Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 12

12. குரு கோலப் தரிசனம் - ஸ்ரீராம தரிசனம்


ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 ஜயஜய ஸத்குரு ஸாயீநாதாõ உம்முடைய திருவடிகளில் நான் நமஸ்காரம் செய்கிறேன். நிர்விகாரமானவரும் அகண்ட சொரூபமானவருமான தேவரீர், சரணடைந்தவனின்மீது (என்மீது) கிருபை வையுங்கள்.

2 ஸச்சிதானந்தமும் ஆனந்தத்தின் இருப்பிடமுமாகிய நீரே பிறவிப்பிணியின் இன்னல்களால் அவதியுறும் மக்களுக்கு சுகத்தின் ஆதாரம். உம்முடைய அத்வைத போதனை மந்தபுத்திக்காரனுடைய மனத்தி­ருந்துங்கூட துவைத மாயையைப் போக்கிவிடுகிறது.

3 உம்மை எங்கும் நிறைந்தவர் என்றும் ஆகாயத்தைப்போல விஸ்தாரமானவர் என்றும் விவரித்தது மட்டுமல்லாமல், அனுபவத்திலும் கண்டவர்கள் தெய்வ அனுக்கிரஹம் பெற்றவர்கள்.

4 ஸாதுக்களை ஸம்ரக்ஷணம் செய்வதற்கும் துஷ்டர்களை வேரோடு நாசம் செய்வதற்குமே இறைவன் பூமியில் அவதாரம் செய்கிறான்.

5 ஞானிகளுடைய அவதாரம் அதனினும் மேன்மையானது. ஞானிகளுக்கு ஸாதுக்களும் துஷ்டர்களும் சமானமே. ஒருவனை உயர்ந்தவனென்றும் மற்றொருவனை ஈனமானவன் என்றும் வித்தியாசப்படுத்த அவர்களுடைய இதயம் அறியாது. ஞானிகளுக்கு இருவரும் சரிசமானமேõ

6 ஒரு நோக்கில் பார்க்கும்போது, இறைவனைவிட ஞானிகள் உயர்ந்தவர்கள். தீனர்களின் மேலுள்ள பிரேமையால், முத­ல் அவர்கள் தருமமார்க்கத்தி­ருந்து வழிதவறியவர்களை மீண்டும் தருமநெறிக்குக் கொண்டுவருகிறார்கள்.

7 ஸம்ஸார ஸாகரத்திற்கு ஞானியர் ஓர் அகத்திய முனி1; அஞ்ஞான இருளுக்கு ஞாயிறு. பரமாத்மா இவர்களிடமிருந்து வேறுபட்ட வஸ்து இல்லை; இவர்களிடமே வசிக்கிறார்.

8 என் ஸாயீ இவர்களில் ஒருவர். பக்தர்களின் க்ஷேமத்திற்காகவே இப்புவியில் அவதரித்திருக்கிறார். அவர் ஞானதேவரின் அவதாரம்; கைவல்­ய (இறைவனோடு ஒன்றுபட்ட நிலை) தேஜஸில் நிலைபெற்றவர்.

9 ஜீவராசிகள் அனைத்தையும் அவர் தம்முடன் ஒன்றியனவாக நினைத்தாலும், இதர விஷயங்களில் அவர் பற்றற்றே விளங்கினார். ஒன்றை விரும்பியும் மற்றவற்றின்மேல் பற்றற்று இருந்தாலும், எல்லாவற்றையும் விரோதபாவமின்றி சமமாகவே பார்த்தார்.

10 சத்ருபா(ஆஏஅ)வமும் இல்லை; மித்திரபா(ஆஏஅ)வமும் இல்லை; ஆண்டியையும் அரசனையும் ஸமமாகவே நடத்தினார். மஹானுபாவரான ஸாயீ இவ்விதமாகவே இருந்தார். அவருடைய பிரபாவத்தைக் கேளுங்கள்.

11 ஞானிகள் அடியார்களுடைய பக்தியால் கவரப்பட்டு, அவர்களுக்காகத் தங்களுடைய புண்ணியகோடியி­ருந்து தாராளமாகச் செலவு செய்கிறார்கள். பக்தர்களைக் காப்பாற்ற விரையும்போது, மலையோ பள்ளத்தாக்கோ மற்றெவ்விதமான தடையோ அவர்களைத் தடுத்து நிறுத்தமுடியாது.

12 ஆன்மீகம் கிலோ என்ன விலை என்று கேட்கும் அஞ்ஞானிகளும் உண்டு. மனைவி, மக்கள், செல்வம் என்னும் பிடிப்புகளில் அவர்கள் மாட்டிக்கொண் டிருக்கிறார்கள். இப்பரிதாபகரமான அஞ்ஞானிகளை விட்டுவிடுவோம்.

13 அஞ்ஞானிகளாயினும், கபடமற்றவர்களாக இருந்தால் இறைவன் கிருபை காட்டுகிறான். ஆனால், இறைவனுக்கு வெறுப்பு முகம் காட்டிப் பிரிந்து எங்கோ போகின்றவர்கள் அவர்களுடைய அஹந்தையிலேயே எரிந்துபோகிறார்கள்.

14 ஒரு ஞானி கருணையால் உந்தப்பட்டு 'விசுவாசம் துளிர்விடட்டும்ஃ என்ற நோக்கத்தில் அஞ்ஞானிகளையும் அரவணைப்பார். ஆனால், ஞானகர்வியோ எதற்கும் பிரயோஜனமின்றிப் போகிறான்.

15 பண்டிதர் என்று இறுமாப்புக்கொண்ட மூடமதியாளர், பக்தி மார்க்கத்தை இழிவுபடுத்தலாம். அவர்களுடைய சங்கதியே நமக்கு வேண்டா.

16 நமக்கு வர்ண விபாகங்களைப் (குலப்பிரிவுகளைப்) பற்றிய போராட்டம் வேண்டா; அதைப்பற்றிய தேவையில்லாத, அளவுக்கு மீறிய, பெருமையும் வேண்டா. வர்ணாசிரமதர்மத்தை உடும்புபோல் பிடித்துக்கொள்ள வேண்டா; வேதங்களையே எதிர்க்கும் மெத்தப்படித்த பண்டிதத்தனமும் வேண்டா.

17 வேதங்களையும் வேதாங்கங்களையும் கரைத்துக் குடித்த பண்டிதர்கள்தாம், ஞானகர்வத்தால் மதோன்மத்தர்களாக ஆகி பக்தி மார்க்கத்துக்குத் தடையாகச் செயல்படுகின்றனர். அவர்களுக்கு கதி மோக்ஷம் ஏதும் இல்லை.

18 அஞ்ஞானி தன்னுடைய விசுவாசமாகிய பலத்தால் பிறவிப்பயத்தை வெல்கிறான். ஆனால், அதிகம் படித்த பண்டிதர்களின் குழப்பங்களையும் புதிர்களையும் எவராலும் எக்காலத்தும் தீர்த்துவைக்கமுடியாது.

19 ஞானிகளின் திருவடிகளை சரணடைவதால் அஞ்ஞானிகளுடைய அஞ்ஞானம் நல்லெண்ணங்களுக்கும் நல்லுணர்வுகளுக்கும் இடமளித்துவிட்டு அகன்றுவிடும். ஞானமார்க்க அபிமானிகளின் விகற்பம் (மனக்கோணல்) என்றுமே அழியாது.

20 இப்பொழுது தெய்வபலத்தால் நிகழ்ந்த ஒரு விசித்திரமான நிகழ்ச்சியைச் சொல்கிறேன், கேளுங்கள்õ ஒரு சடங்குச்செல்வருக்கு1 'ஸாயீயுடன் பேட்டிஃ என்னும்

21 அவர் விஜயம் செய்த நோக்கம் வேறு; விதி நிர்ணயித்த விளைவு வேறுõ இதன் விளைவாக, சிர்டீவிஜயத்தால் அவருக்குத் தம் குருவினுடைய தரிசனமே கிடைத்ததுõ

22 செவிமடுப்பவர்களேõ குருவின் மஹாத்மியத்தைப் பிரகாசப்படுத்தும் சுவாரசியமான இந்தக் காதையை அவசியம் கேளுங்கள். குருபக்தர்களுக்குத் தம்முடைய பிரேமையை ஸாயீ அளிப்பதை நிதரிசனமாகத் தெரிந்துகொள்ளலாம்.

