Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 11

11. ஸ்ரீ ஸாயீ மஹிமை வர்ணனை


ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 கதையை விட்ட இடத்தில் தொடர்வோம். பாபா ஒரு மரப்பலகையின்மீது உறங்கினார். அவர் ஏறியதையும் இறங்கியதையும் எவருமே கண்டதில்லை. அவருடைய வழிமுறைகள் புரிந்துகொள்ளமுடியாதவை என்னும் உண்மையே இதி­ருந்து வெளிப்படுகிறது.

2 ஹிந்துவோ, முஸ்லீமோ அவருக்கு இருவரும் சரிசமானம். நாம் இதுவரை சிர்டீயின் தெய்வமாகிய பாபாவின் வாழ்க்கைமுறைகளை மேலோட்டமாகப் பார்த்தோம்.

3 இப்பொழுது குருவைப்பற்றிய இனிமையான நிகழ்ச்சிகளால் அலங்கரிக்கப்பட்ட பதினொன்றாம் அத்தியாயத்தை ஆரம்பிப்போம். திடமான பக்தி பா(ஆஏஅ)வத்துடன் அதை ஸாயீயின் சரண கமலங்களில் ஸமர்ப்பணம் செய்வோம்.

4 இதைச் செய்வதால் நாம் பாபாவின் ஸகுண (குணங்களோடுகூடிய) உருவத்தை தியானித்தவர்களாவோம். இது ருத்ர1 ஏகாதசினி ஜபம் செய்வதற்கு சமானமாகும். இந்த அத்தியாயம் பஞ்சபூதங்களின்மேல் பாபாவுக்கு இருந்த ஆதிபத்தியத்திற்கு நிரூபணமளித்து, பாபாவினுடைய மஹிமையை வெளிப்படுத்துகிறது.

5 இந்திரனும் அக்கினியும் வருணனும் பாபாவினுடைய சொல்லுக்கு எவ்விதம் கட்டுப்பட்டனர் என்பதை எடுத்தியம்புகிறேன். கதை கேட்பவர்களேõ கவனத்தை என்னிடம் திருப்புங்கள்.

6 பூரணவிரக்தியின் வடிவமான, குணங்களோடுகூடிய, ஸாயீயின் அவதார ரூபமே வேறெவரையும் நாடாத விசுவாசமான பக்தர்களின் நிஜமான விச்ராந்தி. அன்புடனும் பாசத்துடனும் அவருடைய உருவத்தை மனக்கண்முன் நிறுத்துவோமாகõ

7 குருவாக்கியத்தின்மீது அசைக்கமுடியாத விசுவாசத்தை அவருக்கு ஆஸனமாக அளிப்போம். எல்லா ஸங்கல்பங்களி­ருந்தும்2 துறவேற்கிறேன் என்னும் ஸங்கல்பத்துடன் பூஜையை ஆரம்பிப்போம்õ

8 சிலை, யாககுண்டம், அக்கினி, ஒளி, சூரியமண்டலம், நீர், பிராமணர் ஆகிய வழிபாட்டுக்குரிய புனிதமான ஏழு பொருள்களுக்கும் இயற்கை சக்திகளுக்கும் மனிதர்களுக்கும் மேலானவர் குருராஜர். வேறெதிலும் மனத்தைச் சிதறவிடாது ஒருமுகமாக அவரை வழிபடுவோம்.

9 அனன்னியபா(ஆஏஅ)வத்துடன் (பதிவிரதையை ஒப்ப) குருவினுடைய பாதங்களில் சரணடைந்துவிட்டால், குரு மாத்திரம் அல்லர், இறைவனும் பிரீதியடைவான். குருவழிபாட்டின் அற்புதம் இதுவேõ குருபக்தர்கள் இதை சுயமாக அனுபவிக்கவேண்டும்.

10 குருபக்தருக்கு 'உடல்தான் நான்ஃ என்னும் உணர்விருக்கும்வரைதான் அவருக்கு மனித வடிவில் ஒரு குரு தேவைப்படுகிறார். 'நான் கேவலம் இவ்வுடல் அல்லேன்ஃ என்னும் விழிப்பைப் பெற்றவருக்கு நிராகாரமான (உருவமில்லாத) குருவே தேவையை நிறைவேற்றுகிறது. இது சாஸ்திரங்களின் கூற்று.

11 தியானம் செய்வதற்கு ஓர் உருவம் கிடைக்காதபோது, பக்திபா(ஆஏஅ)வம் வெளிப்பட இயலாது. அவ்விதமாக பக்தி வெளிப்படாதபோது, அரும்பாக இருக்கும் மனமலர் விகசிப்பதில்லை.

12 மலராத இவ்வரும்பால் மணம் கொடுக்கமுடியாது; தேனும் அளிக்கமுடியாது. தேன்வண்டும் இவ்வரும்பை ஒருபோதும் வட்டமிடுவதில்லை.

13 குணங்களுடன்கூடிய இறைவனுக்கு உருவம் உண்டு. நிர்குணமான இறைவனுக்கு உருவமேதும் இல்லை. உருவமுடைய இறைவனும் உருவமில்லாத இறைவனும் ஒன்றே; இங்கு வேறுபாடு ஏதும் இல்லை.

14 நெய்1 கெட்டியாக இருந்தாலும், உருகிய நிலையில் ஓடும் திரவமாக இருந்தாலும், நெய், நெய்தான். உருவமற்ற இறையும் உருவமுள்ள இறையும் ஒன்றுடன் ஒன்று இசைபட்டு இப் பிரபஞ்சத்தையே வியாபிக்கிறது. (ஆயினும்,)

15 கண்கள் திருப்தியடையும்வரை தரிசனம் செய்யவும், எங்கிருந்து ஞானம் மடைதிறந்தாற்போலவும் நேரிடையாகவும் பாய்கிறதோ அப்பொற்பாதங்களின்மேல் சிரத்தைத் தாழ்த்தவுமே மனம் விரும்புகிறது.

16 பக்தர்கள் அன்புடன் ஸம்பாஷணை செய்வதற்காகவும் சந்தனம் மற்றும் அக்ஷதை போன்ற பொருள்களை உபயோகித்துப் பூஜை செய்வதற்காகவும் இறைவன் உருவம் எடுக்கவேண்டியிருக்கிறது.

17 உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது. உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமற்ற இறைவனை அறிந்துகொள்வது தானாகவே பின்தொடர்கிறது.

18 நிர்க்குணமான, நிராகாரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோõ அவரவர்களுடைய ஆன்மீகத்

19 ஒருவரை சிர்டீயி­ருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை சிர்டீயிலேயே தனிமையில் வாழச் செய்வார். மற்றொருவரை வாடாவை விட்டு வெளிவராமலேயே இருக்கச்செய்து, தாம் நியமித்தவாறு புராணங்களைப் பாராயணம் செய்யச் சொல்வார்.

