Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 25

25. பக்தர்களுக்கு க்ஷேமலாபம் அருளிய மாண்பு




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 கிருபா ஸமுத்திரமாகிய ஸாயீ மஹராஜ் கண்ணால் காணக்கூடிய, இறைவனின் அவதாரமேயாவார். பூரணமான பிரம்மமும் மஹா யோகீச்வரருமான அவருக்கு ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.

2 ஜயஜய ஞானிகளின் மணிமகுடமேõ மங்களங்களுக்கு எல்லாம் அஸ்திவாரமானவரேõ ஆத்மாராமரேõ ஸமர்த்தஸாயீயேõ பக்தர்கள் இளைப்பாறும் சோலையேõ பூர்ணகாமரேõ (எல்லா விருப்பங்களும் நிறைவேறப் பெற்றவர்) உமக்கு நமஸ்காரம்.

3 பக்தர்களுக்கு போதனையளிப்பதற்காகக் கே­யும் நகைச்சுவையும் ஆர்வத்துடன் செய்யப்பட்டதுபற்றிக் கடந்த அத்தியாயம் விவரித்தது. பக்தர்களின் மீதுள்ள பிரியத்தால், ஸாயீ எப்பொழுதும் அவர்களுக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறார்.

4 ஸாயீ பரமதயாள மூர்த்தியாவார். தேவை அனன்னிய (வேறெதிலும் நாட்டமில்லாத) பக்தி ஒன்றே. பக்தர் சிரத்தையும் அன்பும் உடையவராக இருந்துவிட்டால், விரும்பியதை அடையவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.

5 ஸ்ரீகிருஷ்ணர் உத்தவரிடம் கூறியிருக்கிறார், ''ஸத்குரு என்னுடைய உருவமே என்று அறிவீராகஃஃ. ஸத்குருவிடம் காட்டும் பக்தியும் பிரீதியும் அக்கூற்றிற்கு ஏற்பவே இருக்கவேண்டும். அதுவே அனன்னிய பக்தி.

6 ஸ்ரீஸாயீயின் சரித்திரத்தை எழுதவேண்டுமென்ற மனோரதம் எனக்கு உள்ளிருந்து எழுந்தது. அவருடைய அற்புதமான லீலைகளை என்னை எழுதவைத்து என்னுடைய ஆவலை ஸாயீ நிறைவேற்றிவைக்கிறார். கேட்பதற்கு அதியற்புதமாக இருக்கின்றனவல்லவா ஸாயீயின் லீலைகள்?

7 ஆழ்ந்த சாஸ்திர ஞானத்தால் விளையும் புலமையும் மேலாண்மையும் எனக்கு இல்லாம­ருந்த போதிலும், பாமரனாகிய எனக்கு உள்ளுணர்வூட்டி இக்காவியத்தை என் கைப்பட எழுதவைக்கிறார். உண்மையான பக்தர்களுக்கு விழிப்பு ஏற்படுத்துவதே அவருடைய உள்நோக்கமாகும்.

8 ''குறிப்புகள் எடுத்துக்கொள்ஃஃ என்று அல்பபிரக்ஞனாகிய (சிறுமதியோனாகிய) நான் ஆணையிடப்பட்டேன். அப்பொழுதே என்னுடைய புத்தியில் தைரியமும் ஞானமும் புகுந்துகொண்டன.

9 குணகம்பீரரான ஸாயீ, தம் பக்தர்களை உத்தாரணம் (தீங்கி­ருந்து மீட்கை) செய்யவேண்டிய காரணம்பற்றி, அவருடைய குறிப்புகளை அவரே எழுதுவார் என்று நான் உடனே தைரியம் கொண்டேன்.

10 இல்லையெனில், தேவாமிருதம் போன்று இனிக்கும் இந்தச் சொற்செறிவும் பொருட்செறிவும் மிகுந்த காவியத்தை எழுதி அவருடைய பாதங்களில் பாயசப் பிரசாதமாக அளிக்கும் ஸாஹஸச் செய­ல் (வீரதீரச்செயல்) நான் புகுந்திருப்பேனா?

11 இந்த ஸ்ரீ ஸாயீ சரித்திரம், ஸாயீ பக்தர்களுக்கு அமிருதம் போன்று இனிக்கும் 'பாண்போயீஃ (யாத்திரிகர்களின் தேவைக்காக நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் தண்ணீர்ப்பந்தல்). உலக வாழ்க்கை எனும் கடுமையான வெயி­ல் பொசுங்குபவர்கள் இந்தத் தண்ணீர்ப்பந்த­­ருந்து தாகம் தீரும்வரை, மனம் நிறையும்வரை, தண்ணீர் அருந்துங்கள். ஸாயீயின் கிருபை கைகூடும்.

12 இது வெறும் வாழ்க்கைச் சரித்திரம் அன்று; சந்திரகாந்தக் கல்1 ஆகும். இதி­ருந்து ஸாயீயின் கதைகள் என்னும் சந்திரனுடைய அமிருதம் சதா பொழிந்துகொண்டே யிருக்கிறது. தாகம் கொண்ட சகோரப் பட்சிகளை ஒத்த பக்தர்கள், மனம் நிறையும் வரை அருந்தித் திருப்தியடைவீர்களாகõ

13 அன்பார்ந்த நேயர்களேõ இப்பொழுது ஸாயீயின் புனிதமான கதைகளை மனமொன்றிச் சுணக்கமேதுமின்றிக் கேளுங்கள். க­யுகத்தின் மலங்களை எரித்துவிடும் சக்திவாய்ந்தவை இக் கதைகள்.

