Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 22

22. மரண விபத்துகளை விலக்கி அருள் செய்த படலம்




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 ஜய ஆனந்தம் நிரம்பிய ஸத்குருவேõ ஞானத்தின் சொரூபமேõ தூய்மையின் வடிவேõ பிறவிப் பயத்தை ஒழிப்பவரேõ பரிபூரணரேõ க­யின் மலங்களை எரிப்பவரே ஜய ஜயõ

2 பலவிதமான உணர்ச்சிகளும் எண்ணங்களும் மேல்மட்டத்தில் அலைகளாக எழும் ஆனந்தக்கடல் தாங்களேõ உண்மையான பக்தர்களின் மீதுள்ள கிருபையினால், தேவரீர், தேவரீர் மாத்திரமே, அவ்வலைகளைக் கட்டுப்படுத்துகிறீர்.

3 அரையிருளில் பாம்புபோல் தெரிவது வெளிச்சம் வந்தவுடன் தானாகவே கயிறாகிவிடுகிறது. அரையிருளையும் வெளிச்சத்தையும் சிருஷ்டி செய்பவர் நீரே.

4 முத­ல் பாம்பு போன்ற உருவ பிரமையை சிருஷ்டி செய்து பயத்தை உண்டுபண்ணுகிறீர். கடைசியில் அந்த பயத்தை நிவாரணம் செய்பவரும் நீரே.

5 ஆதியில் முழுமையான அந்தகாரத்தில் (இருளில்), பாம்பும் இல்லாத, கயிறும் இல்லாத நிலையில், கயிற்றைப் பார்த்துப் பாம்பென்று மயக்கம் அடைவதற்கு இடமேயில்லாத சூழ்நிலையில், உருவமற்ற அவ்விருட்டை வியாபித்தவரும் நீரே.

6 உருவமற்ற நிலையி­ருந்து மங்கிய ஒளியில் உருவமொன்று தோன்றியபோது பாம்பென்னும் பிரமை உண்டாகியது. அந்த மயக்கமும் உம்முடைய சிருஷ்டியே.

7 ஒருகணத்தில் தெரியும் தோற்றம் மறுகணத்தில் மறைந்துவிடுவதும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத தோற்றங்களும் உண்மையில் நீர் கண்ணாம்பூச்சி ஆடும் பிரபாவமே. இந்நிலையில் மாற்றமில்லாது இருந்தாலும், எவராலும் இதை ஆழங்காண முடியவில்லை.

8 தங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் வேதங்கள் மௌனமடைந்துவிட்டன. ஆதிசேஷன் தம்முடைய ஆயிரம் வாய்களால் போற்றியும், தங்களுடைய வாஸ்தவமான சொரூபத்தை அறிந்துகொள்ளமுடியவில்லை. இவ்விதமிருக்க, நான் எப்படித் தங்களைப் புரிந்துகொள்ள முடியும்?

9 பாபாõ தங்களுடைய தெய்வீகமான சொரூபத்தை தரிசனம் செய்வதைத் தவிர வேறெதிலும் என் மனம் ருசி தேடவில்லை. எந்நேரமும் தியானம் செய்து அதை என் மனக்கண்முன் நிறுத்தவே விரும்புகிறேன்.

10 ஈடிணையற்ற சௌக்கியத்தை அனுபவிப்பதற்கு சுத்த ஞான மூர்த்தியாகிய உம்முடைய பாதங்களில் பணிவதைத் தவிர வேறு கதி ஏதும் எங்களுக்கு இல்லை.

11 தாங்கள் எப்பொழுதும் அமர்ந்திருக்கும் கோலந்தான் என்னேõ அநேக பக்தர்கள் உங்களுடைய தரிசனத்திற்கு வரும்போது, உங்களுடைய பாதங்களில் சிரம் தாழ்த்தி அகமகிழ்ச்சியாலும் பிரேமையாலும் பொங்குகின்றனர் அல்லரோõ

12 ஆஹா, உங்களுடைய பொற்கமலப் பாதம்õ அதை எவ்விதம் வர்ணிப்பேன்õ மரக்கிளைகளுக்கும் பிறைச்சந்திரனுக்கும் உள்ள சம்பந்தம் என்று சொல்லலாமோ? உங்களுடைய பாதத்தின் கட்டைவிரலைக் கெட்டியாகப் பற்றிக்கொள்வதில் தரிசன வேட்கையுற்றவர்கள் திருப்தியடைகின்றனர் அல்லரோõ

13 தேய்பிறையின் பதினைந்தாவது நாளான அமாவாஸையின் இருட்டான இரவு கடந்த பிறகு, எல்லாருக்கும் மறுபடியும் சந்திரனைப் பார்க்கவேண்டுமென்கிற ஆவல் எழுவது இயற்கையே.

14 தேய்பிறைப் பருவத்து இரவுகள் முடிந்தவுடன் எல்லாரும் சந்திரோதயத்தைப் பார்க்கும் ஆசையில் மேற்கு நோக்கி உற்றுப் பார்க்கின்றனர்.

15 அதுபோலவே, உங்களுடைய வலக்காலை இட முட்டியின்மீது வைத்துத் தாங்கள் அமரும்போது பக்தர்களின் தீவிரமான தரிசன ஆசை நிறைவேறுகிறது.

16 இடக்கரத்தின் ஆட்காட்டிவிரலுக்கும் நடுவிரலுக்கும் நடுவே உள்ள இடைவெளி ஒரு மரத்தின் கவட்டைக் கிளைகளைப் போன்று வலக்கா­ன் கட்டைவிரலைக் கவ்விக்கொண் டிருக்கிறது. கட்டைவிர­ன் நுனியில் மூன்றாம் பிறைச் சந்திரனைப்போல நகம் பளபளக்கிறது.

17 மூன்றாம் பிறைச்சந்திரனைப் பார்ப்பதற்கு மக்களுக்கு ஆவல் அதிகம். ஆனால், அச் சிறிய ஒளிக்கீற்று சுலபமாகத் தெரிவதில்லை. விவரம் தெரிந்த மனிதர் அப்பொழுது சொல்லுவார், ''இந்த மரத்தின் கவட்டையான இரண்டு கிளைகளுக்கும் நடுவில் பார்ஃஃ என்று.

18 அப்பொழுது, இரு கிளைகளுக்கும் நடுவே நமக்கு நேராகவே சந்திரன் தரிசனமாகும். சந்திரனின் கீற்று மிக மெல்­யதாக இருந்தாலும், கிளைகளுக்கு நடுவில் நன்கு தெரியும்.

19 கட்டைவிர­ன் மஹிமையே மஹிமைõ பாபாவே வேணீமாதவராக ஆகி, புனிதமான கங்கையையும் யமுனையையும் தம்முடைய கட்டைவிரல்களி­ருந்து பெருக்கி தாஸகணுவின் விருப்பத்தைத் திருப்தி செய்தார்.

20 புண்ணிய தீர்த்தமான பிரயாகைக்குச்1 சென்று ஸ்நானம் செய்யவேண்டுமென்று தாஸகணு விக்ஞாபனம் (வேண்டுகோள்) செய்தபோது, ''என்னுடைய கால் கட்டைவிரலே பிரயாகை என்றறிவாயாக. இங்கேயே ஸ்நானம் செய்.ஃஃ--

21 என்று பாபா திருவாய்மொழிய, தாஸகணு அவர் பாதங்களில் பணிந்தார். பாபாவின் பாதங்களி­ருந்து உடனே கங்கையும் யமுனையும் வெளிப்பட்டன.

22 அந்த நேரத்தில் தாஸகணு உணர்ச்சி வெள்ளத்தில் ஆசுகவியாகப் பாடிய அழகான பாட்டு ஏற்கெனவே உங்களால் செவிமடுக்கப்பட்டது.

23 இப் பாட்டு, தாஸகணு அளித்தவிதமாகவே ஏற்கெனவே இந்நூ­ன் 4ஆவது அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை மறுபடியும் படித்தால் முதல் தடவை கேட்டபோது அடைந்தவாறே ஆச்சரியமடைவீர்கள்.

24 சாகா சந்திர நியாயத்தின்படி1 தம்முடைய கால்கட்டைவிரலைக் கையினுடைய நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் மத்தியில் வைத்து, தரிசனம் செய்வதற்கு ஒரு சுலபமான வழி காட்டினார் பாபா.

25 இது, ''உன்னுடைய அபிமானங்களை விட்டுவிட்டு ஸகல ஜீவராசிகளையும் வணங்கி என்னுடைய கால் கட்டைவிர­ன்மீது தியானம் செய். இது பக்தியின் எளிய ஸாதனைஃஃ என்று பாபா நமக்குக் குறிப்பால் உணர்த்துவதுபோல் தோன்றுகிறது.

26 இப்பொழுது, முன்பு சொன்ன கதைக்குப் போவோம்õ அருள்மழை பொழிந்ததுபற்றிய பிரவசனம் முடிந்தது. இப்பொழுது அபூர்வமான கதையொன்று தொடர்கிறது; கவனமாகக் கேளுங்கள்.

27 பாபா அங்கு வாசம் செய்ததால், சிர்டீ புண்ணியக்ஷேத்திரம் ஆகியது. இரவுபகலாக மக்கள் வந்தவண்ணமிருந்தனர். புண்ணியத்தைத் தேடிய பல மக்கள் அங்கே கூடினர்.

28 பத்துத்2 திசைகளிலும் வியாபித்திருக்கும் கற்பகத்தருவைப் போன்று நேரிடையாகவும் மறைமுகமாகவும் வரங்களை அள்ளிவீசும் ஸாயீபாபா சிர்டீயில் அவதரித்துவிட்டார்.

