Tamil tuition | Tamil assessment books | Tamil eLearning
Tamilcube.comTamilCube
Learning made fun & easy
Join Tamil tuition at Bedok, Jurong East and Little India | Learn Tamil online at World's first Tamil ELearning Platform.Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
அத்தியாயம் - 29

29. கனவிலும் நனவிலும் அநுக்கிரஹம் (பகுதி 1)
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 பாபாவின், கற்பனைக்கெட்டாத லீலைகளில் ஒன்றை இந்த அத்தியாயத்தில் சொல்கிறேன். விஷயம் அதுவேயானாலும் முந்தைய அத்தியாயத்தில் விவரிக்கப்பட்ட லீலைகளைக் காட்டிலும் இது மேலும் விசித்திரமானது.

2 பாபாவின் அற்புதமான லீலைகளைப்பற்றிக் கேள்விப்பட்டு ஒரு பஜனை1 கோஷ்டி 1916ஆம் ஆண்டு பாபாவை தரிசனம் செய்வதற்காக சிர்டீக்கு வந்தது.

3 மதறாஸி­ருந்து காசி யாத்திரையாகக் கிளம்பிய இந்த கோஷ்டி பாபாவின் புகழைக் கேள்விப்பட்டு வழியில் சிர்டீயில் இறங்கியது.

4 ''ஸாயீபாபா ஒரு சிறந்த மஹான்; தீரம், உதாரம், தன்னடக்கம் போன்ற பல நற்குணங்களின் பெட்டகம். புனிதப் பயணிகளிடம் கிருபையுள்ளவர்; அவர்களுக்கு நிதியும் நிறைய அளிக்கிறார்.--

5 ''ஒரு பைசா, ஓரணாவெல்லாம் ஒரு பொருட்டேயல்ல; நாலணா, எட்டணா காசுகள் மழையாகக் கொட்டும்õ சிலருக்குப் பத்து ரூபாய், இன்னும் சிலருக்கு இருபது ரூபாய், வேறு சிலருக்கு ஐம்பது ரூபாயும் கொடுக்கிறார்.--

6 ''இந்தக் காசுமழை ஏதோ விசேஷ நாள்களிலோ, பண்டிகைகளிலோ, தானம் செய்யவேண்டிய புண்ணிய காலங்களிலோ மட்டும் பொழியவில்லை. மேற்சொன்ன ரீதியிலும் அளவிலும் ஒவ்வொரு நாளும் பாபா சந்தோஷமாகக் கொடுக்கிறார்.--

7 ''பஹூட்களும்2 பவய்யாக்களும்2 வந்து நடனமாடுவர்; பாடகர்கள் பாடுவார்கள்; நாடோடிப் பாவாணர்கள் புகழ் பாடுவர்; கேளிக்கைக்காரர்கள் தமாஷா செய்து அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்துவர்; ஹரி பக்தர்கள் மெய்ம்மறந்து பஜனை செய்வர்.--

8 ''மஹராஜ் அவ்வளவு உதாரகுணம் படைத்தவர்; தானமும் தருமமும் அவரிடமிருந்து மழையாகப் பொழிகிறதுõஃஃ இந்தக் கீர்த்தி காதுவழிச் செய்தியாக மதறாஸ் பஜனை கோஷ்டியை அடைந்தது. ஆகவே, அவர்கள் பாபாவை தரிசனம் செய்யவேண்டுமென்று விரும்பினர்.

9 பாபா விரும்பினால் வழிப்போக்கர்களுக்கும் பணம் விநியோகம் செய்வார். கிருபா மூர்த்தியான ஸாயீநாதர் திக்கற்றவர்களையும் ஏழையெளியவர்களையும் அன்புடன் நலன் விசாரித்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்து, துயர் துடைத்து விடைகொடுத்தனுப்புவார்.

10 அந்த கோஷ்டியில் ஓர் ஆடவரும் மூன்று பெண்டிரும் இருந்தனர். அதாவது, ஒரு மனிதர், அவர் மனைவி, மகள், மைத்துனி -- ஆக மொத்தம் நால்வர் இருந்தனர். அவர்கள் மஹானை தரிசனம் செய்ய விரும்பினர்.

11 ஸாயீ தரிசனம் செய்த பிறகு அந்த கோஷ்டி திருப்தியும் சந்தோஷமும் அடைந்தது. தினமும் ஸாயீசன்னிதியில் நியமமாக பஜனை செய்தனர்.

12 அவர்கள் ராமதாச மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். மிகுந்த உற்சாகத்துடன் பஜனை செய்வார்கள். பாபாவும் தமக்குத் தோன்றியவாறு ஒரு ரூபாயோ அரை ரூபாயோ கொடுப்பார்.

13 சில நாள்களில் பாபா அவர்களுக்கு பர்பி கொடுப்பார்; சில நாள்களில் வெறுங்கையுடன் அனுப்பிவிடுவார். ஆதியி­ருந்தே பாபாவின் செயல்பாடுகள் இப்படித்தானே இருந்தன; எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாதேõ

14 பாபா பணத்தை வாரிவாரி வழங்கியதென்னமோ உண்மைதான்õ அதில் உண்மையில்லாதது ஏதும் இல்லை. ஆனால், அவர் எல்லாருக்குமே கொடுப்பார் என்று சொல்லமுடியாதுõ அவருடைய மனோகதியை எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

15 பக்கீர்கள், பிச்சைக்காரர்கள், ஆண்டிகள், பரதேசிகள் -- இவர்களனைவரும் பாபாவை நாடி வந்தவண்ணமாக இருந்தனர். பாபா பரம தயாளராக இருந்தாலும், அவர்கள் எல்லாருக்குமே தருமம் கொடுக்கவில்லை.

16 யாருக்கு லாபகாலம் வந்ததோ, அவரே பாபாவின் கையால் தொடப்பட்ட பணத்தைப் பெறும் பாக்கியத்தை அடைந்தார்.

17 இது சம்பந்தமாக ஒரு கதை கேட்டால் சந்தோஷமடைவீர்கள். ஆகவே முத­ல் அதைச் சொல்­விட்டுப் பிறகு தொடர்கிறேன்.

18 காலையில் சொற்ப ஆஹாரம் உண்டபின் பாபா துனிக்கு அருகி­ருந்த கம்பத்தடியில் உட்காருவார். அந்நேரத்தில் அமனி என்னும் சிறு பெண்குழந்தை வருவாள்.

19 மூன்று பிராயம் நிரம்பிய இச் சிறுபெண், உடையேதும் அணியாமல் கையில் ஒரு சிறிய தகரடப்பாவை எடுத்துக்கொண்டு சரியான நேரத்திற்கு வந்துசேர்வாள். கூடவே தாய் ஜம­யும் வருவாள்.

20 அமனி, பாபாவின் மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டு டப்பாவை அவரிடம் கொடுத்து, ''பாபா, ருபய்யா, ருபய்யாஃஃ என்று அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவாள்.

21 பாபாவுக்குப் பொதுவாகக் குழந்தைகளின் மீது அமோகமான அன்பு. புஷ்டியாகவும் அழகாகவும் இருந்த அமனியை நேசித்தார்; அவளை இறுக்க அணைத்துக்கொண்டு கொஞ்சுவார்; முத்தம் கொடுப்பார்.

22 பாபா அன்புடன் செல்லமாகக் கொஞ்சும்போதிலும் அமனியின் மனம் ரூபாயில்தான் இருக்கும். ''பாபா கொடு, சீக்கிரம் கொடுõஃஃ என்று அவருடைய பாக்கெட்டில் கண்வைத்தவாறே கேட்பாள்.

23 அமனியாவது ஒரு சிறு குழந்தைõ ஆனால், பெரியவர்களுக்கும் கனவான்களுக்குமே இப் பேராசை இருக்கிறது. காசுக்காகவே சுயநலமாக அனைவரும் அலைகின்றனர். ஆன்மீக வாழ்வில் நாட்டம் கொண்டவர் எவரோ ஒருவரே.

24 அமனி பாபாவின் மடியில் அமர்ந்திருப்பாள். தாயாரோ சற்று தூரத்தில் கிராதிக்கு அப்பால் நின்றுகொண்டு 'கொடுக்கும்வரை அவரை விடாதேஃ என்று விளங்கும்படி சைகை செய்வாள்.

