Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 15

15. சோல்கரின் கற்கண்டு விநியோக நேர்த்திக்கடன்


ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 எவருடைய கணக்கற்ற புண்ணியச் செயல்கள் பழுத்துப் பலனளிக்க ஆரம்பித்து விட்டனவோ, அவர்தான் ஸாயீ தரிசனத்திற்கு வரமுடியும். மூன்று1 விதமான தாபங்களாலும் அவர் உபாதிப்படுவதில்லை; பரமார்த்த ஸாதனையில் வெற்றி பெறுவார்.

2 கேட்பவர்களே, கிருபை செய்யுங்கள்õ ஒரு கணம் உம்முடைய குருவை தியானம் செய்துவிட்டு, என்னிடம் முழு கவனம் செலுத்திக் காதையை பயபக்தியுடன் கேளுங்கள்.

3 ''ஓ, உம்மைப்பற்றித் தெரியாதா என்னõ ஏன் இந்த வியர்த்தமான முயற்சிகளெல்லாம்?ஃஃ என்றென்னை அலட்சியப்படுத்திவிடாதீர்கள்; என்னை மன்னித்துவிடுங்கள். உங்களை ஸமுத்திரத்திற்கு உபமானமாகச் சொல்லலாம்.

4 ஸமுத்திரம் நிரம்பியிருந்தாலும் நதியைத் திருப்பியனுப்பிவிடுவதில்லை. மேகங்கள் கனமாகப் பொழிந்து பெருக்கெடுக்கும் ஆயிரமாயிரம் நீரோட்டங்களைத் தன்னுள் ஏற்றுக்கொள்ளவே செய்கிறது.

5 ஸத்ஜனங்களாகிய நீங்களும் அவ்வாறே. உங்களுடைய தீர்த்தத்தில் நான் ஸ்நானம் செய்ய விரும்புகிறேன். என்னை வெறுத்தொதுக்கிவிடாதீர்கள். தீனர்களைப் புறக்கணிப்பது நன்றன்று.

6 கங்கையின் நிர்மலமான ஜலமாக இருந்தாலும், கிராமத்து ஓடையின் கலங்கிய நீராக இருந்தாலும், இரண்டும் சமத்துவத்தை அடைந்து ஸங்கமமாகும்போது ஆரவாரம் ஏதுமின்றிக் கலந்துவிடுகின்றன.

7 ஆகவே, என்னிடம் கதை கேட்பவர்களேõ ஞானிகளின் சரித்திரங்களைக் கேட்கவேண்டுமென்ற உங்களுடைய பேராவல், என்னுடைய முயற்சியைக் கருணையுடன் ஏற்றுக்கொண்டால், வெளித்தூண்டுதல் ஏதுமின்றித் தானே பலனுள்ளதாகிவிடும்.

8 இக்கதாமிருதம் சிரத்தையுடனும் பொறுமையுடனும் மரியாதையுடனும் கேட்கப்பட்டால், கேட்பவர்கள் பக்திப்பிரேமையை அனுபவிப்பர்; எல்லாப் பேறுகளையும் பெறுவர்.

9 பக்தர்கள் ஸஹஜமாகப் பரமபிராப்தியை அடைவர். கேட்பவர்கள் பக்தியையும் முக்தியையுமடைவர். எளிமையும் விசுவாசமுமுடையவர்கள் சாந்தியையும் ஸுகத்தையுமடைவர்; எல்லாருமே கடைமுடிவான அடைக்கலத்தை அடைவர்.

10 குருவினுடைய திருவாய்மொழியாக வெளிப்பட்ட கதைகளைக் கேட்கக்கேட்கப் பிறவிப்பயம் விலகும். தம்முடைய ஆத்மாவை அறிந்துகொள்ளும் அனுபவத்தால் இதயத்தில் ஆனந்தமடைவர்.

11 இந்த அத்தியாயத்தில், அன்பார்ந்த பக்தர்கள் எவ்விதமாகப் பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதையும் ஸாயீ அவர்களுக்கு எவ்விதமாக தரிசனம் தருகிறார் என்பதையும் விவரிக்கிறேன்.

12 ஒரு பூனை அப்பொழுதுதான் தன் குட்டிகளுக்குப் பாலூட்டிவிட்டு வெளியே வரலாம். உடனே திரும்பிப்போனாலும், குட்டிகள் அன்புடன் தாயின்மேல் விழுந்து விளையாடி மறுபடியும் பாலுண்ண முயலும்.

13 தாய்ப்பூனை தொண்டையில் 'குர்குர்ஃ என உறுமும்; குட்டிகளும் சிறிது நேரம் அடங்கியனபோல் தோன்றும். எனினும், தாய் ஓய்வெடுப்பதைப் பார்த்தால் போதும்; குட்டிகள் சுற்றிச் சுற்றி ஓடித் தாயிடம் பால் குடிக்க ஆரம்பித்துவிடும்.

14 குட்டிகள் வேகமாக விழுங்கிப் பாலை உறிஞ்சும்போது, அன்பினால் தாய்ப்பூனையின் முலைக்காம்புகளி­ருந்து பால் பெருகுகிறது. பூனையும், அசதியால் முன்பு உறுமியதையெல்லாம் மறந்துவிட்டுப் பிரீதியுடன் தரையில் கால்களை நீட்டிக்கொண்டு படுத்துக்கொள்கிறது.

