Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
அத்தியாயம் - 66. ஸ்ரீராமநவமி உற்சவம்ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். 1 பாடுபடுவது ஆன்மீக லாபத்திற்காகவோ உலகியல் சுபிக்ஷத்திற்காகவோ எதற்காக இருப்பினும் சரி, எங்கு ஸத்குரு படகோட்டியாக இருக்கிறாரோ அங்கு அவரே படகை அக்கரை சேர்க்கிறார். 2 ஸத்குரு என்ற வார்த்தை உள்ளத்தைக் கிள்ளும்போதே ஸாயீ மனக்கண்முன் தோன்றுகிறார். நிஜமாகவே என்முன் தோன்றித் தம்முடைய வரம் நல்கும் கரத்தை என் இதயத்தின்மீது வைக்கிறார். 3 அவருடைய வரம் தரும் கரம், துனியிருந்து வந்த சாம்பலுடன் என்னுடைய நெற்றியில் படும்போது இதயம் ஆனந்தத்தால் பொங்குகிறது; அன்பினால் கண்ணீர் ஆறாகப் பெருகுகிறது. 4 குருவினுடைய ஹஸ்த ஸ்பரிசம் (கையால் தொடுதல்) பிரளயகாலத்து அக்கினியாலும் அழிக்கமுடியாத சூக்கும1 சரீரத்தை அழித்துவிடும் அற்புதசக்தி வாய்ந்தது; கரம் தீண்டுவதாலேயே சூக்கும சரீரம் சாம்பலாகிவிடுகிறது. 5 கடவுளைப்பற்றியோ புராணங்களைப்பற்றியோ தப்பித்தவறி ஏதாவது காதில் விழுந்தாலே தலைவ வருபவர்களுக்கும் அல்லது உடனே வெடித்துச் சிதறிப் பிதற்றும் நாஸ்திகர்களுக்குங்கூட, அது (குருவினுடைய கரம் தீண்டல்) சாந்தியை அளிக்கும். 6 தாமரை போன்ற தம் கையை அவர் நம் தலையின்மீது வைக்கும்போது, பலஜன்மங்களாகப் பரிபக்குவம் அடைந்த மலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது; ஸாயீயின் அன்பார்ந்த பக்தர்கள் தூய்மையடைகின்றனர். 7 அவருடைய சுந்தரமான உருவத்தின்மேல் பார்வை படும்போது பரவசத்தால் தொண்டை அடைக்கிறது; ஆனந்தக்கண்ணீர் பெருகுகிறது; இதயத்தில் அஷ்டபா(ஆஏஅ)வம்2 எழுகிறது. 8 'நானே அதுஃ என்னும் பா(ஆஏஅ)வம் எழுப்பப்பட்டு, நிஜமான ஆனந்தத்தை உள்ளிருந்து மலரச் செய்கிறது. நான்-நீ என்னும் வேறுபாட்டை முழுவதும் அழித்து, முழு முதற்பொருளோடு ஐக்கியமாகிவிடுவதைக் கொண்டாடுகிறது. 9 எந்தப் போதியையும்1 புராணத்தையும் படித்தாலும் ஒவ்வொரு கட்டத்திலும் ஸத்குருவின் ஞாபகமே வருகிறது. ஆகவே, ஸாயீதான் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் தோன்றித் தம்முடைய காதையையே நம்மைப் பாராயணம் செய்யவைக்கிறார். 10 ஸ்ரீமத் பாகவதம் கேட்கலாம் என்று உட்கார்ந்தால், உத்தவகீதையை2 பக்தர்களின் நன்மைக்காகப் பாடும் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா, நகத்திருந்து சிகைவரை ஸாயீயாகவே காட்சியளிக்கிறார். 11 ஒரு விஷயத்தைத் தெளிவாக விளக்க முயலும்போது, சாதாரணப்பேச்சிலேயே திடீரென்று ஸாயீயினுடைய கதை ஏதாவதொன்று ஞாபகத்திற்கு வருகிறது. 12 எழுதவேண்டுமென்ற ஸங்கல்பத்துடன் ஒரு தாள் காகிதத்தை எடுக்கிறேன்; ஆனால், ஒரு அக்ஷரமும் வெளிவருவதில்லை. எனினும், ஸாயீயே அவருடைய அருளால் என்னை எழுத உணர்வூட்டும்போது, எழுதுகிறேன்; எழுதுகிறேன்; எழுதிக்கொண்டே யிருக்கிறேன். 13 எப்பொழுதெல்லாம் அஹங்காரம் தலைதூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் அவருடைய கையால் அதை எழும்பமுடியாமல் அழுத்திவிடுகிறார். அத்தோடுமட்டுமல்லாமல், தம்முடைய சக்தியை சிஷ்யனின்மீது பாய்ச்சி, அவனை அருளாளனாக ஆக்கிவிடுகிறார். 14 மனத்தாலும் வாக்காலும் செய்கைகளாலும் ஸாயீபாதங்களை முழுமையாக சரணடைந்துவிட்டால், அறம், பொருள், இன்பம், வீடு இவை நான்கும் நம்மைத் தாமாகவே வந்தடைகின்றன. 15 கர்மம், ஞானம், யோகம், பக்தி இந்நான்கும் இறைவனை அடையும் வழிகளாகும். இந்நான்கு பாதைகளும் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச்சென்றாலும், கடைசியில் போய்ச்சேருமிடம் ஒன்றே; ஈசுவரப் பிராப்தியே (இறைவனை அடைவதே)õ 16 பக்திமார்க்கம் பள்ளம் படுகுழிகள் நிறைந்த கருவேலங்காட்டைக் கடந்து செல்வதுபோலக் கடினமானது. ஒருவரே நடக்கக்கூடிய ஒற்றையடிப் பாதையாக இருந்தாலும், நேராக இறைவனின் அண்மைக்கு அழைத்துச் செல்லும். 17 இதைக் கடப்பதற்கு சுலபமான வழி, முட்களைத் தவிர்த்து ஒவ்வொரு அடியாக பயமின்றி எடுத்துவைக்க வேண்டியதுதான். இதையே அன்னையாகிய குரு தெளிவாக எச்சரிக்கிறார். 