Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 5

5. காணாமற்போனதும் சிர்டீக்குத் திரும்பி வந்ததும்


ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 முன்பு சொன்ன காதையைத் தொடர்வோம். திடீரென்று ஸாயீ காணாமற்போனது, மறுபடியும் சாந்த்பாடீ­ன் கோஷ்டியுடன் திரும்பி வந்தது, இவைபற்றிய விவரங்களைக் கூறுகிறேன்; கேளுங்கள்.

2 பூந்தோட்டம் போடுவதற்காக பாபா எவ்வாறு தாமே தண்ணீர் கொண்டுவந்தார் என்பதுபற்றியும் கங்காகீர் போன்ற ஞானிகளைச் சந்தித்ததுபற்றியுமான புனிதமான காதைகளைக் கேளுங்கள்.

3 பாபா சில காலம் சிர்டீயி­ருந்து காணாமற்போயிருந்தார். மறுபடியும் முஸ்லீம் கனவானுடன் (சாந்த் பாடீல்) சிர்டீக்கு வந்த க­யாணக்கோஷ்டியில் இந்த ரத்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.

4 தேவிதாஸ், அதற்கு முன்பாகவே சிர்டீயில் வாழ்வதற்கு வந்துவிட்டிருந்தார். பிறகு, ஜானகிதாஸ் கோஸாவியும் சிர்டீயில் வாழ வந்துசேர்ந்தார்.

5 இந்த விவரங்களையெல்லாம் விஸ்தாரமாகச் சொல்கிறேன். கேட்பவர்களேõ பயபக்தியுடன் கேட்கும்போது ஆழ்ந்த கவனமும் வையுங்கள்.

6 சாந்த் பாடீல் என்னும் பெயர் கொண்ட பாக்கியசீலரான முஸ்லீம் ஒருவர், ஔரங்காபாத் ஜில்லாவைச் சேர்ந்த தூப்கேடா என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்தார்.

7 ஒரு முறை ஔரங்காபாத் பிரயாணத்தில் அவருடைய பெண்குதிரை தொலைந்துபோயிற்று; இரண்டு மாதங்கள் தேடியும் கிடைக்கவில்லை. ''இனிமேல் அது கிடைக்காதுõஃஃ--

8 என்றெண்ணி, பாடீல் முற்றிலும் மனமுடைந்து போனார். குதிரையை இழந்ததுபற்றி துக்கமும் வேதனையும் அடைந்தார். கடைசியில் அவர் குதிரையின் சேணத்தை முதுகின்மேல் போட்டுக்கொண்டு வந்த வழியே வீடு திரும்பினார்.

9 ஔரங்காபாத்தி­ருந்து 9 மைல்கள் கடந்து வந்தபின், பாதையோரத்தில் ஒரு மாமரம் இருந்தது. மாமரத்தினடியில், சாந்த்பாயி அந்த மனிதருள் மாணிக்கத்தைக் கண்டார்.

10 கப்னி ஆடை, கையில் தொப்பி, கமக்கத்தில் ஸட்கா1 - புகையிலையைக் கசக்கி சில்­மில்2 அடைத்துக்கொண் டிருந்தபோதே ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது.

11 சாந்த் பாடீல் அந்த வழியாகப் போகும்போது, பக்கீர் கூப்பிடும் சப்தம் கேட்டது. ''ஓய்õ இங்கு வாரும், வாரும்õ கொஞ்சம் சில்­ம் பிடித்துவிட்டுப் போகலாம்õ வந்து இந்த நிழ­ல் சிறிது நேரம் இளைப்பாறும்ஃஃ என்று பக்கீர் அழைத்தார்.

12 பக்கீர் அப்பொழுது கேட்டார், ''இந்தச் சேணம் எதற்காக?ஃஃ பாடீல் பதிலுரைத்தார், ''என்னுடைய பெண்குதிரை தொலைந்துபோய்விட்டது, ஐயனேõஃஃ பக்கீர் சொன்னார், ''போம், அந்த ஓடைக்கரையில் தேடும்.ஃஃ பாடீல் அவ்வாறே தேடினார். ஆஹாõ குதிரை உடனே அகப்பட்டுவிட்டதுõ

13 சாந்த் பாடீல் வியப்பிலாழ்ந்துபோய் தமக்குள்ளேயே பேசிக் கொண்டார், ''சந்தேகமேயில்லை, நான் சந்தித்தது ஒரு அவ­யாதான்1. இந்த அற்புதமான செய்கைக்கு ஈடிணையே இல்லை. அவர் ஒரு சாதாரணர் என்று எப்படிச் சொல்லமுடியும்?ஃஃ

14 பிறகு, அவர் குதிரையைப் பிடித்துக்கொண்டு மறுபடியும் மாமரத்தடிக்கு வந்தார். பக்கீர் அவரைத் தமது பக்கத்தில் அமரவைத்தார். தம்முடைய கைகளால் ஒரு சிம்டாவை2 எடுத்தார்.

15 அடுத்து, பக்கீர் சிம்டாவை பூமியில் செருகினார். அதே இடத்தி­ருந்து எரியும் தணல் ஒன்றை பூமியி­ருந்து எடுத்தார்õ தணலைத் தம் கையி­ருந்த சில்­முக்குள் வைத்துவிட்டு ஸட்காவை எடுத்தார்.

16 ஏனெனில், சாபியை3 நனைப்பதற்குத் தண்ணீர் இல்லை. ஸட்காவால் பூமியின்மேல் அடித்தார். அடித்த இடத்தி­ருந்து தண்ணீர் பெருகியதுõ

17 சாபியை நீரில் நனைத்து சில்­மின்மேல் சுற்றிக்கொண்டார். சில்­மில் சிறிது புகைபிடித்துவிட்டு, சாந்த் பாடீலையும் புகைபிடிக்கவைத்தார். இதையெல்லாம் பார்த்த பாடீலுக்குத் தலைசுற்றி மயக்கம் வரும்போல் இருந்தது.

18 பாடீல் பக்கீரைத் தமது வீட்டிற்கு வருகைதந்து தமது இல்லத்தைப் புனிதப்படுத்துமாறு வற்புறுத்தினார். இம்மாதிரியான லீலைகள் புரிவதற்காகவே இவ்வுலகத்திற்கு வந்த பக்கீர், பாடீலுக்கு இவ்வனுக்கிரஹத்தைச் செய்தார்.

19 அடுத்தநாள், பக்கீர் பாடீலுடன் தங்குதவற்காக கிராமத்தினுள்ளே சென்றார். சிறிது காலம் அவருடன் தங்கினார்; பிறகு சிர்டீக்குத் திரும்பி வந்தார்.

20 சாந்த் பாடீல் தூப்கேடாவின் கிராமதிகாரி. அவருக்கு மனைவியின் மருமகன் சிர்டீயி­ருந்த ஒரு பெண்ணை மணம் செய்துகொள்வதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது.

21 மனைவியின் இந்த மருமகன் க­யாணம் செய்துகொள்ளும் பருவத்தை அடைந்தான். சிர்டீ கிராமத்துப் பெண்ணை மணம் செய்துகொள்ளும் பாக்கியமும் பெற்றான்õ

22 ஆகவே, மாட்டுவண்டிகளுடனும் குதிரைகளுடனும் க­யாணக்கோஷ்டி உரிய காலத்தில் சிர்டீக்குக் கிளம்பியது. பாபாவும் சாந்த்பாயின் மே­ருந்த பிரியத்தால் கோஷ்டியில் சேர்ந்துகொண்டார்.