14 ஸாயீயிடம் அனன்னிய நிட்டை ஏற்பட்டுவிட்ட பக்தனின் விருப்பங்களை எல்லாம் ஸாயீ நிறைவேற்றிவைக்கிறார்; விரும்பாதவற்றையும் கஷ்டங்களையும் நிவாரணம் செய்துவிடுகிறார்.

15 இந்தப் பின்னணியில் ஒரு காதை; பக்தர்களிடம் ஸாயீ தாயன்பு செலுத்தியதை வெளிக்காட்டும்; பயபக்தியுடன் கேட்டால் மனம் மகிழ்ச்சியடையும்.

16 ஆகவே, இந்த அற்புதமான காதையை ஈடுபாட்டுடன் கேளுங்கள். நம் தாயும் குருவுமான ஸாயீ ஒரு கருணைக்கடல் என்னும் உங்களுடைய அனுபவம் மேலும் உறுதிப்படும்.

17 கதை சிறியதாயினும் அர்த்த போதனையில் மிகச் சிறந்தது. நேரம் செலவழித்து இதைக் கேளுங்கள். உங்களுடைய சங்கடங்கள் அனைத்தும் பறந்துவிடும்.

18 தாமு அண்ணா2 அஹமத்நகரில் சுகமாய் வாழ்ந்துவந்த ஒரு பக்தர்; வளையல் செய்யும் சமூகத்தைச் சேர்ந்தவர்; செல்வம் மிகுந்தவர்; ஸாயீயிடம் அபரிமிதமான அன்பு செலுத்தியவர்.

19 இந்தப் பரம பக்தருடைய கதையைக் கேட்டால் ஆனந்தம் அடைவீர்கள். பக்தர்களை ரட்சிப்பதில் ஸாயீ எவ்வளவு முனைப்புடன் செயல்பட்டார் என்பதையும் நிதர்சனமாக (தெளிவாக) அறியலாம்.

20 ஸ்ரீராமநவமித் திருவிழாவின்போது சிர்டீயில் இரண்டு அலங்காரமான, பெரிய, புதிய கொடிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதை சிர்டீவாழ் மக்கள் அனைவரும் அறிவர்.

21 இரண்டு கொடிகளில் ஒன்று நானாஸாஹேப் நிமோண்கருடைய உபயம்; இரண்டாவது தாமு அண்ணாவுடையது. பக்தியாலும் பிரேமையாலும் விளைந்த இந்த நியமம் தடையில்லாமல் வருடாவருடம் நடைபெற்று வருகிறது.

22 தாமு அண்ணாவுக்கு இரண்டு மனைவிகள் இருந்தும் மக்கட்பேறு இல்லாம­ருந்தது. ஸாயீயினுடைய ஆசீர்வாதத்தால் அவருக்கு ஒரு புத்திரரத்தினம் பிறந்தான்õ

23 நன்றி தெரிவிக்கும் வகையில், ஸ்ரீராமநவமி விழாவன்று கோலாகலத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஒரு கொடியை அளிப்பதென்று தாமு அண்ணா உறுதிபூண்டார். அந்த வருடத்தி­ருந்தே கொடி எடுத்துக்கொண்டு செல்லும் வருடாந்திரத் திருவிழாவும் ஆரம்பித்தது.

24 ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் கோண்ட்யா என்னும் தச்சுவேலை செய்பவரின் வீட்டில் செய்யப்பட்டன. அங்கிருந்து, கொடிகள் ஏந்திய ஊர்வலம் மேளதாளத்துடன் வாத்திய முழக்கங்களுடன் கிளம்பும்.

25 இரு நீண்ட கொடிகளும் மசூதியின் இரண்டு கோடிகளில் பதாகைகளாகக் (விருதுக் கொடிகளாகக்) கட்டப்படும். இவ்விதமாகவே ஒவ்வொரு வருடமும் திருவிழா கொண்டாடப்பட்டது.

26 அவ்வாறே, அங்கே குழுமிய பக்கீர்களுக்கும் திருப்தியாக உணவளிக்கப்பட்டது. இவ்விதமாக சேட் (தாமு அண்ணா) ஸ்ரீராமநவமி உற்சவத்தில் பங்கேற்றார்.

27 இந்த தாமு அண்ணாவின் கதையைத்தான் நான் கேட்பவர்களுக்கு நிவேதனம் செய்கின்றேன். கவனத்துடன் கேட்டால் ஸமர்த்த ஸாயீயின் சக்தியை அறிவீர்கள்.

28 பம்பாயி­ருந்த நண்பரொருவர் தாமு அண்ணாவிற்குப் பின்வருமாறு கடிதம் எழுதியிருந்தார். ''நாம் இருவரும் ஒரு கூட்டுவியாபாரம் செய்வோம். நிகர லாபமாக இரண்டு லட்ச ரூபாய் கிடைக்கும்.--

29 ''நீங்களும் நானும் சம பங்குதாரர்களாக ஆவோம். ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் பங்கு கிடைக்கும். சீக்கிரமாக முடிவெடுத்து எனக்கு பதில் அனுப்புங்கள். இந்த பேரம் சிக்க­ல்லாதது; பயத்திற்கு இடமில்லை.--

30 ''இம்முறை பருத்தி வாங்கி விற்கலாம். சீக்கிரமாகவே விலை ஏறும். நல்ல பேரம் வரும்போது செயல்படாதவர்கள் பிறகு அதை நினைத்து வருந்துவார்கள்.--

31 ''இம்மாதிரியான ஒரு நல்ல வாய்ப்பை நாம் நழுவவிடக்கூடாதுõஃஃ அண்ணாவின் மனம் பெருங்குழப்பமடைந்தது. அவரால் இது விஷயமாக முடிவெடுக்க முடியவில்லைõ

32 ''இந்த வியாபாரத்தில் நான் நுழையலாமா? கூடாதா?ஃஃ அண்ணா வியப்படைந்தார், ''இறைவாõ என்ன நடக்கும்? நான் என்ன செய்யட்டும்?ஃஃ அவர் குழம்பிப்போனார்.

