Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 16

16. பிரம்ம ஞான உபதேசம் (பகுதி 1)



ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 ராஜாதிராஜச் சக்கரவர்த்தியும் சாந்தியெனும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தெய்வமும் ஆத்மானந்த ஸாம்ராஜ்யத்தின் தலைவரும் நம்முடைய ஒரே அடைக்கலமுமாகிய குருராஜரை நமஸ்காரம் செய்வோம்.

2 அபேதபக்தி, ஸஹஜ ஸமாதி என்னும் இரண்டு சாமரங்களும் ஆத்மானுபூதி, கைமேல் அனுபவம் என்னும் இரண்டு விசிறிகளும் அவருக்கு அருகே ஸதா மெதுவாக வீசப்படுகின்றன.

3 ஆத்மாவிலேயே லயித்துப் போதல் அவர் தலைக்குமேல் இருக்கும் குடை; சாந்தியும் நல்லுணர்வுகளும் அவருடைய கட்டியங்காரர்களின் கைகளில் இருக்கும் கோல்கள். காம, குரோத, லோப, மோஹ, மத, மாச்சரியங்களுக்கும் மாயைக்கும் அவர் ஸந்நிதியில் இம்மியளவும் இடமில்லை.

4 ஓ, அவருடைய தர்பாரின் கம்பீரந்தான் என்னேõ நான்கு வேதங்களும் ஆறு சாஸ்திரங்களும் பதினெட்டுப் புராணங்களும் அவருடைய புகழ் பாடும் அரசவைப் புலவர்கள். சுத்த ஞானத்தின் ஒளியே அவருக்குப் பின்னால் பிரபையாக அமைகிறது. கனமான ஆத்மானந்தம் சூழ­ல் பரவியிருக்கிறது.

5 பற்றின்மை, பக்தி, சுத்த ஞானம், கேள்வி, மனனம், தியானம், நிதித்யாஸனம்1, இறை தரிசனம் ஆகிய எட்டும் பிரதானமான மந்திரிகளாக சேவை புரிகின்றன.

6 சாந்தியும் புலனடக்கமும் அவர் கழுத்தில் அணியும் தெய்வீக மணிகள். அவருடைய இனிமையான பேச்சு வேதாந்தமென்னும் ஸமுத்திரத்தி­ருந்து அமிருதத்தைக் கொண்டுவருகிறது.

7 ஞானமென்னும் ஒளிவீசும் கூர்மையான வாளால் அவர் வெட்டுவதற்காகக் கையை ஓங்கும்போது, மனிதப்பிறவி என்னும் மரம் பயந்து நடுநடுங்குகிறது.

8 நிரஞ்ஜனரேõ குணங்களுக்கு அப்பாற்பட்டவரேõ யோகிராயரேõ ஜய ஜயõ தீனர்களை ரக்ஷிப்பதற்காகவும் பரோபகாரத்துக்காகவுமே தேவரீர் மனித உடல் தாங்கியிருக்கிறீர்.

9 கடந்த அத்தியாயத்தில், ஒரு பக்தருடைய விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக அவருடைய விரதத்தைப் பூர்த்திசெய்யவைத்து, அவருடைய ரஹஸியம் தமக்குத் தெரியும் என்னும் குறிப்பையும் எவ்வாறு காட்டினார் என்பது விவரிக்கப்பட்டது.

10 ஸத்குரு எல்லா விருப்பங்களும் நிறைவேறியவரென்றால், ஓர் அடியவர் அவருடைய விருப்பத்தை எப்படி நிறைவேற்றிவைக்க முடியும்? ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், குருதான், குருவுக்கு சேவை செய்யவேண்டுமென்ற பக்தனுடைய ஆவலை நிறைவேற்றிவைத்து அவனை நிஷ்காமனாகச் (விருப்பமேதும் இல்லாதவனாகச்) செய்கிறார்.

11 உண்மையான பக்தியுடன் ஸமர்ப்பிக்கப்பட்ட ஒரு பூவையோ ஓர் இலையையோ அவர் அன்புடன் ஏற்றுக்கொள்கிறார். அதுவே கர்வத்துடன் அளிக்கப்பட்டால், உடனே தலையைத் திருப்பிக்கொண்டு போய்விடுவார்.

12 ஸச்சிதானந்தக் கடலாகிய அவருக்குப் புறச்சடங்குகள் முக்கியமா என்ன? ஆயினும் பக்தியுடனும் விசுவாசத்துடனும் எது அளிக்கப்பட்டாலும் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்.

13 எனக்கொன்றுமே தெரியாது என்னும் போர்வையின்கீழ், வாஸ்தவத்தில் அவர் நம்முடைய அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கிறார். சாஸ்திர விதிகளி­ருந்து விலகாமல் தம் அடியவர்களுக்கு இனிமையான முறையில் போதனை நல்குகிறார்.

14 அவருக்கு பா(ஆஏஅ)வத்துடன் ஸேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்றுகலந்த உணர்வை அடைகிறார். இதர ஸாதனைகளைத் தள்ளிவைத்துவிட்டு குருஸேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள்.

15 அந்த ஸேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான ஸாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும், ஸாதகருக்குத் தீமையே விளையும். தேவை என்னவென்றால், குருவின்மீது உறுதியான விசுவாசமே.

16 மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்? ஒன்றுமில்லையேõ அவன் செய்வதையெல்லாம் ஸத்குருவன்றோ லாவகப்படுத்துகிறார்õ சிஷ்யனுக்குத் தனக்கு வரப்போகும் அபாயங்களைப்பற்றி ஏதும் தெரிவதில்லை. குரு அந்த அபாயங்களை விலக்குவதற்காகச் செய்யும் உபாயங்களுங்கூட சிஷ்யனுக்குத் தெரிவதில்லைõ

17 மூவுலகங்களிலும் தேடினாலும் குருவைப் போன்ற தர்மதாதாவைக் காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புக­டமான குருவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக.

18 குருவைச் சிந்தாமணிக்கு உபமானப்படுத்துவதும் சரியாகாது. ஏனெனில், அந்த தேவலோகத்து ரத்தினம் நாம் நினைப்பதைத்தான் அளிக்கும். குருவோ, நிஜமான பக்தன் பரம ஆச்சரியம் அடையுமாறு அவன் நினைத்தே பார்க்காத வஸ்துகளையும் அளிப்பார்.

19 இந்திரனுடைய கற்பகத்தருவிற்கு உபமானப்படுத்துவோமென்றால், அது நாம் கல்விதம் செய்வதைத்தான் (கற்பனையில் விரும்புவது) அளிக்கும். குருராயரோ, நாம் கற்பனை செய்தும் பார்க்கமுடியாத நிர்விகல்பஸமாதியையும் அளிக்கும் சக்தி பெற்றவர்.

20 காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவைவிடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனைசெய்து பார்க்கமுடியாத

பதவியையும் (வீடுபேறு நிலையையும்) அளிப்பார்õ வேறு யாருக்கு 'கற்பனைசெய்து பார்க்கமுடியாததையும் அளிப்பவர்ஃ என்னும் பட்டம் பொருந்தும்?

21 கதை கேட்பவர்களிடம் நான் ஒரே ஒரு விண்ணப்பம் செய்கிறேன். நான் கடந்த அத்தியாயத்தின் முடிவில் குறிப்பிட்ட கதையை இப்பொழுது கவனமாகக் கேளுங்கள்; பிரம்ம ஞானத்தைத் தேடி பாபாவிடம் வந்த மனிதரின் கதையாகும் இது. வாழ்க்கையின் மிகப்பெரியதும் முக்கியமானதுமான விஷயத்தைப்பற்றிக் கேளுங்கள்.

22 பிரம்ம ஞானம் பெறவேண்டுமென்று மிகுந்த ஆவலுடன் பாபாவிடம் வந்த மனிதரை பாபா எவ்விதம் திருப்தி செய்தார் என்பதையும், அவருக்கும் தம்மைச் சுற்றியிருந்த நிஜமான பக்தர்களுக்கும் பாபா அருளிய போதனையையும் கேளுங்கள்.

