இயல்பு

இரு துறவிகள் ஆற்றில் தவம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு தேள் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தனர். உடனடியாக ஒரு துறவி அந்த தேளை எடுத்து ஆற்றங்கரையில் விட்டார். அப்போது அத்தேள் அவரைக் கடித்துவிட்டது.

சிறிது நேரத்தில் திரும்பவும் அத்தேள் ஆற்றில் விழுந்து விட்டது. மீண்டும் அத்துறவி அதனை எடுத்து கரையில் விடும் போது அத்தேள் அவரைக் கொட்டிவிட்டது. இதனைக் கண்ட இன்னொரு துறவி, ”நண்பரே , தேள் கொட்டும் எனத் தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் அதனைக் காப்பாற்ற எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார்.

துறவி சொன்னார்: “கொட்டுவது தேளின் இயல்பு. காப்பாற்றுவது எனது இயல்பு”