33 ஆயினும் தாமு அண்ணா ஒரு குருபுத்திரர் அல்லரோõ ஆகவே, அவர் பாபாவுக்குப் பின்வருமாறு ஒரு கடிதம் எழுதினார். ''பாபா, எங்களுக்கென்று சுதந்திரமான மனம் ஒன்று இல்லை. தங்களுடைய குடையின் நிழ­லேயே நாங்கள் வாழ்கிறோம்.--

34 ''இந்த வியாபாரமென்னவோ பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருக்கிறது; நுழைந்துவிடலாம் என்றும் தோன்றுகிறது. ஆயினும் இந்த பேரத்தில் லாபம் கிட்டுமா, நஷ்டப்படுவேனா என்று தயை கூர்ந்து சொல்லுங்கள்.ஃஃ

35 கடிதம் மாதவராவுக்கு விலாசமிடப்பட்டு, பாபாவுக்குப் படித்துக்காட்டும்படியான கோரிக்கையுடன் அனுப்பப்பட்டது. வியாபாரத் திட்டம் சரியானதென்று தோன்றினாலும், பாபாவின் ஆணை என்னவென்றறிந்து தெரிவிக்கும்படியாகவும் மாதவராவுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

36 அடுத்த நாள் பிற்பகல் 3/3.30 மணியளவிற்கு மாதவராவுக்குக் கடிதம் வந்துசேர்ந்தது. கடிதம் மசூதிக்குக் கொண்டுவரப்பட்டு பாபாவின் பாதங்களில் வைக்கப்பட்டது.

37 ''என்ன சாமாõ என்ன விசேஷம்? காலடியில் ஏதோ காகிதம் வைக்கிறாயே? என்ன சமாசாரம்?ஃஃ (பாபா) ''பாபா, அஹமத்நகரத் தாமு சேட் -- உங்களை ஏதோ கேட்க விரும்புகிறார்.ஃஃ (சாமா)

38 ''என்ன இது? அவர் என்ன எழுதுகிறார்? வானத்தை எட்டிப்பிடிக்க என்ன திட்டங்கள் போடுகிறார்? இறைவன் கொடுத்ததை வைத்துத் திருப்தி யடையவில்லையே அவர்õ--

39 ''படி, படி, அவருடைய கடிதத்தைப் படிõஃஃ சாமா சொன்னார், ''நீங்கள் இப்பொழுது சொன்னதுதான் அவர் கடிதம் எழுதிய காரணமே.--

40 ''பாபா, நீங்கள் நிச்சலமாக இங்கு அமர்ந்துகொண்டு பக்தர்களின் மனத்தில் குழப்பங்களை உண்டுபண்ணுகிறீர்கள். பிறகு, அவர்கள் மனக்கிளர்ச்சியால் தத்தளிக்கும்பொழுது தூக்கி நிறுத்துகிறீர்கள்õ--

41 ''சிலரை உம்மிடம் இங்கு இழுக்கிறீர்கள். மற்றவர்களைக் கடிதம் எழுத வைத்து, அதை நான் படிக்கும் முன்பாகவே விவகாரம் என்னவென்று சொல்கிறீர்கள்õ இவ்வாறிருக்க, கடிதங்களை எதற்காகப் படிக்கச் சொல்லவேண்டும்?ஃஃ

42 ''ஓ சாமாõ அதைப் படி; இப்பொழுதே படிõ நான் சொல்வதை நீ ஏன் நம்ப வேண்டும்õ ஓ, நான் என்ன பெரிய மனிதன்õ ஏதோ வாயில் வந்ததைப் பேசுகிறேன்õஃஃ

43 இதன் பிறகு சாமா கடிதத்தைப் படித்தார். பாபா மிகுந்த கவனத்துடன் அவர் படித்ததைக் கேட்டார். பிறகு பாபா ஆழ்ந்த விசாரத்துடன் சொன்னார், ''இந்த சேட்டுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது போ­ருக்கிறதுõ --

44 ''அவருடைய இல்லத்தில் என்ன குறை? என்ன இல்லைõ நமக்கு அரைச் சோளரொட்டியே போதுமானது அன்றோ? லக்ஷங்களால் ஏன் தூண்டப்படவேண்டும்?ஃஃ

45 தாமு அண்ணா பதிலுக்காக ஒவ்வொரு கணமும் காத்திருந்தார். பதில் கைக்குக் கிடைத்த உடனே பிரித்துப் படித்தார்.

46 படித்தவுடன் தாமு சேட் மனமுடைந்துபோனார். அவர் கட்டிய மனக்கோட்டை களெல்லாம் தகர்ந்துபோயின. நம்பிக்கையாகிய மரம் வேருடன் சாய்ந்தது.