20 பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாஸங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்துகொண் டிருக்கும்போதும் உறங்கும்போதும் உணவருந்தும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள்õ இச்செயல்பாடுகளின் நோக்கம் இதுவே.

21 நசித்துப்போகும் தன்மையையுடைய இவ்வுடல் என்றோ ஒருநாள் மரணத்தை சந்திக்கப்போகிறது. ஆகவே, பக்தர்கள் மரணத்தை நினைத்து சோகமடையாமல், ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனிடமே மனத்தை நிலைக்கச் செய்யவேண்டும்.

22 பலவிதமான செழிப்புகளுடன் நம்முன் தோன்றும் காட்சிகள், தோன்றாநிலையில் இருக்கும் இறைவனின் தோன்றியதும் மாயையுமான வெளிப்பாடுகளே. தோன்றாநிலையி­ருக்கும் இறைவனிடமிருந்து தோன்றியவை அனைத்தும் அவனிடமே திரும்பிச் சென்றுவிடும்.

23 பிரம்மாவி­ருந்து புல்பூண்டுவரை, சிருஷ்டி அனைத்தையும் நாம் வ்யஷ்டியாக1 நோக்கினும், ஸமஷ்டியாக2 நோக்கினும், தோன்றாநிலையில் இருக்கும் இறைவனிடமிருந்து தோன்றியதால், மறுபடியும் அவை தோன்றாநிலையையே சென்றடைய வேண்டும்.

24 ஆகவே, யாரும் எப்பொழுதும் மரணமடைவதில்லை. பாபா விஷயத்தில் மரணம் எப்படி உண்மையாக இருக்க முடியும்? ஸ்ரீ ஸாயி நித்தியசுத்தர்; புத்தர்; நிரஞ்ஜனர் (மாசில்லாதவர்); மரணமற்றவர்.

25 சிலர் அவரை இறைவனுடைய அடியார் என்று சொல்லலாம்; சிலர் அவரை மஹாபாகவதர் என்று சொல்லலாம்; ஆனால், நமக்கு அவர் ஸாக்ஷாத் கடவுளின் அவதாரமேõ

26 பெருக்கெடுத்தோடும் கங்கை நதி ஸமுத்திரத்தைச் சேருமுன், சூரியனுடைய உஷ்ணத்தால் தவிப்பவர்களுக்கு வழிநெடுக இதமான குளிர்ச்சியை அளிக்கிறாள்; கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு ஜீவனை அளிக்கிறாள்; எல்லாருடைய தாகத்தையும் தணிக்கிறாள்.

27 அவதார புருஷர்களின் நிலையும் இதுவே. அவர்கள் தோன்றுகின்றனர்; மறைகின்றனர்; அவர்களுடைய வாழ்க்கை நெறிமுறைகளால் உலகத்தைத் தூய்மையாக்குகின்றனர்.


28 இயற்கையாகவே மன்னிப்பளிப்பதில் மிகச்சிறந்தவர்களாகவும், எந்நிலையிலும் பதட்டப்படாத அமைதியுடனும் கபடமற்றும் பொறுமையுடனும் இந்த ஞானிகள் ஒப்பற்ற திருப்தியுடன் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவரே பாபா.

29 மனித உருவில் காணப்பட்டாலும் பிரபஞ்சத்தில் உலவி வந்தாலும் அவர் நிர்குணமானவர்; நிர்விகாரமானவர்; ஸங்கம் தேவைப்படாதவர்; அகமுகமாக முக்தியடைந்தவர்.

30 பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, ''ஞானிகள் என்னுடைய ஆத்மா; ஞானிகள் என்னுடைய உயிருள்ள பிம்பங்கள்; அன்பும் கருணையும் உள்ள ஞானிகள் எல்லாரும் நானேஃஃ என்று கூறினார்.--

31 ''அவர்களை என்னுடைய பிம்பங்கள் என்று சொல்வதுகூடச் சரியாகாது; ஏனெனில், ஞானிகள் என்னுடைய நிச்சலமான, என்றும் மாறாத சொரூபங்கள். என் பக்தர்களின் சுமைகளை (பொறுப்புகளை) நான் ஞானிகளின் பொருட்டே சுமக்கிறேன்.--

32 ''அனன்னியமாக (வேறொன்று ஏதுமின்றி) ஞானிகளை சரணடைந்த பக்தர்களின் பாதங்களை நான் வணங்குகிறேன்ஃஃ என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஞானிகளுடைய பெருமையை உத்தவருக்கு உபதேசம் செய்தார்.

33 உருவமிருப்பவர்கள், உருவமில்லாதவர்கள் இவர்கள் அனைவரிலும் சிறந்தவராகவும் குணவந்தர்களில் உத்தமமான குணமுடையவராகவும் சான்றோர்களில் சீரிய சான்றோராகவும் அவர்களனைவரிலும் அரசனாகவும் இருப்பவர்;--

34 எல்லா ஆவல்களிலும் திருப்தியடைந்தவர்; தன்னிறைவு பெற்றவர்; யதேச்சையாகக் கிடைத்ததில் சந்தோஷமடைபவர்; அனவரதமும் ஆத்மாவில் நிலைத்தவர்; சுகதுக்கங்களுக்கு அப்பாற்பட்டவர்;--

35 ஆத்மானந்த வைபவம் அடைந்தவர் -- யாரால் அவருடைய கௌரவத்தை வர்ணிக்க முடியும்? அவர் பிரம்மதேவனுடைய அவதாரம்; ஆகவே, சொற்களால் விவரிக்க முடியாதவர்.

36 சொற்களால் விவரிக்கமுடியாத அந்த சக்தியே கண்ணால் காணும்படியான ரூபத்தில் பூமிக்கு வந்தது. ஸச்சிதானந்தமே1 அவர், என்று அறிந்துகொள்வதுதான் முழுமையான ஞானம்.

37 எவருடைய மனம் பிரம்மத்திலேயே லயித்திருக்கிறதோ, எவர் இவ்வுலக வாழ்வி­ருந்து நிவிர்த்தியடைந்தவரோ, எவர் உலகியல் தொல்லைகளி­ருந்து விடுபட்டவரோ, எவர் முழுமுதற்பொருளுடன் தம்முடைய ஆத்மாவை ஒன்றுபடச் செய்துவிட்டாரோ, அவர் தூய ஆனந்தத்தின் உருவமாவார்.

38 வேதம் ''ஆனந்தமே பிரம்மம் (முழுமுதற்பொருள்)ஃஃ என்று விளம்புவதை கதை கேட்பவர்கள் பலமுறை கேட்டிருப்பார்கள். புத்தகஞானிகளும் இதைப் போதிகளில் (புராணங்களில்) படித்திருப்பார்கள். விசுவாசமுள்ள பக்தர்களோ இதை சிர்டீயில் அனுபவிக்கிறார்கள்õ

39 தர்மம், அதர்மம் என்னும் லக்ஷணங்களுடன் விளங்கும் இவ்வுலகம் விசித்திரமானது. ஆத்மஞானம் அடையாதவர்கள்தாம், இதுவிஷயம் அசட்டை செய்யாது இவ்விதிகளை அனுசரிக்கவேண்டும்.

