Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
அத்தியாயம் - 3131. ஸாயீ சன்னிதியில் முக்திஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். 1 கடந்த அத்தியாயத்தில் ஸப்தசிருங்கி தேவி உபாசகரின் கதையையும் மாதவராவின் நேர்த்திக்கடனை ஸாயீ எவ்வாறு நிறைவேற்றிவைத்தார் என்ற விவரத்தையும் சொன்னேன். 2 குசால் சேட்டுக்கும் ராம்லாலுக்கும் கனவில் தரிசனமளித்ததையும் ராம்லாலைத் தம்முடைய மஹாஸமாதி நாள்வரை தம்முடன் வைத்துக்கொண்ட விவரத்தையும் சொன்னேன். 3 இந்த அத்தியாயம் முன்னதைவிட அபூர்வமானது. கேட்பவர்கள் பயபக்தியுடனும் கவனமாகவும் கேளுங்கள். மானஸஸரோவர் ஏரிக்கு யாத்திரையாகக் கிளம்பிவந்த சன்னியாசி ஒருவர் திடீரென்று சிர்டீயில் முக்தியடைந்தார். 4 பாலாராம் மாங்கர், தாத்யா ஸாஹேப் நூல்கர், மேகா, இவர்களுடைய (முக்தி) விருப்பத்தையும் ஸாயீ நிறைவேற்றிவைத்தார். இவர்களாவது மனிதர்கள்; பயங்கர மிருகமான ஒரு புக்கும் பாபா தமது சன்னிதியிலேயே முக்தி அளித்தது அற்புதமான செயல் அன்றோõ 5 இவையெல்லாம் விரிவான காதைகள். சொல்லப்புகுந்தால் காவியம் மிகப் பெரியதாகிவிடும். ஆகவே, சுருக்கமாக சாரத்தை மட்டும் சொல்கிறேன். பக்தர்களுக்கு நன்மையளிக்கும். 6 மரணத்தறுவாயில் உதிக்கும் எண்ணங்கள் என்னவோ, அவற்றுக்கேற்றவாறே பிராணிகளின் அடுத்த ஜன்மம் அமைகிறது. பயத்தால் பூச்சிகள் வண்டுகளாகின்றன. மான்குட்டியின்மீது ஏற்பட்ட பிரியத்தால் ஜடபரதர்1 அடுத்த பிறவியில் மானாகப் பிறந்தார்õ 7 உயிர் பிரியும் சமயத்தில் மனக்கண்ணால் எந்த உருவத்தைக் காண்கிறோமோ அதே உருவத்தில் அடுத்த பிறவி அமைகிறது. இறைவனுடைய மலரடிகளை நினைப்பவருக்கு அடுத்த பிறவியே இல்லாமற்போகிறது. 8 இக் காரணம்பற்றியே பக்தர்கள் நாமஸ்மரண அப்பியாசம் செய்யும்படி ஊக்குவிக்கப் படுகின்றனர். கடைசி நேரம் வரும்போது அரண்டுபோகாமல் பகவானின் நாமத்தைப் பற்றிக்கொள்ளலாம். 9 வாழ்நாள் முழுவதும் விழிப்புடன் இருந்துவிட்டுக் கடைசி நேரத்தில் ஒரு மனிதன் தூங்கிவிட்டானானால், எந்த முக்கியமான காரணத்திற்காக சத்சங்கம் வளர்த்தானோ, அந்த சத்சங்கம் உபயோகமின்றிப் போகிறது. 10 ஆகவே, கள்ளங்கபடமற்ற, எளிமையான பக்தர்கள் தங்களுடைய வாழ்வை ஞானியரின் கைகளில் ஒப்படைத்துவிடுகிறார்கள். நமக்கு மறுபிறவி உண்டா இல்லையா என்பது அவர்களுக்குத் தெரியும். அந்திமகாலத்தில் ஞானியரே நமக்குத் துணை. 11 இது சம்பந்தமாக, ஸாயீயின் சன்னிதியிலேயே நடந்த ஒரு அருமையான நிகழ்ச்சியைக் கேளுங்கள். பக்தர்களின்பால் ஸாயீ எவ்வளவு வாத்சல்யம் (தாயன்பு) காட்டினார் என்பதைக் காண்பீர்கள். 12 மதறாஸ் எங்கே, சிர்டீ எங்கே, இமயமலையில் இருக்கும் மானஸஸரோவர் எங்கேõ ஆயினும் பக்தரின் ஆயுள் முடிந்துவிட்டதென்று தெரிந்தால், பாபா அவரை எப்படியாவது இழுத்துத் தம்முடைய பாதங்களுக்குக் கொண்டுவருவார். 13 ஒரு சமயம், விஜயானந்த் என்ற பெயர்கொண்ட சன்னியாசி மதறாஸிருந்து மானஸஸரோவருக்கு மிகுந்த உற்சாகத்துடன் புனிதப் பயணம் கிளம்பினார். 14 ஒரு ஜப்பானிய யாத்திரிகர் வைத்திருந்த வரைபடத்தைப் பார்த்துவிட்டு, மானஸஸரோவர் ஏரியை தரிசனம் செய்தே தீருவது என்று உறுதி பூண்டார். 15 வழியில் பாபாவின் பிரபாவத்தைக் கேள்விப்பட்டு சிர்டீக்கு வந்தார். பாபாவை தரிசனம் செய்யவேண்டுமென்ற பேராவல் கொண்டு அவர் வாழ்ந்துகொண் டிருந்த இடத்தைத் தேடிக்கொண்டு வந்தார். 16 ஸாயீமஹராஜ் ஒரு பெரிய ஞானி, உலகளாவிய கீர்த்தி பெற்றவர், என்று கேள்விப்பட்டு அவரை தரிசனம் செய்வதற்காகத் தமது புனிதப் பயணத்தை சிர்டீயில் நிறுத்தினார். 17 அந்த சமயத்தில், ஹரித்துவாரைச் சேர்ந்த ஸோமதேவ்ஜி சுவாமி சிர்டீயில் இருந்தார். பக்தர்கள் கோஷ்டியில் அவர்கள் இருவரின் சந்திப்பு இயல்பாக நேர்ந்தது. 18 மதறாஸ் சன்னியாசி அவரைக் கேட்டார், ''மானஸஸரோவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?ஃஃ சுவாமி பதில் கூறினார், ''கங்கை உற்பத்தியாகும் கங்கோத்ரியிருந்து 500 மைல் தூரத்தில் உயரே இருக்கிறது.-- 19 ''அங்கே பனிமழை அதிகம். நூறு மைலுக்கு ஒரு பாஷையாக மாறுகிறது. பூட்டானிய மக்களின் சந்தேகங்கள் வேறு. வெளிதேசத்து யாத்திரிகர்கள் பல தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர்.