18 மனமென்னும் செழிப்பும் வீரியமுமுள்ள மண்ணில் பக்தி என்னும் நீரைப் பாய்ச்சினால், வைராக்கியம் முளைக்கிறது; ஞானம் மலர்கிறது; பரவசநிலை பீறிட்டு கைவல்யம் (வீடுபேறு-மோட்சம்) கைகூடுகிறது. ஜனனமும் மரணமும் நிச்சயமாக விலகிவிடுகின்றன. 19 மூல பரமாத்மா தனித்துச் செயல்படக்கூடிய ஸித்திகள் நிறைந்தது. அதுவே ஸத், சித், ஆனந்தம் என்னும் முக்கூட்டான சக்தி. பக்தர்களுக்கு போதனை செய்வதற்காக அவதாரம் செய்கிறது. 20 பிரம்மம் ஸச்சிதானந்தமாக மாறும்போது, மாயையும் செயலாற்ற ஆரம்பித்து ஸத்துவம், ராஜஸம், தாமஸம் ஆகிய குணங்களின்மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. 21 களிமண் ஓர் உருவமாக வடிக்கப்படும்போது, பானை என்று பெயர் பெறுகிறது. பானை உடைந்துவிட்டால், பெயரும் உருவமும் அடையாளமும் அதைவிட்டு அகன்றுவிடுகின்றன. 22 இவ்வுலகமே மாயையிருந்து உருவானதுதான். இவ்விரண்டுக்குமுள்ள உறவு, காரண காரிய உறவுதான். உண்மையில், மாயையே ஓர் உருவத்தை ஏற்றுக்கொண்டு இவ்வுலகமாகக் காட்சியளிக்கிறது. 23 இவ்வுலகம் தோன்றுவதற்குமுன், மாயையின் நிலை என்ன என்பதைச் சிந்தித்தால், அது அவள் தோன்றாத நிலை, பரமாத்மாவுடன் ஒன்றுபட்ட, உருவெடுக்காத நிலை. 24 உருவெடுத்த நிலையோ உருவெடுக்காத நிலையோ மாயை எப்பொழுதுமே பரமாத்ம ரூபம்தான். ஆகவே, இந்த மாயை பரமாத்மாவிருந்து பிரிக்கமுடியாத, பரமாத்மாவின் ஒரு பாகமே. 25 மாயை, தமோ குணத்திருந்து உயிரில்லாதவையும் நகரமுடியாதவையுமான பொருள்களை சிருஷ்டி செய்தது. இது மாயையின் முதல் சிருஷ்டி காரியம். 26 பிறகு, மாயையினுடைய ரஜோகுணம் பரமாத்மாவின் 'சித்ஃ குணத்துடன் சேர்ந்து உணர்வுள்ள, நகரக்கூடிய ஜீவராசிகளை, இக் கூட்டுச்சக்தி வெளிப்படும் வகையில் சிருஷ்டி செய்தது. 27 மாயையின் ஸத்துவ குணம் புத்தியை சிருஷ்டி செய்தது. புத்தி ஆனந்தத்தில் ஊடுருவி, சிருஷ்டி என்னும் விளையாட்டைப் பூரணமாக்கியது. 28 இவ்வாறாக, மாயை பலவிதமாக மாற்றங்கள் அடையக்கூடியவள். அவள் அசைந்து செயல்பட ஆரம்பிக்காவிட்டால், முக்குணங்களும் தோன்றாநிலையிலேயே இருந்துவிடுகின்றன; சிருஷ்டி என்று ஏதும் நடப்பதில்லை. 29 முக்குணங்களுடன் செயல்பட ஆரம்பிக்கும்வரை மாயை தோன்றாநிலையிலேயே இருக்கிறாள். தானே ஒடுங்கிய நிலையில் இருக்கும்வரை அவள் தோன்றாநிலையிலேயே இருக்கமுடியும் என்று அறிந்துகொள்ள வேண்டும். 30 மாயை பரமாத்மாவின் சிருஷ்டி; உலகம் மாயையின் சிருஷ்டி. ''பார்ப்பதனைத்தும் பிரம்மமேஃஃ என்னும் சொற்றொடருக்கு, பரமாத்மா, மாயை, இவ்வுலகம், இம்மூன்றும் ஒன்றே என்றுதான் பொருள்கொள்ளவேண்டும். 31 இந்த ஒருமையை நாம் அனுபவிப்பது எப்படியென்று தெரிந்துகொள்ளத் தீவிர ஆர்வமுள்ளவர்கள் வேதங்களைப் பயிலவேண்டும். 32 வேதங்களையும் உபநிஷதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் படித்தால், 'நித்தியமெது? அநிந்தியமெது?ஃ என்னும் பாகுபாட்டுஞானம் கிடைக்கும். 'குருவினுடைய திருவாய்மொழியே வேதாந்தம்ஃ என்னும் அனுபவமும் கிடைக்கும்; பரமானந்தம் கிடைக்கும். 33 தம் பக்தர்களின் இல்லங்களில் உணவுக்கும் உடைக்கும் எந்தவிதமான பற்றாக்குறையும் இருக்காது என்று ஸாயீ உறுதிமொழி கொடுத்திருப்பது ஸாயீபக்தர்களுக்கு எப்பொழுதுமே தெரிந்த விஷயந்தான். 34 ''வேறெந்த சிந்தனையுமில்லாமல் என்னையே நினைந்து யாண்டும் என்னையே உபாஸிக்கும் நித்திய யோகிகளுக்கு யோகக்ஷேமத்தை அளிப்பதை என்னுடைய ஸத்தியப் பிரமாணமாகக் கருதுகிறேன்.ஃஃ 35 ஸ்ரீமத் பகவத் கீதையின் இந்த உறுதிமொழியைப் பேருண்மையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஸாயீ திருவாய்மொழிகிறார். உணவுக்கும் உடைக்கும் பஞ்சமே இல்லை; அவற்றின் பின்னால் அலைய வேண்டா. 36 இறைவனின் அரசசபையில் கௌரவம் தேடுங்கள்; அவருடைய அருளையே கெஞ்சி வேண்டுங்கள்; அவருடைய பிரஸாதத்திற்காகவே முயற்சி செய்யுங்கள்; உலகியல் புகழ் தேடாதீர். 37 பாராட்டுபவர்களுடைய தலையசைப்பை நாடி உன்னுடைய கவனம் ஏன் திரும்ப வேண்டும்? உன் இஷ்ட தெய்வமன்றோ காருண்யத்தினால் உருகி வியர்வையைத் 'தபதபஃவென்று பெருக்க வேண்டும்õ 38 அந்த லட்சியத்திற்கு நீ எவ்வளவு வேண்டுமானாலும் பாடுபடுõ புலன்கள் அனைத்தும் பக்திப் பெருக்கால் மூழ்கடிக்கப்பட்டு, புலனின்ப நாட்டங்கள் எல்லாம் பக்தியுடன் கூடிய வழிபாடாக மாற்றம் எய்தட்டும்õ ஓ, அந்நிலை எவ்வளவு அற்புதமானதுõ 39 இம்மாதிரியான வழிபாடு இதர வழிகளில் ஆசை வைக்காது என்றென்றும் நிலைக்கட்டும். மனம் மற்ற விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, என்னுடைய நாமஸ்மரணத்திலேயே நிலைத்து நிற்கட்டும். 