15 அசதியெல்லாம் எங்கோ ஓடிவிட்டது; மாறாகத் தாயன்பு முலைகளின் வாயிலாகப் பாய்கிறது. நான்கு கால்களாலும் குட்டிகளை அமுக்கிப் பிடித்துக்கொண்டு அனிச்சைச் செயலாக அவற்றை நக்குகிறது. தாயன்பிற்கு நிகராக இவ்வுலகில் வேறெதுவும் உண்டோõ

16 குட்டிகளின் கூரான நகங்கள் தாயினுடைய வயிற்றை எவ்வளவு ஆழமாகக் கீறுகின்றனவோ, அவ்வளவு வேகமாகத் தாயன்பு பல தாரைகளாகப் பாலாகிப் பெருகுகிறது.

17 தாயைத் தவிர வேறெதையும் நாடாத குட்டிகளின் உணர்வு, எவ்வாறு மேலும் மேலும் தாய்ப்பூனையினுடைய முலைகளில் பா­ன் உற்பத்தியைப் பெருக்குகிறதோ, அவ்வாறே ஸாயீ பாதங்களின்மீது உங்களுக்கிருக்கும் பாசமும் நேசமும் ஸாயீயின் உள்ளத்தை உருகவைத்துவிடும்.

18 ஒருசமயம் தாணே1 நகரத்து மக்கள் கௌபீனேசுவரர் ஸந்நிதியில் ஹரிபக்தி பாராயண நிகழ்ச்சியாக, கேட்பதற்கு இனிமையான தாஸகணுவின் கீர்த்தனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

19 சான்றோர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி, தாஸகணு கீர்த்தனம் செய்வதற்குப் பணிவுடன் ஒப்புக்கொள்வார். ஒரு பைஸாவும் எதிர்பார்த்தாரில்லை; நிர்ப்பந்தம் ஏதும் செய்ததுமில்லை.

20 கீர்த்தனைக்காகக் கிடைக்குமென்று ஒரு பைஸாவையும் எதிர்பார்க்கவில்லை. இடுப்பில் வேட்டியைப் பஞ்சகச்சமாகக் கட்டிக்கொண்டு, உட­ன் மேற்பாகத்தில் ஏதும் அணியாமல், தலைப்பாகையுமில்லாமல் தாஸகணு கதாகீர்த்தனம் செய்வார். ஆயினும் கதை கேட்பதற்கு வரும் கூட்டத்தைச் சமாளிக்கமுடியாது.

21 தாஸகணு இவ்வளவு எளிமையாக உடை உடுத்துக்கொண்டு கீர்த்தனம் செய்ததன் பின்னணியை கவனமாகக் கேட்டால் சிரிப்பு வரும். சாவகாசமாகக் கேட்டு பாபாவின் செயல்முறைகளைப் பார்த்து ஆச்சரியமடையுங்கள்.

22 ஒருசமயம் தாஸகணு சிர்டீயில் கதாகீர்த்தனம் செய்வதற்காக நீளமான கோட்டைப் போட்டுக்கொண்டு, மேலே அங்கவஸ்திரம் அணிந்து, தலைப்பாகையும் கட்டிக்கொண்டு அலங்காரமாக வந்தார்.

23 நற்பழக்கத்தின் பிரகாரம் பாபாவுக்கு நமஸ்காரம் செய்ய மகிழ்ச்சியுடன் வந்தார். பாபா கூறியது காதில் கேட்டது, ''ஆஹா, மணமகனைப் போன்று அலங்காரம் செய்துகொண்டு வந்திருக்கிறீர்õ--

24 ''இவ்வளவு அலங்காரத்துடன் எங்கே செல்லப்போகிறீர்?ஃஃ என்று பாபா வினவினார். தாஸகணு, தாம் கதாகீர்த்தனம் செய்யப் புறப்பட்டுக்கொண் டிருப்பதாகச் சொன்னார்.

25 பாபா மேலும் வினவினார், ''எதற்காக இந்த நீளமான கோட்டு? எதற்காக இந்த அங்கவஸ்திரமும் தலைப்பாகையும்? எதற்காக இந்தப் பிரயாசையெல்லாம்? நமக்கு இதெல்லாம் தேவையில்லைõ--

26 ''இவையனைத்தையும் இப்பொழுதே, என் முன்னிலையிலேயே கழற்றிவிடும். இந்தச் சுமையை எதற்காக உமது உடம்பில்மேல் ஏற்றிக்கொள்ள விரும்புகிறீர்?ஃஃ பாபாவினுடைய ஆக்ஞைக்குக் கீழ்ப்படிந்து, தாஸகணு எல்லா அலங்கார ஆடைகளையும் கழற்றி பாபாவின் பாதங்களில் வைத்துவிட்டார்.

27 அன்றி­ருந்து இன்றுவரை, தாஸகணு ஆரோக்கியமான உட­ன் திறந்த மார்புடனும் கழுத்தில் மாலையுடனும் கையில் சப்பளாக்கட்டையுடனும் கதாகீர்த்தனம் செய்துவருகிறார்.

