாது. அதுவும் ஒருவருடைய கல்வி முயற்சியைச் சார்ந்தது. அனுஷ்டானம் (கற்றபின் அதற்குத் தக நிற்றல்) இல்லையெனில் கற்றதனைத்தும் வீண்.

107 அவர்களுடைய ஆசிமொழிகள் அவசியம் தேவை. 'தாயைத் தெய்வமாக வழிபடு; தந்தையைத் தெய்வமாக வழிபடு; குருவைத் தெய்வமாக வழிபடு.ஃ இந்த உபநிஷத1 வசனம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

108 இம் மூவரையும் வழிபடுவது, யாகங்களைச் செய்வது, வேதம் ஓதுவது, தானம் செய்வது - இவையே ஜனனமரணச் சுழலைத் தாண்டுவதற்கு உயர்ந்த சாதனங்கள்.

109 இவையனைத்தும் மனத்தைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளும் சாதனைகள். இவற்றைச் செய்யாமல், ஆத்மாவெனும் வஸ்துவை அடையமுடியாது. இவையில்லாது நடத்தும் வாழ்க்கை வியர்த்தம்.

110 உடலும் மனமும் ஐம்புலன்களும் புத்தியும் காட்டமுடியாத மகத்தான ஆத்ம சொரூபத்தை குருவருள் காட்டமுடியும்.

111 பிரத்யக்ஷமாகப் பார்ப்பதையும் அனுமானம் செய்வதையும் பிரமாணமாக ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில், குருவைத் தவிர வேறெவரால் அதை உள்ளங்கை நெல்­க்கனிபோல் தெளிவாகக் காண்பித்துக் கொடுக்கமுடியும்?

112 அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று புருஷார்த்தங்களை சிரமப்பட்டால் அடைந்துவிடலாம். நான்காவதாகிய உச்ச புருஷார்த்தத்தை (வீடு / மோட்சம்) குருவின் அருளின்றி எவ்வளவு முயன்றாலும் அடையமுடியாது.

113 சிர்டீஞானியின் தர்பாருக்கு ஜோசியர்கள் வணக்கம் செலுத்த வந்தனர். செல்வர்களுக்கும் பெருங்குடி மக்களுக்கும் ஆயுள்பற்றியும் நடக்கப்போவதைப் பற்றியும் வரும்பொருள் உரைத்தனர்.

114 செல்வச் செழிப்பிலும் அதிகாரத்திலும் புரண்ட அரசர்கள், கோமான்கள் -- துறவேற்றுப் பிச்சையெடுத்துப் பிழைத்த பைராகிகள், கோசாவிகள் -- அனைவரும் பாபாவை தரிசனம் செய்ய ஆவலுடன் வந்தனர்.

115 ஜபம் செய்பவர்கள், தவம் செய்பவர்கள், விரதம் ஏற்றுக்கொண்டவர்கள், சன்னியாசிகள், யாத்திரிகர்கள், புனிதத்தலவாசிகள், பரிவாரங்களுடன் பாட்டுக்காரர்களும் நாட்டியக்காரர்களும் -- இவர்களனைவரும் சிர்டீக்கு தரிசனத்திற்காக வந்தனர்.

116 ''இவரே எங்களுக்குத் தாயும் தந்தையும் ரட்சகரும் ஆவார்; இவரே எங்களை ஜனனமரணச் சுழ­­ருந்து விடுவிப்பார்ஃஃ என்று சொல்­க்கொண்டு மஹார்களும்2 ஸாயீ தர்பாருக்கு வந்து, வணக்கம் செலுத்தினர்.

117 நெற்றியில் பட்டையாக விபூதியணிந்து ­ங்கத்தைக் கழுத்தில் கட்டிக்கொள்ளும் ஜங்கமரும், பிச்சை வாங்கும் சோளத்தின்மீதே கண்ணாக வருவார். அவர் அளிக்கும் காட்சி பார்ப்பதற்கு சுவாரசியமானது.