40 மனம் அந்நிலையில் உடருந்தும் குடும்பத் தொல்லைகளிருந்தும் பணத்தாசையிருந்தும் விடுதலை பெற்று ஆனந்தமயமாக இருக்கும்; ஸமதரிசனத்தையும் பிரசாந்தத்தையும் (பேரமைதியையும்) அடைந்து, கடைசியாக பரிபூரணத்துவத்தையும் அடையும். 41 சாந்தி நிறைந்த மனம் ஞானிகளின் ஸத் ஸங்கத்தில் இருக்கிறோம் என்பதற்கு அறிகுறி. ஒரு பொருளிருந்து இன்னொரு பொருளுக்கு ஸதா அலையும் ஓய்வில்லாத மனத்தை இறைவனுடன் ஒன்றியதாக எப்படிக் கொள்ளமுடியும்? 42 ஆகவே, கதை கேட்பவர்களேõ இப்பிரவசனத்தை பக்தியுடன் கேட்கும்போது முழு கவனத்தையும் கேள்வியின்மேல் வையுங்கள். ஸாயீயின் இச் சரித்திரத்தைக் கேட்டு உங்களுடைய மனம் பக்தி நிரம்பியதாக ஆகட்டும். 43 காதை முன்னேறும்போது திருப்தியைக் கொண்டுவரும்; சஞ்சலமான மனம் விச்ராந்தியடையும்; எல்லாக் கொந்தளிப்புகளும் அடங்கும்; சாந்தியும் சந்தோஷமும் ஆட்சி செய்யும். 44 இப்பொழுது, நாம் ஏற்கெனவே ஆரம்பித்த, மசூதி ஜீரணோத்தாரணம்பற்றியும் ஸ்ரீராமஜனன கதாகீர்த்தனம்பற்றியுமான காதையைத் தொடர்வோம். 45 கோபால் குண்ட் என்ற பெயர்கொண்ட பக்தர் ஒருவர் இருந்தார். அவர் இடைவிடாது பாபாவின் நாமத்தை ஜபம் செய்துவந்த பரமபக்தர். 46 அவருக்குப் புத்திரபாக்கியம் இல்லாதிருந்தது. ஸாயீயினுடைய ஆசீர்வாதத்தால் அவருக்கு ஒரு புத்திர ரத்தினம் பிறந்தான். அவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். 47 சிர்டீயில் கிராம மக்கள் அனைவரும் உல்லாசப்படும் வகையில் ஒவ்வொரு வருஷமும் ஒரு திருவிழா அல்லது உருஸ்1 பண்டிகை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் உதித்தது. 48 தாத்யா கோதே, தாதா கோதே, மாதவராவ் தேச்பாண்டே போன்ற கிராம முக்கியஸ்தர்களும் இந்த யோசனையை மிகவும் விரும்பி அதற்குண்டான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். 49 இம்மாதிரித் திருவிழாக்கள் கொண்டாடுவது என்பது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது; ஜில்லா கலெக்டரிடம் அனுமதி பெறவேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. 50 கலெக்டருடைய அனுமதி பெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டபோது, கிராமத்தின் கணக்கர் காழ்ப்புணர்வோடு விஷமத்தனமாக அதை எதிர்த்தார்; தடங்கல்களை ஏற்படுத்தினார். 51 கிராமத்துக் கணக்கர் எழுப்பிய ஆட்சேபணைகளால், சிர்டீயில் திருவிழா கொண்டாடப்படக்கூடாது என்று கலெக்டர் ஆணையிட்டுவிட்டார். 52 ஆனால், பாபாவே சிர்டீயில் உருஸ் திருவிழா நடத்தும் யோசனையை விரும்பி, அவருடைய சம்மதத்தையும் ஆசீர்வாதத்தையும் அளித்திருந்தார். 53 ஆகவே, கிராம மக்கள் மனவுறுதியுடன் இவ்விஷயமாகத் தொடர்முயற்சி எடுத்தனர்; படாதபாடுபட்டனர். அவர்கள் எல்லாரையும் திருப்திசெய்யும் வகையில், முன்னர்ப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அதிகாரிகளால் ரத்துசெய்யப்பட்டது. 54 அதிருந்து, பாபாவினுடைய சம்மதத்துடன் இந்த வருடாந்திர உருஸ் திருவிழாவை ஸ்ரீராமநவமியன்று கொண்டாடுவது என்று முடிவுசெய்யப்பட்டது. தாத்யா கோதே எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். இத் திருவிழாவிற்குத் தற்காலத்திலும் மக்கள் திரள்திரளாக வருகிறார்கள். 55 ஸ்ரீராமநவமியன்று மேளதாளத்தோடு வாத்தியங்களும் முழங்க, பூஜையும் பஜனையும் செய்யப்படுகின்றன. உற்சவத்தில் கலந்துகொள்ள மக்கள் எல்லா திசைகளிருந்தும் வந்து சிர்டீயில் குவிகிறார்கள். 56 ஒவ்வொரு வருடமும் இரண்டு புதிய கொடிகள் மரியாதையாகச் சடங்குகளுடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, நிரந்தரமாகப் பறந்துகொண் டிருக்குமாறு மசூதியின் உச்சியில் கட்டப்படும். 57 இவ்விரண்டு கொடிகளில் ஒன்று நிமோண்கருடையது1; மற்றொன்று தாமு அண்ணாவினுடையது2. இரண்டும் கோலாகலமாக ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, மசூதியின் உச்சியில் கட்டப்பட்டுப் பட்டொளி வீசிப் பறக்கும். 