28 இந்தப் பாணி தற்காலப் பழக்கத்திற்கு வித்தியாசமாக இருப்பினும், இதற்குத் திடமானதும் தூய்மையானதுமான ஓர் அஸ்திவாரம் இருக்கிறது. ஞானவிழிப் படைந்தவர்களிலேயே மிகச் சிறந்தவரான நாரத முனிவருடைய பாணியாகும் இது.

29 இந்தப் பாணி, நாரத முனிவரால் ஆரம்பிக்கப்பட்டது. அவரை மூலமாகக் கொண்டே ஹரிதாசர்களுடைய பரம்பரை வளர்ந்தது. ஆடை அலங்காரங்கள் போன்ற ஆடம்பரங்களால் அவர்கள் உபாதிப்படவில்லை; அவர்களுடைய நாட்டமெல்லாம் அந்தரங்கத் தூய்மையையே நோக்கியது.

30 இடுப்புக்குக் கீழ்தான் உடை, கைகள் வீணையையும் சப்பளாக்கட்டையையும் ஒ­த்துக் கொண்டிருக்கும், வாயோ ஹரி நாமத்தை உரக்கப் பாடிக்கொண்டிருக்கும். நாரதருடைய இந்த உருவத்தை அனைவருமே அறிவரல்லரோõ

31 ஸமர்த்த ஸாயீயின் அருளால், தாஸகணுவே ஞானிகளின் வாழ்க்கையைப் பாடல்களாக இயற்றிக் கீர்த்தனம் செய்தார். கீர்த்தனம் செய்வதை இலவசமாகவே செய்தார்; கீர்த்தனங்களினால் அவருடைய புகழ் பரவியது.

32 இவ்வாறு தாஸகணு மக்களிடையே ஸாயீபக்தியை எழுப்பினார். ஆத்மானந்தத்தின் ஸாகரமான ஸாயீயின்மீது ஜனங்களுக்கு அன்பும் பக்தியும் பெருகும்படி செய்தார்.

33 பக்தசிரோன்மணியான சாந்தோர்க்கரும்1 அவருக்கு இளைத்தவரில்லை. ஸாயீ வழிபாடு பரவியதற்குக் காரணமானவர் அவரே.

34 சாந்தோர்க்கரின் தூண்டுதலால்தான் தாஸகணு பம்பாய்க்கு வந்து பல இடங்களில் ஸாயீ பஜனையும் கதாகீர்த்தனமும் செய்ய ஆரம்பித்தார்.

35 புணே, சோலாபூர், அஹமத் நகர் ஜில்லாக்களில் வாழ்ந்த மக்கள் ஏற்கெனவே ஸாயீ பாபாவைப்பற்றி அறிந்திருந்தனர். ஆனால், கொங்கண தேசத்தில் ஸாயீபக்தியைப் பரப்பியவர்கள் அவர்கள் இருவருமே.

36 இவ்வாறு, பம்பாய் மாகாணத்து மக்களிடையே அவ்விருவர்களுடைய முயற்சிகளால் ஸாயீ வழிபாடு ஆரம்பித்தது. கிருபா மூர்த்தியான ஸாயீ மஹராஜ் அவ்விருவர்களின் மூலமாக பம்பாய்க்கு வந்தார்õ

37 அருள்மிகு கௌபீனேசுவரர் கோயி­ல் அன்று நடந்த கதாகீர்த்தனத்தின்போது வெளிப்பட்ட ஸாயீயின் அருள்பற்றிய சொற்பொழிவைக் கேட்ட சோல்கருக்கு மனத்துள் ஓர் எழுச்சி அலை பொங்கியது.

38 ஹரிகதா கீர்த்தனத்தைக் கேட்பதற்குப் பலர் வந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி; அவற்றைப் பாராட்டும் வகையில் மக்கள் வந்திருந்தனர். சிலர் தாஸகணுவின் சாஸ்திர ஞானத்தை ரஸித்தனர்; சிலர் அவருடைய பேச்சுத்திறனுடன் கூடிய அங்க அசைவுகளையும் அபிநயத்தையும் மெச்சினர்.

39 சிலர் அவருடைய அமுத கானத்தைப் பாராட்டினர், ''ஓ, அதி உன்னதம்õ தாஸகணுவின் பாட்டு எவ்வளவு அற்புதமாக இருக்கிறதுõ விட்டல் நாமத்தில் எப்படி அமிழ்ந்துபோகிறார்õ கதை சொல்லும்போது பரவசத்தில் எப்படி நடனமாடுகிறார்õஃஃ

40 சிலர் முக்கியமான கதைக்கு முன்னுரையாகச் சொன்ன விஷயங்களை ரஸித்தார்கள்; சிலர் பிரதமமான கதையை ரஸித்தார்கள். சிலர் தாஸகணு கதை சொல்லும்போது மற்றவர்களுடைய நடை, உடை, பாவனையைப் போலவே நடித்துக்காட்டும் கே­யை ரஸித்தனர்; சிலர் உவமைக் கதைகளையும் உருவகக் கதைகளையும் ரஸித்தனர்.

41 ஹரிதாஸர் ஸமஸ்கிருத மொழிவல்லுநராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பதம் பதமாகப் பிரித்து வாக்கியம் வாக்கியமாக அர்த்தம் சொல்லக்கூடிய திறமையுள்ளவராக இருந்தாலும், அல்லது பொழிப்பான கருத்தை மட்டும் எடுத்துச் சொல்வதில் திறமைசா­யாக இருந்தாலும், கதை கேட்பவர்களுடைய ஆர்வம் குறையவில்லை.