47 ''என் பங்கிற்கு ஒரு லக்ஷரூபாய் லாபம் கிடைக்கும். அதில் பாதியை நான் வட்டிக்கு விடுவேன். உடனே அஹமத்நகரின் முக்கியமான லேவாதேவிக்காரராக ஆகிவிடுவேன். நகரத்தில் சௌக்கியமாக வாழ்வேன்.ஃஃ

48 ஐயகோõ இக் கற்பனை உலகம் திடீரென்று மாயமாக மறைந்துவிட்டது. தாமு அண்ணா மனம் சோர்ந்துபோனார். ''ஓ, என்ன காரியம் செய்துவிட்டார் பாபாõ--

49 ''நான் கடிதம் எழுதியதே மஹா முட்டாள்தனம்õ அதன் விளைவாக, வ­ய வந்த ஸ்ரீதேவியை எட்டி உதைத்து என்னுடைய செயலால் நானே தீங்கு தேடிக்கொண்டேன்.ஃஃ

50 இருப்பினும், கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போவதற்கு சாத்தியக்கூறு இருக்கிறதென்றும், எதற்கும் சிர்டீக்கு நேரில் வந்துபோவதே சிலாக்கியம் என்றும் கடிதத்தில் ஜாடைமாடையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

51 மாதவராவ் அவ்வாறு யோசனை தெரிவித்திருந்ததால், தாமு அண்ணா தாமே சிர்டீக்குச் செல்வது நன்று என முடிவு செய்தார். 'யாருக்குத் தெரியும்? இதனால் நன்மை விளைந்தாலும் விளையலாம், பாபா ஒருவேளை இந்த வியாபார பேரத்திற்கு அனுமதி அளித்தாலும் அளிக்கலாம்.ஃ

52 இந்த எண்ணத்துடன் தாமு அண்ணா சிர்டீக்கு வந்தார். பாபாவிற்கு நமஸ்காரம் செய்தபின் அருகில் சென்றமர்ந்தார்.

53 மெதுவாக பாபாவின் பாதங்களைப் பிடித்துவிட ஆரம்பித்தார். ஆனால், விஷயத்தை எடுத்துப் பேச தைரியமில்லை. இந்த பேர லாபத்தில் பாபாவுக்கு ஒரு பங்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் மனத்துள் எழுந்தது.

54 அவர் தமக்குள்ளேயே சொல்­க்கொண்டார், ''ஓ, ஸாயீநாதாõ இந்த பேரத்தில் எனக்கு நீர் கைகொடுத்தால், நான் லாபத்தில் ஒரு பங்கை உமது பாதங்களில் சேர்க்கிறேன்.ஃஃ

55 பாபாவின் பாதங்களை வணங்கிவிட்டுச் சிறிது நேரம் மௌனமாக உட்கார்ந்திருந்தார். அவருடைய மனம் குழம்பியது. சங்கற்பங்களும் (மனத்திட்பம்) விகற்பங்களும் (கோணல் சிந்தனைகள்) நிறைந்ததே மனித மனம் அன்றோõ

56 பக்தர்கள் திட்டம் போடுகிறார்களே தவிர, எது நன்மை தரும் என்பது அவர்களுக்குத் தெரியாது. குருவுக்குத்தான் நடந்ததும் நடப்பதும் நடக்கப்போவதும் பக்தனுக்கு எது நன்மை தரும் என்பதும் தெரியும்.

57 தம்முடைய ஆசைகளை ஒருவர் எவ்வளவுதான் மறைத்து வைத்திருந்தாலும், ஸமர்த்த ஸாயீ தம் உள்ளுணர்வால் அனைத்தையும் அறிவார். அவர் ஸர்வாந்தர்யாமி (அனைவர் உள்ளும் உறைபவர்) ஆயிற்றேõ

58 ஒருவர் தம் மனத்தின் அடி ஆழத்தில் இருக்கும் விருப்பத்தை ஸாயீபாதங்களில் பிரேமையுடன் நிவேதனம் செய்துவிட்டுப் பூரண விசுவாசத்துடன் பலனை எதிர்பார்க்கும்பொழுது, ஸாயீ அவரை நல்ல வழியிலேயே நடத்துகிறார்.

59 அனன்னியமாக சரணாகதியடைந்த பக்தனை எந்தவிதமான ஆபத்தும் வாராமல் காப்பாற்றுவது அவருடைய விரதம் என்பதை எல்லா பக்தர்களும் அறிவர்.

60 குருவே நம் அன்னையும் தந்தையும். குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் ஆவார். எண்ணற்ற ஜன்மங்களில் நம்மைப் பாதுகாப்பவரும் போஷிப்பவரும் அவரே. செயல்புரிபவரும் செயல்புரியவைப்பவரும் அவரே.

61 குழந்தை இனிப்புகளை வேண்டுகிறது; ஆனால், தாயோ அதற்கு மருந்துக் கஷாயத்தைப் புகட்டுகிறாள். குழந்தை அழுதாலும் முரண்டுபிடித்தாலும், தான் கொண்ட அன்பினாலும் அக்கறையாலும் தாய் கஷாயத்தைப் புகட்டியே தீருவாள்.

62 கசப்பான கஷாயம் சரியான சமயத்தில் பலனைத் தரும். ஆனால், குழந்தைக்குக் கஷாயத்தின் நற்குணங்கள் எப்படித் தெரியும்? தாய்க்குத்தான் தெரியும் கஷாயத்தின் அருமை.