58 சிர்டீக்குப் பெருமையும் ஆனந்தமும் அளிக்கும் ஸ்ரீராமநவமி கொண்டாடும் யோசனை உருஸ் திருவிழாவிருந்து எப்படி உதித்தது என்னும் சுவாரசியமான விவரத்தை இப்பொழுது கேளுங்கள். 59 1911ஆம் ஆண்டில் முதன்முதலாக ஸ்ரீராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது. இந்த யோசனை உருஸ் திருவிழாவிருந்து உதித்ததே. தொடர்ச்சியாகத் தடங்கல் ஏதும் இன்றி இன்றும் ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது. 60 இந்த யோசனை (ஸ்ரீராமஜன்ம உற்சவம்) முதன்முதல், பிரபலமான கீர்த்தங்கர் கிருஷ்ண3 ஜாகேச்வர் பீஷ்மா என்பவரால் கருத்துருவாக்கப்பட்டது. எல்லாருடைய நலனுக்காகவும் ஸ்ரீராமஜன்ம உற்சவம் கொண்டாடப்படவேண்டும் என்று அவர் நினைத்தார். 61 அதுவரை உருஸ்4 திருவிழா மட்டுமே ஸ்ரீராமஜன்ம தினத்தன்று வருடாவருடம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்தது. ஸ்ரீராமஜன்மோற்சவம் அவ்வருடம் (1911) கொண்டாடுவது என்னும் அற்புதமான யோசனை இதிருந்தே எழுந்தது. 62 பீஷ்மா ஒருநாள் வாடாவில் தெளிந்த மனத்துடன் ஓய்வெடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். காகா மஹாஜனி5 அந்நேரத்தில் பூஜைக்கு வேண்டிய சாமான்களுடன் மசூதிக்குப் போகத் தயார் செய்துகொண் டிருந்தார். 63 ஸாயீ தரிசனம் செய்வதற்காகவும் உருஸ் பண்டிகையின் கோலாகலத்தை அனுபவிப்பதற்காகவும் காகா சிர்டீக்கு ஒருநாள் முன்னதாகவே வந்துவிடுவார். 64 இதை ஒரு உசிதமான நேரமாகக் கருதி, பீஷ்மா காகாவைக் கேட்டார், ''என்னுடைய மனத்தில் ஓர் அருமையான யோசனை தோன்றியிருக்கிறது. நீர் அதை நடத்திக்காட்ட உதவி செய்வீரா?-- 65 ''உருஸ் பண்டிகை இங்கு வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. அந்த நாள் ஸ்ரீராமஜன்ம தினமாகவும் இருப்பதால், மேற்கொண்டு ஏதும் பிரயாசைப்படாமலேயே ஸ்ரீராமஜன்மோற்சவத்தையும் கொண்டாடுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறதுஃஃ. 66 காகா இந்த யோசனையை விரும்பினார். ''பாபாவினுடைய அனுமதியைப் பெறவேண்டும். எல்லாமே அவருடைய ஆக்ஞையில்தான் இருக்கிறது. ஆக்ஞை கிடைத்துவிட்டால் அதன் பிறகு தடங்கலோ தாமதமோ ஏதும் இருக்காதுஃஃ. 67 ஆனால், ஸ்ரீராமஜன்ம உற்சவத்தைக் கொண்டாடவேண்டுமென்றால், கதாகாலட்சேபத்திற்கு ஏற்பாடு செய்யப்படவேண்டுமே? இந்தக் குக்கிராமத்தில் காலட்சேபம் செய்யும் திறமையுள்ள ஹரிதாஸர் எப்படிக் கிடைப்பார்? இது ஒரு பிரச்சினையாக இருந்தது. 68 பீஷ்மா இவ்வாறு சொன்னார், ''நான் கதாகாலட்சேபம் செய்கிறேன்; நீங்கள் ஆர்மோனியம் வாசியுங்கள்; ராதாகிருஷ்ணபாயீ1 இந்நிகழ்ச்சிக்குப் பிரஸாதமாக சுக்குவெல்ல உருண்டை செய்துவிடுவார்.-- 69 ''வாருங்கள், பாபாவிடம் போகலாம்; சுபகரமான காரியங்களில் தாமதம் எப்பொழுதுமே பிரச்சினைகளை விளைவிக்கும்; சுபமான காரியத்தில் சீக்கிரமாகச் செயல்படுவது சுலபமாக வெற்றியைத் தரும்.-- 70 ''வாருங்கள், இப்பொழுதே போய்க் கதாகாலட்சேபம் செய்வதற்கு பாபாவிடம் அனுமதி கேட்கலாம்ஃஃ என்று சொல்க்கொண்டே இருவரும் மசூதியை நோக்கிச் சென்றனர். 71 காகா பூஜையைச் செய்துகொண் டிருந்தபோது பாபாவே முதற்கேள்வியாகக் கேட்டார், ''ஆக, வாடாவில் என்ன நடந்தது?ஃஃ ஆனால் அந்நேரத்தில், சம்பந்தப்பட்ட கேள்வியை எழுப்பவேண்டுமென்று காகாவுக்குத் தோன்றவில்லை. 72 உடனே பாபா கேள்வியின் உருவத்தை மாற்றி, ''புவா, நீர் என்ன சொல்கிறீர்?ஃஃ என்று பீஷ்மாவைக் கேட்டார். 73 காகாவுக்கு உடனே விஷயம் ஞாபகத்திற்கு வந்து, அவர்கள் என்ன செய்ய விரும்பினார்கள் என்பதை எடுத்துச் சொன்னார். பாபா அவர்களுடைய யோசனைக்கு அனுமதி தந்தார்; உற்சவம் நிச்சயமாகிவிட்டது. 74 அடுத்தநாள் காலையில், பாபா லெண்டிக்குக் கிளம்பிய பிறகு, காலட்சேபத்திற்கு வேண்டிய ஸம்பிரதாயமான ஏற்பாடுகளுக்கு இடையே ஸபாமண்டபத்தில் ஒரு தொட்டிலும் கட்டப்பட்டது. 75 உரிய நேரத்தில் காலட்சேபத்தைக் கேட்பதற்கு மக்கள் கூடினர். பாபா லெண்டியிருந்து2 திரும்பிவந்ததும் பீஷ்மா காலட்சேபம் செய்வதற்கு எழுந்தார். காகா மஹாஜனி ஆர்மோனியப் பெட்டியின் அருகில் அமர்ந்தார். பாபா திடீரென்று காகாவை அழைத்துவரச் சொன்னார். 