29 ஏழையையும் பணக்காரனையும் ஸமஸமானமாகப் பாவித்தார். கற்பனை செய்தும் பார்க்கமுடியாத லீலைகளால் பக்தர்களுக்கு மங்களம் அளித்தார்.

30 ஓ, எவ்வளவு கரைகாணாத பிரேமைõ என்னே இந்த இயல்பான பிரம்ம ஞானம்õ எல்லா உயிர்களிலும் உறைபவன், ஒன்றான இறைவனே என்பதில்தான் அவருக்கு எவ்வளவு அமோகமான நம்பிக்கைõ பாபாவை அனுபவித்தவர் பாக்கியசா­.

31 சிலசமயங்களில் திடமான மௌனமே அவர் பிரம்மத்தைப் (முழுமுதற்பொருளைப்) பற்றிச் செய்த வியாக்கியானமாக அமைந்தது. சிலசமயங்களில் ஆத்மானந்தமாகிய இம்மேகத்தை பக்தர்கள் சூழ்ந்துகொண் டிருந்தனர்.

32 சிலசமயங்களில் அவருடைய திருவாய்மொழி மறைபொருளாகவும் கனமான அர்த்தம் நிரம்பியதாகவும் இருந்தது. சிலசமயங்களில் அவர் மென்மையாகவும் பரிஹாஸமாகவும் பேசினார். சிலசமயங்களில் அவர் எப்பொழுதும் பேசும் மறைபொருளடங்கிய பேச்சை விடுத்துக் கோபம் வந்ததுபோல் பாசாங்கு செய்தார்.

33 சிலசமயங்களில் குறிப்பால் உணர்த்தியும், சிலசமயங்களில் விவேகத்தால் புரிந்துகொள்ளுமாறும், சிலசமயங்களில் வெளிப்படையாகத் தெளிவாகவும், அவர் அநேக பக்தர்களுக்கு அநேக விதங்களில் உபதேசம் அளித்தார்.

34 ஸமர்த்த ஸாயீயினுடைய நடத்தை மனத்திற்கும் புத்திக்கும் வாக்குக்கும் அப்பாற்பட்டது. அவருடைய செயல்களோ கற்பனைக்கும் எட்டாதவை; எதிர்பார்க்க முடியாதவை.

35 அவருடைய முகத்தை எவ்வளவு நேரம் பார்த்தாலும் மனம் திருப்தியடையாது. அவருடன் பேசுவது மேலும் மேலும் பேச ஆவலைத் தூண்டிவிடும். அவருடைய திருவாய்மொழியை எவ்வளவு கேட்டாலும் திருப்தி ஏற்படாது. இச்செயல்களால் ஏற்படும் சந்தோஷத்தை மனத்தில் அடக்கமுடியாது.

36 காற்றை மூட்டையாகக் கட்டிவிடலாம்; கொட்டும் மழையின் தாரைகளையும் எண்ணிவிடலாம்; ஆனால், ஸாயீயினுடைய அற்புதங்களைக் கணக்கெடுக்கக்கூடிய வன்மை உள்ளவர் யார்?

37 இப்பொழுது அடுத்த கதையை சாவகாசமாகக் கேளுங்கள். தம்முடைய பக்தர்களை ஸம்ரக்ஷணம் (நன்கு காப்பாற்றுகை) செய்யவேண்டுமென்பதில் பாபாவுக்கு இருந்த அக்கறையும் அவர்களுக்கு சங்கடங்களும் இன்னல்களும் வாராது நிவாரணம் செய்ததும் தெரியவரும்.

38 பக்தர்களுக்கு நேரப்போகும் கண்டங்களை முன்பாகவே அறிந்து, அவர்களுக்கு தைரியமூட்டி விபத்து நேராமல் தடுத்துவிடுவார். பக்தர்களுடைய மங்களத்தையே நாடிய பாபா, அவர்களுடைய விசுவாசத்தை இவ்விதமாக நிலைபெறச் செய்வார்.

39 ஆர்வத்துடன் கதை கேட்பவர்களேõ இது சம்பந்தமாக ஒரு கதையைக் கேட்டு மகிழ்ச்சியடையுங்கள். இக் கதை, ஸாயீயின் சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் சுகத்தை அதிகரிக்கும். கபடமற்ற, எளிமையான மக்களுக்கு சிரத்தையை அளிக்கும்.

40 அவர்கள் தீனர்களாகவும் தள்ளிவைக்கப்பட்டவர்களாகவும் ஏழைகளாகவும் இருக்கலாம்; ஆயினும், ஸாயீயினுடைய கதைகளில் ஆர்வம் அதிகரிக்கும். அவர்கள் ஸாயீ நாமத்தை இடைவிடாது ஜபித்தால், ஸாயீ அவர்களை நிச்சயமாக மறுகரை சேர்ப்பார்.

41 காகாஸாஹேப் மிரீகர் என்பவர் அஹமத்நகர் பட்டணவாசி. அவருடைய ஸேவையில் மகிழ்ந்து, (பிரிட்டிஷ்) அரசாங்கம் அவருக்கு 'ஸர்தார்ஃ என்ற பட்டத்தையளித்தது.

42 அவருடைய மகன் சிரஞ்ஜீவி பாலாஸாஹேப் மிரீகரும் ஒரு கடமைவீரராகத் திகழ்ந்தார். கோபர்காங்விற்கு மாம்லத்தாராக இருந்த அவர், சிதலீக்கு1 அலுவலகச் சுற்றுப்பயணமாக வந்திருந்தபோது பாபாவை தரிசனம் செய்ய சிர்டீக்கு வந்தார்.

43 மசூதிக்குச் சென்று பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அங்கு அமர்ந்தார். எல்லோருடைய க்ஷேமத்தையும் குசலத்தையும்(சுகத்தையும்) பற்றி பாபா அவரை விசாரித்தார்; பேச்சுத் தொடர்ந்தது.

44 பல பக்தர்கள் அப்பொழுது அங்கே குழுமியிருந்தனர்; மாதவராவும் அருகிலேயே இருந்தார். ஒ, நான் சொல்லும் கதையை கவனத்துடன் கேட்பவர்களேõ அமிருதத்தைப் போன்ற இக் காதையை இப்பொழுது பருகுங்கள்.

45 வரப்போகும் கண்டங்களைப்பற்றி பக்தர்களை எச்சரித்து, ஆபத்தி­ருந்து தப்பித்துக்கொள்ள ஒரு வழியையும் காட்டி, அவர்களைக் காப்பாற்றியது பாபா செய்த அற்புதம்.

46 அந்த சமயத்தில் பாபா திடீரென்று மிரீகரைக் கேட்ட விநோதமான கேள்வி என்னவென்று பார்ப்போம். ''உங்களுக்கு நம்முடைய துவாரகாமாயியைத் (தாம் வாழ்ந்த மசூதிக்கு பாபா அளித்த பெயர்) தெரியுமா?ஃஃ

47 பாலாஸாஹேப்பிற்கு, பாபா என்ன கேட்கிறார் என்றே புரியவில்லை. ஆகவே, பாபா தொடர்ந்தார், ''இங்கே பாருங்கள், துவாரகாமாயீ இந்த மசூதியே.--

48 ''இது நம்முடைய, நமக்கே சொந்தமான துவாரகாமாயீ. இவளுடைய மடியில் நீர் அமரும்போது ஒரு குழந்தையைப்போல உம்மைப் பாதுகாக்கிறாள்; பயத்திற்கு மனத்தில் இடமேயில்லைõ--

49 ''இந்த மசூதிமாயீ கிருபையே உருவானவள்; எளியவர்களின் தாய்õ யார், எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டாலும், அங்கேயே அப்பொழுதே காப்பாற்றுவாள்õ--

50 ''இவளுடைய மடியில் ஒருமுறை அமர்ந்தவர் எல்லா சங்கடங்களி­ருந்தும் விடுபட்டுவிடுகிறார். இவளுடைய நிழ­ல் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவராவார்.--

51 ''இதுதான் அந்த துவாரகை; துவாராவதீõஃஃ மிரீகர் கிளம்பியபோது பாபா உதீப் பிரஸாதம் அளித்து அவருடைய தலையில் தம் அபய ஹஸ்தத்தை (காக்கும் கரத்தை) வைத்தார்.

52 திடீரென்று பாபா மிரீகரை ஒரு கேள்வி கேட்டார், ''உங்களுக்கு நீளமான ஆசாமியையும் அவனுடைய தோன்றி மறையும் விநோதத்தையும்பற்றித் தெரியுமா?ஃஃ

53 இடக்கை விரல்களையும் உள்ளங்கையையும் வளைத்துக்கொண்டு, இடமுழங்கையை வலக்கையின்மேல் வைத்துக்கொண்டு, இடக்கையை பாம்பின் தலை ஆடுவதுபோல் அசைத்து அவர் சொன்னார், ''அவன் எவ்வளவு பயங்கரமானவன்õ--

54 ''ஆயினும் அவன் நம்மை என்ன செய்துவிட முடியும்? நாம் துவாரகாமாயீயின் குழந்தைகளன்றோ? அவளுடைய சக்தியை யாரால் அறிந்துகொள்ள முடியும்? அவளுடைய அற்புதச் செயலைக் காத்திருந்து பார்ப்போம்õ--

55 ''நம்மை ரட்சிக்கும் தாயாக துவாரகாமாயீ இருக்கும்போது, நீளமான ஆசாமியால் எப்படிக் கொல்ல முடியும்? அவனுடைய கொல்லும் சக்தி துவாரகாமாயீயின் ரக்ஷிக்கும் சக்தியின் முன் எம்மாத்திரம்?ஃஃ

56 அந்த சமயத்தில் பாபா ஏன் இந்தப் பிரசங்கத்தைச் செய்தார்? மிரீகருக்கும் இந்தப் பிரசங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? அங்கிருந்த எல்லாரும் அறிந்துகொள்ள விரும்பினர்.

