Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 4

4. சிர்டீக்கு ஸாயீபாபா அவதரணம் (இறங்கி வருதல்)


ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 கடவுள் வாழ்த்தைப் பின்தொடர்ந்து இரண்டு அத்தியாயங்களில் இக்காவியத்தின் பிரயோஜனம், யாருக்காக எழுதப்பட்டது, காவியத்திற்கும் பொருளுக்கும் என்ன சம்பந்தம், இவைபற்றித் தேவையான அளவிற்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

2 இப்பொழுது, எந்நிமித்தமாக ஞானிகள் இப்பூவுலகில் அவதாரம் செய்யவேண்டும்; வேறுவிதமாகச் சொன்னால், எந்தவிதமான சிரமமான காரியம் அவர்களை மனித உருவம் எடுத்துக்கொண்டு இவ்வுலகிற்கு வரச்செய்கிறது என்னும் காரணத்தைக் கேளுங்கள்.

3 கதை கேட்கும் மஹராஜர்களேõ உங்களுடைய பாததூளியான எனக்கு, உங்களுடைய கவனத்தை வேண்டிக் கெஞ்சுவதில் வெட்கம் ஏதுமில்லை.

4 ஒரு ஞானியின் சரித்திரம் களிப்பூட்டக்கூடியது; அதிலும் இது ஸாயீ கதாமிருதம். விசுவாசமுள்ள பக்தர்களேõ இதை நிறையப்பருகி ஆனந்தமடையுங்கள்.

5 வர்ணாசிரம தருமத்தைப் பிராமணர்கள் மதிக்காதபோதும், பிராமணர் அல்லாதவர்கள் பிராமணர்கள் ஆவதற்கு முயற்சி செய்யும்போதும், தண்டிக்கும் நோக்கத்தில் மதகுருமார்கள் அவமதிக்கப்படும்போதும்,

6 தர்மசாஸ்திரங்களில் சொல்லப்பட்ட விதிகளை யாரும் மதிக்காதபோதும், ஒவ்வொருவனும் தன்னைத்தானே பேரறிஞனாக நினைத்துக்கொள்ளும்போதும், இவ்வகையில் ஒருவனை ஒருவன் போட்டி போட்டுக்கொண்டு மிஞ்சுவதற்கு முயலும்போதும், யாரும் யாருடைய அறிவுரையையும் கேட்க விரும்பாதபோதும்,

7 செய்யத்தக்க காரியம் - செய்யத்தகாத காரியம், தின்னத்தக்க பொருள் - தின்னத்தகாத பொருள், என்று பாராமல் ஆசார விதிகள் அலட்சியம் செய்யப்படும்போதும், பலபேர் முன்னிலையில் பிராமணர்களே மது அருந்தி மாமிச போஜனம் செய்யும் அளவிற்குச் சீரழிந்து போகும்போதும்,

8 அடித்தளத்து மக்கள் இன்னல்பட்டுக் குமுறும் வகையில் அராஜகத்தையும் அடக்குமுறையையும் வலுவடையச் செய்யும்போதும், மதப்பிரிவுகளுக்கிடையில் துவேஷமெனும் தீ தூண்டிவிடப்படும்போதும்,

9 பிராமணர்கள் தினப்படிக் கடன்களான ஸ்நானத்தையும் ஸந்தியாவந்தனத்தையும்1 தவிர்த்து மறுக்கும்போதும், வைதீகர்கள் தளர்வுற்று தெய்வங்களைப் பிரீதி செய்யும் ஹோமங்களையும் மதச்சடங்குகளையும் செய்யாமல் விட்டுவிடும்போதும், யோகிகள் ஜபத்தையும் தவத்தையும் தியானத்தையும் கைவிட்டுவிட்டபோதும், ஞானிகள் அவதாரம் செய்வதற்கான நேரம் பழுத்துவிட்டது எனக் கொள்ளலாம்.

10 செல்வமும் புகழும் மனைவியும் மக்களும் மட்டுந்தான் சுகத்தைக் கொடுக்கக் கூடியவை என்று கருதி, ஜனங்கள் ஆன்மீகப் பாதையி­ருந்து முழுதும் விலகிவிடும்போது ஞானிகள் அவதாரம் செய்கின்றனர்.

11 தருமநெறி நடக்காததால் மக்கள் ஆன்மீக லாபம் எதையுமே அடையாத நிலையில், தருமத்தை மறுபடியும் நிலைநாட்ட ஞானிகள் மனித உருவத்தில் அவதாரம் செய்கின்றனர்.

12 ஆயுளையும் ஆரோக்கியத்தையும் ஐசுவரியத்தையும் அளிக்கக்கூடிய சக்திகளை சுவையான உணவிலும் சிற்றின்பத்திலும் அழித்து, மக்கள் ஆன்மீக உயர்வு பெறும் வாய்ப்பை அடியோடு இழக்கும் காலத்து, ஞானிகள் உலகத்தில் தோன்றுகின்றனர்.

13 வர்ணாசிரம தர்மத்தை மீண்டும் நிர்த்தாரணம் செய்யவும், அதர்மத்தை அழிக்கவும், தீனர்களையும் ஏழைகளையும் பலஹீனர்களையும் ரக்ஷிப்பதற்காகவும், ஞானிகள் பூமியில் அவதாரம் செய்கின்றனர்.

14 ஞானிகள் முக்தி பெற்றவர்கள்; தீனர்களை உத்தாரணம் (தீங்கினின்றும் மீளச்) செய்வதற்காகவே எந்நேரமும் உழைப்பவர்கள். அவதாரம் செய்வது உலக நலனுக்காகவே; அவர்களுக்கு சுயநலத் தேவைகள் ஏதும் இல்லை.

15 பக்தர்களைக் கரையேற்றுவதற்காக, ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் உலக வாழ்வைச் சுற்றிப் பற்றின்மை எனும் அஸ்திவாரத்தை உறுதியாகப் போட்டு, அதன்மேல் ஆன்மீகக் கோயிலைக் கட்டுகின்றனர்.

16 தருமத்தை மறுபடியும் நிலைநாட்டிவிட்டு வந்த நோக்கத்தையும் பூர்த்திசெய்துவிட்டு ஞானிகள் அவதாரத்தை முடித்துக்கொள்கின்றனர்.

17 ஜீவாத்மா (மனிதனுடைய ஆத்மா) இவ்வுலகனைத்திற்கும் ஆனந்தம் அளிக்கும் பரமேச்வரனே (இறைவனே). பரமேச்வரனே க்ஷேமத்தையும் சுகத்தையும் அளிக்கும் குருவும் ஆவான்.

18 அவனே எல்லையில்லாத அன்பாவான். அவன் நித்தியன்; நிரந்தரன்; பேதமில்லாத முழுமையானவன்; தேச, கால, வஸ்து பேதங்களைக் கடந்தவன்; இரண்டாகப் பிரிக்க முடியாதவன்; முடிவில்லாதவன்.

19 பரா1, பச்யந்தீ2, மத்யமா3, வைகரீ4 என்னும் நான்கு படிகளைக் கொண்ட பேச்சு அவனை விவரிக்கமுடியாமல் தோல்வியடைந்துவிட்டது. ஞான ரூபமாகிய நான்கு வேதங்களாலும் இது முடியவில்லை; இதுவன்று,5 இதுவன்று, இதுவன்று, என்ற பெரிய பட்டிய­ட்டுப் போர்த்துக்கொண்டு தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளன.

20 ஆறு சாஸ்திரங்களும்6 வெட்கி மௌனமாக இருக்கின்றன; பதினெட்டுப் புராணங்களும்7 விவரிக்கும் முயற்சியில் அயர்ந்துபோய்விட்டன. கடைசியில் ஒரே வழி, மனத்தாலும் வாக்காலும் உடலாலும் சரணடைந்து வழிபடுவதுதான்.