ஃஃ 20 சுவாமியிடமிருந்து இந்த விவரங்களைக் கேட்ட சன்னியாசி மனமுடைந்து போனார். அவருடைய உறுதி கலைந்து கவலையில் மூழ்கினார். 21 அவர் ஸாயீ பாபாவை தரிசனம் செய்தார். பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். மனம் அமைதியடைந்து மகிழ்ச்சியுற்றார். ஆசனம் போட்டு அருகில் அமர்ந்தார். 22 திடீரென்று பாபா கோபாவேசம் கொண்டார். குழுமியிருந்த மக்களைப் பார்த்து உரக்கச் சொன்னார், ''இந்த சன்னியாசியை விரட்டியடியுங்கள். இவருடைய சங்காதமே நமக்கு வேண்டாம்.ஃஃ 23 சன்னியாசியோ புதியவர்; பாபாவின் சுபாவம் தெரியாதவர். மனத்தில் அடி வாங்கியபோதிலும் பக்தர்கள் செய்த சேவையைப் பார்த்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தார். 24 அது காலை தர்பார் நேரம். மக்கட்கூட்டத்தால் மசூதி நிரம்பி வழிந்தது. பக்தர்கள் கொண்டுவந்த பூஜை திரவியங்களும் அவர்கள் செய்த உபசாரங்களும் சன்னியாசிக்குப் பெருவியப்பை அளித்தன. 25 சில பக்தர்கள் பாபாவின் பாதங்களைக் கழுவிக் கட்டைவிரருந்து புனித நீரை எடுத்துக்கொண்டனர். சிலர் அப் புனித நீரைத் தேக்கரண்டியினால் அருந்தினர். சிலர் அதைக் கண்களில் பூசிக்கொண்டனர். அனைவரும் சுத்தமான பக்தியுடன் சேவை செய்தனர். 26 சிலர் அவருக்குச் சந்தனம் பூசினர். வேறு சிலர் அத்தர் போன்ற வாசனை திரவியங்களைப் பூசினர். அனைவருமே, பிராமணர், பிற்படுத்தப்பட்டோர், இதர ஜாதியினர் என்னும் பாகுபாடுகளையும் கட்டுப்பாடுகளையும் அறவே துறந்து சேவை செய்தனர். 27 பாபா கோபம் காட்டியிருந்தாலும் சன்னியாசியின் மனத்தில் அனுராகம் (காதல்) பொங்கியதுõ அவர் இடத்தை விட்டு எழுந்திருக்கவோ நகரவோயில்லைõ 28 அவர் சிர்டீ வந்துசேர்ந்த இரண்டு நாள்களுக்குள்ளாகவே கிராமத்தில் அவருக்குத் தாயார் தீவிரமாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகக் கடிதம் வந்தது. சன்னியாசி சோகமுற்றார். 29 தம்முடைய கிராமத்திற்குத் திரும்பிச் சென்று தாயாரைக் காணவேண்டுமென்று அவர் விரும்பினார். ஆனால், பாபாவின் அனுமதியின்றிப் போகமுடியாது. 30 சன்னியாசி, கையில் கடிதத்துடன் மசூதிக்குச் சென்று பாபாவிடம் தாயாருடைய நிலைமையைத் தெரிவித்து வீடு திரும்புவதற்கு அனுமதி வேண்டினார். 31 ''ஸமர்த்த ஸாயீ மஹராஜரேõ என் மனம் தாயாரைக் காணத் துடிக்கிறது. இந்த யாத்திரிகனின்மீது கருணை காட்டுங்கள். இன்முகத்துடன் எனக்கு அனுமதி தாருங்கள்.ஃஃ 32 அவர் ஓடிவந்து பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, ''எனக்கு அனுமதியளித்துக் கிருபை செய்வீர்களா? என் தாயார் பிராணனைத் தொண்டையில் வைத்துக்கொண்டு தரையில் படுத்துக்கிடக்கிறார் போலும்.-- 33 ''தாயார் எனக்காகக் காத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. நான் போய்ப் பார்த்தால் அவருடைய வேதனை குறையும்; முடிவும் அமைதியாக நேரும்.ஃஃ 34 சன்னியாசியின் ஆயுட்காலமே முடியப்போகிறது என்பதை அந்தர்ஞானத்தால் அறிந்த ஸமர்த்த ஸாயீ அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள். 35 ''தாயாரிடம் இவ்வளவு பாசம் வைத்திருக்கும் நீர் ஏன் சன்னியாசம் ஏற்றீர்? உலகியல் பந்தங்களுக்கும் காவி உடைக்கும் சரிப்பட்டு வராதே. காவி உடைக்குக் களங்கம் கற்பித்துவிட்டீரேõ-- 36 ''போய் அமைதியாக உட்காரும்; சோகம் வேண்டா. போவதா, வேண்டாவா என்று சில நாள்கள் கழித்து முடிவெடுப்போம். அதுவரை தைரியமாகவும் பொறுமையாகவும் இரும்.-- 37 ''வாடாவில் பல திருடர்கள் இருக்கிறார்கள். கதவுகளை மூடிக்கொண்டு உஷாராக இரும். ஏனெனில் திருடர்கள் உம்மைக் கடுமையாகத் தாக்கிவிட்டு எல்லாப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.-- 38 ''செல்வம் என்றுமே சாசுவதமில்லை; சரீரமோ ஒரு நீர்க்குமிழி. மரணம் எப்பொழுதுமே பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறது என்பதை அறிந்து தருமவழியில் நடப்பீராக.-- 39 ''உடல், மனைவி, மக்கள் ஆகியவரின் சம்பந்தமாக 'நான்ஃ - 'எனதுஃ என்ற உணர்வுகளும் அவற்றிருந்து விளையும் மூன்று வகையான தாபங்களும் இவ்வுலகின் அனர்த்தங்கள் (கேடுகள்).-- 40 ''இரண்டாவது வகையான அனர்த்தம் சொர்க்கத்தைச் சார்ந்தது. மரணத்திற்குப்பின் மக்கள் அடைய விரும்பும் சொர்க்கமே மோக்ஷத்திற்குத் தடையாகிவிடுகிறது. தலைகீழாகக் கீழே விழுவதற்கும் பொதுவான காரணமாகிறது.