57 ஆனால், பாபாவைக் கேட்க யாருக்குமே தைரியம் இல்லை. ஆகவே, பாபாவின் பாதங்களில் சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டு, ''சிதலீ செல்ல நேரமாகிவிட்டதுஃஃ என்று சொல்­க்கொண்டே மிரீகர் மசூதியின் படிகளில் இறங்கினார்.

58 அவரும் கூடவேயிருந்த மாதவராவும் ஸபாமண்டபத்தின் வாயிலை அடைவதற்கு முன்னரே பாபா மாதவராவை, ''ஒரு கணம் இங்கு வாஃஃ என்று அழைத்தார்.

59 பிறகு பாபா சொன்னார், ''சாமா1, நீயும் தயாராகி அவருடன் செல், சிதலீக்கு ஒரு சுற்றுப் போய்விட்டு வாõ சுகமான அனுபவம் கிட்டும்.ஃஃ

60 உடனே சாமா படிகளில் இறங்கிவந்து மிரீகரிடம் சென்று, ''நான் உங்களோடு டாங்காவில் (குதிரைவண்டியில்) சிதலீக்கு வரவேண்டும்.--

61 ''நான் வீட்டிற்குப் போய்ச் சடுதியில் தயார் செய்துகொண்டு வந்துவிடுகிறேன். நானும் உங்களுடன் சிதலீக்குச் செல்லவேண்டுமென்று பாபா விரும்புகிறார்.ஃஃ

62 மிரீகர் அவரிடம் கூறினார், ''சிதலீ வரைக்கும் அவ்வளவு தூரம் வந்து நீர் என்ன செய்யப்போகிறீர்? உமக்கு அனாவசியமான தொந்தரவு அன்றோõஃஃ

63 மாதவராவ் திரும்பிச் சென்று பாபாவிடம் நடந்ததைக் கூறினார். பாபா சொன்னார், ''சரி, போõ நமக்கென்ன நஷ்டம்?--

64 ''மந்திரம், புண்ணிய தீர்த்தம், பிராமணர், தெய்வம், ஜோசியர், வைத்தியர், குருராயர் - இது விஷயங்களில் எவ்வளவு நம்பிக்கையோ, அவ்வளவே அதி­ருந்து விளையும் பலனும்.--

65 ''நாம் எப்பொழுதுமே மற்றவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு உபதேசங்களை அளிக்க வேண்டும். அவரவர்களுடைய விதிப்படியே நிச்சயமாக எல்லாம் நடக்கும்õஃஃ

66 திடீரென்று மிரீகருக்கு ஸந்தேஹம் எழுந்ததுõ பாபாவினுடைய திருவாய்மொழியை மதிக்கவேண்டும். ஆகவே, அவர் மாதவராவுக்கு ஓசை செய்யாது ஒரு சைகை காட்டினார். சிதலீக்குத் தம்முடன் வரும்படி அழைத்தார்.

67 ஆனால், மாதவராவ் அப்பொழுது சொன்னார், ''பொறுங்கள்; நான் உங்களுடன் வருகிறேன். பாபாவிடம் மறுபடியும் சென்று அனுமதி வாங்கிக்கொண்டு வருகிறேன்õ அவர் 'சரிஃ என்று சொன்னவுடன் வந்துவிடுகிறேன். இதோ வந்துவிடுகிறேன்.--

68 ''நான் வருவதற்காகக் கிளம்பினேன்; நீங்கள் என்னைத் திருப்பியனுப்பிவிட்டீர்கள். பாபா சொன்னார், 'சரி போõ நமக்கென்ன நஷ்டம்?ஃ என்று. என்னை அங்கேயே உட்காரவைத்துவிட்டார்.--

69 ''இப்பொழுது நான் மறுபடியும் கேட்கிறேன். அவர் 'சரிஃ என்று சொன்னவுடனே திரும்பி வருகிறேன். பாபா என்ன சொல்கிறாரோ அதைச் செய்கிறேன். நான் அவருடைய ஆணைக்கு அடிபணியும் தாஸன் அல்லேனோ.ஃஃ

70 சாமா பாபாவிடம் சென்று கேட்டார், ''மிரீகர் என்னை வரச்சொல்கிறார். என்னைச் சிதலீக்கு அழைத்துக்கொண்டுபோக அனுமதி கேட்கிறார்.ஃஃ

71 ஸாயீ முகத்தில் புன்னகை தவழக் கூறினார், ''சரி, அவர் அழைத்தால் நீ போய் வாõ மசூதிமாயீ என்பது அவளுடைய பெயர்; தான் அளித்த உறுதியி­ருந்து எப்பொழுதாவது பின்வாங்குவாளா என்ன?--

72 ''தாய்க்கு நிகர் தாயே அன்றோõ குழந்தைகளின்மேல் பாசமுள்ளவள் அல்லளோõ ஆயினும், குழந்தைக்கு நம்பிக்கையும் விசுவாசமும் இல்லாவிட்டால், அவளால்தான் என்ன செய்ய முடியும்?ஃஃ

73 மாதவராவ் ஸாயீபாதங்களை வணங்கிவிட்டுக் கிளம்பினார். மிரீகர் உட்கார்ந்து கொண்டிருந்த குதிரைவண்டியில் ஏறி உட்கார்ந்தார்.

74 இருவரும் சிதலீயைச் சென்றடைந்தனர். விசாரித்ததில், வரவேண்டிய ஜில்லா அதிகாரிகள் இன்னும் வந்துசேரவில்லை என்று தெரிந்தது. ஆகவே, அவர்களிருவரும் ஓய்வெடுத்துக்கொண்டனர்.

75 அவர்கள் தங்குவதற்கு ஆஞ்ஜநேயர் கோயி­ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருவருமே பிரயாணம் செய்து களைப்பாக இருந்ததால் அங்கே சென்று ஓய்வெடுத்துக்கொண்டனர்.

76 இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டது. இருவருமே தங்களுடைய ஜமக்காளங்களை விரித்துப் படுக்கை, தலையணை ஆகியவற்றைச் சீர் செய்துகொண்டு ஒரு விளக்கின் ஒளியில் பேசிக்கொண் டிருந்தனர்.

77 தினசரிப் பத்திரிகை ஒன்று அங்கு இருந்தது. மிரீகர் அதைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தார். அவருடைய கவனமெல்லாம் ஒரு விசேஷச் செய்தியைப் படிப்பதில் ஈடுபட்டிருந்தபோது ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது.

78 அந்த விதிவசமானதும் பயங்கரமானதுமான வேளையில், ஒரு பாம்பு அங்கே சுருட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தது. யாருடைய கண்ணிலும் படாமல் அது எங்கிருந்து, எவ்விதமாக, அங்கு வந்தது என்று யாருக்குமே தெரியவில்லை.

79 மிரீகரின் மேல்துண்டின் ஒரு முனை அவருடைய இடுப்பின் பக்கமாகச் சரிந்திருந்தது. அந்த மிருதுவான ஆசனத்தின்மேல் பயமேதுமின்றி ஓசைப்படாமல் பாம்பு உட்கார்ந்துகொண் டிருந்தது.

80 பாம்பு ஊர்ந்து முன்னேறியபோது காகிதம் சலசலவென்று சத்தம் செய்தது. ஆனால், யாருமே அந்தச் சத்தத்தைப் பாம்பாக இருக்குமோவென்று சந்தேகிக்கவில்லை.

81 சூழ்நிலை என்னவோ பயங்கரமாக இருந்தது; ஆயினும் மிரீகரோ செய்தித்தாளை வாசிப்பதில் மூழ்கிப்போயிருந்தார். அங்கிருந்த ஒரு டபேதாரின் (பியூன் - ஏவலர்) மனத்தில்தான் இந்த பயங்கரமான கற்பனை உதித்தது.

82 இந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறதுõ சத்தம் ஏற்படுவது எப்படி? இவ்வாறு கேட்டுக்கொண்டே விளக்கின் பிரகாசத்தை உயர்த்தியபோது அவர் நீளமான ஆசாமியைக் (பாம்பைக்) கண்டார்.

83 பாம்பைப் பார்த்தவுடன் அவர் விறைத்துப் போனார். 'பாம்பு, பாம்புõஃ என்று சன்னமான குர­ல் கூவினார். மிரீகர் இதைக் கேட்டு திடுக்கிட்டார்; உடல் முழுவதும் உதற ஆரம்பித்தது.

84 சாமா முத­ல் திகைப்புற்றுச் செய்வதறியாது போனார். பிறகு அவர் கூறினார், ''பாபாõ என்ன காரியம் செய்துவிட்டீர்கள்? இந்த வேண்டாத அபாயத்தை எங்கிருந்து அனுப்பினீர்கள்? இப்பொழுது நீங்களே இதை விலக்க வேண்டும்.ஃஃ

85 ஆயினும், சூழ்நிலையி­ருந்த ஆபத்தைப் புரிந்துகொண்டு ஒவ்வொருவரும் அவரவர் கையிலகப்பட்டதை எடுத்துக்கொண்டு சந்தடி செய்யாது பாம்பை நோக்கி விரைந்தனர்.

86 அவர்கள் முன்னேறியபோது, பாம்பு மிரீகரின் இடுப்பை விட்டுக் கீழே இறங்கியதைப் பார்த்தனர். அவர்களுக்கு அது ஒரு பாம்பு இறங்குவதாகத் தெரியவில்லை; உயிரைக் குடிக்கக்கூடிய பெரும் ஆபத்தின் முழுவுருவமே இறங்கி வருவது போலத் தெரிந்தது.