21 விசித்திரமான லீலைகள் நிரம்பியதும் பரம பவித்திரமான கதைகளைக் கொண்டதுமான (ஸாயீ போன்ற) ஞானியின் சரித்திரத்தைக் கேட்பதால் நம்முடைய காதுகள் தூய்மையடையட்டும்.

22 அவரே எல்லா இந்திரியங்களையும் இயக்குபவர்; இக் காவியம் எழுதும் புத்தியையும் கொடுத்தார். அவருடைய உந்துதலாலேயே இக் காவியம் அனாயாசமாகவும் (சுலபமாகவும்) கிரமமாகவும் வெளிவருகிறது.

23 அவர் எல்லாருடைய இதயத்திலும் உறைகிறார். இப் பிரபஞ்சத்தின் உள்ளேயும் வெளியேயும் எங்கும் செல்கிறார். இவ்வாறிருக்க நான் கவலைப்படுவது வீணன்றோ?

24 அவருடைய உன்னதமான குணங்களை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தால், மனம் சலனமற்று உறைந்துபோகிறது; எவ்வாறு வார்த்தைகள் அவரை விவரிக்க முடியும்? திடமான மௌனம்தான் ஒரே வழி.

25 மூக்கு மலரின் நறுமணத்தை முகர்கிறது; தோல் குளிரையும் வெப்பத்தையும் உணர்கிறது; கண்கள் அழகைப் பார்த்து அனுபவிக்கின்றன; ஒவ்வொன்றும் தனக்கு வேண்டிய இன்பத்தைத் தேடிக்கொள்கிறது.

26 நாக்கு சர்க்கரையின் இனிமையைச் சுவைக்கத்தான் செய்கிறது; ஆயினும், நாவால் அந்த அனுபவத்தை மற்றவர்களுக்கு விவரிக்க இயலாது. அதுபோலவே, ஸாயீயின் அற்புதமான குணங்களை என்னால் (அனுபவிக்க முடிகிறதே தவிர) விரிவாகச் சொல்லமுடியவில்லை.

27 ஸத்குருவே விரும்பும் போதுதான், தேர்ந்தெடுத்தவர்களுக்கு உணர்வூட்டி, விவரணத்திற்கு அப்பாற்பட்டதைச் சொற்பொ­வோடு மிக விரிவாகவே பிரவசனம் செய்யவைக்கிறார்.

1. பேச்சின் முதல்நிலை - மூச்சுக்காற்று அசையும் நிலை - ஓம் எனும் பிரணவ நாதமே இதற்குச் சின்னம்

2. இரண்டாவது நிலை - மனத்தில் எண்ணம் தோன்றும் நிலை - விவேகம் இங்கு செயல்படுகிறது.

3. மூன்றாவது நிலை - சப்தம் தொண்டைக்குழாயை வந்தடையும் நிலை

4. நான்காவது நிலை - ஒ­யாக முகத்தி­ருந்து வெளிப்படும் நிலை

5. 'நேதிஃ நியாயம் என்று ஸம்ஸ்கிருதத்தில் பெயர்படும்

6. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமாம்ஸை, வேதாந்தம் ஆகியவை ஆறு சாஸ்திரங்கள்

7. பிரம்ம புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், ­ங்க புராணம், கருட புராணம், நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், ஸ்கந்த புராணம், பவிஷ்ய புராணம், பிரம்மவைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராஹ புராணம், மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம், வாயு புராணம் ஆகியவை 18 புராணங்கள்.

28 இவ்வார்த்தைகள் கேவலம் உபசாரத்திற்காகவோ அவையடக்கத்திற்காகவோ சொல்லப்படுபவை அல்ல. ஹிருதயத்தி­ருந்து எழும் வார்த்தைகள் இவை. ஆகவே, உங்களுடைய ஒருமுகப்பட்ட கவனத்தைப் பிரார்த்திக்கிறேன்.

29 காண்காபூரும்1 நரஸிம்ஹவாடியும்2 ஔதும்பரும்3 பில்லவடியும்4 எப்படியோ, அப்படியே சிர்டீயும் கோதாவரி நதிக்கரையில் இருக்கும் ஒரு புண்ணிய க்ஷேத்திரம்.

30 கோதாவரி நீரேõ கோதாவரி தீரமேõ கோதாவரியின் குளிர்ந்த காற்றேõ நீங்கள் அஞ்ஞானத்தை அழிக்கிறீர்கள்õ

31 கோதாவரியின் மஹிமையை உலகமே அறியும். ஒருவரைவிட மற்றொருவர் பிரபலமாக, பல தலைசிறந்த ஞானிகள் கோதாவரி நதிக்கரையி­ருந்து வந்தனர்.

32 கோதாவரி நதிதீரத்தில் அமைந்த பல புண்ணியத் தலங்கள் புராணங்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. கோமதி (கோதாவரி) நீர், அருந்தினாலும் ஸ்நானம் செய்தாலும் பாவங்களை ஒழிப்பதுமட்டுமல்லாமல் இவ்வுலகத் துன்பங்களி­ருந்தும் விடுதலை அளிக்கும்.

33 இதே கோதாவரி நதி, அஹமத்நகர் ஜில்லா கோபர்காங்வ் தாலுகாவிலுள்ள கோபர்காங்வின் அருகே வளைந்து வந்து புனிதப் பயணிகளுக்கு சிர்டீக்கு வழிகாட்டுகிறது.

34 கோதாவரியைக் கடந்து எதிர்க்கரைக்கு வந்து, அங்கிருந்து ஆறுமைல் தூரத்தில் இருக்கும் நிம்காங்வுக்குள் நுழையும்போது சிர்டீ நேராகக் கண்களுக்குத் தென்படுகிறது.

35 நிவிருத்தி, ஞானதேவர், முக்தாபாயீ, நாமதேவர், ஜனாபாயீ, கோராகும்பர், கோணாயீ, துகாராம், நரஹரி, நர்ஸீபாயீ, ஸஜன் கஸாயீ, ஸாவதாமா­.

36 இவர்கள் எல்லோரும் முற்கால ஞானிகள்; சமீப காலத்திலும் ஞானிகள் வாழ்ந்திருக்கின்றனர். அவதிப்படுபவர்களுக்கும் துன்பத்தில் உழல்பவர்களுக்கும் அடைக்கலமாக விளங்கிய இவர்கள் அனைவரும் வஸுதேவ குடும்பிகள்5.

37 ஸமர்த்த ராமதாஸர் என்னும் புகழ்பெற்ற ஞானி, உலகத்தை உய்விப்பதற்காகக் கோதாவரி6 நதிதீரத்தி­ருந்து கிருஷ்ணா6 நதிதீரத்திற்குச் சென்றார்.

38 அதுபோலவே, யோகீச்வரரான ஸாயீ, சிர்டீ செய்த புண்ணியத்தாலும் உலக க்ஷேமத்திற்காகவும் கோதாவரிக்கரைக்கு அருகில் வந்துசேர்ந்தார்.

39 இரும்பைத் தொட்டுப் பொன்னாக்கும் பரீஸ்7, ஞானிகளுக்கு உதாரணமாகக் காட்டப்படுகிறது. பக்தர்களை முழுமையாக மாறுதலடையச் செய்துத் தம்முடைய நிலைக்கே உயர்த்திவிடும் அளவிற்கு, ஞானிகளுடைய வழிமுறைகள் அதிசயமானவை.

1,2,3,4 - இந்நான்கும் தத்தாத்ரேயரின் அருள்பொங்கும் விசேஷமான க்ஷேத்திரங்கள்.

