Tamil tuition | Tamil assessment books | Tamil eLearning
Tamilcube.comTamilCube
Learning made fun & easy
Join Tamil tuition at Bedok, Jurong East and Little India | Learn Tamil online at World's first Tamil ELearning Platform.Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53
அத்தியாயம் - 27

27. அருட்பெருக்கு - உபதேசம்
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 ஸத்குருவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளும்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பாதங்களையே நாம் வணங்குகிறோம்; கண்கூடாகப் பர பிரம்மத்தையே வந்தனம் செய்கிறோம்; பரமானந்தம் அடைகிறோம்.

2 ஸமுத்திரத்தில் ஒருமுறை முழுகிவிட்டால், எல்லாப் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியம் கிடைக்கிறதன்றோõ அதுபோலவே, குருவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டால், சகல தேவதைகளையும் அங்கு அடையலாம்.

3 ஜய ஜய ஸத்குரு ஸாயீõ ஸாயுஜ்ஜிய முக்தி (இறையுடன் ஒன்றிய நிலை) அளிக்கும் கல்பதருவே ஜய ஜயõ ஸத்திய ஞானக்கடலே ஜய ஜயõ கதை கேட்பவர்களுக்கு பயபக்தியுடன் கேட்கவேண்டுமென்ற உணர்வை ஊட்டுமாறு வேண்டுகிறேன்.

4 சாதகப்பட்சி மேகத்தி­ருந்து விழும் நீர்த்துளிக்காகக் காத்திருப்பதுபோல, ஆன்மீக நாட்டமுள்ள பக்தர்கள் இந்த அமிருதமயமான கதைக்காகக் காத்திருக்கின்றனர். சகலமான பாபா பக்தர்களும் இந்த அமிருதத்தை அருந்தி எக்காலத்திலும் சுகத்தை அனுபவிப்பார்களாகõ

5 தங்களுடைய நிர்மலமான கதையைக் கேட்பதால் அவர்களுக்கு உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டட்டும்; பிரேமையால் விழிகளில் கண்ணீர் ததும்பட்டும்; பிராணன் உமது பாதாரவிந்தங்களில் லயிக்கட்டும்;--

6 அபரிமிதமான அன்பினால் மனம் கனியட்டும்; பெருமகிழ்ச்சியால் திரும்பத் திரும்ப மெய்சி­ர்க்கட்டும். குடும்பத்துடன் கதை கேட்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு விம்மிவிம்மி ஆனந்தக்கண்ணீர் பெருக்கட்டும்;--

7 (கதை கேட்பவர்களுடைய) பரஸ்பர விரோதங்கள் ஒழியட்டும்; பேதங்கள் ந­யட்டும். தமக்குள்ளே சோதனை செய்து பார்த்தால், இதுதான் குருவின் கிருபை உண்டாக்கும் எழுச்சியும் விழிப்பும் என்று அவர்கள் நன்கு அறிவர்.

8 குருவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்குப் புலப்படாது. ஏனெனில், அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது. மூவுலகங்களிலும் தேடினாலும் ஸத்குருவைத் தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காணமுடியாது.

9 குருவினிடத்தில் பக்தி பா(ஆஏஅ)வமும் கரைகாணாத அன்பும் அசையாத நிட்டையும் இல்லையெனில், ஆறு உள் எதிரிகளை (காமம், கோபம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம்) வெல்லமுடியாது; அஷ்டபா(ஆஏஅ)வங்களை1 அடையவும் முடியாது.

10 பக்தனுடைய ஆத்மசுகம் குருவுக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பக்தன் எவ்வளவுக்கெவ்வளவு ஆன்மீக முன்னேற்றம் அடைகிறானோ அவ்வளவுக்கவ்வளவு குரு குதூகலம் அடைகிறார்; பக்தனைக் கொண்டாடுகிறார்.

11 'தேகம், வீடு, மனைவி, மக்கள் - இவையனைத்தும் என்னுடையவைஃ என்று நினைப்பது விவேகமற்ற செயல். இவையனைத்தும் பிற்பகல் நிழலைப்போல் வேகமாய் இடம் மாறும் தன்மையுடையவை; கணநேரத்தில் மறையக்கூடிய மாயை.

12 இந்த மாயையின் சுழ­ல் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று விரும்புபவர் வேறெதிலும் நாட்டமில்லாது ஸாயீயிடம் சரணடைந்துவிட வேண்டும்.

13 மாயையின் மர்மத்தை முடிச்சவிழ்க்க முயன்ற வேத சாஸ்திரங்கள் கையை விரித்துவிட்டன. சிருஷ்டி அனைத்திலும் இறைவனைக் காணமுடிந்தவரே மாயையை வெல்ல முடியும்.

14 நிஜாம் ராஜ்ஜியத்தி­ருந்து பக்கீர்ஸாயீயைத் தம்முடன் முத­ல் நெவாஸாவுக்கு அழைத்துவந்த சாந்த்பாய் பாடீல் பாக்கியசா­.

15 அங்கே பக்கீர்ஸாயீ கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வாசம் செய்தார். அங்கேதான் அவர் கானட் கிராமவாசியான கமா என்பவருடன் சகவாசமாக இருந்தார்.

16 இருந்தபோதிலும், சிறிதுகாலம் கழித்து, கமாவும் பிரசித்த பெற்ற டாக்ளீ கிராமத்தைச் சேர்ந்த தகடூ தாம்போ­யும் (தாம்பூல வியாபாரியும்) பாபாவுடன் நெவாஸாவி­ருந்து சிர்டீக்கு வந்துசேர்ந்தனர்.

17 நாடெங்கும் புண்ணியத் தலங்களும் புண்ணிய தீர்த்தங்களும் அபரிமிதமாக இருக்கின்றன. ஆயினும், ஸாயி பக்தர்களுக்கு சிர்டீயே மிகப் பவித்திரமானது.

18 இந்த யோகம் நேர்ந்திராவிட்டால் (பாபாவின் சிர்டீ வருகை) தீனர்களாகிய நமக்கு அவருடைய கூட்டுறவு எப்படிக் கிடைத்திருக்கும்? இது நம்முடைய கிடைத்தற்கரிய பெரும் பேறன்றோõ

19 பக்தர்களில் எவரெல்லாம் முழுமையாக சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லாருடைய நன்மையையும் கருதி ஸாயீ அவர்களை ஸன்மார்க்கத்தில் செலுத்துகிறார்.

20 ஆகவே, கதை கேட்பவர்களேõ ஊன்றிய மனத்துடன் ஸத் சரித்திரத்தைப் படியுங்கள். ஸாயீயின் புண்ணிய சரித்திரமே அவரருளைப் பெறச் சிறந்த வழியாகும்.

21 கடந்த அத்தியாயத்தில், ஒரு பக்தருக்குக் குலகுருவினிடம் இருந்த விசுவாசம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதும் மற்றொருவருக்கு அக்கல்கோட் சுவாமியைப்பற்றிய சூசகம் அளிக்கப்பட்டு அவருடைய நம்பிக்கையும் விசுவாசமும் மறுமலர்ச்சி செய்யப்பட்டதும் விவரிக்கப்பட்டது.

22 மற்றொரு பக்தருடைய தற்கொலை முயற்சி சாமர்த்தியமான திட்டமொன்றால் முறியடிக்கப்பட்டது. அவரைக் கடைசி நிமிடத்தில், எதிர்பாராதவிதமாக, மரணத்தின் வாயி­­ருந்து வெளியே இழுத்து நல்வாழ்வளித்தார் பாபா. இது எவ்வாறு நிகழ்ந்ததென்ற விவரமும் கடந்த அத்தியாயத்தில் அளிக்கப்பட்டது.

23 இந்த அத்தியாயத்தில், பக்தர்களுக்கு அருள் செய்வதிலும் அவர்களுக்கு சந்தோஷமும், திருப்தியும் அளிப்பதிலும் அவர்களை மேன்மையுறச் செய்வதிலும் பாபா பிரீதியடைந்த விவரம் சொல்லப்படும்.

24 பாபா அருள் செய்த பாணியே அலாதியானது. பலனடையும் பக்தருக்கு தீட்சை (மந்திர உபதேசம்) பெறுகிறோம் என்று தெரியாமற்கூடப் போகலாம். சிலருக்குக் கே­க்கும் சிரிப்பிற்கும் இடையே தீட்சை அளிக்கப்பட்டது. கேட்பவர்கள் இதை நுணுக்கமாகக் கவனியுங்கள்.

25 உபதேசம் அளித்ததும் அருள்மழை பொழிந்ததும் அநேக ரீதிகளில் நடந்தன. இதை ஏற்கெனவே இந்நூ­ல் விவரித்திருக்கிறேன். யாரால் எதை கிரஹிக்க (சாரம் வாங்க) முடிந்ததோ, அந்த வழி அவருக்கு உபதேசிக்கப்பட்டது.

26 வைத்தியர்தான் நோயின் தன்மையையும் மருந்தின் குணத்தையும் அறிவார். இவ்விரண்டையுமே அறியாத நோயாளியோ வெல்லம் தின்னவேண்டுமென்று விரும்புகிறார்.