87 கிரஹணம் சீக்கிரமாகவே விடுபட்டதுõ பாம்பு கீழே இறங்கி வந்தவுடன் அவர்கள் கைகளி­ருந்த ஆயுதங்களெல்லாம் பாம்பின்மேல் மின்னலெனப் பாய்ந்து அதைக் கண்டதுண்டங்களாக்கிவிட்டன.

88 இவ்விதமாக கண்டத்தி­ருந்து தப்பித்த மிரீகர் உணர்ச்சிவசப்பட்டார். ஸமர்த்த ஸாயீயின் மீதிருந்த பிரேமை பொங்கி வழிந்தது.

89 உடல் நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, பிரேமை கண்ணீராகப் பொழிந்தது. ''ஓ, எப்பேர்ப்பட்ட ஆபத்து விலக்கப்பட்டதுõ பாபாவுக்கு இது முன்கூட்டியே எப்படித் தெரிந்திருந்தது?--

90 ''உண்மையிலேயே பெரிய கண்டத்தி­ருந்து தப்பித்துக்கொண்டேன்õ எவ்வளவு சரியான சமயத்தில் பாபா என்னை எச்சரித்தார்õ தேவையில்லை, வேண்டாவென்று நான் சொன்னபோதிலும், சாமாவை டாங்காவில் உட்காரவைத்து எனக்கு உதவியாக அனுப்பினார்.--

91 ''வாஸ்தவமாகவே அவர் தயா ஸாகரம்õ நடக்கப்போவதை முன்கூட்டியே அறியும் ஞானந்தான் என்னேõ கெட்டகாலம் எதிர்கொண்டிருப்பதை அறிந்து, சரியான அறிவுரை தந்தார்.ஃஃ

92 தம்மை தரிசனம் செய்வதின் மஹாத்மியத்தையும் மசூதியின் பெருமையையும் பாபா அவர்களுடைய மனத்தில் பதியச் செய்தார். இந்த லீலையின் மூலமாக, தமக்கு பக்தர்களின் மீதிருக்கும் பிரேமையை சுலபமாக எடுத்துக்காட்டினார்.

93 இப்பொழுது நானா டெங்கலே என்ற பெரிய ஜோதிடர், ஸ்ரீமான் புட்டிக்கு1 ஒரு சமயம் என்ன சொன்னார் என்று கேளுங்கள்.

94 ''இன்று உங்களுக்கு அமங்கலமான நாள்; ஒரு கண்டம் நேரவிருக்கிறது. ஆயினும் தைரியமாகவும் விழிப்புடனும் இருங்கள்.ஃஃ

95 டேங்கலே இவ்வாறு சொன்னதைக் கேட்ட பாபூஸாஹேப் புட்டி கலவரமடைந்து கவலைப்பட்டுக்கொண்டே இருந்தார். நாள் நகர மறுத்ததுõ

96 பிறகு, பாபூஸாஹேப் புட்டியும் நானா டேங்கலேவும் மற்றவர்களும் தினமும் செல்லும் நேரத்தில் மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னிலையில் அமர்ந்தனர்.

97 பாபா பளிச்சென்று கேட்டார், ''இந்த நானா (டேங்கலே) என்ன சொல்கிறார்? அவர் உம்மைக் கொன்றுவிடத் திட்டமிட்டுவிட்டாரோõ ஆனால், நாம் பயப்பட வேண்டியதில்லைõ--

98 ''அவர் உம்மை எப்படிக் கொல்கிறார் என்று பார்த்துவிடுவோம்õ உம்மால் முடிந்தால் என்னைக் கொன்றுவிடும் என்று தைரியமாக அவரிடம் சொல்லும்õஃஃ இந்த சம்பாஷணை முடிந்த பிறகு நடந்த அற்புதம் என்னவென்று பார்ப்போம்.

99 அன்று மாலை பாபூஸாஹேப் புட்டி மலங்கழிக்கக் கழிவறைக்குச் சென்றபோது ஒரு பாம்பு அந் நேரத்தில் அங்கு புகுந்துகொண் டிருந்தது.

100 அந்த பயங்கரமான நிலைமையைப் பார்த்துவிட்டு பாபூஸாஹேப் உடனே வெளியே வந்துவிட்டார். பாபூஸாஹேப்பின் சிப்பாய் லஹானூ பாம்பை ஒரு கல்லால் அடித்துக் கொன்றுவிடலாம் என்று நினைத்தார்.

101 ஆனால், அவர் ஒரு கல்லை எடுக்க முயன்றபோது பாபூஸாஹேப் அவரைத் தடுத்து, ''போய் ஒரு கழியைக் கொண்டு வா; அவசரப்பட்டால் காரியம் கெட்டுவிடும்ஃஃ என்று சொன்னார்.

102 லஹானூ கழியைக் கொண்டுவர விரைந்தபோது, பாம்பு சுவரின்மீது ஏற ஆரம்பித்தது; நிலைதடுமாறிக் கீழே விழுந்து, குழியி­ருந்து 'சரசரஃவென்று ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.

103 பிறகு அவ்விடத்தி­ருந்து பாம்பு மறைந்துவிட்டது. அத்துடன் அதைக் கொல்லவேண்டிய அவசியமும் இல்லாமல் போயிற்று. புட்டி ஸாஹேப்புக்கு பாபா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. தமக்கும் பாம்புக்கும் இருவருக்குமே ஆபத்து வராமல் பாபா காப்பாற்றிய அற்புதத்தைக் கண்டு வியந்தார்.

104 ஸாயீ தம் பக்தர்களுடன் பழகிய அற்புதக் காட்சியைத் தம் கண்களாலேயே நேரில் பார்த்த பாக்கியசா­கள் என்றென்றும் அதை மறக்கமுடியாது.

105 இம்மாதிரியான அனுபவங்கள் பலவற்றை அளித்து, பக்தர்களின் மனத்தை ஸாயீ சுண்டி இழுத்தார். அவ்வனுபவங்களையெல்லாம் இங்கு எழுதக் காகிதம் போதாது; அவ் வர்ணனைகளுக்கு முடிவேயில்லைõ

106 இப்பொழுது, சாவடியில் இரவு ஒரு மணியளவில் பாபாவின் எதிரிலேயே நடந்த அம்மாதிரியான நிகழ்ச்சியொன்றைக் கேளுங்கள்.

107 கோபர்காங்வ் தாலூகாவில் அமீர் சக்கர் என்பவருடைய வதனாக1 கொராலே என்ற கிராமம் இருந்தது. அமீர் சக்கருக்கு பாபாவிடம் ஆழ்ந்த பக்தி இருந்தது.

108 கசாப்புக் கடைகாரக் குடும்பத்தில் பிறந்த அவர் பாந்த்ராவில்2 பிரபலமான தரகராக இருந்தார். அவரை ஒரு கடுமையான வியாதி பீடித்து மோசமாக பலவீனப் படுத்திவிட்டது.

109 இன்னல்கள் நேரும்போது மனிதன் இறைவனை நினைக்கிறான். அவருடைய வியாபார சம்பந்தமான வேலைகளையும் பிரச்சினைகளையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு அமீர் சக்கர் சிர்டீக்கு ஓடினார்.

110 பாண்டவர்களின் தாயார் குந்தி, வனவாசத்திலும் அக்ஞாதவாசத்திலும் (யாருக்கும் தெரியாது மறைந்து வாழ்தல்) எத்தனையோ இன்னல்களைத் தரும்படி ஸ்ரீகிருஷ்ணனை வேண்டினார்õ

111 குந்தி கேட்டார், ''தேவாõ பரமேச்வராõ எவர்கள் சுகத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு சுகத்தைக் கொடு. ஆனால், எனக்கு மட்டும் நான் உன்னை மறவாதிருக்கும் வகையில் தொடர்ச்சியாக இன்னல்களையே கொடு.--

112 ''இதுதான் என்னுடைய ஒரே வேண்டுகோள். எனக்கு ஏதாவது கொடுப்பதாக இருந்தால் இன்னல்களையே கொடு. அப்பொழுதுதான் உன்னுடைய நாமம் என்னுடைய தொண்டையை அலங்கரிக்கும் நிரந்தரமான ஆபரணமாக ஆகும்.ஃஃ

113 கதை கேட்பவர்களும் சொல்பவரும் சேர்ந்து, இதை, இதை மாத்திரமே, ஸாயீயை வேண்டுவோம். ''உங்களுடைய நாமத்தை நாங்கள் என்றும் மறக்காமல் இருப்போமாக; உங்களுடைய பாதங்களை எங்களுக்குப் புக­டமாக அளிப்பீராக.ஃஃ

114 அமீர் சக்கர் பாபாவை நமஸ்காரம் செய்துவிட்டு விதிமுறைகளின்படி அவருடைய கையை முத்தமிட்டார். வியாதியைப்பற்றி விஸ்தாரமாக எடுத்துச்சொல்­த் துன்பத்தி­ருந்து விமோசனம் அளிக்கும்படி வேண்டினார்.

115 தம்மைப் பீடித்திருந்த முடக்குவாத நோய்க்குப் பரிகாரம் கேட்டார். பாபா பதில் சொன்னார், ''போங்கள், போய்ச் சாவடியில் நிம்மதியாக உட்காருங்கள்.ஃஃ

116 பாபா ஒன்று விட்டு ஒரு நாள் இரவைக் கழித்த சாவடியே அமீர் வசிக்கவேண்டிய இடமாயிற்று.