5. உலகத்தையே தமது குடும்பமாகக் கருதிய ஞானிகள்

6. இரண்டுமே மஹாராஷ்டிரத்தில் உற்பத்தியாகும் நதிகள்

7. ஸ்பர்சவேதி - பரிசனவேதி

40 பேத பா(ஆஏஅ)வத்தை அழித்து, பிரபஞ்சமனைத்தும் பிரம்மம் ஒளிர்வதைக் கண்டு, நகரும் நகராப் பொருள்களடங்கிய சிருஷ்டியின் அழகை, பிரித்துப் பார்க்கமுடியாத பிரம்மத்தின் அழகாகவே பார்க்கும் கண்ணோட்டம்.

41 இப்பிரபஞ்சமே 'நான் எனும் நான்தான்ஃ என்னும் ஞானம் உதித்தபின் கிடைக்கும் சுகத்தை எவரால் விவரிக்கமுடியும்? அவன் (ஸாதகன்) மிக உயர்ந்த நன்னிலையை அடைகிறான்.

42 அவ்வாறு இப் பிரபஞ்சமும் தானும் ஒன்றே என்ற அனுபவம் வந்தபின், தன்னிடமிருந்து வேறானது எதுவுமே இல்லை என்று தெளிந்தபின், யாரை விரோதபாவமாகப் பார்ப்பது? யாரிடம் பயப்படுவது?

(40, 41 & 42 குருவின் அருளால் பெறக்கூடிய கண்ணோட்டத்தையும் மனோபாவத்தையும் விவரிக்கின்றன).

43 மங்கள்வேடாவில் தாமாஜி, ஸஜ்ஜன்கட்டில் ஸமர்த்த ராமதாஸ், வாடியில் நரஸிம்ஹ ஸரஸ்வதி, அதைப்போலவே சிர்டீயில் ஸாயீநாதர்.

44 இவ்வுலகவாழ்வு நடப்பதற்கும் கடப்பதற்கும் மிகக் கடினமானது. ஞானத்தின் உருவானவனே இதை ஜெயித்து சாந்தியை ஆபரணமாக அணிகிறான்.

45 வைஷ்ணவர்களின் புக­டமும் உதாரகுணமுள்ளவர்களிலேயே உதாரமானவரும் கர்ணனைப் போன்ற கொடையாளியுமான ஸாயீ, ஆன்மீக ஞானம் அருள்வதில் ரஸத்தின்1 ரஸமாவார்.

46 அழியக்கூடிய பொருளில் ஆசை வைக்காது தமக்குள்ளேயே மூழ்கிப்போய், மனித வாழ்வின் உச்சநிலையையே லட்சியமாகக் கொண்டவர் - அவருடைய இந்நிலையை எவ்வாறு வர்ணிக்கமுடியும்?

47 அவருக்குப் பூவுலக வாழ்வில் செல்வமும் இல்லை, தரித்திரமும் இல்லை. அவர் மேலுலக சுகங்களை நாடவும் இல்லை, வெறுக்கவும் இல்லை. அவருடைய அந்தரங்கம் கண்ணாடியைப்போல் நிர்மலமாக இருக்கிறது; பேச்சோ எப்போதுமே அமிருதமழை.

48 யாருடைய பார்வைக்கு அரசனும் ஆண்டியும் தரித்திரனும் தீனனும் சமமாகத் தெரிகின்றனரோ, யார் மான அவமானங்களைக் கடந்தவரோ, அவரே எங்கும் வியாபித்திருக்கும் பகவான்.

49 அவர் பொதுமக்களோடு ஸஹஜமாகப் பேசிப்பழகினார்; அவர்களுடன் சேர்ந்துகொண்டு முரளிகளின்2 நாட்டியத்தையும் அங்க அசைவுகளையும் பார்த்தார்; கஜல்3 பாட்டுகளை ரஸித்துத் தலையையும் ஆட்டினார்; ஆனால், அவருடைய ஸமாதிநிலை கலையவில்லைõ

50 அல்லாவின் நாமமே அவருடைய முத்திரை; உலகமே இரவின் இருளில் தூங்கிக்கொண் டிருந்தபோது அவர் வெளிச்சத்தில் விழித்திருந்தார். மற்ற

51 பாபா எந்த ஆசிரமத்தைச்1 சேர்ந்தவர் என்று எவராலும் நிச்சயஞ்செய்ய இயலாது. ஏனெனில், அவர் எந்த ஆசிரமத்தின் விதிகளின்படியும் வாழவில்லை. சாதாரணமாக, இருக்கும் இடத்தைவிட்டு அவர் எங்கும் செல்வதில்லை; இருப்பினும் எல்லா இடங்களிலும் நடக்கும் சகல விவகாரங்களும் அவருக்குத் தெரியும்.

52 வெளிப்பார்வைக்கு அவர் தினமும், மெச்சத்தக்க தர்பார் நடத்தி ஆயிரத்தொன்று கதைகள் சொன்னாலும் உள்ளுக்குள்ளே மௌனத்தை அனுசரித்தார்.

53 மசூதியின் சுவரின்மீது சாய்ந்துகொண்டு வெகுநேரம் நின்றுகொண் டிருப்பார். காலையிலும் மாலையிலும் லெண்டிக்கோ அல்லது சாவடிக்கோ போய்ச் சுற்றிவருவார். ஆயினும், தன்னிலேயே மூழ்கியிருக்கும் நிலையென்னவோ, அகண்டம் (இடைவிடாதது).

54 எந்த ஜன்மத்தில், எந்த சந்தர்ப்பத்தில், எந்நேரத்தில், எவ்விதத்தில், என்ன தவம் செய்தேனோ அறியேன்; ஸாயீ தம் சிறகுகளுள் என்னை அணைத்துக்கொண்டார்.

55 ஓõ பிறவியி­ருந்தே கள்ளனாகிய நான் இதைத் தவம் செய்து பெற்றேன் என்று எவ்வாறு சொல்வேன்? தீனவத்ஸலராகிய ஸாயீயின் கிருபையைத் தவிர, இதற்கு வேறொரு காரணமும் இல்லை.

56 ஸித்தகோடியாகப் பிறந்தும், ஸாதகரைப்போல் நடந்துகொண்டார். இயற்கையாகவே கர்வமற்றவரும் பணிவுடையவருமான அவர், ஸகல ஜனங்களையும் மகிழ்விக்க முயன்றார்.

57 பைடாணுக்கு ஏகநாதரும் ஆலந்திக்கு ஞானேச்வரரும் எப்படியோ, அப்படியே சிர்டீக்கு ஸாயீ பெருமை சேர்த்தார்.

58 சிர்டீயின் மண்ணும் புல்லும் புண்ணியம் செய்தவை. பிரயத்தனம் ஏதும் இன்றியே பாபாவின் பாதங்களைத் தினமும் முத்தமிட்டு, அவரது பாததூளியை சிரசின்மேல் ஏற்றுக்கொண்டன.

59 சிர்டீயே நமது பண்டரிபுரம், சிர்டீயே நமது ஜகந்நாதபுரி, சிர்டீயே நமது துவாரகை, சிர்டீயே நமது கயை, காசி விச்வேச்வரம். நமது ராமேச்வரமும் சிர்டீயில்தான் இருக்கிறது.

60 சிர்டீயே நமது பத்ரிநாதம், கேதாரநாதம், நாசிக்கின் திரியம்பகேசுவரம், உஜ்ஜைனியின் மஹாகாளேச்வரம், கோகர்ணத்தின் மஹாபலேச்வரம்.

61 ஸாயீயின் புனிதமான சங்கமே நமக்கு ஆகமமும்1 நிகமமும்2 ஆகும்; அதுவே நமது வாழ்க்கையின் துன்பங்களையும் வ­களையும் போக்கும்; எளிதான முக்திமார்க்கமும் ஸாயீயின் அண்மையே.

62 ஸமர்த்த ஸாயீயை தரிசனம் செய்வதே நமது யோகசாதனம்; அவருடன் சம்பாஷணை செய்வது பாவங்களைத் துடைத்துவிடும் உபாயம்.