-- 41 ''சொர்க்கத்தில் புண்ணியம் சம்பாதிக்கமுடியாது. பயமில்லாத நிலையையும் அடைய முடியாது. ஏனெனில், சேர்த்து வைத்த புண்ணியம் செலவழிந்த பிறகு கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயம், சந்தேகத்துக்கு இடமில்லாமல் அங்கும் நிலவுகிறது.-- 42 ''இவ்வகையாக, இவ்வுலகவாழ்வு, மேலுலகவாழ்வு இரண்டுமே அனர்த்தங்கள் நிறைந்தவை. ஆகவே, இரண்டையுமே முழுமையாகத் துறப்பதே ஆனந்தப் பெருநிலையின் அஸ்திவாரம்.-- 43 ''உலக வாழ்வை வெறுத்தொதுக்கி, ஹரியின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்பவர்கள், பந்தங்களின் பிடியிருந்து விடுபடுகின்றனர். அஞ்ஞானமும் மாயையும் அவர்களைவிட்டு அகன்றுவிடுகின்றன.-- 44 ''ஹரிபஜனையும் நாமஸ்மரணமும் அளிக்கும் உந்துவிசை, பாவம், தாபம், துயரம் ஆகியவற்றை விரட்டிவிடும். நிறைந்த அன்புடன் தியானம் செய்தால், இறைவன் நம்மை சங்கடங்களிருந்து விடுவிப்பான்.-- 45 ''நீர் இவ்விடம் வந்துசேர்ந்தது மிக உயர்ந்த பூர்வபுண்ணிய பலத்தாலேயே. இப்பொழுது என்னுடைய அறிவுரையைக் கேட்டு இந்த ஜன்மத்தைப் பயனுள்ளதாகச் செய்துகொள்வீராகõ -- 46 ''நாளையிருந்து பாகவதத்தைப் (ஸ்ரீகிருஷ்ணனின் கதையைப்) பரிசீலனை செய்யும். மனத்தையும் வாக்கையும் செயலையும் ஒருமுகப்படுத்தி, மூன்று ஸப்தாஹங்கள்1 பாராயணம் செய்யும்.-- 47 ''மற்ற விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பாகவதத்தைக் காதால் கேளும்; அல்லது நீரே பாராயணம் செய்யும். முழுநம்பிக்கையுடன் படித்து மறுபடியும் மறுபடியும் படித்ததை ஆழமாகச் சிந்தனை செய்யும்.-- 48 ''இறைவன் சந்தோஷமடைந்து, உம்முடைய துக்கங்கள் அனைத்திற்கும் ஒரு முடிவுகட்டிவிடுவான். மாயையும் மோகமும் விலகும். அத்தியந்தமான சுகம் கிடைக்கும்.-- 49 ''தினமும் காலைக்கடன்களை முடித்துவிட்டு, ஹரிபாதங்களில் மனத்தை ஈடுபடுத்தி இந்த விரதத்தை (மூன்று ஸப்தாஹம்) முடித்தால் விடுதலை கிடைக்கும்.ஃஃ 50 பாபாவும் மேற்சொன்ன வழிமுறையையே கடைப்பிடித்தார் அல்லரோõ தம்முடைய தேகத்திற்கு முடிவு வரப்போகிறதென்று தெரிந்தவுடன் 'ராமவிஜயம்ஃ படிக்கச் சொல்க் கேட்டார். 'ராமவிஜயம்ஃ படிப்பதாலும் கேட்பதாலும் மிருத்யுஞ்ஜயர் (காலனை வென்றவர்-சிவன்) சந்தோஷமடைகிறார். 51 அடுத்த நாள் காலை நேரத்தில், சன்னியாசி தம்மை சுத்தம் செய்துகொண்டு பாபாவுக்குப் புஷ்பாஞ்ஜ செய்துவிட்டு பாபாவின் பாததூளியை நெற்றியில் இட்டுக்கொண்டார். 52 பாகவதத்தைக் கையில் இடுக்கிக்கொண்டு வாசிப்பதற்குத் தேவையான தனிமையை அளித்த, அமைதியும் சாந்தமும் நிறைந்த லெண்டித் தோட்டத்திற்குச் சென்றார். 53 யோகாசனத்தில் அமர்ந்து பாராயணம் செய்ய ஆரம்பித்தார். சன்னியாசி முழுநேரமாகப் படித்து இரண்டு ஸப்தாஹங்களை வெற்றிகரமாக முடித்தார். 54 மூன்றாவது சுற்றை ஆரம்பித்த சமயத்தில் திடீரென்று நிலைகுலைந்தார்; ஜீவசக்தி வடிந்துபோவதுபோல் உணர்ந்தார். பாராயணத்தை அந்தக் கட்டத்திலேயே நிறுத்திவிட்டார். 55 வாடாவிற்குத் திரும்பிவந்து இரண்டு நாள்கள் சிரமப்பட்டார். மூன்றாவது நாள் பொழுது விடியும் சமயத்தில் சன்னியாசி கண்மூடினார். 56 பக்கீர் பாபாவின் மடியில் தலையைச் சாய்த்தவர் சாய்த்தவர்தான். தேகத்திருந்து விடுதலை பெற்றுவிட்டார். 57 சன்னியாசி மரணமடைந்த செய்தியைக் கேட்ட பாபா, ஒரு நாள்வரை உடலைப் பாதுகாக்கும்படி ஆணையிட்டார். 58 பாபா சொன்னார், ''உடலை உடனே புதைக்க வேண்டா.ஃஃ பாபா இவ்வாறு சொன்னதால், சன்னியாசி மறுபடியும் உயிர்பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் உற்சாகத்துடன் உடலைப் பாதுகாத்தனர். 59 ஒரு முறை உயிர் பிரிந்துவிட்டால் மறுபடியும் வந்து புகுந்துகொள்ளுமா என்ன? ஆயினும் பாபாவில் சொல் பிரமாணமன்றோõ ஆகவே மக்கள் பிணத்தைப் பாதுகாத்தனர். 60 அந்த ஆணைக்கும் பிறகு பலன் கிடைத்ததுõ சொந்தம் கொண்டாட யாருமில்லாத பிணம் பாதுகாக்கப்பட்டது. போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் எதுவும் ஏற்படக் காரணம் இல்லாமற்போயிற்று. இறந்தபின் உடல் ஜீவன் எப்படி இருக்கும்? 