27 வெல்லம் இனிப்புதான்; சந்தேகமேயில்லை. ஆனால், அது நோயாளியின் உடல்நலத்துக்குக் கெடுதல் விளைவிக்கும். உண்மை இவ்வாறிருப்பினும், நோயாளி வெல்லம் பெறாமல் கஷாயத்தைக் குடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். கையில் முத­ல் வெல்லக்கட்டி வைக்கப்பட வேண்டும்õ

28 நோயாளியிடம் பலாத்காரம் செல்லுபடியாகாது. ஆகவே, வைத்தியர் ஒரு யுக்தி செய்து, முத­ல் வெல்லக்கட்டியையும் பிறகு கஷாயத்தையும் கொடுக்கிறார். இவ்வாறு வைத்தியர் காரியத்தை சாதித்துவிடுகிறார்.

29 வெல்லத்தின் தோஷத்தை முறியடிக்கும் வகையில், கஷாயத்தில் முறிவுமருந்தையும் சேர்த்துக் கஷாயத்தின் குணப்படுத்தும் சக்தி குறையாதவாறு வைத்தியர் செய்துவிடுகிறார். பாபாவின் வழிமுறையும் இவ்வாறேõ

30 ஆயினும், இப்படித்தான் ஒவ்வொருமுறையும் செய்தாரென்றில்லை. அவருடைய தீட்சை அளிக்கும் முறையைக் குறிப்பிட்ட பக்தரின் மனோதர்மம், பக்தி, சேவை, பிரேமை, விசேஷகுணம் இவற்றுக்கேற்றவாறு தேர்ந்தெடுத்தார்.

31 பாபாவின் அற்புதமான லீலைகள் திகைப்பூட்டக்கூடியவைõ யாரிடமாவது பிரியமேற்பட்டால், அவருக்கு தீட்சை அளித்து அனுக்கிரகம் செய்வார். அவ்வாறு செய்த சந்தர்ப்பச் சூழ்நிலைகளைப் பற்றிக் கேளுங்கள்.

32 யாருக்காவது அனுக்கிரகம் செய்யவேண்டுமென்று அவருக்குத் தோன்றிவிட்டால், சம்பந்தப்பட்ட பக்தர் அதுபற்றிக் கனவிலும் நினைத்திருக்காவிட்டாலும் சரி, அவருக்கு வாழ்க்கையில் நிறையுணர்வையும் சாதனைகளால் ஏற்படும் திருப்தியையும் அளித்துவிடுவார். இதுவும் அதிகப் பிரயாசையின்றி நகைச்சுவைக்கும் கே­க்கும் இடையே நடந்துவிடும்.

33 பக்தர் எவருக்காவது ஒரு குறிப்பிட்ட நூலை வாசிக்கவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டால், முத­ல் அதை பாபாவிடம் கொடுத்து, அவர் கைகளி­ருந்து பிரசாதமாகத் திரும்பப் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்தது.

34 அந்நூலைப் பாராயணம் செய்யும் காலத்தில், செய்பவருக்கு அபாரமான புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு செய்யப்பட்டது. அவ்வாறே, அப் புத்தகத்தைப் போதியாகப் படித்து விரிவுரை சொல்பவருக்கும் கதை கேட்பவர்களுக்கும் பூரணமான பிரசாதமாகப் பரம மங்களம் விளையும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

35 சிலர் பாபாவிடம் பெருமாளின் தசாவதாரச் (பத்து அவதாரங்கள்) சித்திரத்தைக் கொணர்ந்தனர்; சிலர் தசாவதாரத் தோத்திரப் புத்தகங்களைக் கொணர்ந்தனர். மேலும் சிலர், பஞ்சரத்னி கீதை போன்ற புனிதமான நூல்களையும் புண்ணிய சரித்திரங்களையும் அர்ப்பணம் செய்தனர்.

36 சிலர் தாஸகணு இயற்றிய ஸந்தலீலாமிருதம், பக்தலீலாமிருதம் ஆகிய புத்தகங்களைக்கூட அர்ப்பணம் செய்தனர். வேறு சிலர் 'விவேகசிந்துஃ என்னும் நூலைக் கொண்டுவந்தனர். பாபா இவையனைத்தையும் சாமாவிடம் ஒப்படைத்தார்.

37 பாபா அப்பொழுது கூறுவார், ''சாமா, இந்தப் புத்தகங்களெல்லாம் உன்னிடம் இருக்கட்டும். வீட்டில் பத்திரமாக வைத்துக் காப்பாற்று.ஃஃ சாமா இந்த ஆணையைச் சிரமேற்கொண்டு, புத்தகங்களை ஜாக்கிரதையாகப் பாதுகாத்துவந்தார்.

38 பக்தர்கள் கடைகளி­ருந்து இம்மாதிரியான புத்தகங்களை வாங்கிக்கொண்டுவந்து, பிரசாதமாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் பாபாவின் கைகளில் வைப்பர்.

39 சுபாவத்தில் பாபா உதாரகுணம் படைத்தவரெனினும், இதைச் செய்வதற்கு தைரியம் தேவைப்பட்டது. ஆகவே, பக்தர்கள் தங்களுடைய ஆசையைத் தெரிவிப்பதற்கு மாதவராவை உடன் அழைத்துச் சென்றனர்.

40 ஆகவே, அவர்மூலமாகத்தான் பாபாவின் கைகளில் தக்க தருணத்தில் புத்தகங்கள் வைக்கப்பட்டன. பாபாவுக்குப் புத்தகத்தின் மஹிமைமட்டுமின்றி, பக்தரின் ஆன்மீகப் பரிணாமநிலையும் தெரிந்திருந்தது.

41 பக்தர்கள் புத்தகங்களை பாபாவின் கைகளில் வைப்பர். பாபா புத்தகங்களை மேலெழுந்தவாரியாகப் புரட்டுவார். அதன் பிறகு, பக்தர்கள் புத்தகங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்காகக் கைநீட்டுவர்.

42 ஆனால், பாபா பல சந்தர்ப்பங்களில் புத்தகங்களை பக்தர்களிடம் திருப்பிக் கொடுக்கமாட்டார். மாறாக, புத்தகங்களை மாதவராவிடம் கொடுத்து, ''சாமா, இந்தப் பிரதிகளை வைத்துக்கொள். தற்சமயம் இவை உன்னிடமே இருக்கட்டும்ஃஃ என்று சொல்­விடுவார்.

43 சாமா பட்டவர்த்தனமாகவே (வெளிப்படையாகவே) வினவுவார், ''ஆர்வத்துடன் கைநீட்டிய இவர்களுடைய புத்தகங்களைத் திருப்பியளித்துவிடட்டுமா?ஃஃ அப்பொழுதும் பாபா சொல்வார், ''நீயே வைத்துக்கொள்.ஃஃ

44 ஒருசமயம், பாகவத பாராயணம் செய்வதில் பேரார்வம் கொண்ட ஸாயீ பக்தரொருவர், காகா மஹாஜனி என்ற பெயர் கொண்டவர், பாகவத புத்தகப் பிரதியொன்றை எடுத்துக்கொண்டு சிர்டீக்கு வந்தார்.

45 அவரை சந்திப்பதற்கு வந்த மாதவராவ், தற்செயலாக அப் புத்தகத்தைப் படிப்பதற்காக எடுத்தார். மசூதிக்குச் சென்றபோதும் கையில் புத்தகம் இருந்தது. பாபா அவரைக் கேட்டார்,--

46 ''சாமா, இதென்ன புத்தகம் உன் கையில்?ஃஃ சாமா பதில் சொன்னார். பாபா புத்தகத்தைத் தம் கையிலெடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தார்.

47 ஒரு காலத்தில் காகா மஹாஜனி பாபாவிடமிருந்து பிரசாதமாகப் பெற்றுக்கொண்ட ஏகநாத பாகவதத்தின் பிரதியே அப்புத்தகம்.

48 மாதவராவ், புத்தகம் தம்முடையதில்லையென்றும் காகா மஹாஜனியினுடையது என்றும் பாபாவுக்குத் தெளிவுபடுத்தினார். படிக்கவேண்டுமென்ற ஆவல் யதேச்சையாகத் தோன்றியதால், கையிலெடுத்துக்கொண்டு வந்ததாகவும் விளக்கமாகச் சொன்னார்.

49 இருந்தபோதிலும் பாபா சாமாவிடம் கூறினார், ''நான் இதை உனக்குக் கொடுக்க நேர்ந்ததால் உன்னுடைய சேகரிப்பில் இதை வைத்துக்கொள். உனக்கு உபயோகப்படும்.ஃஃ

50 இவ்வாறு நடந்ததால், சிலகாலம் கழித்துக் காகா மஹாஜனி சிர்டீக்கு மறுபடியும் விஜயம் செய்தபோது, தாம் வாங்கிக்கொண்டு வந்த புதியதொரு ஏகநாத பாகவதப் பிரதியை ஸாயீயின் கரங்களில் வைத்தார்.

51 பாபா அவருக்கு அதைப் பிரசாதமாகத் திருப்பிக் கொடுத்தார். கொடுக்கும்போது ஆக்கினையாகச் சொன்னார், ''இதை மிக பத்திரமாக வைத்துக்கொள்ளும். இது உமக்கு உண்மையாகவே மிகவும் உபயோகமாக இருக்கும்.ஃஃ இவ்வாறு காகா மஹாஜனி ஆறுதலளிக்கப்பட்டார்.