117 முடக்கு வாத நோயினால் பெரும் துன்பத்துக்குள்ளான அமீர்சக்கர், சிர்டீ கிராமத்தில் வேறு ஏதாவதொரு வீட்டில் சௌக்கியமாகத் தங்கியிருக்கலாம்; அல்லது தம்முடைய கிராமமாகிய கொராலேவுக்கே திரும்பிச் சென்றிருக்கலாம்; வேறெந்த இடமும் ஒத்துக்கொண் டிருக்கும்.

118 ஆனால், இந்தச் சாவடியோ புராதனமானது1. மேற்கூரையும் கீழ்த்தளமும் சிதிலமடைந்திருந்தன. கட்டடமே ஜீரணமடைந்திருந்த நிலையில், பல்­யும் பாம்பும் தேளும் ஓணானும் சுதந்திரமாக வாழ்ந்துகொண் டிருந்தன.

119 மேலும், குஷ்டரோகிகள் சிலர் அங்கு வாழ்ந்துகொண் டிருந்தனர். எச்சி­லையோடு எறியப்பட்ட உணவைத் தின்று வாழ்ந்த சில நாய்களும் அங்கு இருந்தன. அமீர் சோகமடைந்தார்; ஆயினும், பாபாவின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு ஏது?

120 சாவடியின் பிற்பாகத்தில் இடிபாடுகள் கொட்டப்பட்டு முழங்கால் ஆழத்திற்குப் பல குழிகள் இருந்தன. அமீர் சக்கருடைய வாழ்க்கை நாயினும் கேவலமானதாகிவிட்டது; ஜன்மமே பயனற்ற யாத்திரைபோல் தெரிந்ததுõ

121 கூரையி­ருந்து மழை நீர் ஒழுக்கு; தரையிலோ தண்ணீர் ஓதம்õ தரை மேடும் பள்ளமும் குழிகளுமாக இருந்தது. இது போதாதென்று குளிரும் வாடைக்காற்றும் உடலை வாட்டின. அமீர் சக்கர் மனமுடைந்து போனார்.

122 மழையும் காற்றும் உண்டுபண்ணிய நிரந்தரமான ஓதத்தையும் குளிரையும் தாங்க முடியாமல், அவருடைய உடம்பின் மூட்டுகளெல்லாம் விறைத்துப் போயின. மருந்து என்னவென்று பார்த்தால், பாபாவினுடைய சொல்லைத்தவிர வேறெதுவும் இல்லைõ

123 பாபா அவரிடம் கண்டிப்பாகச் சொல்­யிருந்தார், ''மழை பெய்யலாம், ஓதமாக இருக்கலாம்; தரை மேடும் பள்ளமும் குழிகளுமாக இருக்கலாம். ஆனால், நீர் அதைப் பற்றியெல்லாம் நினைக்கவே நினைக்காதீர்.ஃஃ

124 சாவடி ஒத்துக்கொள்ளுமா என்ற ஸந்தேஹம் இருந்திருக்கலாம். ஆனால், அமீர், ஸாயீயின் சங்கத்தை மஹா பிரஸாதமாகக் கருதினார். ஸாயீயின் திருவாய்மொழியையே அருமருந்தாக எடுத்துக்கொண்டார். ஆகவே, அவர் சாவடியில் தங்குவதையே சுகமாக ஏற்றுக்கொண்டார்.

125 அமீர்சக்கர் ஒன்பது மாதங்கள் முழுமையாகச் சாவடியில் தங்கினார். படியேறி உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் அறையில் படுக்கை விரித்துத் தூங்கினார்.

126 முடக்குவாதம் அவருடைய உடம்பில் குடிகொண்டுவிட்டது; அல்லது வெளிப்பார்வைக்கு அவ்வாறு தெரிந்தது. நிவாரணமோ முற்றும் விபரீதமாகத் (நேர்மாறாகத்) தெரிந்ததுõ ஆயினும் உள்ளே இருந்த நம்பிக்கையும் விசுவாசமும் அசைக்க முடியாததாக இருந்ததால், நன்மையும் இனிமையுமான முடிவே ஏற்பட்டது.

127 அமீர் ஒன்பது மாதங்களுக்குச் சாவடியில் தங்கும்படி ஆணையிடப்பட்டிருந்தார். தரிசனத்திற்காக மசூதிக்குச் செல்வதற்குக் கூடத் தடைவிதிக்கப்பட்டிருந்ததுõ

128 அமீருக்கு விதிக்கப்பட்ட இடம் சாவடியே. அங்கேயே அவருக்கு சிரமம் ஏதுமின்றி பாபாவின் தரிசனம் கிடைத்தது.

129 காலை மாலை இரண்டு வேளைகளிலும் தரிசனம் கிடைத்தது. ஒன்றுவிட்டு ஒரு நாளைக்குச் சாவடி ஊர்வலத் திருவிழாவையும் அமீர் திருப்தியாகக் கண்டு மகிழ்ந்தார்.

130 தினமும் காலை நேரத்தில் பிச்சை எடுக்கச் செல்லும்போது, பாபா சாவடியின் வழியாகத்தான் செல்வார். ஆகவே, பாபா போகும்போதும் திரும்பி வரும்போதும் இடத்தை விட்டு நகராமலேயே சுலபமாக தரிசனம் கிடைத்தது.

131 அதுபோலவே, தினமும் மாலை நேரத்தில் பாபா சாவடிக்கெதிரே வந்து நிற்பார். தலையையும் ஆட்காட்டி விரலையும் ஆட்டிக்கொண்டே பரவச நிலையில் எல்லா திசைகளுக்கும் வந்தனம் செய்வார்.

132 அங்கிருந்து புட்டிவாடாவின் மூலைக்கு வருவார். பிறகு அங்கிருந்து பக்தர்கள் சூழ மசூதிக்குத் திரும்பிவிடுவார்.

133 சாவடிக்கு ஒருநாள் விட்டு மறுநாள் இரவில் வருவார். சாவடியில் இருவருக்குமிடையே (பாபா-அமீர் சக்கர்) மரப்பலகைகளாலான தடுப்பு ஒன்று, கதவு என்ற பெயரில் இருந்தது. இருவருமே சம்பாஷணை செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.

134 பூஜையும் ஹாரதியும் இதரச் சடங்குகளும் சாவடியில் நடந்தன. இவையனைத்தும் முடிந்தபிறகு, பக்தர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். அதன் பிறகு இவர்கள் இருவருமே சாவகாசமாகப் பரஸ்பரம் பேசிக்கொண்டனர்.

135 வெளிப்பார்வைக்கு அடைபட்ட வாசந்தான். ஆயினும், ஸாயீயிடம் நெருக்கமான அனுபவம் கிடைத்தது. மஹா பாக்கியம் செய்யாமல், இது கிடைப்பது துர்லபம் (அரிது).

136 இருப்பினும் அமீர் ச­ப்படைந்தார். ஒரேயிடத்தில் இருப்பதை அவர் சிறைவாசமாக உணர்ந்தார். வேறு எங்காவது போய்விடவேண்டும் என்று நினைத்தார்.

137 சுதந்திரத்தை விரும்பிய அவர் இன்னொருவரைச் சார்ந்து வாழ்வதை எப்படி விரும்புவார்? 'ஓ, போதும், போதும், இந்த அடைபட்ட வாழ்வுஃ என்னும் உந்துதல் அமீர் மனத்தில் ஏற்பட்டது.

138 பாபாவினுடைய அனுமதியின்றித் தமக்கு நியமிக்கப்பட்ட இடத்தைத் துறந்துவிட்டுப் புறப்பட்டார். கோபர்காங்விற்குச் சென்று, ஒரு தருமசத்திரத்தில் தங்கினார்.

139 அங்கு விளைந்த அற்புதத்தைக் கேளுங்கள். அங்கு மரணதாஹத்தினால் தவித்துக்கொண்டு இறக்கும் தறுவாயி­ருந்த பக்கீர் ஒருவர் அமீர் சக்கரைக் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுக்கும்படி வேண்டினார்.

140 அமீர் தயை கூர்ந்து அவருக்குத் தண்ணீர் கொடுத்தார். தண்ணீர் குடித்து முடித்தவுடன் பக்கீரின் உடல் அங்கேயே அப்பொழுதே உயிர் பிரிந்து தரையில் சாய்ந்தது.

141 பக்கீர் இறந்துவிட்டார். வேறு யாருமே அங்கில்லை; மேலும் அது இரவு நேரம்; அமீர் கலவரமடைந்தார்.

142 'பொழுது விடிந்தால் இந்த திடீர் மரணத்தைப்பற்றி விசாரணை நடக்கும்; சிலர் கைது செய்யப்படுவர்; சர்க்கார் விசாரணை நடக்கும்.--

143 'முழுமையான உண்மையைச் சொன்னாலும், உடனே யார் அதை நிர்த்தாரணம் செய்யப்போகிறார்கள்? சாட்சிகளையும் அவர்கள் சொல்லும் சாட்சியங்களையும் பொறுத்தே தீர்ப்பு அமையும். சட்டத்தின் இயக்கம் அவ்வாறே.--

144 'அந்தப் பக்கீருக்கு நான்தான் குடிக்க நீர் கொடுத்தேன். அவரோ திடீரென்று உயிரிழந்துவிட்டார். இந்த ஸத்தியத்தைச் சொல்லப்போனால் எக்கச்சக்கமாக மாட்டிக்கொள்வேன்.--

145 'நேரிடையாக சம்பந்தப்பட்டவன் என்று தெரிந்தவுடன் என்னை முத­ல் கைது செய்வார்கள். மரணத்திற்கு உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே, நான் நிரபராதி என விடுவிக்கப்படுவேன்.--

146 'காரணம் கண்டுபிடிக்கப்படும் வரையிலான இடைக்காலம், சகிக்க முடியாத துன்பத்தை அளித்துவிடும்.ஃ இவ்வாறு நினைத்து, கணமும் தாமதியாது வந்த வழியே திரும்பிவிடவேண்டும் என்று அமீர் முடிவு செய்தார்.