118 சாமர்த்தியசா­களான வித்தைகாட்டிகள் வந்தனர். பவானி அம்மனின் பெயரில் தானியங்கள் பிச்சையெடுத்து, 'கோந்தல் திருவிழாஃ நடத்தும் கோந்த­களும் மிகுந்த பிரேமையுடன் பாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.

119 குருடர்கள், நொண்டிகள், கான்பாடேக்கள்1, ஆண்டிகள், குருநானக் பக்தர்கள், நாடோடிப் பாடகர்கள், தீவட்டி ஏந்திகள் -- இவர்களனைவரும் பக்தியும் அன்பும் நிறைந்து ஸமர்த்த ஸாயீயிடம் பறந்தோடி வந்தனர்.

120 முரசு கொட்டுபவர்கள், குறி சொல்பவர்கள், முடவர்கள் - கழைக் கூத்தாடிகளுங் கூட அங்கு வந்து தங்களுடைய திறமையைக் காட்டினர். பாபாவின் சமூகத்திற்குத் தக்க தருணத்தில் பிரேமை மிக்க வண்ஜாரியும் வந்துசேர்ந்தார்õ

121 வைராக்கியமே உருவெடுத்தவர்; பற்றற்றவர்; ஏகாந்தி; சங்கம் விரும்பாதவர்; சுயநலமில்லாதவர்; விருப்பு வெறுப்பற்றவர்; பக்தர்களின்பால் செலுத்தும் அன்பில் இணையில்லாதவர். ஸாயீயின் ஆகிருதியைக் (உருவத்தைக்) காணக் கண் கோடி வேண்டும்.

122 இப்பொழுது, ஏற்கெனவே நடந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் பிரதமமான காதையை விட்ட இடத்தி­ருந்து தொடருவோமாக. கேட்பவர்கள், சிதறாத கவனத்தைக் கொடுங்கள்.

123 பாபா என்றும் பட்டினி கிடந்ததில்லை; மற்றவர்களையும் பட்டினி கிடக்க அனுமதித்ததில்லை. பட்டினி கிடப்பவரின் மனம் சாந்தமாக இருக்காது; அவர் எப்படி பரமார்த்த (ஆன்மீக) சாதனைகளை ஏற்கமுடியும்?

124 வெறும் வயிற்றுடன் தேவனை அடையமுடியாது. ஆகவே முத­ல் ஆத்மாவைத் திருப்திசெய்யுங்கள். இந்த உபதேசத்தை அளிக்கும் மற்றுமொரு கதை சொல்கிறேன்.

125 உச்சிவெயில் வேளையில் சூடு தாங்காமல் புழுதி புரளும்போது, 'அன்னம் பிரம்மம்ஃ என்னும் உபநிஷத வாக்கியம் பளிச்சென்று மனத்திற்கு விளங்குகிறது.

126 அந்தக் கடுமையான வேளையில் சில கவளங்களாவது அன்னம் கிடைக்கவில்லை யென்றால், உடலுறுப்புகள் பலமிழந்துபோய் அவற்றின் கடமையைச் செய்ய மறந்துவிடுகின்றன.

127 பசிக்கு உணவளித்து ஜீவனை சாந்தப்படுத்தாமல் கண்கள் எப்படி இறைவனைக் காண முடியும்? வாய் எப்படி இறைவனின் புகழைப் பாடும்? காதுகள் எப்படி அதைக் கேட்கும்?

128 சாராம்சம் என்னவென்றால், உட­ன் சகல அங்கங்களும் சக்தி பெற்றிருந்தால்தான் பக்தி பண்ணமுடியும். அங்கங்கள் அன்னமின்றி சீர்குலைந்து போகும்போது ஆன்மீகப் பாதையில் நடைபோடமுடியாது.

129 ஆனால், தேவைக்கு அதிகமாக உண்பதுவும் நன்றன்று. மிதமான போஜனமே நன்மையை விளைவிக்கும். கடுமையான உபவாசம் எப்பொழுதும் பயங்கரமான சுகவீனத்தையே விளைவிக்கும்.