42 இப்படிப் பலவிதமான மனிதர்கள் கதை கேட்கிறார்கள். ஆயினும், கதையைக் கேட்டு இறைவனிடமோ ஞானியினிடமோ பக்தியையும் சிரத்தையையும் வளர்த்துக்கொள்ளும் மக்கள் மிகச் சிலரேõ

43 பக்தியில்லாது கதைமேல் கதையாகக் கேட்டுக்கொண்டு மற்றொரு பக்கத்தில் படிக்குமேல் படியாக அஞ்ஞானத்தை வளரவிடுவதில் பலன் என்ன? பக்தியும் சிரத்தையுமில்லாது கதை கேட்பது வியர்த்தமே.

44 அழுக்கு நீக்காததை சவர்க்காரம் (சோப்பு) என்று சொல்லமுடியுமா? அஞ்ஞானத்தை நீக்காததை விவேகமளிக்கும் செவிச்செல்வம் என்று சொல்லமுடியுமா?

45 சிரத்தையுடன் கதை கேட்ட சோல்கரின் இதயத்தில் ஸாயீயின்மேல் பிரேமை பொங்கியது. அவர் தமக்குள்ளே சொல்­க்கொண்டார், ''ஓ, கிருபையுள்ளவரே, இந்த தீனனின்மீது தயை காட்டுங்கள்.ஃஃ

46 சோல்கர் தாற்கா­கமான உத்தியோகம் செய்துவந்தார்; வசதி இல்லாத ஏழை; குடும்ப பாரத்தைச் சுமக்க முடியாது தவித்துவந்தார். அரசாங்க உத்தியோகத்தின் மூலமாகப் பிழைப்பு நடத்தும் வாய்ப்பைப் பெறுகின்ற முழுபாரத்தையும் பாபாவின்மீது போட்டுவிட்டார்.

47 தீவிரமாக எதையாவது அடையவிரும்பும் ஏழைமக்கள் தங்களுடைய விருப்பம் நிறைவேறினால், பிராமணர்களுக்கு அவர்கள் விரும்பிய உணவுப் பொருள்களுடன் முழுத்திருப்தியடையுமாறு போஜனம் செய்விப்பதாக நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்வர்.

48 பணக்காரர்களோ, தங்களுடைய விருப்பம் நிறைவேறினால், ஆயிரம் பேர்களுக்கு உணவளிப்பதாகவோ அல்லது நூறு பசுக்களை தானமாக அளிப்பதாகவோ நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்வர்.

49 பணவசதியில்லாத சோல்கர், ஸாயீ பாதங்களை மனத்தில் இருத்தி எளிமையுடன் இவ்வாறு வேண்டிக்கொண்டார்.

50 ''பாபா, என்னுடையது ஓர் ஏழைக் குடித்தனம். என்னுடைய வாழ்க்கையே ஒரு வேலை கிடைப்பதைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால், நிரந்தரமான வேலை கிடைப்பதற்கு நான் பரீட்சையில் வெற்றி பெற்றாகவேண்டும்.--

51 ''பரீக்ஷைக்காக மும்முரமாகவும் விடாமுயற்சியுடனும் தயார் செய்திருக்கிறேன். என்னுடைய நம்பிக்கையே பரீக்ஷையில் வெற்றிபெறுவதில்தான் இருக்கிறது. வெற்றிபெறாவிட்டால், தற்கா­க வேலையையும் இழக்கநேரிடும்.--

52 ''உம்முடைய கிருபையினால் பரீட்சையில் நான் வெற்றிபெற்றுவிட்டால், உம்முடைய பாதங்களை தரிசனம் செய்வதற்கு (சிர்டீக்கு) வந்து உம்முடைய நாமத்தைச் சொல்­க் கற்கண்டு விநியோகம் செய்கிறேன். இது என்னுடைய நிர்த்தாரணமான தீர்மானம்.ஃஃ

53 இதுதான் சோல்கர் ஏற்றுக்கொண்ட நேர்த்திக்கடன். சில நாள்கள் கழித்து, அவருக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கும் வகையில் அவருடைய விருப்பம் நிறைவேறியது. ஆனால், அவருடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. குற்றத்திற்குப் பரிகாரமாக அவர் சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்வதை விட்டுவிட்டார்.

54 பயணம் செய்வதற்குப் பணம் தேவை என்று அவருக்குத் தெரியும்; மேலும் பாபாவிடம் வெறுங்கையுடனா போக முடியும்? ஆகவே, அவர் துயரத்துடன் நாளைக்கு, நாளைக்கு என்று சிர்டீப் பயணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போனார்.

55 ஸஹயாத்திரி மலைத்தொடரின் ஆபத்துமிக்க உச்சியான நாணேகாட்டையும்கூட சுலபமாகத் தாண்டிவிடலாம்; கிருஹஸ்தன் தன்னுடைய உம்பரேகாட்டைக் (வீட்டின் தலைவாயிலைக்) கடப்பது மிகக் கடினம்.

56 சிர்டீயில் செய்வதாக வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடன் நிறைவேறும்வரை, சர்க்கரை இருக்கும் எந்தப் பண்டமும் சோல்கருக்கு விலக்காகிவிட்டது. அவர் தேநீரைக்கூட சர்க்கரையின்றியே அருந்தினார்.