23 ஒரு சமயம் நாசிக்1 என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தி­ருந்து, சடங்குச்செல்வரும் ஆசாரசீலரும் அக்கினிஹோத்திரியுமான முலே சாஸ்திரி என்பவர் பூர்வபுண்ணிய பலத்தால் சிர்டீக்கு வந்தார்.

24 பூர்வபுண்ணியம் இல்லாது எவரும் சிர்டீயில் தங்கமுடியாது. தங்குவதற்கு எவ்வளவு நிச்சயம் செய்துகொண்டு வந்தாலும் சரி, எல்லா ஸாமர்த்தியங்களும் பாபாவின்முன் செல்லுபடியாகாது போயின.

25 ஒருவர் தாராளமாக நினைக்கலாம், 'நான் சிர்டீக்குப் போய் என் விருப்பம்போல் தங்கப்போகிறேன்ஃ என்று. ஆனால், அது அவருடைய கைகளில் இல்லை; ஏனெனில் அவர் முழுக்கவும் வேறொருவருடைய (பாபா) சக்திக்கே உட்பட்டிருக்கிறார்.

26 நிச்சயமாக நான் வெற்றிபெறுவேன் என்று திடமான தீர்மானத்துடன் வந்தவர்கள் அனைவரும் முயற்சியைக் கைவிட்டுவிட்டுத் தோற்றுப்போனார்கள். ஸாயீ சுதந்திரமான தேவர்; மற்றவர்களுடைய அஹந்தை அவர்முன் செல்லுபடியாகாது.

27 நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நாள் வரும்வரை, பாபா நம்மைப்பற்றி நினைக்க மாட்டார்; அவருடைய மஹிமையும் நம் காதுகளில் விழாது. அப்படியிருக்க, தரிசனம் செய்யவேண்டுமென்ற அருள்வெளிப்பாட்டைப்பற்றி என்ன பேசமுடியும்?

28 ஸமர்த்த ஸாயீயை தரிசனம் செய்யப் போகவேண்டுமென்று எத்தனையோ மக்கள் பிரத்யேகமான ஆவல் வைத்திருந்தனர். ஸாயீ தேஹவியோகம் அடையும்வரை அந்த நல்வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லைõ

29 மற்றும் சிலர் சிர்டீக்குப் போவதைக் காலங்காலமாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே போயினர். போகலாம், போகலாம் என்று நூலை நீட்டிக்கொண்டேபோகும் குணமே அவர்களைப் போகமுடியாமல் செய்துவிட்டது. ஸாயீயும் மஹாஸமாதி அடைந்துவிட்டார்.

30 நாளைக்குப் போகலாம், நாளைக்குப் போகலாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே போனவர்கள் ஸாயீயைப் பேட்டிகாணும் நல்வாய்ப்பை இழந்தனர்; இவ்விதமாகப் பச்சாத்தாபமே மிஞ்சியது. கடைசியில், தரிசனம் செய்யும் பாக்கியத்தைக் கோட்டைவிட்டனர்.

31 இம்மக்களுடைய நிறைவேறாத ஆவல், மரியாதையுடனும் விசுவாசத்துடனும் இக்காதைகளைக் கேட்டால், பால் குடிக்க விரும்பியவர்கள் மோராவது குடித்த அளவுக்கு நிறைவேறும்.

32 சிர்டீக்குப் போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப்பட்ட பாக்கியம் செய்தவர்கள்கூட, அவர்கள் விரும்பிய நாள்வரை சிர்டீயில் தங்கமுடிந்ததா என்ன? அதற்கு பாபா அல்லரோ அனுமதி கொடுக்கவேண்டும்õ

33 சுயமுயற்சிகளால் மட்டும் எவரும் சிர்டீக்குப் போகமுடியவில்லை; எவ்வளவு ஆழமான ஆவ­ருந்தாலும் விருப்பப்பட்ட நாள்வரை அங்கே தங்க முடியவில்லை. பாபா விரும்பியவரை அங்கே தங்கிவிட்டு, ''போய் வாஃஃ என்று அவர் ஆணையிட்டவுடன் வீடுதிரும்ப நேர்ந்தது.

34 காகா மஹாஜனி1 ஒருமுறை சிர்டீயில் ஒருவாரம் தங்கவேண்டுமென்ற விருப்பத்துடன் பம்பாயி­ருந்து சிர்டீக்கு வந்தார்.

35 ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி ஏற்பாடுகள் முன்கூட்டியே ஆரம்பிக்கப்படும். சாவடி மிக அழகாக அலங்கரிக்கப்படும்; பாபாவினுடைய இருக்கைக்கு எதிரில் ஒரு தொட்டில் கட்டப்படும். பக்த ஜனங்கள் ஆனந்தக்கூத்தாடுவர்.

36 மகிழ்ச்சி தரும் கோகுலாஷ்டமி (ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி) பண்டிகையின் கோலாகலங்களில் நேரில் கலந்துகொள்ளும் ஆவலுடன் காகா சில நாள்களுக்கு முன்னமேயே வந்துவிட்டார்.

37 ஆனால், முதல் தரிசனத்திற்குப் போனபோதே பாபா கேட்டார், ''ஆக, எப்பொழுது நீர் வீடுதிரும்பப் போகிறீர்?ஃஃ இதைக்கேட்ட காகா மஹாஜனி திடுக்கிட்டார்.

38 ''என்னைப் பார்த்தவுடனே எதற்காக இந்தக் கேள்வியைக் கேட்டார்?ஃஃ என்று காகா திகைத்துப் போனார். வாஸ்தவத்தில் அவர் சிர்டீயில் எட்டு நாள்கள் தங்கவேண்டுமென்ற ஆவலுடன் வந்திருந்தார்.

39 பாபா கேள்வியைக் கேட்டவிதத்திலேயே, என்ன பதில் சொல்லவேண்டும் என்பதைக் காகா நிர்ணயித்துவிட்டார். இதனால், காகா கொடுத்த பதில் மிகப் பொருத்தமாக அமைந்தது.

40 ''எப்பொழுது பாபா ஆக்ஞையிட்டாலும் அப்பொழுது வீடு திரும்பிவிடுகிறேன்ஃஃ என்று காகா பதிலுரைத்தார். இந்தப் பதிலைக் காகா சொல்­க்கொண் டிருந்தபோதே, ''நாளைக்கே வீடு திரும்பிவிடும்ஃஃ என்று பாபா சொல்­விட்டார்.

41 பாபாவினுடைய ஆக்ஞையை சிரசின்மேல் ஏற்றுக்கொண்டு, பாபாவை நமஸ்காரம் செய்துவிட்டு கோகுலாஷ்டமி விசேஷங்களையும் தள்ளிவைத்துவிட்டு பாபாவின் சொற்படியே வீடு திரும்பிவிட்டார் காகா.

42 வீட்டை அடைந்தபின் அலுவலகத்திற்குச் சென்றபோது, முதலாளி அவருடைய வருகைக்காகச் சஞ்சலத்துடன் வழிமேல் விழிவைத்துப் பார்த்துக்கொண் டிருந்ததைக் கண்டார்.

43 முதலாளியின் மணியக்காரர் திடீரென்று நோய்வாய்ப்பட்டிருந்தார்; ஆகவே, அவருக்குக் காகாவினுடைய உதவி அவசரமாகத் தேவைப்பட்டது. காகாவை உடனே திரும்பி வரச்சொல்­ சிர்டீக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தார்õ

44 தபால்காரர் காகாவைப்பற்றி விசாரித்துக்கொண்டு வந்தபோது, காகா சிர்டீயி­ருந்து கிளம்பிவிட்டிருந்தார். கடிதம் பம்பாய்க்குத் திருப்பி அனுப்பப்பட்டது. காகாவுக்கு இந்தக் கடிதம் தம் வீட்டில் கிடைத்தது.