25 ''என்னைக் கொள்ளையடிக்க வந்த உதவாக்கரையே, நான் உன் அப்பனுக்குக் கடன்பட்டிருக்கிறேனா என்ன? என்னைப் பிடுங்கியெடுக்கிறாயேஃஃ என்று பாபா கோபத்துடன் வினவுவார்.

26 ஆனால், இந்தக் கோபம் பொய்க்கோபமே. இதயத்திலோ அன்பின் அலைகள் பொங்கின. பாக்கெட்டில் கையை விட்டு ஒரு ரூபாயை எடுப்பார்.

27 ரூபாயை அந்தச் சிறிய டப்பாவில் இட்டு, டப்பென்று மூடுவார். டப்பா கையில் கிடைத்தவுடனே அமனி வீடு நோக்கிப் பாய்வாள்õ

28 இது காலை உணவு நேரத்தின் நடப்பு. இதுபோலவே லெண்டித் தோட்டத்திற்குப் போகும்போதும் அமனியை அன்புடன் கடிந்துவிட்டு, மேலும் ஒரு ரூபாய் கொடுப்பார்.

29 இவ்வாறாக, அவர் தினமும் அமனிக்கு இரண்டு ரூபாயும் ஜம­க்கு ஆறு ரூபாயும் தாதா கேள்கருக்கு ஐந்து ரூபாயும் பாக்கியாவுக்கும் சுந்தரிக்கும் தலா இரண்டு ரூபாயும் கொடுப்பார்.

30 தினமும் பத்தி­ருந்து பதினைந்து ரூபாய்வரை தாத்யாவுக்கும் பதினைந்தி­ருந்து ஐம்பது ரூபாய்வரை பக்கீர் பாபாவுக்கும் எட்டு ரூபாய் ஏழையெளிவர்களுக்கும் தவறாது கொடுத்தார்.

31 இவ்வாறான தர்ம ஒழுக்கத்தைப்பற்றிக் கேள்வியுற்ற மதறாஸ் கோஷ்டி, பாபாவிடமிருந்து நாமும் பணம் பண்ணலாமே என்று சுயநலமாகச் சிந்தித்தது இயற்கையே. பாபாவின் சன்னிதியில் தினமும் தவறாது நால்வரும் பஜனை செய்தனர்.

32 வெளிப்பார்வைக்கு பஜனை இனிமையாக இருந்தது. அந்தரங்கத்தில் அவர்களைப் பணத்தாசை பிடித்து ஆட்டியது. மேலும் மேலும் பாபா பணம் தருவார் என்ற நம்பிக்கையில் நால்வரும் சிர்டீ வாசத்தை நீடித்தனர்.

33 நால்வரில் மூவர் பேராசை பிடித்தவர்கள்; பாபாவிடம் பணம் கறக்கவேண்டும் என்றே விரும்பினர். ஒருவர் மட்டும் (மனைவி) நேர்மையானவர். ஸாயீயின் மீது தூயபக்தியுடனும் அன்புடனும் பஜனை பாடினார்.

34 அவருடைய ஸாயீ பக்தியையும் பிரேமையையும், மேகத்தைக் கண்டு மகிழ்ந்து நடனமாடும் மயிலுக்கும் சந்திரனைக் கண்டு மகிழும் சகோர பட்சிக்கும் ஒப்பிடலாம்.

35 கிருபா மூர்த்தியான ஸாயீ அவ்வம்மையாரின் பக்தியை மெச்சி, ஒருநாள் மதிய ஆரதியின்போது அவருக்கு ஸ்ரீராமனாகக் காட்சியளித்தார்.

36 மற்றவர்களுக்கெல்லாம் என்றும்போல் ஸாயீநாதர், ஆனால், அவ்வம்மையாரின் கண்களுக்கோ ஜானகிகாந்தர் (ஸ்ரீராமர்). அவருடைய கண்களி­ருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகுவதைக் கண்டு மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

37 இரண்டு கைகளையும் கொட்டிக்கொண்டு ஆனந்தக்கண்ணீர் பெருக்கும் அபூர்வமான காட்சியைப் பார்த்துக் குழுமியிருந்தவர்கள் வியப்படைந்தனர்.

38 வியப்படைந்தது மட்டுமின்றி, விஷயம் என்னவென்று அறிந்துகொள்ளவும் ஆர்வமுற்றனர். ஏன் இந்த ஆனந்தக்கண்ணீர்? அவருக்கு மாத்திரம் பிரேமையின் ஆவேசம் எங்கிருந்து வந்தது?

39 பின்னர், மாலை நான்கு மணியளவில் அவ்வம்மையார் ஆனந்தத்தால் நிரம்பிய மனத்துடன் தம்மிச்சையாகவே, ஸாயீ தமக்கு ஸ்ரீராமராக தரிசனம் தந்த அற்புத லீலையைக் கணவரிடம் விவரித்தார்.

40 ''நீலோத்பலப் பூவைப் போன்ற நிறமுடையவரும் பக்தர்களின் ஆசைகளை கற்பக விருட்சத்தைப்போல் நிறைவேற்றுபவரும் பரதனுக்கு மூத்தவரும் தசரதருக்குப் புத்திரரும் ஸீதாமணாளருமான ஸ்ரீராமரை நான் கண்டேன்.--

41 ''நான் கண்டது, மஞ்சள் பீதாம்பரம் அணிந்து கிரீட குண்டலங்களுடன் ஜொ­த்துக் கொண்டு வனமாலையும் அணிந்த, நான்கு புஜங்களுடன் கூடிய ஜானகி காந்தரையே.--

42 ''கைகளில் சங்கு - சக்கரம் - கதை, மார்பில் ஸ்ரீவத்ஸம் என்றழைக்கப்படும் மரு, கழுத்தைச் சுற்றிக் கௌஸ்துப மாலை, இவற்றை அணிந்துகொண்டவரும் புருஷோத்தமரும் உள்ளங்கவரும் உருவமுடையவரும் அப்பாலுக்கும் அப்பாற்பட்டவருமாகிய ஸ்ரீராமரைக் கண்டேன்.ஃஃ

43 அவர் மேலும் சொன்னார், ''ஈடிணையற்ற லீலைகள் புரிவதற்காக மனித அவதாரம் ஏற்ற மஹாவிஷ்ணுவும், ஜானகியின் இதயத்தில் குடிகொண்டு மகிழ்விப்பவருமான ஸ்ரீராமரை நான் வில்லேந்திய கோலத்தில் கண்டேன்.--

44 ''வெளிப்பார்வைக்கு அவர் ஒரு பக்கீராகத் தோன்றலாம்; வீடுவீடாகச் சென்று பிச்சையும் எடுக்கலாம். எனக்கு அவர் ஜானகியின் மனத்தைக் கவர்ந்த, வில்லேந்திய ஸ்ரீராமராகவே தெரிந்தார்.--

45 ''மேலும், அவர் மேலெழுந்தவாரியாகப் பார்ப்பதற்கு ஒரு அவ­யாவாக (முஸ்லீம் முனிவராக) இருப்பினும், மற்றவர்களுக்கு எப்படித் தோன்றினாலும், எனக்கு ஜானகியின் மனத்தைக் கவர்ந்த கோதண்டபாணியாகவே தெரிந்தார்.ஃஃ

46 அவ்வம்மையார் பரமபக்தியும் பா(ஆஏஅ)வமும் கொண்டவர்; கணவனோ பணத்தாசை பிடித்த சுயநலவாதி. ''பெண்ணினம் இப்படித்தான் பேசும். ரகுபதி (ஸ்ரீராமர்) இந்த இடத்தில் இப்பொழுது எப்படித் தோன்றமுடியும்?--

47 ''நம்பிக்கையுள்ள வெகுளிகளுக்கு மனத்தில் என்ன இருக்கிறதோ அதுவே காட்சியாகத் தெரிகிறது. நாமெல்லாம் ஸாயீயைப் பார்த்துக்கொண் டிருந்தபோது இவளுக்கு மட்டும் எப்படி ராமரூபம் தெரிந்தது?ஃஃ

48 கணவன் இவ்வாறு பல குதர்க்க வாதங்கள் செய்து மனைவியைக் கே­செய்து அவமானப்படுத்தினான். ஆனால், அப்பெண்மணி மனந்தளரவில்லை; ஏனெனில், அவருக்கு அஸத்தியமான கற்பனை என்றால் என்னவென்றே தெரியாது.