61 பாபாவுக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கத் தெரியாதா என்ன? (அவருக்கு அந்த சக்தி இருந்தது.) ஆயினும், அநாதைப் பிணம் முறையான விசாரணையின்றி பூமியில் புதைக்கப்படக்கூடாது என்பதுதான் அவருடைய இலக்குõ 62 சொந்தம் கொண்டாடப்படாதவை அனைத்தும் அரசாங்கத்திற்குச் சொந்தம். திடீர் மரணங்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். ஆகவே, இந்தச் சாக்குப்போக்கைச் சொல் பாபா பிணத்தைப் புதைக்க விடாமல் தடுத்தார். 63 பின்னர் எல்லாம் அவ்வாறே நடந்தது. விதிமுறைகளுடன் சடங்குகள் செய்யப்பட்டுப் பிரேதம் தகுதியான இடத்தில் புதைக்கப்பட்டது. ஸாயீயின் இலக்கு இவ்வாறு ஒழுங்குமுறையாக நிறைவேறியது. 64 கேட்பவர்களுக்கு நான் இப்பொழுது இன்னொரு கதை சொல்கிறேன். பயபக்தியுடனும் கவனத்துடனும் கேளுங்கள். ஸாயீ எங்கும் நிறைந்தவர் என்பது உங்களுக்குப் புலனாகும். 65 மாங்கர் என்ற குடும்பப் பெயரும் பாலாராம் என்ற பெயரும் கொண்ட ஒருவர் பாபாவின் பரம பக்தர். அவர் ஒரு இல்லறவாசியாக வாழ்ந்துவந்தவர். 66 வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மாங்கரின் மனைவி இறந்துபோனார். இல்லறத்தின் கடமைகளைச் செய்யமுடியாது போயிற்று. அவருடைய மனம் அமைதியிழந்தது. ஆயினும் மனைவியின் மரணமே அவருக்குப் பிற்காலத்தில் பெரும்பேற்றைக் கொணர்ந்தது. 67 பூர்வபுண்ணிய பலனாக அவருக்கு ஸாயீ பாதங்களின் சங்கம் கிடைத்தது. ஸாயீயிடம் நிச்சலமான பக்தி வளர்ந்தது. உலக வாழ்வின்மீது பூரணமான விரக்தி ஏற்பட்டது. 68 தெய்வ அருள் பெற்ற மாங்கர் ஆசாபாசங்கள், மனைவி, மக்கள் ஆகிய சகல பந்தங்களையும் அறுத்தெறிந்துவிட்டு இல்லற வாழ்விருந்து தம்மை விடுவித்துக்கொண்டார். 69 பிறரிடம் பணி செய்வது சம்சார வாழ்க்கைக்கு மோகனமாலை; ஆன்மீக வாழ்க்கைக்கோ பெரிய இடைஞ்சல். உலக பாரத்தைத் தம் மகனின் தலைமேல் ஏற்றிவிட்டுவிட்டுத் தம்மைப் பொறுத்தவரை அதற்குப் பூட்டுப் போட்டுவிட்டார் மாங்கர். 70 இதுவும் ஒரு வகையான சன்னியாசமே. சன்னியாசம் ஏற்றுக்கொள்வதில் பல வழிமுறைகள் உண்டல்லவோõ பிரம்ம ஞானம் அடையவேண்டுமென்று ஏற்கப்படும் சன்னியாசம் பெரும்பாலும் வெற்றியடைவதில்லை. ஒவ்வொரு படியிலும் தொந்தரவு கொடுக்கக்கூடும். 71 மாங்கரின் அனன்னிய பக்தியைக் கண்ட உதாரமூர்த்தியான ஸாயீ, அருள் செய்து அவருடைய துறவு மனப்பான்மையை திடப்படுத்தினார். 72 அனந்த (அளவற்ற) ஜன்மங்களில் செய்த வினைகளின் விளைவு அவர்மேல் கவிழ்ந்துகொண்டு மனத்தைச் சஞ்சலப்படுத்தி நிலைபெறமுடியாமல் செய்தது. மனோராஜ்ஜியத்தின் பேரலைகள் மாங்கரின் மனத்திண்மையைக் கலைத்தன. 73 ஆகவே, ஸாயீ, தம்முடைய இடம் சிர்டீ மட்டும் அன்று; தாம் காலத்தையும் இடத்தையும் கடந்தவர் என்று மாங்கருக்கு நேரிடை அனுபவத்தால் நிரூபிப்பதற்காக அவருக்கு ஆணையிட்டார்.-- 74 ''நீர் சிர்டீயில் இருந்தது போதும்õ இந்தப் பன்னிரண்டு ரூபாயைப் பிரயாணச் செலவுக்காக எடுத்துக்கொண்டு மச்சிந்தரகட்டுக்குப் (ஒரு கோட்டை) போய், 'ஆனந்தம் பெறுவேன்ஃ என்ற நிச்சயமான தீர்மானத்துடன் அங்கு வாசம் செய்யும்.ஃஃ 75 மாங்கர் ஸாயீயின் திருவாய்மொழியைக் கேட்டு அவருடைய ஆணையை சிரமேற்கொண்டு, பாதங்களில் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். 76 மிகுந்த விநயத்துடன் மாங்கர் பதில் கூறினார், ''உங்களுடைய தரிசனம் கிடைக்காத இடத்தில் உட்கார்ந்துகொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?-- 77 ''இங்கே தினமும் உங்களை தரிசனம் செய்வேன்; பாத தீர்த்தம் அருந்துவேன்; இயல்பாகவே இரவுபகலாக உங்களுடைய சிந்தனையில் மூழ்குவேன். அங்கோ, நான், நான்மட்டும் ஓர் ஆண்டிப் பயலைப்போல் வாழ்வேன்.-- 78 ''ஆகவே, பாபா, நீங்கள் இல்லாமல் அங்கு நான் என்ன லாபம் பெறுவேன்õ என்னை ஏன் அங்கு அனுப்புகிறீர்கள்?ஃஃ 79 'சிஷ்யனுக்கு குருவின் வார்த்தைகளில் அணுவளவும் சந்தேகமோ கோணல் சிந்தனையோ ஏற்படக்கூடாதுஃ என்று நினைத்த மாங்கர், அடுத்த கணமே விகற்பத்தை விடுத்து, சங்கற்பம் செய்துகொண்டார். 80 மாங்கர் கூறினார், ''பாபா, என்னை மன்னித்துவிடுங்கள். என்னுடைய எண்ணங்கள் அற்பத்தனமான புத்தியிருந்து எழுந்தவை. என்னுடைய சந்தேகங்களைப்பற்றி நானே வெட்கப்படுகிறேன். எனக்கு இந்த சந்தேகம் வந்திருக்கவேகூடாது. -- 81 ''நான் உங்களுடைய நாமத்தை சதா ஜபம் செய்பவன்; ஆக்ஞையை சிரமேற்கொள்பவன். உங்களுடைய அருள் சக்தியால் நான் அந்தக் கோட்டையிலும் சந்தோஷமாக இருப்பேன்.