76 'பாபா உங்களைக் கூப்பிடுகிறார்ஃ என்று செய்தி வந்தது. காகா இதைக் கேட்டு பயந்துபோனார். ஏன் தம்முடைய மனத்தில் விபரீதமான எண்ணங்கள் தோன்றுகின்றன என்று அவருக்குப் புரியவில்லை; எனினும் காலட்சேபத்துக்குக் குந்தகம் ஏதும் நேராது என்று நம்பிக்கை கொண்டார். 77 பாபாவினுடைய அழைப்பைப்பற்றிக் கேட்டபோது பயத்தால் காகாவின் தொடைகள் நடுங்கின. 'பாபா ஏன் இவ்வாறு மனக்கொந்தளிப்பு அடைய வேண்டும்? 78 நரம்புத் தளர்ச்சியினால் கால் கனத்துப்போக, மசூதியின் படிகளைத் தடுமாறிக்கொண்டே ஏறினார். 79 பாபா அவரை, 'தொட்டில் எதற்காகக் கட்டப்பட்டிருக்கிறதுஃ என்று வினவினார். கதாகாலட்சேபத்தைப்பற்றியும் கொண்டாட்டத்தின் விவரங்களும் சுருக்கமாகச் சொல்லப்பட்டவுடன் பாபா மகிழ்ச்சியடைந்தார். 80 பாபா, அருகிருந்த சுவர் மாடத்திருந்து ஓர் அழகான மாலையை எடுத்துக் காகாவின் கழுத்திலணிவித்தார். பீஷ்மா அணிவதற்காக இன்னொரு மாலையையும் அவரிடம் கொடுத்தார். 81 பாபா தொட்டிலைப்பற்றிக் கேட்ட கேள்வி எல்லாரையும் சஞ்சலப்பட வைத்தது. ஆனால் பாபா காகாவுக்கு மாலையணிவித்ததைப் பார்த்ததும் எல்லாரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். 82 பீஷ்மா கல்விகேள்விகளில் வல்லவர்; இதிஹாஸ புராணங்களை நன்கு அறிந்தவர். ஆகையால், அவருடைய காலட்சேபம் மிகவும் ரசிக்கக்கூடியதாக அமைந்தது. கேட்டவர்கள் அபரிமிதமான ஆனந்தமடைந்தனர். 83 பாபாவின் முகம் பிரஸன்ன வதனம் ஆயிற்று (மலர்ந்தது). எவ்விதமாக அனுமதி தந்தாரோ, அவ்விதமாகவே பக்தர்களை பஜனையுடனும் காலட்சேபத்துடனும் கொண்டாட்டத்தை நடத்தும்படி செய்தார். 84 காலட்சேபத்தில் ஸ்ரீராமஜனனக் கட்டம் வந்தபோது குலால் என்னும் வர்ணப்பொடி எங்கும் தூவப்பட்டது. அதில் சிறிது பாபாவின் கண்ணில் விழுந்துவிட்டதால், கௌஸல்யாவின் அரண்மனையில் குழந்தையாக இருப்பதற்குப் பதிலாக, பாபா நரஸிம்ஹ அவதாரம் எடுத்துவிட்டார். 85 ஆனால், வர்ணப்பொடி கண்ணில் விழுந்ததென்னவோ ஒரு சாக்குதான். ஸ்ரீராமாவதாரத்தில் மஹாவிஷ்ணு ராவணனை வதம் செய்து ராக்ஷஸர்களின் கொடூரச் செயல்களை அழித்ததை, காலட்சேபம் நடந்த நேரத்தில் பிரதிபப்பதற்காகவே அவர் கோபாவேசம் கொண்டார். 86 உக்கிர நரஸிம்ஹரைப்போல் திடீரென்று கோபம் பொங்கி எழுந்தது; சாபங்களையும் வசவுகளையும் சரமாரியாகப் பொழிந்து தள்ளிவிட்டார். 87 தொட்டில் தூள்தூளாகப் போகிறதென்று நினைத்து ராதாகிருஷ்ணபாயி மிகவும் அதிர்ந்துபோய்விட்டார். எப்படி அந்தத் தொட்டிலைக் காப்பாற்றுவது என்பது அவருக்குப் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. 88 தொட்டிலைச் சீக்கிரமாக அவிழ்த்துவிடவேண்டுமென்று அவசரப்படுத்தித் திரும்பத் திரும்பத் தொந்தரவு செய்தார். ஆகவே, காகா மஹாஜனி தொட்டிலை அவிழ்ப்பதற்குச் சென்றார். 89 இது பாபாவை மிகவும் எரிச்சலூட்டியது. அவர் பயங்கரமாகவும் காகாவை அடிக்கப்போவது போலவும் ஆக்ரோஷத்துடன் தொட்டிலை நோக்கி ஓடினார். தொட்டிலைக் கழற்றும் முயற்சி நிறுத்தப்பட்டது; பாபாவும் அமைதியடைந்தார். 90 பின்னர், பிற்பகல் தொட்டிலை அவிழ்க்க அனுமதி வேண்டப்பட்டபோது பாபா 91 'இன்னும் என்ன தேவை இருக்கமுடியும்? ஆனால், ஸாயீயின் திருவாய்மொழி என்றுமே சோடைபோனதில்லையே?ஃ என்று நான் யோசித்தேன். உற்சவம் இன்னும் ஸம்பூரணமாகவில்லை என்று என் மனத்துள் அப்போதுதான் உதித்தது. 92 அன்றைய உற்சவம் நடந்துவிட்டது; ஆனால், மறுநாள் 'கோபாலகாலாஃ1 நடக்காமல் உற்சவம் முடிந்துவிட்டது என்று எவ்வாறு சொல்ல முடியும்? 93 இப்படியாக, பஜனை, கோபாலகாலா எல்லாம் அடுத்தநாள் கொண்டாடப்பட்டன. இதெல்லாம் நடந்து முடிந்தபிறகு பாபா தொட்டிலை அவிழ்த்துவிட அனுமதியளித்தார். 94 அடுத்த வருடம் காலட்சேபம் செய்ய பீஷ்மா கிடைக்கவில்லை. ஆகவே, பாலபுவா ஸாதார்கர் காலட்சேபம் செய்வதற்கு அணுகப்பட்டார். ஆனால், அவரோ 'பிர்ஹாட் ஸித்த கவடேஃ என்னும் ஊருக்குக் காலட்சேபத்திற்காகப் போகவேண்டியிருந்ததால் அவரும் கிடைக்கவில்லை. 95 ஆகவே, காகா மஹாஜனி, நவீன துகாராம் என்று பிரஸித்தி பெற்ற பாலபுவா பஜனியை அழைத்துக்கொண்டு வந்தார். ஸ்ரீராமஜன்ம உற்சவத்தை பாலபுவா பஜனி நடத்திவைத்தார். 96 அவர் கிடைக்காமல் போயிருந்தாலும் காகா மஹாஜனியே காலட்சேபம் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண் டிருப்பார். அவருக்கு தாஸகணு இயற்றிய ஸ்ரீராமஜனனக் காதைச் செய்யுள்கள் மனப்பாடம். 