130 ஸாயீதரிசனம் செய்யப் பேராவல் கொண்டு தாதா கேள்கருக்கு ஓர் அறிமுகக் கடிதம் வாங்கிக்கொண்டு ஒரு பெண்மணி சிர்டீக்கு வந்தார்.

131 மஹராஜின் பாதங்களுக்கு அருகில் மூன்று நாள்கள் உபவாசமாக உட்காருவது என்று மனத்தில் திடமாகத் தீர்மானம் செய்துகொண்டு வந்தார். கடைசியில் அவருடைய தீர்மானத்தை அவரே வைத்துக்கொள்ளும்படி ஆயிற்றுõ

132 பாபாவின் விதிமுறைகளின்படி, ஆன்மீக சாதனைகளை மேற்கொள்ள விரும்புபவர் முத­ல் தம்முடைய சோளரொட்டிக்கு1 (உணவுக்கு) வழிசெய்துகொள்வது அவசியம். இப் பெண்மணியின் தீர்மானமோ அதற்கு நேர்மாறாக இருந்ததுõ

133 இறைவனைக் காண விரும்புபவர் முத­ல் ஒரு சோளரொட்டித் துண்டாவது சாப்பிட வேண்டும். ஜீவன் சமாதானமடையாமல் தேவனைக் கண்டுபிடிப்பது எப்படி?

134 இந்த யுகத்தின் முடிவுவரை முயன்றாலும் வெறும் வயிற்றுடன் இறைவனை அடைய முடியாது. ஸாயீயைப் பொறுத்தவரை உபவாசம் போன்ற உடலை வருத்தும் செயல்களை அவர் என்றுமே அனுமதித்தில்லை.

135 மஹராஜ் உள்ளுணர்வால் அனைத்தையும் (பெண்மணியின் உபவாச சங்கற்பம்) முந்தைய தினமே அறிந்திருந்தார். தாதா கேள்கரிடம்2 சொன்னார்,--

136 ''வரப்போகும் ஹோ­ப் பண்டிகை போன்ற நன்னாளில் என்னுடைய குழந்தைகள் பட்டினி கிடப்பார்களா? அதை நான் அனுமதிப்பேனா? அதைப் பார்த்துக்கொண்டு நான் இங்கு உட்கார்ந்திருப்பேனா?ஃஃ

137 ஸாயீயின் திருவாய்மொழி இவ்வாறு வெளிப்பட்ட அன்றைக்கு மறுநாளே இப் பெண்மணி சிர்டீ வந்துசேர்ந்தார்.

138 இப் பெண்மணியின் குடும்பப் பெயர் கோகலே. ஏற்கெனவே விவரித்தவாறு, அவர் உபவாசத் தீர்மானத்துடன் வந்தார். தாம் கொண்டுவந்திருந்த அறிமுகக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு தாதா கேள்கரின் இல்லத்தில் தம்முடைய மூட்டையை வைத்தார்.

139 காசீபாயி கானீட்கர் என்ற கேள்கரின் நெருங்கிய உறவினர், இப் பெண்மணிக்கு பாபாவை தரிசனம் செய்துவைக்குமாறு கேட்டுக்கொண்டு அறிமுகக் கடிதம் கொடுத்திருந்தார்.

140 சிர்டீ வந்துசேர்ந்த பிறகு, உடனடியாக பாபாவை தரிசனம் செய்வதற்காக இப் பெண்மணி சென்றார். தரிசனம் முடிந்து சிறிது ஓய்வெடுப்பதற்கு முன்னரே பாபா இப் பெண்மணிக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.