-- 82 ''அங்கும் உங்களையே தியானம் செய்வேன்; உமது கருணை பொங்கும் உருவத்தையே மனத்திரையில் நிறுத்துவேன். உங்களைப்பற்றியே நினைத்துக்கொண் டிருப்பேன்.-- 83 ''உங்களிடம் அனன்னியமாக (வேறெதிலும் நாட்டமில்லாது) சரணடைந்து, வருவதையும் போவதையும் உங்களுடைய கையில் ஒப்படைத்துவிட்ட பிறகு, நான் ஏன் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டும்?-- 84 ''உங்களுடைய ஆக்ஞையின் சக்தியே எனக்கு அங்கும் சாந்தியளிக்கும். உங்களுடைய மஹத்தான சக்தியினுள் அடைக்கலம் புகுந்த நான் ஏன் வீணாகக் கவலைப்படவேண்டும்?ஃஃ 85 ஸமர்த்த ஸாயீ சனாதன பிரம்மம். அவருடைய வார்த்தைகளே நமது தலையெழுத்தாகும். எவர் அவருடைய வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறாரோ, அவர் பூரணமான அனுபவத்தைப் பெறுவார். 86 பாபா அப்பொழுது மாங்கரிடம் சொன்னார், ''மனத்தை நிலைப்படுத்திக்கொண்டு நான் கூறுவதைக் கவனமாகக் கேளும். விகற்பமான எண்ணங்கள் வேண்டா.-- 87 ''உடனே கிளம்பி மச்சிந்தரகட்டுக்குப் போம். தினமும் மூன்று முறைகள் தியானம் செய்யும். காலக்கிரமத்தில் ஆத்மானந்தத்தால் நிரம்புவீர்.ஃஃ 88 இவ்வாறு உறுதியளிக்கப்பட்ட மாங்கர் மௌனமானார். 'தீனனாகிய நான் என்ன சொல்ல முடியும்ஃ என்று நினைத்து, கோட்டைக்குப் போவதற்குத் தயாரானார். 89 மறுபடியும் ஸாயீபாதங்களை வணங்கிவிட்டு உதீ பிரசாதத்தையும் பெற்றுக்கொண்டு தெளிவான மனத்துடன் மச்சிந்தர பவனுக்குக் கிளம்பினார். (அங்கு போய்ச் சேர்ந்தபின்) 90 அந்த ரம்மியமான இடத்தையும் பளிங்கு போன்ற சுத்தமான நீரையும் மந்தமாருதத்தையும் (தென்றலையும்) கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தார். 91 ஸாயீயால் ஆணையிடப்பட்டிருப்பினும், ஸாயீயை எங்கோ வைத்துக்கொண்டு, அவர் விதித்தவாறும் சொல்க்கொடுத்த முறையிலும் மாங்கர் தம்முடைய தவத்தை ஆரம்பித்தார். 92 பாபா புரிந்த விந்தையைப் பாருங்கள்õ அந்தக் கோட்டையில் மாங்கர் தவத்தில் மூழ்கியிருந்தபோது, பாபா பிரத்யக்ஷமாக தரிசனம் அளித்தார். மாங்கர், கண்களுக்கு எதிரே பாபாவை தரிசனம் செய்தார். 93 சமாதி நிலையில் தரிசனம் கிடைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், மாங்கரோ ஆசனத்தில் அமர்ந்திருந்தபோது விழித்த நிலையிலேயே ஸமர்த்தரைக் கண்டார். 94 கண்ணால் கண்டது மட்டுமல்லாமல், பாலாராம் ஸாயீயைக் கேட்டார், ''பாபா, என்னை ஏன் இங்கு அனுப்பினீர்கள்?ஃஃ பாபா என்ன பதில் கூறினார் தெரியுமா? 95 ''சிர்டீயில் இருந்தபோது அநேக எண்ணங்கள் உமது மனத்தில் அலைகளாக எழும்பி மோதின. ஆகவே உம்முடைய சஞ்சலமுற்ற மனத்தைக் கோட்டைக்குப் போகும்படி நியமித்தேன்.-- 96 ''நிலம், நீர் ஆகிய பஞ்சபூதங்களால் ஆகியதும் மூன்றரை முழம் நீளமுள்ளதுமான இவ்வுடலுக்கு வெளியேயோ, சிர்டீக்கு வெளியேயோ நான் இல்லை என்று நினைத்திருந்தீர்.-- 97 ''ஆனால், இப்பொழுது உம்மெதிரில் நிற்கும் நான்தான் சிர்டீயிலும் இருக்கிறேன். இதை நீரே அமைதியான மனத்துடன் நிதானமாக நன்கு பார்த்துக்கொள்ளும். இந்நிமித்தமாகவே உமக்கு இப்பாடம் புகட்டினேன் என்றும் அறிவீராக.ஃஃ 98 உத்தேசம் செய்த காலம் கடந்தபின், மாங்கர் மச்சிந்தரகட்டை விடுத்துத் தம்முடைய இடத்திற்குக் கிளம்பினார். 99 அவருடைய வாசஸ்தலமான பாந்த்ராவிற்குப் போகலாம் என்று நினைத்தார். ஆகவே பூனாவிருந்து தாதர்வரை ரயில்வண்டியில் பயணம் செய்ய முடிவுசெய்தார். 100 பூனா ரயில் நிலையத்தை அடைந்தார். பயணச்சீட்டு வாங்கவேண்டிய நேரம் வந்தவுடன், சீட்டு வாங்கும் முகப்புக்குச் சென்றபோது ஓர் அற்புதம் நிகழ்ந்ததுõ 101 இடுப்பில் லங்கோடு கட்டி ஒரு கம்பளியைப் போர்த்துக்கொண்டு விவசாயியைப் போல் ஆடையணிந்திருந்த, முன்பின் தெரியாத பிரயாணி ஒருவரை முகப்புக்கருகில் கண்டார். 102 பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு விவசாயி திரும்பியபோது அவருடைய பார்வை பாலாராமின் பார்வையைச் சந்தித்தது. விவசாயி பாலாராமை நோக்கி நடந்தார். 103 ''நீங்கள் எங்கே போகிறீர்கள்ஃஃ என்று விவசாயி பாலாராமைக் கேட்டார். ''தாதருக்குஃஃ என்று பாலாராம் சொன்னவுடன், ''இதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்ஃஃ என்று சொல்க்கொண்டே பாலாராமிடம் பயணச்சீட்டைக் கொடுத்தார். அவர் மேலும் சொன்னார்,-- 104 ''நான் தாதருக்குப் போகவேண்டுமென்று விரும்பினேன். ஆனால், முக்கியமான வேலையொன்று இங்கிருப்பது திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது. ஆகவே என்னுடைய தாதர் பயணத்தை ரத்து செய்துவிட்டேன்.