52 பாபா மிகவும் மனம் கனிந்து மேலும் கூறினார், ''இதுதான் உமக்கு நன்கு பணி புரியும்; இதை வேறு யாரிடமும் கொடுக்காதீர்.ஃஃ இதைக் கேட்ட காகா மஹாஜனி பிரேமையுடன் வந்தனம் செய்தார்.

53 பாபா எல்லா விருப்பங்களும் நிறைவேறியவராதலால், முழுக்க முழுக்க விருப்பமேதுமில்லாதவர். இயற்கையாகவே துறவு தர்மத்தை அனுசரித்த பாபா, உலகியல் பொருள்களைச் (புத்தகங்களைச்) சேகரிப்பதில் ஏன் சிரமம் எடுத்துக்கொண்டார்?

54 பாபாவின் மனத்தி­ருப்பதை யார் அறிவார்? நடைமுறை ரீதியில் பார்த்தால், இப் புத்தக வங்கி பக்தர்கள் புராணங்களைக் காதால் கேட்டு இன்புறவும் பயனடையவும் உதவியாக இருந்தது.

55 சிர்டீ இப்பொழுது ஒரு பவித்திரமான தலமாக ஆகிவிட்டது. பாபாவின் சிஷ்யர்கள் பல தேசங்களி­ருந்து வந்து இங்கே திரும்பத் திரும்பக் கூடுவர்; ஆன்மீக விஷயங்களைப்பற்றிக் கலந்து ஆலோசிப்பர்.

56 அந்தக் காலத்தில்தான் இப்புத்தகங்கள் உபயோகத்திற்கு வரும். நாம் அப்பொழுது மேலுலகத்தில் இருப்போம். ஆயினும் சாமா தம்முடைய புத்தக சம்மேளனத்தி­ருந்து (குவிப்பி­ருந்து) எடுத்துக் கொடுப்பார். இயற்றிய ஆசிரியர்களின் பிரதிநிதிகளாகப் புத்தகங்கள் அப்பொழுதும் இயங்கும்õ

57 இந்நூல்கள் பரம பவித்திரமானவை. சிர்டீயிலோ அல்லது மற்ற இடங்களிலோ பக்தர்கள் இப் புராணநூல்களை வாசிக்கவேண்டும் என்பதே பாபாவினுடைய விருப்பமாக இருந்திருக்கவேண்டும். பத்திரமாகப் பாதுகாக்கச் சொன்னது அதற்காகவே.

58 ராமனுடைய சரித்திரமான ராமாயணத்தையோ, கிருஷ்ணனுடைய சரித்திரமான பாகவதத்தையோ வாசிக்கிறோம். அப்பொழுதும் முன்னும் பின்னும் ஸாயீயே கண்ணுக்குத் தெரிகிறார்.

59 இந்நூல்களின் கதாநாயகர்கள், வேறு உருவம் ஏற்றுக்கொண்ட ஸாயீயே என்று உணர்ந்தநிலையில், கதையைப் பிரவசனம் செய்பவரும் காதுகொடுத்துக் கேட்பவர்களும் ஸாயீயின் உருவத்தையே கண்முன் காண்கிறார்கள்.

60 புத்தகங்கள் குருவுக்கு அர்ப்பணம் செய்யப்படுகின்றன; அல்லது பிராமணர்களுக்கு தானமாக அளிக்கப்படுகின்றன. இச் செய்கை, கொடுத்தவர்களுக்கு மங்களத்தை விளைவிக்கின்றது என்பது சாஸ்திரப் பிரமாணம்.

61 ''இப் புத்தகங்களை நீ வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய், உன்னுடைய தொகுப்பில் சேர்த்து சம்ரட்சணம் செய்ஃஃ என்று சாமாவுக்கு பாபா இட்ட ஆக்கினையின்பின், ஒரு மிகவும் முக்கியமான நோக்கம் இருந்தது.

62 சாமாவின் பக்தி எவ்வாறு ஒப்பில்லாததோ, அவ்வாறே பாபாவுக்கு சாமாவின்மீது இருந்த பிரேமை கரைகடந்தது. ஆகவே அவரை ஓர் ஆன்மீக நியமத்துக்கு உட்படுத்தவேண்டுமென்ற விருப்பம் ஸாயீயின் மனத்தில் எழுந்தது.

63 இதனால் பாபா என்ன செய்தாரென்று பாருங்கள்õ சாமாவுக்கு இச்சையே இல்லாத போதிலும், அவருக்குச் சிறந்ததொரு அநுக்கிரஹத்தைச் செய்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையைப்பற்றிக் கேளுங்கள்õ

64 ஒருநாள் மசூதிக்கு ராமதாசி புவா ஒருவர் வந்துசேர்ந்தார். ராமாயண பாராயணம் செய்வது அவருடைய நித்திய நியமம் (தினப்படி வழிபாட்டு ஒழுக்கம்).

65 விடியற்காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்தபின் ஸ்நானம் செய்துவிட்டு, விபூதிதாரணம் செய்துகொண்டு காவியாடை தரித்து அனுஷ்டானத்துக்கு அமர்ந்துவிடுவார்.

66 பரிபூரணமான சிரத்தையுடன் அத்யாத்ம ராமாயணத்தை நெடுநேரம் வாசித்த பிறகு விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியைப் பாராயணம் செய்வார்.

67 இவ்வாறு பலநாள்கள் நித்திய அனுஷ்டானம் நடந்துவந்தது. மாதவராவுக்கு நல்லகாலம் பிறந்தது; ஸமர்த்த ஸாயீயின் மனத்தில் அவருக்கு அருள் செய்யவேண்டுமென்ற எண்ணம் உதித்தது. அதுபற்றிய விவரம் கேளுங்கள்.

68 மாதவராவின் சேவைக்குப் பலன் பழுக்கும் நேரம் வந்துவிட்டது. 'மாதவராவ் சமயாசார (மத ஒழுக்க) நியமம் ஒன்றைக் கடைப்பிடித்து பக்திமார்க்கத்தின்

பிரசாதத்தைப் பெறவேண்டும். இவ்வழியாக உலகியல் வாழ்வின் தொல்லைகளி­ருந்து விடுபட்டு, சாந்தியடைய வேண்டும்.ஃ--

69 பாபாவின் மனத்தில் எழுந்த எண்ணம் இதுவே. ராமதாசியைத் தம்மிடம் கூப்பிட்டுச் சொன்னார், ''எனக்குத் தாங்க முடியாத வயிற்றுவ­ வந்துவிட்டது; குடலே வெடித்துவிடும்போல் இருக்கிறது.--

70 ''இந்த வயிற்றுவ­ நிற்கப்போவதில்லை. போம், சீக்கிரமாகச் சென்று கொஞ்சம் சோனாமுகி சூரணம் (பேதிமருந்து) வாங்கி வாரும். ஒரு சிட்டிக்கை வாயில் போடாவிட்டால் இந்தப் பிடிவாதமான வயிற்றுவ­ போகாது.ஃஃ

71 அப்பாவி ராமதாசி இதை நம்பிவிட்டார்õ உடனே தாம் படித்துக்கொண் டிருந்த போதியில் பக்க அடையாளம் வைத்துவிட்டு பாபாவின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து பஜாருக்கு ஓடினார்.

72 ராமதாசி படியிறங்கியவுடனே பாபா என்ன செய்தாரென்றால், தம்முடைய இருக்கையி­ருந்து எழுந்துவந்து பாராயணப் புத்தகக்கட்டுக்கு அருகே சென்றார்.

73 பல புத்தகங்களுக்கிடையில் விஷ்ணு ஸஹஸ்ர நாம போதி அதில் இருந்தது. அதைக் கையிலெடுத்துக்கொண்டு தம்முடைய இருக்கைக்குத் திரும்பிவந்தார்.