40 ஆத்மஞானிகளுக்கோ இதுவிஷயத்தில் ஆதங்கம் ஏதுமில்லை. அவர்கள் தங்களுடைய ஆத்ம ஸ்வரூபத்திலேயே அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். அவர்கள் நித்தியமாக விடுதலையடைந்தவர்கள்; ஆனந்தமானவர்கள்; ஸதா சின்மய (தூய ஞான) ரூபமானவர்கள்.

41 பாபா எல்லாருக்குமே அதிஷ்டானமானவர் (அடித்தளமானவர்). அவருக்கு எப்படி ஓர் உட்காரும் ஆசனம் அளிப்பது? அதுவும் ஒரு வெள்ளிச் சிம்மாசனம்? ஆயினும், பாபா, பக்தர்களுக்கு அவ்வளவு செல்லம் கொடுத்திருந்தார்õ

42 அவருடைய பழைய ஆசனமான ஒரு கந்தல் கோணிப்பை அங்கு இருந்தது. அதன்மேல் பக்தர்கள் மிக்க அன்புடன் ஒரு சிறு மெத்தையை அவர் அமர்வதற்காக வைத்தனர்.

43 உட்கார்ந்த நிலையில் சாய்ந்துகொள்ளும் சுவரை ஒட்டி, ஒரு திண்டும் வைக்கப்பட்டது. பக்தர்களுடைய மனத்தின் ஓட்டங்களை மதிக்கும் வகையில் பாபா அவர்களுடைய விருப்பங்களை ஏற்றுக்கொண்டார்.

44 சிர்டீயில் இருப்பதுபோல் தெரிந்தாலும், பாபா எங்கும் சுதந்திரமாகச் சுற்றிவந்தார். இந்த அனுபவத்தைத்தான் ஸாயீ எப்பொழுதும் பக்தர்களுக்கு அளித்தார்.

45 பற்றற்றவராகவும் மனத்திண்மை உடையவராகவும் இருந்த பாபா, பக்தர்கள் செய்த சடங்குபூர்வமான பூஜையையும் ஏற்றுக்கொண்டார். எல்லாரிடமிருந்தும்

46 இவ்விதமாக, சிலர் சாமரம் வீசியும் சிலர் விசிறியால் இதமாக விசிறியும் வேறு சிலர் மங்களவாத்தியங்களை முழங்கியும் பாபாவைத் தொழுதார்கள்.

47 சிலர் அவருடைய கைகளையும் பாதங்களையும் அலம்பினர்; சிலர் அத்தரும் சந்தனமும் பூசினர்ó; சிலர் விசேஷமான நைவேத்தியம் படைத்து, பதின்மூன்று பொருள்கள் அடங்கிய தாம்பூலத்தைக் கொடுத்தனர்.

48 சிலர், அரைத்த சந்தனத்தை அவருடைய நெற்றியில் இரண்டு விரல்களால் சிவ­ங்கத்தின்மேல் இருப்பதுபோல் கோடுகளாக இட்டனர். சிலர், அரைத்த சந்தனத்துடன் கஸ்தூரி கலந்து நெற்றியில் இட்டனர்.

49 ஒருமுறை (ஒரேமுறை) தாத்யா ஸாஹேப் நூல்கரின்1 நண்பர் டாக்டர் பண்டித் பாபாவை தரிசனம் செய்வதற்காக சிர்டீக்கு வந்தார்.

50 சிர்டீயில் வந்து இறங்கியவுடனே அவர் மசூதிக்குச் சென்று பாபாவுக்குப் பலமுறை நமஸ்காரம் செய்துவிட்டு, சிறிது ஓய்வெடுப்பதற்காக அங்கு அமர்ந்தார்.

51 பாபா அவரிடம், ''போம், தாதா2 பட்டிடம் போம், இந்த வழியாகப் போம்ஃஃ என்று சொல்­, விரலால் வழிகாட்டி அவரை மூட்டைகட்டி அனுப்பிவிட்டார்õ

52 பண்டித், தாதா பட்டின் வீட்டிற்குச் சென்றார்; மரியாதையான நல்வரவளிக்கப்பட்டார். தாதா அப்பொழுதுதான் பாபாவுக்குப் பூஜை செய்வதற்காக எல்லாப் பொருள்களையும் தயார் செய்துகொண்டு கிளம்பிக்கொண் டிருந்தார். பண்டித்தைத் தம்முடன் வர விருப்பப்படுகிறாரா என்றும் கேட்டார்.

53 பண்டித் இதற்குச் சம்மதித்து தாதாவுடன் சென்றார். தாதா பூஜையைச் செய்தார். அந்நாள்வரை பாபாவினுடைய நெற்றியில் வட்டமாகச் சந்தனம் இடுவதற்கு எவருக்குமே தைரியம் இருந்ததில்லை.

54 பக்தர் எவராக இருப்பினும், எக்காரணத்திற்காக வந்திருந்தபோதிலும், பாபா அவரை நெற்றியில் சந்தனம் இடுவதற்கு அனுமதிக்கவில்லை. மஹால்ஸாபதி ஒருவர் மட்டுமே கழுத்தில் சந்தனம் பூச அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள், பாதங்களுக்கே சந்தனம் இட்டனர்.

55 டாக்டர் பண்டித்தோ குழந்தையுள்ளம் படைத்தவர்; கபடமில்லாதவர்; பக்திமான். அவர் தாதா வைத்திருந்த சந்தனப்பேலாவை வ­ய எடுத்து, ஸாயீயினுடைய தலையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் நெற்றியில் அழகான திரிபுண்டரம் (மூன்று நீளமான பட்டைகள்) இட்டுவிட்டார்.

56 அவருடைய ஸாஹஸச் செயலைக்கண்டு தாதா கலவரமடைந்தார். ''ஆõ என்ன ஸாஹஸம் இதுõ பாபா இதைச் செய்ததால் சீறமாட்டார்?ஃஃ (என்று அவர் நினைத்தார்)

57 நடக்கவேமுடியாதது நடந்துவிட்டதெனினும், பாபா ஒரு வார்த்தையும் பேசவில்லைõ மாறாக, அவர் முகம் பிரஸன்னமாகவே இருந்தது; கோபக்குறி துளியும் காட்டவில்லை.

58 இந்நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. ஆனால், தாதாவினுடைய மனமோ அறுத்துக்கொண் டிருந்தது. அன்று சாயங்காலமே பாபாவை அதுபற்றி வினவினார்.