45 இந்நிகழ்ச்சிக்கு நேர்மாறாக, எவ்வாறு பக்தர்களுக்கே தங்களுடைய நலன் தெரியாதிருந்தபோதும், பாபாவுக்கு நன்கு தெரிந்திருந்தது என்பதுபற்றி ஒரு சின்ன கதை சொல்கிறேன்; கேளுங்கள்õ

46 ஒருமுறை நாசிக்கி­ருந்து, புகழ்பெற்ற வக்கீலும் பாபாவுக்கு பக்தருமான பாபு ஸாஹேப் துமால்1 என்பவர் பாபாவை தரிசனம் செய்வதற்காகவே சிர்டீக்கு வந்தார்.

47 சீக்கிரமாக தரிசனம் செய்துகொண்டு, பாபாவின் திருவடிகளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு பாபாவின் ஆசீர்வாதங்களையும் உதீயையும் பெற்றுக்கொண்டு உடனே திரும்பிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வந்தார்.

48 திரும்பும் வழியில் நிபாட் என்னுமிடத்தில் இறங்கிக் கோர்ட்டில் வழக்கு ஒன்றை வாதாடவேண்டிய அவசியம் இருந்தது.

49 அவர் அவ்வாறு திட்டமிட்டுக்கொண்டு வந்திருந்தாலும், அவருக்கு எது உசிதம், எது உசிதமில்லை என்று பாபாவுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, அவர் வீடு திரும்ப அனுமதி கேட்டபோது பாபா மறுத்துவிட்டார்.

50 அனுமதி கொடுக்கத் திட்டவட்டமாக மறுத்து, அவரை ஒரு வாரம் சிர்டீயில் தங்கும்படி செய்துவிட்டார். கோர்ட்டில் வழக்கு விசாரணை மூன்று முறைகள் தள்ளிப்போடப்பட்டுத் தாமதமேற்பட்டது.

51 துமால் ஒரு வாரத்திற்கு மேலாகவே சிர்டீயில் தங்கவைக்கப்பட்டார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்களில் நீதிபதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

52 நீதிபதிக்கு அம்மாதிரியான, பொறுக்கமுடியாத வயிற்றுவ­ அதுவரை வந்ததே இல்லை. அதன் காரணமாக, வேறு வழியில்லாமல் வழக்கு தள்ளிப்போடப்பட்டது. வக்கீல் துமாலைப் பொறுத்தவரை அவருடைய நேரம் மிகச் சிறந்த முறையில் உபயோகப்படுத்தப்பட்டது.

53 துமாலுக்கு ஸாயீயின் ஸஹவாஸம் (கூடவசித்தல்) என்னும் பெரும் பாக்கியம் கிடைத்தது. துமா­ன் கட்சிக்காரருக்கோ கவலையி­ருந்து விடுதலை கிடைத்தது. ஸாயீயின்மீது வைத்த விசுவாசத்தினால் எல்லாமே பிரயாசையின்றி நடந்தது.

54 பிறகு, பொருத்தமான காலத்தில் துமால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். அவருடைய வேலையும் திருப்திகரமாக முடிக்கப்பட்டது. இதுவே ஸாயீயின் லீலை; ஆராய்ச்சிக்கப்பாற்பட்டதுõ

55 இந்த வழக்கு, நீதிமன்றத்தில் நான்கு மாதங்கள் நடந்தது. நான்கு நீதிபதிகள் ஒருவர்பின் ஒருவராக இவ்வழக்கை விசாரிக்கும்படி ஆயிற்று. முடிவில் வக்கீல் துமால் தம் கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று நிரூபிப்பதில் வெற்றி பெற்றார்õ

56 ஸாயீ ஒருமுறை பரமபக்தரான நானாஸாஹேப் நிமோண்கரின் மனைவியின் கட்சிக்காக வாதாடிய நிகழ்ச்சியைச் சொல்கிறேன்; கேளுங்கள்.

57 நிமோண் என்னும் கிராமத்தின் வதன்தாரான1 நிமோண்கருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கௌரவ மாஜிஸ்ட்ரேட் பதவியையும் அதிகாரத்தையும் கொடுத்திருந்தது. ஆகவே, அவர் மிகச் செல்வாக்குள்ளவராக இருந்தார்.

58 மாதவராவ் தேச்பாண்டேவின் ஒன்றுவிட்ட அண்ணன்களிலேயே மூத்தவரான அவர், மிக வயோதிகர்; எல்லாராலும் சிரேஷ்டமாக மதிக்கப்பட்டார். நிமோண்கரின் மனைவியும் ஒரு பக்தை; ஸாயீயே அவர்களுக்கு இஷ்டதெய்வம்.

59 தங்களுடைய வதனியை (ஜமீன் கிராமத்தை) விட்டுவிட்டு சிர்டீயில் வாழ வந்துவிட்டனர். ஸாயீயின் பாதங்களில் சரணடைந்து, சுகமாகத் தங்களுடைய வாழ்நாளைக் கழித்துக்கொண் டிருந்தனர்.

60 விடியற்காலையிலேயே எழுந்து, ஸ்நானம், பூஜை இவற்றைச் செய்து முடித்துவிட்டுப் பொழுது விடியும் நேரத்தில் ஹாரதி எடுப்பதற்குச் சாவடிக்கு நாள் தவறாது வந்தனர்.

61 அதன் பிறகு, ஸூரிய அஸ்தமனகாலம்வரை பாபாவுடனேயே இருந்துகொண்டு மனத்துக்குள்ளேயே தம்முடைய தோத்திரங்களை ஜபித்துக்கொண்டே நிமோண்கர் பாபாவுக்கு ஸேவை செய்வார்.

62 தினமும் பாபா லெண்டிக்குப் (கிராம எல்லையி­ருந்த ஓடை) போகும் சுற்றில் தாமும் கூடச்சென்று பாபாவை மசூதிக்குத் திரும்பக் கொண்டுவந்து சேர்ப்பார். அவரால் செய்யமுடிந்த ஸேவைகள் அனைத்தையும் பிரேமை ததும்பிய மனத்துடன் செய்தார்.

63 நிமோண்கரின் மனைவியும் மிகுந்த பிரேமையுடன் பகல்நேரத்தில் அவரால் செய்யமுடிந்த உபகாரங்களை உபயோகமான முறையில் செய்து பாபாவுக்கு ஸேவை செய்தார்.

64 ஸ்நானம் செய்வதற்கும் சமையல் செய்துகொள்வதற்கும் இரவில் தூங்குவதற்குமே அவர் தம்முடைய இருப்பிடத்திற்குச் சென்றார்.

65 மீதி நேரத்தையெல்லாம் காலையிலும் மதியத்திலும் மாலையிலும் இந்த தம்பதி பாபாவின் அண்மையிலேயே பிரேமையுடன் கழித்தனர்.

66 இவர்களிருவர் செய்த ஸேவையையெல்லாம் விரிவாகச் சொல்லவேண்டுமெனில், இக்காவியம் வெகு விஸ்தாரமானதாக ஆகிவிடும். ஆகவே இந்த அத்தியாயத்திற்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை மட்டும் விவரிக்கிறேன்.

67 தம் மகன் சிறிது உடல்நலமற்று இருந்ததால், நிமோண்கரின் மனைவி பேலாபூருக்குச் செல்ல விரும்பினார். கணவரோடு ஆலோசனை செய்த பிறகு, அங்கே போவதற்குத் தயார் செய்து கொண்டார்.

68 பிறகு, எப்பொழுதும் செய்வதுபோல் பாபாவிடமும் அனுமதி கேட்டார். பாபா சம்மதம் அளித்ததைத் தம் கணவருக்கும் தெரிவித்தார்.

69 இவ்வாறாக அம்மையார் பேலாபூருக்குச் செல்வதென்பது நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால், நிமோண்கர் அவரை மறுநாளே திரும்பி வந்துவிடவேண்டும் என்று சொன்னார்.

70 நானா அவ்வாறு சொன்னதற்கு நல்ல காரணங்கள் இருக்கவே செய்தன. ஆகவே, அவர் சொன்னார், ''போ, ஆனால் உடனே திரும்பிவிடுஃஃ. இதைக் கேட்ட அம்மையார் குடும்ப விசாரத்தால் சோகமடைந்தார்.