49 அப்பெண்மணி இயல்பாகவே ஆன்மீகநாட்டம் படைத்தவர். அவர் இதற்கு முன்பு பல சமயங்களில் ஸ்ரீராம தரிசனம் திரும்பத் திரும்பப் பெற்று ஆனந்தப் பரவசமடைந்தவர்.

50 ஆயினும், பிற்காலத்தில் பணத்தின்மேல் மோகமும் பேராசையும் ஏற்பட்டது. பணத்தாசை பிடித்த இடத்தில் இறைவன் எப்படி இருப்பான்? ஸ்ரீராம தரிசனம் நின்றுபோயிற்றுõ பணத்தாசையின், இயல்பான விளைவு இதுவேயன்றோ?

51 பாபாவுக்கு ஈதனைத்தும் தெரிந்திருந்தது. பெண்மணியின் பாவச் செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டதை நன்கு அறிந்து, மீண்டும் ஸ்ரீராம தரிசனம் அளித்து அருள் செய்தார்.

52 இந்த அதிசயத்தை எவ்வாறு விவரிப்பேன்õ அன்று இரவே அப் பெண்மணியின் கணவர் (மதறாஸ் மனிதர்) தூக்கத்தில் பயங்கரமான கனவொன்று கண்டார்.

(சுலோகம் 53­ருந்து 80வரை கனவுக்காட்சி. நிகழ்காலத்தில் விவரிக்கப் பட்டிருக்கிறது. (ம.ம.) = மதறாஸ் மனிதர்.)

53 அவர் (ம.ம.) ஒரு நகரத்தில் இருக்கிறார். ஒரு போலீஸ்காரர் அவரைக் கைது செய்து கைகளைப் பின்புறத்தில் கட்டிவிட்டு அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு கைக்கட்டைத் தம் கைகளால் மேலும் இறுக்குகிறார்.

54 அவ்விடத்திலேயே கம்பிபோட்ட சிறைக்கூண்டு ஒன்று இருக்கிறது. பாபா அதற்கு வெளியே ஆடாது அசையாது அமைதியாக நின்றவாறு என்ன நடக்கிறதென்று வேடிக்கை பார்த்துக்கொண் டிருக்கிறார்.

55 பாபா அருகில் இருப்பதைப் பார்த்து, அவர் (ம.ம.) சோகமான முகத்துடன் கைகளைக் கூப்பிக்கொண்டு தீனமான குர­ல் கேட்கிறார்,--

56 ''உங்களுடைய கீர்த்தியைக் கேள்விப்பட்டு உமது பாதங்களை நாடி வந்தோம். நீங்களே இங்கே பிரத்யக்ஷமாக இருக்கும்போது ஏன் இந்தத் துயர நிகழ்ச்சி?ஃஃ

57 மஹராஜ் பதில் சொல்கிறார், ''நம்முடைய கர்ம வினைகளை அனுபவித்தே தீரவேண்டும்õஃஃ அவர் (ம.ம.) சொல்கிறார், ''நான் அம்மாதிரி கர்மம் ஏதும் செய்ததில்லைõ--

58 ''இவ்வளவு பெரிய கேடு நேருமளவிற்கு நான் இந்த ஜன்மத்தில் ஏதும் செய்யவில்லை.ஃஃ மஹராஜ் அப்பொழுது சொல்கிறார், ''இந்த ஜன்மத்தில் செய்யாவிட்டாலும் முன்ஜன்மங்களில் செய்திருப்பீர்.ஃஃ

59 அவர் (ம.ம.) பதில் சொல்கிறார், ''முந்தைய ஜன்மங்களைப்பற்றி எனக்கென்ன தெரியும்? அப்படியே நான் ஏதாவது செய்திருந்தாலும் உங்களுடைய தரிசனத்தால் அது சாம்பலாகிப் போயிருக்க வேண்டுமே?--

60 ''உங்களை தரிசனம் செய்தவுடனே ஏன் என்னுடைய பாவங்கள் தீயி­டப்பட்ட துரும்புபோல் முழுவதும் எரிந்து சாம்பலாகிப்போய் எனக்கு முக்தியை அளிக்கவில்லை?ஃஃ

61 மஹராஜ் அவரிடம் கேட்கிறார், ''ஆனால், உமக்கு அந்த அளவிற்கு விசுவாசம் இருக்கிறதா?ஃஃ ''ஆமாம்ஃஃ என்று அவர் (ம.ம.) சொன்னதும் பாபா அவரைக் கண்களை மூடிக்கொள்ளச் சொல்­ ஆணை இடுகிறார்.

62 பாபாவின் ஆணைப்படி அவர் (ம.ம.) நின்றிருந்தவாறே கண்களை மூடியவுடன், திடீரென்று யாரோ கீழே விழுந்ததுபோல் அவருக்குத் தடாலென்ற சத்தம் கேட்கிறது.

63 அச் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்ட அவர் (ம.ம.) உடனே கண்களைத் திறந்து பார்க்கிறார். அவர் கட்டுகளி­ருந்தும் சிறையி­ருந்தும் விடுபட்டுவிட்டார். மாறாக, போலீஸ்காரர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துகிடக்கிறார்.

64 அவர் (ம.ம.) திகிலடைந்து பாபாவை நோக்குகிறார். பாபா புன்னகை புரிந்துகொண்டே அவரிடம் சொல்கிறார், ''பலே, பலேõ நீர் இப்பொழுது வசமாக மாட்டிக்கொள்ளப் போகிறீர்.--

65 ''போலீஸ் அதிகாரிகள் இங்கு வருவர். நடந்ததனைத்தையும் நோட்டம்விட்டபின், அடக்கமுடியாத குரூரமான கைதியாக உம்மை மட்டுமே காண்பர். மறுபடியும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவீர்.ஃஃ

66 அவர் (ம.ம.) மனம் திறந்து பதில் சொல்கிறார், ''பாபா, நீங்கள் சொல்வது போலத்தான் நடக்கும். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால், இப்பொழுது விடுதலை செய்யுங்கள்õ உங்களைத் தவிர என்னைக் காப்பாற்றக்கூடியவர் எவரும் இல்லை.ஃஃ

67 இதைக் கேட்ட பாபா அவரிடம் சொல்கிறார், ''மறுபடியும் உம் கண்களை மூடிக்கொள்ளும்.ஃஃ அவர் (ம.ம.) கண்களை மூடி மறுபடியும் திறந்தபின் இன்னொரு அற்புதம் காண்கிறார்.

68 இப்பொழுது அவர் (ம.ம.) சிறைக்கூண்டுக்கு வெளியே இருக்கிறார். பாபா அருகில் இருக்கிறார். அவர் பாபாவுக்கு ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறார். பாபா அவரை வினவுகிறார்,--

69 ''நீர் இப்பொழுது செய்யும் நமஸ்காரத்திற்கும் ஏற்கெனவே செய்த நமஸ்காரங்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? யோசித்துப் பதில் சொல்லும்õஃஃ

70 அவர் (ம.ம.) கூறுகிறார், ''ஓ, பூமிக்கும் வானத்திற்குமுள்ள வித்தியாசம் உண்டு. இதுவரை செய்யப்பட்ட நமஸ்காரங்கள் கேவலம் திரவிய லாபத்திற்காகவே செய்யப்பட்டன. ஆனால், இப்பொழுது செய்த நமஸ்காரமோ உங்களைப் பரமேச்வரனாகக் கருதிச் செய்யப்பட்டதுõ--

71 ''முன்பு உங்களிடம் விசுவாசம் இல்லை. மாறாக, நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்துகொண்டு ஹிந்துக்களை மதம் மாற்றிப் பாழ்படுத்துவதாக எண்ணி ரோஷமடைந்தேன்.ஃஃ

72 ஆகவே பாபா கேட்கிறார், ''உம்முடைய மனத்தில் முஸ்லீம் தெய்வங்களின்மீது பக்தி இல்லையா?ஃஃ அவர் (ம.ம.), ''இல்லைஃஃ என்று பதிலளிக்கிறார்.