59 ''நாங்கள் ஒரு சிறிதளவு சந்தனம் நெற்றியில் இடுவதற்கு முயலும்போது நீங்கள் எங்களைத் தொடவும் அனுமதிப்பதில்லை. இன்று காலையில் நடந்தது என்ன?--

60 ''நாங்கள் இடுவதற்கு முயலும் சந்தனத் திலகத்திற்கு அபார ஆவ­ன்மையும் வெறுப்பும் காட்டுகிறீர்; டாக்டர் பண்டித் இட்ட திரிபுண்டரத்தின்மேல் என்ன ஏகப் பிரியம்? இதென்ன விசித்திரமான நடத்தைõ நடத்தை ஒரே சீராக இல்லையேõஃஃ

61 பாபா முகத்தில் ஒரு புன்முறுவலைத் தவழ விட்டுக்கொண்டு, இந்த மதுரமான வார்த்தைகளைப் பிரீதியுடன் தாதாவிடம் கூறினார். கவனமாகக் கேளுங்கள்.

62 ''தாதா, அவருக்கு குரு ஒரு பிராமணர்; நான் ஜாதியில் முஸ்லீம் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளும். இருப்பினும், அவர் என்னைத் தம் குருவாகவே கருதி, எனக்கு குருபூஜை செய்தார்.--

63 '''நான் ஜாதியில் மிகப் புனிதமான பிராமணன்; இவரோ ஒரு புனிதமற்ற முஸ்லீம்; அவரை எப்படி நான் பூஜை செய்ய முடியும்ஃ என்ற ஸந்தேஹம் அவருக்குத் தோன்றவே இல்லை.--

64 ''எனக்கு எந்த உபாயமும் கொடுக்காமல், இப்படித்தான் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். நான் மறுப்பதற்கு இடங்கொடுக்காமலேயே அவர் என்னை முழுமையாக வெற்றிகொண்டுவிட்டார்ஃஃ.

65 தாதா இந்த விவரணத்தைக் கேட்டார்; ஆனால், அதை ஒரு நகைச்சுவையாகவும் இங்கிதமான பேச்சாகவுமே எடுத்துக்கொண்டார். வீடு திரும்பும்வரை தாதாவுக்கு உண்மையான முக்கியத்துவம் விளங்கவில்லை.

66 பாபாவினுடைய இந்த முன்னுக்குப்பின் முரணான செயல், தாதாவை மனம் குமுறச் செய்தது. ஆனால், இந்நிகழ்ச்சியைப்பற்றி டாக்டர் பண்டித்திடம் பேசிய உடனே பாபா தம்முடைய செய்கைகளில் ஒரே சீராக இருந்தது நன்கு விளங்கியது.

67 தோபேச்வர் என்னும் ஊரைச் சேர்ந்த ரகுநாத் (1821 - 1910) ஒரு சித்தர். 'காகா புராணிக்ஃ என்ற பெயரால் நன்கு அறியப்பட்டவர். பூர்வ ஜன்ம சம்பந்தத்தால் டாக்டர் பண்டித்துக்கு அவருடைய சேவடிகளில் ஈர்ப்பு உண்டாகி சிஷ்யராகிவிட்டார்.

68 பண்டித் தம் குரு காகாவைக் கூவி அழைத்தார். அதனால் ஏற்பட்ட அனுபவம் அவரை விசுவாசத்தில் இருத்தியது. மனம் எப்படியோ, பா(ஆஏஅ)வம் எப்படியோ, அப்படியே பக்திப் பிரவாஹம் (பக்திப் பெருக்கு) அன்றோõ

69 இருந்தபோதிலும், பூஜைச் சடங்குகள் எல்லாம் பாபா விரும்பியபோதுதான் அனுமதிக்கப்பட்டன. அனுமதி இல்லை எனில், பாபா நரஸிம்ஹ அவதாரம் எடுத்தது போலக் கோபங்கொண்டு, பூஜை திரவியங்களையெல்லாம் விசிறி அடித்துவிடுவார்.

70 நரஸிம்ஹ அவதாரம் எடுத்தபோது அருகே நிற்க எவருக்கு தைரியமிருந்தது? கோபச் சுவாலையாக அவர் இருந்தபோது, அனைவரும் 'தப்பித்தோம், பிழைத்தோம்ஃ என்று ஓடிவிடுவர்.

71 சிலசமயங்களில் திடீரென்று கோபாவேசம் கொண்டு, தம் கோபத்தை பக்தர்கள்மீது காட்டுவார். மற்றசமயங்களில் மெழுகைவிட இளகியவராகவும், சாந்தமும் மன்னிக்கும் சுபாவமும் உருவெடுத்து வந்தவர் போலவும் இருப்பார்.

72 சில நேரங்களில் காலாக்கினியைப் போன்று பயங்கரமாகத் தோன்றி, பக்தர்களை வாள்முனையில் நடக்கச் செய்தார். சிலசமயங்களில் வெண்ணெயைவிட இளகியவராக உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் இருந்தார்.

73 வெளிப்பார்வைக்குக் கோபத்தால் அவர் நடுங்கலாம்; கண்விழிகளை வேகமாகச் சுழற்றலாம்; ஆனால், இதயத்திலோ தாய்க்குக் குழந்தையின்மேல் இருப்பது போன்ற கருணை ஊற்று பொங்கியது.

74 அடுத்த கணமே தம்முடைய சுய சாந்திநிலையை மீண்டும் அடைந்து பக்தர்களைத் தம்மிடம் வருமாறு உரக்க அழைப்பார், ''நான் யார்மீதாவது கோபப்படுவது போலத் தெரிந்தாலும், என்னுடைய இதயத்தில் கோபமே கிடையாது.--

75 ''தாய் தன் குழந்தையை எட்டி உதைத்துத் தள்ளினால்தான், கடல் ஆற்றை வாராதே என்று திருப்பியடித்தால்தான், நான் உங்களை வெறுத்து ஒதுக்கி இன்னல் செய்வேன்.--

76 ''நான் என் பக்தர்களின் பிடியில்தான் இருக்கிறேன்; அவர்களின் பக்கத்தில் நிற்கிறேன். எப்பொழுதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன் நாடுகிறேன்; துன்பத்தில் அவர்கள் கூப்பிடும்போது ஓடிவருகிறேன்.ஃஃ

77 காதையின் இந்தப் பாகத்தைச் சொல்­க்கொண் டிருக்கும்போதே, இன்னொரு மிகப் பொருத்தமான காதை ஞாபகத்திற்கு வருகிறது. அதைச் சொல்கிறேன். கதை கேட்பவர்களேõ கவனமாகக் கேளுங்கள்.

78 கல்யாணில்1 வசித்த ஸித்திக் பாலகே என்ற முஸ்லீம், மெக்கா-மெதினா யாத்திரையை முடித்தவுடன் சிர்டீக்கு ஒருமுறை வந்தார்.