57 சிலகாலம் இவ்வாறு கழிந்த பிறகு, சோல்கர் சிர்டீ செல்லும் நாளும் வந்தது. அவர் சிர்டீ சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றியபின் மிகுந்த சந்தோஷமடைந்தார்.

58 பாதங்களில் நமஸ்காரம் செய்து ஸாயீ தரிசனம் செய்த சோல்கர், பரிபூரணமான திருப்தியாலும் மகிழ்ச்சியாலும் பொங்கி வழிந்தார்.

59 நிர்மலமான மனத்துடன் கற்கண்டு விநியோகம் செய்துவிட்டு, பாபாவுக்கு ஒரு தேங்காயை ஸமர்ப்பணம் செய்தபின் அவர் சொன்னார், ''இன்று என்னுடைய மனோரதம் நிறைவேறிவிட்டது.ஃஃ

60 ஸாயீ தரிசனம் அவருக்கு ஆனந்தமளித்தது; ஸம்பாஷணை செய்தது இதயத்தைக் குளிரவைத்தது. அவர் ஜோக்(எ) என்பவருடைய விருந்தினராக வந்திருந்ததால், ஜோக்(எ)குடன் அவருடைய வீட்டிற்குத் திரும்பவேண்டியதாயிற்று.

61 ஜோக்(எ) கிளம்பத் தயாராகி எழுந்தபோது, அவருடைய விருந்தினரும் (சோல்கரும்) எழுந்தார். அப்பொழுது பாபா ஜோக்(எ)கிடம் கூறினார், ''இவருக்கு சர்க்கரை பூரிதமாகப் போடப்பட்ட தேநீர் பல கோப்பைகள் குடிப்பதற்குக் கொடுங்கள்.ஃஃ

62 தம்முடைய ரஹஸியத்தை அம்பலப்படுத்தும் பொருள்பொதிந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட சோல்கர் மிக வியப்படைந்தார். கண்களில் ஆனந்தபாஷ்பம் (கண்ணீர்) பொங்க, ஸாயீயின் சரணங்களில் தலையை வைத்தார்.

63 ஜோக்(எ) இவ்வார்த்தையைக் கேட்டுக் குதூகலம் அடைந்தார்; சோல்கருடைய மகிழ்ச்சியோ அதற்கு இரண்டு மடங்காக இருந்தது. அதற்குக் காரணம் அவருக்கு மாத்திரந்தான் தெரியும். இதயத்தின் ஆழத்தில் பாபாவின் குறிப்பைப் புரிந்துகொண்டார்.

64 பாபா தம்முடைய வாழ்நாளில் தேநீரைத் தொட்டதே கிடையாது. அப்படியிருக்க, அவர் ஏன் அந்த நேரத்தில் தேநீரைப்பற்றி நினைக்கவேண்டும்? சோல்கரின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் பக்தியினுடைய முத்திரையை அவருடைய இதயத்தில் ஆழமாகப் பதிப்பதற்காகவுமே அவ்வாறு செய்தார் பாபா.

65 தமக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்ற தெளிவான குறிப்பையும் பாபா திடீரென்று விடுத்தார், ''சோல்கர்õ நீர் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்ட கற்கண்டு என்னிடம் வந்துசேர்ந்துவிட்டது. ஆகவே, உம்முடைய விரதமும் நிறைவேறிவிட்டதுõ --

66 ''நேர்த்திக்கடன் எடுத்துக்கொண்டபோது இருந்த உம்முடைய குழம்பிய மனம், நிறைவேற்றுவதில் ஏற்பட்ட மிகுந்த தாமதத்தால் மனம்நொந்து பரிகாரமாக நீர் ஏற்றுக்கொண்ட விரதம், அனைத்தையும் நீர் ரஹஸியமாக வைத்திருப்பினும், நான் அறிவேன்.--

67 ''நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடிக் கெஞ்சி பக்தியுடனும் விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவுபகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்.--

68 ''என்னுடைய உடலுடன் நான் இங்கு இருக்கலாம்; நீங்கள் தொலைதூரத்தில் இருக்கலாம்; ஏழுகடல் தாண்டியும் செல்லலாம். இருப்பினும், அங்கு நீங்கள் என்ன செய்தாலும் அந்தக் கணமே எனக்கு இங்கு அது தெரிந்துவிடும்.--

69 ''நீங்கள் இவ்வுலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், அங்கு நான் உங்களுடனே செல்கிறேன். உங்களுடைய இதயமே என்னுடைய வாசஸ்தலம்; நான் உங்களுக்குள்ளேயே உறைகின்றேன்.--

70 ''உங்களுடைய இதயத்தில் வசிக்கும் என்னையே நீங்கள் வழிபடவேண்டும். எல்லா உயிரினங்களின் இதயங்களிலும் நானே உறைகின்றேன்.--

71 ''வீட்டினுள்ளோ, வெளியிலோ, அல்லது வழியிலோ, நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்களனைவரும் என்னுடைய ஆவிர்ப்பா(ஆஏஅ)வங்களே (வெளிப்பாடுகளே). அவர்களனைவருள்ளும் நான் உறைகின்றேன்.--