73 பாபா மறுபடியும் அவரைக் கேட்கிறார், ''உம்முடைய இல்லத்தில் பஞ்ஜா இல்லை? தாபூத் தினத்தன்று அதை நீர் தொழுவதில்லை? உம்முடைய மனத்தையே

கேளும்õ--

74 ''உம்முடைய இல்லத்தில் காட் பிபி இல்லை? முஹூர்த்த லக்கினத்தின்போது இந்த முஸ்லீம் தேவதையை அவளுக்குண்டான பூஜை, படையல்களைச் செய்து திருப்தி செய்து மகிழ்ச்சியுறச் செய்வதில்லை?ஃஃ

75 அவர் (ம.ம.), ''ஆம்ஃஃ என்று சொல்­ ஒப்புக்கொள்கிறார். 'வேறென்ன வேண்டும்?ஃ என்று பாபா கேட்டதற்கு, தம் குரு ராமதாசரை தரிசனம் செய்ய ஆவலாக இருக்கிறது என வேண்டுகிறார்.

76 மஹராஜ் அவரைத் திரும்பிப் பார்க்கச் சொல்கிறார். அவ்வாறு செய்தவுடன், ஸமர்த்த ராமதாஸர் சரீரத்துடன் தம்மெதிரே நிற்பதை அவர் (ம.ம.) காண்கிறார்.

77 ராமதாஸருடைய பாதங்களில் விழுந்தபோது ராமதாஸர் அங்கிருந்து அப்பொழுதே மறைந்துவிடுகிறார். விஷய ஆர்வம் கொண்ட அவர் (ம.ம.) பாபாவைக் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்,--

78 ''பாபா, உங்களுக்கு நிறைய வயதாகிவிட்டது. உடலும் கிழடுதட்டிவிட்டது. உங்களுடைய மொத்த ஆயுள் எவ்வளவென்று உங்களுக்குத் தெரியுமா?ஃஃ

79 ''என்ன, நீர் என்ன சொல்கிறீர்? நான் கிழவனாகிவிட்டேன் என்றா? எனக்குப் போட்டியாக ஓடும் பார்க்கலாம்õஃஃ என்று கேட்டுக்கொண்டே ஸாயீ ஓட ஆரம்பிக்கிறார். அவரும் (ம.ம.) ஸாயீயைத் துரத்திக்கொண்டு ஓடுகிறார்.

80 ஆனால், ஸாயீ வேகத்தை அதிகரித்துக்கொண்டே போய்த் தம்முடைய பாதையில் புழுதிப் படலத்தைக் கிளப்பிவிடுகிறார். அந்தக் குழப்பத்தில் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடுகிறார். (கனவுக் காட்சி விவரணம் இங்கு முடிகிறது) மதறாஸ் மனிதர் தூக்கத்தி­ருந்து விழித்துக்கொண்டார்.

81 முழுமையாக விழித்துக்கொண்டபின் கனவில் நடந்ததைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார். உடனே அவருடைய மனம் மாறியது. பாபாவின் மஹிமையைப் புரிந்துகொண்டு புகழ்ந்தார்.

82 பாபாவின் அற்புதமான லீலையைக் கண்டபின் அவரிடம் பக்தி ஏற்பட்டது. பாபா விஷயத்தில் முன்பிருந்த சந்தேகங்களும் எதிர்மறைச் சிந்தனைகளும் பறந்தோடின.

83 அது ஒரு கனவுதான் என்றாலும், அக் கனவில் எழுப்பப்பட்ட கேள்விகளையும் பதில்களையும் கதை கேட்பவர்கள் கிரஹித்துக்கொண்டால் கனவின் மறைபொருள் புரியும்.

84 இந்தக் கேள்வி-பதில் சம்பாஷணையி­ருந்து மதறாஸ் மனிதர் ஒரு மஹத்தான படிப்பினை பெற்றார். ஸாயீ சம்பந்தமாக இருந்த விரோதமனப்பான்மையை நையாண்டியும் கே­யும் விரட்டிவிட்டன.

85 மறுநாள் காலைநேரத்தில் பஜனை கோஷ்டி மசூதிக்கு தரிசனத்துக்காக வந்தது. ஸாயீநாதர் கிருபைசெய்து இரண்டு ரூபாய் மதிப்பிற்கு பர்பி கொடுத்தார்.

86 தம்முடைய பாக்கெட்டி­ருந்து எடுத்து இரண்டு ரூபாயும் கொடுத்தார். அவர்களை மேலும் சில நாள்களுக்கு சிர்டீயில் தங்க வைத்தார். இந்த நாள்கள் பஜனையிலும் பூஜையிலும் கழிந்தன.

87 காலக்கிரமத்தில் மதறாஸ் கோஷ்டி சிர்டீயி­ருந்து கிளம்ப விரும்பியது. அவர்களுக்கு அதிக அளவில் வருமானம் கிடைக்காவிட்டாலும், பரிபூரணமான ஆசீர்வாதம் கிடைத்தது.

88 ''அல்லா மா­க் நிறையக் கொடுப்பார். அல்லா உங்களுக்கு நல்வாழ்வு அளிப்பார்.ஃஃ இந்த ஆசீர்வாதமே அவர்களுக்கு யாத்திரையின்போது பல நன்மைகளை விளைவித்தது.

89 ஸாயீயின் ஆசீர்வாதங்களுடன், அவருடைய நாமத்தைப் பக­லும் இரவிலும் தியானம் செய்துகொண்டு யாத்திரையைத் தொடர்ந்தனர். எள்ளளவு இன்னலும் எங்கும் ஏற்படாது பிரயாணம் செய்தனர்.

90 ஸாயீ ஆசியளித்தவாறே, வழியில் எந்தவிதமான தடங்கலோ இன்னலோ ஏற்படாமல், பல புண்ணிய தரிசனங்களை முடித்துக்கொண்டு சுகமாகத் திரும்பிவந்து இல்லத்தைச் சேர்ந்தனர்.

91 அவர்கள் திட்டமிட்டிருந்த புனிதப் பயணங்களுக்கு மேலாகவே அநேக தரிசனங்கள் பெற்றனர். ஸாயீயின் ஆசீர்வாதம் நிகழ்த்திய அற்புதத்தைப்பற்றிப் பேசிப் பேசி ஆனந்தத்தால் நிறைந்தனர்.

92 மேலும், மஹானின் ''அல்லா நல்வாழ்வு அளிப்பார்ஃஃ என்ற மங்களகரமான ஆசீர்வாதம் எழுத்துக்கெழுத்து ஸத்தியமாகி, அவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறின.

93 மதறாஸி­ருந்து வந்த புனிதப் பயணிகள் நற்குணங்கள் பொருந்திய சாத்விகர்கள்; இறையுணர்வு பெற்றவர்கள்; பக்தர்கள். ஸாயீ அவர்களுக்கு பந்தவிமோசனம் (கட்டுகளி­ருந்து விடுபடுதல்) அளித்தார்.

94 இதுபோலவே சுவாரசியமான இன்னொரு கதை சொல்கிறேன். கதை கேட்பவர்கள் பயபக்தியுடன் கேட்டால் ஆச்சரியம் அடைவார்கள்.

95 பரமதயாளரும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கற்பக விருக்ஷமுமான ஸாயீ, அன்பார்ந்த பக்தர்களின் ஆசைகளை சிரமம் பார்க்காமல் எவ்வாறு எப்பொழுதும் முழுமையாக நிறைவேற்றி வைக்கிறார் என்பது நன்கு விளங்கும்.

96 பாந்த்ரா நகரம் (தற்போது பம்பாய் மாநகரத்தின் புறநகர்) தாணே ஜில்லாவில் இருக்கிறது. அங்கு வாழ்ந்துவந்த ரகுநாத்ராவ் தேண்டூல்கர் எனும் பெயர் கொண்ட பக்தர், தைரியசா­; கூர்த்த மதியாளர்; கல்வி கேள்விகளில் சிறந்தவர்.

97 எப்பொழுதும் சந்தோஷமாக இருந்த அவர், ஸாயீயின் பாதகமலங்களின்மீது மிகுந்த பிரேமை கொண்டு அவருடைய போதனையாகிய மகரந்தத்தின்மேல் ஆசை வைத்து இடைவிடாது ஸாயீநாமஜபம் செய்துவந்தார்.