63 அவருடைய பாதங்களை மென்மையாகப் பிடித்துவிடுவதென்பது கங்கையும் யமுனையும் ஸரஸ்வதியும் சங்கமமாகும் திரிவேணியில்3 செய்யும் புண்ணிய ஸ்நானம்; அவருடைய பாத தீர்த்தத்தைப் பருகுவது வாஸனைகளை4 நிர்மூலமாக்கிவிடும்.

64 அவருடைய ஆணை நமக்கு வேதவாக்காகும்; அவருடைய பிரஸாதமான உதீயை (விபூதி) உட்கொள்வது, எந்தக் கோணத்தில் பார்த்தாலும் புண்ணியம் சேர்ப்பதாகும்.

65 ஸாயீயே நம்முடைய பர பிரம்மம்; அவரிடத்தில்தான் நமது ஆன்மீக மேநிலை இருக்கிறது. ஸாயீயே ராமன்; ஸாயீயே கிருஷ்ணன்; ஸாயீயே நமது நிஜமான அடைக்கலம்.

66 ஸாயீ இரட்டைச் சுழல்களுக்கு (இன்பம் / துன்பம் - விருப்பு / வெறுப்பு போன்றவை) அப்பாற்பட்டவர். அவர் உல்லாசப்படுவதும் இல்லை; விசனப்படுவதும் இல்லை. அவர் தம்மிலேயே மூழ்கியவர்; எக்காலத்தும் முடிவான உண்மையானவர்.

67 சிர்டீயை மூலஸ்தானமாக வைத்துக்கொண்டு பாபாவினுடைய செல்வாக்கு பஞ்சாப்பிற்கும் கல்கத்தாவிற்கும் குஜராத்திற்கும் தக்காணத்திற்கும் கர்நாடகத்திற்கும் - அகில இந்தியாவிற்கும் பரவியது.

68 சிர்டீயி­ருக்கும் ஸாயீபாபாவின் ஸமாதி எல்லா ஸாதுக்களும் மஹான்களும் கூடுமிடம். போகும் மார்க்கத்தில் ஒவ்வொரு காலடிக்கும் உலகபந்தங்கள் இற்று விழுகின்றன.

69 அவருடைய ஸமாதியை தரிசனம் செய்வதே பிறவிப்பயனை அளிக்கும்போது, வாழ்நாள் முழுவதும் அவருக்கு ஸேவை செய்த மஹானுபாவர்களின் பாக்கியத்தை நான் எவ்வாறு விவரிக்கமுடியும்?

70 மசூதியின்மேலும் புட்டி வாடாவின்மேலும் (ஸமாதி மந்திர்) அழகான கொடிவரிசைகள் வானளாவி, பக்தர்களை 'வா, வாஃ என்று தம் கைகளால் கூப்பிடுவதுபோலப் பறக்கின்றன.

71 பாபா ஒரு மஹான் என்கிற பெருமை கிராமம் கிராமமாகப் பிரஸித்தி ஆயிற்று. சிலர் அவரிடம் நேர்த்திக்கடன் பிரார்த்தனை செய்துகொண்டு, சிரத்தையுடன் விரதம் இருந்து பயன்பெற்றனர்; சிலர் தரிசனம் செய்வதாலேயே மனவமைதி அடைந்தனர்.

1. கோயில் நிர்மாணம் மற்றும் வழிபாட்டு முறைகள் அடங்கிய சாஸ்திரம்

2. தர்ம சாஸ்திரங்கள்

3. அலஹாபாத் - கங்கையும் யமுனையும் இங்கு சங்கமம் ஆகின்றன. ஸரஸ்வதி நதி பூமிக்குக் கீழே சங்கமம் ஆகிறது என்பது ஐதீஹ்யம் (தொன்றுதொட்டு வரும் செவிவழிச் செய்தி).

4. முன் ஜன்மங்களி­ருந்து மனிதர்கள் கொண்டுவரும் விருப்பு வெறுப்புகள், குணாதிசயங்கள்.

72 வருபவர்களுடைய மன ஓட்டம் எப்படி இருந்தாலும், எண்ணங்கள் சுத்தமாக இருப்பினும் கெடுதலாக இருப்பினும், தரிசனமாத்திரத்தில் அவர்களுடைய மனம் நிம்மதியையும் சாந்தியையும் அடைகிறது. மக்கள் தமக்குள்ளே ஆச்சரியமடைந்தனர்.

73 பண்டரிபுரத்து விட்டல் - ரகுமாயி தரிசனம் தரும் அற்புதமான அதே அனுபவம் பக்தர்களுக்கு பாபாவால் சிர்டீயில் அளிக்கப்பட்டது.

74 யாராவது இதை மிகைப்படுத்திச் சொல்லப்பட்ட கருத்தாக நினைத்தால், அவர்களுடைய சந்தேகம் நிவிர்த்தியாகுமாறு, தீவிர விட்டல்பக்தரான கௌளீபுவாவின் கூற்றைக் கேட்கட்டும்.

75 கௌளீபுவா ஒரு பண்டரிபுரத்து வார்க்கரி.1 பண்டரிபுரத்திற்கு முறை தவறாது வருடாவருடம் சென்றதுபோலவே பாபாவின் மீதிருந்த பக்தியால் சிர்டீக்கும் வந்தார்.

76 சுமைதூக்க ஒரு கழுதையையும் துணைக்கு ஒரு சிஷ்யனையும் அழைத்துக்கொண்டு, கௌளீபுவா ''ராம்கிருஷ்ணஹரி - ராம்கிருஷ்ணஹரிஃஃ என்று ஜபம் செய்துகொண்டே புனிதப் பயணம் செய்தார்.

77 தொண்ணூற்றைந்து பிராயத்தினராகிய அவர், வருடத்தில் நான்கு மாதங்களை கோதாவரியின் கரையிலும், மீதி எட்டு மாதங்களை பண்டரிபுரத்திலும் கழித்தார். இவ்வாறு பயணம் செய்ததால், அவரால் பாபாவை வருடத்திற்கு ஒருமுறை தரிசனம் செய்யமுடிந்தது.

78 பாபாவின் முகத்தைப் பார்த்துப் பார்த்து அவர் பணிவுடன் கூவுவார், ''இவரே பண்டரிநாதரின் அவதாரம்; தீனதயாளர்; அநாதைகளின் நாதர்õ--

79 ''காவிவேஷ்டி கட்டிவிட்டால் ஞானியாகிவிட முடியுமா என்ன? முடியவேமுடியாதுõ எலும்பு தேய உழைத்து குருதி தண்ணீராக மாறுமாறு பாடுபடவேண்டும்.--

80 ''ஒன்றுமில்லாமல் ஒருவன் எப்படி தேவனாக முடியும்õ ஸாயீ நடமாடும் பண்டரிராயன். இவ்வுலகமே ஒரு மாயை என்று அசையாத நம்பிக்கையுடன் அதன் பின்னால் இருக்கும் தெய்வீகத்தைப் பார்.ஃஃ

81 பண்டரிநாதரை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வழிபடும் அந்த அடியாரின் கருத்தும் சொற்களும் மேற்கண்டவாறு இருக்கும்போது, பாமரனாகிய என்னுடைய அனுபவம் என்னவாக இருக்கமுடியும்? கதை கேட்பவர்களே இதை அனுமானம் செய்துகொள்ளலாம்.

82 நாமஸ்மரணத்தில் மிகப் பிரீதியுடைய பாபா, ''அல்லாமா­க்-அல்லாமா­க்ஃஃ என்று இடைவிடாது உரத்து ஜபம் செய்ததுமல்லாமல், அடிக்கடி தம் பக்தர்களை இரவும்பகலும் இடைவிடாது ஏழுநாள்கள் நாமஜபம் (நாமஸப்தாஹம்) அவர் முன்னிலையில் செய்யவைத்தார்.