72 ''பூச்சியோ, எறும்போ, நீரில் வாழும் பிராணிகளோ, வானத்தில் பறக்கும் பறவைகளோ, நிலத்தில் வாழும் நாய், பன்றி போன்ற மிருகங்களோ - அவையனைத்திலும் நான் அவசியம் நிரந்தரமாக வியாபித்திருக்கிறேன். --

73 ''ஆகவே, உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவர்களாக நினைக்காதீர். தம்மி­ருந்து என்னை வேறுபடாதவாறு அறிந்தவர் மஹாபாக்கியசா­.ஃஃ

74 இவ்வார்த்தைகள் சுருங்கச் சொல்லப்பட்டவையாயினும் ஆழமான பொருள் பொதிந்தவை; மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சோல்கரின்மீது எவ்வளவு பிரியம் இருந்தால் பாபா அவருக்கு இந்த பக்திக் கஜானாவை வழங்குவார்õ

75 சோல்கரின் மனத்தில் என்ன இருந்ததோ அதை நேரிடையான அனுபவமாக பாபா வெளிப்பாடு செய்துவிட்டார். ஞானிகளுடைய செயல்முறைத் திறன்தான் என்னேõ

76 பாபாவினுடைய திருவாய்மொழி விலைமதிப்பற்றது. பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பாய்ந்து, பிரேமையாகிய பழத்தோட்டத்திற்கு உயிர்ச்சக்தியாகிறது; பக்தியாகிய கப்பலுக்குப் பாய்மரம் ஆகிறது.

77 சாதகப் பறவைகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காக மேகங்கள் மழையைப் பொழிகின்றன; இதன்மூலமாக பூமி முழுவதும் மழையால் குளிர்ந்துபோகிறது. இங்கு நடந்ததும் அவ்வாறே.

78 சோல்கர், பாவம் ஏழைõ யாருக்குமே தெரியாத, கேள்விப்படாத, முன்பின் தெரியாத ஆளல்லரோ? சோல்கரின் இதயத்தில் ஓர் எழுச்சியை ஏற்படச்செய்து நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ள வைத்த தாஸகணுவின் கீர்த்தனைகூட ஒரு நிமித்த காரணமே (கருவியே). அதுவே, கடைசியில் அவருக்கு பாபாவின் அருளைத் தேடிக்கொடுத்தது.

79 இதனைப் பின்பற்றி, ஞானிகள் மனத்துள்ளே என்ன நினைக்கிறார்கள் என்னும் அற்புதம் வெளிப்பட்டதுõ அடியவர்களுக்குப் போதனை அளிப்பதில் பேராவல் கொண்ட பாபா, இதுபோன்ற சூழ்நிலைகளை சிருஷ்டி செய்தார்.

80 இங்கே சோல்கர் ஒரு கருவி மாத்திரமேõ எப்பொழுதும்போல அடியவர்களுக்கு போதனை செய்யும் பாபாவின் லீலையே இது. கற்பனை செய்தும் பார்க்கமுடியாத லீலைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தாத சந்தர்ப்பமே இல்லை.

81 இப்பொழுது பாபாவினுடைய நுண்ணிய திறன்பற்றிய நிகழ்ச்சியொன்றை விவரித்துவிட்டு இந்த அத்தியாயத்தை முடித்துவிடுகிறேன். இது, ஒருவர் கேட்ட கேள்வியும் அதற்கு பாபா அளித்த பதிலுமான விவரம்.

82 ஒருசமயம் பாபா தம்முடைய வழக்கமான ஆஸனத்தில் மசூதியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவருக்கெதிரில் உட்கார்ந்துகொண் டிருந்த அடியவர், ஒரு முக்கத்தைக் (பல்­ செய்த ஒ­யைக்) கேட்டார்.

83 பல்­ முக்கமிடுவதோ, அல்லது ஒருவருடைய உட­ன் எந்த அங்கத்தின்மேலாவது விழுவதோ, வரப்போகும் நிகழ்ச்சிகளுக்கு சகுனமாகக் கருதப்படுவதால், தமக்கிருந்த ஆர்வத்தால் அடியவர் பாபாவை மேம்போக்காக ஒரு கேள்வியைக் கேட்டார்.

84 ''பாபா, பின்சுவரில் இருக்கும் பல்­ ஏன் முக்கமிடுகிறது? அதனுடைய மனத்தில் என்ன இருக்கிறது? அசுபமான விஷயமாக இருக்காதன்றோ?ஃஃ

85 பாபா அவருக்குப் பதிலளித்தார், ''ஔரங்காபாத்தி­ருந்து அவளுடைய சகோதரி இங்கு வருகிறாள் என்று தெரிந்து, பல்­க்கு சந்தோஷம் பொங்குகிறது.ஃஃ

86 பல்­ என்ன ஒரு பெரிய பிராணிõ தாய், தந்தை, சகோதரன், சகோதரி உறவுகளைப் பற்றிய பேச்சு எங்கே? இவ்வுலக விவகாரங்களுக்கும் பல்­க்கும் என்ன சம்பந்தம்?

87 அடியவர் மேற்கண்டவாறு நினைத்து, பாபா ஹாஸ்யமாக ஏதோ பதில் சொன்னார் என்று நினைத்துக்கொண்டு அங்கேயே சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

88 திடீரென்று ஔரங்காபாத்தி­ருந்து குதிரையின்மேல் சவாரி செய்துகொண்டு பாபாவை தரிசனம் செய்வதற்கு ஒருவர் வந்தார். பாபா அப்பொழுது குளித்துக்கொண் டிருந்தார்.