98 ஸாயீயின் லீலைகளை 'பஜனைமாலைஃ என்ற ரூபத்தில் நூலாக இயற்றியவர் இவரே. பக்தியுடனும் பிரேமையுடனும் இதை வாசிப்பவர் ஒவ்வொரு சொல்­லும் ஸாயீயைக் காண்பார்.

99 சாவித்திரி என்பது அவருக்கு மனைவியின் பெயர். பாபு அவர்களின் மூத்த மகன். ஸாயீயின் லீலையையும் அவர்களுடைய விசித்திரமான அனுபவத்தையும்பற்றிக் கேளுங்கள்.

100 ஆங்கிலமுறை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டத்துக்குப் படிக்கும் நல்வாய்ப்பைப் பெற்ற இந்த பாபு, ஒருசமயம், வெற்றிபற்றிய சந்தேகம் அதிகம் இருந்ததால் பரீட்சைக்கு அமர்வதில்லை என்று முடிவெடுத்தான்.

101 அவன் இரவுபகலாக சிரமப்பட்டுப் படித்திருந்தான். ஒரு ஜோதிடரிடம், 'பரீட்சையில் வெற்றி பெறுவேனாஃ என்று ஒரு கேள்வியை மேம்போக்காகக் கேட்டான்.

102 பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்து, நட்சத்திரம் - ராசி - கிரகங்கள் அமர்ந்திருந்த இடங்கள் - இவற்றையெல்லாம் விரல்விட்டு எண்ணிப்பார்த்த ஜோதிடரின் முகம் கூம்பியது.

103 ஜோதிடர் சொன்னார், ''நீ மிக சிரமப்பட்டுப் படித்திருக்கிறாய். ஆனால், இந்த வருடத்தில் கிரகங்களின் நிலைமை சாதகமாக இல்லை. அடுத்த வருடம் கிரகங்களின் நிலைமை அதிருஷ்டகரமாக இருக்கிறது. நிச்சயமாகப் பரீட்சையில் அடுத்த வருடம் வெற்றி பெறுவாய்.ஃஃ

104 இதைக் கேட்டு திடுக்கிட்ட மாணவன், ''சிரமப்பட்டுப் படித்ததெல்லாம் பயனின்றிப் போகப்போகிறதென்றால், பரீட்சைக்கு அமர்வதில் அர்த்தம் என்ன?ஃஃ என்று நினைத்து மனமுடைந்து போனான்.

105 இது நடந்தவுடனே இம் மாணவனின் தாயார் (சாவித்திரி பாயி தேண்டூல்கர்) சிர்டீக்குப் போகும்படி நேர்ந்தது. ஸாயீ பாதங்களில் நமஸ்காரம் செய்தார். ஸாயீ அனைவரின் நலன்பற்றியும் குசலம் விசாரித்தார்.

106 மேலும் பேசிக்கொண் டிருந்தபோது, பல விஷயங்களுக்கு நடுவில் மகனுடைய பரீட்சை சமாசாரமும் எழுந்தது. அப்பெண்மணி தீனமான குர­ல் கேட்டார், ''பாபா, கிரஹங்கள் அநுகூலமாக இருந்திருந்தால் மகன் பரீட்சைக்கு அமர்ந்திருப்பான்.--

107 ''ஜோதிடர் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இவ்வருடம் வெற்றிபெற வாய்ப்பில்லை என்று சொல்­விட்டார். ஆகவே செம்மையாகத் தயார் செய்திருந்தபோதிலும் பையன் பரீட்சைக்கே போகப்போவதில்லை. --

108 ''பாபா, இது என்ன கிரஹங்களும் தசைகளும்õ ஏன் இவ்வருடம் இந்த ஏமாற்றம்? இவ்வருடம் ஒட்டுமொத்தமாக வெற்றிபெற்றுவிடுவான் என்று நாங்கள் எல்லாருமே எதிர்பார்த்திருந்தோமேõஃஃ

109 இதைக் கேட்ட பாபா சொன்னார், ''நான் சொல்வதை மட்டுமே அவனைச் செய்யச் சொல்லுங்கள்õ ஜாதகத்தைச் சுருட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டு அமைதியான மனத்துடன் பரீட்சை எழுதச் சொல்லுங்கள்.--

110 ''வேறு யார் சொல்வதையும் கேட்க வேண்டா, ஜாதகத்தை எவரிடமும் காட்ட வேண்டா, ஸாமுத்திரிகா லட்சண1 சாஸ்திரத்திலும் நம்பிக்கை வேண்டா, என்று அவனிடம் சொல்லவும்.--

111 ''பையனிடம், 'நீ வெற்றி பெறுவாய்; சோர்வு வேண்டா; அமைதியாகவும் தெம்பாகவும் பரீட்சை எழுது; பாபாவை முழுமையாக நம்புõஃ என்று சொல்லவும்.ஃஃ

112 பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டு தாயார் தம்முடைய இல்லத்திற்குத் திரும்பிவந்தார். பாபா அனுப்பிய செய்தியை மகனிடம் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

113 ஸாயீ அனுப்பிய நற்செய்தியைக் கேட்டு உற்சாகமடைந்த பாபு பரீட்சைக்குச் சென்றான். கேள்வித்தாள்களில் இருந்த எல்லாக் கேள்விகளையும் நேரத்தோடு எழுதி முடித்தான்.

114 எழுதும் பரீட்சைகள் நடந்து முடிந்தன. பாபு எல்லாக் கேள்விகளுக்குமே நன்கு பதிலெழுதியிருந்தான். ஆயினும் அதுவரை இருந்த தன்னம்பிக்கை தளர்ந்தது; திடசித்தம் கலைந்தது; மனம் அலைபாய ஆரம்பித்தது.

115 வெற்றி கிட்டுமளவிற்குக் கேள்விகளுக்குச் செம்மையாகவே விடையளித்திருந்தான். ஆயினும் எழுதியது தேவைக்குக் குறைவு என்று நினைத்து நம்பிக்கை இழந்துவிட்டான்.

116 வாஸ்தவத்தில் அவன் 'எழுதும் பரீட்சைகளில்ஃ தேர்ச்சி பெற்றிருந்தான். ஆனால், தான் எழுதியது தேவைக்குக் குறைவு என்று நினைக்க ஆரம்பித்தான். உள்ளம் சோர்ந்துபோய் வாய்மொழிப் பரீட்சைக்குப் போகாமல் விட்டுவிட்டான்.

117 வாய்மொழிப் பரீட்சை ஆரம்பித்தது. முதல் நாள், மனம் சோர்வடைந்த நிலையிலேயே கழிந்தது. இரண்டாவது நாள், நண்பன் ஒருவன், வீட்டிற்கு வந்தபோது பாபு சாப்பிடுவதற்கு உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான்.

118 நண்பன் கேட்டான், ''என்ன ஆச்சரியம்õ பரீட்சாதிகாரியே உன்மேல் அக்கறை காட்டுகிறாரென்பது உனக்குத் தெரியுமா? 'தேண்டூல்கர் நேற்று ஏன் ஆஜராகவில்லை? போய்ப் பார்த்துக்கொண்டு வாஃ என்று என்னிடம் சொன்னார்.--

119 '''எழுதும் பரீட்சைகளில் தோல்வியடைந்துவிட்டேன், வாய்மொழிப் பரீட்சைக்கு ஆஜராகி எதற்காக சிரமப்படவேண்டும்ஃ என்று நினைத்து அவன் மனமுடைந்து வீட்டிலேயே உட்கார்ந்துவிட்டான், என்று நான் அவரிடம் தெளிவாகச்

சொன்னேன்.--
120 ''உடனே பரீட்சாதிகாரி, 'நீ போய் அவனைக் கையுடன் அழைத்துக்கொண்டு வா. எழுதும் பரீட்சைகளில் அவன் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்ற சந்தோஷமான செய்தியை அவனிடம் சொல்ஃ என்று சொன்னார்.ஃஃ

121 இந்தச் செய்தி எழுப்பிய ஆனந்தத்தை யாரால் விவரிக்க முடியும்õ ஒரு கணமும் தாமதியாது, ஸாயீ மஹராஜின் அருளை வேண்டிக்கொண்டே ஆர்வத்துடன் வாய்மொழிப் பரீட்சைக்கு ஓடினான்.