ஃஃ 105 பணம் கொடுத்தாலும் வரிசையில் நின்று சிரமப்பட்டு வாங்கவேண்டிய பயணச் சீட்டு சுலபமாகக் கைக்கு வந்ததுபற்றி மாங்கர் மகிழ்ச்சியடைந்தார். 106 சீட்டுக்குப் பணம் கொடுப்பதற்காகப் பாக்கெட்டிருந்து பணத்தை எடுத்துக்கொண் டிருந்தபோது, விவசாயி திடீரென்று கூட்டத்தினுள் முண்டியடித்துப் புகுந்து காணாமல் போய்விட்டார். அவர் எங்கே சென்றார் என்பதை மாங்கரால் கண்டுபிடிக்க முடியவில்லை. 107 விவசாயியைத் தேட பாலாராம் பலமாகப் பிரயத்தனம் செய்தார். அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. இதற்கிடையே ரயில்வண்டி வந்துவிட்டது. 108 கால் செருப்பில்லாமல், தலையில் ஒரு வேட்டியை முண்டாசாகக் கட்டிக்கொண்டு, கம்பளியைப் போர்த்துக்கொண்டு வந்த அந்த விவசாயி சகோதரர் யார்? 109 பயணச் சீóட்டின் கட்டணம் சிறிதென்று சொல்லமுடியாது. அதையும் அவர் ரொக்கமாகத் தம்முடைய பாக்கெட்டிருந்து எடுத்துக் கொடுத்தார். ஏன், ஓ, எதற்காக இந்த தாட்சிண்ணியத்தின் பளுவை நான் சுமக்கவேண்டும்? இந்தப் புதிர் எனக்குப் புரியவில்லையேõ 110 தோற்றத்தில் விவசாயி, ஆயினும் இவ்வளவு உதார குணமாõ பணத்தாசை என்பதே கிடையாதா? யார் இந்த விவசாயி? கடைசிவரை இப்புதிர் விடுபடவே இல்லை; மாங்கரின் மனம் குடைந்தது. 111 ஆச்சரியத்தால் நிரம்பிய மாங்கர், விவசாயி எந்நேரமும் வரலாம் என்ற நம்பிக்கையுடன் ரயில் புறப்படும்வரை ரயில் பெட்டியின் கதவுக்கு அருகில் வெளியே நின்று கொண்டிருந்தார். 112 ரயில் புறப்பட்டபோது, இனிமேல் தேடிப் பயனில்லை என்று தெரிந்து கைப்பிடிக் கம்பியைப் பிடித்து, எகிறிக் குதித்துப் பெட்டியில் ஏறினார். 113 கோட்டையில் பிரத்யக்ஷமான சந்திப்பு. வேறுவிதமாக இருந்தபோதிலும் இங்கும் ஸாயீ சந்திப்பு. விவசாயி அணிந்திருந்த விசித்திரமான உடை மாங்கரின் மனத்தைக் குருகுருக்கச் செய்தது. 114 பின்னர், இந்த சத்தான பக்தர் ஸாயீ பாதங்களில் பூரணமாகக் காதல் கொண்டு, திடமான சிரத்தையுடனும் பக்தியுடனும் அவருடைய வாழ்நாளை சிர்டீயில் கழித்தார். 115 ரீங்காரம் செய்துகொண்டே தாமரை மலரின் மகரந்தத்தைச் சுவைக்கச் சுற்றிச் சுற்றி வரும் தேனீயைப்போல, ஸாயி நாமத்தைச் சொல்க்கொண்டே ஸாயீயைச் சுற்றிச் சுற்றி வந்தார். பாலாராம்ஜி அவ்விதமாகவே சிர்டீயில் வாழ்ந்தார். 116 எப்பொழுதாவது பாபாவின் அனுமதி பெற்றுக்கொண்டு முக்தாராம்ஜி என்ற சக பக்தருடன் சிர்டீயை விட்டு வெளியே செல்வார். 117 ஆயினும் சிர்டீயே அவருக்கு மத்திய கேந்திரமாக விளங்கியது. எங்கே சென்றாலும் திரும்பத் திரும்ப சிர்டீக்கே வந்தார். கடைசியில் பரம புனிதமான சிர்டீயிலேயே தம்முடலை உகுத்தார்1. 118 பூர்வ புண்ணிய பலத்தால் ஸாயீயின் பார்வைக்குட்பட்டு, அவருடைய பாதங்களில் மூழ்கி பயமே இல்லாமல் மரணத்தைச் சந்தித்த மாங்கர் மஹா பாக்கியசா. 119 தாத்யாஸாஹேப் நூல்கரும் பெரும்பேறு பெற்றவர்õ பக்த சிகாமணியான மேகாவும் பெரும்பேறு பெற்றவர்õ இவர்கள் இருவரும் சிர்டீயில் பஜனை பாடிக்கொண் டிருந்தபோதே உடலை உகுத்தனர். 120 இறுதிச் சடங்குகளைச் சரிவர நடத்துவதில் பாபாவுக்கு இருந்த அக்கறையையும் பக்தர்களிடம் பாபா வைத்திருந்த நட்புறவையும் மேகாவின் மரணம் எடுத்துக்காட்டியது. மேகா ஜன்மம் எடுத்ததன் பயனை ஏற்கெனவே அடைந்துவிட்டார். 121 பக்தர்கள் புடைசூழ சிர்டீ கிராம மக்கள் மேகாவின் உடலை தகனம் செய்யச் சென்றபோது, பாபாவும் சுடுகாட்டுக்குச் சென்று மேகாவின் உடன்மேல் பூமாரி பொழிந்தார். 122 மாயையின் பிடியில் சிக்கிய சாதாரண மனிதன் துக்கப்படுவதுபோல் இறுதிச்சடங்கு நடந்து முடிந்தபோது பாபா கண்ணீர் சிந்தினார். 123 பிரேமையுடன் தம்முடைய கைகளாலேயே பிரேதத்தைப் பூக்களால் மூடினார். கருணை மிகுந்த குரல் துக்கத்தை ஆற்றிக்கொண்டே மசூதிக்குத் திரும்பினார். 124 மானிடஜாதியைக் கைதூக்கிவிடும் எத்தனையோ ஞானியரைப் பார்க்கிறோம். ஆனால், ஓ, ஸாயீ பாபாவின் மஹத்துவத்தை யாரால் வர்ணிக்க முடியும்õ 125 பு பயங்கரமான மிருகம் அன்றோ? அதற்கு மனிதர்களைப்போல் ஞானம் உண்டா என்ன? ஆனால், அதுவும் பாபாவின் பாதங்களில் சரண் புகுந்ததுõ பாபாவின் செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை அல்லவோõ 126 இது சம்பந்தமாக ஒரு ரம்மியமான காதையைக் கேளுங்கள். பாபாவின் எங்கும் நிறைந்த தன்மையையும் அவர் எல்லா உயிர்களையும் சமமாக மதித்ததையும் காண்பீர்கள். 