63 தாமு அண்ணா லாபத்தில் ஒரு பங்கை ஸமர்ப்பிக்கத் தயாராக இருக்கலாம். ஆனால், பாபா இந்த ஆசைகாட்டலுக்கு மயங்கிவிடுவாரா என்ன? அவருடைய பிரீதியனைத்தும் சுயநலம் பாராத அன்பும் பக்தர்களின் க்ஷேமமும் அல்லவாõ

64 பொன்னையும் பொருளையும் ஓட்டாஞ்சல்­யாக மதித்தவருக்கு லாபத்தில் பங்கு எதற்காக? ஏழை எளியவர்களையும் திக்கற்றவர்களையும் ரட்சிப்பதற்காகவன்றோ ஞானிகள் அவதாரம் செய்கின்றனர்õ

65 யமம், நியமம் ஆகிய அஷ்டாங்க யோகப் பயிற்சிகளைச் செய்பவரும், சமம் (பொறுமை), தமம் (புலனடக்கம்) ஆகிய நற்குணங்களை உடையவரும்தாம் உண்மையில் ஞானியாவார். மாயையி­ருந்தும் பொறாமையி­ருந்தும் விடுபட்டு மற்றவர்களுக்கு அனுக்கிரஹம் செய்வதற்காகவே வாழ்பவர்தாம் ஞானியாவார்.

66 பாபாவுக்கு லாபத்தில் பங்கு கொடுத்துவிடலாம் என்ற தாமு அண்ணாவின் யோசனை அவருடைய ஆழ்மனத்தில் இருந்த ரகசியமே. ஆயினும், பாபா எல்லாரும் அறியும்படி அவருக்கு அளித்த பதில் என்ன என்பதை கவனமாகக் கேளுங்கள்.

67 ஒவ்வொரு ஜீவனின் மனோகதியையும் (எண்ண ஓட்டத்தையும்) பாபா அறிந்து வைத்திருந்தார். கடந்தகாலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் அவருக்கு உள்ளங்கை நெல்­க்கனிபோல் தெளிவாகத் தெரிந்திருந்தது.

68 தம் பக்தனுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது பாபாவுக்கு நன்கு தெரிந்திருந்தது. சரியான நேரத்தில் தெளிவான வார்த்தைகளால் பக்தனுக்கு எவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் என்பதைக் கேளுங்கள்.

69 பாபா பிரேமையுடன் சூசகமாகத் தெரிவித்தார், ''இதோ பாரும், இந்த விவகாரத்திலெல்லாம் என்னை இழுக்காதீர்.ஃஃ அருமையான வியாபார பேரத்தை பாபா அனுமதிக்கவில்லை என்று தெரிந்துகொண்ட தாமு அண்ணா மனமுடைந்து போனார்.

70 இருப்பினும், பாபாவின் சொற்களைக் கேட்ட தாமு அண்ணா உட்பொருளை நன்கு புரிந்துகொண்டார். மனத்தளவில் பருத்தி வியாபார பேரத்தைக் கைவிட்டுவிட்டுத் தலைகுனிந்து சோகமாக உட்கார்ந்திருந்தார்.

71 மறுபடியும் வேறொரு யோசனை தோன்றியது. ''அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் வியாபாரம் செய்யலாமா?ஃஃ இந்த எண்ணத்திற்கு பாபா என்ன பதில் கூறினார் என்று கேளுங்கள்.

72 ''ரூபாய்க்கு ஐந்து சேர் என்று வாங்கி ரூபாய்க்கு ஏழு சேர் வீதம் விற்பீர்õஃஃ இந்த வார்த்தைகள் தாமு அண்ணாவை அவமானத்தில் ஆழ்த்தின.

73 பாபாவின் கண்ணிற்படாமல் எங்கும் எதுவும் நிகழ்வதில்லைõ வானமும் பூமியும் எல்லா திக்குகளும் அவருடைய பார்வைக்குத் திறந்து கிடக்கின்றன.

74 தாமு அண்ணாவிடமிருந்து பதில் ஏதும் வராததால், மறுமுனையில் தாமு அண்ணாவின் நண்பர் என்ன செய்வது என்றறியாது திகைத்தார்.

75 இதற்கிடையே நடந்ததையெல்லாம் விவரித்து சேட் (தாமு) ஏற்கெனவே ஒரு கடிதம் தம் நண்பருக்கு எழுதியிருந்தார். அதைப் படித்த நண்பர் வியப்பிலாழ்ந்தார்õ 'விதியின் செயல்பாடு விசித்திரமானதுஃ என்றும் நினைத்தார்.

76 ''எவ்வளவு அருமையான வியாபார பேரம் நம் வழியே வந்ததுõ ஏன் அதுபற்றி அவரே முடிவெடுக்கவில்லை? ஒரு பக்கீரைத் தேடி எதற்காக அலையவேண்டும்? பெரும் லாபமளிக்கக்கூடிய பேரத்தை வீணாக்கிவிட்டாரேõ --

77 ''இறைவன் அளிக்கிறான்; கர்மவினை அதைத் தடுத்துவிடுகிறது. விதிப்படி என்ன நடக்கவேண்டுமோ அதற்கேற்ற புத்திதான் அமைகிறது. வியாபார வாய்ப்பு இவ்வளவு அருமையாக இருக்கும்பொழுது, பக்கீர் ஏன் குறுக்கே நிற்கிறார்?--

78 ''உலக விவகாரங்களைத் துறந்துவிட்ட இந்தப் பக்கிரிகள் வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து வயிறு வளர்க்கிறார்கள். இந்தப் பைத்தியக்காரக் கூட்டம் வியாபார சம்பந்தமாக என்ன யோசனை அளிக்கமுடியும்?--