141 எவ்வளவு ஆழமாக ஓடும் எண்ணங்களாக இருந்தாலும் சரி, எல்லாருடைய எண்ணங்களையும் பாபா அறிந்திருந்தார். இவ்வுலகில் அவர் அறியாதது ஒன்றுமேயில்லைõ

142 ''உணவு மஹாவிஷ்ணு ரூபம்; உண்பவரும்3 மஹாவிஷ்ணு ரூபம். உபவாசம் இருப்பது, சமைக்காத உணவைத் தின்பது (அவல், பழங்கள் போன்றவை), பட்டினி கிடப்பது, நீரும் அருந்தாமல் கிடப்பது -- எதற்காக இந்த வீண் சிரமங்கள்?--

143 பாபா தாமே முந்திக்கொண்டு இப் பெண்மணியிடம் சொன்னார், ''நாம் எதற்காகப் பட்டினி கிடக்கவேண்டும்?--

144 ''தாதா கேள்கரின் இல்லத்திற்குச் சென்று சந்தோஷமாகப் பூரணப் போளிகளைச் செய்யும். குழந்தைகளுக்கு அளித்தபின் நீங்களும் திருப்தியாகச் சாப்பிடும்.ஃஃ

145 இதில் வேடிக்கை என்னவென்றால், அன்று ஹோ­ப்பண்டிகை. தாதா கேள்கரின் மனைவி மாதவிலக்காகி, வீட்டினுள் சென்று எதையும் தொடமுடியாத நிலையில் இருந்தார். அன்றைய தினமே அதிருஷ்டவசமாக இப் பெண்மணி சிர்டீக்கு வந்து சேர்ந்தார்.

146 இப் பெண்மணியின் உபவாச உற்சாகம் கரைந்து போயிற்று. உபவாசம் இருப்பதற்குப் பதிலாக அவரே சமையல் செய்ய நேர்ந்தது. ஆயினும் அவர் பாபாவின் ஆணையை மிகுந்த பிரேமையுடன் நிறைவேற்றினார்.

147 பாபாவின் சேவடிகளுக்கு வந்தனம் செய்துவிட்டு, தாதாவின் வீட்டிற்குச் சென்று பூரணப்போளியும் விருந்தும் சமைத்து மற்றவர்களுக்குப் பரிமாறித் தாமும் உண்டார்.

148 எவ்வளவு சுந்தரமான காதைõ உள்ளிடைக் கருத்து எவ்வளவு அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறதுõ குருவின் வார்த்தைகளில் இதுபோல் ஸ்திரமான (ஆழ்ந்த) நம்பிக்கை வைப்பவர்களின் உத்தாரணம் வெகுதூரத்தில் இல்லை.

149 ஸமர்த்த ஸாயீ இதே மாதிரியான கதையொன்று ஞாபகத்திற்கு வந்தபோது, அனைத்து பக்தர்களுக்கும் அதை எடுத்துரைத்தார். கதைகேட்பவர்களேõ பயபக்தியுடன் கேளுங்கள்.

150 பரமார்த்த வாழ்வை விரும்பும் ஒருவர், பலமான முயற்சிகளை எடுப்பதற்கும் திடமான சாதனைகளைச் செய்வதற்கும் சொற்பமாக சாகசம் புரிவதற்கும் தயாராக இருக்கவேண்டும்.

151 ஞானிகளின் பாததீர்த்தமாகிய கதாமிருதத்தை நம்முடைய நித்திய மங்களம் கருதிப் பருகவேண்டும். ஞானியரின் பாதங்களில் விநயத்துடன் சரணடைந்துவிட்டால், இதயம் பரிசுத்தமாகிவிடும். (ஸாயீ சொன்ன கதை இங்கிருந்து ஆரம்பம்.)