97 மூன்றாவது வருடம் பாலபுவா ஸாதார்கரே சரியான சந்தர்ப்பத்தில் சிர்டீக்கு வந்து சேர்ந்தார். இது எப்படி நடந்தது என்பதை கவனமாகக் கேளுங்கள். 98 ஸாயீ பாபாவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபிறகு பாபாவை தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவல் அவர் மனத்தெழுந்தது. அவருக்கு வழித்துணைக்கு ஒருவர் தேவை; துணை எப்படிக் கிடைக்கும் என்பதே அவருடைய சிந்தனையாக இருந்தது. 99 பாலபுவா ஒரு ஹரிதாஸர் (கதாகாலட்சேபம்/கீர்த்தனம் செய்பவர்); ஸாதாரா என்னும் ஊரில் பிறந்தவர்; ஆனால், அச்சமயத்தில் அவர் பம்பாய் நகரத்திலுள்ள பரேல் வசித்துவந்தார். 100 ஸாதாரா ஜில்லாவில் பிர்ஹாட் ஸித்த கவடே என்னும் தேவஸ்தானம் ஒன்று இருந்தது. ஸ்ரீராமநவமியன்று அங்கே கதாகாலட்சேபம் செய்வதற்காக ஸாதார்கர் வருடாந்திரமாக ஒரு மானியம் பெற்றுக்கொண் டிருந்தார். 101 அந்த தேவஸ்தானத்துடன் அவருக்கு வருடாந்திரமாக இரண்டு உற்சவங்களுக்கு சம்பந்தம் இருந்தது; ஒன்று ஆடிமாத ஏகாதசி, இரண்டாவது சித்திரை மாதத்தின் ஸ்ரீராமநவமி. 102 மொகலாயச் சக்கரவர்த்தி (அக்பர்) ஏற்படுத்திய சாசனத்தின்படி நூற்று இருபத்து நான்கு ரூபாய், செலவுகளுக்காக அங்கீகாரம் செய்யப்பட்டிருந்தது. மூலஸமஸ்தானத்திருந்து முறைப்படி இத்தொகை இந்தக் கோயின் குறிப்பிட்ட 103 பாலபுவாவுக்கு இவ்விரண்டு உற்சவங்களுக்காக முப்பது ரூபாய் ஸன்மானமாக அளிக்கப்பட்டது. ஆனால், அவ்வருடம் கவடேயில் காலரா நோய் கண்டு, கிராமமக்கள் அவதிப்பட்டனர். 104 அதனால், ஸ்ரீராமநவமி உற்சவம் கொண்டாடமுடியவில்லை. மக்கள் கிராமத்தைக் காசெய்துவிட்டு வெளியில் போய்விட்டதாகவும் அடுத்த வருடம் வரச்சொல்யும் புவாவுக்குக் கடிதம் வந்தது. 105 சுருங்கச் சொன்னால், ஸ்ரீராமனுக்கு ஸேவை செய்யும் பாக்கியமும் ஸன்மானமும் புவாவிற்கு அவ்வருடம் கிடைக்காமல் போய்விட்டன. ஆனால், அது அவருக்கு சிர்டீ செல்வதற்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. ஆகவே, புவா ஹரி ஸீதாராம் தீக்ஷிதரைச் சந்தித்தார். 106 தீக்ஷிதர் பாபாவின் பரமபக்தராதலால், அவர் மனது வைத்தால் சிர்டீக்குப் போகும் விருப்பம் நிறைவேறும்; சொந்தக் காரியமும் நடக்கும்; சுவாமி காரியமும் நடக்கும்; என்று அவர் நினைத்தார். 107 அவர் தீக்ஷிதரிடம் கூறினார், ''இந்த வருடம் எனக்கு ஸன்மானம் கிடைக்காமல் போய்விட்டது. ஆகவே, நான் பாபாவை தரிசனம் செய்வதற்காகவும் கதாகாலட்சேபம் செய்வதற்காகவும் சிர்டீ செல்லவேண்டுமென்று நினைக்கிறேன்.ஃஃ 108 தீக்ஷிதர் பதில் கூறினார், ''ஸன்மானம் கிடைக்குமென்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. கொடுப்பதோ இல்லையோ பாபாவின் கையில்தான் இருக்கிறது. கதாகாலட்சேபம் செய்வதற்கும் பாபாவின் சம்மதம் தேவைõஃஃ 109 இருவரும் இவ்வாறு பேசிக்கொண் டிருந்தபோதே காகா மஹாஜனி அங்கு வந்தார். சற்றும் எதிர்பாராமலேயே அங்கிருந்த அனைவருக்கும் சிர்டீயின் உதி பிரஸாதத்தை அளித்தார். இது சுபசகுனமாகக் கருதப்பட்டது. 110 மஹாஜனி அப்பொழுதுதான் சிர்டீயிருந்து திரும்பியிருந்தார்; சிர்டீயில் அனைவரும் நலம் என்று தெரிவிப்பதற்காக அப்பொழுது அங்கு வந்தார்; சிறிது நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிவிட்டார். 111 தாம் பாபாவை அனுமதி கேட்பதாகவும் அனுமதி கிடைத்தால் நிச்சயமாக அவருக்குத் தெரிவிப்பதாகவும் தீக்ஷிதர் புவாவிடம் பரம பிரீதியுடன் சொன்னார். 112 யாத்திரைச் செலவைப்பற்றிக் கவலைப்படாமல் சிர்டீக்கு வரச்சொல் புவாவுக்கு ஒரு கடிதம் வந்தது; இதற்காக ஒருவர் மனத்தில் சந்தேகங்களை எழும்பிக் கொண்டு தொந்தரவுபடக்கூடாது என்ற குறிப்பும் இருந்தது. 113 சில நாள்களுக்குப் பிறகு தீக்ஷிதர் சிர்டீக்குச் சென்றார்; பாபா தம்முடைய அனுமதியை அளித்தார். பாலபுவா சிர்டீக்கு வந்தார்; யதேஷ்டமாக (மனம் திருப்தியடையும் வரை) ஸாயீ தரிசனம் செய்தார். 114 பாபாவும் மிகுந்த பிரேமையுடன் ஸ்ரீராமநவமி உற்சவத்தைக் கோலாகலமாகக் கதாகாலட்சேபத்துடனும் பண்டிகைக் குதூகலத்துடனும் பாலபுவாவை வைத்துத் தம்முடைய முன்னிலையில் நடத்திக்கொண்டார். 