23 க­யாணம் நடந்து முடிந்ததும், கோஷ்டி சிர்டீயி­ருந்து தூப்கேடா திரும்பியது. பாபா மட்டும் சிர்டீயிலேயே தங்கிவிட்டார்; சிர்டீயில் நிரந்தரமாகவே தங்கிவிட்டார். சிர்டீக்குப் பொற்காலம் பிறந்ததுõ

24 அழிவற்றவரும் புராதனருமான ஸாயீ ஹிந்துவுமல்லர், முஸ்லீமுமல்லர். அவருக்கு ஜாதியில்லை, வம்சமில்லை, குலமுமில்லை, கோத்திரமுமில்லை. ஆத்மஞானமே அவருடைய உண்மையான அடையாளம்.

25 ஸாயீ ஸாயீ என்று மக்கள் அவரை அழைத்தனர்; அது அவருடைய பெயரா என்ன? இல்லவே இல்லைõ மரியாதை நிமித்தமாக அவர் ''ஸாயீயே வருகஃஃ என்று அழைக்கப்பட்டார். அப்படித்தான் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது.

26 க­யாணக்கோஷ்டியுடன் கண்டோபா கோயிலுக்கருகி­ருந்த மஹால்ஸாபதியின் களத்திற்கு அருகில் பாபா வந்த அன்றுதான் இது நடந்தது.

27 ஆரம்ப காலத்தில் அந்தக் களம் மஹால்ஸாபதிக்குச் சொந்தமாக இருந்தது; பிற்காலத்தில் அமீன்பாயிக்குச் சொந்தமாயிற்று. க­யாணக்கோஷ்டி வந்தபோது அவ்விடத்தில்தான் ஆலமரத்தடியில் வந்து இறங்கியது.

28 கண்டோபா கோயி­னுடைய வளாகத்தில் மாடுகள் வண்டியி­ருந்து பூட்டவிழ்த்து விடப்பட்டன. பாபாவும் க­யாணக்கோஷ்டியில் இருந்த அனைவருடனும் அங்கு இறங்கினார்.

29 இவ்விளம் பக்கிரி வண்டியி­ருந்து இறங்கியபோது, மஹால்ஸாபதிதான் அவரை முத­ல் கண்டு, ''ஸாயீயே வருகஃஃ என்று வரவேற்றார்.

30 அதன்பிறகு மக்கள் அவரை ஸாயீ ஸாயீ என்று அழைத்தனர். அப்பெயரே நிலைத்துவிட்டது.

31 அவர் மஹால்ஸாபதியின் முற்றத்தில் சிறிது நேரம் சில்­ம் புகைத்தார். பிறகு அங்கிருந்து, தங்குவதற்காக மசூதிக்குச் சென்றார். தேவிதாஸரின் ஸஹவாஸத்தில் மகிழ்ந்து, சிர்டீயில் ஆனந்தமாக வாழ்ந்தார்.

32 சிலசமயம் சாவடியில் உட்கார்ந்திருப்பார்; சிலசமயங்களில் தேவிதாஸருடைய சங்கத்தில் இருப்பார்; சில நேரங்களில் மாருதி கோயி­ல் உட்கார்ந்துகொண் டிருப்பார். எங்கு விருப்பமோ, அங்கு சந்தோஷமாகக் காலம் கழித்தார்.

33 பாபா வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே, தேவிதாஸர் சிர்டீயில் இருந்தார். பிறகு மஹானுபாவி1 பிரிவைச் சேர்ந்த ஜானகிதாஸ் கோஸாவியும் சிர்டீக்கு வந்து சேர்ந்தார்.

34 இந்த ஜானகிதாஸரோடு மஹராஜ் (பாபா) பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பார்; அல்லது, பாபா எங்கிருக்கிறாரோ அங்கு போய் ஜானகிதாஸர் உட்கார்ந்திருப்பார்.

35 இருவருமே பரஸ்பரம் (ஒருவரை ஒருவர்) நேசித்தனர்; அடிக்கடி சந்தித்தனர். இவர்களுடைய நட்பும் நல்லுறவும் கிராம மக்கள் எல்லாருக்குமே சந்தோஷத்தையளித்தன.


36 இவ்வாறே, கங்காகீர் என்னும் வைஷ்ணவ1 ஸம்பிரதாயத்தைச் சேர்ந்த மிகவும் பிரபலமான கிருஹஸ்த பக்திமான், புண்தாம்பே என்னும் ஊரி­ருந்து அடிக்கடி சிர்டீக்கு விஜயம் செய்வார்.

37 ஸாயீ இரண்டு தோள்களிலும் மண் குடங்களைத் தூக்கிக்கொண்டு கிணற்றி­ருந்து தண்ணீர் கொண்டுவருவதை முதன்முத­ல் பார்த்து, கங்காகீர் ஆச்சரியமடைந்தார்.

38 பின்பு, ஸாயீயை நேருக்குநேராகச் சந்தித்தபோது, கங்காகீர் புவா தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கூறினார், ''இம் மனிதருள் மாணிக்கத்தின் கூட்டுறவைப் பெற்ற சிர்டீ, பாக்கியம் செய்த, அதிருஷ்டம் வாய்ந்த கிராமம்.--

39 ''இன்று இவர் தோள்களின்மேல் குடம் தூக்கித் தண்ணீர் கொண்டுபோகிறார்; ஆனால், இந்த மனிதர் சாமானியமானவரல்லர்; இந்த பூமி செய்த மிகப் பெரும் புண்ணியத்தால் இவர் இங்கு வந்திருக்கிறார்.ஃஃ

40 இதைப் போலவே, ஆனந்தநாதர் எனும் பெயர்கொண்ட பிரக்யாதிபெற்ற ஸாதுவும் பாபாவினுடைய அற்புதமான, தெய்வீகமான லீலைகள் நடக்கப்போவதுபற்றி முன்கூட்டியே தெரிவித்திருந்தார்.

41 மஹாபிரஸித்திபெற்ற இந்த ஆனந்தநாதர், யேவலா என்னும் கிராமத்தில் மடமொன்றை ஸ்தாபித்திருந்தார். சிர்டீ மக்கள் சிலருடன் சிர்டீக்கு வந்தார்.

42 ஆனந்தநாதர் அக்கல்கோட்2 மஹாபுருஷரின் சிஷ்யர். அவர் ஸாயீயை நேருக்குநேராகப் பார்த்தபோது சந்தோஷத்தால் கூவினார். ''இதோ ஒரு ரத்தினம், பிரத்யக்ஷமான ரத்தினம்.--

43 ''இன்று யாராலும் கவனிக்கப்படாது குப்பைக்குள் அமிழ்ந்திருக்கலாம்; ஆயினும், இது ஒரு ரத்தினமே; கூழாங்கல் அன்று.ஃஃ ஞாபகத்தில் வையுங்கள்; இவையே பாபா இளைஞராக இருந்தபோதே ஆனந்தநாதர் சொன்ன வார்த்தைகள்õ

44 ''நான் சொன்ன இவ்வார்த்தைகளை நன்கு மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பிற்காலத்தில் உங்களுக்கு இது ஞாபகத்திற்கு வரும்.ஃஃ இவ்வாறு அவர் நடக்கப் போவதை முன்கூட்டியே தெரிவித்துவிட்டு யேவலாவிற்குத் திரும்பிச் சென்றுவிட்டார்.