152 ''நான் சிறுவனாக இருந்தபோது கிடைத்ததைக் கொண்டு வாழ்க்கை நடத்தி, ஒரு சமயம் பிழைப்புக்காக வேலைதேடிப் புறப்பட்டேன்.--

153 ''நடந்து நடந்து பீட்காங்வுக்கு வந்துசேர்ந்தேன். அங்கே சிறிது ஓய்வெடுத்தேன். ஆனால், என்னுடைய பக்கீரோ எனக்கு ஆனந்தம் அளிக்கக்கூடிய வேறு திட்டம் வைத்திருந்தார்.--

154 ''அங்கு எனக்கு ஜரிகை வேலைப்பாடு செய்யும் தொழில் கிடைத்தது. நான் அயராமல் உழைத்தேன். என்னுடைய உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்தது. அது பக்கீரின் பராக்கிரமம் அன்றோõ--

155 ''அங்கு எனக்கு முன்னர் நான்கு சிறுவர்கள் வேலை செய்துகொண் டிருந்தனர். திறமைசா­கள் என்று பெயரெடுத்தவர்கள். அவர்களும் என்னுடன் வேலை செய்தனர்.

156 ''ஒரு சிறுவன் ரூ. 50/- மதிப்பீட்டுக்கு வேலை செய்திருந்தான். இரண்டாமவன் ரூ. 100/- மதிப்பீட்டுக்கு வேலை செய்திருந்தான். மூன்றாமவன் ரூ. 150/- மதிப்பீட்டுக்கு வேலை செய்திருந்தான். என்னுடைய வேலை இம்மூவரின் வேலையைவிட இரண்டு மடங்காக மதிப்பிடப்பட்டது.--

157 ''என்னுடைய கைத்திறமையை அறிந்த முதலாளி மகிழ்ச்சி அடைந்தார். என்மீது வாஞ்சைகொண்டு என்னை கௌரவப்படுத்தினார்.--

158 ''அவர் எனக்கு ஓர் உடையைப் பரிசாக அளித்தார். ஒரு தலைப்பாகையையும் உடல் முழுவதையும் தழையத் தழைய மறைக்கும் ஓர் ஆடையையும் (சேலா) அளித்தார். ஆனால், கொடுத்தவுடனே அதை நான் மூட்டை கட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டேன்.--

159 ''பிறர் கொடுப்பது நமக்கு எப்படிப் போதும்? எவ்வளவு கொடுக்கப்பட்டாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இறைவன் நமக்கு அளிப்பதோ முடிவில்லாத செல்வம். யுகம் முடிந்தாலும் முடியாத செல்வம்.--

160 ''என் சர்க்கார் (இறைவன்) கொடுப்பதே கொடுப்பது. மற்றவர்கள் கொடுப்பதை இதனுடன் எப்படி ஒப்பிட முடியும்? மரியாதைக்கு அவமரியாதையை பூஷணம் (அணிகலன்) ஆக்க முடியுமோ?--

161 ''என் சர்க்கார், 'எடுத்துச் செல்லுங்கள்; எடுத்துச் செல்லுங்கள்õஃ என்று சொல்கிறார். ஆனால் எல்லோரும், 'கொடுங்கள்; எனக்கு மட்டும் கொடுங்கள்õஃ என்று கேட்கின்றனர். ஆயினும், யாரும் நான் சொல்வதைக் கேட்பதில்லை; என்னுடைய வார்த்தைகளை லட்சியம் செய்வதில்லை.--

162 ''என்னுடைய கஜானா நிரம்பிவழிகிறது; ஆனால், யாருக்குமே வண்டிகளைக் கொண்டுவரும் சிரத்தை இல்லை. தோண்டு என்று சொன்னால் யாரும் தோண்டுவதில்லை; ஒருவரும் பிரயத்தனம் செய்வதில்லை.--

163 ''அந்தச் செல்வத்தைத் தோண்டியெடுத்து, வண்டி வண்டியாக எடுத்துச் செல்லுங்கள் என்று நான் சொல்கிறேன். ஆயினும், தன் தாயின் சொக்கப் பொன்னான மைந்தனே இந்தக் கஜானாவை எடுத்துச் செல்வான்.--

164 ''பார்க்கப் போனால், நம்முடைய உட­ன் கதியும் விதியும் என்ன? மண் மண்ணோடு சேரும். காற்று காற்றோடு கலந்துவிடும். இந்த நல்வாய்ப்பை நழுவவிட்டுவிட்டால், மறுபடியும் கிடைக்காதுõ--