74 பாபா சொன்னார், ''சாமா, உனக்குத் தெரியுமா? இந்தப் போதி பரமமங்களத்தை அளிக்கக்கூடியது. ஆகவே நான் இதை உனக்குத் தருகிறேன். நீ இதை இன்றி­ருந்து வாசிக்க ஆரம்பி.--

75 ''ஒருசமயம் நான் பெருந்துன்பத்தால் பீடிக்கப்பட்டேன். அமைதியிழந்து கொதிப்படைந்த நிலையில் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையை இழந்தேன்.--

76 ''அந்த நேரத்தில், ஓõ உனக்கெப்படிச் சொல்லுவேன் சாமாõ இந்தப் போதி மிகவும் உபயோகமாக இருந்தது; இது இல்லாமல் நான் உயிர்பிழைத்திருக்கமாட்டேன்õ இதுவே என்னுயிரைக் காத்ததுõ--

77 ''போதியை ஒருகணம் மார்பின்மேல் வைத்துக்கொண்டேன். ஆஹாõ உடனே என்னுடைய இதயத்தின் படபடப்பு அடங்கியது. அல்லாவே போதியினுள் இறங்கியிருப்பதுபோல் உணர்ந்தேன். நான் உயிர்பிழைத்தது போதியினாலேயேõ --

78 ''ஆகவே சாமா, இதை உன்னுடையதாக எடுத்துக்கொள். மெதுவாகக் கொஞ்சங் கொஞ்சமாக தினமும் வாசிக்க ஆரம்பி. ஒரு நாளைக்கு ஒரு நாமாவின் மீது மனத்தை ஈடுபடுத்தினாலும் இது உனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிக்கும்.ஃஃ

79 சாமா பதில் கூறினார், ''பாபா, எனக்கு இந்தப் போதி வேண்டாõ அந்த ராமதாசி என்மீது கடுங்கோபம் கொள்வார். அவர் இல்லாம­ருந்த நேரத்தில் நான்தான் இந்தத் தகாதசெயலைச் செய்துவிட்டதாக நினைப்பார்.--

80 ''அவர் இயற்கையாகவே துஷ்டர்; முன்கோபி; பிடிவாதக்காரர்ó; சுலபமாகத் தன்வயமிழக்கக் கூடியவர். அனாவசியமாக ஏன் ஒரு சண்டையைக் கிளப்ப வேண்டும்? வேண்டா, வேண்டா, எனக்கு எந்தச் சச்சரவும் வேண்டவே

வேண்டாõ--

81 ''மேலும், இந்தப் போதியின் மொழியோ ஸம்ஸ்கிருதம். என்னுடைய பேச்சும் உச்சரிப்பும் குறைபாடுடையன. பேச்சில் கிராமவாடை; உச்சரிப்பில் மெருகில்லை. கூட்டெழுத்தை உச்சரிக்கும்போது நாக்குக் குழறி, பேச்சு தெளிவிழந்துபோகிறது.ஃஃ

82 பாபாவினுடைய செயல், சண்டை மூட்டிவிடுவதற்காகவே குறிவைக்கப்பட்டது என்று சாமா நினைத்தார் போலும். அந்தோõ பாபாவுக்குத் தம்மீது இருந்த அன்பையும் அக்கறையையும் அவர் உணர்ந்தாரில்லை.

83 ''என் சாமா ஒரு கிறுக்கன் போலும்õ ஆனால், எனக்கு அவன்மேல் ஆசையும் பாசமும் உண்டு. என்னுடைய இதயத்தில் ஒரு தனியிடம் பிடித்துவிட்டான். அதுவே என் அன்புதோய்ந்த அனுதாபத்திற்குக் காரணம்.--

84 ''என்னுடைய கைகளாலேயே இந்த விஷ்ணு ஸஹஸ்ர நாம மாலையை அவன் கழுத்தில் இடுகிறேன். உலகியல் தொல்லைகளி­ருந்தும் துயரங்களி­ருந்தும் இது அவனை விடுவிக்கும். இந்த நாமாவளியைப் பாராயணம் செய்வதில் அவனுக்கு ஆவலை உண்டுசெய்கிறேன்.--

85 ''நாமம் மலைபோன்ற பாவங்களையும் அழிக்கும்; நாமம் தேகாபிமானத்தை உடைக்கும்; நாமம் கோடிக்கணக்கான தீயநாட்டங்களை நாசம் செய்து நிர்மூலமாக்கும்.--

86 ''நாமம் காலனின் கழுத்தை நெரிக்கும்; ஜனனமரணச் சுழ­­ருந்து விடுவிக்கும். இவ்வளவு மஹிமை வாய்ந்த விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியின்மீது சாமா ஆர்வத்தையும் ஆசையையும் அன்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.--

87 ''பிரயத்தனமாக, செய்கிறோம் என்ற உணர்வுடன் செய்யப்படும் நாமஜபம் மிக உன்னதமானது. பிரயத்தனம் இன்றிச் செய்யப்படும் நாமஜபமும் சோடைபோவதில்லை. எதிர்பாராமல் நாக்கில் தோன்றினாலும், நாமம் தன்னுடைய பிரபாவத்தை வெளிப்படுத்தும்.--

88 ''நம்மைப் பரிசுத்தமாக்கிக்கொள்ள நாமஜபத்தைவிட சுலபமான வழி வேறெதுவும் இல்லை. நாமமே நாக்குக்கு அணிகலன்; நாமமே ஆன்மீகவாழ்வைச் செழிப்பாக்கும் உரம்.--

89 ''நாமத்தை தியானம் செய்வதற்கு நீராடல் தேவையில்லை. நாமம் சடங்குகளுக்கும் சாஸ்திரவிதிகளுக்கும் உட்பட்டதன்று. நாமம் எல்லாப் பாவங்களையும் அழிக்கும். நாமம் என்றும் எப்பொழுதும் பவித்திரமானது.--

90 ''என்னுடைய நாமத்தை இடைவிடாது ஜபம் செய்துவந்தால், அக்கரை சேர்ந்து விடுவீர்கள்; வேறு உபாஸனை ஏதும் தேவையில்லை; அதுவே மோக்ஷத்தை அளிக்கும்.--

91 ''எவர் என்னுடைய நாமத்தை சதாசர்வகாலமும் ஜபிக்கிறாரோ, அவர் எல்லாப் பாவங்களி­ருந்தும் விடுபடுகிறார். எனக்கு அவர் மிகச்சிறந்த மனிதரைவிடச் சிறந்தவராகின்றார்.ஃஃ

92 பாபாவின் இதயத்தில் ஆழமாகப் பதிந்திருந்த எண்ணமும் நோக்கமும் இவையே. அதற்கேற்றவாறே அவர் செயல் புரிந்தார். வேண்டா, வேண்டா, என்று சொன்னபோதிலும் சாமாவின் பாக்கெட்டில் போதியைத் திணித்துவிட்டார்õ

93 நம் முன்னோர்கள் செய்த புண்ணியங்களின் கூட்டுவ­மையே ஸாயீயின் கிருபை என்னும் பலனை விளைவிக்கிறது. நம்மைத் தூயவர்களாக்கி இவ்வுலக வாழ்வின் தொந்தரவுகளி­ருந்தும் துன்பங்களி­ருந்தும் மயக்கங்களி­ருந்தும் விடுவிக்கும் மஹிமை பெற்றது விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளித் தோத்திரம்.

94 மற்ற மதச்சடங்குகளுக்கு எத்தனையோ விதிகளை அனுசரிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், நாமஜபத்தையோ எந்நேரமும் இடைவிடாது செய்யலாம். நாமஜபத்திற்குத் தடங்கல் என்பதே கிடையாது. வேதம் ஓதக்கூடாத நாள்களிலும் நேரங்களிலுங் கூட, நாமஜபம் செய்யலாம். அதைவிட எளிமையானதும் சுலபமானதுமான வழிபாட்டுமுறை வேறெதுவுமேயில்லை.

95 மராட்டி ஞானி ஏகநாதருங்கூட இதே ரீதியில் தம் அண்டைவீட்டுக்காரர் ஒருவரின் மீது விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியைத் திணித்து அவருடைய வாழ்க்கையை ஆன்மீகப் பாதைக்குத் திருப்பினார்.

96 ஏகநாதரின் இல்லத்தில் தினமும் விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளி பாராயணமும் புராணங்கள் வாசிப்பதும் பஜனையும் நடந்துகொண் டிருந்தன. ஆயினும், பக்கத்து வீட்டுப் பிராமணர், நீராடுதல் ஸந்தியாவந்தனம் போன்ற நித்திய விதிகளைக் கூடத் துறந்துவிட்டு மனம் போனபடி துராசாரத்தில் மூழ்கி வாழ்ந்துவந்தார்.

97 புராணப் பிரவசனத்தை ஒருபோதும் செவிமடுத்தாரில்லை. மேலும் சொல்லப்போனால், அக் கெட்ட மனிதர் ஏகநாதர் வீட்டினுள் என்றுமே நுழைந்தாரில்லை. ஆயினும் ஏகநாதர் கருணைகூர்ந்து அவரைத் தம்மிடம் வரவழைத்தார்.

98 உயர்குல பிராமணராகப் பிறந்திருந்தபோதிலும் அவர் தடம்புரண்டு வாழ்ந்துவந்தார். இவ்வுண்மை தெரிந்த ஏகநாதர் பரிதாபப்பட்டு, அவரைச் சீர்திருத்திச் செம்மையாக்குவது எப்படி என்று யோசித்தார்.

99 அவர் 'வேண்டாஃ என்று சொன்னபோதிலும், தாம் விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியை ஒவ்வொரு சுலோகமாக உரக்கச் சொல்­, அவரைத் திருப்பி ஒப்பிக்க வைத்தார். ஒவ்வொரு சுலோகமாகப் பாடம் ஏற ஏறப் படிப்படியாக அவர் உத்தாரணம் (தீங்கி­ருந்து மீளுதல்) அடைந்தார்.

100 விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியைப் படிப்பதோ பாராயணம் செய்வதோ நம் மனத்தைத் தூய்மை செய்துகொள்வதற்கு சுலபமான நேர்வழிப் பாதை ஆகும். இவ்வழிபாட்டுமுறை நமக்குப் பரம்பரைச் சொத்தாகக் கிடைத்திருக்கிறது. பாபா மேற்கொண்ட பெருமுயற்சி இக் காரணம்பற்றியே.