45 ஸாயீ அப்பொழுதெல்லாம் தலைமுடியை நீளமாக வளர்த்துக்கொண்டார்; மொட்டை அடித்துக்கொள்ளவே மாட்டார். ஸாயீ இளைஞனாக இருந்தபோது பயில்வானைப்போல் உடை அணிந்துகொண்டார்.

46 எப்பொழுது ரஹாதாவிற்குச் சென்றாலும் துலுக்கசாமந்திச் செடிகளையும் மல்­கைச் செடிகளையும் கொண்டுவருவார். தரிசு நிலத்தில் நட்டுத் தவறாது தினமும் தண்ணீர் ஊற்றுவார்.

47 வாமன் தாத்யா என்ற ஸாயீபக்தர் தினமும் இரண்டு சூளையி­டப்படாத (வெயி­ல் காயவைக்கப்பட்ட நிலை) பானைகளைக் கொடுப்பார். பாபா தம்முடைய கைகளாலேயே செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்.

48 கிணற்றின் பக்கத்தி­ருந்த கற்தொட்டியி­ருந்து குடங்களில் தண்ணீரைத் தோள்களின்மீது சுமந்து செல்வார். ஸூரிய அஸ்தமன நேரத்தில் குடங்களை (வேலையை முடித்துவிட்டு) வேப்பமரத்தடியில் வைத்துவிடுவார்.

49 அவ்வாறு வைக்கப்பட்டவுடன் குடங்கள் தாமாகவே உடைந்துவிடும். மறுநாள் காலையில், தாத்யா மறுபடியும் இரண்டு குடங்களைக் கொண்டுவந்து தருவார்.

50 சூளையி­ட்டுச் சுடப்பட்ட குடந்தான் உறுதியாக இருக்கும்; நாட்பட உழைக்கும். ஆனால், பாபாவுக்குச் சுடாத குடந்தான் தேவைப்பட்டது. இவ்விதமாக, குயவரால் தினமும் இரண்டு பானைகளைச் சூளையி­டும் சிரமமின்றியே விற்க முடிந்ததுõ

51 மூன்று ஆண்டுகள் பாபா இதையே முக்கியமான வேலையாக ஏற்றுக்கொண்டு செய்தார். இன்று அதிருஷ்டவசமாக மக்கள் அனுபவிக்கும் சௌகரியமான சத்திரம் இருக்கும் இடத்தில் ஓர் அழகான பூந்தோட்டம் உருவாகியது.

52 மேலும், அதே இடத்தில் வேப்பமரத்தினடியில் பாயீ என்ற பெயருடைய பக்தரொருவரால், ஸமர்த்த ஸ்வாமி அக்கல்கோட் மஹராஜினுடைய1 பாதுகைகள் பக்தர்கள் வழிபடுவதற்காக ஸ்தாபனம் செய்யப்பட்டிருக்கிறது.

53 பாயீயினுடைய உபாஸனைத் தெய்வம் அக்கல்கோட் மஹராஜ். அவருடைய உருவப்படத்திற்கு மிகுந்த பக்தியுடன் நித்தியநியமமாகப் பாயீ பூஜை செய்துவந்தார்.

54 ஒரு சமயம் அவர் அக்கல்கோட்டிற்குச் சென்று, ஸ்வாமியினுடைய பாதுகைகளை தரிசனம் செய்துகொண்டு, மனம்லயித்து உபசாரங்களுடன் கூடிய பூஜை செய்யவேண்டுமென்ற மனோபாவம் கொண்டார்.

55 ஆகவே, பம்பாயி­ருந்து அக்கல்கோட் செல்வதற்கும் அங்கு பூஜை செய்வதற்குமுண்டான எல்லா ஏற்பாடுகளையும் செய்து, பொருள்களையும் தயார் செய்தார். கிளம்புவதற்கு முதல்நாள், இத்தீர்மானத்தையும் எல்லா ஏற்பாடுகளையும் ரத்துசெய்துவிட்டு, சிர்டீ போகும் பாதையில் காணப்பட்டார்õ

56 மறுநாள் கிளம்புவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்ட நிலையில், முதல்நாள் இரவு அவர் கனவொன்று கண்டார். கனவில் அக்கல்கோட் ஸ்வாமி அவருக்கு ஆக்ஞாபனம் (ஆணை) செய்தார், ''சிர்டீயே இப்பொழுது என்னுடைய ஸ்தானமாக ஆகிவிட்டது; ஆகவே, நீர் சிர்டீக்குச் செல்வீராகõஃஃ

57 ஆக்ஞை இவ்வாறு இருந்தபோது, பயபக்தியுடன் அதற்குக் கீழ்ப்படிந்த பாயீ பம்பாயி­ருந்து சிர்டீக்குச் சென்றார். சிர்டீயில் ஆறுமாதங்களை ஆனந்தமாகக் கழித்தார்.

58 பாயீ பூரணமான விசுவாசமும் நம்பிக்கையும் உடையவராக இருந்ததால், தாம் கண்ட கனவுக் காட்சியின் ஞாபகார்த்தமாக, ஸமர்த்த அக்கல்கோட் ஸ்வாமிகளின் பாதுகைகளை வேப்பமரத்தடியில் ஸ்தாபனம் செய்தார்.

59 1912ஆம் ஆண்டு, ஆவணி மாதம், புண்ணிய காலமான வளர்பிறையில், மிகுந்த அன்புடன் பூஜையோடும் பஜனையோடும் வேப்பமரத்தின்கீழ் பாதுகைகளை ஸ்தாபனம் செய்தார்.

60 ஒரு சுபமுஹூர்த்த1 நாளில், சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளோடு உபாஸனி2 சாஸ்திரி என்ற பக்தர் நடத்திவைத்தவாறு, தாதாகேள்கர்3 தமது கரங்களால் பாதுகைகளைப் பிரதிஷ்டை செய்தார்.

61 பாதுகைகளின் தினசரி பூஜை, தீக்ஷிதர்4 என்றழைக்கப்பட்ட பிராமணரிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுப்பணிகளை ஸகுண் மேரு நாயக் பார்த்துக்கொண்டார். பாதுகைகளுடைய ஆக்கியானம் (காதை) இதுவே.

62 இவ்விதமாகத்தான் நிர்விகாரமானவர்களும் இறைவனின் அவதாரமுமான ஞானிகள் சுயநலம் ஏதும் கருதாது உலகத்தை உய்விப்பதற்காகவே தோன்றுகிறார்கள்.

(காட்சி இங்கு மாறுகிறது. ஆசிரியர் காலத்தால் பின்னுக்குப் போய், இளமைப் பருவத்து நிகழ்ச்சியை விவரிக்கிறார்).