79 ''அப்படியே போகட்டும் விடுõ அவருக்கு லாபம் கிடைக்கவேண்டுமென்று தெய்வ அருள் இல்லை. அதனால்தான் அவருடைய புத்தி அவ்வாறு வேலை செய்தது. நான் வேறு யாரையாவது பங்குதாரராகச் சேர்ப்பதே சிறப்பு. நடக்கவேண்டுமென்று எது விதிக்கப்படவில்லையோ அது நடக்கவே நடக்காது என்பது பழமொழியன்றோ?ஃஃ

80 கடைசியில் தாமு அண்ணா பேசாமல் 'சிவனேஃ என்றிருந்துவிட்டார். விதிவசத்தால் மாட்டிக்கொண்டவர்கள் நண்பருக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளாகச் சேர்ந்தனர்; வம்பை விலைக்கு வாங்கினர்õ

81 வியாபாரத்தில் முழுமுயற்சியுடன் இறங்கினர்; ஆனால், நிலைமை தலைகீழாகியது. துரதிருஷ்டவசமாகப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பக்கீருடைய பிரம்பு (தீர்ப்பு) அத்தகையதுõ

82 ''ஆஹாõ தாமு அண்ணா எவ்வளவு அதிருஷ்டசா­, புத்திசா­õ பக்தர்களின்மீது ஸாயீயின் கருணைதான் என்னேõ அவருடைய வாக்கின் ஸத்தியந்தான்

என்னேõ-- (82-­ருந்து 85 வரை நண்பரின் புலம்பல்)
83 ''என்னுடன் இந்தத் துணிகரச் செய­ல் பங்காளியாகச் சேர்ந்திருந்தால், அவர் பெரும் நஷ்டமடைந்து ஏமாறிப்போயிருப்பார். பக்கீர் சொன்னபடி செயல்பட்டதால் தப்பித்துக்கொண்டார். அவருடைய விசுவாசம் போற்றுதற்குரியதுõ --

84 ''தாமு பைத்தியம் பிடித்தவர் என்று நான் ஏளனம் செய்தேன். என்னுடைய புத்திசா­த்தனத்தில் எனக்கிருந்த கர்வம் என்னை வீழ்த்திவிட்டது. இதுவே நான் கண்ட அனுபவம்.--

85 ''அனாவசியமாக அந்தப் பக்கீரைத் தூற்றுவதற்குப் பதிலாக அவருடைய பரிந்துரையை ஏற்றுக்கொண்டிருந்தால், நான் நஷ்டமும் ஏமாற்றமும் அடைந்திருக்க மாட்டேன்.ஃஃ

86 இப்பொழுது இன்னுமொரு காதை சொல்­விட்டு அண்ணாவின் படலத்தை முடித்துவிடுகிறேன். பாபாவின் லீலையைக் கேட்டு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.

87 ஒரு சமயம் கோவாவி­ருந்து, புகழ்பெற்ற அல்போன்ஸா மாம்பழங்கள் அடங்கிய பார்சல் ஒன்று வந்தது. ராலே என்னும் பெயர்கொண்ட மாம்லத்தார் (சப்-கலெக்டர்) அனுப்பியிருந்தார்.

88 பாபாவின் பாதங்களில் பயபக்தியுடன் ஸமர்ப்பணம் செய்யவேண்டி, மாதவராவ் பெயருக்கு விலாசமிடப்பட்டு வந்த பார்சல் கோபர்காங்விற்கு முத­ல் வந்து அங்கிருந்து சிர்டீ வந்து சேர்ந்தது.

89 மசூதியில் பாபாவின் முன்னிலையில் பிரிக்கப்பட்டபோது உள்ளே சுவைமிகுந்த மாம்பழங்கள் இருந்தன. நல்ல வாசனையுடன் ருசியான பழங்கள் மொத்தம் சுமார் முந்நூறுக்கு மேலாக இருந்தன.

90 பாபா பழங்களைப் பார்த்துவிட்டு எல்லாவற்றையும் மாதவராவிடம் ஒப்படைத்துவிட்டார். மாதவராவ் நான்கு பழங்களை அங்கிருந்த கொலம்பாவில் (வாயகன்ற மண் பாத்திரம்) இட்டுவிட்டுக் கூடையை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போனார்.

91 நான்கு பழங்கள் கொலம்பாவில் இடப்பட்டபோதே பாபா சொன்னார், ''இந்தப் பழங்கள் தாமு அண்ணாவுக்கு. இவை இங்கேயே இருக்கட்டும்.ஃஃ

92 இரண்டு மணி நேரம் கழித்து, பாபாவுக்குப் பூஜை செய்வதற்காக ஏராளமான பூக்களை எடுத்துக்கொண்டு தாமு அண்ணா மசூதிக்கு வந்து சேர்ந்தார்.

93 ஏற்கெனவே நடந்த விஷயம் எதுவும் அவருக்குத் தெரியாது. ஆனால், பாபாவே உரத்த குர­ல் சொன்னார், ''இந்த மாம்பழங்கள் தாமுவினுடையது; நம்முடையதல்ல. எத்தனை பேர் இதைக் கொத்திக்கொண்டு போக நினைத்தாலும் சரிõ--

94 ''யாருக்குச் சொந்தமோ அவர்தான் இந்த மாம்பழங்களை எடுத்துக்கொண்டு போக வேண்டும். மற்றவருடைய பொருள் நமக்கெதற்கு? தின்றுவிட்டு மரிப்பதானாலும் சரி, யாருக்குச் சொந்தமோ அவர்தான் அதைத் தின்னவேண்டும்.ஃஃ

95 அண்ணா அந்த மாம்பழங்களைப் பிரசாதமாக விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டார். 'மரிப்பதானாலும் சரிஃ என்று பாபா சொன்ன வார்த்தைகளைக் கேட்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அண்ணாவுக்குப் பூரணமாகத் தெரிந்திருந்தது.