101 இதற்கிடையே ராமதாசி சோனாமுகி மருந்துடன் விரைவாகத் திரும்பிவந்தார். சண்டை மூட்டிவிடுவதில் நாரதரைப்போல் மகிழ்ச்சி கண்ட அண்ணா பாபரே தயாராகக் காத்திருந்து, நடந்தது அனைத்தையும் ராமதாசியிடம் விவரமாகத் தெரிவித்தார்.

102 ஏற்கெனவே ராமதாசி ஒரு முரட்டுமனிதர். போதாக்குறைக்கு அண்ணா பாபரேவின் நாரதர்வேலையும் சேர்ந்துகொண்டதுõ இந்த அபூர்வமான சூழ்நிலையின் உண்மை நிலையை எவரால் விவரிக்க முடியும்?

103 இயல்பாக அந்த ராமதாசி குதர்க்கமே உருவானவர். ஒருநொடியில் அவருக்கு மாதவராவின்மேல் சந்தேகம் வந்துவிட்டது. ராமதாசி சொன்னார், ''என்னுடைய போதியைப் பிடுங்கிக்கொள்வதற்காகவே பாபாவை மத்தியஸ்தத்திற்கு (நடுநிலையாளராக) இழுத்தாய்.ஃஃ

104 வாங்கிக்கொண்டுவந்த சோனாமுகி மருந்தை மறந்துவிட்டு மாதவராவின்மேல் வசைமாரியை ஆரம்பித்தார். பொங்கிவந்த கோபத்தால் பெருஞ்சத்தம் போட்டு, அர்த்தமற்ற வார்த்தைகளை சரமாரியாகப் பொழிந்தார்.

105 ''வயிற்றுவ­ ஒரு பாசாங்கு என்று எனக்கு நன்கு தெரியும். என்னுடைய போதியின்மீது நீ கண்வைத்துவிட்டதால், நீதான் பாபாவை இவ்வாறு பாசாங்கு செய்யத் தூண்டியிருக்கிறாய். நான் இதைப் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை.--

106 ''நான் ராமதாசியென்று பெயர் பெற்றவன்; தைரியசா­; பயமேயில்லாதவன். என்னுடைய போதியை மரியாதையாகத் திருப்பிக்கொடுத்துவிடு. இல்லையேல், நான் உன்னெதிரிலேயே மண்டையை உடைத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில்

மிதப்பேன்.--
107 ''என்னுடைய போதியின்மீது நீ குறிவைத்துவிட்டாய். ஆகவே, நீதான் இந்தக் கபட நாடகத்தை ஜோடித்து பாபாவின்மேல் பழி வருமாறு செய்து நல்ல பிள்ளைபோல் ஒதுங்கிவிட்டாய்.ஃஃ

108 மாதவராவ் அவரைப் பலவிதமாக சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், ராமதாசியோ விடுவாரில்லை. பிறகு, மாதவராவ் மென்மையாக என்ன சொன்னார் என்று கேளுங்கள்.

109 ''நான் ஏமாற்றுவேலை செய்தேன் என்று அனாவசியமாகப் பழி சுமத்தவேண்டா. என்ன உம்முடைய போதியின் கதை? சுலபமாகக் கிடைக்கக்கூடிய புத்தகந்தானேõ--

110 ''பாபாவையே சந்தேகப்படும் அளவிற்கு உம்முடைய போதியென்ன தங்கமா, வைரமா, வைடூரியமா? வெட்கம், வெட்கம்õஃஃ

111 ராமதாசியின் அட்டகாசத்தைப் பார்த்த பாபா இனிமையாகக் கேட்டார், ''ஓய், ராமதாசிõ இப்பொழுது என்ன தவறு நடந்துவிட்டது? ஏன் காரணமேதுமின்றி உம்மையே நீர் வருத்திக்கொள்கிறீர்?--

112 ''சாமாவும் நம் பையன் அல்லனோõ ஏன் இவ்வளவு சிரமப்பட்டு அவனைத் திட்டுகிறீர்? அர்த்தமில்லாமல் ஏன் சோகப்படுகிறீர்? உம்முடைய கோபத்தைக் காட்டி எல்லாரையும் வேடிக்கை பார்க்கவைக்கிறீர்õ--

113 ''ஓ, நீர் எப்படி இவ்வளவு சண்டைவிரும்பியாக இருக்கமுடியும்? நீர் ஏன் மென்மையாகவும் இனிமையாகவும் பேசக்கூடாது? எந்நேரமும் போதி படித்தும் உம்முடைய இதயம் அசுத்தமாக இருக்கிறதேõ--

114 ''தினமும் நீர் அத்யாத்ம ராமாயணம் வாசிக்கிறீர்; ஸஹஸ்ர நாமாவளி பாராயணம் செய்கிறீர். ஆயினும் உமது முரட்டு சுபாவத்தை விடமாட்டேனென்கிறீரே. இந்த லட்சணத்திற்கு உம்மை நீர் ராமதாசி என்றுவேறு சொல்­க்கொள்கிறீர்õ

115 ''நீர் என்னவிதமான ராமதாசி? நீர் உலகியல் பொருள்களை உதாசீனம் செய்பவராக அல்லீரோ இருக்கவேண்டும்? மாறாக, ஒரு புத்தகத்தை கெட்டியாகப்

பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என்று அடம்பிடிக்கிறீரேõ உம்முடைய நடத்தையைப்பற்றி யார் என்ன சொல்லமுடியும்?--

116 ''ஒரு ராமதாசிக்கு 'என்னுடையதுஃ என்ற எண்ணமே உதவாது. எதையும் எல்லாரையும் சமபாவனையாகப் பார்க்கவேண்டும். நீரோ இந்தப் பையனின்மேல் அபரிமிதமான விஷத்தைக் கொட்டிவிட்டீர். போதியைப் பிடுங்குவதற்கு அவனுடைய கையை விடாமல் பிடித்துக்கொண் டிருக்கிறீர்õ--

117 ''போய், உம்முடைய இடத்தில் அமர்ந்துகொள்ளும். போதிகளை டஜனாக வாங்கினால் ம­வாகவே வாங்கலாம். ஆனால், உலகமெங்கும் தேடினாலும் ஆத்மவிசாரம் செய்யும் ஒரு நல்லமனிதன் கிடைப்பது கடினம்.--

118 ''உம்முடைய போதி எவ்வளவோ மஹத்தானதாக இருக்கலாம்; ஆனால், சாமா எதையும் அறிந்தானில்லை. மேலும், நான்தான் அதைத் தேர்ந்தெடுத்தேன்; நான்தான் அதை அவனுக்குக் கொடுத்தேன்.--

119 ''தவிர, உமக்கு அது மனப்பாடமாகத் தெரியும். ஆகவே நான் அதை சாமாவுக்குக் கொடுக்கவேண்டுமென்று நினைத்தேன். அவன் அதைத் திரும்பத் திரும்ப வாசித்து சகல மங்களங்களையும் அடையவேண்டும் என்பதே என் நோக்கம்.ஃஃ

120 ஆஹாõ என்ன ரஸமான பேச்சுõ இனிமையானதும் புத்துணர்ச்சியை ஊட்டக் கூடியதுமான வார்த்தைகள். ஆத்மானந்தத்திற்கு நிகராகக் குளிர்ச்சியளிக்கும் மிக அபூர்வமான வார்த்தைகள்õ

121 ராமதாசி மனத்தளவில் தம்முடைய குற்றத்தை உணர்ந்துவிட்டார். மாதவராவிடம் கடுகடுவென்று சொன்னார், ''இதோ பார், நான் உனக்குச் சொல்கிறேன்; உன்னிடமிருந்து போதிக்குப் பதிலாகப் 'பஞ்சரத்னி கீதையைஃ எடுத்துக் கொள்ளப் போகிறேன்õஃஃ

122 ராமதாசி இம்மட்டிற்கு சாந்தமடைந்ததைக் கண்ட மாதவராவ் மகிழ்ச்சியடைந்தார். அவர் சொன்னார், ''ஒன்றென்ன, பத்து கீதைப் பிரதிகளை போதிக்குப் பதிலாக அளிக்கிறேன்õஃஃ

123 பின்னர், பஞ்சரத்னி கீதை ஜாமீனாக விளங்க, இச்சண்டை மெதுவாக ஓய்ந்தது. கீதையினுள் இருக்கும் இறைவனை அடையாளம் காணமுடியாதவருக்கு அந்த நூல் எதற்கு?

124 பாபாவின் அருகில் அமர்ந்துகொண்டு அத்யாத்ம ராமாயணத்தைத் திரும்பத் திரும்பப் பாராயணம் செய்யும் ராமதாசி, பாபாவிடமேவா இவ்வாறு சண்டைக்குப் போகவேண்டும்?

125 ஆயினும், நான் எப்படி இதைக்கூடச் சொல்லலாம்? நான் எப்படி யார்மீதும் பழி சொல்லமுடியும்? ஏனெனில், இந்நிகழ்ச்சிகள் நடந்திராவிட்டால் மற்றவர்களுக்கு விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் மஹத்துவம் எவ்வாறு சென்றடையும்?

126 பாபாவின் இன்னலைக் களைந்ததும் (இதயப் படபடப்பு), எனக்கு அநேக நற்பயன்களை அளிப்பதும், இந்தச் சண்டையைக் கிளப்பிவிட்டதுமான விஷ்ணு ஸஹஸ்ர நாமம் உண்மையிலேயே இவ்வுலகத்தியது அன்று; ஸாயீயால் அளிக்கப்பட்ட பரிசே.