63 சில நாள்கள் கழித்து ஆச்சரியமளிக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. இதை கவனத்துடன் கேட்டால் கேட்பவர்களும் அதிசயப்படுவார்கள்õ

64 மொஹித்தின் தாம்போ­க்கும் (பீடா வியாபாரி) பாபாவுக்குமிடையே சில வாக்குவாதங்களும் சச்சரவுகளும் இருந்துவந்தன. இந்நிலைமை சூடேறி, ஒருநாள் மல்யுத்தம்வரை கொண்டுபோய்விட்டது. இருவரும் பயங்கரமாகச் சண்டையிட்டனர்.

65 இருவருமே சிறந்த மல்யுத்த வீரர்கள். ஆயினும், உடல் பலம் விதியை எதிர்த்துப் போராட முடியுமா? மொஹித்தினுக்கு அதிக சக்தி கிடைத்து, பாபாவால் அதற்கு ஈடுகொடுக்க முடியாததால் பாபா தோற்கடிக்கப்பட்டார்.

66 இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, பாபா மனத்தில் ஒரு முடிவெடுத்துவிட்டார். அவருடைய முழு உடையையும் மாற்றிவிட்டார். லங்கோட்டைக் கட்டிக்கொண்டு அதற்குமேலே நீண்ட கப்னியை அணிந்துகொண்டார். ஒரு துணியைத் தலையைச் சுற்றி முக்காடிட்டுக் கட்டிக்கொண்டார்.

67 ஒரு கோணிப்பையை ஆசனமாக ஏற்று, மற்றொரு கோணிப்பையை படுக்கை விரிப்பாக்கிக்கொண்டார். தாம் அணிந்துகொண்ட கந்தைத் துணிகளிலும் திருப்தி கண்டார்.

68 வறுமையே மஹோன்னதமான ஸாம்ராஜ்யம்; பணக்காரனுடைய ஆடம்பரத்தைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்தது. 'அல்லா ஏழைகளையே நேசிக்கிறார்ஃ என்று பாபா அடிக்கடி சொல்லுவார்.

69 கங்காகீருக்கும் வாழ்க்கையில் இந்நிலை ஒரு சமயத்தில் வந்தது. மல்யுத்தப் பிரியரான அவர், ஒரு முறை மல்யுத்தம் செய்துகொண் டிருந்தபோதே திடீரென்று ச­ப்படைந்து, அதி­ருந்து விடுபடவேண்டும் என்று நினைத்தார்.

70 பிராப்தம் வந்த காலத்து, ஒரு சித்தருடைய வார்த்தைகள் அவருடைய காதுகளை அசரீரியாக வந்தடைந்தன. ''இப்பூதவுடல் கடவுளிடம் விளையாடுவதில் கரைவதே சிலாக்கியம்.ஃஃ

71 அவர் மல்யுத்தம் செய்துகொண் டிருந்தபோதே, இவ்வனுக்கிரஹரூபமான வார்த்தைகள் அவருடைய காதுகளில் விழுந்தன. உலகியல் வாழ்க்கையைத் துறந்து இறைவனைத் தேடும் பாதையில் இறங்கிவிட்டார்.

72 அவருடைய மடம் புண்தாம்பேவுக்கு அருகில், கோதாவரி நதி இரண்டாகப் பிரிந்து மறுபடியும் கூடுவதால் ஏற்படும் தீவில் இருக்கிறது. ஸேவை செய்யும் ஆர்வமுள்ள சிஷ்யர்களும் அநேகர் அங்கு இருக்கின்றனர்.

73 நாள்கள் ஆக ஆக, ஸாயீநாதர், கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்­வந்தார்; தாமாக யாரிடமும் பேசுவதில்லை.

74 பகல் நேரத்தில் வேப்பமரத்தினடியில் உட்கார்ந்துகொண் டிருப்பார். சில சமயங்களில் கிராம எல்லையான ஓடையின் கரையில் இருந்த ஒரு கருவேலமரத்தின் குறுக்கு வாட்டமாக வளர்ந்த கிளையின்கீழ் அமர்ந்திருப்பார்.

75 சில நாள்களில் அவர் விருப்பப்பட்டபோது மதியத்திற்குப் பிறகு, கால்போனவாக்கில் நடந்து சுமார் ஒரு மைல் தூரத்தி­ருந்த நிம்காங்வ் கிராமத்தினருகில் செல்வார்.

76 புகழ்பெற்ற திரியம்பக டேங்க்லே நிம்காங்வினுடைய ஜாகீர்தாராக இருந்தவர். பாபாஸாஹேப், அவருடைய வம்சத்தில் பிறந்தவர். பாபா இந்த பாபாஸாஹேப்பை மிகவும் நேசித்தார்.

77 நிம்காங்விற்கு சிறுநடையாகப் போனபோதெல்லாம், பாபா அவருடைய இல்லத்திற்குச் சென்று அவருடன் அந்நாள் முழுவதும் மிகுந்த பிரேமையுடன் பேசிக்கொண்டிருப்பார்.

78 பாபாஸாஹேப்பிற்கு, நானாஸாஹேப் என்னும் பெயர் கொண்ட தம்பியொருவர் இருந்தார். புத்திரபாக்கியம் இல்லாததால் நானா எப்பொழுதும் மனவருத்தத்துடன் இருந்தார்.

79 முதல் மனைவிக்குப் புத்திரபாக்கியம் ஏற்படும் வாய்ப்பேதும் இல்லாது போனதால், நானா இரண்டாவது மனைவியை மணந்துகொண்டார். ஆனால், எவராலும் குணானுபந்தத்தி­ருந்து (முன் ஜன்ம வினைகளும் தளைகளும்) தப்பிக்கமுடியாது. தெய்வத்தின் வழிகள் மர்மமானவைõ

80 பாபாஸாஹேப் அவரை ஸாயீ தரிசனத்திற்கு அனுப்பிவைத்தார். ஸாயீயினுடைய ஆசீர்வாதத்தால் நானாஸாஹேப்புக்கு ஒரு மகன் பிறந்தான்.

81 இதன் பிறகு, ஸாயீயினுடைய புகழ் வளர்ந்து, ஸாயீ தரிசனத்திற்காக ஜனசமுதாயம் கூட்டங்கூட்டமாக சிர்டீயை முற்றுகையிட்டது. இச்செய்தி ஜில்லாவின் தலைநகரமான அஹமத்நகரை எட்டியது.

82 நானாஸாஹேப் (நிம்காங்வ் வாசி) அஹமத்நகரத்தி­ருந்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள் வட்டத்தில் நல்ல செல்வாக்குக் கொண்டவர்; அதிகாரிகளுடன் நன்கு பழகினார். அதிகாரிகளில் ஒருவருக்கு சிதம்பர கேசவ் என்று பெயர்; ஜில்லா கலெக்டரின் காரியதரிசியாக வேலை பார்த்தவர்.

83 நானாஸாஹேப் டேங்க்லே, அவரை சிர்டீக்குக் கட்டாயமாக மனைவியுடனும் மக்களுடனும் நண்பர்களுடனும் ஸாயீ தரிசனம் செய்ய வரச்சொல்­ ஒரு கடிதம் எழுதினார். இவ்விஜயம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் எழுதியிருந்தார்.