23 எல்லா ஆசைகளையும் பரிபூரணமாகத் துறந்த ஞானிகள் எப்பொழுதும் நிஷ்காமிகளாகவே (எதையும் விரும்பாதவர்களாகவே) இருக்கிறார்கள். பக்தர்களோ, எந்நிலையிலும் நிறைவேறாத, அத்தியந்தமான (உயிருக்குயிரான) ஆசைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

24 சிலர் புத்திர ஸந்ததியை வேண்டுவர்; சிலர் என்றும் நிலைக்கும் ராஜ்ஜியத்தை விரும்புவர்; சிலர் பா(ஆஏஅ)வ பக்தியை நாடுவர்; எவரோ ஒருவர்தான் பிறவிப் பிணியி­ருந்து விடுதலையை நாடுவார்.

25 பாபாவினுடைய பெரும் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, வாழ்நாள் முழுவதும் செல்வம் சேர்ப்பதிலேயே மூழ்கிப்போனவரும், தம்மைப் பக்தனாக பா(ஆஏஅ)வித்துக் கொண்டவருமான மனிதரொருவர், பாபாவை தரிசனம் செய்வதற்காக வந்தார்.

26 செல்வம், ஸந்ததி, வேலையாள்கள் போன்ற எல்லா ஸம்பத்துகளும் அவரிடம் அபரிமிதமாக இருந்தன. இருப்பினும், பாபா உதாரகுணமே உருவெடுத்தவர் என்று தெரிந்து அவரை தரிசனம் செய்வதற்கு வந்தார்.

27 ''பாபா ஓர் உயர்ந்த பிரம்ம ஞானி; ஸாதுக்களிலும் ஞானிகளிலும் மணிமகுடமானவர்; அவருடைய பாதங்களில் சிரம் தாழ்த்துவேன்; ஏனெனில், அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கப்பாற்பட்டவை.--

28 ''எனக்கு எந்தவிதமான குறையோ தேவையோ இல்லை; ஆகவே, நான் அவரிடம் பிரம்ம ஞானம் கேட்டால் என்ன? அது மாத்திரம் சுலபமாகக் கிடைத்துவிட்டால் நான் எல்லாப் பேறுகளையும் பெற்றவனாவேன்õஃஃ

29 நண்பர் ஒருவர் அப்பொழுது சொன்னார், ''பிரம்மத்தை அறிவது சுலபமான காரியமன்று. அதுவும் உம்மைப் போன்ற பேராசைபிடித்தவருக்கு பிரம்மம் தன்னை வெளிப்படுத்திக்காட்டுவது என்பது நடக்காத காரியம்.--

30 ''செல்வம், மனைவி, மக்கள், இத்தியாதி விஷயங்களைத் தவிர வேறெதிலும் நீர் சுகம் காண்பதில்லை. உம்மைப் பொறுத்தவரை பிரம்மம் ஒரு மனப்பிராந்தியே. அது எப்படி உமக்கு விச்ராந்தி அளிக்கும்?--

31 ''இந்திரிய சக்திகள் க்ஷீணமடைந்து போனபின் இவ்வுலகத்தார் யாரும் (நம்மை) மதிப்பதில்லை. அந்தக் கட்டத்தில், சோம்பித் திரியும் மனம், பிரம்மம், அது, இது என்று நூல் இழைக்கிறது.--


32 ''பிரம்மத்தை அறியவேண்டுமென்ற உம்முடைய தேடல் அத்தகையதே. ஒரு பைஸாவும் ஈயாத கஞ்சனாகிய நீர், உம்முடைய ஆசையை நிறைவேற்றிவைக்கக் கூடியவர் எவரையும் காணமாட்டீர்.ஃஃ

33 ஆயினும், பிரம்மத்தை அறியவேண்டுமென்ற பேராவல் கொண்ட இம்மனிதர், போகவர ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு சிர்டீக்குக் கிளம்பிவிட்டார்õ இவ்விதமாக ஸாயீயின் பாதங்களுக்கு வந்துசேர்ந்தார்.

34 ஸாயீயை தரிசனம் செய்துவிட்டு அவருடைய பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார். கதை கேட்பவர்களே, ஸாயீ அவருக்குச் சொன்ன மதுரமான வார்த்தைகளைக் கேளுங்கள்.

35 ஸாயீயின் கதைகள் என்னும் கற்பக விருக்ஷத்திற்குக் கவனமான கேள்வி என்னும் தண்ணீரைப் பாய்ச்சினால், அது நன்றாக வேர்விட்டு, கேட்பவர்களுடைய பயபக்தி வளர்ந்து பலப்பலவிதமான பழங்களை உற்பத்தி செய்யும்.

36 இம் மரத்தின் எல்லாப் பாகங்களும் இனிமையாக இருக்கும்; சுகந்தமான புஷ்பங்கள் மலரும்; மதுரமான பழங்களின் பாரத்தால் மரமே தழையும்; அனுபவிப்பவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

37 அப்பொழுது அவர் சொன்னார், ''பாபா, தயவுசெய்து எனக்கு பிரம்மத்தைக்

(முழுமுதற்பொருளைக்) காட்டுங்கள். இந்த ஒரே ஆவலுடன் நான் வந்திருக்கிறேன். சிர்டீ பாபா தாமதமேதுமின்றி உடனே பிரம்மத்தைக் காட்டுகிறார் என்று
சொல்கிறார்கள்.--
38 ''இதற்காகவே நான் நெடுந்தூரம் வந்திருக்கிறேன்; பயணம் செய்ததால் களைத்துவிட்டேன். ஆயினும் இப்பொழுது எனக்கு பிரம்மம் கிடைத்துவிட்டால், என்னுடைய முயற்சிகளுக்குப் பலன் கிடைத்தவனாவேன்.ஃஃ

39 பாபா கூறினார், ''கவலைப்படாதீர், நான் உமக்கு நேரத்தோடு உடனே பிரம்மத்தைக் காட்டுகிறேன். இங்கே கடன்வியாபாரமே என்றும் கிடையாது. உம்முடையதைப் போன்ற வேண்டுதலுடன் வருபவர்கள் அரிதினும் அரிதுõ--

40 ''செல்வத்தையோ, ஸம்பத்தையோ, வியாதி நிவாரணத்தையோ, ஆபத்து விலக்கையோ, புகழையோ, கௌரவத்தையோ, ராஜ்ஜியபதவியையோதான் மக்கள் கேட்கிறார்கள்; அனவரதமும் சுகத்தையே நாடுகிறார்கள்.--

41 ''கேவலம் உலக சுகங்களை நாடியே மக்கள் சிர்டீக்கு ஓடிவருகின்றனர்; வெறும் பக்கீராகிய என்னை வழிபடுகின்றனர். யாரும் பிரம்மம் வேண்டுமென்று கேட்பதில்லை.--

42 ''இம்மாதிரியான மக்கள் (சுகம் நாடுபவர்) ஏராளம்; உம்மைப் போன்றவர்கள் மிகக் குறைவு. பிரம்ம ஞானம் கேட்டு யாரும் வரமாட்டார்களா என்று நான் ஏங்குகிறேன்; அவர்களை சந்திப்பது எனக்குப் பண்டிகையும் திருவிழாவுமாகும்.--

43 ''பிரம்மத்திற்கு பயந்தே சூரியனும் சந்திரனும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதைகளில் செல்கிறார்கள். உதயமாவதும் அஸ்தமனமாவதும் ஒளி தருவதும் ஓய்வதும் குறிப்பிட்ட நேரங்களில் நடக்கிறது.--