127 இவ்வளவு முயற்சி எடுக்கவில்லையென்றால் மாதவராவுக்குப் போதியின்பால் விசுவாசம் ஏற்பட்டிருக்காது; அதைக் கையால் தொட்டிருக்கமாட்டார்; வாயால் சொல்­யு மிருக்கமாட்டார்; மனப்பாடமும் ஆகியிருக்காது.

128 அன்பொழுகும் ஸாயீதான்; ஆனால், அவரை அடைவது கடினம். லீலை புரிவதையே தொழிலாகக் கொண்ட அவர், எப்பொழுது எவ்விதமாக சூத்திரங்களை (பொம்மலாட்ட நூல்களை) இழுப்பார் என்பதை அறிந்துகொள்வது கடினம்.

129 காலப்போக்கில் சாமாவுக்குப் போதியின்மீது நிஷ்டை ஏற்பட்டது. ஹரி ஸீதாராம தீக்ஷிதரும் பேராசிரியர் கணேச கோவிந்த நரகேவும் அவருக்குச் சரியான உச்சரிப்புடன் சுலோகங்களைப் படிக்கக் கற்றுக்கொடுத்தனர். சாமா நன்கு கற்றுக்கொண்டார். காலக்கிரமத்தில் அவருக்கு விஷ்ணு ஸஹஸ்ர நாமம் மனப்பாடம் ஆகிவிட்டது.

130 மாதவராவை விவாதம் செய்யவைத்தது ஸாயீயின் சுத்த போதனைமுறைக்கு ஒரு விவரணம். பரமானந்தம் நிறைந்த நகைச்சுவையே விவாதமேதுமில்லாத சுகத்தை அளித்ததுõ

131 அதுபோலவே, பிரம்ம வித்தையை (இறைவனை அறியும் கல்வி) அப்பியாசம் செய்யும் பக்தர்களிடம் பாபாவுக்கு அதிகப் பிரீதி. தக்க சமயத்தில் இதை எவ்விதமாகத் தெளிவாக நடைமுறையில் செய்துகாட்டினார் என்று பாருங்கள்.

132 ஒருசமயம் ஜோக்(எ)குக்குத் தபால் மார்க்கத்தில் சிர்டீ தபால் நிலையத்திற்கு ஒரு பார்ஸல் வந்தது. ஜோக்(எ) அதைப் பெற்றுக்கொள்வதற்காக உடனே தபால் நிலையத்திற்குச் சென்றார்.

133 பிரித்துப் பார்த்தபோது அது பாலகங்காதர திலகர் எழுதிய 'கீதாரஹஸ்யம்ஃ (பகவத் கீதைக்குத் திலகர் எழுதிய விரிவுரை) புத்தகமாக இருந்தது. பார்ஸலைக் கையில் இடுக்கிக்கொண்டவாறு அவர் உடனே தரிசனத்திற்காக மசூதிக்கு வந்தார்.

134 பாபாவின் பாதங்களில் நமஸ்காரம் செய்தபோது, பார்ஸல் பாபாவின் பாதங்களில் விழுந்தது. பாபா அப்பொழுது கேட்டார், ''என்ன பாபுஸாஹேப்õ இது என்ன?ஃஃ

135 பார்ஸல் பாபாவின் எதிரில் மறுபடியும் பிரிக்கப்பட்டது. ஜோக், உள்ளே என்ன இருந்ததென்பதையும் சொன்னார். பிரிக்கப்பட்ட பார்ஸல், புத்தகத்தோடு பாபாவிடம் சேர்ப்பிக்கப்பட்டது. பாபா அதைப் பார்த்தார்.

136 பாபா புத்தகத்தைக் கையிலெடுத்து பக்கங்களை மேலோட்டமாகப் புரட்டினார். பாக்கெட்டி­ருந்து ஒரு ரூபாயை எடுத்து அதன்மேல் மகிழ்ச்சியுடன் வைத்தார்.

137 புத்தகத்தை ரூபாயுடன் சேர்த்து, ''இதை முத­­ருந்து கடைசிவரை படியும்; மங்களமடைவீர்ஃஃ என்று ஆசி கூறிக்கொண்டே ஜோக்கின் மேல்துண்டில் வைத்தார்.

138 பாபா இவ்வாறு அநுக்கிரஹம் செய்த கதைகள் எண்ணற்றவை. இப் புத்தகம் மிகப் பெரியதாகிவிடும் என்னும் காரணத்திற்காகவே சில கதைகளை மட்டும் சுருக்கமாகச் சொல்­யிருக்கிறேன்.

139 ஒரு சமயம் தாதாஸாஹேப் காபர்டே சிர்டீக்குக் குடும்பத்துடன் வந்தார். பாபாவின் அன்பையும் ஆதரவையும் அனுபவித்துக்கொண்டு சிலகாலம் அவர் சிர்டீயில் வாசம் செய்யும்படி நேர்ந்தது.

140 காபர்டே சாமானியர் அல்லர்; அவர் ஒரு பெருங்குடிமகன்; பேரறிஞரும் ஆவார். ஆனால், ஸாயீயின் சன்னிதியில் பயபக்தியுடன் கைகூப்பித் தலைவணங்கி நிற்பார்.

141 ஆங்கிலத்திலும் சிறந்த பாண்டித்தியம் படைத்த காபர்டே, சட்டசபையில், கேட்பவர்கள் மனத்தில் தாக்கத்தையும் சமூகத்தில் நல்விளைவுகளையும் ஏற்படுத்தும் சொற்பொழிவாளர் எனக் கீர்த்தி பெற்றவர். ஆயினும் ஸாயீயின் சன்னிதியில் அவர் பேச்சற்று மௌனமாக இருப்பார்.

142 பாபாவுக்கு எத்தனையோ பக்தர்கள் இருந்தனர். ஆனாலும், காபர்டே, புட்டி, நூல்கர் இம்மூவரைத் தவிர மற்றவர்கள் எவரும் பாபாவின் சன்னிதியில் மௌனத்தைக் கடைப்பிடித்தார்களல்லர்.

143 மற்றவர்கள் அனைவரும் பாபாவிடம் உரையாடினர். சிலர் பயமோ பக்தியோ இன்றி வாதாடவும் செய்தனர். இவர்கள் மூவர் மாத்திரம் சன்னிதியில் மௌனவிரதமாக இருந்தனர்.

144 பேச்சில் மாத்திரமின்றி நடத்தையிலும் இவர்கள் மூவரும் செம்மையாக விளங்கினர். பாபாவின் சன்னிதியில் எப்பொழுதும் தலைதாழ்ந்தவாறே இருப்பர். பாபாவின் திருவாய்மொழியை இவர்கள் செவிமடுக்கும்போது காட்டிய அடக்கமும் பணிவும் பயபக்தியும் விவரணத்திற்கு அப்பாற்பட்டவை.

145 வித்தியாரண்யர் ஸமஸ்கிருதத்தில் இயற்றிய பஞ்சதசியை (அத்வைத சித்தாந்த நூல்) காபர்டேவிடமிருந்து பாடம் கேட்பது ஒரு பெருமையாகவும் கௌரவமாகவும் கருதப்பட்டது. அத்தகைய புலமை வாய்ந்த காபர்டே, மசூதிக்கு வந்துவிட்டால் வாயைத் திறக்கமாட்டார்õ

146 சப்த பிரம்மத்தின் (வேதத்தின்) ஒளி, சுத்த பிரம்மத்தின் பேரொளியின் முன்னிலையில் மங்கிவிடும். பர பிரம்ம மூர்த்தியான ஸாயீயின் எதிரில் வித்தைகள் அனைத்தும் தலைவணங்கி நிற்கும்.

147 சிர்டீயில் காபர்டே நான்கு மாதங்களும் அவர் மனைவி ஏழு மாதங்களும் வாசம் செய்தனர். ஒவ்வொரு நாளையும் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் கழித்தனர்.

148 காபர்டேவின் மனைவி ஸாயீபாதங்களின்மீது அசைக்கமுடியாத நம்பிக்கையும் அத்தியந்த பிரேமையும் உடையவராக இருந்தார். தினமும் மசூதிக்குத் தம்முடைய கைகளாலேயே ஏந்தியவாறு நைவேத்தியம் கொண்டுவருவார்.

149 இப்பெண்மணி, தம்முடைய நைவேத்தியத்தை பாபா ஏற்றுக்கொள்ளும்வரை உணவைக் கையால் தொடமாட்டார். ஸாயீ மஹராஜ் உணவேற்றுக்கொண்ட பிறகே, தாம் உண்ணச்செல்வார்.

150 இவ்வாறிருக்கையில் ஒருநாள் நல்லகாலம் பிறந்தது. பக்தர்களின்பால் தாய்போல் அன்புகாட்டும் ஸாயீ, இப் பெண்மணியின் சிரத்தையையும் பக்தியையும் கண்டு மகிழ்ச்சியடைந்து அவருக்கு ஒளிமயமான ஆன்மீக மார்க்கம் காட்டினார்.