84 இவ்விதமாக பாபாவின் புகழ் பரவப்பரவ, ஒவ்வொருவராக சிர்டீக்கு வர ஆரம்பித்தனர். பக்தர்களுடைய கூட்டம் பெருகியது.

85 பாபாவுக்கு எவருடைய சங்காதமும் தேவைப்படவில்லையெனினும், பகல் நேரத்தில் பக்தபரிவாரம் அவரைச் சூழ்ந்துகொள்ளும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, அவர் (சிர்டீயி­ருந்த) பாழடைந்த மசூதியில் தூங்குவார்.

86 சில்­மும் புகையிலையும் ஒரு தகர டப்பாவும் எப்பொழுதும் அவர் அருகிலேயே இருந்தன. தழையத் தழைய நீண்ட கப்னி ஒன்றை அணிந்துகொண்டு தலையை வெள்ளைத் துணியால் மூடிக்கொண்டு எப்பொழுதும் ஸட்காவைக் கையில் வைத்துக்கொண் டிருந்தார்.

87 சுத்தமான வெள்ளைத் துணியொன்றைத் தலைமேல் போர்த்து, இடக்காதிற்குப் பின்னால் ஜடாமுடியைப் போன்று இறுக்கமாக முறுக்கி, அழகான தலைப்பாகை போல் பாபா கட்டிக்கொண்டார்.

88 இம்மாதிரியான உடைகளை அணிந்துகொண்டு சிலசமயங்களில் சேர்ந்தார்ப்போல் எட்டு நாள்களும் குளிக்காமல் இருப்பார். வெறும் பாதங்களுடன்தான் நடந்தார். ஒரு கோணிப்பையையே ஆசனமாகக் கொண்டார்.

89 இவ்வாறு, ஒரு கந்தல் கோணித்துணியே அவருடைய நிரந்தரமான ஆசனமாக அமைந்தது. மெத்தையின் சுகமென்பது என்னவென்றே அவருக்குத் தெரியாது. மொத்தத்தில், எது கிடைத்ததோ அதில் திருப்தியடைந்தார்.

90 ந­ந்துபோன பழைய சாக்குத்துணியே அவருடைய பிரியமான ஆஸனம்; ஸதாஸர்வகாலமும் அது அவ்விடத்திலேயே இருந்தது.

91 ஆஸனம், விரிப்பு, எல்லாம் அதுவே. பாபா கோவணம் மட்டும் தரித்தார்; வஸ்திரமோ போர்வையோ வேறு எதுவுமே இல்லை. குளிரை விரட்ட துனி (ஈட்ன்ய்ண்) இருந்ததுõ

92 இடக்கையைக் கிராதியின்மீது வைத்துக்கொண்டு தெற்குப் பார்த்தவாறு இக்கோணிப்பை ஆஸனத்தின்மீது உட்கார்ந்துகொண்டு, தம்மெதிரில் இருந்த துனியையே பாபா உற்றுப் பார்த்துக்கொண் டிருப்பார்.


93 இது, அஹங்காரத்தையும் வாஸனைகளையும் மனவக்கிரங்களையும் உலகியல் வாழ்வில் ஏற்படக்கூடிய ஆசாபாசங்களையும் யுக்திகளையும் குயுக்திகளையும் அனைத்தையும் அவர் துனியில் ஆஹுதியாக (படையலாக) இடுவதுபோலத் தோன்றியது.

94 கொழுந்துவிட்டெரியும் துனியில் கர்வம் பிடித்த ஞானத்தைக் கட்டைகளாகப் போட்டு, 'அல்லாமா­க்ஃ என்று ஸதா ஜபம் சொல்­, அல்லாவின் கொடியை ஏற்றினார்.

95 மசூதி விசாலமான இடமா என்ன? இரண்டு தூலங்களுக்கு இடையே இருந்த சிறிய இடந்தானேõ இங்கேதான் அவர் உட்கார்ந்தார்; வளையவந்தார்; எல்லாரையும் சந்தித்தார்; உறங்கினார்; வசித்தார்.

96 தரைவிரிப்புகள், திண்டுகள், எல்லாம் பக்தர்கள் பெருகப்பெருக இப்போது வந்துவிட்டன. ஆனால், ஆரம்ப காலத்தில் பக்தர்கள் யாரும் பயமின்றி அவரை அணுகமுடியவில்லை.

97 1912ஆம் ஆண்டி­ருந்து எல்லா மாற்றங்களும் ஏற்பட்டன. அந்த வருடத்தி­ருந்துதான் மசூதியின் உருவமே மாற ஆரம்பித்தது.

98 முட்டிக்கால் ஆழத்திற்குப் பள்ளம்பள்ளமாக இருந்த மசூதியின் தரை, பக்தர்களின் அன்பார்ந்த ஸேவையால் ஒரே இரவில் சரளைக்கற்கள் நிரவப்பட்டுத் தளமிடப்பட்டது.

99 மசூதியில் வசிக்க வருவதற்கு முன்னால், பாபா பக்கீர்கள் தங்கும் இடமான தகியாவில் தங்கினார். அங்கு பலகாலம் சந்தோஷமாக வாழ்ந்தார்.

100 இந்தத் தகியாவில் வசித்தபோதுதான் பாபா கால்களில் சதங்கை கட்டிக்கொண்டு கஞ்சிராவின் தாளத்திற்கேற்றவாறு நளினமாக நடனம் ஆடினார். இனிமையான குர­ல் பாடினார்.

101 ஆரம்ப காலத்தில் ஸமர்த்த ஸாயீ விளக்குகள் பல ஏற்றுவதில் மிக ஆவல் கொண்டிருந்தார். இதற்காகத் தாமே போய்க் கடைகாரர்களிடம் எண்ணெய் கேட்டு வாங்கிக்கொண்டு வந்தார்.

102 தகர டப்பாவைக் கையிலெடுத்துக்கொண்டு போய், மளிகைக் கடைகாரர்களைத் தாமே பிச்சை கேட்டு வாங்கிவந்து, அகல் விளக்குகளை நிரப்புவார்.

103 பிறகு, அவர் கோயி­லும் மசூதியிலும் பிரகாசமாக விளக்குகளை ஏற்றுவார். இது சில நாள்களுக்குத் தொடர்ந்து நடந்துவந்தது.

104 விளக்குகளைத் தொழுவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். விளக்குகளின் திருநாளான தீபாவளியைக் கொண்டாடுவார். துணியைத் துண்டுகளாகக் கிழித்து, முறுக்கித் திரிகளாக்கி, மசூதியில் விளக்குகள் எரிப்பார்.

105 எண்ணெயைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் இலவசமாகத்தான் கொண்டுவந்தார். கடைகாரர்களின் மனத்துள் கபடம் புகுந்து, 'போதும் இந்தச் சனியன் பிடித்த தொல்லைஃ என்று நினைத்து எல்லாரும் ஒன்றுசேர்ந்து பாபாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

106 தினமும் நடக்கும் வழக்கப்படி, பாபா எண்ணெய் கேட்டுக்கொண்டு வந்தபோது அனைவரும் எண்ணெய் இல்லையென்று சொல்­விட்டனர். என்ன அற்புதம் விளைந்ததுõ

107 ஒரு வார்த்தையும் பேசாமல் பாபா திரும்பிவிட்டார். பழைய திரிகளைச் சீர் செய்து அகல் விளக்குகளில் பொருத்தினார். எண்ணெய் இல்லாமல் இவர் என்ன செய்யப்போகிறார் என்பதைக் கடைகாரர்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண் டிருந்தனர்.