44 ''அவ்வாறே கோடைக்காலம், வஸந்தகாலம், குளிர்காலம் போன்ற பருவகாலங்களும் சரியான முறைப்படி வந்து போகின்றன. இந்திராதி தேவர்களும் மக்களைக் காப்பதற்காக எட்டுத்திக்குகளிலும் நியமிக்கப்பட்ட அஷ்ட1 பாலகர்களும் தங்களுடைய கடமைகளைச் செவ்வனே செய்கிறார்கள். இவை அனைத்திற்கும் மூலம் பிரம்மமேõ--

45 ''ஆகவே, இந்த சரீரத்தை விட்டுப் போகுமுன் ஞானம்பெற்றவன், மனிதவாழ்வின் குறிக்கோளாகிய பிரம்மத்தை அடைகிறான். இல்லையெனில், பிறப்பு-இறப்பு என்னும் சுழல் அவனை விடாது துரத்துகிறது.--

46 ''பிரம்மத்தை அறியுமுன்னரே இந்த உடல் வீழ்ந்துவிட்டால், ஸம்ஸார பந்தத்தின் மிச்சம் அவனைத் தொடர்ந்துசெல்லும். மறுபடியும் பிறவியெடுப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். --

47 ''நான் உமக்கு பிரம்மத்தை மட்டுமன்று, பிரம்மச்சுருளையே காட்டுகின்றேன். நகத்தி­ருந்து சிகைவரை உம்மை மூடிக்கொண்டிருக்கும் அச்சுருளை விரித்துப் பிரித்துக் காட்டுகிறேன்.ஃஃ

48 ஓõ தேவாமிருதம் போன்ற இனிமையான வார்த்தைகள்; சுத்த அத்வைத ஞானச் சுரங்கம்; ஸந்தேஹத்தால் ஊஞ்சலாடும் மனிதர்களையுங்கூடத் தூக்கிவிடும் சக்தியுடையது.

49 பாபாவின் அமுதமொழிகளின் சக்தியால், நிலையில்லாத புலனின்பங்களின் பின்னால் இரவும் பகலுமாக ஓடுபவர்கள்கூட, சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள பாதையை உறுதியாக நாடுவர்.

50 விநாயகர் ஸந்தோஷமடைந்தால் (நாம் செய்யும் வழிபாட்டால்) உலகியல் சுகங்கள் அனைத்தும் கிடைக்கும். இந்திரன் ஸந்தோஷமடைந்தால் சுவர்க்கத்தின் ஸம்பத்துகள் கிடைக்கும்.

51 குரு இவர்களையெல்லாம்விடச் சிறப்பானவர். ஸந்தோஷமடைந்துவிட்டால், கிடைக்காத பொருளாகிய பிரம்மத்தையே காட்டிக்கொடுக்கக்கூடிய வள்ளல், குருவைத் தவிர வேறெவரும் இல்லை.

52 இந்த இனிமையான காதையைக் கேட்டால், ஸம்ஸார துக்கங்கள் அனைத்தும் மறந்துபோய்விடும். பிரம்ம நாட்டம் உடையவர்களுக்கு என்ன பாடம் சொல்­க்கொடுக்க வேண்டும் என்று பாபாவுக்குத் தெரியாதாõ

53 ஆகவே, பாபா அவரை உட்காரச் செய்துவிட்டு, அவருடைய கவனத்தை வேறு திசையில் திருப்பி, அவர் கேட்ட கேள்வியைத் தாம் மறந்துவிட்டதுபோல அவருக்குத் தோன்றும்படி செய்தார்.

54 பிறகு பாபா என்ன செய்தாரென்றால், ஒரு பையனைத் தம்மிடம் அழைத்து, ''போ, சீக்கிரமாகப் போய் நந்துவுக்கு2 இந்தச் செய்தியைச் சொல்.--

55 ''பாபாவுக்கு அவசரமாக ஐந்து ரூபாய் கடனாகத் தேவைப்படுகிறது. ஆகவே, இந்த சமயத்திற்கு உடனே கொடு; சீக்கிரமாகவே கடன் திருப்பிக் கொடுக்கப்படும்.ஃஃ

56 பையன் நந்து மார்வாடியின் வீட்டிற்குச் சென்றான்; ஆனால், கதவில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. ஆகவே, அவன் உடனே திரும்பிவந்து பாபாவிடம் செய்தி சொன்னான்.

57 பாபா கூறினார், ''மறுபடியும் திரும்பிப் போ, மளிகைக்கடைகாரர் பாலாவிடம். அநேகமாக அவர் வீட்டி­ருப்பார். அவரிடம் இதே செய்தியைச் சொல். சீக்கிரமாகப் பணத்தை வாங்கிக்கொண்டு வா. போய் வாõஃஃ

58 இந்த நடையும் வியர்த்தமாகப் போயிற்று. பாலா வீட்டில் இல்லைõ நடந்ததையெல்லாம் பையன் பாபாவிடம் விவரித்தான்.

59 பாபா அவசரமாக இன்னும் ஓரிரண்டு இடங்களுக்கு இதே வேலையாகப் பையனை அனுப்பினார். பையன் வீணாக அங்கும் இங்கும் ஓடுவதில் களைத்துப்போனானே தவிர, ஒரு பைஸாவும் கொண்டுவரவில்லை.

60 நந்துவோ, பாலாவோ, மற்றவர்களோ வீட்டி­ல்லை என்பது பாபாவுக்கு நன்கு தெரியும். அந்தர்ஞானத்தால் அவர் அனைத்தையும் அறிந்திருந்தார்.

61 நடமாடும், பேசும், தெய்வமாகிய ஸாயீநாதருக்கு ஐந்து ரூபாய் எப்பொழுதாவது தேவைப்பட்டிருக்குமா? இதெல்லாம் 'பிரம்மத்தைக் காட்டுஃ என்று கேட்டுக்கொண்டு வந்தவருக்காகச் செய்யப்பட்ட லீலையே.

62 வீட்டிற்கு விஜயம் செய்யும் விருந்தினருக்காகச் செய்யப்படும் இனிப்பான பலகாரத்தையோ அல்லது சீராவையோ (ரவாகேசரியையோ) வீட்டிலுள்ள அனைவருமே சுவைத்து ஆனந்தமடைகின்றனர் அல்லரோõ

63 அதுபோலவே, தம் அடியவர்களுக்காகவும் மற்ற எல்லாருக்காகவும் போதனை செய்வதற்காக பாபா கண்டெடுத்த ஒரு சாக்குதான், பிரம்மத்தை நாடி வந்தவர்õ

64 அவருடைய ஜோபியில் 250 ரூபாய்க்குமேல் ஒரு நோட்டுக்கட்டு இருந்தது; அது பாபாவுக்குத் தெரியும்.

65 பிரம்மத்தைத் தேடிக்கொண்டு வந்தவருக்கு அது தெரியாதா என்ன? அதைப் பார்ப்பதற்கு அவருக்குக் கண்கள் இல்லையா என்ன? நோட்டுக்கட்டு ஜோபியில் இருந்தபோதிலும் அவருடைய விகற்பமான புத்தியும் தயக்கமும் அவரைத் தடை செய்துவிட்டன.

66 முழுமுதற்பொருளைக் கண்ணெதிரே காட்டு, என்று கேட்டுக்கொண்டு வருகிறார்; ஆனால், ஐந்து ரூபாய் பாபாவுக்குக் (உடனே திருப்பிப் பெறக்கூடிய) கடனாகக் கொடுப்பதற்கு அவருக்கு மனமில்லைõ

67 ஸாயீ மஹராஜ் ஸத்தியஸந்தர் என்பது அவருக்குத் தெரியும்; சிறிது நேரத்தில் திரும்பி வரப்போகும் கடனும் சொற்பமான தொகையேõ ஆயினும், கடன் கொடுக்கலாம் என்று அவர் மனத்தில் நினைத்தவுடனே, கஞ்சத்தனம் அவரை ஆட்கொண்டது.