71 அடுத்த நாள் போள1 அமாவாசை; அம்மையார் அந்த நாளில் பேலாபூரில் இருக்கவேண்டுமென்று விரும்பினார்; இல்லை, மிகத் தீவிரமாக ஆவலுற்றார். ஆனால், நானா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

72 மேலும், அமாவாசையன்று பயணம் மேற்கொள்வது அவ்வளவு உசிதமான (சிறந்த) செயல் அன்று. இந்தப் பிரச்சினையை சமாளிப்பது எப்படி என்பதுபற்றி அம்மையார் மிகக் கவலையுற்றார்.

73 பேலாபூருக்குச் செல்லவில்லையென்றால் மனம் சமாதானம் அடையாது; ஆயினும், கணவருடைய மனத்தைப் புண்படுத்தவும் விரும்பவில்லை. எப்படி அவருடைய ஆணையை மீற முடியும்?

74 எப்படியோ, பேலாபூருக்குச் செல்வதற்குத் தம்மைத் தயார் செய்துகொண்டு, புறப்படுவதற்குமுன் பாபாவை நமஸ்காரம் செய்துவிட்டுப் போவதற்காக வந்தார். பாபா அப்பொழுது லெண்டிக்குக் கிளம்பிக்கொண் டிருந்தார்.

75 ஜனங்கள் எப்பொழுது பிரயாணமாகக் கிளம்பினாலும் நிர்விக்கினமாகப் போய்வர வேண்டுமென்று கடவுளை வணங்கிவிட்டுச் செல்வர். இப்பழக்கம் சிர்டீயிலும் அனுசரிக்கப்பட்டது.

76 ஸாயீ சிர்டீமக்களுக்குக் கடவுளாதலால், எவ்வளவு அவசரமாகப் பயணப்பட்டாலும், கிளம்புவதற்கு முன்பு பாபாவின் திருவடிகளை வணங்கிவிட்டே சென்றனர்.

77 இக்கிரமத்தின்படி, அம்மையார், பாபா ஸாடேவாடாவிற்கு எதிரில் ஒருகணம் நின்றபோது பாபாவினுடைய பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார்.

78 சிறியவர்களும் பெரியவர்களுமாக நானாஸாஹேப் நிமோண்கர் உட்பட, தரிசனத்திற்கு வந்தவர்கள் அனைவரும் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர்.

79 அங்கிருந்த மக்களின் முன்னிலையில், குறிப்பாக நானாவின் முன்பாக, பாபா அவ்வம்மையாரிடம் சமயோசிதமான வார்த்தைகளைக் கூறினார்.

80 பாபாவினுடைய பாதங்களில் சிரம் தாழ்த்திப் பிரயாணத்திற்கு அனுமதி கேட்ட உடனே, ''போம், சீக்கிரமாகப் போம்; அமைதியான மனத்துடன் இரும்.--

81 ''அவ்வளவு தூரம் போவதால், மூன்று நான்கு நாள்கள் சந்தோஷமாக பேலாபூரில் தங்கி எல்லாரையும் சந்தித்துவிட்டு சிர்டீக்குத் திரும்பி வாரும்.ஃஃ

82 எதிர்பாராதவிதமாக வந்த பாபாவின் திருவாய்மொழியைக் கேட்டுத் திருமதி நிமோண்கர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். நிமோண்கரும் பாபாவின் சூசகத்தைப் புரிந்துகொண்டார். இவ்விதமாக, இருவருமே ஸமாதானமடைந்தனர்.

83 சுருங்கச் சொன்னால், நாமெல்லாருமே திட்டங்கள் தீட்டுகிறோம்; ஆனால், நமக்கு ஆதியும் தெரிவதில்லை; அந்தமும் தெரிவதில்லை. நமக்கு எது நன்மை, எது தீமை என்பது ஞானிகளுக்கே தெரியும்; அவர்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை.

84 நடந்தது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தும் அவர்களுக்கு உள்ளங்கை நெல்­க்கனிபோல் தெரியும். அவர்களுடைய ஆக்ஞைக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொண்டால், பக்தர்கள் சுகத்தையும் சாந்தியையும் பெறுவர்.

85 ஏற்கெனவே சொல்லப்பட்டதைத் தொடரும் வகையில், நான் முக்கிய காதையை மேற்கொண்டு சொல்கிறேன். ஸாயீ, முலே சாஸ்திரிக்கு அவர்தம் குருவின் தரிசனத்தையே கொடுத்து அருள்செய்த காதையைக் கேளுங்கள்.

86 முலே, ஸ்ரீமான் புட்டியைச்1 சந்தித்துவிட்டு உடனே திரும்பிவிடும் எண்ணத்துடன் சிர்டீக்கு வந்தார்.

87 அவருடைய நோக்கம் அவ்வாறு இருந்த போதிலும், பாபா இவ்விஜயத்திற்கு வேறு திட்டம் வைத்திருந்தார். அந்த ரஹஸியமான திட்டம் என்ன என்பதை கவனமாகக் கேளுங்கள்.

88 முலே சாஸ்திரி தாம் திட்டமிட்டவாறு ஸ்ரீமான் புட்டியைச் சந்தித்து முடித்தார். அதன் பிறகு, ஸ்ரீமான் புட்டியும் இன்னும் சிலரும் மசூதிக்குப் போவதற்காக எழுந்தனர். இதைப் பார்த்த முலே சாஸ்திரிக்கு அவர்களுடன் செல்லவேண்டுமென்ற ஆவல் எழுந்தது. அவர்களுடன்கூடச் சென்றார்.

89 முலே சாஸ்திரி ஆறு சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்தவர்; ஜோதிட சாஸ்திர விற்பன்னர்; ஸாமுத்திரிகா2 லக்ஷணமும் பூரணமாக அறிந்தவர். பாபாவை தரிசனம் செய்ததில் மனம் மகிழ்ந்துபோனார்.

90 அன்புள்ள பக்தர்கள் ஆத்துமார்த்தமாக பாபாவுக்குப் பழவகைகள், தூத்பேடா, பர்பி, தேங்காய் போன்ற தின்பண்டங்களை அர்ப்பணம் செய்தனர்.

91 மேலும், கொய்யாப்பழம், வாழைப்பழம், கரும்பு போன்ற பொருள்களை விற்பதற்காக கிராமப் பெண்கள் மசூதியின் வாயிலுக்கு வந்தனர். பாபா விருப்பப்பட்டபோது, தாமே பாக்கெட்டி­ருந்து பணம் எடுத்துக் கொடுத்து இப்பொருள்களை வாங்குவார்.

92 தம்முடைய பணத்தைச் செலவுசெய்து கூடைகூடையாக மாம்பழங்களோ அல்லது குலைகுலையாக வாழைப்பழங்களோ வாங்கி, அவருடைய ஆசை தீருமட்டும் பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்.

93 ஒவ்வொரு மாம்பழமாகக் கையில் எடுத்துக்கொள்வார். இரு உள்ளங்கைகளாலும் அழுத்தித் தேய்த்துக் கொளகொளவென்று செய்துவிடுவார். அதன்பிறகு ரஸத்தை உறிஞ்சுவதற்காக பக்தர்களிடம் கொடுப்பார்.

94 இவ்வாறு பாபாவால் கொளகொளவென்று ஆக்கப்பட்ட மாம்பழத்தை வாயில் வைத்து ரஸத்தையெல்லாம் ஒரு பாத்திரத்தி­ருந்து குடிப்பதுபோலக் குடித்துவிடலாம். தோலையும் கொட்டையையும் மாத்திரம் எறிந்துவிடலாம்.

95 வாழைப்பழங்களை அவர் கையாண்டவிதம் அபூர்வமானது. பக்தர்களுக்கு உள்ளிருக்கும் பழத்தைக் கொடுத்துவிட்டுத் தாம் தோலைத் தின்பார். ஓ, அவருடைய விளையாட்டுகள் அற்புதமானவைõ

96 பழங்களையெல்லாம் தம்முடைய கைகளாலேயே பக்தர்களுக்கு விநியோகம் செய்துவிடுவார். அவர் உண்பதென்னவோ எப்போதோ ஒரே ஒரு பழம்.

97 எப்பொழுதும்போல, பாபா அன்று கூடைகூடையாக வாழைப்பழங்கள் வாங்கி விநியோகம் செய்துகொண் டிருந்தார்.