96 பூஜையை முடித்துவிட்டு அண்ணா சென்றுவிட்டார். ஆயினும், 'இந்த மாம்பழங்களை மூத்த மனைவிக்குக் கொடுப்பதா, இளைய மனைவிக்குக் கொடுப்பதா என்று தெரியவில்லையே?ஃ என்று பாபாவைக் கேட்பதற்காக மறுபடியும் திரும்பி வந்தார்.

97 பாபா கூறினார், ''இளைய மனைவியிடம் கொடும். அவள் எட்டுக் குழந்தைகளைப் பெறுவாள். இந்த மாம்பழ அற்புதம் நான்கு ஆண்குழந்தைகளையும் நான்கு பெண் குழந்தைகளையும் பிரசவிக்கும்.ஃஃ

98 பிள்ளைப்பேறு இல்லாத தாமு அண்ணா பலவிதமான பிரயத்தனங்கள் செய்து பார்த்துவிட்டார். சாதுக்களையும் ஞானிகளையும் அவர்களுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகத் தேடி வணங்கிவந்தார்.

99 சந்ததிக்காகவே சாதுக்களையும் ஞானிகளையும் நாடினார்; நவக்கிரஹங்களைப் பிரீதி செய்தார்; ஜோதிடம் கற்றார்; தாமே ஒரு ஜோதிடராகவும் ஆகிவிட்டார்õ

100 ஜோதிட சாஸ்திர விதிகளின்படி தமக்கு மக்கட்பேறு கிடையாது என்பதை நன்குணர்ந்து கொண்டார். சந்ததிபற்றிய ஆசையையே துறந்துவிட்டார்.

101 இந்நிலையில், முனிவராகிய ஸாயீ தம்மிடம் மனம் மகிழ்ந்து அருளிய உறுதிமொழியையும் ஆசீர்வாதத்தையும் கேட்டவுடன் அவருடைய மனத்தில் புதிய ஆசையும் நம்பிக்கையும் துளிர்விட்டன.

102 அவ்வாறே காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய்மொழி உண்மையாயிற்று. அவருடைய ஆசீர்வாதம் பலனளித்தது. தாமு அண்ணாவுக்குக் குழந்தைகள் பிறந்தன.1

103 ''எப்படிச் சொன்னாரோ அப்படியே நடந்தது. என்னுடைய ஜோதிடம் பொய்யாயிற்று. ஸாயீயின் வார்த்தைகள் தப்பர்த்தம் செய்துகொள்ள முடியாதவை; துல்­யமானவை. அவருடைய திருவாய்மொழியின்படி குழந்தைகள் பிறந்தன.ஃஃ (தாமு அண்ணா)

104 இந்த வார்த்தைகள் (பிள்ளை வரம்) பாபா மனித உட­ல் ஜீவிதமாக இருந்த பொழுது சொல்லப்பட்டவை. பிற்காலத்திற்கும் அவருடைய மஹிமையை பக்தர்களுக்கு நிர்த்தாரணம் செய்திருக்கிறார் பாபா.

105 ''என்னுடைய வார்த்தைகளைப் பிரமாணமாக நம்புங்கள். நான் இந்த பூதவுடலை நீத்த பிறகும் ஸமாதியி­ருந்து என்னுடைய எலும்புகளும் உங்களுக்கு ஆசுவாஸம் (இளைப்பாறுகை) அளிக்கும்.--

106 ''நான் மாத்திரம் அல்லன்; என்னுடைய ஸமாதியும் உங்களிடம் பேசும். எவர் என் ஸமாதியை சரணாகதி அடைகிறாரோ அவருடன் அது ஊஞ்சலாடும்.--

107 ''நான் இல்லாமல் போய்விடுவேன் என்று ஒருகாலும் கவலைப்படாதீர்கள். நீங்கள் அக்கறை கொண்ட விஷயங்களைப்பற்றி என்னுடைய எலும்புகள் பேசுவதைக் கேட்பீர்கள்.--

108 ''விசுவாசம் நிறைந்த இதயத்துடன் என்னை நினைத்தால் போதும். சுயநலம் கருதாது என்னை வழிபடுங்கள்; எல்லா மங்களங்களும் விளையும்.ஃஃ

109 ஓ ஸமர்த்த ஸாயீõ ஸ்ரீ ஸத் குருவேõ பக்தர்கள் விரும்புவதையெல்லாம் அளிக்கும் கற்பகத்தருவேõ உம்முடைய பாதங்களி­ருந்து ஹேமாட் என்றுமே பிரியக்கூடாது. இந்த ஒரு கருணையைத்தான் நான் உங்களிடம் வேண்டுகிறேன்.

110 ஓ குருவராõ கருணாகராõ என்னைக் காப்பாற்றுங்கள். இவ்வுலக வாழ்வு எந்த நிம்மதியையும் அளிப்பதில்லை. போதும், போதும், போதும் இந்த ஜனனமரணச் சுழற்சிõ

111 புலனின்பங்களை நாடிக் கட்டவிழ்ந்து ஓடி அவற்றிலேயே மூழ்கிப் போகும் எங்களைத் தடுத்தாட்கொள்ளுங்கள். எங்களுடைய எண்ணங்களை உள்முகமாகத் திருப்புங்கள்õ

112 சுக்கானை இழந்த நாங்கள் சம்சாரம் என்னும் சாகரத்தின் பேரலைகளால் எங்கோ அடித்துச் செல்லப்படுகிறோம். தக்க சமயத்தில் எங்களைக் கைகொடுத்துத் தூக்கிப் பிறவிப் பிணியி­ருந்து விடுதலையளிப்பீராக.