68 ஐந்து ரூபாய் என்ன பெரிய தொகை அவருக்கு? அதைக்கூடக் கடனாகக் கொடுக்க அவருக்கு மனமில்லை. பாபாவுக்கு அச் சிறிய தொகையைக் கொடுக்க மனமில்லாத அவர், வாஸ்தவத்தில் பேராசையின் வடிவமே.

69 அவரே பாபாவிடம் அன்புகொண்ட, கள்ளங்கபடமற்ற, விசுவாசமுள்ள அடியவராக இருந்திருந்தால், தம்முடைய கண்ணுக்கெதிரிலேயே இந்தக் கடன் வாங்கிக் கடன் கொடுக்கும் காட்சியை சகித்துக்கொண்டு இருந்திருக்கமாட்டார்.

70 பிரம்ம ஞான தாஹம் அவ்வளவு இருந்தவர், கேள்வியைப் புரிந்துகொண்டிருக்க மாட்டாரா? இல்லை, நான் அவ்வாறு நினைக்கவே இல்லைõ செல்வத்தின் மீதிருந்த மோஹம் அவரை ஆட்கொண்டுவிட்டது.

71 இந்நிகழ்ச்சிகளெல்லாம் நடந்துமுடிந்த பிறகு, அவர் வெறுமனேயாவது உட்கார்ந்திருந்திருக்கலாம்õ அதுவும் இல்லைõ திரும்பிச் செல்வதற்கு இருந்த அதீதமான (அதிகமான) அவசரத்தில் பொறுமையை இழந்து சொன்னார், ''ஓ பாபா ஸாயீ, பிரம்மத்தை எனக்கு சீக்கிரம் காட்டுங்கள்õஃஃ

72 பாபா அப்பொழுது சொன்னார், ''நீர் இருந்த இடத்திலேயே பிரம்மத்தை உமக்குக் காட்ட நான் பல முயற்சிகள் செய்யவில்லையா? இதி­ருந்து நீர் ஒன்றுமே புரிந்துகொள்ளவில்லையா?ஃஃ

73 பிரம்மத்தை நாடுபவர், பஞ்சப் பிராணன்களையும் ஐந்து ஞானேந்திரியங்களையும் ஐந்து கர்மேந்திரியங்களையும் அஹங்காரத்தையும் புத்தியையும் மனத்தையும் (பிரம்மத்திற்கு) ஸமர்ப்பணம் செய்துவிட வேண்டும்.

74 பிரம்ம ஞானம் தேடும் பாதை கஷ்டமானது; எல்லாராலும் சுலபமாக அடைந்துவிட முடியாது. பாக்கியசா­க்கு நல்லநேரம் வாய்க்கும்போது, பிரம்மம் தன்னையே திடீரென்று வெளிப்படுத்திக்கொள்கிறது.

75 எவன் பற்றறுத்தவனோ, எவன் இறைவனோடு ஐக்கியமாகிவிடுவதைப்பற்றியும் கூடப் பெருமைப்படாதவனோ, அவனே பிரம்ம வித்தைக்கு அதிகாரியாவான்; ஏனெனில் அவன் எதிலும் பற்றில்லாதவன்.

76 லவலேசமும் பற்றறுக்கும் சுபாவம் இல்லாதவனுக்கு, பிரம்ம தத்துவத்தை எவர் எவ்வளவு முழுமையாக உபதேசம் செய்தாலும், அவர் (உபதேசம் செய்பவர்) வெற்றி பெறுவாரா?

77 உத்தமமான அதிகாரிகளுக்கு1 பிரம்ம ஞானம் அதிக சிரமமின்றி சுலபமாகக் கிடைத்துவிடும். மத்திம அதிகாரிகள் படிப்படியாக சாஸ்திர விதிகளின்படி முன்னேற வேண்டும்.

78 முன்னவருக்குச் சிறகடித்துப் பறக்கும் பறவையைப்போன்று வேகமாகக் கிடைக்கும்; பின்னவருக்கு ஏணியின் படிகளில் ஏறுவதுபோன்று மெதுவாகவே நடக்கும். ஆன்மீக அதிகாரமே இல்லாதவர்கள் பிரம்மத்தை அறிவதற்காகச் செய்யும் முயற்சிகள் வியர்த்தமே.

79 'எது நித்தியம், எது அநித்தியம் என்னும் விவேகத்தைவிடச் சிறந்த, உன்னதமான வழி வேறேதும் பிரம்மத்தை அடைவதற்கு இல்லை.ஃ இது ஸத்தியமான வேதாந்த வசனம். ஆயினும் அம்மாதிரியான விவேகம் எல்லாருடைய சக்திக்கும் உட்பட்டதா என்ன?

80 சிரமமான அப்பியாஸங்களாலும் கடினமான பயிற்சிகளாலும் உடலை எலும்புக்கூடாகத் தேய்க்கவேண்டும். அதன் பின்னரே குருவின் அருள் என்னும் ஒளியால் விவேகம் மெதுவாக உதயமாகும்.

81 எப்பொழுது நான்முகன், 'நான் ஈசுவரன், நான் அனைத்தையும் நிர்வகிப்பவன்ஃ என்று நினைத்துத் தம்முடைய உண்மையான நிலையை மறந்துவிடுகிறாரோ, அப்பொழுதே இப் பிரபஞ்சம் சிருஷ்டி செய்யப்படுகிறது.

82 ஆனால், 'நானே பிரம்மமாக (முழுமுதற்பொருளாக) இருக்கிறேன்ஃ என்ற ஞானம் உதிக்கும்போது, அறிபவர் பிரம்மத்தோடு ஐக்கியமாகிவிடுகிறார்; அக்கணமே இப் பிரபஞ்சமென்னும் மாயை தூக்கியெறியப்படுகிறது. இங்ஙனம் வேதங்கள் மொழிகின்றன.

83 எப்பொழுது ஒருவர் பிரம்மத்துடன் ஐக்கியமான உணர்வுடன் 'தன்னையறிந்துஃ கொள்கிறாரோ, அப்பொழுது இப்பிரபஞ்சம் பிரம்மமாகிய அக்கினிக்கு ஆஹுதி (படையல்) ஆகிவிடுகிறது. அவரைப் பொறுத்தவரை பிரபஞ்சம் சாம்பலாகிப்போகிறது.

84 மற்ற ஜீவன்களுக்கும் இதே நிலைதான். அவர்களுடைய பிரமைகள், சூரிய ஒளி வந்தபின் பாம்பு மற்றும் வெள்ளி போன்ற இருட்டுநேர பிரமைகள் விலகுவது போன்று, உடனே விலகிவிடுகின்றன. (கயிறு பாம்பாகவும் கிளிஞ்சல் வெள்ளியாகவும் தெரிவது பிரமை.)

85 கிளிஞ்சல் என்று தெரியாத அறியாமை, வெள்ளியோ என்னும் மாயையைத் தோற்றுவிக்கிறது. வெள்ளியைப்பற்றிய உண்மையான ஞானம், நாம் பார்த்தது கிளிஞ்சல்தான் என அறிந்துகொள்ள வைக்கிறது. அந்தக் கணத்தில் வெள்ளியென்னும் மாயை மறைந்து கிளிஞ்சல் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிகிறது.

86 அஞ்ஞானத்தால் ஒன்றை மற்றொன்றாக அறியும் நிலைமை இது. ஞானதீபத்தைத் தேய்த்துத் துலக்கிச் சுத்தம் செய்து அஞ்ஞான மலத்தை அகற்றுங்கள். எல்லா பிரமைகளும் ஒழிந்துவிடும்.

87 பிறப்பு, இறப்பு, என்னும் பந்தங்கள் இல்லையென்றால் மோக்ஷத்திற்கு நிர்ப்பந்தம் என்ன இருக்கிறது? வேதாந்தத்துக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பிரபந்தம் (நூல்) எதற்காக?