98 முலே சாஸ்திரி பாபாவினுடைய திருவடிகளைக் கண்டு ஆச்சரியமடைந்து, கொடி, வஜ்ராயுதம், அங்குசம் போன்ற ரேகைகள் இருக்கின்றனவா என்று பார்த்தறிய விரும்பினார்.

99 காகாஸாஹேப் தீக்ஷிதர் அப்பொழுது அருகி­ருந்தார்; நான்கு வாழைப்பழங்களை எடுத்து பாபாவின் கைகளில் வைத்தார்.

100 ''பாபா, இவர் புண்ணிய க்ஷேத்திரமாகிய நாசிக்கில் வசிக்கும் முலே சாஸ்திரி. புண்ணிய பலத்தால் உம்முடைய திருவடிகளைத் தொழுவதற்கு இங்கு வந்திருக்கிறார். இந்தப் பழங்களை அவருக்குப் பிரஸாதமாகக் கொடுங்கள்ஃஃ என்று சொல்­, யாரோ ஒருவர் பாபாவை உந்தினார்.

101 யார் கெஞ்சினாலும் கெஞ்சாவிட்டாலும், தமக்கு விருப்பமில்லை என்றால் பாபா யாருக்கும் எதுவும் தரமாட்டார்õ ஆகவே, அவர்களால் என்ன செய்ய முடிந்தது?

102 மேலும், முலே சாஸ்திரிக்கு வாழைப்பழம் வேண்டா; பாபாவினுடைய கைரேகைகளைப் பார்க்கவே விரும்பினார். இதற்காகவே அவர் தம்முடைய கையை நீட்டினார். பாபா இதைக் கண்டுகொள்ளவில்லை; பிரஸாதம் விநியோகிப்பதிலேயே கவனம் செலுத்தினார்.

103 முலே பாபாவிடம் வேண்டினார், ''எனக்குப் பழம் வேண்டா; உங்களுடைய கையைக் காட்டுங்கள்; ஸாமுத்திரிகா (லக்ஷணத்தின்படி) பலன் சொல்கிறேன்ஃஃ. ஆனால், பாபா கையைக் காட்ட அடியோடு மறுத்துவிட்டார்.

104 ஆயினும், முலே சாஸ்திரி தம்முடைய கரத்தை நீட்டிக்கொண்டே ஸாமுத்திரிகா பலன்கள் சொல்வதற்காக பாபாவின் கரத்தை நாடி முன்னேறினார். அம்மாதிரி அவர் முன்னேறியதைத் தாம் பார்க்கவேயில்லாததுபோல் பாபா அதைக் கண்டுகொள்ளவில்லைõ

105 முலே சாஸ்திரியின் நீட்டிய கரங்களில் நான்கு வாழைப்பழங்களை வைத்துவிட்டு அவரை அமரும்படி சொன்னாரே தவிர, கையைக் காட்ட மறுத்துவிட்டார்.

106 இறைவனின் ஸேவையில் வாழ்நாள் முழுவதும் உடம்பைத் தேய்த்தவருக்கு ஸாமுத்திரிகா லக்ஷண சாஸ்திரம் என்ன பலன் தரும்õ பக்தர்களுக்குத் தாயும் தந்தையுமான ஸாயீ, சகல விருப்பங்களும் நிறைவேறியவரல்லரோõ

107 பாபாவினுடைய விருப்பமற்ற நிலையையும் ஸாமுத்திரிகா லக்ஷண சாஸ்திரத்தை உதாசீனம் செய்ததையும் பார்த்த முலே சாஸ்திரி, இது வீண் முயற்சி என்று தீர்மானித்து, மேலும் முயற்சி செய்வதை நிறுத்திக்கொண்டார்.

108 சிறிது நேரம் அங்கு மௌனமாக அமர்ந்துகொண் டிருந்துவிட்டு, மற்றவர்களுடன் வாடாவிற்குத் திரும்பிவிட்டார். ஸ்நானம் செய்த பின், ஸோவலாவை (மடி ஆடைகளை) உடுத்துக்கொண்டு, தாம் தினமும் செய்யும் அக்கினிஹோத்திரத்தைச்1 செய்ய ஆரம்பித்தார்.

109 பாபா, ''இன்று நம்முடன் கொஞ்சம் காவிச்சாயம் எடுத்துக்கொண்டு செல்லலாம். இன்று காவி உடை உடுத்துக்கொள்ளலாம்ஃஃ என்று சொல்­க்கொண்டே எப்பொழுதும் போல லெண்டிக்குக் கிளம்பினார்.

110 காவிச்சாயத்தை வைத்துக்கொண்டு பாபா என்ன செய்யப்போகிறார் என்றும், என்றுமில்லாமல் திடீரென்று இன்று ஏன் காவி உடையைப்பற்றி நினைக்கிறார் என்றும் அனைவரும் வியப்படைந்தனர்.

111 இம்மாதிரி ஸங்கேத பாஷையில் பேசுவது பாபாவுக்கே கைவந்த கலை. இதி­ருந்து என்ன புரிந்துகொள்ள முடியும்? ஆனால், அவ்வார்த்தைகளை ஞாபகத்தில் ஏற்றிக்கொண்டு அதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தால் பலவிதமான விளக்கங்களைக் கண்டுபிடிக்கலாம்.

112 மேலும், ஒரு ஞானியினுடைய திருவாய்மொழி என்றுமே அர்த்தமற்றதாக ஆகாது. அவர்களுடைய சொற்கள் பொருள்பொதிந்தவை. யாரால் அச்சொற்களை எடைபோட முடியும்?

113 முத­ல் கவனமுள்ள எண்ணம், பிறகு பேச்சு. இதுவே ஞானிகளின் வழிமுறை. பிறகு, அவர்களுடைய சொல் நேர்மையான முறையில் செயலாகவும் மாற்றமடைகிறது.

114 இந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் ஞானிகளின் சொல் என்றுமே அர்த்தமில்லாமல் போகாது. ஆழமான தியானம் அச்சொற்களின் முழுப்பரிமாணத்தையும் வெளிப்படுத்தும்.

115 பாபா லெண்டியி­ருந்து திரும்பி வந்தார். முரசுகளும் கொம்புகளும் ஒ­க்க ஆரம்பித்தன. பாபு ஸாஹேப் ஜோக்(எ)2 சட்டென்று முலே சாஸ்திரிக்கு யோசனை சொன்னார்,--

116 ''ஹாரதி நேரம் நெருங்கிவிட்டது; நீங்கள் மசூதிக்கு வருகிறீர்களா?ஃஃ மடி ஆசாரத்தை விடாப்பிடியாகக் கடைப்பிடித்த முலே சாஸ்திரி, தம்முடைய தர்மசங்கடமான நிலையை உணர்ந்தார்.

117 ஆகவே அவர் பதிலுரைத்தார், ''நான் அப்புறமாகப் பிற்பக­ல் தரிசனம் செய்துகொள்கிறேன்ஃஃ. ஜோக்(எ) ஹாரதிக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.

118 பாபா திரும்பி வந்துவிட்டிருந்தார்; ஆசனத்தில் அமர்ந்துகொண்டு ஜனங்களோடு பேசிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவராகத் தங்கள் பூஜையை முடித்தனர்; ஹாரதி ஆரம்பிப்பதற்கு எல்லாம் தயாராக இருந்தன.

119 திடீரென்று பாபா சொன்னார், ''இன்று வந்த பிராமணரிடமிருந்து தக்ஷிணை வாங்கிக்கொண்டு வாருங்கள்.ஃஃ உடனே, ஸ்ரீமான் புட்டியே தக்ஷிணை வாங்கிக்கொண்டு வருவதற்குக் கிளம்பினார்.

120 முலே ஸ்நானத்தை முடித்துவிட்டு, மடி ஆசாரமான ஆடைகளை அணிந்துகொண்டு யோகாசன நிலையில் நிம்மதியான மனத்துடன் உட்கார்ந்துகொண் டிருந்தார்.

121 பாபா அனுப்பிய செய்தியைக் கேட்டவுடன் அவருடைய மனத்தை சந்தேகம் தாக்கியது. ''நான் எதற்காக தக்ஷிணை கொடுக்கவேண்டும்? நான் தினமும் அக்கினிஹோத்திரம் செய்யும் நிர்மலமான பிராமணன்.--

122 ''பாபா ஓர் உயர்ந்த ஞானியாக இருக்கலாம். ஆனால், நான் அவருக்கு எவ்விதத்திலும் கடமைப்பட்டவன் அல்லேன்! என்னை ஏன் அவர் தக்ஷிணை கேட்கிறார்?ஃஃ-- அவருடைய மனம் தத்தளித்தது.