108 பாபா தகர டப்பாவை மசூதியின் கைப்பிடிச் சுவரி­ருந்து எடுத்தார். அதில் ஓரிரு துளிகள் எண்ணெயே இருந்தது; ஒரு மாலை விளக்கு ஏற்றுவதற்குக்கூடப் போதாது.

109 அந்த எண்ணெயில் தண்ணீரை ஊற்றி, இறைவனுக்கு அர்ப்பணிப்பது போலக் குடித்துவிட்டார். பிறகு, அவர் வெறும் தண்ணீரை எடுத்துக்கொண்டார்.

110 தண்ணீரை அகல் விளக்குகளில் ஊற்றித் திரிகளை நனைத்தார். விளக்குகளை ஏற்றி, அவை பிரகாசமாக எரிவதைக் காண்பித்தார்.

111 ஜுவாலையுடன் தண்ணீர் எரிவதைப் பார்த்த கடைகாரர்கள் வியப்பிலாழ்ந்தனர். பாபாவிடம் பொய் சொன்னது தவறு என்று தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர்.

112 அணுவளவும் எண்ணெய் இல்லாது விளக்குகள் இரவு முழுவதும் எரிந்தன. எல்லா ஜனங்களும், கடைகாரர்கள் பாபாவின் அருளைப் பெறுவதற்கு அருகதையற்றவர்கள் என்று சொன்னார்கள்.

113 ''ஓ, பாபா எவ்வளவு அற்புதமான சக்தி பெற்றவர்õஃஃ என்று கடைகாரர்கள் ஆச்சரியப்பட்டனர்; பொய் சொல்­ப் பாவம் சேர்த்தது மட்டுமல்லாமல் பாபாவை அனாவசியமாகக் கோபப்படும்படி செய்துவிட்டதையும் உணர்ந்தனர்.

114 இது இப்படி இருப்பினும், சினத்துக்கும் வெறுப்புக்கும் அப்பாற்பட்ட பாபா இதைப் பற்றிச் சிந்திக்கவில்லை. அவருக்கு நண்பனும் இல்லை, விரோதியும் இல்லை. அவரைப் பொறுத்தவரை எல்லா ஜீவராசிகளும் ஒன்றே.

(ஆசிரியர் மறுபடியும் காலத்தால் பின்நோக்கிப் போகிறார்).

115 மறுபடியும் அந்தக் காதையை விட்ட இடத்தி­ருந்து தொடர்வோம். அதாவது, மொஹித்தின் தாம்போ­ பாபாவை மல்யுத்தத்தில் வென்ற நிகழ்ச்சியி­ருந்து தொடரும் அக் காதையைக் கவனமாகக் கேளுங்கள்.

116 மல்யுத்த நிகழ்ச்சி நடந்த ஐந்தாவது வருஷம், அஹமத் நகரவாசியும் ஜவஹர் அ­ என்னும் பெயர் கொண்டவருமான பக்கிரி ஒருவர் தம் சிஷ்யர்களுடன் ரஹாதாவிற்கு வந்தார்.

117 வீரபத்திரர் கோயிலுக்கு எதிரி­ருந்த மைதானத்தில் கொட்டாரம் போட்டுத் தங்கினார். இந்தப் பக்கீர் பெரும் அதிருஷ்டசா­.

118 அதிருஷ்டசா­யாக இல்லாமல் இருந்தால், அவருக்கு எப்படி ஸாயீயைப் போன்ற புகழ் பெற்ற, மகிழ்ச்சியளிக்கும் சிஷ்யர் கிடைத்திருப்பார்?

119 கிராமத்தில் (ரஹாதா) அநேக மக்கள் இருந்தனர்; அவர்களில் பலர் மராட்டியர். மராட்டியர்களில் பகூ ஸதாபல் என்ற ஒருவர் பக்கீருக்குச் சேவகராக ஆகிவிட்டார்.

120 பக்கீர் அதிகம் படித்தவர்; குர்ஆனை உள்ளங்கை நெல்­க்கனிபோல் அறிந்திருந்தார். சுயநலவாதிகளும் இறையுணர்வாளர்களும் விசுவாசிகளுமாகப் பலர் அவரைப் பின்பற்றினர்.

121 பக்கீர் ஓர் இத்காவைக்1 கட்ட ஆரம்பித்தார். சிலநாள்கள் கழித்தபின், அவர் வீரபத்ரசாமி கோயிலை இழிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

122 இத்கா கட்டுமான வேலை நிறுத்தப்பட்டது; பக்கீர் கிராமத்தி­ருந்து (ரஹாதா) விரட்டியடிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் சிர்டீக்கு வந்து பாபாவுடன் மசூதியில் தங்கினார்.

123 பக்கீர் திறமை வாய்ந்த இனிமையான பேச்சாளி. கிராமமே அவரைக் கொண்டாடியது. அவர் பாபாவை மயக்கித் தம் வசப்படுத்திவிட்டதாக மக்கள் பேசிக்கொண்டார்கள்.

124 ''நீ எனக்கு சிஷ்யனாக இருக்கலாம்ஃஃ என்று அவர் பாபாவிடம் கூறினார். சுபாவத்தில் விளையாட்டுப் பிரியராக இருந்த பாபா, அதற்கு ஒத்துக்கொண்டார். பக்கீர் மிகுந்த சந்தோஷத்துடன், பாபாவை சிர்டீயி­ருந்து வெளியே அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

125 பிரஸித்தி பெற்ற பாபாவை சிஷ்யனாக்கி, ஜவஹர் அ­ குருவாகிவிட்டார்; இருவரும் ரஹாதாவிற்குச் சென்று வாழ்வதென முடிவு செய்தனர்.

126 குருவிற்கு சிஷ்யருடைய கலைகள் தெரியாது; சிஷ்யருக்கோ குருவினுடைய குறைபாடுகள் தெரிந்திருந்தன. ஆனால், ஒருபொழுதும் சிஷ்யர் குருவிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதில்லை; சிஷ்யனுடைய கடமைகள் அனைத்தையும் செவ்வனே செய்தார்.

127 குருவினிடமிருந்து எந்த ஆணை வந்தாலும் சரி, யோக்கியமானதா (தகுதியுடையதா) அயோக்கியமானதா என்று பாராமல், அது உடனே நிறைவேற்றப்பட்டது. குருவின் வீட்டிற்குத் தண்ணீரும் சுமந்தார் ஸாயீ.

128 இவ்வாறு குருவின் ஸேவையில் நாள்கள் ஓடின. ஆனால், சிர்டீக்கு வருவதென்பது எப்போதோ ஒருநாள்தான் முடிந்தது. இம்மாதிரியான நிலை ஏற்பட்டபோது, இதனால் என்ன விளைந்ததென்பதைக் கேளுங்கள்.