88 'நான் கட்டுண்டிருக்கிறேன்; விடுதலை பெற வேண்டும்;ஃ என்ற நம்பிக்கையும் உறுதிப்பாடும் இருப்பவரே பிரம்ம ஞானம் தேடுவதற்கு அதிகாரியாவார்; சுத்தமான அஞ்ஞானியோ அல்லது முற்றுமுணர்ந்த ஞானியோ அதிகாரி அல்லர்.

89 கட்டுகளே இல்லாதபோது எதி­ருந்து விடுதலை பெறுவது? இதுவே வாஸ்தவமான நிலைமை. முக்குணங்களின்1 சம்பந்தத்தாலேயே பந்தமும் முக்தியும்; இதுவே அனைவருடைய அனுபவமும்.

90 துவைத பா(ஆஏஅ)வமே இல்லையென்றால் யார் கட்டுகிறார், யார் விடுதலையடைகிறார்? துவைத பாவனை அத்துவைத பாவனையால் மறைந்துவிடும்போது, அங்கு எவரும் கட்டுண்டில்லை; எவரும் விடுதலை செய்யப்படுவதும் இல்லை.

91 பகலும் இரவும் சூரியனால் உற்பத்தி செய்யப்படுபவையா என்ன? அது நம் பார்வையின் தோஷத்தினால் ஏற்படும் விவகாரம். சூரியன் எங்கோ இருக்கிறது; நம்முடைய பார்வையால் பாதிக்கப்படுவதில்லை.

92 சுவர்க்கத்தின் இன்பங்களும் நரகத்தின் இன்னல்களும் 'நானே கர்த்தா, நானே போக்தா (அனுபவிப்பவன்)ஃ என்ற உணர்வோடு அனுபவிக்கப்படும்போது ஆசைகளின் மீதுள்ள பிடிப்பு அதிகமாகிறது.

93 ஆத்மா நித்தியமானது; புராதனமானது; அழிவேயில்லாதது. ஆத்மாவிற்கு ஜனனமரணங்கள் கிடையாது. ஓங்காரமே அதனுடைய சின்னம். அது ஆரம்பமும் முடிவுமில்லாதது; எப்பொழுதும் நிலைத்திருப்பது.

94 எவர் சரீரத்தையே ஆத்மாவென்று நினைக்கிறாரோ, தாம் வேறு, இந்தப் பிரபஞ்சம் வேறு என்று நினைக்கிறாரோ, அவருக்கு எவ்வளவு முயன்றாலும் ஆத்ம அனுபவத்தால் கிடைக்கும் ஞானம் என்றும் கிடைக்காது.

95 பேச்சு மற்றும் எல்லா இந்திரியங்களையும் வென்றுவிடு; மனத்தில் உறுதியை ஏற்றுக்கொள்; மனத்தின் அனிச்சைச் செயல்களை அழித்துவிடு; புத்தியை உறுதியாகப் பற்றிக்கொள்.

96 புத்தி ஒளிமயமான ஞானத்தையளிக்கிறது; அதன்மேல்தான் மனம் ஒருமுகப் படுத்தப்பட வேண்டும். ஏனெனில், மனம் உட்பட எல்லா இந்திரியங்களும் புத்தியினுடைய ஸ்வாதீனத்தில்தான் இருக்கின்றன.

97 குடத்திற்கு ஆதிகாரணம் களிமண்ணே; அதே ரீதியில்தான் இந்திரியங்களுக்கு புத்தியும். புத்தியே இந்திரியங்களின் சாசுவதமான நிலையாகும். புத்தியினுடைய வியாபகம் அவ்வளவு பெரியது.

98 எங்கும் வியாபித்திருக்கும் சக்தியால், அது, மனம் உட்பட்ட எல்லா இந்திரியங்களையும் வியாபித்துவிடுகிறது. ஆகவே, புத்தியை மஹத் தத்துவத்தில் (எங்கும் வியாபித்திருக்கும் பிரபஞ்ச உணர்வு) கொண்டுபோய்ச் சேர்த்துவிடு; மஹத் தத்துவத்தை ஆத்மாவில் ஸமர்ப்பணம் செய்துவிடு.

99 இவ்வாறு அனைத்தையும் ஒன்றுசேர்த்துவிட்டால், ஆத்மஸ்வரூபம் நிர்த்தாரணம் ஆகிறது (உன்னையே நீ அறிகிறாய்). அதன்பிறகு, கிளிஞ்ச­ல் காணப்படும் வெள்ளியும், பாலைவனத்து மண­ல் தெரியும் கானல் நீரும், கயிற்றில் இருக்கும் பாம்பும் நம்முடைய பார்வையிலுள்ள கோளாறே என்பது தெரிந்துவிடும்.

100 ஜனனமரணம் இல்லாததும் விசேஷங்கள் ஏதும் இல்லாததும் முழுமையானதுமான ஆத்மாவை, நம்முடைய நன்மைக்காக நாம் அறிந்துகொள்ளவேண்டுமென்று ஸாதுக்கள் கூறுகின்றனர்.

101 எல்லா விளைவுகளுக்கும் ஒரு காரணம் இவ்வுலகில் உண்டு; ஆனால், ஆத்மா காரணமற்றது; சுயம்பு (தான்தோன்றி). ஆத்மா புராதனமானதாயினும் புதியது; கடந்த காலம்நிகழ்காலம்எதிர்காலம்என்றுஏதுமில்லாதது;சுபாவத்தினால்புத்தியற்றது; --

102 பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டது; ஆகாயத்தைப் போன்று கடக்க முடியாதது; வேறெதையும் சாராதது; தூய்மையானது. ஓம் எனும் பிரணவமே அதற்கு ஆதாரம்.

103 அறிய வேண்டியது பர பிரம்மம்; அடைய வேண்டியது அபர பிரம்மம் (உருவமெடுத்த கடவுள்); அதனுடைய சின்னமாக எப்பொழுதும் தியானிக்கப்பட வேண்டியது ஓம்.

104 ஓங்காரமென்னும் பிரணவ ஸ்வரூபமே வேதங்களின் ஸாரம். ஓங்காரத்தின் பொருளை நிர்த்தாரணம் செய்துகொள்வதே 1வேதமஹாவாக்கியங்களின்மீது செய்யப்படும் உண்மையான தியானமாகும்.

105 எது வேதங்களால் நிர்ணயிக்கப்பட்டதோ, எது பிரம்மசரியத்தாலும் மிகத் தீவிரமான பிரயத்தனங்களாலும் அடையப்படுகிறதோ, அதுவே ஓமெனும் பிரணவத்தின் உயர்ந்த நிலை.

106 ஆயினும் இந்நிலைக்கு உயர்வதென்பது மிகக் கடினமாகும். எவர் நன்கு அப்பியாசம் செய்கிறாரோ அவருக்கு குருவின் கிருபை கிடைக்கும்போது இந்நிலை சுலபமாக எட்டிவிடுகிறது.

107 ஓய்வடையாத ஸாதகர், தூலமான உட­ன் பல அங்கங்களில் ஆரம்பித்துக் கடினமான பயிற்சிகளால் மிக சூக்குமமான தாரதம்மியம் (ஒப்பு வித்தியாசம்) தெரிந்த பக்குவத்தை அடையும்போது இந்நிலை சித்தியாகிறது.

108 வாயினால் ஓதவேண்டிய சப்தமான ஓம் எனும் அக்ஷரம் எல்லாத் தவங்களின் ஸாரமாகும். உச்சாரணம் செய்தால் தன்னுடைய பொருளின் ஸாரத்தை உணர்விக்கும். பல ஆவர்த்தங்கள் (சுற்றுகள்) ஜபம் செய்தால் இறைவனைக் காட்டும்.

109 வளர்ச்சியோ அழிவோ மாற்றமோ அடையாத, எங்கும் நிறைந்த, சைதன்யமான ஆத்மாவை அறியும் ஸத்குருவின் அனன்னிய (வேறெதையும் நாடாத) பக்தன் மஹா பாக்கியசா­.