122 பின்னர், எல்லாமே அவனுக்கு சாதகமாக அமைந்தன. பரீட்சையில் வெற்றி பெற்றுவிட்டான். இவ்வாறாக, வேண்டுகோளைப் பூர்த்தி செய்துவைத்ததால் அவனுடைய தன்னம்பிக்கையைத் திடப்படுத்தினார் ஸாயீ; அவ்வளவே.

123 மாவு அரைக்கும் ஏந்திரத்தின் அச்சைக் கெட்டிப்படுத்த, அதை லேசாகச் சுழற்றிச் சுழற்றி இறுக்குகிறோம். குரு பாதங்களில் நிட்டையும் இது போலவேதான். ஸாயீ அதைச் சுழற்றிச் சுழற்றி இறுக்கிப் பலப்படுத்தினார்.

124 இதயத்தைத் தொட்டுச் சிந்தனையை மேம்படுத்தாத வார்த்தை எதையுமே அவர் சொன்னதில்லை. பாபாவினுடைய வழிமுறை எப்பொழுதும் அவ்வாறே. இந்த ரீதியில்தான் பக்தர்களின் நிட்டையை திடப்படுத்தினார்.

125 அவர் காட்டிய வழியில் நடந்தால் ஆரம்பகாலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும். ஆனால், போகப்போக பாதை புதர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும்.

126 அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும். மனம் சுலபமாக சந்தேகங்களால் அலைபாய்ந்து, ஸாயீ ஏன் இந்தக் காட்டுவழிப் பாதைக்கு நம்மைக் கொண்டுவந்தார் என்று நினைக்கும்.

127 அந்தச் சூழ்நிலையில்தான் சிரத்தை நிலையாக நிற்கவேண்டும். அதுமாதிரி சங்கடங்கள்தான் உண்மையான சோதனைகள். அசைக்க முடியாத திடமான சிரத்தை வேரூன்றும் வழி இதுவே.

128 ஸாயீ நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது.

129 சங்கடங்களினுள்ளே மறைந்திருக்கும் பிரயோஜனம் இதுவே. ஏனெனில், சங்கடங்களும் ஸாயீயால் விளைவிக்கப்படுவனவே. சங்கடம் வரும்போதுதான் ஸாயீயின் ஞாபகம் வருகிறதுõ சங்கடங்களும் அப்பொழுது விலகிவிடுகின்றனõ

130 இந்தப் பையனின் தகப்பனார்தான் தீவிர பாபா பக்தர்; தைரியசா­; உதாரகுணம் படைத்தவர்; சத்தியசீலர். ஆனால், முதுமையால் அவருடைய உடல்நலம் சீரழிந்துவிட்டது. (ரகுநாத் ராவ் தேண்டூல்கர்)

131 பம்பாய் நகரத்தில் ஒரு பிரபலமான வெளிநாட்டு வியாபார நிறுவனத்தில் அவர் பல ஆண்டுகள் யோக்கியமாகவும் விசுவாசத்துடனும் பணிபுரிந்தார்.

132 பின்னர், முதுமை ஏற, ஏற அவருக்குக் கண்பார்வை மங்கியது. உட­ன் அவயவங்கள் ஓய்ந்து போயின. நிச்சலமாக ஓய்வெடுக்க விரும்பினார்.

133 உழைப்பதற்கு வேண்டிய சக்தி இல்லை. உடல்நிலையைத் தேற்றிக்கொள்வதற்காக விடுப்பு எடுத்துக்கொண்டு நிம்மதியாக ஓய்வை அனுபவித்துக்கொண் டிருந்தார் ரகுநாத்ராவ்.

134 விடுப்பு ஒரு முடிவுக்கு வந்தபோதும், பூரணமான இளைப்பாறலும் தெம்பும் கிட்டவில்லை. ஆகவே விடுப்பை நீடிக்கவேண்டி நிறுவனத்திற்கு ஒரு விண்ணப்பம் எழுதினார்.

135 மனுவைப் படித்த, ரகுநாத்ராவின் நேர் உயர் அதிகாரி விடுப்பை நீடிக்கப் பரிந்துரை செய்தார். அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி எதையும் சீர்தூக்கிப் பார்ப்பவர்; தயாளர்.

136 பரந்த மனம் படைத்த முதலாளி, விசுவாசமாகவும் யோக்கியமாகவும் செய்யப்பட்ட சேவையைக் கருத்திற்கொண்டு பணியாளரின் எதிர்கால நல்வாழ்வுக்காகச் சம்பளத்தில் பாதியை மாதாந்திர ஓய்வூதியமாக அன்புடன் அளிக்கிறார்.

137 இது அரசாங்கத்தின் செயல்முறை. மிகச் சிறந்த தனியார் நிறுவனங்களுங்கூட நேர்மையான பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தகுதியின் அடிப்படையில், சமயம் வரும்போது இம்முறையையே அனுசரிக்கின்றன.

138 ஆயினும் தேண்டூல்கர், ''நான் பணியி­ருந்து ஓய்வு பெரும்போது என்னுடைய முதலாளி இந்த அளவிற்கு மாதாந்திர ஓய்வூதியம் அளிப்பாரா?ஃஃ என்றெண்ணிக் கவலையுற்றார்.

139 ''என்னுடைய சம்பளம் மாதம் ரூ. 150/-தான். மாதாந்திரச் செலவுகளைச் சுமக்கும் முழுப்பாரமும் ஓய்வூதியமாகிய 75 ரூபாயின்மேல்தான் விழும்.ஃஃ இவ்விதமான எண்ணங்கள் அவர் மனத்தில் உழன்றன.

140 ஆனால், கடைசியில் என்ன நடந்ததென்பது மிகவும் சுவாரசியமானது. பாபாவின் லீலையைப் பாருங்கள்õ குடும்ப நல்வாழ்வுபற்றி ரகுநாத்ராவின் மனைவியுடன் (கனவில்) பேசியபோது அவர் செய்த அற்புதத்தைக் கேளுங்கள்.

141 ஓய்வூதியம்பற்றிய கடைசி உத்தரவு தீர்மானிக்கப்படுவதற்கு 15 நாள்களுக்கு முன்னர், பாபா அவருடைய (சாவித்திரி பாயி தேண்டூல்கருடைய) கனவில் தோன்றி, அவருடைய கருத்து என்னவென்று கேட்டார்,--

142 ''நான் அவருக்கு ரூ. 100/- (ஓய்வூதியம்) கொடுக்கலாமென்று விரும்புகிறேன். உமது மனத்தின் ஆசையை அது பூர்த்தி செய்யுமென்று நினைக்கிறீரா?ஃஃ அப்பெண்மணி பதில் சொன்னார், ''நீங்கள் என்ன சொல்கிறீர்கள் பாபாõ ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்? எங்களுடைய பாரங்களனைத்தும் உங்களுடையதே அல்லவோ?ஃஃ

143 நிறுவனத்தில் ரகுநாத் ராவின் மனு சம்பந்தமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'ரகுநாத்ராவ் பல ஆண்டுகளாக இன்றுவரை நேர்மையாக சேவை செய்திருக்கிறார். ஆகவே அவருக்குச் சம்பளத்தில் பாதியளவு ஓய்வூதியமாகக் கொடுக்கப்பட வேண்டும்.ஃ

144 பாபா ரூ. 100/- என்று ஏற்கெனவே சொல்­யிருந்தாலும் ரூ. 10/- அதிகமாகவே அளித்தார். பக்தர்களின்மீது அளவற்ற பிரேமை கொண்ட கருணாகரரான ஸமர்த்த ஸாயீ இப்படித்தான்õ

145 இன்னுமொரு மனோரஞ்ஜகமான கதையைக் கேளுங்கள். பக்தர்களின் பிரேமை மேலும் விருத்தியடையும். கேட்பவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

146 கேப்டன் ஹாடே என்ற பெயர் கொண்ட டாக்டர் ஒருவர் சிரத்தை மிகுந்த பாபா பக்தர். ஒருநாள் விடியற்காலையில், பாபா அவருடைய கனவில் தோன்றிய கதையைக் கேளுங்கள்; மனத்தைச் சுண்டியிழுக்கும்.

147 ஹாடே அப்பொழுது குவா­யரில் வசித்துவந்தார். அங்கேதான் அவர் பாபாவைக் கனவில் கண்டார். கேள்வி கேட்பதில் பாபாவுக்கு இருந்த சாமர்த்தியத்தையும் ஹாடே அவருக்கு அளித்த பதிலையும்பற்றிக் கேளுங்கள்.