89 மேற்கொண்டு பயணம் செய்யவேண்டிய அவசியம் இருந்ததாலும், குதிரைக்குத் தினப்படிப் போடவேண்டிய தீனியைப் போடாமல் குதிரையால் மேற்கொண்டு நடக்கமுடியாதென்பதாலும் அம்மனிதர் ஏதாவது தானியம் வாங்கிக்கொண்டு வரலாம் என்று பஜாருக்குக் கிளம்பினார்.

90 ஔரங்காபாத்தி­ருந்து வந்த மனிதர் (வியாபாரி), குதிரையின் தீனிப்பையைத் தம் கையிலெடுத்து உள்ளிருந்த குப்பைகூளங்களை உதறினார். பல்­யைப்பற்றிக் கேள்வி கேட்ட அடியவர் அதையே விறைத்துப் பார்த்து ஆச்சரியமடைந்தார்.

91 பையை உள்வெளியாகத் திருப்பி பூமியில் தட்டியபோது, அதி­ருந்து ஒரு பல்­ கீழே விழுந்தது. அவர்கள் பார்த்துக்கொண் டிருந்தபோதே பயத்துடன் குறுக்கே வேகமாக ஓடியதுõ

92 பாபா கேள்விகேட்ட அடியவரிடம் சொன்னார், ''இப்பொழுது இவளை கவனமாகப் பார்õ இவள்தான் அந்தப் (மசூதியி­ருந்த) பல்­யின் சகோதரி. இந்த அற்புதத்தை வேடிக்கை பார்õஃஃ

93 அங்கிருந்து கிளம்பிய பல்­, இடைவிடாது ஒ­ செய்துகொண்டிருந்த தன் அக்காள் பல்­யிடம் நேராக ஓடியது. ஒ­ எங்கிருந்து வந்ததோ அந்த திசையிலேயே பெருமிதத்துடன் ராஜநடை போட்டுச் சென்றது.

94 எத்தனையோ நாள்களுக்குப் பிறகு, சகோதரிகள் இரண்டும் சந்திக்க நேர்ந்தது. இரண்டும் கட்டியணைத்துக்கொண்டு வாயில் முத்தமிட்டுக்கொண்டன. பிரேமையின் அபூர்வமான கொண்டாட்டம்õ

95 ஒன்றை ஒன்று வட்டமாகச் சுற்றி மகிழ்ச்சியுடன் தட்டாமாலை சுற்றி இஷ்டம்போல் செங்குத்தாகவும் கிடக்கையாகவும் குறுக்காகவும் சுழன்று ஆட்டம் போட்டன.

96 ஔரங்காபாத் நகரம் எங்கே, சிர்டீ எங்கேõ எவ்வளவு விசித்திரமான நிகழ்ச்சி இதுõ குதிரையின்மீது திடீரென்று ஒருவர் எப்படி வந்தார்? ஒரு பல்­யை எப்படிக் கூட்டிவந்தார்? ஓ, என்ன விநோதம்õ

97 அந்தப் பல்­ ஔரங்காபாத்தில் இருந்திருக்கலாம்; குதிரையின் தீனிப்பையில் புகுந்திருக்கலாம். ஆனால், கேள்வியும் பதிலும் எப்படிச் சரியான தருணத்தில் நிகழ்ந்தது? மிகப் பொருத்தமான நேரத்தில் அது நிகழ்ந்தது உண்மையில் ஓர் ஆச்சரியம்õ

98 ஓ, பல்­ முக்கமிட ஆரம்பித்து அடியவரைக் கேள்வி கேட்கவைத்ததேõ நேரிடை அனுபவத்தால் பின்னர் நிரூபிக்கப்பட்ட பல்­சொல்­ன் முக்கியத்துவத்தை, எப்படி பாபா முன்னரே விளக்கினார்?

99 ஈடிணையற்ற நிகழ்ச்சியன்றோ இதுõ ஹாஸ்யத்தை எவருமே விரும்புவாராதலால், ஞானிகள் இணையற்ற இந்த யுக்தியை பக்தர்களின் நல்வாழ்வுக்காகக் கையாண்டனர்.

100 யோசித்துப் பாருங்கள்õ விவரம் அறியவிரும்பிய அடியவர் அங்கு இல்லையென்றால், அல்லது இருந்தும் அந்தக் கேள்வியைக் கேட்காமல் விட்டிருந்தால், ஸாயீயினுடைய மஹத்துவம் எவ்வாறு வெளிவந்திருக்கும்? எவருக்குப் பல்­சொல்­ன் அர்த்தம் புரிந்திருக்கும்?

101 எத்தனையோ பல்­கள் எவ்வளவோ முறைகள் முக்கம் செய்ததை நாம் கேட்டிருக்கிறோம். பல்­கள் ஏன் ஒ­ செய்கின்றன என்றோ, அந்த ஒ­க்கு என்ன அர்த்தம் என்றோ, கண்டுபிடிக்க யாராவது முயற்சி செய்திருக்கிறார்களா?