151 ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வழி; ஆனால், பாபாவின் வழியோ அலாதியானது. கே­க்கும் சிரிப்பிற்குமிடையே செய்யப்பட்டாலும், அநுக்கிரஹம் பக்தரின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும்.

152 ஒருமுறை காபர்டேவின் மனைவி ஒரு தட்டில் பலவகையான சுவைமிகுந்த உணவுப் பொருள்களையும் இனிப்புகளையும் பாபாவுக்கு நைவேத்தியமாகக் கொண்டுவந்தார். சாதம், பருப்பு, பூரி, ரவாகேசரி, ஸாஞ்ஜா, பாயஸம், அப்பளம், பூசணி வடகம், கோசுமல்­ ஆகிய பண்டங்கள் அந்தத் தட்டில் இருந்தன.

153 அந்தத் தட்டு வந்தவுடனே பாபா தம் கப்னியின் கைகளை மடித்துவிட்டுக்கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் இருக்கையி­ருந்து எழுந்துவிட்டார்.

154 சாப்பிடும் இடத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டார். அந்தத் தட்டைத் தம்மெதிரில் எடுத்து வைத்துக்கொண்டார். தட்டி­ருந்த உணவைச் சுவைக்கும் ஆர்வத்தில் மூடியை எடுத்து அப்பால் வைத்தார்.

155 சுவை மிகுந்ததாக எத்தனையோ நைவேத்தியங்கள் தினமும் வரும். அவையெல்லாம் பாபாவின் கவனிப்பின்றி அங்கேயே நெடுநேரம் கிடக்கும். இந்தத் தட்டின்மீது மாத்திரம் ஏன் இவ்வளவு ஆர்வம்?

156 இது சாதாரணர்களின் நடத்தையன்றோõ ஒரு ஞானி ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறார்? மாதவராவ் சட்டென்று ஸமர்த்த ஸாயீயைக் கேட்டார், ''பாபா, ஏன் இவ்வாறு பாரபட்சம் காட்டுகிறீர்?--

157 ''மற்றவர்களுடைய நைவேத்தியத்தைத் தள்ளிவைத்துவிடுகிறீர். சிலசமயங்களில் வெள்ளித்தட்டுகளையும் விசிறியடித்துவிடுகிறீர். இந்தப் பெண்மணியின் (காபர்டேவின் மனைவியின்) நைவேத்தியம் வந்தவுடனே உற்சாகமாக எழுந்து உணவுகொள்ள ஆரம்பிக்கிறீர். உண்மையில் இது ஒரு விநோதம்õ--

158 ''ஓ தேவாõ இந்தப் பெண்மணியின் உணவுமட்டும் எப்படி அவ்வளவு சுவை மிகுந்ததாக அமைகிறது என்பது எங்களுக்கெல்லாம் விளங்காத மர்மமாக இருக்கிறது. இதென்ன நீர் செய்யும் தில்லுமுல்லு வேலை? ஏன் இவ்வாறு விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்கிறீர்?ஃஃ

159 பாபா சொன்னார், ''ஓ சாமாõ இந்த உணவு எவ்வளவு அபூர்வமானது என்பதை நான் எவ்வாறு விளக்குவேன்? முற்பிறவியில் இப் பெண்மணி ஒரு வியாபாரியின் பசுவாக இருந்தாள். நல்ல ஊட்டமளிக்கப்பட்டு நிறைய பால் கொடுத்தாள்.--

160 ''பிறகு அவள் எங்கோ காணாமற்போய் ஒரு விவசாயியின் குடும்பத்தில் பிறந்தாள். அடுத்த ஜன்மத்தில் க்ஷத்திரிய வம்சத்தில் பிறந்து ஒரு வைசியனுக்கு மணம் செய்விக்கப்பட்டாள்.--

161 ''இந்த ஜன்மத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்திருக்கிறாள். பல காலத்திற்குப் பிறகு அவளை நான் கண்டேன். மிகுந்த பிரேமையுடன் அளிக்கப்பட்ட இந்த உணவில் இரண்டு கவளமாவது என்னை நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடனும் சாப்பிட விடுõஃஃ

162 இவ்வாறு பதிலளித்தபின், பாபா தாம் திருப்தியடையும்வரை உணவுண்டார். கைகளையும் வாயையும் அலம்பிக்கொண்டபின், வயிறு நிரம்பியதன் அறிகுறியாக ஏப்பம் விட்டார். பிறகு அவர் தம்முடைய இருக்கைக்குச் சென்று அமர்ந்துகொண்டார்.

163 காபர்டேவின் மனைவி பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அவருடைய பாதங்களைப் பிடித்துவிட ஆரம்பித்தாள். இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அவளிடம் பரிவுடன் இனிமையாகப் பேசினார் பாபா.

164 தம்முடைய பாதங்களைப் பிடித்துவிட்டுக்கொண் டிருந்த அவளுடைய கைகளைத் தம் கைகளால் பிடித்துவிட்டார் (பாபா). இறைவனும் பக்தையும் ஒருவருக்கொருவர் அன்புடன் செய்துகொண்டிருந்த சேவையைக் கண்ட சாமா கே­ செய்ய ஆரம்பித்தார்.

165 ''ஆஹா, ஆஹா, பாபாõ அற்புதம், அற்புதம்õ கண்கொள்ளாக் காட்சிõ இந்தப் பரஸ்பர பா(ஆஏஅ)வத்தைக் கண்டு நாங்கள் திகைப்படைகிறோம்õஃஃ

166 அவ்வம்மையாருடைய பக்திபூர்வமான சேவையால் மனம் குளிர்ந்த பாபா அவரிடம் மெதுவாகவும் மென்மையாகவும் கூறினார், ''ராஜாராம், ராஜாராம் என்று எந்நேரமும் சொல்­க்கொண்டேயிருங்கள். --

167 ''தாயேõ இவ்விதமாகச் சொல்­க்கொண்டேயிருந்தால், உம்முடைய வாழ்க்கை நிறைவு பெறும்; உம்முடைய மனம் சாந்தமடையும்; அபரிமிதமான நன்மைகள் விளையும்.ஃஃ

168 எவ்வளவு அற்புதமான வார்த்தைகள் இவைõ இந்த உபதேசத்தின் மூலமாக பக்தைக்கு தெய்வீகச் சக்தியைப் பாய்ச்சியதுபோல இவ்வார்த்தைகள் அம்மையாரின் இதயத்தினுள்ளே புகுந்தன.

169 அன்பும் அடக்கமும் உள்ள பக்தர்களைப் பா­த்து அவர்களுடைய மனோரதங்களனைத்தையும் பூர்த்திசெய்து ஆன்மீக முன்னேற்றத்திற்கும் அருள் பொழியும் கிருபாசமுத்திரம் அல்லரோ ஸ்ரீஸமர்த்த ஸாயீநாதர்õ

170 நான் மிகப்பணிவாகவும் பிரீதியுடனும் ஒரு வேண்டுகோளை வாசகர்கள்முன் அவர்களுடைய நன்மை கருதியே வைக்க விரும்புகிறேன்.

171 வெல்லக்கட்டியின் இனிமையை விரும்பும் எறும்பு, தன் மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது. ஸாயீ பாதங்களில் உங்களுடைய சரணாகதியும் அதைப் போன்றே இருக்கவேண்டும். கிருபை செய்து ஸாயீ உங்களைப் பாதுகாப்பார்.

172 குருவும் பக்தனும் வேறல்லர்; வெவ்வேறாகத் தெரிந்தாலும் இருவரும் ஒருவரே. பலத்தால் அவர்களைப் பிரிக்க முயல்பவன் கடைசியில் கர்வபங்கமடைவான்.

173 ஒருவரில்லாமல் மற்றொருவரைப் பார்க்க நம்மால் முடிந்தால், குரு குறையுள்ளவர்; சிஷ்யனும் குறையுள்ளவன். உத்தமமான குருவால் பயிற்சியளிக்கப்பட்ட சிஷ்யன், குரு-சிஷ்ய வேற்றுமையைப்பற்றி நினைக்கவேமாட்டான்.

174 குரு ஒரு கிராமத்திலும் சிஷ்யன் வேறொரு கிராமத்திலும் வாசம் செய்வதால் அவர்களிருவரும் தனித்தனி என்று நினைப்பவன் உண்மையை அறியாதவன்.

175 அவர்கள் இருவேறு மனிதர்களே இல்லையென்றால், தனித்தனியாக எப்படி இருக்க முடியும்? ஒருவரின்றி மற்றவர் இருக்கமுடியாது. அவர்களுடைய ஒருமை இவ்வாறானதே.

176 குருவுக்கும் பக்தனுக்கும் இருமை ஏதும் இல்லை. அவர்கள் இருவரும் எப்பொழுதும் இணைந்தேயிருக்கிறார்கள் (ஆன்மீக மட்டத்தில்). பக்தன் குருவின் பாதங்களில் தலைசாய்ப்பது உடலளவில் செய்யப்படும் உபசாரமே.