147 இவ்வாறு முடிவு செய்து இரவோடு இரவாக அவ்விடத்தை விட்டகன்றார். வழியில் தம்மை யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என பயந்துகொண்டு அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டே நடையைக் கட்டினார்.--

148 எப்படிச் சாவடிக்குப் போய்ச் சேருவது? அதுவரை நிம்மதி ஏது? மனம் கலங்கியவாறே அமீர் சிர்டீயை நோக்கி விரைந்தார்.

149 அமீர் தமக்குத் தாமே பேசிக் கொண்டார், ''பாபா, என்ன காரியம் செய்தீர்கள்õ நான் செய்த எந்தப் பாவம் என்னை இப்பொழுது தாக்குகிறது? ஓ, என்னுடைய வினையே என்னைச் சுடுகிறது. இது எனக்கு இப்பொழுது ஸம்பூர்ணமாகத் (முழுமையாகத்) தெரிகிறது.--

150 ''சுகத்தை நாடி நான் சாவடியை விடுத்தேன். ஆகவே, எனக்கு தண்டனை அளித்துவிட்டீர்கள். ஆனால், இப்பொழுதோ, இந்த ஆபத்தி­ருந்து என்னை விடுவித்து சிர்டீ கொண்டுபோய்ச் சேருங்கள்.ஃஃ

151 தருமசாலையில் பிணத்தை விட்டுவிட்டுச் சட்டெனக் கிளம்பி இரவோடு இரவாக சிர்டீக்கு விரைந்தார்.

152 'பாபா பாபாஃ என்று சொல்­க்கொண்டே, அவருடைய மன்னிப்பை வேண்டியவாறே சாவடிக்கு வந்துசேர்ந்தார். அதன் பிறகுதான் மனம் நிம்மதியடைந்தது.

153 அமீர் சரியான பாடம் கற்றுக்கொண்டார். அந்நாளி­ருந்து அமீர் துன்மார்க்கத்தை அறவே ஒழித்து சன்மார்க்க ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார்.

154 அவருடைய நம்பிக்கையும் விசுவாசமும் குணமளித்தன. முடக்குவாத நோயி­ருந்து விடுபட்டார். வ­கள் மறைந்தன. அதற்குப் பிறகு நடந்த சம்பவமொன்றைக் கேளுங்கள்.

155 சாவடி மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. தென்கிழக்குப் பகுதிதான் பாபாவின் இருப்பு. அப் பகுதி நான்கு பக்கங்களிலும் மரப்பலகைகளால் தடுக்கப்பட்டிருந்தது. பாபா அங்கேதான் தூங்குவார்.

156 இரவு முழுவதும் விளக்குகள் எரிந்தன; பாபா விளக்கொளியில்தான் தூங்குவார். வெளியில் இருட்டில் பக்கீர்களும் பைராகிகளும் பிச்சைக்காரர்களும் அமர்ந்திருப்பர்.

157 அமீர் அவர்களில் ஒருவராகத்தான் நடத்தப்பட்டார். இதர மனிதர்கள் சிலரும் அங்கிருந்தனர். அவர்களும் அவ்விடத்திலேயே உறங்கினர். இவ்விதமாக, அங்கே பல மக்கள் இருந்தனர்.

158 பற்றற்றவரும் விசுவாசம் நிறைந்த பக்தருமான அப்துல், பாபாவுக்குப் பின்னால் தட்டுமுட்டுச் சாமான்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில், கூப்பிட்ட குரலுக்குப் பணி செய்யத் தயாராக இருந்தார்.

159 ஒரு சமயம் நடுராத்திரியில் பாபா திடீரென்று அப்துலை உரக்கக் கூவியழைத்து, ''என்னுடைய படுக்கைக்கருகில் ஒரு பிசாசு நின்றுகொண் டிருக்கிறது பார்õஃஃ என்று சொன்னார்.

160 திரும்பத் திரும்பக் கூவி அழைக்கவே, கையில் விளக்குடன் அப்துல் அங்கு விரைந்து வந்தார். பாபா அவரிடம் உரக்கச் சொன்னார், ''அது சற்று நேரத்திற்கு முன்பு இங்கேதானே இருந்ததுõஃஃ

161 அப்துல் சொன்னார், ''எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டேன். என் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.ஃஃ பாபா பதில் கூறினார், ''கண்களை அகல விரித்து சகல இடங்களிலும் உன்னிப்பாகப் பார்.ஃஃ

162 அப்துல் மறுபடியும் மறுபடியும் பார்த்தார். பாபா தரையைத் தம்முடைய ஸட்காவால் (குறுந்தடியால்) தட்ட ஆரம்பித்தார். வெளியில் உறங்கிக்கொண் டிருந்த மக்களனைவரும் விழித்துக்கொண்டு என்ன நடக்கிறதென்று பார்த்தனர்.

163 அமீர் சக்கரும், ''இதென்ன இன்று இவ்வளவு கலாட்டா? எதற்காக இந்த நடுநிசியில் ஸட்காவால் மேலும் மேலும் தட்ட வேண்டும்?ஃஃ என்று கேட்டுக்கொண்டே எழுந்தார்.

164 பாபாவின் இந்த லீலையைப் பார்த்தவுடனே அமீரின் மனத்தில், 'பாம்பு ஒன்று நுழைந்திருக்கவேண்டும், அதை பாபா பார்த்துவிட்டார் போ­ருக்கிறதுஃ என்று தோன்றியது.

165 அமீருக்கு பாபாவிடம் நிறைய அனுபவம் இருந்தது; அவருடைய சுபாவமும் பேச்சின் பாணியும் தெரிந்திருந்தன. ஆகவே, அவருக்கு எல்லாம் புரிந்தது.

166 பக்தர்களுக்கு ஆபத்து ஏதும் நெருங்குவதாகத் தெரிந்தால், பாபா அவ்வாபத்து தம்மைச் சூழ்ந்திருப்பதாகச் சொல்வார். அமீருக்கு இந்த சங்கேத (குறிப்பால் உணர்த்தும்) பாஷை தெரிந்திருந்தது. ஆகவே, அவர் விஷயம் என்னவென்று அனுமானித்தார்.

167 திடீரென்று தம்முடைய படுக்கையினருகே ஏதோ நெளிவதைப் பார்த்தார். 'அப்துல்õ விளக்கு, அந்த விளக்கைக் கொண்டு வா சீக்கிரம்ஃ என்று அமீர் கத்தினார்.

168 விளக்குக் கொண்டுவரப்பட்ட உடனே ஒரு பெரிய பாம்பு சுருட்டிக்கொண்டு படுத்திருந்ததைப் பார்த்தார். விளக்கொளியால் திகைத்துப்போன பாம்பு, தலையை மேலும் கீழும் ஆட்டியது.

169 பாம்பு அங்கே கூடியிருந்தவர்களால் சாந்தியளிக்கப்பட்டது. 'பக்தர்களை எச்சரிப்பதில் என்ன விநோதமான செயல்முறைõஃ என்று சொல்­க்கொண்டே அங்கிருந்தவர்கள் பாபா செய்த மஹத்தான உபகாரத்தைப் போற்றி நன்றி செலுத்தினர்.

170 பிசாசு என்ன, விளக்கென்னõ இதெல்லாம் தம் பக்தர்களுக்கு நேரவிருக்கும் ஆபத்தி­ருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக பாபா செய்த சாமர்த்தியமான செயல்.

171 பாபாவினுடைய வாழ்க்கைச் சரித்திரத்தில் பாம்புகளைப்பற்றிய கணக்கற்ற நிகழ்ச்சிகளை எடுத்துச் சொல்லலாம். விரிவுக்கு அஞ்சி அவற்றில் சிலவே இங்கே சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

172 'பாம்புகளும் தேள்களும் நாராயணனேஃ என்கிறார் ஞானி துகாராம். 'ஆனால், அவற்றை தூரத்தி­ருந்து வணங்க வேண்டும்.ஃ இதுவும் அவர் கூறியதேõ

173 அவர் மேலும் கூறியதாவது, 'அவை அதர்மச் செயல்களில் ஈடுபட்டவை. ஆகவே, அவற்றைக் காலணிகளால்தாம் கவனிக்க வேண்டும்õஃ இதற்கு அர்த்தம் என்னவென்றால் பாம்புகளையும் தேள்களையும் எவ்வாறு நடத்த வேண்டுமென்பது நம் எவருக்குமே தெளிவாகத் தெரியவில்லை என்பதே.

174 இங்கு அறியப்படவேண்டிய உண்மை என்னவென்றால், ஒருவருடைய சுபாவமும் வாழ்க்கை அணுகுமுறையும் எவ்வாறோ, அவ்வாறே அவருடைய செயல்களும் அமையும் என்பதே.

175 பாபாவோ இந்தக் கேள்விக்கு ஒரே விடைதான் வைத்திருந்தார். அவர் சொல்வார், ''எல்லா உயிரினங்களும் சரிசமானமே; ஆகவே, அனைத்து உயிர்களிடத்தும் அஹிம்ஸையே பிரமாணம்.ஃஃ

176 பாம்பானாலும் தேளானாலும் எல்லா உயிர்களினுள்ளும் இறைவன் உறைகிறார். ஆகவே, இறைவன் விருப்பப்படாது, பாம்பாலும் தேளாலும் யாருக்காவது இன்னல் விளைவிக்க முடியுமா?