83 ஒரு முறை, தாஸகணு நாமஸப்தாஹம் செய்யும்படி ஆணையிடப்பட்டார். தாஸகணு சொன்னார், ''செய்கிறேன், ஆனால் விட்டல் எனக்குப் பிரஸன்னமாக வேண்டும்ஃஃ.

84 பாபா தம் கையை இதயத்தின்மேல் வைத்து ஆணித்தரமாகச் சொன்னார். ''ஆமாம், ஆமாம், விட்ட­ன் உருவம் பிரஸன்னமாகும். பக்தனுக்குத் தேவையான அளவுக்கு நம்பிக்கை இருந்தால்

85 ''டாகுர்நாதரின் டங்கபுரியும் விட்டல்ராயரின் பண்டர்பூரும் ரண்சோடின் துவாரகையும் எல்லாமே சிர்டீயில் இருக்கின்றன. எங்கே தேடியும் அலையவேண்டியதில்லை.

86 ''விட்டல் என்ன, ஒரு ரஹஸியமான இடத்தி­ருந்தா வெளிவரப்போகிறார்? பக்தர்களின் அபரிமிதமான அன்பினால் உந்தப்பட்டு, இவ்விடத்திலேயே அவர் உங்களுக்காகத் தோன்றுவார்.

87 ''புண்ட­கர் தம்முடைய பெற்றோர்களுக்கு பக்தியுடன் செய்த ஸேவையால், தேவாதிதேவனைத் தாம் சொன்னபடி கேட்கவைத்தார். அவனும் புண்ட­கரின் அன்பாலும் பக்தியாலும் கட்டுண்டு ஒற்றைச் செங்கல்­ன்மேல் நின்று காத்திருந்தான்ஃஃ. (பண்டரிநாதருக்கு விட்டல் என்று பெயர் வந்த கதை)

88 ஆகவே, ஸப்தாஹம் முடியும் தருவாயில், தாஸகணுவிற்குச் சிர்டீயிலேயே விட்டல் தரிசனம் பிராப்தமாகியது என்று சொல்லப்படுகிறது. பாபாவின் வார்த்தைகள் உண்மையாயினõ

89 ஒரு முறை காகாஸாஹேப் தீக்ஷிதர் நியமானுஸாரமாக காலை ஸ்நானம் செய்துவிட்டு வழக்கம்போல் தியானம் செய்யும்போது விட்டல் தரிசனம் கிடைத்தது.

90 பிறகு அவர் பாபாவை தரிசனம் செய்யச் சென்றபோது, பாபா அவரிடம் என்ன சொன்னார் என்னும் அதிசயத்தைப் பாருங்கள். ''ஆக, விட்டல் பாடீல் வந்தார் இல்லையா? அவரை நீர் கட்டாயம் சந்தித்திருப்பீர்; எனக்கு நிச்சயமாகத்
தெரிகிறது.

91 ''ஆனால் உஷார்; அந்த விட்டல் பாடீல் ஒரு நழுவல் பேர்வழி. அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஓரிடத்தில் பலவந்தமாக ஸ்தாபனம் செய்யும். இல்லையெனில், நீர் ஒருகணம் கவனக்குறைவானாலும் போதும், உம்மை ஏமாற்றிவிட்டு ஓடிவிடுவார்ஃஃ.

92 இது காலையில் நடந்த சம்பவமே. இதற்குப் பிறகு சூரியன் உச்சிக்கு வந்த நடுப்பக­ல், எப்படி இன்னுமொரு மஹிமை வாய்ந்த விட்டல் தரிசனத்திற்கு நிரூபணம் கிடைத்ததென்று பாருங்கள்.

93 யாரோ ஒருவர் இன்னொரு கிராமத்தி­ருந்து, பண்டர்பூர் விடோபாவின் இருபத்தைந்து முப்பது படங்களை எடுத்துக்கொண்டு, விற்பதற்காக சிர்டீ கிராமத்திற்கு வந்தார்.

94 அப்படங்கள் தாம் காலையில் தியானத்தில் கண்ட விட்ட­ன் உருவத்தின் பூரணமான அச்சாக இருப்பது கண்டு, தீக்ஷிதர் வியப்பிலாழ்ந்தார். பாபாவினுடைய வார்த்தைகள் உடனே அவருக்கு ஞாபகம் வந்தன.

95 மிகுந்த பிரீதியுடன் ஒரு படத்தை அதற்குண்டான விலையை விற்பனையாளரிடம் கொடுத்து வாங்கி, பக்தி பா(ஆஏஅ)வத்துடன் பூஜைக்கென நிர்மாணம் செய்தார்.

96 பாபாவுக்கு விட்டல் வழிபாட்டில் இருந்த மரியாதையையும் பக்தியையும் மேலும் கோடிட்டுக் காட்டும் வகையில், இன்னுமொரு மனோஹரமானதும் சுந்தரமானதுமான காதையைக் கேளுங்கள்.

97 பகவந்த்ராவ் க்ஷீர்ஸாகர் என்று ஒருவர். அவருக்குத் தந்தை தலைசிறந்த விட்டல் பக்தர்; அடிக்கடி பண்டர்பூருக்குச் செல்வார்.

98 அவருடைய (பகவந்த்ராவ் க்ஷீர்ஸாகர்) வீட்டில் நித்திய பூஜைக்கு ஒரு விட்டல் சிலை இருந்தது. ஆனால், தந்தையின் மறைவுக்குப் பிறகு, பூஜை படையல் எல்லாம் நின்றுவிட்டன. இறந்துபோன முன்னோர்களுக்காக வருடாந்திரமாகச் செய்யப்படும் சிராத்தம் - திதி இவையும் மறந்துபோயின.

99 பண்டரிபுரத்திற்கு ஆண்டுதோறும் போவதைப்பற்றிய பேச்சே எழவில்லைõ பகவந்தராவ் சிர்டீக்கு வந்தபோது, பாபா அவருக்குத் தந்தையை ஞாபகப்படுத்திக்கொண்டு சொன்னார், ''அவர் என் நண்பர்.

100 ''இவர் (பகவந்த்ராவ்) அந்நண்பருக்கு மகனானதால், இவரை நான் சிர்டீக்கு இழுத்துவந்தேன். இவர் இறைவனுக்கேதும் படையல் செய்வதை நிறுத்திவிட்டார்; என்னையும் பட்டினி போட்டுவிட்டார்.

101 ''இவர் விட்டலையே பட்டினி போட்டுவிட்டார். ஆகவே, நான் இவரை சிர்டீக்கு அழைத்து வந்தேன். இப்பொழுது நான் இவருக்கு அனைத்தையும் ஞாபகப்படுத்தி, நித்திய பூஜை செய்யவைக்கிறேன்ஃஃ.

102 ஒரு சந்தர்ப்பத்தில் புண்ணியகாலம் எதுவென்று தெரிந்துகொண்டு, தாஸகணு பிரயாகையில் (திரிவேணி சங்கமம்) ஸ்நானம் செய்ய விரும்பி, பாபாவிடம் அனுமதிபெற வந்தார்.

103 ''பிரயாகையில் ஸ்நானம் செய்வதற்காக அவ்வளவு தூரம் செல்லவேண்டா, சிர்டீயே நமது பிரயாகைஃஃ என்று பாபா பதிலளித்தார். ''மனத்தில் அசைக்கமுடியாத விசுவாசம் இருக்கட்டும்ஃஃ.

104 என்னே அற்புதங்களில் அற்புதம்õ தாஸகணு பாபாவின் பாதங்களைத் தொட்டபோது, இரு கட்டைவிரல்களி­ருந்தும் நீர் சொட்டியது. இரட்டை நதிகளான கங்கையி­ருந்தும் யமுனையி­ருந்தும் புனித நீர் (பாபாவின் பாதங்கள் வழியாக) வெளிவந்து சொட்டியது.