177 பக்தன், தான் குருவோடு ஒன்றியவன் என்ற பாவனையிலேயே குருவை வழிபடுகிறான். குருவும் பக்தனைத் தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறான பரஸ்பர சமரசபாவனை இல்லாவிட்டால் எல்லாச் செயல்பாடுகளும் கேவலம் வெளிவேஷமேõ

178 வாழ்க்கைக்கு வேண்டிய உணவும் உடையும் எவ்வாறு கிடைக்கும் என்று ஒருகணமும் சிந்திக்க வேண்டா. ஏனெனில், அவை முற்பிறவியில் செய்த கர்மங்களுக்கேற்றவாறு பிரயத்தனம் செய்யாமலேயே கிடைக்கும்.

179 இவற்றை சம்பாதிப்பதற்குப் பெருமுயற்சி எடுத்தீர்களானால் அத்தனையும் வீண். அதற்குப் பதிலாக ஆன்மீக வளர்ச்சியில் இரவுபகலாகக் கவனம் செலுத்துங்கள்.

180 ''எழுமின்õ விழிமின்õ ஏன் குறட்டை விட்டுக்கொண்டு நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறீர்கள்?ஃஃ என்று வேதமாதா உச்சஸ்வரத்தில் கர்ஜிக்கிறாள். பிரேமையுடன் பக்தனைத் துயிலெழுப்ப முயல்கிறாள்.

181 எல்லா அனர்த்தங்களுக்கும் மூலவிதையாகிய அஞ்ஞான உறக்கத்தில் எவரெல்லாம் புரண்டு புரண்டு படுக்கிறார்களோ, அவரெல்லாம் சீக்கிரமாகவே துயில் விடுத்து, குரு அருளும் அமிருதத்தைப் பருகுவார்களாகõ

182 அதைப் பெறுவதற்கு மிக விநயத்துடன் குருவின் பாதங்களில் சரணடையுங்கள். எது விதிக்கப்பட்டது, எது விதிக்கப்படாதது என்பதை அவரே அறிவார். நாம் ஒன்றுமறியாக் குழந்தைகள்.

183 அஹங்காரம் கொண்ட ஜீவன் சிறுமதி படைத்தது; அஹங்காரமே இல்லாத சிவம் அனைத்துமறிந்தது. இவ்விரண்டும் ஒன்றே என்று அறிந்துகொள்ள குருவே வழி.

184 அஞ்ஞானத்தில் அமிழ்ந்திருக்கும் ஜீவனையும் மாயையைக் கடந்த சிவனையும் பேதமற இணைக்கச் செய்வதற்குண்டான சக்தி ஸமர்த்த குருராயரிடமே உண்டு.

185 சங்கற்பங்களாலும் (திடசிந்தனை) விகற்பங்களாலும் (கோணல் சிந்தனைகளும் குழப்பங்களும்) நிறைந்து வழியும் மனத்தை ஸாயீ பாதங்களில் ஸமர்ப்பித்துவிடுங்கள். அதன் பிறகு, 'மனத்தில் உதிக்கும் எண்ணங்களைச் செயல்படுத்துவது நான்தான்ஃ என்னும் சிந்தனை ஒழிந்துவிடும். (ஸாயீயே செயல்புரிபவர் ஆகிவிடுவார்).

186 அதுபோலவே, எல்லாச் செயல்புரியும் சக்திகளையும் ஸாயீ பாதங்களில் ஸமர்ப்பித்துவிடுங்கள். பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள்.

187 ஸாயீ சர்வசக்தியும் நிறைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள். பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்; எல்லா ஸித்திகளையும் பெறுவீர்கள்.

188 மாறாக, மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிக்கொண்டிருந்து, 'நான்தான் செய்கிறேன்ஃ என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.

189 மாயையும் மோஹமும் சூழ்ந்த இருட்டில், ஹேமாட் பந்த் இங்குமங்கும் சோம்பித் திரிந்துகொண் டிருந்தபோது ஹரியின் கிருபையும் குருவின் கிருபையும் அருள் பாய்ச்சின.

190 இதுவும் கேவலம் அதிருஷ்டவசமாகக் கிடைத்தது; அப்பியாசமோ (பயிற்சியோ) பிரயாசையோ (முயற்சியோ) ஏதும் செய்தறியேன் நான். ஹரியும் குருவும் அவர்களுடைய திட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே எனக்கு கௌரவம் அளித்திருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

191 தம் பக்தர்களை உத்தாரணம் (தீங்கி­ருந்து மீட்கை) செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்துகொண்ட பாபா என்னுடைய கையை பலமாகப் பிடித்துக்கொண்டு, தம்முடைய சரித்திரமாகிய இந்த கிரந்தத்தை (நூலை) விஸ்தாரமாக எழுதிக்கொண் டிருக்கிறார்.

192 ஆகவே, வேறெதிலும் நாட்டமில்லாத பிரேமையெனும் விசித்திரமான நிறங்களுடைய பூக்களை இடைவிடாத அனுஸந்தானம் (வழிபாடு) என்னும் நாரால் தொடுத்து அழகான மாலையாக்கி, பயபக்தியுடன் ஸாயீக்கு ஸமர்ப்பணம் செய்வோமாக.

193 தன்னிலேயே மூழ்கி ஆன்மீக சுயராஜ்யம் என்னும் அரியணையில் ஏறி அமர்வோமாக. அஹங்காரம் அணுவளவுமின்றி உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க ஆத்மானந்தத்தை அனுபவிப்போமாக.

194 ஸாயீயின் சரித்திரம் ஆழங்காணமுடியாத சமுத்திரம். சொல்லப்போகும் கதை முன்னதைவிட விசித்திரமானது. உங்களுடைய கவனத்தைச் சிறிது நேரம் அளித்துச் செவிகளையும் செவிச்செல்வத்தையும் புனிதமாக்கிக் கொள்ளுங்கள்.

195 இதி­ருந்து மூன்று அத்தியாயங்கள் ஒரு தொடராக மலரும். பாபா தம்முடைய இடத்தி­ருந்தபடியே எவ்வாறு அபூர்வமான தெய்வீகக் காட்சிகளைக் காட்டி அற்புதம் விளைவித்தார் என்பதுபற்றி இம் மூன்றிலும் அறிவீர்கள்.

196 முதல் அத்தியாயம் லாலா லக்மீசந்தைப் பற்றியது. அவர் எவ்வாறு பிரேமையெனும் நூலால் கட்டியிழுக்கப்பட்டுத் தம்முடைய நிஜமான அடைக்கலத்தை அடைந்தார் என்பதே விஷயம்.

197 பர்ஹாண்பூர் அம்மையாரின் கிச்சடியின்மேல் ஆசைகொண்ட பாபா, அவருக்கு தரிசனம் செய்யும் உற்சாகத்தை அளித்து பக்தர்கள்மீது தமக்கிருந்த பிரேமையை ஓர் அற்புதத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.

198 மேகா என்றழைக்கப்பட்ட மற்றொரு பக்தரின் கனவில் தோன்றி, திரிசூலம் ஒன்று வரையச் சொன்னார். திரிசூலத்தைத் தொடர்ந்து எதிர்பாராமலேயே சிவ­ங்கம் ஒன்றும் கிடைக்கும்படி மேகாவுக்கு அருள் செய்தார்.

199 இவ்விதமாக அநேகக் காதைகள் இங்கிருந்து தொடரும். பக்திபூர்வமாகச் செவிமடுப்பவர்கள் கேள்வியின் பயனைத் திருப்தியாக அடைவார்கள்.

200 உப்பாலான பொம்மையைக் கட­ல் முழுக்கினால் கடலோடு ஒன்றாகிவிடுகிறது. அவ்வாறே ஹேமாட் வேறெதிலும் நாட்டமின்றி ஸாயீயிடம் சரணடைகிறேன்.

அவருடன் ஐக்கியமாகி 'ஸோஹம்ஃ (அவனே நான், நானே அவன்) தத்துவத்தில் பின்னமின்றி முழுமையாக மகிழ்ச்சியுறுகிறேன்.

201 மேலும், இரவுபகலாக ஸாயீயை தியானம் செய்யவேண்டுமென்றும் ஸாயீயைத் தவிர வேறெந்த எண்ணமும் மனத்தில் நுழைந்துவிடாதவாறு விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் ஹேமாட் பிரேமையுடனும் விநயத்துடனும் வேண்டுகிறேன்.

202 இறந்த காலத்தில் நடந்தது மனத்தி­ருந்து அழிக்கப்படட்டும்; எதிர்காலத்தின் எல்லை தள்ளிவைக்கப்படட்டும். இவை இரண்டுக்குமிடையே இருக்கும் நிகழ்காலம் குருவின் பாதங்களில் நிரந்தரமாக லயிக்கட்டும்õ

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'தீக்ஷை அநுக்கிரஹ தானம்ஃ என்னும் இருபத்தேழாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.


Do you want to ask questions and share ideas about your kid's education, parenting and more? Join Tamilcube Kids, our exclusive premium Facebook group now, and start meeting other Singapore Indian parents with similar interests.

Share:

Download Free Tamilcube School App:
Home Tamil Tuition Tamil Testpapers Tamil eLearning Calendar Books Astrology
Dictionaries : Tamil Hindi Malayalam Telugu Marathi Sanskrit Kannada More...
Baby Names : Tamil Hindi Sanskrit Telugu Kannada Muslim Malayalam Bengali Marathi Gujarati Marathi
GK : GK questions TNPSC More...
More...