79 வயது முதிர்ந்த இந்த ஹாஜி2 வடக்கு3 நோக்கிய சாவடியில் தங்கினார். முதல் ஒன்பது மாதங்களுக்கு பாபா இவரைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. ஏதோ மனஸ்தாபம் இருந்ததுபோல் தெரிந்தது.

80 நேரம் இன்னும் பழுக்கவில்லை; மசூதிக்குச் செல்வதற்கு அவர் எடுத்த முயற்சிகளனைத்தும் வீண்; அலுப்பையும் ச­ப்பையுமே தந்தன. அவர் பல வழிமுறைகளைக் கையாண்டும், பாபா அவரைத் திரும்பிப் பார்க்கவும் மறுத்துவிட்டார்.

81 மசூதியின் கதவுகள் எல்லாருக்கும் திறந்திருந்தன. யாருமே ரஹஸியமாக எப்படியாவது உள்ளே நுழையவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஸித்திக் பாலகேவுக்கு மசூதியின் படிகளில் ஏற அனுமதி கிடைக்கவில்லை.

82 பாலகே மனமுடைந்து போனார். ''மசூதியின் படிகளிற்கூடக் கால்வைக்க முடியாமல் செய்த என்னுடைய விதிதான் என்னேõ நான் என்ன கொடும்பாவம் செய்தேனோ தெரியவில்லையேõ--

83 ''எவ்விதமாக நான் அவரை மகிழ்ச்சியடையச் செய்து அவரருளைப் பெறமுடியும்?ஃஃ இவ்வெண்ணமே பாலகேயின் மனத்தை இரவும் பகலும் ஒரு வியாதியைப்போல் வாட்டியது.

84 ஒருநாள் எவரோ அவரிடம் கூறினார், ''சோகத்தில் மூழ்காதீர்; மாதவராவினுடைய உதவியை நாடினால் உமது விருப்பம் நிறைவேறும்.--

85 ''நந்திதேவரை முத­ல் தரிசனம் செய்யாமல் உதாசீனம் செய்துவிட்டு, சிவன் பிரீதியடைவார் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?ஃஃ பாலகேவுக்கு இது ஒரு சிறந்த வழியாகத் தோன்றியது.

86 மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, கதை கேட்பவர்களுக்கு இது மிகைப்படுத்திச் சொல்லப்பட்டக் கூற்றாகத் தெரியலாம். ஆனால், சிர்டீக்கு பாபா தரிசனத்திற்காகச் சென்ற பக்தர்களுக்கு இதுவே அனுபவமாக இருந்தது.

87 பாபாவிடம் அமைதியாகவும் உபத்திரவம் ஏதுமில்லாமலும் பேசவேண்டுமென்று நினைத்தவர்கள், மாதவராவையே முத­ல் அழைத்துக்கொண்டு சென்றனர்.

88 மாதவராவ் முத­ல் மெல்­ய குர­லும் இனிமையாகவும் யார் வந்திருக்கிறார், எங்கிருந்து வந்திருக்கிறார், எதற்காக வந்திருக்கிறார் என்பதுபற்றி இதமாக அறிமுகப்படுத்துவார். ஸமர்த்த ஸாயீ இத்தூண்டுதலால் பேச ஆரம்பிப்பார்.

89 இதைப்பற்றிக் கேள்விப்பட்ட ஹாஜி, மாதவராவை, ''என்னுடைய மனத்தி­ருக்கும் இடைவிடாத குடைச்சலை நிரந்தரமாக எடுத்தெறியுங்கள்; அடையமுடியாததை அடைவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்ஃஃ என்று கெஞ்சினார்.

90 தயவு செய்யும்படி இவ்வாறு உந்தப்பட்ட மாதவராவ், இச்செயல் சுலபமாக இருந்தாலும் சரி, கஷ்டமாக இருந்தாலும் சரி, ஒருமுறை முயன்று பார்த்துவிடுவது எனத் தீர்மானித்தார்.

91 மாதவராவ் மசூதிக்குச் சென்று, மெதுவாகவும் உஷாராகவும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்கு தைரியம் பூண்டார். ''பாபா, அந்த முதியவர் ஒரே கஷ்டப்படுகிறாரேõ அவருக்கு நீங்கள் உபகாரம் செய்யக்கூடாதா?ஃஃ என்று கேட்டார்.

92 ''அந்த ஹாஜி, மெக்கா-மெதீனாவெல்லாம் சென்றுவந்திருக்கிறார். இப்பொழுது உங்களுடைய தரிசனத்திற்காக சிர்டீக்கு வந்திருக்கிறார். அவரிடம் கருணை காட்டாமல் உங்களால் எப்படி இருக்கமுடிகிறது? ஓ, அவரையும் மசூதியினுள் வருவதற்கு அனுமதியுங்கள்õ--

93 ''எண்ணற்ற ஜனங்கள் மசூதியினுள் தரிசனம் செய்ய வருகிறார்கள்; தரிசனம் ஆன உடனே திரும்பிவிடுகிறார்கள். இவரைமாத்திரம் ஏன் தனிமைப்படுத்தி ஏக்கத்தால் வெம்பிப்போகச் செய்யவேண்டும்?--

94 ''இப்பொழுதாவது அவர்மீது கிருபையுடன் கடாக்ஷம் செய்யுங்கள்; மசூதியில் பேட்டி அளியுங்கள். அவரும் அப்போது தம் மனத்துள் என்ன இருக்கிறது என்பதைச் சொல்­விட்டு உடனே இவ்விடத்தை விட்டு அகன்றுவிடுவார்.ஃஃ

95 ''சாமா, நீ இன்னும் 'இன்று பிறந்த சிசுஃவாகவே இருக்கிறாய்; அல்லா அனுக்கிரஹம் அவருக்கு இல்லாவிட்டால் என்னால் என்ன செய்யமுடியும்?--

96 ''அல்லாமியாவிடம் கடன்படாதவர் எவராவது இந்த மசூதியின் படிகளில் ஏறமுடியுமா? இங்கிருக்கும் பக்கீரின் வழிமுறைகள் எந்த ஆராய்ச்சியாலும் அறிந்துகொள்ளமுடியாதவை; அவரைக் கட்டுப்படுத்த என்னால் முடியாது.--

97 ''எது எவ்வாறு இருப்பினும், பாரவிக் கிணற்றுக்கப்பால் நேராகப் போகும் ஒற்றையடிப் பாதையில் அவர் ஜாக்கிரதையாக நடந்து வருவாரா என்று ஸ்பஷ்டமாகக் (தெளிவாகக்) கேள்.ஃஃ

98 ஹாஜி சொன்னார், ''எவ்வளவு சிரமமான செயலாக இருந்தாலும் நான் ஜாக்கிரதையாக நடந்து வருவேன். எனக்கும் பிரத்யக்ஷமாகப் பேட்டி அளியுங்கள். உங்களுடைய பொற்பாதங்களினருகில் அமர என்னை அனுமதியுங்கள்.ஃஃ