105 இந்த அற்புதத்தைப் பார்த்தவுடன் தாஸகணுவுக்கு உணர்ச்சி வசத்தால் தொண்டை அடைத்தது. பாபாவின் உபகாரம் எவ்வளவு மஹத்தானதுõ நன்றியுணர்வாலும் சந்தோஷத்தாலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

106 இதயத்துள் பொங்கி வழிந்த அன்பு அவரைக் கவிபாடவைத்தது. பாபாவினுடைய எல்லையற்ற சக்தியையும் புரிந்துகொள்ளமுடியாத லீலைகளையும் செய்யுள் வடிவில் பாடிய பிறகுதான் பொங்கிய மனம் திருப்தியடைந்தது.

107 தாஸகணுவின் செய்யுள்கள் கவர்ச்சி மிகுந்தவை. கேட்பவர்களின் ஆவலைத் திருப்திசெய்யும் வகையிலும் ஏற்கெனவே தெரிவித்தவாறும்1 இந்தச் சரியான சமயத்தில் அந்த பயபக்தியூட்டுகிற பாட்டை இங்கே தருகிறேன்.

108 ஜனங்கள் தங்களுடைய அகோரமான பாவத்தைக் கழுவித்தள்ளுவதற்காக கங்கையில் ஸ்நானம் செய்யச் செல்கிறார்கள்; ஆனால், கங்கையோ தன்னுடைய பாவத்தைத் துடைத்துக்கொள்ள, முனிவர்களின் பாதங்களை அடைக்கலமாக அடைகிறாள்.

109 ஸாயீ பாதங்களை விட்டுவிட்டு, கங்கைக்கும் கோதாவரிக்கும் புனிதப் பயணம் செய்யவேண்டிய அவசியம் இல்லை; முனிவரின் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டால் போதும்; சுவாரசியமான ஸாயீயின் கதைகளை பக்தியுடன் பாராயணம் செய்தாலோ கேட்டாலோ போதுமானது.

110 கோணாயீ, தெய்வப் பிராப்தியாக நாமதேவரைக் குழந்தையாகப் பீமரதி நதியில் கண்டெடுத்தார்; தமால், கபீரை பாகீரதி நதியில் முத்துச்சிப்பிக்குள் கண்டெடுத்தார்.

111 அவ்வாறே ஸ்ரீஸாயீநாதர் தம் பக்தர்களுக்காக, சிர்டீ கிராமத்தில் ஒரு வேப்பமரத்தினடியில் பதினாறு வயது பாலகனாகத் தோன்றினார்.

112 அவர், தோன்றும்போதே கனவிலும் புலனின்பங்கள் அறியாத பிரம்ம ஞானி, மாயையைத் துறந்தவர்; முக்தி அவருடைய பாதங்களில் பணிந்து கிடந்தது.

113 எந்த தேசத்தில், எந்தப் பவித்ரமான வம்சத்தில், எந்தத் தாய்தந்தையருக்குப் பாபா பிறந்தாரென்பது எவருக்கும் தெரியாது.

114 தாய் யார்? தந்தை யார்? பூர்வீகம் எவருக்கும் தெரியாது. எல்லாரும் கேள்விமேல் கேள்வி கேட்டு அயர்ந்து போனார்களே தவிர, யாருக்கும் சரியான விவரம் கிடைக்கவில்லை.

115 தாயையும் தந்தையையும் உறவினர்களையும் நண்பர்களையும் ஜாதியையும் வம்சத்தையும் -- ஏன், சகல சாம்ராஜ்ஜியத்தையும் துறந்துவிட்டு, ஜனங்களின் நன்மைக்காக அவர் சிர்டீயில் தோன்றினார்.

116 சிர்டீயின் வயதான மூதாட்டி ஒருவர், நானா சோப்தாரின் தாயார், பாபாவின் அற்புதமான பழக்கங்களையும் நடத்தையையும்பற்றி அடிக்கடி பேசுவார்.

117 அதிசுந்தரமான இவ்விளவல், ஆரம்பத்தில் வேப்பமரத்தடியில், ஆழமான தியானத்தில் உட்கார்ந்த நிலையில், முதன்முதலாகக் காணப்பட்டான்; என்று அம்மூதாட்டி தெரிவித்தார்.

118 இக் கவர்ச்சிமிகு இளைஞன் இளம்பிராயத்திலேயே கடுமையாகத் தவம் செய்வது கண்டு மக்கள் அதிசயித்தனர். கொளுத்தும் வெயிலும் கடுங்குளிரும் அவனுடைய தவநிலையில் ஒன்றாகவே இருந்தன.

119 இந்தப் பிஞ்சு வயதில் எவ்வளவு கடுமையான தவம்õ கிராம மக்கள் இதைப் பார்óத்து ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்கள். இவ்வதிசய பாலயோகியை தரிசனம் செய்யச் சுற்றுப்புறக் கிராமமக்கள் சிர்டீயில் குழுமினர்.

120 பக­ல் அவன் யாருடைய சங்கத்தையும் நாடவில்லை; இரவில் எவருக்கும் எதற்கும் பயப்படவுமில்லை. ''எங்கிருந்து இந்த பாலன் வந்திருப்பான்?ஃஃ இந்த ஒரு கேள்வி எல்லாருடைய மூளையையும் குடைந்தது.

121 எவ்வளவு வசீகரமான முகம், எவ்வளவு சுந்தரமான உருவம்õ பார்த்தாலே நமக்கு அகத்தி­ருந்து அன்பு பொங்குகிறது. அவன் யாரையும் நாடிப் போகவில்லை; இரவும் பகலும் வேப்பமரத்தின் அருகிலேயே இருந்தான்.

122 எல்லாரும் வியப்படைந்தனர். எவ்வளவு அசாதாரணமான பையன்õ பிஞ்சு பிராயத்தினன்; மனோஹரமான ரூபமுடையவன்; எப்படி அவனால் வெட்டவெளியில் இரவும் பகலும் இருக்கமுடிகிறது?

123 வெளிப்பார்வைக்கு இளைஞன்தான்; ஆனால், செய்கைகளில் அவன் சான்றோர்களையும் மிஞ்சினான்; வைராக்கியத்தின் பூரண அவதாரமாக ஜொ­த்தான்õ எல்லாராலும் ஆச்சரியத்தை அடக்கமுடியவில்லை.

124 ஒரு நாள் விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது. சில மனிதர்கள் கண்டோபா1 சாமிபிடித்து பெருமூச்சுவிட்டுக்கொண்டு, ஆ, ஊ என்று உரக்கக் குரலெடுத்து ஆடினர். ஜனங்கள் அவர்களைச் சில பிரச்னங்கள் (கேள்விகள்) கேட்க ஆரம்பித்தனர்.

125 ''ஓ கண்டோபா தேவரேõ பாக்கியசா­களான இப்பையனின் பெற்றோர்கள் யார்? எங்கிருந்து, எப்படி, இங்கு இவன் வந்தான்? நீங்களாவது இதற்கு விடை கண்டுபிடித்து எங்களுக்குச் சொல்லுங்கள்ஃஃ என்று ஒருவர் கேட்டார்.

126 கண்டோபா மொழிந்தார், ''போ, ஒரு கூந்தா­ (கடப்பாரை) கொண்டுவா, நான் காட்டும் இடத்தில் தோண்டு. இவ்விடத்தில் உங்களுடைய கூந்தா­களால்

127 பிறகு, அதே இடத்தில் கிராம எல்லைச் சுவருக்கருகில் வேப்பமரத்தடியில், கடப்பாரைகளையும் மண்வெட்டிகளையும் கொண்டு வெட்டுமேல் வெட்டாக ஒரு செங்கல் தளம் தெரியும்வரை, தோண்டினார்கள்.

128 செங்கல் தளத்தை எடுத்த பிறகு, கீழே ஒரு நிலவறை இருப்பதைப் பார்த்தனர். நான்கு உலோக விளக்குகள் உள்ளே எரிந்துகொண் டிருந்தன. நிலவறையின் வாயில் மாவு அரைக்கும் ஏந்திரக் கல்லால் மூடப்பட்டிருந்தது.