123 ''அதே சமயம், ஒரு சிறந்த ஞானி தக்ஷிணை கேட்கிறார்; இச்செய்தியை ஒரு கோடீச்வரர் எனக்குக் கொண்டுவருகிறார்.ஃஃ முலே சாஸ்திரிக்கு மனத்தில் சந்தேகம் இருந்தபோதிலும் கொஞ்சம் தக்ஷிணை எடுத்துக்கொண்டார்.

124 இன்னும் ஒரு சந்தேகமும் இருந்தது. ஆரம்பித்துவிட்ட சடங்குகளை முடிக்காமல் மசூதிக்கு எப்படிச் செல்வது? ஆனால், (பாபாவுக்கு தக்ஷிணை) இல்லை என்று சொல்லவும் மனமில்லை.

125 சந்தேகம் கொண்ட மனத்திற்கு முடிவெடுக்கும் உறுதி இருக்காது; ஏதாவது ஒரு வழியில் செல்லாது; அவர் திரிசங்கு1 நிலையி­ருந்தார்.

126 ஆயினும், அவர் போவதற்கு முடிவுசெய்து, ஸபாமண்டபத்தினுள் நுழைந்து தூரத்திலேயே நின்றுகொண்டார்.

127 ''நான் மடி ஆசாரமாக உடை உடுத்திக்கொண் டிருக்கிறேன்; மசூதி ஓர் ஆசாரமில்லாத இடம்; பாபாவின் அருகில் நான் எப்படிப் போகமுடியும்?ஃஃ இவ்வாறு நினைத்துக்கொண்டு கூப்பிய கைகளுக்குள் இருந்த பூக்களை பாபாவின்மீது புஷ்பாஞ்ஜ­ செய்தார். ஈதனைத்தும் தூரத்தி­ருந்துதான் நடந்தது.

128 ஓõ அவருடைய கண்ணெதிரிலேயே ஓர் அற்புதம் நிகழ்ந்ததுõ அமர்ந்திருந்த ஆசனத்தில் பாபா தெரியவில்லை; மாறாகத் தம் பூஜ்யகுரு கோலப் மஹராஜையே பார்த்தார்.

129 மற்றவர்கள் எப்பொழுதும்போல் ஸமர்த்த ஸாயீயையே பார்த்தனர். முலே சாஸ்திரியின் கண்களுக்கோ, எப்பொழுதோ ஸமாதியடைந்துவிட்ட குரு கோலப்நாதரே தெரிந்தார். முலே சாஸ்திரி மிக ஆச்சரியமடைந்தார்.

130 அவருக்கு குரு வாஸ்தவத்தில் எப்பொழுதோ ஸமாதியாகிவிட்டிருந்தாலும், தம் எதிரில் அவரை பூதவுடலுடன் பார்த்த முலே, மிக வியப்படைந்தார். புதிய சந்தேகங்கள் பல மனத்தில் முளைத்தன.

131 இதெல்லாம் கனவு என்று நினைக்க, அவர் நிச்சயமாகத் தூங்கிக் கொண்டிருக்கவில்லை. விழித்துக்கொண்டுதான் இருக்கிறார் என்றால், குரு எப்படி இங்கு உடலுடன் உட்கார்ந்துகொண் டிருக்கமுடியும்? அவருடைய மனம் எப்படி இவ்வளவு குழம்பியது; பிரமையடைந்தது? சிறிது நேரம் அவர் பேச்சற்று நின்றார்.

132 இதெல்லாம் ஒரு பிரமை இல்லை என்று உறுதி செய்துகொள்வதற்காகத் தம்மையே கிள்ளிப் பார்த்துக்கொண்டார். எதற்காக எனக்கு சந்தேகங்களும் குழப்பமும் வர வேண்டும்? நான் இங்கிருக்கின்றேன்; தனியாக இல்லை; பல மனிதர்களின் நடுவில்தான் இருக்கிறேன்õ (என்று நினைத்தார்).

133 முலே சாஸ்திரி பிரதமமாக குரு கோலப்பின் பக்தர். அவருக்கு முத­ல் பாபாவைப் பற்றி சந்தேகங்கள் இருந்தாலும், பிறகு அவர் நிர்மலமான மனத்துடன் பாபாவின் பக்தராகிவிட்டார்.

134 உயர்குல பிராமணரான அவர், வேதங்களிலும்1 வேதாங்கங்களிலும்2 சிறந்த பயிற்சி பெற்றிருந்தார். ஆயினும், மசூதியில் குரு கோலப் தரிசனம் கண்டது அவரை வியப்படையும்படி செய்தது.

135 பிறகு, அவர் மசூதியின் படிகளில் ஏறித் தம் குருவின் (கோலப்நாத்) பாதங்களிலேயே வணங்கிவிட்டு, இரு கைகளையும் கூப்பிக்கொண்டு பேச்சற்று மௌனமாக நின்றார்.

136 குரு கோலப் ஸ்வாமியை ஸந்நியாஸிகளின் காவி உடையில் பார்த்தவுடனே, முலே சாஸ்திரி ஓடிச்சென்று அவருடைய பாதங்களைக் கட்டிக்கொண்டார்.

137 ஒரே கணத்தில் அவருடைய ஜாதி அபிமானம் ஒடிந்து வீழ்ந்தது. குருவை நேரில் கண்டதால் ஞானமெனும் மையைப் பூசிக்கொண்டு அவருடைய கண்கள் பரிசுத்தமாயின. நிரஞ்ஜனரான (மாசில்லாத) குருவைக் கண்டவுடன் அவருடைய ஆத்மா ஞானத்தால் நிரம்பிவழிந்தது.

138 கோணல் சிந்தனைகளும் சந்தேகங்களும் ஒழிந்தன; பாபாவின்மேல் அன்பு பீறிட்டது; பாதி மூடிய கண்களால் பாபாவினுடைய திருவடிகளையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றார்.

139 பல ஜன்மங்களில் செய்த ஸுகிருதங்கள் (நற்செய்கைகள்) பழுத்து, அவருக்கு ஸாயீ தரிசனம் கிடைத்தது. ஸாயீபாதம் என்னும் புண்ணிய தீர்த்தத்தில் அவர் ஸ்நானம் செய்தபோது, தெய்வ அநுக்கிரஹம் தமக்குக் கிடைத்ததை உணர்ந்தார்.

140 'சிறிது தூரத்தி­ருந்தே பாபாவின்மீது பூச்சொறிந்தவர், திடீரென்று எப்படி பாபாவின் திருவடிகளில் தலைசாய்த்து வணங்கினார்?ஃ கூடியிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

141 மற்றவர் எல்லாரும் பாபாவின் ஹாரதிப் பாட்டைப் பாடிக்கொண் டிருந்தபோது, முலே சாஸ்திரி மட்டும் குரு கோலப்பின் நாமாவை கர்ஜித்துவிட்டு, குரு கோலப்பின் ஹாரதிப் பாட்டை உச்சஸ்வரத்தில் பாடினார். பாடப்பாட மேலும் மேலும் அவருக்கு குருவின்மேல் பிரேமை பொங்கியது.

142 சிறப்பான மடி ஆசார நியதிகள்பற்றிய கர்வம் பிசுபிசுத்துப்போயிற்று; மேல்ஜாதிக்காரனைத் தொடலாம், கீழ்ஜாதிக்காரனைத் தொடக்கூடாது என்னும் பிடிவாதம் உருகிப்போய்விட்டது. மாறாக, ஆனந்தத்தில் கண்களை மூடிக்கொண்டு ஸாஷ்டாங்கமாக பாபாவுக்கு தண்டனிட்டார்.