148 பாபா கேட்டார், ''என்னை மறந்துவிட்டீரா என்ன?ஃஃ ஹாடே உடனே பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொண்டு பதிலுரைத்தார், ''ஒரு குழந்தை தாயை மறந்துவிட்டால் அபயத்தை (அடைக்கலத்தை) எங்கிருந்து பெறும்?ஃஃ

149 உடனே அவர் எழுந்து (கனவில்), தோட்டத்தினுள் சென்று இளசான வால்பப்டிக் (அவரைக்) காய்களைப் பறித்துக்கொண்டு வந்தார். அரிசி, பருப்பு போன்ற மற்ற

மளிகைச் சாமான்களையும் சேகரித்துக்கொண்டுவந்து, பக்தியுடன் ஒரு சிறப்பான நைவேத்தியம் சமைத்தார். தக்ஷிணையையும் தயார் செய்துகொண்டார்.

150 நைவேத்தியம் தயாரானவுடன் எல்லாப் பண்டங்களையும் ஒரு மூங்கில் தட்டில் வைத்து பாபாவுக்கு ஸமர்ப்பணம் செய்யப்புகுந்தபோது, தூக்கத்தி­ருந்து விழித்துக்கொண்டு, நடந்ததனைத்தும் கனவே என்று அறிந்தார்.

151 தாம் சிர்டீக்கு இதற்கென்றே சென்று, கனவில் ஸமர்ப்பித்த பண்டங்களை நேரிடையாகவே ஸமர்ப்பிக்க வேண்டும் என்று காப்டன் ஹாடே நினைத்தார்.

152 ஆனால், அவர் அப்பொழுது குவா­யரில் இருந்ததால், பம்பாயி­ருந்த நண்பருக்குக் (ஹரி ஸீதாராம் தீக்ஷிதருக்குக்) கடிதம் எழுதினார். கனவில் நடந்த சம்பவத்தை விவரித்து அவரை சிர்டீக்குப் போகுமாறு வேண்டினார்.

153 பணம் மணியார்டர் மூலமாக வருமென்றும் பணத்திற்கு ஏற்றவாறு தாம் கனவில் சேகரித்த மளிகைச் சாமான்களை வாங்கவேண்டுமென்றும், முக்கியமாக, எப்பாடுபட்டாவது, உயர்ந்த தரமான அவரைக்காய்களை வாங்கவேண்டுமென்றும் கடிதத்தில் எழுதியிருந்தார்.

154 மீதிப்பணம் சிர்டீக்கு எடுத்துச் செல்லப்பட்டு மற்றப் பண்டங்களுடன் சேர்க்கப்பட்டுத் தக்ஷிணையாக ஸமர்ப்பிக்கப்பட வேண்டும். பாதங்களை நமஸ்காரம் செய்து, பிரசாதம் கேட்டு வாங்கிக் குவா­யருக்கு அனுப்ப வேண்டும்.

155 மணியார்டர் வந்து சேர்ந்த உடனே நண்பர் சிர்டீக்குச் சென்றார். இதர மளிகைச் சாமான்களை சுலபமாக வாங்கிவிட்டார்; அவரைக்காய்தான் எங்குமே கிடைக்கவில்லை. திடீரென்று ஒரு காய்கறிக் கூடை வந்துசேர்ந்ததுõ

156 கூடையைத் தலையில் சுமந்துவந்த பெண்மணி உடனே அழைக்கப்பட்டார். கூடையைத் திறந்து பார்த்தால், அதுவரை எங்கே தேடியும் கிடைக்காத அவரைக்காய் இருந்தது. கூடியிருந்தவர் எல்லாரும் மிகுந்த ஆச்சரியமடைந்தனர்.

157 எல்லாப் பண்டங்களும் மசூதிக்குக் கொண்டுவரப்பட்டு பயபக்தியுடன் பாபாவுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டன. பாபா அவற்றை நிமோண்கரிடம் ஒப்படைத்தார். நிமோண்கர் அவற்றை மறுநாள், உணவாகச் சமையல் செய்து நைவேத்தியமாக ஸமர்ப்பணம் செய்தார்.

158 மறுநாள் பாபா சாப்பிட உட்கார்ந்தார். ஆனால், சாதத்தையோ பருப்பையோ தொடவில்லை. எல்லாரும் ஆச்சரியப்படும் வகையில் காய்கறி பதார்த்தத்தையே முத­ல் எடுத்தார்.

159 பாபா உண்டது காய்கறிகளையே; அவரைக்காய் பதார்த்தத்தையே வாயில் இட்டுக்கொண்டார். காப்டன் ஹாடே இந்த விருத்தாந்தத்தைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

160 ஹாடேவின் மனத்தில் என்ன பா(ஆஏஅ)வம் இருந்ததோ அதுவே அநுபவமாக மலர்ந்தது. இப்பொழுது பின்வரும் அற்புதமான கதையைக் கேளுங்கள். பக்தர்களை மகிழ்விப்பதற்காக ஸாயீ எவ்வளவு லாவகமாகவும் இனிமையாகவும் வளைந்து கொடுத்துச் செல்லங்கொடுத்தார் என்பதை இது காட்டும்.

161 ஸாயீயின் கைகளால் தொடப்பட்டுப் புனிதமாக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயமொன்றைத் தம்முடைய இல்லத்தில் வைத்திருக்கவேண்டும் என்ற ஆசை காப்டன் ஹாடேவின் மனத்தில் எழுந்தது. ஸாயீ இந்த ஆசையை நிறைவேற்றிவைத்தார்.

162 மனத்தில் கோடானுகோடி ஆசைகள் எழுகின்றன. கெட்ட எண்ணங்களை விலக்கிவிட்டு, நல்லெண்ணங்களைப் பின்தொடருங்கள். பக்தரின் கையைப் பிடித்துக்கொண்டு ஸாயீ வழிநடத்தும் திறமையை அப்பொழுது பாருங்கள்.

163 ஒரு நல்ல விருப்பம் மனத்தில் தோன்றினால் அது உடனே பலன் அளித்துவிடுகிறது. ஸாயீ தரிசனத்தை விரும்பிய நண்பரொருவர் சிர்டீக்கு உடனே புறப்பட்டுக் கொண்டிருந்தார்õ

164 ஸாயீ நிறைவேற்ற வேண்டுமென்றால், விருப்பம் நியாயமானதாக இருக்க வேண்டும். நல்லெண்ணங்களை விரும்பி தருமவழி நடக்கும் பக்தருக்காக எவ்வளவு வளைந்து கொடுத்துச் செல்லங்கொடுக்க வேண்டும் என்பது அவருடைய ஆளுமையில்தான் இருக்கிறது.

165 ஹாடே மிகப் பிரீதியுடன், ''மறக்காமல் இதை பாபாவின் கையில் கொடுங்கள்ஃஃ என்று சொல்­ ஒரு ரூபாயை நண்பருடைய கையில் கொடுத்தார்.

166 நண்பர் சிர்டீக்குச் சென்றவுடனே ஸாயீ தரிசனம் செய்தார். பாபாவின் பாதங்களுக்கு வந்தனம் செய்துவிட்டு பாபாவின் சன்னிதியில் உட்கார்ந்தார்.

167 பாபா தக்ஷிணைக்காகக் கைநீட்டியபோது, முத­ல் தம்முடைய தக்ஷிணையைக் கொடுத்தார். பாபா அதை வாங்கி உடனே பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். நண்பர், காப்டன் ஹாடேவின் தக்ஷிணையை எடுத்தார்.

168 இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, ''டாக்டர் ஹாடே என்மூலமாக இந்த தக்ஷிணையைக் கொடுத்தனுப்பினார்ஃஃ என்று சொல்­க்கொண்டே அந்த ரூபாயையும் பாபாவின் கையில் வைத்தார்.

169 எல்லாருடைய இதயத்திலும் வசிக்கும் இந்த ஸாயீ, ஹாடே குவா­யரில் இருந்தாலும் அவருடைய விருப்பம் என்னவென்று அறிந்திருந்தார். அந்த ரூபாயையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

170 முகத்தில் பிரேமை பொங்க, அந்த ரூபாயைத் தமக்கெதிராகப் பிடித்துக்கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தார். சுற்றி இருந்தவர்கள் பாபாவை வியப்புடன் பார்த்தனர்.