110 ஆத்யாத்மிகம்2, ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்னும் மூன்று தாபங்களால் ஸதா தவிப்பவன் எவ்விதம் அந்த பாக்கியத்தை அனுபவிப்பான்? அது ஞானிகளுக்கே உண்டான வைபவம்.

111 அஞ்ஞானத்தால் பிறப்பு இறப்பென்னும் சுழற்சி ஏற்படுகிறது. தானும் பிரம்மமும் ஒன்றே என்ற ஞானத்தால்தான் இதி­ருந்து விடுபட முடியும். இதை ஞானிகளின் மூலமாகத்தான் அடையமுடியும்.

112 உலக விஷயங்களையும் கற்பனைகளையும் சூன்யமாக்கிவிட்டு, 'நான் பிரம்மமாக இருக்கிறேன்ஃ என்னும் வேதமஹாவாக்கியத்தைப் பல ஆவிருத்திகள் ஜபம் செய்தால் புத்திக்கு அதுவே தொழிலாகிவிடுகிறது.

113 குருவின் திருவாய்மொழியிலும் சாஸ்திரங்களிலும் ஆழ்ந்த நம்பிக்கை வளர, வளர, மனத்தாலும் உடலாலும் செயல்புரியும் நாட்டம் குறைந்துகொண்டே போகிறது. ஆத்மாவை அறிவதற்காகச் செய்யும் முயற்சிகள் லாபமளிக்கின்றன.

114 அப்பொழுதுதான் 'ஒன்றாகக் காணும் காட்சிஃ கிடைக்கிறது. ஜடப்பொருள் களி­ருந்தும் புலனின்பங்களி­ருந்தும் விடுதலை கிடைக்கிறது. ஹிருதயத்தின் அஞ்ஞான முடிச்சுகள் அவிழ்ந்து, ஸாதகர் தோன்றாநிலையில் இருக்கும் இறைவனுடன் கலந்துவிடுகிறார்.

115 ஒளிக்கீற்றி­ருக்கும் சூக்குமமான அணுவைவிட சூக்குமமானது ஆத்மா. இதுவே ஆத்மாவைப்பற்றிய அனுமானமும் நிர்த்தாரணமும்.

116 ஆத்மா மிகப் பெரியதைவிட மிகப் பெரியதான பிரம்மாண்டத்தைவிடப் பெரியது. ஆயினும் இதெல்லாம் உபமானப் பிரமாணங்களே; ஆத்மா அளவிடமுடியாதது.

117 சூக்கும தத்துவத்தில் ஆத்மா 'அணுவிற்கும் அணுவானதுஃ. மஹத் தத்துவத்தில் ஆத்மா 'பெரியதினும்1 பெரியதுஃ. நாமமும் ரூபமும், கேவலம் பேதப்படுத்திப்

பார்க்கும் அறிவு. ஆத்மாவோ பேதமேயில்லாதது; பரிபூரணமானது.
118 ஆத்மாவுக்கு ஜனனமில்லை; மரணமில்லை; மூலகாரணமுமில்லை. ஆத்மா பிறக்காதது; நித்தியமானது; சாசுவதமானது; புராதனமானது. ஆத்மாவை சுலபமாக நிர்த்தாரணம் செய்யமுடியாது.

119 பிரம்மத்தின் சின்னமாகிய ஓங்காரமே ஆத்மாவினுடைய பரம சொரூபம். ஆகமங்களும்2 நிகமங்களுமே3 அதை சுலபமாகப் புரிந்துகொள்ளவில்லை; எல்லாரும் சுலபமாகப் புரிந்துகொள்ளக்கூடிய விஷயமா என்ன?

120 ஆத்மாவைப் புரிந்துகொள்ள முயன்ற வேதங்கள் சோர்ந்துபோயின; தவசிகள் வனத்திற்குப் போனார்கள்; உபநிஷதங்கள் கையை விரித்துவிட்டன. அதை இன்னதென்று கண்டுபிடிக்க யாராலும் முடியவில்லை.

121 ஆத்மாவின் சொரூபத்தை அறிந்துகொள்ள, முழுமுதற்பொருளும் ஆத்மாவும் ஒன்றே என்பதை தரிசனம் செய்த ஆசாரியர் (குரு) ஒருவர் தேவை. தர்க்கசாஸ்திர நிபுணர்களும் இங்கு நுழையமுடியாது என்னும் நிலையில், மற்றவர்களைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?

122 கேவலம் தர்க்கசாஸ்திர பண்டிதர்களுக்கு இங்கு இடமேயில்லை; அவர்களுடைய குழம்பிய மனம் ஏற்படுத்தும் சுழ­லேயே மாட்டிக்கொண்டு சுற்றிச்சுற்றி வருவார்கள்.

123 நாமே கற்பனை செய்துகொள்ளும் எண்ணற்ற நக்ஷத்திரங்களாலும், நம்மை 84 லட்சம் ஜனனமரணச் சுழல்களி­ருந்து விடுபடவைக்க முடியாது. 'ஆகமமும் ஆசாரியனும்ஃ என்னும் ஒரு சந்திரனே போதும்; அஞ்ஞானம் லவலேசமும் இல்லாது அழிந்துவிடும்.

124 ஸத்குருவின் பாதங்களை உறுதியாகப் பிடித்துக் கொள்பவர், மற்றவர்கள் பலவிதமாக சிரமப்பட்டும் அடையமுடியாததை சொற்பமான முயற்சியாலேயே அடைந்துவிடுவார். அவர் ஞான ஒளி பெற்றுவிடுவார்.

125 அஞ்ஞானம் அழிக்கப்பட்டு ஸச்சிதானந்த சொரூபத்தில் நிலைத்துவிட்டால், தன்னை அறியும் நிலை உதயமாகிறது. இந்த நிலைக்கு மோக்ஷம் என்பது மற்றொரு பெயர்.

126 இதுவே ஜீவனின் அத்தியந்தமான லட்சியம். இதை அடைவதற்காகவே பிரம்மயோகிகள் பலவிதமான இன்னல்களைக் கடந்துவந்து தம்மிலேயே மூழ்கியிருக்கின்றனர்.

127 ஆத்மாவி­ருந்து விலகிச் செல்பவர் உலகவிஷயங்களின் சுழ­ல் மாட்டிக் கொள்கிறார். ஆத்மாவிலேயே நிரந்தரமாகவும் நிச்சலமாகவும் மூழ்கியவருடைய புலனின்ப நாட்டம் நசித்துப்போகிறது.

128 தம்முடைய உண்மையான சொரூபத்திற்கு முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்பவருக்கு உலகவிவகாரங்கள் இன்முகம் காட்டுகின்றன. அவரே உண்மையான சொரூபத்திற்கு இன்முகம் காட்டினால் உலகவிவகாரங்கள் அவரிடமிருந்து ஓடிவிடுகின்றன.

129 மோக்ஷத்தைத் தவிர வேறெதையும் மனத்தில் கொள்ளாதவரே, இவ்வுலகத்திலோ பரவுலகத்திலோ வேறெதையும் விரும்பாதவரே, மோக்ஷமடைவதற்கு அதிகாரியாவார்.

130 இந்த லக்ஷணங்களில் ஒன்றே ஒன்று குறைபட இருப்பினும், அவர் உண்மையான இறைநாட்டமுடையவர் அல்லர் என்பதைத் தெளிவாக அறியவும். ஒற்றைக்கண்ணனுடைய1 பார்வை போன்று அவர் இறைநாட்டமுடையவர்போல் பாசாங்கு செய்கிறார்.

131 அஹங்காரம் அடியோடு அழியாதவரையில், பேராசை நிர்மூலமாக்கப்படாதவரையில், மனத்தினுடைய வாசனைகள் ஒழிந்துபோகாதவரையில், பிரம்ம ஞானம் பதியாது.