165 ''ஆயினும் என் பக்கீரின் கலைகளும் என் பகவானின் லீலைகளும் என் சர்க்காரின் லயமான செயல்பாடுகளும் ஒப்பற்றவை; தனித்தன்மை வாய்ந்தவை.--

166 ''நானும் சில சமயங்களில் சில இடங்களுக்குச் செல்கிறேன். போய் அதே இடத்தில் ஓய்வாக உட்கார்ந்துகொள்கிறேன். ஆயினும் என் ஜீவன் மாயையில் சிக்கிக்கொண்டு சுழற்காற்றில் சிக்கிய காகிதப்பட்டம்போல் கீழ்நோக்கிப் பாய்கிறது.--

167 ''இந்த மாயையி­ருந்து விடுபடுவது கடினமான காரியம். அது என்னை ஹீனனாகவும் தீனனாகவும் ஆக்கிவிடுகிறது. இரவுபகலாக என் மக்களைப்பற்றியே சிந்திக்கவைக்கிறது.--

168 ''வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான். என்னுடைய வார்த்தைகளை நினைவில் ஏற்றிக்கொண்டு செயல்படுபவன் விலைமதிப்பற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பான்.ஃஃ (ஸாயீ சொன்ன கதை இங்கு முற்றும்.)

169 ஹேமாட் ஸாயீயை சரணடைகிறேன். இக் கதையின் விவரணம் அபூர்வமானதுõ ஸாயீயே ஒரு காரியத்தைச் செய்யும்போது, 'என்னுடையது, நான்ஃ என்னும் எண்ணங்கள் பிசுபிசுத்துப் போகின்றன.

170 கதையை அளிப்பவர் அவரே; படிப்பவரும் அவரே; காதால் கேட்பவரும் அவரே. அவரே கதையை எழுதுகிறார்; அவரே கதையை எழுதும் ஊக்க சக்தியையும் அளிக்கிறார். அர்த்த போதனையை அளிப்பதும் அவரே.

171 ஸாயீயே இக் கதையின் பாட்டுடைத் தலைவர்; ஸாயீயே இக் கதையின் ருசியுமாவார். அவரே கதையைச் சொல்பவராகவும் கேட்பவராகவும் ஆகிறார். விளையும் ஆத்மானந்தத்தை அனுபவிப்பவரும் அவரே.

172 ஆன்மீக முன்னேற்றத்தை நாடுபவர்கள் இவ்வினிமையான கதைகளை, 'கேட்டது போதும்ஃ எனச் சொல்வரோ? இந்த ஆனந்தத்தை அனுபவிக்கும் பக்தர்கள் பாக்கியசா­கள்.

173 அடுத்த அத்தியாயத்தின் சாரம் உதீயின் அபாரமான மஹிமை. கதை கேட்கும் நல்லோரை பயபக்தியுடன் கேட்குமாறு வேண்டுகிறேன்.

174 ஸமர்த்த ஸாயீ, கிருபையால் உந்தப்பட்டுத் தம்முடைய சரித்திரத்தைத் தாமே என் மூலமாக எழுதிக்கொண்டார் என்பதை, ஹேமாட் விநயத்துடன் சொல்ல விரும்புகிறேன். கதையோ அபூர்வமான ரசம் நிரம்பியதுõ

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'குரு மஹிமை வர்ணனைஃ என்னும் முப்பத்திரண்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.


Do you want to ask questions and share ideas about your kid's education, parenting and more? Join Tamilcube Kids, our exclusive premium Facebook group now, and start meeting other Singapore Indian parents with similar interests.

Share:

Download Free Tamilcube School App:
Home Tamil Tuition Tamil Testpapers Tamil eLearning Calendar Books Astrology
Dictionaries : Tamil Hindi Malayalam Telugu Marathi Sanskrit Kannada More...
Baby Names : Tamil Hindi Sanskrit Telugu Kannada Muslim Malayalam Bengali Marathi Gujarati Marathi
GK : GK questions TNPSC More...
More...