143 கண்களைத் திறந்து பார்த்தபோது, கோலப் ஸ்வாமி மறைந்துவிட்டிருந்தார்; அவருடைய இடத்தில் பாபா உட்கார்ந்துகொண்டு தக்ஷிணை கேட்டதைப் பார்த்தார்õ

144 பாபாவினுடைய ஆனந்தமான உருவத்தையும் அற்புதமான சக்தியையும் கண்டார். அவருடைய மனம் ஸ்தம்பித்து நின்றது. பாபாவைத் தாம் முத­ல் அணுகிய முறையைக் கைவிட்டுவிட்டார்.

145 பாபாவினுடைய அற்புதமான லீலையைப் பார்த்தவுடன், பசி, தாஹம் அனைத்தும் மறந்துபோயினõ தம் குருவின் தரிசனம் கிடைத்த பரவசத்தில் மூழ்கியிருந்தார்.

146 அவருடைய மனம் ஸமாதானமடைந்தது. கண்களில் ஆனந்தபாஷ்பம் பொங்க பாபாவினுடைய திருவடிகளில் நெற்றியை வைத்து வணங்கினார்.

147 அவர் கொண்டுவந்திருந்த தக்ஷிணையை பாபாவுக்கு ஸமர்ப்பணம் செய்தார். கண்களில் நீர் பொங்க, சந்தோஷத்தில் மயிர்க்கூச்செறிய மறுபடியும் பாபாவின் பாதங்களை வணங்கினார்.

148 தொண்டை அடைத்தது. ''என்னுடைய சந்தேகங்களெல்லாம் நிவிர்த்தியானது மட்டுமல்லாமல், என்னுடைய குருவையும் சந்தித்துவிட்டேன்ஃஃ என்று அவர் கூறியபோது அஷ்டபா(ஆஏஅ)வம்1 இதயத்தை அடைத்தது.

149 முலே சாஸ்திரி உட்பட அங்கிருந்தவர்களனைவரும் உலகில் பார்த்தறியாத இந்த பாபாவின் லீலையைக் கண்டு பயம் கலந்த அன்புடன் உணர்ச்சிவசப்பட்டனர். இந்த அனுபவத்தை அடைந்த பிறகுதான் அவர்களுக்குக் காவிச்சாயத்தின் மர்மம் விளங்கியதுõ

150 ஸாயீ மஹராஜ் பழையவர்தான்; முலே சாஸ்திரியும் அதே நபர்தான். இவ்வாறிருக்க, குறிப்பிட்ட நேரத்தில் முலே சாஸ்திரியிடம் எதிர்பாராத மாற்றம் எப்படி ஏற்பட்டது என்றே அனைவரும் வியந்தனர். ஆனால், யாரால் மஹராஜின் சூக்குமமான வழிமுறைகளைப் புரிந்துகொள்ள முடியும்? அவருடைய லீலைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை அல்லவோõ

151 ஸாயீ தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவலுடன் ஒரு டாக்டர்நண்பருடன் சிர்டீக்குக் கிளம்பிய மாம்லத்தாருடைய அனுபவமும் இதுபோன்றே அற்புதமானது.

152 அந்த டாக்டர் ஒரு பிராமணர்; ஸ்ரீராமரை உபாஸனை செய்தவர். நியமநிஷ்டையுடன் ஸ்நானம், ஸந்தியாவந்தனம், விரதங்கள் போன்ற சடங்குகளை எல்லாம் சாஸ்திர விதிகளின்படி நெறி தவறாது செய்தவர்.

153 ஸாயீ பாபா ஒரு முஸ்லீம்; டாக்டருக்கு இஷ்டதேவதையோ ஜானகிராமன். ஆகவே அவர், தாம் ஸாயீபாபாவை வணங்கமாட்டார் என்பதைத் தம் நண்பருக்கு முத­லேயே எச்சரித்துவிட்டார்.

154 ''நான் ஒரு முஸ்லீமின் பாதங்களை வணங்க முடியாது; ஆகவே, ஆரம்பத்தி­ருந்தே எனக்கு சிர்டீ செல்வதில் விருப்பம் இல்லைஃஃ (என்று டாக்டர் சொன்னார்).

155 ''உம்மை அங்கு யாரும் அவருடைய பாதங்களைத் தொடச் சொல்­ வற்புறுத்தமாட்டார்கள். இது விஷயமாக யாருமே துராக்கிரஹம் (உரிமை இல்லாவிடத்து வ­ய நிகழ்த்தும் செயல்) செய்யமாட்டார்கள். இம்மாதிரியான சிந்தனைகளை உதறிவிட்டு சிர்டீக்குப் போவதற்கு முடிவெடுங்கள்.--

156 ''எனக்கு நமஸ்காரம் செய், என்று பாபா நிச்சயமாகச் சொல்லமாட்டார்.ஃஃ மாம்லத்தார் இவ்விதமாக உறுதிமொழி அளித்தபின், டாக்டர் சிர்டீ செல்வதற்குச் சம்மதம் தெரிவித்தார்.

157 தம் நண்பரின் உறுதிமொழிக்குக் கட்டுப்பட்டு, சந்தேகங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு பாபாவை தரிசனம் செய்வதற்குச் செல்வதென்று டாக்டர் முடிவெடுத்தார்.

158 அதிசயத்திலும் அதிசயம்õ சிர்டீயை அடைந்து மசூதிக்குச் சென்றவுடனே முதன்முத­ல் டாக்டர்தான் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார்õ நண்பரோ பெருவியப்படைந்தார்.

159 மாம்லத்தார் டாக்டரைக் கேட்டார், ''உம்முடைய திடமான தீர்மானத்தை எப்படி மறந்தீர்? ஒரு முஸ்லீமின் பாதங்களில் எவ்வாறு பணிந்தீர்? அதுவும் என் முன்னிலையிலேயே?ஃஃ

160 அப்பொழுது டாக்டர் தம்முடைய அற்புதமான அனுபவத்தை விவரித்தார், ''நான் கண்டது நீலமேக சியாமள ரூபனான ஸ்ரீராமனின் உருவத்தையேõ அக்கணமே நான், நிர்மலமானவரும் சுந்தரமானவரும் கோமளரூபமுடையவருமான ஸ்ரீராமரை வணங்கினேன்.--

161 ''பாருங்கள், ஸ்ரீராமர் இந்த ஆசனத்தில் உட்கார்ந்துகொண் டிருக்கிறார். அவர்தான் எல்லாரிடமும் பேசிக்கொண் டிருக்கிறார்.ஃஃ டாக்டர் இந்த வார்த்தைகளைச் சொல்­க்கொண் டிருந்தபோதே, ஒரு கணத்தில், ஸ்ரீராமருக்குப் பதிலாக ஸாயீயின் உருவத்தைப் பார்க்க ஆரம்பித்தார்.

162 இதைப் பார்த்த டாக்டர் வியப்பிலாழ்ந்து போனார்õ ''இதை எப்படி நான் கனவென்று சொல்லமுடியும்? இவர் எப்படி ஒரு முஸ்லீமாக இருக்க முடியும்? இல்லவேயில்லைõ இவர் மஹா யோகீச்வரரான அவதார புருஷர்.ஃஃ

163 சோகாமேளா என்ற மஹாஞானி ஜாதியில் மஹார் (ஆதி திராவிடர்). ரோஹிதாஸ் என்ற ஞானி செருப்பு தைக்கும் தொழிலாளி. ஸஜன் கஸாயீ என்ற ஞானி பிழைப்புக்காகக் கசாப்புக்கடை நடத்தினார். ஆனால், யார் இந்த ஞானிகளின் ஜாதியைப்பற்றிச் சிந்திக்கின்றனர்?

164 உலக க்ஷேமத்திற்காகவும் பக்தர்களை ஜனனமரணச் சுழ­­ருந்து விடுவிப்பதற்காகவுமே உருவமும் குணங்களுமற்ற தங்களுடைய நிலையை விடுத்து, ஞானிகள் இவ்வுலகிற்கு வருகிறார்கள்.

165 இந்த ஸாயீ பிரத்யக்ஷமான கற்பக விருக்ஷமாகும்; நாம் விரும்பியதைத் தரும் தேவலோக மரம்õ இந்தக் கணத்தில் அவர் ஸாயீயாக இருக்கிறார்; அடுத்த கணமே அவர் ஸ்ரீராமராக மாறிவிடுகிறார்õ என்னுடைய அஹந்தையாகிய பிரமையை ஒழித்து என்னை தண்ட1 நமஸ்காரம் செய்யவைத்துவிட்டார்.