127 சிர்டீயில் ஒருசமயம் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. பாபா மஹாசாமாதி அடைவதற்கு ஏழு நாள்களுக்கு முன்பு, மசூதி வாசல் ஒரு வண்டி வந்து நின்றது. 128 வண்டியின் பின்புறத்தில் கனத்த இரும்புச் சங்கியால் கழுத்தில் பிணைக்கப்பட்டுப் பெரியதொரு பு இருந்தது. 129 பு ஏதோ வியாதியால் அவதிப்பட்டது. தர்வேசிகள்2 எல்லா உபாயங்களையும் செய்து பார்த்துவிட்டனர். கடைசியில், ஒரு ஞானியை தரிசனம் செய்வதே சிறந்த வைத்தியம் என்று தீர்மானித்தனர். 130 தர்வேசிகள் மூவர் இருந்தனர். புயை வைத்துத்தான் அவர்களுடைய ஜீவிதம் நடந்துகொண் டிருந்தது. ஊர் ஊராகச் சென்று, புயைக் காட்டிக் காசு வாங்கி வாழ்க்கை நடத்தினர். 131 அந்தப் பிராந்தியத்தில் ஊர் ஊராகச் சென்றுகொண் டிருந்தபோது, பாபாவின் லீலைகளைப்பற்றிக் கேள்விப்பட்டனர். ஆகவே தர்வேசிகள் நினைத்தனர், ''நாம் அவரை தரிசனம் செய்வோம். புயையும் அங்கே கொண்டுசெல்வோம். -- 132 ''அவருடைய பாதங்கள் கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணி; அஷ்ட மஹா சித்திகளும் அவரை நமஸ்காரம் செய்கின்றன; நவநிதிகள் பாததீர்த்தம் வேண்டி அவருடைய காலடியில் புரளுகின்றன.-- 133 ''ஆகவே, நாம் அவருடைய பாதங்களை வணங்கிப் புயை ஆசீர்வாதம் செய்யச்சொல் வேண்டுவோம். ஞானியின் ஆசிகளால் நாம் எல்லாருமே மங்களமடைவோம்.ஃஃ 134 தர்வேசிகள் இந்த நோக்கத்துடன் புயை மசூதியின் வாயிலுக்கருகில் வண்டியிருந்து இறக்கினர். சங்கிகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாயில் காத்திருந்தனர். 135 பு இயல்பாகவே ஒரு பயங்கரமானதும் கொடூரமானதுமான காட்டு மிருகம்; இந்தப் புக்கு வியாதி வேறு கண்டிருந்தது. ஆகவே, பு நிலைகொள்ளாமல் தவித்தது. எல்லாரும் இந்தக் காட்சியை வேடிக்கைபார்த்தனர். 136 தர்வேசிகள் படியேறிச் சென்று பாபாவிடம் புயின் நிலைமைபற்றித் தெரிவித்தனர். அவருடைய சம்மதம் பெற்றபின் வாயிலுக்குத் திரும்பிவந்தனர். 137 பு தப்பித்து ஓடிவிடாமருக்கச் சங்கிகள் இறுக்கப்பட்டன. பிறகு தர்வேசிகள் மிக ஜாக்கிரதையாகப் புயை பாபாவின் சன்னிதிக்குக் கொண்டுவந்தனர். 138 படியை நெருங்கியபோது பு ஸாயீயின் ஜோதிமயமான உருவத்தைப் பார்த்தது. பு மனத்துள்ளே நடுங்கியது ஏன் என்று கடவுளுக்குத்தான் தெரியும்õ மிக மரியாதையாகத் தலையைக் கவிழ்த்துக்கொண்டது. 139 ஆஹா, என்னே அந்த அற்புதம்õ பரஸ்பரமாகப் பார்வைகள் சந்தித்தபோது, பு படியேறிக்கொண்டே பாபாவை அன்புடன் உற்றுப்பார்த்தது. 140 உடனே வான் நுனியைத் தூக்கி மூன்று தடவைகள் பூமியில் அடித்தது. சேஷ்டை ஏதும் செய்யாமல் ஸாயீபாதங்களில் தன் வியாதி பிடித்த உடலைச் சாய்த்தது. 141 ஒருமுறை பயங்கரமாக உறுமிவிட்டு அக்கணமே அவ்விடத்திலேயே உயிர் நீத்தது. பு உயிர்நீத்த பாணியைக் கண்ட சகல ஜனங்களும் வியப்படைந்தனர். 142 ஒருவிதத்தில் தர்வேசிகள் சோகமுற்றனர். அதே நேரத்தில், வியாதியால் பீடிக்கப்பட்ட பு மரணமடைந்தாலும் முக்தியடைந்ததைக் கண்டு மனம் தேறினர். 143 சாதுக்களின், ஞானிகளின் கண்ணெதிரில் மரணமடைவதென்பது புண்ணியம் சேர்க்கும். புழுவாய் இருந்தாலென்ன, பூச்சியாய் இருந்தாலென்ன, புயாய் இருந்தாலென்ன? எல்லாப் பாவங்களிருந்தும் உடனே விமோசனம் கிடைக்கிறது. 144 பு போனஜன்மத்தில் தர்வேசிகளுக்குக் கடன்பட்டிருக்கும். அது தீர்ந்தவுடன் புக்கு விடுதலை கிடைத்தது. ஸாயீபாதங்களில் தேகத்தை உகுத்தது. விதியின் விளையாட்டு நமக்கு விளங்காதுõ 145 ஒரு ஞானியின் பாதங்களில் மரணமடையும் பிராணி உடனே உத்தாரணம் செய்யப்படுகிறது. புக்கு இந்த ஜன்மத்தில் விளைந்த மிகப் பெரிய லாபம் அதுவே. 146 பாக்கியசாயாக இல்லாவிட்டால், ஒரு பிராணி ஞானியின் கண்முன்னாக உயிர்நீத்து முக்தியடைய முடியுமா? 147 ஒரு சாதுவின் கண்முன்னாக மரணமடைவதென்பது, குடித்த விஷம் அமிருதமாக மாறியது போன்ற அதிருஷ்டமன்றோõ அவ்விதமான மரணத்தில் மகிழ்ச்சியும் இல்லை; துக்கமும் இல்லை. 