129 இந்நிலை தொடர்ந்து, பாபா பிரதானமாக ரஹாதாவிலேயே எப்பொழுதும் இருந்தார். மக்கள், பாபாவைப் பக்கீர் மந்திரசக்தியால் கட்டிவிட்டார் என்றும் சிர்டீக்கு இனி அவர் வரப்போவதேயில்லை என்றும் உணர ஆரம்பித்தனர்.

130 ஜவஹர் அ­ யோகபலத்தால் பாபாவைத் தம்முடனேயே இருக்குமாறு கட்டிவிட்டார் என்று மக்கள் நினைக்க, பாபாவின் திட்டம் முற்றும் மாறுபட்டதாக இருந்தது. தம்முடைய அஹங்காரத்தை நாசம் செய்ய இதை ஓர் உபாயமாகக் கொண்டார்.

131 ஸாயீக்கு ஏது கர்வமும் அஹந்தையும்? கதை கேட்பவர்கள் இவ்வாறு சிந்திப்பது இயற்கையே. ஆனால், அம்மாதிரியான நடத்தை மக்களுக்கு நல்லது செய்யும்; அது அவருடைய அவதரணத்தின் லட்சியம் அன்றோõ

132 ஆயினும், சிர்டீ கிராம மக்கள் பாபாவின் அன்பார்ந்த பக்தர்கள்; அவர் மீது பந்தமும் பாசமும் கொண்டிருந்தனர். பாபாவிடமிருந்து அவ்வாறு பிரிந்திருந்தது அவர்களுக்கு முறையான செய்கையாகத் தோன்றவில்லை.

133 ஜவஹர் அ­யின் பிடியில் பாபா அவ்வாறு பலமாக மாட்டிக்கொண்டதுபற்றி கிராமமக்கள் மனத்துள் கலக்கமுற்றனர். பாபாவைத் திரும்பப் பெறுவது எப்படியென்று தீவிரமாகச் சிந்தித்தனர்.

134 பொன்னும் அதன் காந்தியும் (பளபளப்பும்), விளக்கும் அதன் ஒளியும் போன்று குருவும் சிஷ்யனும் பிரிக்கமுடியாதவர்கள். இருவருமே (குருவும் சிஷ்யனும்) இந்த ஒருமையை அனுபவிக்கிறார்கள்.

135 பக்தர்களின் கூட்டம் ஒன்று, எப்பாடுபட்டாவது பாபாவைத் திரும்பவும் சிர்டீக்கு அழைத்துக்கொண்டு வரும்வரை, ஒருவரையொருவர் பிரிவதில்லை என்னும் திட வைராக்கியத்துடன் சிர்டீயி­ருந்து ரஹாதாவி­ருந்த இத்காவிற்குச் சென்றது.

136 ஆனால், பாபா இதற்கு நேரெதிரான நிலைப்பாடு எடுத்தார். ''இந்தப் பக்கீர் மஹாகோபி; அவரைச் சம்மதிக்கவைக்க முயற்சி செய்யாதீர்கள்; ஏனெனில், நீங்கள் அவ்வாறு செய்யின், அவர் என்னை எப்பொழுதுமே விடுவிக்கமாட்டார்.--

137 ''நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள். அவர் கிராமத்தி­ருந்து திரும்பிவரும் தருணம் வந்துவிட்டது. கடுங்கோபியான அவர் உங்களைத் தீர்த்துக்
கட்டிவிடுவார்.--

138 ''பயங்கரமான கோபம் அவருடைய முகத்தைச் சிவக்க வைத்துவிடும். போங்கள், போங்கள், உடனே இடத்தைக் கா­செய்துவிட்டு சிர்டீ போகும் பாதையில் நடையைக் கட்டுங்கள்ஃஃ.

139 ''அடுத்ததாக என்ன செய்வது? நம்முடைய எதிர்பார்ப்புக்கு நேரெதிராக பாபா பேசுகிறாரேõஃஃ என்று அவர்கள் சிந்தித்தனர். இதன் நடுவே, பக்கீர் எதிர்பாராதவிதமாகத் திரும்பி வந்து, அவர்களை வினவ ஆரம்பித்தார்.

140 ''ஆக, நீங்கள் இந்த இளைஞனுக்காக வந்திருக்கிறீர்கள் அல்லீரோ? கோஷ்டியாக என்ன பேச்சுவார்த்தை நடத்திக்கொண் டிருக்கிறீர்கள்? இளைஞனைத் திரும்ப அழைத்துக்கொண்டு போகவேண்டுமென்ற எண்ணமிருந்தால், அதை மறந்துவிடுங்கள்; அது நடக்காத காரியம்ஃஃ.

141 ஆரம்பத்தில் இவ்விதமாக அவர் வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்­விட்டாலும், கடைசியில் அவரே கிராமமக்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி இவ்வாறு சொன்னார், ''உங்களுடன் என்னைச் சிர்டீக்கு அழைத்துச் செல்லுங்கள்; நாமெல்லோரும் நம்முடன் இந்தப் பையனையும் அழைத்துக்கொண்டு போவோம்.ஃஃ

142 இவ்விதமாகப் பக்கீரும் கோஷ்டியுடன் திரும்பி சிர்டீக்கு வந்தார்õ அவருக்கு பாபாவிடமிருந்து பிரிய மனமில்லை; பாபாவுக்கும் அவரை அனுப்பிவிட மனமில்லை. இது எப்படிச் சாத்தியமாயிற்று என்று யாருக்குமே புரியவில்லைõ

143 ஸாயீ பர பிரம்மத்தின் அவதாரம்; பக்கீரோ பிரமையே1 உருவானவர். சிர்டீயில் தேவிதாஸரால் பரீக்ஷை செய்யப்பட்டபோது பிரமைகள் அனைத்தும் தூள்தூளாகிவிட்டன.

144 தேவிதாஸ் சுந்தரமான உருவமும் ஒளிவீசிய கண்களும் மனோஹரமான முகமும் படைத்தவர். சிர்டீக்கு முதன்முதலாக அவர் வந்தபோது அவருக்குப் பத்து அல்லது பதினொன்று வயதுதான் இருக்கும்.

145 ஒரு லங்கோட்டை மாத்திரம் கட்டிக்கொண்டு, இந்த பாலகன், வந்த புதிதில் மாருதி கோயி­ல் தங்கினான்.

146 ஆப்பா பில்லும் மஹால்ஸாபதியும் அடிக்கடி தேவிதாஸரிடம் சென்றனர். காசிராமரும் மற்றவர்களும் இவருக்கு மளிகைச் சாமான்களையும் விறகையும் அளித்தனர். கொஞ்சங்கொஞ்சமாக அவருடைய முக்கியத்துவம் வளர்ந்தது.

147 பாபா கல்யாணக்கோஷ்டியுடன் வருவதற்கு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாகவே, தேவிதாஸர் சிர்டீயில் தங்குவதற்கு வந்துவிட்டார்.

148 தேவிதாஸர் ஆப்பா பில்லுக்குக் கரும்பலகையில் எழுதக் கற்றுக்கொடுத்தார். வேங்கடேச தோத்திரத்தை எல்லாருக்கும் சொல்­க்கொடுத்து கோஷ்டியாகப் பாராயணம் செய்யவைத்தார். இவ்வகுப்புகளை அவர் தவறாது நடத்தினார்.