171 வலக்கைக் கட்டைவிரலால் அந்த நாணயத்தைக் காற்றில் சுண்டிவிட்டுவிட்டுப் பிறகு பிடித்தார். இதுபோல் பல தடவைகள் செய்தார். இவ்விதமாக அந்த நாணயத்துடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு அதைத் திருப்பிக்கொடுத்தார்.

172 பாபா சொன்னார், ''இது யாருக்குச் சொந்தமோ அவரிடம் கொடுத்துவிடுங்கள். இத்துடன் உதீ பிரசாதத்தையும் எடுத்துச் சொல்லுங்கள். அவருடையது எதுவும் நமக்கு வேண்டா என்று அவரிடம் சொல்லுங்கள். அவரை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழும்படி சொன்னேன் என்று சொல்லுங்கள்.ஃஃ

173 பாபாவின் பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு உதீ பிரசாதத்தைப் பத்திரப்படுத்திக்கொண்டு பாபாவிடம் அனுமதி பெற்றபின் நண்பர் வீடு திரும்பினார்.

174 குவா­யர் வந்து சேர்ந்தவுடன் ரூபாய் நாணயத்தை டாக்டர் ஹாடேவிடம் கொடுத்து, சிர்டீயில் நடந்ததனைத்தையும் நண்பர் விவரமாகச் சொன்னார். இதைக் கேட்ட ஹாடே அளவற்ற மகிழ்ச்சியடைந்தார்.

175 அவர் மனத்தில் இவ்வாறு நினைத்தார், ''என்னுடைய மனோகதியை அறிந்த பாபா, நான் என்ன வேண்டுமென்று விரும்பினேனோ, எது வேண்டும் என்று தீர்மானம் செய்தேனோ, அவ்வாறே என்னுடைய மனோரதத்தைப் பூர்த்தி செய்துவிட்டார்.

176 காப்டன் ஹாடே இவ்வாறு நினைத்தபோதிலும், அது அவருடைய கற்பனையே. ஏனெனில், ஞானிகள் எந்தப் பிரயோஜனத்திற்காக என்ன யோஜனை செய்கிறார்கள் என்பதை யாரால் புரிந்துகொள்ள முடியும்?

177 அம்மாதிரி நிச்சயமாக ஏதாவது சொல்லப் புகுமுன், இதற்கு நேர்மாறான நிகழ்ச்சியொன்றைப் பார்க்கவேண்டும். முடிவில், ஞானியின் எண்ண ஓட்டங்களை ஞானி மாத்திரமே அறிவார் என்பது விளங்கும்.

178 ஒருவர் கொடுத்த ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறார். இன்னொருவர் கொடுத்த ரூபாயைப் பாக்கெட்டில் போட்டுக்கொள்கிறார். காரணம் என்னவென்றோ பாபாவின் மனத்தில் என்ன இருந்ததென்றோ எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்?

179 அவருடைய காரணம் அவருக்குத்தான் தெரியும். கிடைத்த அற்புதமான நல்வாய்ப்பைக் கோட்டைவிடாமல் அவருடைய லீலையைப் பார்த்து அனுபவிக்கவே நம்மால் முடியும். இது சம்பந்தமான கதையொன்றைக் கேளுங்கள்.

180 ஒருசமயம் பாபாவின்மீது அளவற்ற பிரேமை கொண்ட வாமன்ராவ் நார்வேகர் என்ற பக்தர், பாபாவுக்கு பக்தியுடன் அர்ப்பணம் செய்வதற்காக அழகான ஒரு ரூபாய் நாணயம் ஒன்றைக் கொண்டுவந்தார்.

181 அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் ராமர், லக்ஷ்மணர், ஸீதை இவர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் கூப்பிய கரங்களுடன் ஆஞ்ஜநேயரின் அழகான உருவம் இருந்தது.

182 பாபாவின் கையால் தொடப்பட்டு உதீ பிரசாதத்துடன் திருப்பி அளிக்கப்பட வேண்டுமென்பதே பாபாவுக்கு அந்த நாணயத்தை அர்ப்பணம் செய்ததன் நோக்கம். ஆகவே அது பாபாவின் கையில் இடப்பட்டது.

183 பாபாவுக்கென்னவோ எல்லார் மனத்திலும் இருந்த விருப்பங்களும் தெரியும். ஆயினும், நாணயம் கையில் விழுந்தவுடனே அதைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.

184 வாமன்ராவ் என்ன விரும்பினார் என்பதை மாதவராவ் பாபாவிடம் தெரிவித்து, நாணயத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி கெஞ்சினார்.

185 ''ஏன் இதை அவரிடம் திருப்பிக் கொடுக்கவேண்டும்? இதை நாமே வைத்துக்கொள்ள வேண்டும்ஃஃ என்று பாபா தெளிவாக வாமன்ராவின் கண்ணுக்கெதிராகவே சொல்­விட்டார்.

186 ''ஆயினும், அவர் இதற்கு விலையாக ரூ. 25/- கொடுப்பாரானால், அதற்குப் பதிலாக இந்த ரூபாயைக் கொடுப்பேன்ஃஃ என்று பாபா மேலும் சொன்னார்.

187 அந்த ஒருரூபாய் நாணயத்திற்காக வாமன்ராவ் அவசரமாகச் சென்று, பல இடங்களி­ருந்து பீராய்ந்துகொண்டுவந்து ரூ. 25/-ஐ பாபாவிடம் கொடுத்தார்.

188 ''மூட்டைமூட்டையாக ரூபாயைக் கொண்டுவந்தாலும் இதற்கு ஈடாகாது. அவற்றினுடைய மதிப்பு இந்த நாணயத்தின் மதிப்பைவிடக் கம்மியேஃஃ என்று சொல்­க்கொண்டே பாபா ரூ. 25/-ஐயும் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.

189 சாமாவை நோக்கி அவர் சொன்னார், ''சாமா இதை நீ எடுத்துக்கொள். இது உன்னுடைய சேகரிப்பில் இருக்கட்டும். பூஜையறையில் வைத்து தினமும் வழிபடு.ஃஃ

190 அந்த சமயத்தில், ''ஏன் இவ்வாறு செய்கிறீர்?ஃஃ என்று கேள்வி கேட்பதற்கு யாருக்கு தைரியம் இருந்தது? ஏனெனில், செய்யத் தக்கது எது, செய்யத் தகாதது எது என்பது ஸாயீக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது அன்றோ?

191 ஆகவே, இந்த அத்தியாயத்தை முடித்து, கேட்பவர்களுடைய மனத்திற்குச் சற்று நேரம் ஓய்வளிப்போம். இந்தக் கதைகளைத் திரும்பத் திரும்ப மனத்தில் ஓடவிட்டு சாரம் வாங்கட்டும்.

192 கேள்வியைச் சிந்தனை தொடராவிட்டால், கேட்டதைக் கிரஹிக்க முடியாது. மேலும், கேட்டதைப் பற்றிச் சிந்தித்து தியானம் செய்யாவிட்டால், கேள்வி பயனின்றிப் போகும்.

193 ஹேமாட் ஸாயீயிடம் சரணடைகிறேன். எல்லா ஸாதனங்களுக்கும் (உபாயங்களுக்கும்) மூலஸாதனமான ஸாயீ பாதங்களில் தலை சாய்க்கிறேன். மேற்கொண்டு சொல்லப்போவது, தன் வழியைத் தானே வகுத்துக்கொள்ளும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'கனவுகள்ஃ என்னும் இருபத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.


Do you want to ask questions and share ideas about your kid's education, parenting and more? Join Tamilcube Kids, our exclusive premium Facebook group now, and start meeting other Singapore Indian parents with similar interests.

Share:

Download Free Tamilcube School App:
Home Tamil Tuition Tamil Testpapers Tamil eLearning Calendar Books Astrology
Dictionaries : Tamil Hindi Malayalam Telugu Marathi Sanskrit Kannada More...
Baby Names : Tamil Hindi Sanskrit Telugu Kannada Muslim Malayalam Bengali Marathi Gujarati Marathi
GK : GK questions TNPSC More...
More...