129 நிலவறை சுண்ணாம்புக்காரையால் தளம் போடப்பட்டிருந்தது. ஒரு மரத்தாலான ஆசனமும் அழகான ஜபமாலையும் கோமுகப்1 பையும் அங்கு இருந்தன. அப்பொழுது கண்டோபா தெரிவித்தார், ''இவ்விளவல் பன்னிரண்டு வருடங்கள் இவ்விடத்தில் தவம் மேற்கொண்டான்ஃஃ.

130 கூடியிருந்த மக்கள் பிரமித்துப்போனார்கள்; இளவலைத் துருவித்துருவிக் கேள்விகள் கேட்டார்கள். குறும்பு பிடித்த பையனோ வேறுவிதமான கதை ஒன்று சொன்னான்.

131 ''இது என் குருவின் ஸ்தானம். எனக்கு மிகப் பவித்ரமான இடம். நான் சொல்வதை ஒருமுறை கேளுங்கள். அதை முன்பிருந்தவாறு மூடிவிட்டுப் பாதுகாத்துவாருங்கள்ஃஃ.

132 இவ்வாறு பாபா உரைத்தார் என்று அப்பொழுது நேரில் இருந்தவர்கள் சொன்னார்கள். ஏன் என்னுடைய நா வளைந்து, 'பாபா வேறுவிதமான திருப்பம் கொடுத்தார்ஃ என்று சொல்­யது?

133 என்னைப் பார்த்து நானே ஆச்சரியப்படுகிறேன். நான் பாபாவின் நடத்தையைப்பற்றி ஏன் அவ்வாறு நினைக்கவேண்டும்? இது பாபாவின் உள்ளார்ந்த நகைச்சுவை உணர்வால்தான் என்று எனக்கு இப்பொழுது புரிந்துவிட்டது.

134 பாபாவுக்கு நகைச்சுவையில் பிரியம் அதிகம். அந்த நிலவறை அவருடையதாகவே இருக்கலாம்; அது அவருக்கு குருவின் உறைவிடம் என்று சொல்வதில் தவறென்ன இருக்கிறது? அதனுடைய பெருமை குறைந்துவிடுமா என்ன?

135 பாபாவினுடைய ஆணைப்படி செங்கற்களெல்லாம் பழையபடியே அடுக்கப்பட்டு நிலவறை அவருடைய குருஸ்தானமாக மூடி மெழுகப்பட்டது.

136 அரசமரம் எப்படியோ, அத்திமரம் எப்படியோ, அப்படியே பாபாவுக்கு அந்த வேப்பமரமும் உயர்வானது, புனிதமானது. அந்த வேப்பமரத்தை அவர் நேசித்தார்; பயமும் பாசமும் கலந்த மரியாதை செலுத்தினார்.

137 மஹால்ஸாபதியும் மற்ற பழைய குடிமக்களும் இவ்விடத்தை பாபாவின் குரு ஸமாதியடைந்த இடமாகவே கருதி வந்தனம் செய்துவருகிறார்கள்.2

138 பாபா இந்த ஸமாதியினருகில் பன்னிரண்டு ஆண்டுகள் மௌனத்திலும் தியானத்திலும் கழித்தார் என்பது கிராம ஜனங்களுக்கு நன்கு தெரிந்ததே.

139 பாபாவின் பக்தர்களில் ஒருவரான ஸாடேஸாஹேப்1, ஸமாதியைச் சேர்த்து அதைச் சற்றியிருந்த நிலத்தையும் வேப்பமரத்தையும் விலைக்கு வாங்கி, நான்கு தாழ்வாரங்கள் மத்தியில் கூடும்படி ஒரு கட்டடம் எழுப்பினார்.

140 இக் கட்டடந்தான், இச் சத்திரம்தான், ஆரம்பகாலத்தில் புனிதப் பயணிகளுக்குப் பொதுவான தங்கும் இடமாக இருந்தது. எப்பொழுதும் வருவோரும் போவோருமாக ஜனசந்தடி மிகுந்து இருந்தது.

141 ஸாடே வேப்பமரத்தைச் சுற்றி ஒரு மேடை கட்டினார். தெற்கு வடக்காகக் கட்டடத்தின் மேல்மாடியையும் கட்டினார். வடக்குப்பக்க மாடிப்படியை குருஸ்தானத்தைப் பார்த்தவாறு கட்டினார்.

142 மாடிப்படியின் கீழே, தெற்கே பார்த்தவாறு ஓர் அழகான மாடம் இருக்கிறது. அதனெதிரில் வடக்கு நோக்கி பக்தர்கள் மேடையில் உட்கார்ந்துகொள்கிறார்கள்.

143 ''வியாழக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் இவ்விடத்தைச் சாணியால் மெழுகி, ஸூரிய அஸ்தமன சமயத்தில் ஊதுவத்தி சிறிது நேரமாவது ஏற்றுபவர்களை ஸ்ரீஹரி நிச்சயமாக ஆசீர்வதிப்பார்ஃஃ. (ஸாயீயின் திருவாய்மொழி)

144 கதை கேட்பவர்களுக்கு இது உண்மையா, மிகை மொழியா என்று மனத்துள் சந்தேகம் எழலாம். இவை ஸாயீயின் முகத்தி­ருந்து வெளிவந்த வார்த்தைகள். என் காதுகளாலேயே கேட்டிருக்கிறேன்.

145 அணுப்பிரமாணமும் சந்தேகப்படாதீர்கள். இது நானே தயாரித்த பிரகடனம் அன்று; இதை நேரில் கேட்டவர்களில் பலர் இன்னும் நம்மிடை வாழ்கிறார்கள்.

146 பிற்காலத்தில், தீக்ஷிதர் சத்திரம் விசாலமாகப் பலர் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டது. குறுகிய காலத்துக்குள்ளாகவே முற்பக்கத்தில் புட்டியால்2 ஒரு கற்கட்டடமும் (இன்றைய ஸமாதிமந்திர்) கட்டப்பட்டது.

147 தீக்ஷிதர் ஏற்கெனவே புண்ணியகீர்த்தி உடையவர்; விசுவாசமும் பக்தியும் உருவானவர். அவருடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கான விதை, அவர் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றபோது போடப்பட்டது.

148 'ஹிந்து ஸம்பிரதாயத்தில் பரிந்துரைக்கப்பட்ட மதுரா, காசி, துவாரகா போன்ற க்ஷேத்திரங்களையெல்லாம் விட்டுவிட்டு, இங்கிலாந்திற்குப் போனது எப்படி ஆன்மீகவாழ்வுக்கு வித்தாக அமைந்தது?ஃ என்று கதை கேட்பவர்கள் கேள்வி எழுப்ப நியாயம் உண்டு.

149 கேட்பவர்களுக்கு இந்த சந்தேகம் வருவது இயற்கையே. இக் கேள்விக்கு நான் பதில்சொல்லும் வகையில் சிறிது பாதை மாறுவதை, கேட்பவர்கள் அனைவரும் மன்னிக்க வேண்டுகிறேன். வாஸ்தவத்தில் அவர்கள் இதை மெச்சுவார்கள்.

150 காசி, பிரயாகை, பத்ரிநாத், கேதார்நாத், மதுரா, பிருந்தாவனம், துவாரகாபுரி இத்தியாதி க்ஷேத்திரங்களுக்குப் புனிதப் பயணம் செய்து, தீக்ஷிதர் ஏற்கெனவே மிகுந்த புண்ணியம் சேர்த்திருந்தார்.

151 மேலும், அவருடைய பூர்வஜன்ம புண்ணியத்தின் சேமிப்பாலும் பாக்கியத்தாலும் தந்தையின் தருமநெறி தவறாத வாழ்வாலும் ஸ்ரீஸாயியை தரிசனம் செய்தார்.