177 இப் பிரபஞ்சமே இறைவனால் நிர்வகிக்கப்படுகிறது. இறைவனுடைய ஆணையி­ருந்து சுதந்திரம் பெற்றவர் எவருமே இல்லை. இது பாபாவின் அநுபவ ஞானம்; ஆனால், நம்மையோ இழிவான அஹங்காரம் விடுவதாக இல்லைõ

178 குளத்தில் விழுந்துவிட்ட தேள், வெளிவருவதற்கு உருண்டு புரண்டு முயற்சி செய்தும் பயனில்லாமல் மூழ்கிப் போகிறது. இதைப் பார்த்த ஒருவர், 'நீ மற்றவர்களைச் சித்திரவதை செய்கிறாயே, அது போல்தான் இதுஃ என்று சொல்­க் கைதட்டி மகிழ்கிறார்.

179 கைதட்டல் சத்தத்தைக் கேட்ட ஒருவர் குளத்திற்கு ஓடிவந்து பலதடவை மூழ்கியும் மிதந்தும் போராடிக்கொண் டிருக்கும் தேளைப் பார்க்கிறார்; கருணையால் உந்தப்படுகிறார்.

180 தேளின் அருகில் சென்று கட்டைவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் கெட்டியாகப் பிடித்துத் தூக்குகிறார். தேள் தன்னுடைய சுபாவத்தின்படி அவரை எதிர்த்து, சுண்டு விரலைக் கொட்டுகிறது.

181 நம்முடைய ஞானமெல்லாம் எதற்கு உபயோகம்? நாம் முழுக்க முழுக்க ஒரு மஹாசக்தியின் ஆதிக்கத்தில் வாழ்கிறோம். புத்தியைக் கொடுப்பவன் நாராயணன்; அவனுடைய சித்தம் எவ்வாறோ அவ்வாறே எல்லாம் நடக்கும்.

182 பலபேர்களுக்குப் பலவிதமான அநுபவங்கள். நானும் என்னுடைய அநுபவத்தை இங்கு விவரிக்கிறேன். ஸாயீயின் திருவாய்மொழிக்கு மரியாதையளித்துப் பரிபூரணமாக நம்பவேண்டும். ஏனெனில், அம்மாதிரியான உறுதியான விசுவாசத்தினால்தான் அவருடைய வைபவத்தை அநுபவிக்க முடியும்.

183 காகா ஸாஹேப் தீட்சிதர் தினமும் பக­ல் ஏகநாத பாகவதத்தையும் இரவில் பா(ஆஏஅ)வார்த்த இராமாயணத்தையும் வாசித்துவந்தார்.

184 அவர், இறைவனுக்கு மலர்கள் சமர்ப்பணம் செய்வதை மறந்திருக்கலாம்; நீராடுவதற்கும் மறந்திருக்கலாம்; எத்தனையோ நியம நிஷ்டைகளையும் மறந்து போயிருக்கலாம்; இவ்விரண்டு புராண நூல்களைப் பாராயணம் செய்யும் நேரத்தை அவர் என்றுமே மறந்ததில்லை.

185 இரண்டுமே ஏகநாதர் அருளிய நூல்கள்; ஆன்மீகத்தின் சாரம். இந்தப் பாராயணம் தீட்சிதருக்கு பாபா செய்த அநுக்கிரஹம்.

186 ஆத்மஞானம், வைராக்கியம், வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறைகள் இவை மூன்றும் இவ்விரண்டு நூல்களிலும் திவ்விய முக்குண ஜோதியாகப் பிரகாசிக்கின்றன.

187 எந்த பாக்கியவானுடைய உதடுகளுக்கு இந்த தேவாமிருதத்தையொத்த ஆத்ம போதனை வருகிறதோ, அவர் மூன்று விதமான தாபங்களையும்1 உடனே கடந்துவிடுவார்; மோட்சம் அவர் பாதங்களை நாடும்.

188 தீட்சிதர் பாராயணம் செய்யும்போது யாராவது கேட்கவேண்டும். ஸாயீயினுடைய கிருபையினால் எனக்கு பாகவதத்தைக் கேட்கும் நல்வாய்ப்புக் கிடைத்தது. அது எனக்கு ஸாயீ செய்த பெரிய உபகாரம்.

189 நான் பக­லும் இரவிலும் இப் புனிதமான கதைகளைக் கேட்கப் போனேன். நான் சென்ற சமயம் அதிருஷ்டவசமாக ஒரு தொடர் ஆரம்பமாகியது; கேட்டுத் தூய்மையடைந்தேன்.

190 ஒருநாள் இரவு, அந்தப் பரமபவித்திரமான கதையைக் கேட்டுக்கொண் டிருந்தபோது சிறியதானாலும் விசித்திரமான சம்பவமொன்று நிகழ்ந்தது. கதை கேட்பவர்களேõ இக் கதையைக் கேளுங்கள்.

191 நான் என்ன செய்யமுடியும்? ஒரு கதையை விவரித்துக்கொண் டிருக்கும்போதே நடுவில் மற்றொரு கதை என் மனத்தில் தோன்றுகிறது. கேட்பதற்கு அருகதையுள்ள கதையென்று தெரிந்த பிறகும், நான் எவ்வாறு அதை அசட்டை செய்யமுடியும்?

192 ராமாயணத்தி­ருந்து ஒரு சுவாரசியமான கதை நடந்துகொண் டிருந்தது. ஹனுமார் தம் தாயாரிடமிருந்து ஸ்ரீராமர் யார் என்று தெரிந்துகொண் டிருந்தபோதிலும், தம் சுவாமியின் சக்தியைப் பரீட்சை செய்து பார்க்க முயற்சி செய்து பெருந்துன்பத்தில் மாட்டிக்கொண்டார்.

193 ஸ்ரீராமனுடைய அம்பின் இறகுகள் எழுப்பிய காற்று அவரை வானத்தில் புரட்டி உருட்டியதில் திக்குமுக்காடிப்போய் மூச்சுத் திணறினார். அவருடைய தகப்பனாரான வாயு பகவான் அந்த சமயத்தில் அங்கு வந்து சேர்ந்தார்.

194 தகப்பனாரின் புத்திமதியின்படி ஹனுமார் ஸ்ரீராமரை சரணடைந்தார். கதையின் இந்தப் பகுதி விவரிக்கப்பட்டுக்கொண் டிருந்தபோது என்ன விநோதம் நடந்ததென்று பாருங்கள்.

195 கேட்பவர்களுடைய கவனம் கதையில் மூழ்கிப்போயிருந்தபோது பேராபத்தின் உருவமான தேள் ஒன்று யாருக்கும் தெரியாமல் அங்கே தோன்றியது.

196 தேளுக்கென்ன கதையில் அவ்வளவு ஈடுபாடுõ எனக்குச் சற்றும் தெரியாமலேயே என் தோளின்மீது குதித்து அங்கே பத்திரமாக உட்கார்ந்துகொண்டு கதையின் சுவையை அனுபவித்தது.

197 கதை கேட்கும்போதும் பாபாவின் பாதுகாப்பை அனுபவித்தேன்; நடந்தது ஒன்றுமே எனக்குத் தெரியாது. ஹரிகதையை கவனமாகக் கேட்பவனை ஹரியே ரட்சிக்கிறார் அல்லரோõ

198 யதேச்சையாக என் பார்வை அப்பக்கம் திரும்பியது. என்னுடைய வலத்தோளின் மீதிருந்த மேல்துண்டின்மீது பயங்கரமான தேள் ஒன்று சுகமாக அமர்ந்து கொண்டிருந்தது.

199 தம்முடைய ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டு கவனமாகக் கதை கேட்பவரைப்போல் ஆடாது அசையாது அமைதியாக உட்கார்ந்துகொண் டிருந்தது.

200 வாலைச் சிறிது அசைத்திருந்தாலும், சுபாவத்தினால் என்னைக் கொட்டிப் பெருந்துன்பம் அளித்திருக்கும்.

201 ஸ்ரீராமருடைய கதை மேலும் மேலும் சுவாரசியமடைந்து, பிரவசனம் செய்பவரும் கதை கேட்பவர்களும் கதையில் மூழ்கிப்போயிருந்த நேரத்தில், இந்த துஷ்ட ஜந்து அவ்வானந்தமான சூழ்நிலையை பங்கப்படுத்தியிருக்கும்.

202 ஆயினும், ஸ்ரீராம காதையின் மஹிமையின் எதிரில் விக்கினங்கள் சக்தியிழந்துவிடும். துஷ்ட உயிரினங்களும் சுபாவத்தை மறந்து கதையை ரசிக்கும்.

203 துஷ்டஜந்துவின் தாற்கா­கமான நற்குணத்தை நான் நம்பத் தயாராக இல்லை. நிலைமை கட்டுக்கடங்காமல் போவதற்கு முன், தேளை லாவகமாக எடுத்து, வெளியே வீசிவிடவேண்டும் என்று என் புத்தியில் தோன்றியது ஸ்ரீராமனின் கிருபையே.

204 ஆகவே, மிக ஜாக்கிரதையாக என்னுடைய மேல்துண்டின் இரண்டு நுனிகளையும் ஒன்றுசேர்த்துத் தேளைத் துண்டிற்குள் சுருட்டித் தோட்டத்திற்கு எடுத்துக்கொண்டு போய்த் துண்டைப் பிரித்துத் தேளை விடுதலை செய்தேன்.