148 எந்தப் பிராணியின் மரணம் ஒரு ஞானியின் கண்ணெதிரிலும் அவருடைய பாதங்களிலும் ஏற்படுகிறதோ, அந்தப் பிராணி பெரும்பேறு பெற்றது. ஏனெனில் அதனுடைய உடல் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அர்ப்பணமாகி மறுபிறவியே இல்லாமற் போகிறது. 149 ஞானிகளின் சன்னிதியில் ஏற்படும் மரணம் மரணமேயன்று; அது வைகுண்ட சுகம். அவ்வாறு மரணமடைபவர் யமலோகத்தை ஜெயித்துவிடுகிறார்; மறுபிறவி என்னும் சோகம் அவருக்கில்லை. 150 ஞானியரின் கண்களுக்கெதிராக உடலை உகுத்தவர்கள் மறுபடியும் பிறப்பதில்லை. அச் செய்கையே பாவங்களை நிவிர்த்திசெய்து மோட்சகதியை அளித்துவிடுகிறது. 151 ஞானியரைத் தலையிருந்து கால்நகம்வரை பார்த்துக்கொண்டே தேகத்தை வீழ்த்துவதை மரணமென்று எப்படிச் சொல்லமுடியும்? இல்லவேயில்லை; அது மரணமிலாப் பெருவாழ்வேõ 152 இந்நிகழ்ச்சியை ஏற்கெனவே விதிக்கப்பட்டதாகக் கருதினால், இப் பு முன்ஜன்மத்தில் ஒரு புண்ணியவானாக இருந்திருக்கவேண்டும். கல்விச் செருக்கினால் ஒரு ஹரிபக்தரை அவமானம் செய்திருக்கலாம். 153 அவருடைய சாபத்தால் கொடிய மிருகமாகப் பிறந்திருக்கலாம். அதே ஹரிபக்தர் சாபவிமோசனம் அளித்ததால் பாபாவின் சரணங்களை அடைந்திருக்கலாம். ஹரிபக்தர்களின் செயல்கள் அபிநவம் (என்றும் புதியவை) அல்லவோõ 154 சாபவிமோசனம் பெற்றதால்தான், புக்கு ஸாயீதரிசனம் கிடைத்ததென்று எனக்குத் தோன்றுகிறது. தரிசனம் பாவங்களை எரித்து பந்தங்களை அறுத்துத் துன்பங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பயனாக, பு வெளித்தூண்டுதன்றித் தானாகவே உத்தாரணம் பெற்றது. 155 பூரணமான சௌபாக்கியம் இன்றி, ஞானியின் கண்ணுக்கெதிராக மரணம் எப்படி ஏற்படும்? புயைப் பொறுத்தவரை, முக்குணங்களும் முத்தாபங்களும் நாசமாகி, இறைவனுடன் ஒன்றிவிட்டது. 156 இவ்விதமாக, பூர்வ கர்மானுபந்தத்தினால் விளைந்த கொடிய தேகத்தின் சம்பந்தம் அறுந்தது; பிணைத்துவைத்த இரும்புச் சங்கிகளும் அறுந்தனõ இறைவன் செயல்படும் வழிவகை இவ்வாறே. 157 சாதுக்களின் மற்றும் ஞானியரின் பாதங்களில் அன்றி, மோட்சப் பாதையை வேறெங்கே காணமுடியும்? புக்கு அது கிடைத்தபோது தர்வேசிகள் திருப்தியடைந்தனர். 158 புயே அவர்களுக்குப் பிழைக்கும் வழி; புயே அவர்களுடைய குடும்பங்களைக் காப்பாற்றியது. ஆகவே, பு இறந்தவுடன் அவர்களுடைய முகங்கள் சோகத்தால் கூம்பின. இது இயற்கையே. 159 பிறகு அவர்கள் மஹராஜைக் கேட்டனர், ''இப்பொழுது நாங்கள் எந்த வழியில் செல்வது? புயை எப்படிப் புதைப்பது? உங்களுடைய கைகளாலேயே அதற்கு நற்கதி அளியுங்கள்.ஃஃ 160 மஹராஜ் கூறினார், ''சோகப்படாதீர்கள்; புயின் முடிவு இங்கேதான் ஏற்படவேண்டுமென்று இருந்தது. மேலும் அவனும் மஹா புண்ணியவான். அவனுக்கு அத்தியந்தமான சௌக்கியம் கிடைத்தது.-- 161 ''தகியாவைத்1 தாண்டி, அங்கே, அங்கே ஒரு சிவன் கோயில் இருக்கிறதுõ இவனை அங்கே எடுத்துச்சென்று நந்திக்கருகில் புதைத்துவிடுங்கள்.-- 162 ''அவ்விடத்தில் புதைத்தால் இவன் நற்கதி அடைவான். உங்களுடைய கடனிருந்தும் பந்தத்திருந்தும் விடுபடுவான்.-- 163 ''போன ஜன்மத்தில் உங்களுக்குக் கடன்பட்டதால், கடனை அடைப்பதற்காகவே புயாக ஜன்மம் எடுத்தான். இன்றுவரை உங்களுடைய பிடியில் சிக்கியிருந்தான்.ஃஃ 164 தர்வேசிகள் புயைத் தூக்கிக்கொண்டு சிவன் கோயிலுக்கு அருகில் சென்றனர். நந்திக்குப் பின்னால் ஒரு குழி தோண்டிப் புயைப் புதைத்தனர். 165 பு ஒரு கணத்தில் மரணமடைந்தது என்னே ஆச்சரியம்õ இந்நிகழ்ச்சி இத்தோடு முடிந்துபோயிருந்தால், எப்பொழுதோ மறந்துபோயிருக்கும். 166 ஆனால், அன்றிருந்து சரியாக ஏழாவது நாள் பாபாவும் தேஹவியோகம் அடைந்து விட்டார். ஆகவேதான் இந்நிகழ்ச்சி மறுபடியும் மறுபடியும் ஞாபகத்திற்கு வருகிறது. 167 அடுத்த அத்தியாயம் மேலும் சுவாரசியமானது. பாபா தம் குருவை ஆராதனை செய்ததையும் அபிமானித்ததையும் விரிவாகச் சொல்கிறார். கோகலே பாயீயின் ஆவலைத் தீர்த்துவைத்து அநுக்கிரகம் செய்ததையும் விளக்குகிறார். 168 ஹேமாட் ஸாயீநாதரை சரணடைகிறேன். குருவின் கைகளால் தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட பாபா, குருவின் கிருபையை எவ்விதமாக சம்பாதித்தார் என்பதைக் கேளுங்கள். எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'தரிசன மஹிமைஃ என்னும் முப்பத்தொன்றாவது அத்தியாயம் முற்றும். ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். சுபம் உண்டாகட்டும். |