99 இந்தப் பதிலை சாமாவிடமிருந்து கேட்டபிறகு பாபா சொன்னார், ''மேற்கொண்டு அவரை, நான்கு தவணைகளில் எனக்கு நாற்பதாயிரம் ரூபாய் தருவாரா என்று கேள்.ஃஃ

100 இந்தச் செய்தியைச் சொன்ன மாதவராவிற்கு ஹாஜி பதிலுரைத்தார், ''என்ன கேள்வி கேட்கிறீர்õ பாபா கேட்டால் நான் நாற்பது லட்சங்களும் கொடுப்பேன்; ஆயிரங்களைப் பற்றிய கதை என்ன?ஃஃ

101 பாபா இதைக் கேட்டுவிட்டு மேலும் சொன்னார், ''இன்று மசூதியில் ஓர் ஆட்டை வெட்டப்போகிறோம். எந்தப் பகுதி மாமிசம் அவருக்கு வேண்டுமெனக் கேள்.--

102 ''மாமிசம் சேர்ந்த எலும்புகள் வேண்டுமா? அல்லது அவர் கொட்டைகளின்மீது மனத்தை வைத்திருக்கிறாரா? போ, அவருக்கு எது வேண்டுமென்று நிச்சயமாக அந்தக் கிழவரைக் கேட்டுக்கொண்டு வா.ஃஃ

103 மாதவராவ் பாபாவினுடைய செய்தியை முழுமையாக ஹாஜிக்குத் தெரிவித்தார். ஹாஜி திட்டவட்டமாகப் பதிலுரைத்தார், ''எனக்கு அதில் எதுவுமே வேண்டா.--

104 ''ஏதாவது எனக்குக் கொடுக்கவேண்டுமென்று பாபாவுக்கு எண்ணமிருந்தால், எனக்கு ஒரே ஓர் ஆசைதான் இருக்கிறது. அவருடைய கொலம்பாவி­ருந்து (சோற்றுப்பானை) ஒருபிடி உணவு கிடைத்தால் என்னை மஹா பாக்கியசா­யாகக் கருதுவேன்.ஃஃ

105 மாதவராவ் ஹாஜியினுடைய பதிலை பாபாவுக்குத் தெரிவித்தார். பாபா இதைக் கேட்டவுடனே கடுங்கோபம் கொண்டார்.

106 கொலம்பாவையும் குடிநீர்ப்பானைகளையும் கதவு வழியாக வெளியே எடுத்தெறிந்தார். ஆக்ரோஷமாகத் தம்முடைய கைகளைக் கடித்துக்கொண்டு வெளியே வந்து ஹாஜியின் அருகில் நின்றார்.

107 கப்னியை இரண்டு கைகளால் பிடித்து ஹாஜிக்கு எதிரில் கப்னியைத் தூக்கிக்கொண்டு நின்று, அவர் சத்தம்போட்டார், ''நீர் உம்மை என்னவென்று நினைத்துக்கொண்டு என்முன்னே கர்வம் காட்டுகிறீர்?--

108 ''உம்முடைய வயோதிக ஞானத்தை டம்பமடிக்கிறீராõ இப்படித்தான் உம்முடைய குர்ஆனைப் படித்தீரா? மெக்காவுக்கும் மெதினாவுக்கும் புனிதயாத்திரை சென்றது

109 பாபா கன்னாபின்னாவென்ற வார்த்தைகளால் அவரை வசை மொழிந்து கடிந்து கொண்டார்õ ஹாஜி திகைத்துச் செயலற்றுப் போய்விட்டார். பாபா திரும்பிச் சென்றுவிட்டார்.

110 மசூதியின் முற்றத்தினுள் நுழையும்போது தோட்டத்துப் பெண்கள் சிலர் மாம்பழம் விற்பதைப் பார்த்தார். அவர்களிடமிருந்த பழக்கூடைகள் அனைத்தையும் விலைக்கு வாங்கி ஹாஜிக்கு அனுப்பிவைத்தார்õ

111 உடனே திரும்பி, மறுபடியும் பாலகேயிடம் சென்று, ஐம்பத்தைந்து ரூபா எடுத்து ஒவ்வொன்றாக ஹாஜியின் கையில் எண்ணினார் (கொடுத்தார்).

112 இதற்குப் பிறகு இவ்விருவர்களிடையே பிரேமை வளர்ந்தது. ஏற்கெனவே நடந்ததையெல்லாம் இருவருமே முற்றிலும் மறந்துவிட்டதைப்போல, ஹாஜி விருந்துக்கு அழைக்கப்பட்டார். ஹாஜி மகிழ்ச்சியில் திளைத்தார்.

113 சிலநாள்களுக்குப் பிறகு, ஹாஜி சிர்டீயை விட்டுச் சென்றுவிட்டார்; ஆனால், மறுபடியும் திரும்பிவந்தார். பாபாவின்மீது மேலும் மேலும் பிரேமை கொண்டார். அதற்குப் பிறகும் பாபா அவருக்கு அவ்வப்போது பணம் கொடுப்பதைத் தொடர்ந்தார்.

114 இடிக்கும் மின்னலுக்கும் அதிபதியும் மேகங்களின்மீது ஆட்சிசெலுத்துபவருமான இந்திரனை ஒருமுறை பாபா தொழுததைக் கண்டு நான் ஆச்சரியத்தால் தாக்கப்பட்டேன்.

115 மிகப் பயங்கரமான நேரம் அது; வானம் முழுவதும் மேகமூட்டத்தால் கறுத்துவிட்டது. பறவைகளும் மிருகங்களும் பயத்தால் நடுங்கின. ஆக்கிரோஷமான சூறைக்காற்றுக்குப் பின், பலத்த மழை பொழிய ஆரம்பித்தது.

116 அது சூரியன் அஸ்தமித்துவிட்ட முன்னிரவு நேரம். திடீரென்று சுழற்காற்று அடித்து பலமாகச் சத்தமிட்டபோது எங்கும் ஒரே கலவரமாக இருந்தது.

117 இது போதாதென்று மேகங்கள் இடித்துக் கர்ஜித்தன; மின்னல்கள் பளபளத்தன; சூறைக்காற்று மேலும் மேலும் சீறியது; பின்னர் கனத்த மழை பொழிந்தது.

118 மேகங்கள் கொட்டோகொட்டென்று கொட்டின; ஆலங்கட்டி பெரியதாகவும் வேகமாகவும் விழுந்தது. சிர்டீ கிராமமக்கள் அனைவரும் என்ன நேருமோ என்று பீதியடைந்தனர்; ஆடுமாடுகள் பரிதாபமாகக் கதறின.

119 மசூதியின் சார்ப்பில் ஆண்டிகள் பாதுகாப்புக்காக ஒதுங்கினர்; மாடுகளும் கன்றுகளும் அங்கு வந்து குழுமினõ மசூதியில் இடமில்லை.