166 அடுத்த நாளே அவர், பாபா தமக்கு அருள் புரியவில்லையெனில் மசூதிக்குள் நுழைவதில்லை என்ற விரதம் எடுத்துக்கொண்டார்; சிர்டீயில் உண்ணாவிரதம்

167 மூன்று நாள்கள் கழிந்தன; நான்காவது நாள் பொழுது விடிந்தது; என்ன நடந்தது என்பதை கவனமாகக் கேளுங்கள்.

168 கான்தேச் என்னுமிடத்தில் குடியேறிவிட்ட அவருடைய நண்பரொருவர் தற்செயலாக ஸாயீ தரிசனத்துக்காக சிர்டீக்கு வந்தார்.

169 ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்த டாக்டரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உடனே டாக்டரும் நண்பருடன் மசூதிக்குச் சென்றார்õ

170 போனவுடனே டாக்டர் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். பாபா கேட்டார், ''ஆக, டாக்டரேõ உம்மைக் கூப்பிட யாராவது வந்தார்களா? முத­ல் எனக்குச் சொல்லும்; ஏன் வந்தீர் இங்கு?ஃஃ

171 பாணம் போன்ற இந்தக் கேள்வியைக் கேட்டு டாக்டர் உணர்ச்சிவசப்பட்டார். அவருடைய ஸங்கல்பம் ஞாபகத்திற்கு வந்து, குற்றவுணர்ச்சியால் சோகமடைந்தார்.

172 ஆனால், அன்றே நள்ளிரவில் பாபாவினுடைய அருள் அவர்மீது பொழிந்தது. தூக்கத்திலேயே பரமானந்தமான நிலையின் மதுரத்தை அனுபவித்தார்.

173 பிறகு, டாக்டர் தம்முடைய சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றாராயினும், அடுத்த பதினைந்து நாள்களுக்கு பரிபூரணமான ஆத்மானந்தத்தை அனுபவித்தார். ஸாயீயின்மீது அவருடைய பக்தி வளர்ந்தது.

174 ஒன்றைவிட இன்னொன்று அதிக அற்புதமானதாக இம்மாதிரியான ஸாயீ அனுபவங்கள் எத்தனை எத்தனையோõ அவையனைத்தும் இக்காவியத்துக்கு மேன்மேலும் பெருமை சேர்க்குமெனினும், விரிவுக்கஞ்சி என்னையே நான் கட்டுப்படுத்திக்கொள்கிறேன்.

175 செவிமடுப்பவர்கள் இவ்வத்தியாயத்தின் முக்கிய பகுதியான முலே சாஸ்திரியின் காதையைக் கேட்டு வியப்படைந்திருக்கவேண்டும். அதனுடைய ஸாரத்தை, அக்காதை சொல்லும் படிப்பினையை அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும்.

176 ''ஒருவருடைய குரு எவராக இருந்தாலும் அவர்மீது திடமான விசுவாசம் வைக்கவேண்டும். வேறெங்கிலும் அவ்விசுவாசத்தை வைக்கலாகாது.ஃஃ இதுதான் இக்காதையில் மறைந்திருக்கும் பொருள்; இதை மனத்தில் பதிக்கவேண்டும்.

177 இந்த அற்புதமான லீலைக்கு வேறு நோக்கமேதும் இருப்பதாகத் தெரியவில்லை. மற்றவர்கள் இதை எப்படிப் புரிந்துகொண்டாலும் சரி, இதுவே இக்காதையின் படிப்பினை.

178 மற்ற குருமார்களுடைய கீர்த்தி மிகப்பெரியதாக இருக்கலாம்; நம் குருவுக்கு அத்தகைய கீர்த்தி ஏதுமில்லாதிருக்கலாம். ஆயினும், நம்முடைய முழு விசுவாசமும் நம் குருவின்மேல்தான் இருக்கவேண்டும். இதுவே இக்காதையின் உபதேசம்.

179 எத்தனை இதிஹாஸங்களையும் புராணங்களையும் புரட்டினாலும் தத்துவ உபதேசத்தைப் பொறுத்தவரை அவையனைத்தும் ஒன்றே. இவ்வனுபவத்தைப்போல நேரிடையான நிரூபணம் கிடைக்காதவரை, விசுவாசம் எளிதாக ஏற்படுவதில்லை.

180 உறுதியான விசுவாசமில்லாமல், 'நான் ஆத்மநிஷ்டன்ஃ (தன்னையறிந்தவன்) என்று பீத்துபவர்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தையே அனுபவிக்கிறார்கள். இதைத்

திரும்பத் திரும்பப் பலமுறைகள் பார்த்தாகிவிட்டது.

181 அவர்கள் இகத்திலும் இல்லை; பரத்திலும் இல்லை. ஒரு கணமும் நிம்மதியோ சாந்தியோ இன்றி, சஞ்சலங்களிலும் கவலைகளிலும் ஜன்மம் முழுவதும் மூழ்கிப்போகின்றனர். இவ்வாறு இருந்தபோதிலும் முக்தியடைந்துகொண் டிருப்பதாகத் தம்பட்டமடிக்கின்றனர்.

182 அடுத்த அத்தியாயம் இந்த அத்தியாயத்தைவிட சுவாரஸ்யமானது. ஸாயீ தரிசனம் மேலும் மேலும் செய்யச் செய்ய, எல்லையில்லாத ஆனந்த அனுபவத்தை அளிக்கும்.

183 பக்தர் பீமாஜி பாடீல் எவ்வாறு க்ஷயரோகத்தி­ருந்து நிவாரணமளிக்கப்பட்டார் என்பதையும் அவருக்குச் சாந்தோர்க்கரிடம் இருந்த நம்பிக்கையை ஒரு காட்சியளித்து எவ்வாறு பாபா உறுதிப்படுத்தினார் என்பதையும் விவரிக்கிறேன்.

184 ஸாயீ தரிசனம் நம்முடைய பாவங்களையெல்லாம் நிவிர்த்தி செய்து, இவ்வுலக சுகங்களையும் மேலுலக சுகங்களையும் ஸமிருத்தியாக அளிக்கும் சக்தி வாய்ந்தது.

185 மஹாயோகிகளால் கண்வீச்சாலேயே நாஸ்திகர்களையும் பாவத்தி­ருந்து விடுதலை செய்யமுடியுமென்றால், ஆஸ்திகர்களுடைய நிலை என்ன? அவர்களுடைய பாவம் மிக சுலபமாக அழிக்கப்படுகிறதன்றோ?

186 பிரம்ம ஸாக்ஷாத்காரம் பெற்று பிரம்மத்திலேயே லயித்த மனமுடைய மஹாத்மா, தம்முடைய கண்ணோக்காலேயே கடக்கமுடியாத கொடிய பாவங்களையும் அழித்துவிடுகிறார்.

187 பாபாவினுடைய புரிந்துகொள்ளமுடியாத லீலைகள் இவ்வாறே. பாபாவுக்கு உங்கள்மீது அன்பு இருக்கிறது. ஆகவே, பண்டிதராயினும் சரி, பாமரராயினும் சரி, நீங்களனைவரும் பாபாவினுடைய காதைகளை நிர்மலமான இதயத்துடன் கேளுங்கள்.

188 எங்கே பக்தியும் பிரேமையும் இருக்கிறதோ, எங்கே பாபாவின்மீது பிரியமான ஈர்ப்பு இருக்கிறதோ, அங்கேதான் உண்மையான தாகம் உருவெடுக்கிறது. அங்கேதான் அவருடைய காதைகளைக் கேட்கும் தூய மகிழ்ச்சியைப் பார்க்கமுடியும்.

189 அனன்னியமாக சரணமடைந்தவர்களுக்கு வஜ்ஜிரம் போன்ற அடைக்கலமும் அளவற்ற சக்தியை உடையதுமான ஸாயீயின் திருவடிகளில் ஹேமாட் நமஸ்காரம் செய்கின்றேன். இவ்வுலக வாழ்க்கையின் பயங்களை அறவே ஒழிக்கும் சக்தியுடையவை ஸாயீயின் பொன்னடிகள்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'குரு கோலப் தரிசனம் - ஸ்ரீராம தரிசனம்ஃ என்னும் பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.