132 தேஹந்தான் நான் என்று நினைப்பது ஒரு பிராந்தி (மயக்கம்). எவ்விதமான விருப்பமும் ஒரு பந்தமே. உலகவிஷய கற்பனைகளையும் ஞாபகத்தையும் விட்டுவிட்டால் பிரம்ம ஞானம் பெறலாம்.

133 குணங்களும் உருவமுமற்ற பிரம்மத்தைக் காண்பதரிது. ஆகவே, உருவமெடுத்த, குணமுள்ள பிரம்மத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதை வழிபடுவதையே அறிவாளிகள் தருமநெறியாகக் கருதுகிறார்கள்.

134 ஆத்மா எல்லா உயிர்களிலும் மர்மமாகவும் சூக்குமமாகவும் உறைகிறது என்று வேதாந்திகள் அறிவர். எல்லாருமே உள்ளுணர்வாக அறியும் இவ்வுண்மைக்கு மறுக்கமுடியாத நிரூபணம் கேட்டால் எங்கிருக்கிறது?

135 முதலாவதாக, சித்தம் சுத்தமடைய வேண்டும்; அதற்கும் மேலாக, புத்தி தர்ப்பையின் நுனி போன்று சூக்குமமாகக் கூர்மையாக வேண்டும். அப்பொழுதுதான் மூன்று

136 ஆத்மா நித்தியமானது; மாறுபாடு அடையாதது. தன்னையறிந்தவர் எதற்கும் சோகப்படமாட்டார். அவர் மஹா தைரியசா­; மஹா புத்திமான்; பிறவிப் பிணியி­ருந்து விடுதலை பெற்றவர்.

137 பிரஸங்கம் செய்யக்கூடிய சக்தியும் யுக்திகளும், புத்தகங்களைப் படித்து அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும் சக்தியும் இங்கே செல்லுபடியாகாது. வேதங்களி­ருந்தும் உபநிஷதங்களி­ருந்தும் அறிந்துகொண்ட ஆழ்ந்த ஞானமும் ஆத்மாவைப்பற்றி எதையும் விவரிக்கமுடியாது.

138 ஆத்மா நித்தியமானது; மாறுபடாதது. சரீரம் அநித்தியமானது; ஒவ்வொரு கணமும் மாறுபட்டுக்கொண்டேயிருப்பது. இதையறிந்து, தம்முடைய நன்மைக்காகப் பாடுபடுபவர் எது விதிக்கப்படாதது, எது விதிக்கப்பட்டது என்பதை அறிந்து தம்முடைய செய்கைகளைச் செய்வார்.

139 ஆத்ம ஞானி ஸதா நிர்ப்பயமானவர்; தன்னைத் தவிர வேறொன்றுமே இல்லை என்பதை நன்கறிந்தவர். துவைத பா(ஆஏஅ)வனை முழுமையாக அழிக்கப்படும்போது, சோகமும் நிச்சயமாக அழிந்துவிடும்.

140 ஆத்மாவை அறிந்துகொள்வது கஷ்டமான காரியமாக இருப்பினும், பிரஸங்கங்களைக் கேட்டுப் புரிந்துகொள்ள முடியாததாயினும், கேவலம் மேதை இங்கு பிரயோஜனப்படாதாயினும், சுலபமாக அறிந்துகொள்ளும் உபாயங்களும் உண்டு.

141 எவர் எல்லா ஆசைகளையும் தவிர்த்துவிட்டு, ஆத்மஞானம் அடையவேண்டும் என்னும் ஒரே விருப்பத்துடன் ஸதா ஆத்மாவை இறைஞ்சுகின்றாரோ, அவரே இம் மேன்மையான லாபத்தை அடைவார்.

142 'எனக்கும் இறைவனுக்கும் பேதமில்லைஃ என்னும் கருத்தை எந்நேரமும் மனத்தில் நிலைநாட்டியவருக்கு ஆத்மா அனுக்கிரஹம் செய்யும். கதாகீர்த்தனங்கள் கேட்கும்போதும் தியானம் செய்யும்போதும் 'நானும் இறைவனும் ஒன்றுஃ என்று தமக்குத் தாமே அவர் சொல்­க்கொள்வார்.

143 பாவகாரியங்களி­ருந்து விடுபடாதவன், பந்தப்பட்டவன், சாந்தியில்லாதவன், தியானசக்தி இல்லாதவன் இந்த ஞானத்தை அடையமுடியாது.

144 சுருதிகளின்படியும் (வேதங்கள்) ஸ்மிருதிகளின்படியும் (வாழ்க்கை நெறி நூல்கள்) வாழ்க்கை நடத்தி, அவற்றால் செய்யக்கூடாது என்று விதிக்கப்பட்ட காரியங்களை விலக்கி, எந்நேரமும் தியானத்தில் மூழ்கியவருக்குள் ஆத்ம ஞானம் பொதிந்து கிடக்கிறது.

145 எவர் பாவச்செயல்களை விலக்கிவிட்டவரோ, எவர் குருவின் பாதங்களில் விநயத்துடன் பணிந்துகிடக்கிறாரோ, எவர் செயல்களின் பலனைத் துறந்துவிட்டவரோ, அவருக்குத்தான் ஆத்மஞானம் கிடைக்கும்.

146 உலகபந்தங்களி­ருந்து விடுதலையடையாமல், எல்லா விருத்திகளையும் (பிழைக்கும் வழிகளையும்) விட்டுவிடாமல், ஆத்ம ஞானம் அடைவது நடக்காத காரியம்.

147 ஸாதகரின் கடுமையான தவத்தைக் கண்டு, ஆத்மாவுக்குக் கருணை ஏற்பட்டுத் தன்னுடைய நிஜஸ்வரூபத்தை வெளிப்படுத்தும். ஆனால், குரு இல்லாமல் இது நடக்காது.

148 ஆகவே, தம்முடைய உண்மையான சொரூபத்தை அறிய விரும்புபவர், சிரவணமும் (நற்கேள்வியும்) மனனமும் (அதைப்பற்றிய தியானமும்) செய்யவேண்டும். ஸதா அபேத பா(ஆஏஅ)வத்தைச் செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டும். இதுவே ஆத்ம லாபம் அடையும் வழி.

149 பிரபஞ்சமே அஞ்ஞானத்தில் மூழ்கியிருக்கிறது; அதனுடைய வியாபகமே (இருப்பே) அஞ்ஞான மூலம். ஞானம் இல்லாது மோக்ஷம் கிடைக்காது என்பதை நன்கு அறிக.

150 சாஸ்திரங்களி­ருந்து அனுபவ ஞானம் பெறுவதற்கு, அனுமான சக்தியும் யுக்தி சக்தியும் தேவைப்படுகிறது. ஆனால், ஸாதகரைப் பொறுத்தவரை, பிரபஞ்சம் நாசமானால்தான் ஞானம் உதயமாகும்; வேறு எவ்விதமாகவும் நடக்காது.

151 'மஹாத்மாவும் பாவாத்மாவும் எல்லா ஜீவன்களும் பரமாத்மாவேஃ என்று அறிந்து வாழ்பவரே உயர்ந்த மனிதராவார். அவருக்கு இறைவனும் இறைவனின் சிருஷ்டியும் ஒன்றே.

152 இறைவனும் தானும் ஒன்று என்று அறிவதே எல்லா ஞானங்களின் உச்சியாகும். ஆத்ம ஞானம் பிறந்துவிட்டால், ஸமஸ்த (எல்லாவிதமான) அஞ்ஞானங்களும் அழிந்துவிடும்.

153 ஆத்ம ஞானம் கிடைத்துவிட்டால், அறிந்துகொள்ளவேண்டியது வேறெதுவுமில்லை. மற்றப் பொருள்களைப்பற்றிய ஞானம் உள்ளங்கை நெல்­க்கனிபோல் தானாகவே விளங்கிவிடும்.