120 தண்ணீர், தண்ணீர், தண்ணீர், எங்கே பார்த்தாலும் தண்ணீர்õ மழை பொழிந்த வேகத்தில் வைக்கோல் எல்லாம் அடித்துக்கொண்டு போய்விட்டது. அறுத்துக் கட்டுக்கட்டிக் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த தானியங்களெல்லாம் முழுக்க நனைந்து போயின. ஜனங்களிடையில் பீதியும் அமளியும் நிலவியது.

121 கிராமமக்கள் பயத்தால் நடுநடுங்கி ஸபாமண்டபத்தில் நெருக்கியடித்தனர். சிலர் பாதுகாப்புக்காக மசூதியின் சார்ப்புகளின் கீழே நின்றனர். அவர்களனைவரும் பாபாவை வேண்டிக்கொள்வதற்காகவே வந்திருந்தனர்.

122 ஜோகாயி, ஜாகாயி, மாரியாயி, சனி, சங்கர், அம்பாபாயி, மாருதி, கண்டோபா, மஹால்ஸாபதி -- இந்தத் தெய்வங்களெல்லாம் சிர்டீயில் ஒவ்வொன்றும் ஒவ்வொறு இடத்தில் இருந்தன.

123 ஆனால் ஆபத்துக்காலத்தில் கிராம மக்களுக்கு இந்த தேவதைகள் எந்த உதவியும் செய்யவில்லை. அவர்களுடைய நடமாடும் தெய்வமான ஸாயீயே ஆபத்துநேரத்தில் அவர்களை மீட்பதற்காக ஓடிவந்தார்.

124 அவருக்குக் கோழியோ ஆடோ ப­யிடத் தேவையில்லை; பணமும் ஸமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர்மையான அன்புக்காகவும் விசுவாசத்திற்காகவுமே அவர் பசி கொண்டார். அதன்பிறகு, அவர்களுடைய சங்கடங்கள் அனைத்தும் தொலைந்துபோயின.

125 மக்கள் எவ்வளவு அதிர்ந்து போயிருந்தார்கள் என்பதை அறிந்தபோது மஹராஜினுடைய இதயம் கருணையால் உருகியது. தம்முடைய ஆசனத்தைவிட்டு எழுந்து, மசூதியின் வாசல் விளிம்பிற்கு வந்து நின்றுகொண்டார்.

126 வானம் இடித்தது; மின்னல்கள் பளபளத்தன. இதன் நடுவே ஸாயீமஹராஜ் பலம் கொண்டமட்டும் தம்முடைய குரலை உச்சஸ்வரத்திற்கு உயர்த்தி கர்ஜித்தார்.

127 ஸாதுக்களுக்கும் ஞானிகளுக்கும் தங்களுடைய உயிரைக் காட்டிலும் பக்தர்களுடைய உயிரே பெரிது. அவர்களுடைய விருப்பப்படியேதான் தேவர்களும் நடந்து கொள்கின்றனர். அவர்களுக்காக தேவர்களும் பூமிக்கு இறங்கி வருகின்றனர்.

128 பக்தர்கள் உதவிநாடி வேண்டும்போது, தேவர்களும் பக்தர்களுடைய ஈடுபாட்டை ஞாபகப்படுத்திக்கொண்டு அவர்களுக்காகப் பரிந்து ஓடிவந்து காப்பாற்றவேண்டும்.

129 கர்ஜனைக்கு மேல் கர்ஜனை பயங்கரமாக வானைப் பிளந்தது. இச்சத்தம் அங்கிருந்தோரையெல்லாம் செவிடாக்கியது; மசூதியே நடுங்கி ஆடுவதைப் போலத் தோன்றியது.

130 உச்சஸ்வரத்தில் பாபாவினுடைய குரல் மலைப்பள்ளத்தாக்கின் எதிரொ­யைப்போல் மசூதிகளின் மூலமாகவும் கோயில்களின் மூலமாகவும் முழங்கியது. உடனே மேகங்கள் இடிப்பதை நிறுத்தின; மழையும் அடங்கியது.

131 பாபாவினுடைய கர்ஜனை ஸபாமண்டபத்தையே உலுக்கியது. பக்தர்கள் திகைத்துப்போய், எங்கு இருந்தனரோ அங்கேயே அசைவற்று நின்றனர்.

132 பாபாவினுடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை அல்லவோõ மழை குறைந்தது; சூறாவளிக் காற்று நின்றது; மேகமூட்டமும் பார்வையை மறைத்த நீராவிப்படலமும் கலைந்தன.

133 படிப்படியாக மழை குறைந்தது; ஊதல் காற்று அடங்கியது; அந்த நேரத்தில் வானத்தின் கருமை மறைந்து, நக்ஷத்திரக் கூட்டங்கள் தெரிய ஆரம்பித்தன.

134 சிறிது நேரத்தில் மழை முழுவதுமாக நின்றுவிட்டது; காற்று மந்தமாகியது; வானத்தில் நிலா தோன்றியது; சகலரும் ஆனந்தமடைந்தனர்.

135 இந்திரனுக்குக் கருணை பிறந்தது போலும்õ மேலும், ஒரு ஞானியினுடைய ஆணைக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமன்றோ? ஆகவே, மேகங்கள் பலதிசைகளில் சிதைந்து ஓடின. புயலுக்குப்பின் அமைதி நிலவியது.

136 மழை முழுக்க நின்றுவிட்டது; இதமான காற்று வீச ஆரம்பித்தது; வானத்தின் உறுமல்கள் சுத்தமாய் நின்றுவிட்டன. பறவைகளும் மிருகங்களும் தைரியமடைந்தன.

137 வீடுகளின் சார்ப்புகளில் ஒண்டிக்கொண்டிருந்த ஆடுமாடுகள் குட்டிகளுடனும் கன்றுகளுடனும் வெளியே வந்து தைரியமாகவும் சுதந்திரமாகவும் உலாவின. பறவைகள் வானத்தில் உயரப் பறந்தன.

138 பயங்கரமான இந்நிகழ்ச்சியை அனுபவித்த மக்கள், பாபாவினுடைய உபகாரத்திற்கு மனதார நன்றி தெரிவித்துவிட்டுத் தம் தம் வீடுகளுக்குச் சென்றனர். உறுதியான சமநிலையை அடைந்த ஆடுமாடுகள் கால்போனபோக்கில் நடமாடின.

139 இவ்விதமாக, இந்த ஸாயீ தயையே உருவானவர்õ தாய் தன் குழந்தையின்மீது செலுத்தும் பாசத்தைப் போன்று அவர் பக்தர்களின்மீது செலுத்தும் பாசம் மிக உயர்ந்ததுõ அதுபற்றித் திருப்தியான அளவிற்கு நான் எவ்வாறு பாடுவேன்?