152 தரிசனம் செய்ய வந்ததற்கு ஆதிகாரணம், விதியால் ஆணையிடப்பட்டதுபோலத் தோன்றும் அவருடைய கால் ஊனமே. இங்கிலாந்திற்குச் சென்றிருந்தபோது பாதம் தடுக்கிக் காலுக்கு ஊனம் ஏற்பட்டது.

153 துரதிருஷ்டவசமானதுபோலத் தெரியும் இந்நிகழ்ச்சி மிக்க சுபகரமானதும் அபூர்வமானதாகவும் மாறி, ஸாயீயினுடைய ஸந்நிதிக்கு அழைத்துச் சென்றது. அவருடைய நற்செயல்களின் பலனே அது.

154 தீக்ஷிதர் சாந்தோர்க்கரைச் சந்திக்க நேர்ந்தது. அவரிடமிருந்து ஸாயீயினுடைய புகழைக் கேள்விப்பட்டார். சாந்தோர்க்கர் சொன்னார், ''ஸாயீ தரிசனம் செய்யும் அற்புதத்தைக் கொஞ்சம் பாருங்கள்õ உங்களுடைய கால் ஊனம் பளிச்சென்று மறைந்துவிடும்õஃஃ

155 தீக்ஷிதர் தமது கால் ஊனத்தைப் பெரிய குறைபாடாகக் கருதவில்லை. உண்மையான ஊனம் மனத்தில்தான் இருக்கிறது என்று சொல்­, அதைக் களைந்துவிடுமாறு பாபாவை வேண்டிக்கொண்டார்.

156 மனிதவுடல் என்பது என்ன? வெறும் மாமிசமும் எலும்புகளும் ரத்தமும் தோ­ல் அடங்கிய பைதானேõ நசிக்கக்கூடிய பொருள்களும் உலகியல் மூட்டைகளும் ஏற்றப்பட்ட பாரவண்டிதானேõ கால் சிறிது ஊனமாக இருப்பது என்ன பெரிய நஷ்டம்?

157 முதன்முறையாக தீக்ஷிதர் 1909ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஸாயீயைப் புண்ணிய தரிசனம் செய்தார்.

158 அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் மறுபடியும் ஸாயீ தரிசனம் செய்வதற்காக சிர்டீ சென்றார். அம்முறை அவர் அங்கு அதிக நாள்கள் தங்கவேண்டுமென்பதை நிறைவாக உணர்ந்தார்.

159 தம்முடைய கம்பெனிப் பங்குகளில் இருபத்தைந்தை விற்று, யாத்திரிகர்களுக்கு உபயோகப்படும் வகையில் தகரக்கூரை வேய்ந்த ஒரு கொட்டகை கட்டலாம் என்று முத­ல் எண்ணம் தோன்றியது.

160 பிறகு, கொட்டகைக்குப் பதிலாக ஒரு சத்திரமே கட்டிவிடலாம் என்று முடிவுசெய்துவிட்டார். அடுத்த வருடமே, கட்டட வேலை ஆரம்பிப்பதற்கு முன்பு, சுபமாக ஓர் அடிக்கல் நாட்டப்பட்டது.

161 அந்த நாள் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி. பாபாவினுடைய அனுமதி பெறப்பட்டது; அதையே சுபசகுனமாக எடுத்துக்கொண்டு அடிக்கல் வேலை நிறைவேற்றப்பட்டது.

162 அழைப்பிதழ் கொடுத்தாலும் வருவார் என்று எதிர்பார்க்கமுடியாத தீக்ஷிதரின் சகோதரர், அதிருஷ்டவசமாக அந்த நாளில் அந்த சுபமுகூர்த்தத்தில் அங்கு இருந்தார்.

163 ஸ்ரீ தாதாஸாஹேப்1 காபர்டே, அதற்கு மிகவும் முன்னதாகவே தனியாக சிர்டீக்கு

164 காபர்டேவுக்கு வீடு திரும்பவும் தீக்ஷிதருக்கு அடிக்கல் நாட்டவும், இருவருக்கும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி அனுமதி கிடைத்தது.

165 அந்த நாள் மற்றுமொரு காரணத்திற்காகவும் மஹத்துவம் வாய்ந்தது. அந்நாளில்தான், பாபா இரவில் ஓய்வு பெறுவதற்கு முன்பு, அன்புடனும் பக்தியுடனும் சாவடியில் செய்யப்படும் ஹாரதி தொடங்கியது.

166 பிறகு, 1911ஆம் ஆண்டில் சுபமான ராமநவமிப் பண்டிகையன்று வைதீக விதிகளின்படி எல்லாச் சடங்குகளுடன் கிருஹப் பிரவேசம் கொண்டாடப்பட்டது. (தீக்ஷிதர் வாடா)

167 இதற்குப் பிற்பாடு ஏராளமான செலவில் புட்டி வாடா கட்டப்பட்டது. மஹாஸமாதியான பிறகு, பாபா இங்கு அடக்கம் செய்யப்பட்டார். அவ்வளவு பணமும் நன்கு செலவழிக்கப்பட்டதாகியது.

168 ஒரே ஒரு வாடா இருந்த இடத்தில் தற்போது மூன்று வாடாக்கள் (சத்திரங்கள்) இருக்கின்றன. ஆனால், ஆரம்ப காலத்தில் ஸாடே வாடாவே எல்லாருக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது.

169 ஸாடே வாடா இன்னுமொரு காரணத்தாலும் முக்கியமானது. ஆரம்ப காலத்தில் இவ்விடத்தில்தான், பாபா தம்முடைய உழைப்பாலேயே வளர்த்த அழகான பூந்தோட்டம் இருந்தது.

170 அந்தத் தோட்டத்தைப்பற்றிய சுருக்கமான விளக்கம் அடுத்த அத்தியாயத்தில் அளிக்கப்படும். ஹேமாட் கதைகேட்பவர்களுடன் சேர்ந்து ஸாயீயின் பாதங்களில் வணங்குகின்றேன்.

171 வாமன் தாத்யா பானைகளைக் கொடுப்பார்; பாபா செடிகளுக்குத் தண்ணீர்விட்டுக் கரடுமுரடான செழிப்பில்லாத பூமியில் ஒரு பூந்தோட்டம் வளர்த்தார். இதன் பிறகு, பாபா திடீரென்று ஒருநாள் காணப்படவில்லை.

172 அதற்குப் பிறகு, அவர் ஔரங்காபாத்திற்கு அருகில் சாந்த் பாடீலைச் சந்தித்தார். கல்யாணக்கோஷ்டியுடன் சிர்டீக்குத் திரும்பி வந்தார்.

173 திரும்பி வந்த பிறகு, அவர் தேவிதாஸைச்2 சந்தித்தார்; ஜானகிதாஸையும்2 சந்தித்தார்õ இம் முக்கூடல் சிர்டீயில் நடந்தது.

174 பாபா, மொஹித்தினுடன் மல்யுத்தம் செய்த நிகழ்ச்சி நடந்தது. இதன் பிறகு, பாபா மசூதியில் வசிக்க ஆரம்பித்தார். அவருக்கு டேங்க்லேவிடம் பிரியம் வளர்ந்தது; மற்ற பக்தர்களும் அவரைச் சுற்றிக் குழுமினர்.

175 இக் கதைகளெல்லாம் அடுத்த அத்தியாயத்தில் சொல்லப்படும்; செவிமடுப்பவர்கள் கவனத்துடன் கேட்கலாம். ஹேமாட் இப்பொழுது ஸாயீ பாதங்களில் ஒருமுகமான மனத்துடன் நமஸ்காரம் செய்கிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்றும் காவியத்தில், 'ஸமர்த்த ஸாயீ அவதரணம்ஃ என்னும் நான்காவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்.