115 பாலபுவாவும் தம்மைப் பொறுத்தவரை எண்ணம் நிறைவேறியதுபற்றி மிக்க மகிழ்ச்சியடைந்தார். பாபாவுக்கும் சந்தோஷம்; எல்லாருடைய மனோரதமும் நிறைவேறியது. 116 புவாவுக்குக் கனத்த ஸம்பாவனை கிடைத்தது. பாபாவின் ஆணைப்படி அவருக்கு நூற்றுமுப்பது ரூபாய் அளிக்கப்பட்டது. புவாவினுடைய மகிழ்ச்சி கரைபுரண்டது. 117 கவடேயில் ஐந்து வருடங்களில் கிடைக்கக்கூடிய வருமானத்தை பாபா ஒரே வருடத்தில் கொடுத்துவிட்டார். பாலபுவாவுக்கு ஏன் சந்தோஷம் பொங்கி பாபாவிடம் விசுவாசம் அதிகரிக்காது? 118 ஆயினும், பின்னர் தாஸகணு சிர்டீக்கு ஒருமுறை வந்தபோது, ஸ்ரீராமநவமி கதாகாலட்சேபப் பொறுப்பு பாபாவின் அனுமதியுடன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 119 அன்றிருந்து இன்றுவரை ஸ்ரீராமஜன்மோற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஏழையிலும் ஏழைகள் உட்பட அனைவரும் ஆனந்தம் அடையுமாறு எல்லாருக்கும் அன்னதானம் செய்யப்படுகிறது. 120 அச்சமயத்தில் ஸமாதி மந்திரின் பிரதான வாயிலுக்கெதிரே மங்கள வாத்தியங்களின் முழக்கங்களுக்கு நடுவில் ஸாயீ நாமம் வானைப்பிளக்குமாறு எழுந்து, அவர்களுடைய மனத்தில் ஆனந்த அலைகளை எழுப்புகிறது. 121 உருஸ் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பித்ததைப்போலவே, கோபால் குண்டுக்கு மசூதியைப் புனருத்தாரணம் செய்து அழகுபடுத்தவேண்டும் என்னும் யோசனையும் மனத்தில் உதித்தது. 122 மசூதி புனருத்தாரணம் செய்யப்படவேண்டுமென்றும் அதையும் தம் கைப்படச் செய்யவேண்டுமென்றும் கோபால் குண்ட் தீர்மானம் செய்தார்; வேலைக்கு வேண்டிய கற்களைத் தயார் செய்தார். 123 ஆனால் கோபால் குண்டுக்கு இந்த ஸேவையைச் செய்யக் கொடுத்துவைக்கவில்லை என்று தெரிகிறது. பிறகு, பாபாவின் விருப்பப்படி இந்த வேலையைச் செய்து முடிக்க ஒரு நல்வாய்ப்பு அமைந்தது. 124 நானாஸாஹேப் சாந்தோர்க்கர் இப்பணியை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றும் காகாஸாஹேப் தீக்ஷிதர் தளம் பரவும் பணியை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றும் பாபா விரும்பியதாக இப்பொழுது தெரிகிறது. 125 சிறிது காலம் கழித்து அது அவ்வாறே நடந்தது. முதல், பக்தர்கள் சோர்ந்து போகும்வரை திரும்பத் திரும்ப அனுமதி கேட்டும் பிரயோஜனமில்லாமல் போயிற்று. மஹால்ஸாபதி பரிந்துரை செய்யுமாறு வேண்டிக்கொள்ளப்பட்டார். இதன் பிறகே பாபா அனுமதி தந்தார். 126 இரவோடு இரவாக தளம் போடப்பட்டது. அடுத்த நாளிருந்தே பாபா ஆஸனமாக ஒரு சிறுமெத்தையை உபயோகிக்க ஆரம்பித்தார். 127 1911ஆம் வருடம் ஒரு ஸபா மண்டபம் கட்டப்பட்டது. ஆனால் ஓõ அது என்னே பகீரதப் பிரயத்தனம்õ என்ன உழைப்புõ எத்தனை தொந்தரவுகள்õ இது போதாதென்று இவ்வேலை அவர்களை பயத்தால் நடுங்கவைத்தது. 128 எப்படியிருப்பினும், இந்த வேலையும் பக்தர்களின் கடுமையான உழைப்பால் அம்முறையிலேயே (மசூதி தளம் பரவிய) அந்தச் சூழ்நிலையிலேயே இரவோடு இரவாக முடிக்கப்பட்டது. 129 பெருமுயற்சியெடுத்து பக்தர்கள் இரவில் இரும்புத்தூண்களை நட்டு நிலைப்படுத்துவார்கள். அடுத்த நாள் காலையில் பாபா தூண்களைப் பிடுங்க முயல்வார். நல்ல சமயமாகப் பார்த்து, பக்தர்கள் மறுபடியும் தூண்களை நிலைப்படுத்துவார்கள். இத் தொடர்முயற்சிகளே அவர்களைச் சோர்வடையச் செய்தன. 130 எல்லாரும் கீழ்ப்பாய்ச்சியை இழுத்துக் கட்டிக்கொண்டு, இரவைப் பகலாக்கி, அவர்களுடைய இதயத்திருந்த ஒரு பெரும் ஆவலைத் தீர்த்துக்கொள்ளக் கடுமையாக உழைத்தனர். 131 முதல் இவ்விடம் (மசூதியின் எதிரில்) ஒரு சிறு முற்றம் அடங்கிய திறந்தவெளியாகவே இருந்தது. ஒரு கொட்டகை கட்டுவதற்குத் தகுதியான இடம் என்று தீக்ஷிதர் கருதினார். 132 எவ்வளவு பணம் செலவானாலும் சரி, என்று தீர்மானம் செய்துகொண்டு இரும்புத் தூண்களையும் இரும்புக் கோணச்சட்டங்களையும் வாங்கினார்கள். இரவு படுத்துக் கொள்வதற்கு பாபா சாவடிக்குச் சென்றுவிட்டார் என்று தெரிந்த பிறகு, அவர்கள் வேலையை முடித்தார்கள். 133 இரவு முழுவதும் பெருமுயற்சி செய்து பக்தர்கள் இரும்புத் தூண்களை நட்டு நிலைப்படுத்துவார்கள். காலையில் சாவடியிருந்து திரும்பிவந்தவுடனே பாபா கம்பங்களைப் பிடுங்க ஆரம்பிப்பார். 134 ஒரு நாள் பாபா கடுங்கோபம் கொண்டார். ஒரு கையால் தாத்யாவின்1 கழுத்தை நெறித்துக்கொண்டே மறுகையால் ஒரு கம்பத்தைப் பிடுங்க முயற்சிசெய்தார். 