140 அக்கினியின்மீதும் அவருக்கு அம்மாதிரியான ஆதிபத்தியம் இருந்தது. இதுவிஷயமாக ஒரு சுருக்கமான காதையை கவனத்துடன் கேளுங்கள். செவிமடுப்பவர்களேõ அது பாபாவினுடைய அபூர்வமான சக்தியை விளக்கும்.

141 ஒருநாள் நடுப்பகல்வேளையில் துனியின் தீ பலமாக எழும்பியது. அந்நேரத்தில் துனிக்குப் பக்கத்தில் நிற்பதற்கு எவருக்கு தைரியம் இருந்தது? ஜுவாலைகள் திகுதிகுவென்று உயரமாக எரிந்தன.

142 தீ பயங்கரமாக எரிந்து, பல சிகரங்கள் உயரமாகக் கிளம்பிக் கூரையின் மரப்பலகைகளைத் தொட்டன. தீவிபத்தில் மசூதியே எரிந்து சாம்பலாகிவிடும் போலத் தோன்றியதுõ

143 பாபா என்னவோ அமைதியாகவே இருந்தார். முற்றும் வியப்படைந்த மக்கள் கவலையால் பீடிக்கப்பட்டு உரக்கக் கூவினர், ''ஐயோ, எவ்வளவு அமைதியாகவும் படபடப்பின்றியும் இருக்கிறார்õஃஃ

144 யாரோ ஒருவர் அலறினார், ''ஓடிப்போய்த் தண்ணீர் கொண்டுவாருங்கள்õஃஃ மற்றவர் சொன்னார், ''யார் அதைத் துனியில் கொட்டுவது? கொட்ட முயன்றால் ஸட்கா (பாபாவின் கைத்தடி) பலமாக உம்மீது விழும். யார் இதைச் செய்ய தைரியமாக முன்வருவார்?ஃஃ

145 எல்லாரும் தைரியத்தை இழந்து தத்தளித்தனர்; ஆனால் யாருக்குமே கேட்பதற்கு தைரியம் இல்லை. பிறகு பாபாவே தாமிருந்த நிலையி­ருந்து சிறிது நெளிந்து ஸட்காவின்மீது கரத்தை வைத்தார்.

146 கொழுந்துவிட்டெரியும் தீயைப் பார்த்துக்கொண்டே ஸட்காவைக் கையிலெடுத்துக்கொண்டு, ''நகரு, பின்வாங்கு, போஃஃ என்று சொல்­க்கொண்டே அடிமேல் அடியாக அடித்தார்.

147 துனியி­ருந்து ஒரு கை தூரத்தில் இருந்த கம்பத்தை ஸட்காவால் அடித்துக் கொண்டும் துனியை முறைத்துப் பார்த்துக்கொண்டும், ''சாந்தம் அடை; சாந்தம் அடைõஃஃ என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.

148 ஒவ்வொரு அடிக்கும் துனி தன்னுடைய ஆக்ரோஷத்தை இழந்து பின்வாங்கியது. படிப்படியாக துனி சாந்தமடைந்தது. மக்களுடைய பீதியும் அடியோடு தொலைந்துபோயிற்று.

149 ஞானிகளில் சிறந்தவரும் இறைவனின் அவதாரமுமான ஸாயீ இவ்வாறே இருந்தார். அவருடைய பொற்பாதங்களில் சரணடைந்தால், தம் கிருபைசெய்யும் கரத்தை உம்முடைய சிரத்தின்மீது வைப்பார்.

150 எவர் இந்த அத்தியாயத்தை சிரத்தையுடனும் பக்தியுடனும் நித்தியபாராயணம் செய்கிறாரோ, அவர் சாந்தமான மனநிலையையும் ஆபத்துகளி­ருந்து முழு விடுதலையையும் அனுபவிப்பார்.

151 நான் இன்னும் வேறென்ன சொல்லுவேன்? மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, நியமநிஷ்டையுடன், விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்துகொண்டு ஸாயீயை முழுமனத்துடன் வழிபட்டால், முழுமுதற்பொருளை அடைவீர்கள்.

152 உங்களுடைய அபூர்வமான இச்சைகளுங்கூடப் பூர்த்திசெய்யப்படும். கடைசியில் நீங்கள் நிஷ்காமமானவராக (எதையும் வேண்டாதவராக) ஆகிவிடுவீர்கள். இவ்வாறாக நீங்கள் துர்லபமாகிய (எளிதில் கிடைக்காத) ஸாயுஜ்ய முக்திநிலையை (இறைவனுடன் ஒன்றிவிடுதல்) அடைவீர்கள். அகண்டமான சாந்தியும் திருப்தியும் உங்கள் இதயத்தை நிரப்பும்.

153 இக்காரணம்பற்றி, பரமார்த்த சுகத்தை அனுபவிக்க விரும்பும் பக்தர்கள் இந்த அத்தியாயத்தைத் திரும்பத் திரும்பப் பாராயணம் செய்யவேண்டும்.

154 அம்மாதிரியான பாராயணம் சித்தத்தைத் தூய்மைப்படுத்தி ஆன்மீக நல்வாழ்வை அளிக்கும். விரும்பாதவைகளும் இன்னல்களும் விரட்டியடிக்கப்படும்; விரும்பினவும் நன்மைகளும் விளையும். பாபாவினுடைய அற்புதமான சக்தியையும் எல்லாரும் (அம்மாதிரியான பாராயணத்தால்) அனுபவிக்கலாம்.

155 ஹேமாட் பந்த் ஸாயீயின் பொற்கமலப் பாதங்களை சரணடைகின்றேன். அடுத்த அத்தியாயம் மிகப் புனிதமானது; குரு சிஷ்ய உறவின் மஹிமையையும் எவ்வாறு ஒரு குருபுத்திரர் தம் குரு 'கோலப்பின்ஃ தரிசனம் பெற்றார் என்பதையும் விவரிக்கும்.

156 எவ்வளவு துன்பம் தரும் சோதனையாக இருந்தாலும், ஒரு சிஷ்யன் தன் குருதேவரைத் துறந்துவிடக்கூடாது. இந்த நெறியை, பிரத்யக்ஷமான அனுபவத்தை அளித்து, அவரவர் குருவின்மீது அவரவருக்கு உண்டான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் ஸாயீ திடப்படுத்தினார்.

157 பாதங்களில் பணிவதற்கு வந்த அத்தனை பக்தர்களுக்கும், தமக்குப் பதிலாக அவரவர்களின் குருவை தரிசனம் செய்யும் அற்புதமான அனுபவத்தையளித்தார். சிலருக்கு ஒரு வழி; சிலருக்கு வேறுவழி. ஆயினும், ஒவ்வொருவருக்கும் சொந்த குருவின்மீது உண்டான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் திடப்படுத்தினார்.


எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'ஸ்ரீ ஸாயீ மஹிமை வர்ணனைஃ என்னும் பதினொன்றாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.