205 தேள் பயங்கரமான பிராணி; எதிர்பாராத வேளையில் தன் சுபாவத்தைக் காட்டிவிடும். இவ்விதமாக நான் பயந்த போதிலும், இது விஷயமாக பாபாவின் ஆணை உறுதியாக இருந்தது. ஆகவே, நான் எப்படித் தேளைக் கொல்வேன்õ

206 செவிமடுப்பவர்கள் இங்கு, 'தேள் கொல்லப்பட வேண்டிய விஷ ஜந்துதானே? அது கொட்டினால் சுகமாகவா இருக்கும்? ஏன் அதைக் கொல்லக்கூடாது?ஃ என்ற கேள்விகளை எழுப்பலாம்.

207 பாம்புகளையும் தேள்களையும் மற்ற நச்சு உயிரினங்களையும் யாரும் அலட்சியம் செய்யமாட்டார்கள். பாபா ஏன் அவற்றைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடும்படி சொல்கிறார்?

208 கதை கேட்பவர்கள் எழுப்பும் இந்த சந்தேகம் நியாயமானதே. எனக்கே இந்த சந்தேகம் இருந்தது. ஏற்கெனவே இம்மாதிரியானதொரு சந்தர்ப்பத்தில் பாபா தெரிவித்த கருத்தைக் கேளுங்கள்.

209 அது இதைவிடக் கடினமான கேள்வியாகும். ஒரு சமயம் தீக்ஷிதர் வாடா (சத்திரம்) மாடியில் ஜன்னலருகில் பயங்கரமான பாம்பொன்று காணப்பட்டது.

210 ஜன்னல் சட்டத்திற்குக் கீழேயிருந்த துவாரத்தின் வழியாக அறைக்குள் புகுந்திருக்கலாம். விளக்கொளி கண்ணைக் கூசியதால் சுருட்டிக்கொண்டு அங்கேயே உட்கார்ந்திருந்தது.

211 விளக்கின் பிரகாசத்தால் திகைத்துப் போயிருந்த பாம்பு, மனித நடமாட்டத்தைக் கண்டு அஞ்சியது. கூச்சலையும் குழப்பத்தையும் கண்டு திடுக்கிட்டுச் சிறிது நேரம் ஆடாமல் அசையாமல் இருந்தது.

212 முன்னுக்கும் நகரவில்லை; பின்னுக்கும் நகரவில்லை; தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டியது. இதனால், பாம்பை எப்படிக் கொல்வது என்பதுபற்றிய கலவரம் அங்கு ஏற்பட்டது.

213 சிலர் குச்சிகளையும் சிலர் கழிகளையும் எடுத்துக்கொண்டு விரைந்தனர். பாம்பு இருந்த இடம் குறுகலாகவும் இடக்குமுடக்காகவும் இருந்ததால், பாம்பை அடிக்க முயன்றவர்கள் மூளையைக் கசக்கினர்.

214 சுவரில் இறங்கத் துரிதமான முயற்சியொன்று செய்திருந்தால், நேராக என்னுடைய படுக்கைக்குள் புகுந்துகொண் டிருக்கும். எனக்குப் பெரும் இக்கட்டை விளைவித்திருக்கும்.

215 அடிகள் உட­ன் மர்மப் பகுதிகளில் விழாது தப்பியிருந்தால், பாம்பு வஞ்சம் வைத்துக்கொண்டு, பிற்பாடு பெரும் சேதத்தை விளைவித்திருக்கும். அது எங்கே பதுங்கிக்கொண் டிருக்கிறது என்பதை உன்னிப்பாகப் பார்க்க, விளக்குகள் அருகே கொண்டுவரப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பாம்பு தப்பித்துக்கொண்டது.

216 அதற்கு ஆயுள் முடியவில்லை; எங்களுக்கும் தெய்வபலம் இருந்தது. நேரம் மிகக் கெட்டதாக இருந்தபோதிலும், பாபாவால் காப்பாற்றப்பட்டோம்.

217 தானும் பயப்படாது, எங்களையும் பயமுறுத்தாது, இருதரப்பினரும் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் பாம்பு துரிதமாக, வந்த வழியே நழுவிவிட்டது.

218 முக்தாராம், 'ஐயோ பாவம் பாம்புõ பிழைத்தது விசேஷம்; துவாரத்தி­ருந்து நழுவி ஓடியிராவிட்டால் உயிரிழந்திருக்கும்ஃ என்று சொல்­க்கொண்டே எழுந்தார்.

219 முக்தாராமினுடைய தயைமிகுந்த நோக்கு என் மனத்தை உறுத்தியது. துஷ்டஜந்துவின் மேல் என்ன கருணை வேண்டிக் கிடக்கிறது? இப்படியிருந்தால் உலகம் எவ்வாறு இயங்கும்?

220 முக்தாராம் என்றோ ஒருநாள்தான் இங்கு வருகிறார். நாமோ தினமும் காலையிலும் மாலையிலும் இங்கேதான் உட்காருகிறோம். என்னுடைய படுக்கை பாம்பு வந்த ஜன்னலுக்கருகில் இருந்தது. ஆகவே, நான் முக்தாராம் சொன்னதை விரும்பவில்லை.

221 அவர் தம்முடைய வாதத்தை முன்வைத்தார்; நான் எதிர்வாதம் செய்தேன். வாக்குவாதம் சூடேறியது; முடிவொன்றையும் காணமுடியவில்லை.

222 'பாம்புகள் ஒருகணங்கூடத் தாமதியாது கொல்லப்பட வேண்டும்ஃ என்று ஒருவர் சொன்னார். 'நிரபராதியான ஜீவனை எதற்காக வெறுக்க வேண்டும்?ஃ என்று மற்றவர் கேட்டார்.

223 ஒரு கட்சி முக்தாராமின் வாதத்தைக் கோபத்துடனும் வெறுப்புடனும் எதிர்த்தது. ஒரு கட்சி என்னுடைய வாதத்தை எதிர்த்தது. பரஸ்பரம் வாதப்பிரதிவாதம் பலத்தது; முடிவேதும் ஏற்படவில்லை.

224 முக்தாராம் மாடியி­ருந்து கீழே இறங்கிப் போனார். நான் பாம்பு தோன்றிய துவாரத்தை அடைத்துவிட்டு இடத்தை மாற்றிப் படுக்கையை விரித்தேன்.

225 தூக்கம் என் கண்களைச் செருகியது; மற்றவர்களும் தூங்கப் போயினர். நான் கொட்டாவி விட ஆரம்பித்தேன். விவாதம் தானாகவே முடிவுற்றது.

226 இரவு கழிந்தது; பொழுது புலர்ந்தது. நாங்கள் காலைக்கடன்களை முடித்தோம். பாபாவும் லெண்டியி­ருந்து திரும்பினார். மசூதியில் மக்கள் நிறைந்திருந்தனர்.

227 தினமும் காலையில் மசூதிக்குப் போகும் நேரத்தில் நான் போய்ச் சேர்ந்தேன். முக்தாராமும் மற்றவர்களும் வந்து அவரவர்கள் இடங்களில் உட்கார்ந்தனர்.

228 ஒருவர் கையில் புகையிலையைக் கசக்கிக்கொண் டிருந்தார். இன்னொருவர் பாபாவின் புகைபிடிக்கும் மண் குழாயை (சில்­மை) நிரப்பிக்கொண் டிருந்தார். சிலர் பாபாவின் கைகளையும் பாதங்களையும் பிடித்துவிட்டுக்கொண் டிருந்தனர். இந்த ரீதியில் சேவை நடந்துகொண் டிருந்தது.

229 பாபா எல்லாருடைய எண்ண ஓட்டங்களையும் அறிந்திருந்தார். மெல்­ய குர­ல் ஒரு கேள்வி கேட்டார், 'வாடாவில் நேற்றிரவு என்ன வாதப்பிரதிவாதம் நடந்தது?ஃ

230 நான் என்ன நடந்தது என்பதை நடந்தவிதமாகவே எடுத்துச் சொன்னேன். அம்மாதிரியான சூழ்நிலையில் பாம்பைக் கொல்லலாமா, கொல்லக்கூடாதா என்றும் கேட்டேன்.

231 பாபாவிடம் ஒரே பதில்தான் இருந்தது. பாம்பானாலும் தேளானாலும் எல்லா உயிர்களிலும் இறைவன் உறைகின்றான். ஆகவே, எல்லா உயிர்களிடத்தும் பிரேமை உடையவர்களாக இருங்கள்.

232 இறைவனே இவ்வுலகின் சூத்ரதாரி; அவனுடைய ஆணைப்படியே அனைத்துயிர்களும் செயல்படுகின்றன. பாம்பாயினும் சரி, தேளாயினும் சரி, அவனுடைய ஆணையை மீறிச் செயல்படாது.

233 ஆகவே, எல்லா உயிர்களிடத்தும் பிரேமை செலுத்துங்கள்; தயை புரியுங்கள். சாகசச் செயல்களை விடுத்துப் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் நாடுங்கள். ஸ்ரீஹரியே அனைவரையும் காப்பாற்றுபவன்.

234 பாபா சம்பந்தப்பட்ட எண்ணற்ற கதைகளில் நான் எத்தனை கதைகளைச் சொல்வேன்? ஆகவே, கதை கேட்பவர்கள் எல்லாக் கதைகளி­ருந்தும் சாரத்தையும் தத்துவத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

235 அடுத்த அத்தியாயம் மேலும் சுவாரசியமானது. பாபாவின் சிறந்த பக்தரான தீட்சிதர் பாபாவின் ஆணைப்படி ஓர் ஆட்டை வெட்டவேண்டிய இக்கட்டை சந்திக்க வேண்டியிருந்தது. தீட்சிதருடைய பக்தியையும் குருவாக்கிய பரிபாலனத்தையும் எடுத்துக்காட்டும் கதை அது.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'மரண விபத்துகளை நீக்கி அருள் செய்ததுஃ என்னும் இருபத்திரண்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.