135 இரும்புத்தூணை பலமாக ஆட்டி அதைப் பிடுங்கிவிட்டார். பிறகு அவர் தாத்யாவினுடைய தலைப்பாகையைப் பறித்து, ஒரு தீக்குச்சியால் அதைக் கொளுத்தி, கோபம் பொங்கக் குழிக்குள் விட்டெறிந்தார். 136 அந்த சமயத்தில் அவருடைய கண்கள் நெருப்புக் கோளங்கள் போல ஜொத்தன. அவருடைய முகத்தை நேருக்குநேராக யாரால் பார்க்க முடிந்தது? எல்லாருமே நடுநடுங்கிப் போனார்கள். 137 சட்டென்று தம்முடைய பாக்கெட்டில் கையைவிட்டு, ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து, சுபகாரியம் என்று குறிப்பளிப்பது போலக் குழியில் வீசி எறிந்தார். 138 சாபங்களும் திட்டுகளும் வசையும் சரமாரியாகப் பொழிந்தன. தாத்யா மனத்தளவில் பயந்து நடுநடுங்கிப் போனார். ஓர் இக்கட்டான நிலைமை உருவாகிவிட்டது. இது எங்ஙனம் நடந்தது? 139 மக்களனைவரும் செயலற்றுப் போனார்கள்õ 'இன்று என்ன என்றுமில்லாதவாறு துர்ச்சகுனம்? தாத்யாபாடீலை இந்த ஆபத்திருந்து விடுவிப்பது எப்படி?ஃ என்று மக்கள் வியந்தனர். 140 பாகோஜி சிந்தே1 தைரியமாகவும் உஷாராகவும் முன்னேறினார்; பாபாவிடம் சுலபமாக மாட்டிக்கொண்டு அவருடைய கோபத்திற்கு இரையானார். பாபாவால் இஷ்டம்போல் துவம்சம் செய்யப்பட்டார். 141 மாதவராவும் பாபாவிடம் மாட்டிக்கொண்டார். பாபா அவர்மீது சில செங்கற்களை எறிந்தார். தாத்யாவை விடுவிக்க முயன்றவர்கள் அனைவரும் அதேபோன்று செங்கற்களால் தாக்கப்பட்டார்கள். 142 'இந்நிலையில் யார் பாபாவை தைரியமாக நெருங்கித் தாத்யாவை விடுவிக்க முடியும்?ஃ என்று மக்கள் யோசித்துக்கொண் டிருந்தபோதே பாபாவின் கோபம் தணிய ஆரம்பித்தது. கடைசியில் பாபா அமைதியடைந்தார். 143 உடனே ஒரு ஜவுளிக்கடைகாரர் அழைக்கப்பட்டு, தங்கச் சரிகைபோட்ட தலைப்பாகை கொண்டுவரச் செய்யப்பட்டது. ஓர் அரசரிடமிருந்து வரும் மரியாதையைப் போன்று பாபாவே அத் தலைப்பாகையைத் தாத்யாவுக்குக் கட்டிவிட்டார். 144 இந்த திடீர்க் கோபத்திற்கும் வசவுகளுக்கும் தாத்யாவின்மீது நடந்த தாக்குதலுக்கும் என்ன காரணம் என்பது மக்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருந்தது. 145 எக்காரணம்பற்றி அவர் கடுங்கோபமடைந்தார்? எப்படிக் கணநேரத்தில் சாந்தியடைந்து சந்தோஷமாகிவிட்டார்? இதற்கெல்லாம் காரணம் என்ன என்பது ஒருவருக்குமே புரியவில்லை. 146 சில சமயங்களில் பாபாவினுடைய மனம் சாந்தமாக இருக்கும்; எல்லாருடனும் பிரீதியுடன் பேசுவார். சில சமயங்களில் திடீரென்று எக்காரணமும் இல்லாமல் அவருடைய மனம் கொந்தளிக்கும். 147 பாபாவினுடைய காதைகள் இம்மாதிரியானவை; ஒன்றைச் சொல்க்கொண் டிருக்கும்போதே இன்னொன்று மனத்தில் தோன்றுகிறது. எதை முதல் சொல்வது, எதைப் பிறகு சொல்வது என்று பிரவசனம் செய்பவரின் மனம் திக்குமுக்காடுகிறது. இந்தத் தேர்வில் பாரபட்சம் காட்டுவது முறையாகாது. 148 என்னாலும் பாரபட்சம் காட்டமுடியவில்லை. செவிமடுப்பவர்களின், கதை கேட்கவேண்டுமென்ற ஆவலைத் திருப்திசெய்யும் வகையில், எக்காதை எச்சமயத்திற்குப் பொருத்தமாக இருக்கிறதோ, அக்காதை அச்சமயத்தில் அவர்களுக்கு வந்து சேரும். 149 அடுத்த அத்தியாயத்தில், பாபா ஹிந்துவா முஸ்லீமா என்பதுபற்றிய வாய்மொழி விவரங்களையும் முதியோர்களிடம் நான் கேட்டவாறு ஆதிகாலக் கதைகளையும் என்னுடைய சக்தி அனுமதிக்குமளவில் சொல்கிறேன்; கேளுங்கள். 150 தக்ஷிணை கேட்டு வாங்கிய பணம் பழைய கோயில்களைப் புதுப்பிக்க எவ்வாறு செலவிடப்பட்டது என்பதுபற்றியும் தோதீ-போதீ, கண்டயோகம் போன்ற யோகப்பயிற்சிகளில் பாபா தம் உடலை வருத்திக்கொண்ட விவரமும் -- 151 எவ்வாறு பாபா மற்றவர்களின் நல்வாழ்வுக்காகக் கஷ்டப்பட்டார் என்பதுபற்றியும் பக்தர்களின் ஸங்கடங்களை எவ்வாறு நிவாரணம் செய்தார் என்பதுபற்றியும் -- இவையனைத்தும் அடுத்த அத்தியாயத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டு கதை கேட்பவர்களைத் திருப்திசெய்யும். எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, ''ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃஃ என்னும் காவியத்தில், 'ஸ்ரீராமஜன்ம உற்சவம்ஃ என்னும் ஆறாவது அத்தியாயம் முற்றும். ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். சுபம் உண்டாகட்டும். |