102 ஸாராம்சம் என்னவென்றால், பிரபஞ்ச விளையாட்டை நிர்வகிக்கும் சூத்திரங்கள் சூக்குமமானவை; ஆராய்ச்சிக்கப்பாற்பட்டவை. யாரால் அவற்றைக் கற்பனை செய்ய முடியும்? எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றனõ

103 இதற்கு நேர்மாறாக, பல்­ முக்கமிட்டால் அனர்த்தம் விளையும் என்றும் கெடுதல் ஏதும் நேராம­ருப்பதற்காக நாம் பல்­சொல்லுக்குக் 'கிருஷ்ணா கிருஷ்ணாஃ என்று பதிலளிக்கவேண்டுமென்றும் மக்கள் நினைக்கிறார்கள்.

104 அது எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும்õ இது பக்தர்களுக்குத் தம்மீது இருந்த விசுவாசத்தைத் திடமாக்குவதற்கு பாபா கையாண்ட யுக்தியாகும். இது வெறும் அற்புதம் மாத்திரம் அன்றுõ

105 எவர் இந்த அத்தியாயத்தை பயபக்தியுடன் படிக்கிறாரோ, அல்லது பலமுறைகள் திரும்பத் திரும்பப் பாராயணம் செய்கிறாரோ, அவருடைய ஸங்கடங்கள் அனைத்தும் குருராயரால் நிவாரணம் செய்யப்படும்.

106 வேறெதையும் நாடாமல் ஸாயீயின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர், தம்மைக் காக்கும் தெய்வமும் அபயமளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் ஸாயீயே என்று உணர்ந்துகொள்வார்.

107 தவறு செய்துவிடாதீர்கள்; ஸந்தேஹமே வேண்டாõ ஸாயீநாதர் அத்தகையவரேõ பக்தர்களின் நலனுக்காகவே என்னுடைய சூக்கும அனுபவ விசேஷத்தை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்.

108 ''இந்த ஜகத்தில் நான் ஒருவனே இருக்கின்றேன்; என்னைத் தவிர வேறெதுவும் இல்லை. இப்பூவுலகம் மாத்திரமல்லாது மூன்று உலகங்களிலும் நான், நான் மாத்திரமே இருக்கின்றேன்.ஃஃ

109 இந்த அத்வைத ஞானம் உணர்வூட்டப்படும்போது, பயத்தின் நிழல்கூட இருக்காது. இந்த ஞானம் அடைந்தவருக்கு எல்லாமே பிரபஞ்ச உணர்வால் நிரம்பியிருக்கும்; அஹங்காரத்திற்கும் அபிமானத்திற்கும் இங்கு இடமேயில்லை.

110 ஹேமாட் பந்த் ஸாயீயிடம் முழுமையாக சரணடைகிறேன்; அவருடைய பொற்கமலப் பாதங்களி­ருந்து ஒரு கணமும் பிரியமாட்டேன். ஏனெனில், ஸம்ஸார ஸாகரத்தைக் கடப்பதற்கு அதுவே பத்திரமான வழியாகும். மேற்கொண்டு சொல்லப்போகும் சுவாரசியமான காதையைக் கேளுங்கள்.

111 அடுத்த அத்தியாயத்தில், பிரம்ம ஞானம் என்பது விரல்களால் சிட்டிக்கை போடுவது போன்று சுலபம் என்று நினைக்கும் மக்கள், எப்படி பிரம்ம ஞானம் வேண்டுகிறார்கள் என்பதை ஒரு முக்கியமான நிகழ்ச்சியை உருவாக்குவதன்மூலம் குருசிரேஷ்டரான ஸாயீ விளக்குவார்.

112 ஒரு பேராசை பிடித்த மனிதர் பிரம்ம ஞானம் வேண்டுவார்; மஹராஜ் அம்மனிதருடைய ஜோபியி­ருந்தே அதை எடுத்துக் கொடுப்பார்.

113 'ஆசையைத் துறக்காதவன் பிரம்ம ஞானத்தை எக்காலத்தும் அடையமுடியாது; இதில் ஸந்தேஹமே வேண்டாஃ என்னும் கருத்தை பாபா எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டினார் என்பதை இக்காதையைக் கேட்பவர்கள் நன்கு புரிந்துகொள்வார்கள்.

114 பிரம்ம ஞானம் அடையக்கூடிய அதிகாரி யார்? அது யாருக்குக் கிடைக்கும்? அதைப் பெறும் வழி யாது? இவற்றையெல்லாம் மஹராஜ் அடுத்த அத்தியாயத்தில் விவரமாக எடுத்துரைப்பார்.

115 அவருடைய அடிமையின் அடிமையாகிய நான், இந்த ஸாயீ பிரேமவிலாஸத்தை நீங்கள் மிக உல்லாஸமாகக் கேட்கவேண்டுமென்று பணிவுடன் ஆசைகொள்கிறேன்.

116 உங்களுடைய சித்தம் மகிழ்ச்சியால் பொங்கும்; உங்களுடைய பிரபஞ்ச உணர்வு மேன்மையுறும். ஆகவே, கதை கேட்பவர்களே, உங்களுடைய கவனத்தைக் கொடுத்து ஞானிகளுடைய மஹிமையை அறிந்துகொள்ளுங்கள்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'சோல்கரின் கற்கண்டு விநியோகம்ஃ என்னும் பதினைந்தாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.