113 புலன்கள் கட்டவிழ்ந்து ஓடி துராசாரத்தில் (கெட்ட நடத்தையில்) கொண்டுபோய் விடுகின்றன. காட்டாற்றைத் தடுத்து அணைகட்டிப் புலன்களைத் திரும்பிப் பார்க்கச் செய்யுங்கள்.

114 புலன்கள் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி உள்முகமாகத் திரும்பவில்லையென்றால் ஆத்மதரிசனம் பெறமுடியாது. ஆத்மாவை அறிந்துகொள்ளாமல் உன்னத சுகம் ஏது? பிறவியே அர்த்தமில்லாததாக ஆகிவிடும் அன்றோ?

115 மனைவி, மக்கள், நண்பர்கள் கூட்டம் - கடைசிக் காலத்தில் இவர்களில் யாராலும் எந்தப் பயனும் கிடைக்காது. நீர் மாத்திரமே கடைசிவரை கூடவரும் துணைவர். உம்மால்தான் சுகத்தையும் முக்தியையும் அளிக்க இயலும்.

116 மஹராஜரேõ உம்முடைய கிருபையின் பலத்தால் நாங்கள் செய்த வினைகளாலும் செய்யத் தவறிய வினைகளாலும் பின்னிக்கொண்ட வலையை அறுத்தெறியுங்கள். தீனர்களையும் பலவீனர்களையும், துக்கத்தி­ருந்தும் வேதனையி­ருந்தும் விடுவித்தருளுங்கள்.

117 நிர்மலமான ஸாயீராயரேõ தீங்கு விளைவிக்கும் வாக்குவாதங்களையும் சர்ச்சைகளையும் உம்முடைய கருணையால் நிர்மூலமாக்கிவிடுங்கள். நாக்கு நாமஜபம் செய்வதிலேயே இனிமை காணட்டும்.

118 சங்கற்பங்களும் விகற்பங்களும் என் மனத்தி­ருந்து அழிந்துபோகுமாறும், உடல், உற்றார், உறவினர், சொத்து, சுகம், இவையனைத்தையும் நான் அறவே மறந்து போகுமாறும் என்னுடைய இதயத்தில் இறையன்பைப் பொங்கச் செய்வீராக.

119 மற்ற விஷயங்களனைத்தும் மறந்துபோகுமாறு உம்முடைய நாமஸ்மரணமே எந்நேரமும் மனத்தில் ஓடட்டும். என்னுடைய மனம் அலைபாய்வதையும் சபலத்தையும் தொலைத்துவிட்டு சாந்தமாக ஓருமுகப்படட்டும்.

120 உங்களுடைய நிழ­ல் எங்களுக்கு இடம் கிடைத்தால் அஞ்ஞானமாகிய இரவு மறைந்துபோகும். உம்முடைய பிரகாசமான ஒளியில் சுகமாக வாழ்வதைவிட வேறென்ன எங்களுக்குத் தேவைப்படும்?

121 எங்களை முதுகில் தட்டியெழுப்பி தேவரீர் ஊட்டிய சரித்திரமாகிய அமிருதம் சாமானியமான சுகிருதமா (நற்செயலா) என்ன?

122 அடுத்த அத்தியாயம் இதைவிட இனிமையானதுõ செவிமடுப்பவர்களின் ஆவலைத் திருப்தி செய்யும். ஸாயீயின் மீதிருக்கும் அன்பு பெருகும்; சிரத்தை திடப்படும்.

123 தம் குருவின் பாதங்களைக் கைவிட்டுவிட்டு ஒருவர் ஸாயீ தரிசனத்திற்கு வந்தார். ஆயினும், அவர் தம்முடைய பாதங்களில் வணங்கிய பிறகு, வந்தவரின் குருவின் ஸ்தானத்தை (உயர்வை) நிலைப்படுத்தியும் உறுதிப்படுத்தியும் ஆசீர்வதித்தார் ஸாயீ.

124 அதுபோலவே, செல்வம் மிகுந்திருந்தும் வருத்தத்திலாழ்ந்த இல்லறத்தார் ஒருவர் மனைவியுடனும் மகனுடனும் ஸாயீ தரிசனத்திற்கு வந்தார்.

125 மகனுடைய காக்காய்வ­ப்பு நோயைத் தம் அருட்பார்வையாலேயே குணம் செய்து பெற்றோருடைய வேண்டுதலை எவ்வாறு நிறைவேற்றிவைத்தார் என்பதையும் தந்தையின் பழைய அனுபவங்களை எவ்வாறு ஞாபகப்படுத்தினார் என்பதையும் கூறுகிறேன்; கேளுங்கள்.

126 ஹேமாட் ஸாயீயிடம் சரணடைகிறேன். கதை கேட்பவர்களை ஸாயீயின் கதைகளை ஆர்வத்துடன் கேட்கும்படி வேண்டுகிறேன். கேட்பவர்களின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மலரும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'பக்தர்களுக்கு க்ஷேமலாபம் அருளிய மாண்புஃ என்னும் இருபத்தைந்தாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.