154 ஸாதகர் ஆத்ம ஞானத்தின் பலனாக உலகபந்தங்களி­ருந்து முழுமையாக விடுதலை அடைந்துவிடுகிறார். இவ்வுலகில் வாழும்போதே பரமானந்தத்தை அனுபவிக்கிறார்; சரியான சமயத்தில் மோட்சத்தையும் அடைகிறார்.

155 ஆத்மா எங்கும் நிறைந்திருக்கிறது என்பதை புத்தியின் வழிகளால் புரிந்து கொள்வதற்காகவே, சிறியதினும் சிறியது, பெரியதினும் பெரியது என்றெல்லாம் விவரிக்கப்படுகிறது.

156 சுயமாக ஆத்மா பெரியதுமன்று; சிறியதுமன்று. அளவைப்பற்றிய பேச்செல்லாம் இங்கே கற்பனையே. நான்முகனி­ருந்து புல்பூண்டுவரை, சிருஷ்டியனைத்திலும் ஆத்மா வியாபித்திருக்கிறது.

157 வார்த்தைகளால் விவரிக்க முடியாததை, எல்லையேயில்லாததை, வார்த்தைகளால் ஓர் எல்லைக்குள் கொண்டுவருவது புத்திக்கு எட்டவைப்பதற்காகத்தான்.

158 ஆத்மாவின் மர்மம், கேவலம் புத்திசக்தியால் அறியப்படமாட்டாது. ஸாதுவோ, ஞானியோ, ஸத்குருவோ அருள் செய்தால்தான் கிடைக்கும். அவ்விதமான அருளைப் பெறுவதற்கு, மிகுந்த ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் அவர்களுக்கு ஸேவை செய்யவேண்டும்.

159 பிரம்ம நிரூபண விவரங்கள் புராணங்களிலும் புத்தகங்களிலும் கொஞ்சமாகவா இருக்கின்றன? ஆனால், ஸத்குருவின் அருள் இல்லாது, யுகமுடிவுவரை கடினமான பயிற்சிகள் செய்தாலும் பிரம்ம ஞானம் கைக்குக் கிடைக்காது.

160 தினமும் செய்யவேண்டிய கர்மாக்களையும் ஸம்ஸ்காரங்களையும்1 (மதச்சடங்குகள்) செய்து, அதன் விளைவாக மனம் தூய்மையடையாமல் பிரம்மத்தை அறிந்து கொள்ளவோ அடையவோ இயலாது.

161 பிரம்மமே நித்தியமானது; மற்றவை அனைத்தும் அநித்தியம். கண்ணால் பார்க்கப்படுவது எதுவும் நித்தியமானதல்ல; இது மும்முறை பிரகடனம் செய்யப்பட்ட ஸத்தியம் (இது ஸத்தியம்; இது ஸத்தியம்; இது ஸத்தியம்).

162 பிரம்மத்தைப்பற்றி விளக்கமாகப் பேசக்கூடியவர் அரியவர். நிர்மலமான மனத்துடன் அதைக் கேட்கக்கூடியவர் அவரினும் அரியவர். பிரம்மானுபவம் கண்ட ஸத்குருவைப் பெறுதல் மிக மிக அரிது.

163 பிரம்மம் என்ன கத்தரிக்காயா, கேட்டு வாங்கிக்கொள்ளõ மனித நடமாட்டமே இல்லாத மலைகளிலும் குகைகளிலும் வசித்து, யம2 நியமங்களுக்கு3 உட்பட்டுத் தவம் செய்யும் மஹாயோகிகள்.--

164 அவர்களாலேயே குருவின் அருளின்றி பிரம்மரூபம் காணமுடியாது. பேராசையின் உருவேயான உம்மைப் போன்றவரால் எவ்வாறு அடைய முடியும்?

165 செல்வத்தின்மீது தீராத பற்றுடையவன் யுகம் முடிந்தாலும் பிரம்ம ஞானம் அடைய முடியாதுõ இது நிச்சயம் என்று அறிக.

166 உலகியல் சிந்தனையைச் செய்துகொண்டே பரமார்த்தமான பிரஸங்கத்தைக் கேட்பவனும் உலகியல் விஷயங்களையே இடைவிடாது யோசித்துக்கொண் டிருப்பவனும் பெறக்கூடிய ஸாக்ஷாத்காரமும் (நேரிடைத் தரிசனமும்) அவ்வகையாகத் தான் இருக்கும்.

167 தூய்மையற்ற எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவித்தல், பொய்யை மெய்யென்று அறிதல், மெய்யைத் திரைபோட்டு மறைத்தல், இம்மூன்றும் மனம் செய்யும் தவறுகளாகும். பலனைக் கருதாது செய்யப்படும் செயல்கள் எதிர்மறைச் சிந்தனைகளையும் நாட்டங்களையும் விலக்கிவிடும். பக்தியும் வழிபாடும் மனத்தின் மாய மயக்கங்களைத் துடைத்துத் தூய்மையாக்கிவிடும்.

168 தமக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களை சிரத்தையுடன் செய்வதுடன், உபாஸனையும் செய்பவரின் மனம் பரிபக்குவம் அடையும். எதிர்மறையான எண்ணங்களும் மயக்கங்களும் இவ்வாறு ஒழிக்கப்பட்டபின், மீதி நிற்பது ஸத்தியத்தை மறைக்கும் திரையே.

169 எல்லா அனர்த்தங்களுக்கும் விதையாகிய இந்தத் திரை சூரிய உதயத்தால் இருள் அழிவதுபோல, ஞானம் பிறந்தால் நாசமாகிவிடும்.

170 வேதாந்தம் நன்கு அறிந்தவர்கள் பிரம்மத்தை ஸத்தியம், ஞானம், அனந்தம் (முடிவேயில்லாதது) என்ற லக்ஷணங்களால் வர்ணிக்கின்றனர். பிரம்மம் ஞானிகளுக்கு ஒளி வழங்கி, ஆத்மாவிலேயே மூழ்கச் செய்கிறது.

171 காட்டினுள்ளே நடந்துசெல்லும் யாத்திரிகன், மங்கலான சந்திர ஒளியில், வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகத்தைப் பார்த்துக் கொள்ளைக்காரன் என்று நினைத்து மிரண்டு பயத்தால் எங்காவது ஒளிந்துகொள்கிறான்.

172 ''நான் தனியாக நடந்து செல்கிறேன்; பணமும் வைத்திருக்கிறேன்; வழிப்பறிக் கொள்ளைக்காரன் மறைந்துகொண் டிருக்கிறான்; யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? உயிருக்கே ஆபத்தாக இருக்கும்போ­ருக்கிறதேõஃஃ என்று தனக்குள்ளேயே பேசிக்கொள்கிறான்.

173 திடீரென்று தூரத்தி­ருந்து ஒரு தீபம் வருகிறது; வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகம் தெரிகிறது; யாத்திரிகனுடைய பயம் தெளிந்துவிடுகிறது. கொள்ளைக்காரன் என்று நினைத்தது மனத்தின் பிரமையே என்று அறிந்துகொள்கிறான்.

174 கதை கேட்பவர்களுக்கு ஞானத்தேட­ல் ஏற்படக்கூடிய தடங்கல்களைப்பற்றி யெல்லாம் விவரித்துவிட்டேன். அடுத்த அத்தியாயத்தில் பிரம்மானந்தத்தைத் தேடுபவர்களுக்கு அதனுடைய ஒளிமிகுந்த நிஜரூபம் தரிசனமாகும்.

175 ஹேமாட் ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் புரளுகிறான். வாயில் வந்ததை உளறுகிறான். ஸாயீயினுடைய கிருபையினால் எதெது வெளிவருகிறதோ அததையெல்லாம் விசுவாசமுள்ள எளிமையான பக்தர்கள் கேட்டு மகிழட்டும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு. ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட. 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில். 'பிரம்ம ஞான உபதேசம்ஃ என்னும் பதினாறாவது அத்தியாயம் முற்றும்,

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்,
சுபம் உண்டாகட்டும்.