149 தேவிதாஸர் மஹாஞானி. தாத்யாபா (தாத்யா கணபதி பாடீல் கோதே) இவரைத் தம் குருவாகக் கொண்டார். காசிநாதரும் மற்றவர்களும் இவருடைய சிஷ்யர்களாகவும் அடியவர்களாகவும் ஆனார்கள்.

150 தேவிதாஸர் முன்னிலையில் பக்கீர் கொண்டுவரப்பட்டார். தேவிதாஸரும் பக்கீரும் சாஸ்திரரீதியாக வாக்குவாதம் செய்தனர். தம்முடைய தவத்தின் சக்தியால் தேவிதாஸர் பக்கீரை அடியோடு தோற்கடித்துவிட்டார். பக்கீர் சிர்டீயி­ருந்து விரட்டப்பட்டார்.

151 சிர்டீயி­ருந்து தப்பியோடிய பிறகு, பக்கீர் வைஜாபுரிக்குச் சென்று அங்கு வாழ்ந்துவந்தார். பல வருடங்களுக்குப் பிறகு அவர் சிர்டீக்கு வந்து ஸாயிநாதரை நமஸ்காரம் செய்தார்.

152 தாம் குருவென்றும் பாபா சிஷ்யரென்றும் எண்ணிய பிரமையனைத்தும் நிவிர்த்தியாகி, மன்னிப்புக் கோரியதால் பக்கீர் தூய்மையடைந்துவிட்டார். பாபாவும் அவரை முன்போலவே ஆதரித்தார்.

153 பாபாவினுடைய வழிமுறைகள் இவ்வாறு ஆராய்ச்சிக்கும் காரணகாரிய விளக்கத்திற்கும் அப்பாற்பட்டவைõ நேரம் வந்தபோது பிரச்சினை தீர்வு செய்யப்பட்டது; ஆனால், அதுவரை பாபா பொறுமையாக குருசிஷ்ய உறவுக்கு மதிப்புக்கொடுத்து வாழ்ந்தார்.

154 குருவென்று பக்கீர் தமக்குத்தாமே நினைத்துக்கொண்டால், அது முழுமையாக அவருடைய பொறுப்பாகிறது. ஆனால், சிஷ்யன் என்கிற முறையில் தமது கடமைகள் என்னவென்று தெரிந்துகொண்டு அவற்றைச் செவ்வனே செய்தார் பாபா. இதுதான் இக்காதையின் (ஸாயீநாதராலேயே வாழ்ந்து காட்டப்பட்ட) பாடமாகும்.

155 ஒருவர் குருவிடம் பரிபூரணமான சரணாகதியடைவதைவிடவும் குரு அவரைத் தம்முடைய சிஷ்யராக முழுமனத்துடன் ஏற்றுக்கொள்வதைவிடவும் உயர்ந்த விஷயம் இவ்வுலகத்தில் வேறெதுவுமே இல்லை. இந்தப் பரஸ்பர உறவு ஏற்படாமல் உலக வாழ்வெனும் ஸமுத்திரத்தை எவராலும் கடக்க இயலாது.

156 இக் காதையின் முக்கியமான பாடம் இதுவே. ஆயினும், தம்முடைய அஹங்காரத்தை முழுமையுமாக அழித்துவிடவேண்டும் என்று உறுதியாகத் தீர்மானம் செய்யக்கூடிய தைரியம் இருப்பவரும் (தீர்மானத்தின்படி செயல்பட்டு) அஹங்காரமற்ற நிலை என்னும் கோட்டையை ஜெயித்துப்பிடிப்பவரும் அபூர்வமானவரேõ

157 இங்கு அறிவுபூர்வமான சிந்தனைகளும் சாமர்த்தியமும் எடுபடா. உயர்ந்த ஆன்மீக நிலையை அடையவேண்டுமென்று விரும்புபவர், அஹந்தையையும் கர்வத்தையும் அறவே ஒழித்துவிட்டு வாழ்க்கை நடத்தவேண்டும்.

158 பூதவுட­­ருக்கும் அபிமானத்தை எரித்துவிட்டவரே, எடுத்த ஜன்மத்தின் நிறைவைக் காணமுடியும். பிறகு, அவர் முக்திபெறுவதற்காக யாரிடமாவது சிஷ்யராக இருப்பதை ஏற்பார்.

159 (பாபாவின்) இளமையும் கவர்ச்சியும் நிறைந்த உருவத்தில், பற்றற்ற மனமும் இருந்ததைப் பார்த்த பெரியோர்களும் சிறியோர்களுமாகிய அனைத்து மக்களும் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர்.

160 ஞானிகளின் தேஹ சம்பந்தமான நிகழ்ச்சிகளும் அவர்களுடைய முன்ஜன்ம வினைப்படியேதான் நடக்கின்றன; இருப்பினும், வினையின் பாரத்தை அவர்கள் சுமப்பதில்லை. காரணம், 'செயல்புரிபவன் நான்ஃ என்ற எண்ணமே அவர்களுக்கு இருப்பதில்லை.

161 சூரியன் எப்படி இருட்டில் இருக்கமுடியாதோ, அப்படியே ஒரு ஞானி துவைத1 பா(ஆஏஅ)வத்தில் இருக்கமுடியாது; ஏனெனில், இப்பிரபஞ்சமே அவரிடத்தில்தான் இருக்கிறது; அவர் அத்வைத2 பா(ஆஏஅ)வத்தில் வாழ்கிறார்.

162 இந்த குரு சிஷ்ய சரித்திரத்தை, பரமபக்தரான மஹால்ஸாபதி விவரித்த விதமாகப் பிரவசனம் செய்தாகிவிட்டது.

163 இக் காதை இவ்வாறு நிறைவடையட்டும். அடுத்த காதை இதைவிட ஆழமானது. கிரமப்படி சொல்லப்படும்; கேட்கும்போது கவனத்துடன் கேளுங்கள்.

164 மசூதியினுடைய நிலைமை எவ்வாறு இருந்தது? எவ்வளவு முயற்சியால் அது சீர்படுத்தப்பட்டது? ஸாயீ ஹிந்துவா முஸ்லீமா என்று உறுதியாக எவருக்குமே தெரியாதது எப்படி? (என்பதுபற்றியெல்லாம் சொல்லப்போகிறேன்).

165 தோதிபோதி, கண்டயோகம் போன்ற பாபாவின் யோக சாதனைகள், மற்றும் அவர் எப்படி பக்தர்களின் கர்ம வினைகளால் ஏற்பட்ட உபாதைகளைத் தம்முடைய உட­ல் ஏற்றுக்கொண்டார் என்பதுபற்றியெல்லாம் முறைப்படி, எதுவும் விட்டுப்போகாமல் பிறகு சொல்லப்படும்.

166 ஹேமாட் பணிவுடன் ஸாயீயை சரணடைகிறேன். இந்தப் பிரவசனம் அவருடைய பிரஸாதமேயாகும். இப்புண்ணியமான காதையைக் கேட்பதாலேயே எல்லாப் பாவங்களும் அழிக்கப்படும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'காணாமற் போனதும் சிர்டீக்குத் திரும்பி வந்ததும்ஃ என்னும் ஐந்தாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.